என்னோடு உலாவந்தவர்கள், வருகிறவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
சுருட்டப்பள்ளி ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் கோயிலைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். முந்தைய பதிவில் கோயிலைப் பார்க்கும் முன் அது அமைந்துள்ள இடமான ஆரணி ஆற்றைப் பற்றிய புராணத்தை அறிந்தோம். அதன் தொடர்ச்சியாக இப்போது நாம் கோயிலைப் பார்க்கப் போவோம். ஏன் இங்கு ஈசன் பள்ளிகொண்டார் என்பதைப் பற்றி.
சுருட்டப்பள்ளி தலவரலாறு:
பாற்கடல் கடைந்து எடுக்கப்பட்ட அமுதினைத் தேவர்களுக்கு அளித்துவிட்டு, விஷத்தினை உட்கொண்டு கண்டத்தில் நிறுத்தி தன் சரிபாதியான உமையவளுடன் கைலாசம் செல்லும் சிவன், ஆந்திரமாநில எல்லையான சுருட்டப்பள்ளியிடையே வரும் போது களைப்புற்றுவிடுகிறார். விஷம் அருந்தியிருந்ததால் மயக்கமுற்றார்.
உமையாளின் மடியில் தலை வைத்து இளைப்பாறுகிறார். அப்படியாக இந்த சயனக் கோலத்தில் பள்ளிக் கொண்டீஸ்வரர் என்ற திருநாமம் பெற்று பக்தர்கள் அனைவருக்கும் அருள் வழங்குகிறார். இங்கு தேவியின் திருநாமம் ஸ்ரீசர்வமங்களா என்றும் வழங்கப்படுகிறது.
என்னை முன்னே பார்த்தீர்கள்தானே அதே நந்தியார்தான் நான்
கோயிலின் வெளிப்புறம் இருக்கும் மைதானத்தில் பெரிய நந்தி ஒன்று வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
கோயில் கோபுரம் வெளிப்புறத்திலிருந்து
கோயிலின் வாயிலில் மிக அழகான 3 படி நிலைகள் கொண்ட கோபுரம் மனதைக் கவர்கிறது.
உட்புறத்திலிருந்து
நந்தி அபிஷேகப் பொருட்கள் கொடுக்குமிடம் என்று அறிவிப்பு. கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். வெளியில் இருக்கும் கடைகளிலும் கிடைக்கிறது.
உள்ளே சென்றால் இரண்டு கோயில்கள் உள்ளன. 16 கால் மண்டபத்தின் நேரே இருப்பது ஸ்ரீமரகதாம்பிகை சந்நிதி. இனி உட்புறம் சென்றால் நின்ற கோலத்தில் திரிபுர சுந்தரி. அம்மன் கருவறையில் உள்முகப்பின் முன்பு வலப்புறம் மனதில் நினைத்தவை எல்லாம் நல்கும் “கற்பக விருட்சமும்” இடப்புறம் வேண்டுவதை நல்கும் காமதேனுவும் இருப்பது தனிச் சிறப்பாகக் கருதப்படுகிறது.
கருவறையைச் சுற்றி வலம் வரும் பிராகாரத்தில் அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், விநாயகர், பின்புறம் லிங்கோத்பவர், அவருக்கு எதிரில் மூன்று கால், மூன்று கைகளுடன் ஒரு கையில் அக்னியை வைத்துக் கொண்டு ஜீரஹரேஸ்வரர், அய்யப்பன் என்று மூர்த்திகள் அருள்பாலிக்கிறார்கள். (இதெல்லாம் படம் எடுக்க அனுமதி இல்லை)
தலைப்பாகையுடன் வால்மீகி மகரிஷி, ஏகபாத மூர்த்தி – பிரம்மா அன்ன வாகனத்துடன், விஷ்ணு கருட வாகனத்துடன், சிவன் நந்தியுடன் ஒரே கல்லில் வடிக்கப்பட்டு இருப்பது, கோஷ்டத்தில் கொரியைத் தன் தொடைமேல் அமர்த்தி சாந்தஸ்வரூபியாகக் காட்சி தரும் தஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் மற்றும் ஞானதுர்கை தன் அபயகரத்தின் மீது “வாக்குவாணி” என்றழைக்கப்படும் கிளியை வைத்திருப்பது, அடுத்து காசி விசாலாட்சி, ஒரு புறம் வேணுகோபால சுவாமியும், மறுபுறம் அதிகார நந்தி கை கூப்பி நின்றிருப்பது எல்லாம் சிறப்பாகக் கருதப்படுகிறது. (படம்) சன்னதியின் மேல்புறம் மட்டுமே தூரத்தில் இருந்து ஜூம் செய்து எடுக்க முடிந்தது. சன்னதியை எடுக்க அனுமதி இல்லை.
வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமண்யர் தனி சந்நிதியிலும் காட்சி தருகிறார்கள். ஸ்ரீராஜமாதங்கி காட்சி தருகிறார். இவருக்குக் கீழ் சுரங்கப்பாதை காளஹத்திக்குச் செல்வதாகச் சொல்லப்படுகிறது.
மூலவர், இராமாயணம் எழுதுவதற்கு முன்பு வால்மீகி முனிவரால் பூசை செய்யப்பட்ட லிங்கம் ஆதலால், “வால்மீகேஸ்வரர்” எனும் திருநாமம் பெற்று சுயம்பு லிங்கராகக் காட்சி தருகிறார். இவருக்கு எதிரில், இராமரால் பூசை செய்யப்பட்ட ராமலிங்கேஸ்வரரும், சீதை இராமர், லஷ்மணர், பரத சத்ருக்னர்கள் உள்ளனர்.
வெளியே வந்தால் இக்கோயிலுக்கு அடுத்து (வளாகத்தினுள்ளேயே) ஸ்ரீசர்வமங்களா சமேத ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் சன்னதி உள்ளது. (இதற்கான படம் மேலே இப்பதிவிலும் முந்தைய பதிவிலும் கொடுத்திருக்கிறேன்) தேவி ஸ்ரீ சர்வமங்களா அமர்ந்திருக்க அவரது தொடை மீது ஈஸ்வரன் தலை வைத்து மிகப் பெரிய உருவமாகச் சயனக் கோலத்தில் காட்சிதருகிறார். சுற்றிலும் பிருகு மகரிஷி, பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், அகத்தியர், வால்மீகி எல்லோரும் சூழ்ந்துள்ளனர். கீழே விநாயகரும், சுப்ரமணியரும் வள்ளி, தேவசேனாவும் இருக்கிறார்கள்.
எப்படிச் செல்வது?
சென்னை கோயம்பேட்டிலிருந்து ஊத்துக்கோட்டை வழி புத்தூர், நகரி, நாகலாபுரம், பிச்சாட்டூர், திருப்பதி செல்லும் பேருந்துகளில் சென்றால் இக்கோயிலின் வாயிலிலேயே இறங்கிக் கொள்ளலாம். நமது காரில் செல்வதென்றால், சென்னை, பங்களூர் நெடுஞ்சாலையில், நாசரபெட் தாண்டி வலது புறமாக, திருமழிசை, திருவள்ளூர் செல்லும் சாலையில் திரும்பவேண்டும். சுங்கச்சாவடி இல்லாத சாலை.
இச்சாலையில் திருமழிசை, திருவள்ளூர் கடந்து, திருவள்ளூர் பேருந்து நிலையம் தாண்டிச் சென்றால் வலது புறம் திரும்பி ஊத்துக்கோட்டை செல்லும் சாலையில் செல்ல வெண்டும். ஊத்துக்கோட்டையை அடைந்ததும் வரும் சந்திப்பில் இடதுபுறமாகத் திருப்பதி/நாகலாபுரம் செல்லும் சாலையில் சென்றால் 2 கிமீ தூரத்தில் இக்கோயில் இருக்கிறது.
ட்ராவல்ஸ் வண்டி என்றால், ஊத்துக்கோட்டையைக் கடந்ததும் ஆந்திர மாநில எல்லை ஆரம்பிப்பதால் அங்கு சோதனைச் சாவடி உண்டு. வரி கட்ட வேண்டிவரலாம்.
கோயில் வளாகம் மிகவும் பெரியது. நமது காரில் சென்றால் வளாகத்திற்குள் நிறுத்திக் கொள்ளலாம். அப்போது கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை. கோயிலின் வெளியில் இருக்கும் நந்தியார் படத்தில் பார்த்தால் தெரியும் பெரியவளாகம். ஒவ்வொரு முறை செல்லும் போதும் மாற்றங்களைக் காண முடிகிறது.
நாங்கள் திருநாராயணவனம் மற்றும் அருகே உள்ள கோனே ஃபால்ஸ் சென்ற போதெல்லாம் திருவள்ளூர், சுருட்டப்பள்ளி ரூட்டில்தான் செல்வது எளிது என்பதால் இந்தக் கோயில்கள் அனைத்தும் சென்றுவிடும் பழக்கம். குறிப்பாகச் சுருட்டப்பள்ளி கோயில்.
பிரதோஷத்திற்குப் பெயர் பெற்ற இக்கோயிலுக்கு என் தங்கையின் வேண்டுதலுக்காக, நாங்கள் பிரதோஷத்தன்று சென்றிருந்தோம். அதற்கு முன் துளசி குடும்பத்தினர் நம் வீட்டிற்கு வந்த போது ஒரு சாதாரண தினத்தில் அவர்களையும் அழைத்துச் சென்றிருக்கிறேன்.
மீண்டும் கோயில் திறந்திருக்கும் நேர அறிவிப்பைத் தருகிறேன்
தங்கையுடன் சென்றிருந்த போது, ராமகிரி, வேதநாராயாணர் கோயில் சென்று கடைசியில் பிரதோஷ நேரத்தில் வழிபட வேண்டும் என்பதால் இக்கோயிலுக்கு வந்து காத்திருக்கும் சமயத்தில், கோயிலின் எதிரே ஒரு உணவகம் திறக்கப்பட்டிருந்ததைப் பார்த்தோம். புதிது. முன்பு கிடையாது.
அந்தப் புதிய உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டோம். வேறொரு முறை தோசை சாப்பிட்டோம். பரவாயில்லை நன்றாக இருந்தது. (எச்சரிக்கை-கீதா நன்றாக இருந்தது என்று சொன்னாளே என்று அங்கு சென்று சாப்பிட்டுப் பார்த்து ஒரு வேளை அன்று சுவையாக இல்லை என்றால் என்னைத் திட்டக் கூடாது!!!) சுத்தமாகவும் இருந்தது ஒரு வேளை புதிது என்பதாலோ அல்லது சுற்றிலும் திறந்தவெளி என்பதாலோ. இப்போது நிறைய மாறியிருக்கலாம். நிறைய உணவகங்களும் வந்திருக்கலாம்.
இப்பதிவோடு 4 கோயில்களில் ஒன்றான சுருட்டப்பள்ளி கோயில் பற்றி இப்பதிவு நிறைவடைகிறது.
அடுத்து இக்கோயிலில் இருந்து 1/2 மணி நேரப் பயணத்தில் இருக்கும் வேதநாராயணப் பெருமாள் கோயிலைப் பார்ப்போம். பெரும்பாலும் அப்பதிவு 14 ஆம் தேதிக்குப் பிறகுதான் வரும். என்னடா 1/2 மணி நேர தூரத்தில் இருக்கும் கோயிலுக்குச் செல்ல 12 நாள் ஆகுமா என்று கீதாவைக் கேட்கக்கூடாதாக்கும்!!! 6 ஆம் தேதியிலிருந்து 14 ஆம் தேதி வரை விடுமுறை. அதனால்தான்.
வழக்கம் போல் காத்திருங்கள். வண்டி வரும். வேதநாராயணப் பெருமாள் கோயிலுக்குச் செல்ல!
-----கீதா
உமையவள் மடியில் திருநீலகண்டர் சயனித்திருக்கும் காட்சியை வேறு ஒரு இடத்தில் நான் படம் எடுத்த நினைவு. ஏனென்றால் நான் நிச்சயம் இந்தக் கோவில் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஓஹோ...வேறு எந்த இடத்திலாக இருக்கும்? எனக்கும் தெரியவில்லையே. அந்தப் படம் இருந்தால் ஏதேனும் ஒரு வியாழன் பதிவில் இடையில் போடுங்களே யாராவது சொல்லுவாங்க.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
உணவகத்துக்கு ஏகப்பட்ட டிஸ்கி கொடுத்திருக்கிறீர்கள். பயமோ! என்ன செய்ய.. அவர்களும் மாறி இருக்கலாம், ஒவ்வொருவர் சுவையும் மாறுபடலாம்.
பதிலளிநீக்குஹாஹாஹாஹா டிஸ்கி எதுக்குன்னா, அங்கு இப்போது என்னவோ என்ன நிலைமையோ அதான்....ஒவ்வொருவர் சுவையும் மாறுபடும் என்பதும் தான்
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
தினமும் நான் அலுவலகம் சென்று திரும்பும் வழியில் குறுகலான ஒரு இடத்தில ஒரு கோவில் இருக்கிறது. பிரதோஷம் அன்று அங்கு கூட்டம் இருக்கும். சாலை சுருங்கும், போக்குவரத்துத் திணறும்!
பதிலளிநீக்குஸ்ரீராம் இதைப் பற்றி நான் யோசித்ததுண்டு. முன்னரே இருந்த கோயில் என்றால் சாலை அமைக்கும் போது பார்த்து அமைக்க வேண்டும். சாலை அமைத்தபின் நடை பாதைக் கோயில்கள் அல்லது நடைபாதியில் இருக்கும் சிறிய தெய்வ உருவங்களுக்கு மெதுவாக மெதுவாகக் கோயில் எழுப்புவது சரியில்லை என்று தோன்றும். போக்குவரத்துக்கு இடைஞ்சலாக எதுவும் இருக்கக் கூடாது அது எந்தவகைக் கூட்டமாக இருந்தாலும்.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
விபரங்கள் நன்று. அழகிய படங்களுடன் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குமிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு
நீக்குகீதா
கோவில் மற்றும் பயணம் குறித்த தகவல்கள் அருமை...
பதிலளிநீக்குபடத் தொகுப்பு காணொளியில் ஏதேனும் பாடலையும் சேர்க்கலாம்...
மிக்க நன்றி டிடி கருத்திற்கு.
நீக்குபாடல் இணைக்கும் போது யுட்யூப் ஏதேதோ விதிமுறைகளைச் சொல்கிறது. முதலில் எல்லாம் இணைத்தேன். பதிவேற்றினேன். இத்தனைக்கும் அவை என்னிடம் கணினியில் இருக்கும் இசைதான் விண்டோஸ் 10 ல் இருப்பவை.
அப்போது எதுவும் சொல்லாத யுட்யூப் கொஞ்ச நாட்கள் கழித்து அந்தப் பாடல் காப்பி ரைட் இல்லை என்றது. அதுவே ஏதோ லைசன்ஸ் இலவசப் பாடல்கள் என்று காட்டியது. அதில் இசை அளவுக்கு மீறிய சத்தம். பிடிக்கவில்லை.
அதன் பின் பாடல்கள் கொடுப்பதை விட்டுவிட்டேன். நானே கூட இசை கோர்ப்பு செய்யலாமே என்றும் நினைத்தேன். ஆனால் நேரம் இல்லை.
ஆனால் முயற்சி செய்கிறேன்.
நன்றி டிடி
கீதா
surukamaaga adhe samayam thelivaaga irukiradhu. Conrats!
பதிலளிநீக்குஉண்மையாவா பானுக்கா? ஆனால் வரலாறு சுட்டதுதான். அதனால்தான் சுருக்கமாக தெளிவாக இருக்கிறதோ!!! ஹாஹாஹாஹா...
நீக்குமிக்க நன்றி பானுக்கா
கீதா
பதிவும் காணொளியும் அருமை.
பதிலளிநீக்குபடங்கள், விவரங்கள் நன்றாக இருக்கிறது.
வேதநாராயணப் பெருமாள் கோயிலுக்குச் செல்ல தொடர்கிறேன்
மிக்க நன்றி கோமதிக்கா.
நீக்குகொஞ்சம் தாமதமாகும் பதிவு வருவதற்கு.
கீதா
//அந்தப் புதிய உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டோம். வேறொரு முறை தோசை சாப்பிட்டோம். பரவாயில்லை நன்றாக இருந்தது. //
பதிலளிநீக்குபசிக்கு உணவு , வயிற்றை கெடுக்காமல் இருந்தால் போதும்.
ஆமாம் கோமதிக்கா வயிற்றுக்கு எதுவும் செய்யாமல் இருந்தால் போதும். பசிக்கு உணவு அப்படித்தான் நாமும்.
நீக்குமிக்க நன்றி கோமதிக்கா
கீதா
கொரியை வாக்கு வாணி இதெல்லாம் யார் சொல்லிக் குடுத்தது. பள்ளி சரி.சுருட்ட என்ன அர்த்தம்?
பதிலளிநீக்குJayakumar
ஆஆ!!! இப்படி எல்லாம் கேட்டால் கீதாவுக்குப் பதில் சொல்லத் தெரியாதே!! ஹாஹாஹாஹாஹா...என் சொந்த சாகித்தியம்னா பதில் சொல்லலாம். இது மண்டபத்துல இருந்து எடுத்துப் போட்டதாச்சே!!!
நீக்குமிக்க நன்றி அண்ணா.
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது. அழகான படங்களுடன் கோவிலின் அனைத்து விவரங்களையும் மிக விபரமாக சொல்லி வரும் தங்களின் வார்த்தை அழகை ரசித்தேன். இக்கோவிலுக்குச் செல்லும் அனைவருக்கும் பயனுள்ள வகையில் பதிவு எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள்.
கோவிலின் வெளிப்புற, உட்புற கோபுர படங்கள் அழகாக இருக்கிறது. மற்றும் எல்லா படங்களுமே அழகு. அடுத்து வேதநாராயண பெருமாள் கோவிலுக்குச் செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இக்கோவிலுக்குச் செல்லும் அனைவருக்கும் பயனுள்ள வகையில் பதிவு எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள்.//
நீக்குமிக்க நன்றி கமலாக்கா.....
கோவிலின் வெளிப்புற, உட்புற கோபுர படங்கள் அழகாக இருக்கிறது. மற்றும் எல்லா படங்களுமே அழகு. அடுத்து வேதநாராயண பெருமாள் கோவிலுக்குச் செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன்.//
மிக்க நன்றி கமலாக்கா. பதிவு வர கொஞ்சம் தாமதமாகும் கமலாக்கா.
கீதா
படங்களும் தகவல்களும் நன்று. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி வெங்கட்ஜி
நீக்குகீதா
தல வரலாறு சிறப்பு சகோதரி... ஆனால் "சுருட்டப்பள்ளி" க்கான பெயர்க்காரணத்தை சொல்ல மறந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன்... விஷத்தை சாப்பிட்ட பகவான் விஷத்தின் வீரியத்தால் சுருண்ட நிலையில் படுத்திருப்பதால் (பள்ளிகொண்டிருப்பதால்) தான் இத்தலத்திற்கு "சுருட்டப்பள்ளி" என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது... நன்றி!!!
பதிலளிநீக்குமிக்க நன்றி நாஞ்சில் சிவா சகோ. ஆமாம் சுருட்டப்பள்ளி க்காண பெயர்க்காரணம் தெரியவில்லை எனக்கு என்பதுதான் உண்மை.
நீக்கு//விஷத்தை சாப்பிட்ட பகவான் விஷத்தின் வீரியத்தால் சுருண்ட நிலையில் படுத்திருப்பதால் (பள்ளிகொண்டிருப்பதால்) தான் இத்தலத்திற்கு "சுருட்டப்பள்ளி" என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது... //
லாஜிக்கல் காரணம் கொடுத்ததற்கு மிக்க நன்றி சிவா.
கீதா
மகாவிஷ்ணு சுகவாசி; படுத்துக்கொண்டே ஆட்சி செய்வார் ! ஆனால், சிவபெருமானோ, அயராத உழைப்பாளி. இந்த ஊரில் அவர் படுத்து ஓய்வெடுப்பதை என்னால் நம்பமுடியவில்லை!
பதிலளிநீக்குஹாஹாஹா
நீக்குமிக்க நன்றி செல்லப்பா சார்
கீதா
இனிதான் வலை உலா வர வேண்டும். உங்கள் பதிவுகளையும் வாசிக்கிறேன் சார்.
நீக்குகீதா
தல வரலாறு சுவாரஸ்யம். உட்புற, வெளிப்புற கோபுரங்கள், மற்றும் அனைத்து புகைப்படங்களும் மிக அழகு!
பதிலளிநீக்குமிக்க நன்றி மனோ அக்கா, ரசித்தமைக்கும், கருத்திற்கும்
நீக்குகீதா
எனக்கு கொடுத்த தகவலுக்கு நன்றி!! நீங்கள் கொடுத்த ஈமெயில் விலாசத்துக்கு தகவல் அனுப்பியிருக்கிறேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி மனோ அக்கா. நானும் உங்கள் தகவல் பற்றி சொல்லிவிட்டேன்.
நீக்குகீதா
கோயில் உலா அருமை.
பதிலளிநீக்குஆய்வுப்பணியால் முழுமையாக வலைப்பக்கம் வர இயலவில்லை. பணி ஓரளவுக்கு நிறைவு பெற்றபின் தொடர்வேன்.