ஸ்ரீ வேதநாராயண பெருமாள் கோயில்/
மத்ஸ்ய அவதாரத் திருத்தலம்
கோபுரத்தின் உட்பகுதியில் தசாவதாரம்
மத்ஸ்ய (மீன்) வடிவத்தில் தனி மூலவராக இங்கு காட்சி கொடுப்பதால் மத்ஸ்ய நாராயணர் கோயில் என்றும் வழங்கப்படுகிறது. இந்த மத்ஸ்ய அவதாரக் கோலம் வேறு எங்கும் இல்லை என்றும் கோயில் பற்றிச் செப்பியவர் சொன்னார்.
வேதவல்லித் தாயார், ஆஞ்சநேயர், ராமர், நரசிம்மர், எல்லோருக்கும் தனியாகச் சன்னதிகள் உள்ளன. பொதுவாக விஷ்ணு கோயில்களில் பார்க்க முடியாத சிவன் சன்னதி இங்கு திருச்சுற்றில் உள்ளது. சிவன்-வீணா தட்சிணாமுர்த்தியாக வீற்றிருக்கிறார். (சிவபெருமான் நாரத முனிவருக்கும், சுக்ரமுனிவர்களுக்கும் இசையைப் பற்றி கற்பித்த உருவம் வீணா தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறது. இத்தோற்றத்தில் வீணையைக் கையில் ஏந்தியவராகத் தட்சிணாமூர்த்தி)
16 ஆம் நூற்றாண்டில், விஜயநகர மன்னரான கிருஷ்ண தேவராயர் தன் தாயின் நினைவில் இக்கோயிலைக் கட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வூரின் பெயரான நாகலாபுரம் என்பதும் கூட அவர் தனது தாயின் பெயரான நாகலா தேவி என்பதன் நினைவாக வைத்தார் என்பதும் வரலாறு.
இக்கோயிலின் சிறப்பு – இக்கோயிலின் முக்கியமான உத்சவங்களில் சூரிய பூஜை உத்சவம். இந்த உத்சவத்திற்கு இக்கோயில் புகழ்பெற்றது.
இப்படம் மட்டும் இணையத்திலிருந்து.
கோயில் மேற்கு நோக்கி இருப்பதால், மார்ச் மாத இறுதி வாரத்தில், மூன்று நாட்கள், மாலையில் சூரிய ஒளிக் கதிர்கள் கோயில் கோபுரத்திலிருந்து தொடங்கி 360 அடி தூரம் பயணித்து கர்ப்பகிரகத்தில் இருக்கும் இறைவனின் மீது நேரடியாக - முதல் நாள் இறைவனின் பாதத்திலும், இரண்டாம் நாள் நாபி/மார்பிலும், மூன்றாம் நாள் சிரஸ்/கிரீடத்திலும் விழுகிறது. சூரியனே பூஜை செய்வதாக ஐதீகமாம்.
எனவே மார்ச் மாதம் இறுதி வாரத்தில் பெரும்பாலும் மார்ச் 23-27 அல்லது 24-28 அல்லது 25-29 – அதாவது பங்குனி மாதம் 12, 13, 14 தேதிகளில் சூரிய ஒளி விழுவதால் ஆங்கிலத் தேதிகள் இப்படி மாறுபடலாம். உதாரணமாக 2015ல் மார்ச் 25-29, 2020 ஆம் வருடம் மார்ச் 23-27, இந்த வருடம் 2022ல் மார்ச் 24-28 இந்த உத்சவம் நடை பெற்றது. ஒவ்வொரு வருடமும் இந்த 5 நாட்கள் உத்சவம் நடைபெறும். கூடவே தெப்போத்ஸவமும் புஷ்கரணியில் நடைபெறும். மாலை 6.30-7.30 வரை.
மாலை 6 லிருந்து 6.15 க்குள் சூரிய ஒளி விழும் நிகழ்வு நடப்பதால், மாலை 5.30 லிருந்து 6.30 வரை இந்த நாட்களில் சிறப்பு தரிசனம் உண்டு. மத்ஸ்ய ஜெயந்தியும் கொண்டாடப்படும்.
இந்த ஐந்து நாட்களில் T.T.D நிர்வாகம் தினமும் காலையில் ஸ்ரீ வேதநாராயணர் மற்றும் தாயார் ‘ஸ்னபன திருமஞ்சனம்’ நிகழ்வையும் நடத்துகிறது. மேலும் ‘சூரிய பூஜை’க்குப் பிறகு, மாலையில் கிராமத்தின் தெருக்களில் (திருவீதி உற்சவம்) ஊர்வலம் நடைபெறும்.
முதல் நாள் ராமர் அலங்காரத்தில், இரண்டாம் நாள் ‘முத்தியப்பு பண்டிரி’ (இப்படித்தான் என் காதில் விழுந்தது. சரியா என்று தெரியவில்லை.) தமிழில் முத்துப் பந்தல் வாஹனம், மூன்றாம் நாள் சேஷ வாஹனம் என்று இறைவன் திருவீதி உலா வருவார்.
இந்த நிகழ்வுகளைக் குறித்து திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு வருடமும் தேதி வாரியாக அறிவிக்கிறது. இவை அங்கிருந்த சேவகர் ஒருவர் தெலுங்கு தமிழில் செப்பிட, நமகே கொத்தாயிட்டு! நோட்டுக்குத்தான்.
நாங்கள் சென்றிருந்த போது கோயிலில் புரட்டாசி உத்சவம் நடந்திருந்ததன் அடையாளம் கோபுர வாசலில் பந்தல். மற்றொரு புறம் சீரமைப்புப் பணிகளும் நடந்துகொண்டிருந்தது.
சுற்றுப் பிராகாரத்தில் இருந்து எடுத்த புகைப்படம்.
கோயிலின் கோபுரங்கள் மிக மிக அழகு. கோயிலினுள் சுற்றுப் பிராகாரம் முழுவதும் பூந்தோட்டம். தவிர நந்தவனமும் இருக்கிறது. இக்கோயிலில் என்னைக் கவர்ந்தவை இவை.
இக்கோபுரம் சுற்றுப் பிராகாரத்தில். வடக்கு கோபுரம். இக்கோபுரத்தின் நுழைவு வாயிலின் இரு புறமும் தனித் தனியாக எடுத்த புகைபடங்கள் கீழே இதோ.
கோயிலினுள் செல்லும் போதே இவை என் கண்ணில் பட்டுவிட்டதால், உள்ளே சென்று ஒரு சுற்று சுற்றிவிட்டு, (உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை) என் தங்கை சன்னதிகளில் இருக்க, நான் வெளியில் வந்து இவற்றை எல்லாம் மனதிலும், மூன்றாவது விழியிலும் அகப்படுத்திக் கொண்டேன்.
அடுத்து மிக முக்கியமான விஷயம் - கோயிலில் பிரசாதமாக (மடைப்பள்ளி கோயில் பிரசாதமாக்கும்!! எனக்குத் தெரிந்தவரை நான் சென்ற இந்த ஆந்திரா கோயில்கள் எங்கும் பிரசாத கௌண்டர் என்று வியாபாரம் இல்லை) அருமையான புளியோதரை நிறையவே கிடைத்தது, கொஞ்ச நேரத்தில் தயிர்சாதமும் கிடைத்தது என்று சொன்னால் உங்களுக்குப் புகை வராது என்று எனக்குத் தெரியாதா என்ன! இருந்தாலும் சொல்லி வைப்போம் என்று சொல்லிவிட்டேன்!
(ஸ்ரீராமிற்கு, நங்கநல்லூர் ஆஞ்சநேயர் தன் புளியோதரையை இன்னும் நிலுவையில் வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்!)
சுருட்டப்பள்ளியிலிருந்து, நாகலாபுரம் கோயில் 12.5 கிமீ தூரம்தான். செல்லும் வழி எல்லாம் அழகாக இருக்கும்! மலைகளும் சிறு கிராமங்களும் என.
நாகலாபுரம் ஆந்திரா மாநில பேருந்து நிலையத்தில் இறங்கினால் ஆட்டோவில் 3 நிமிடங்களில் சென்று விடலாம். நடராஜா சர்வீஸ் பழுதில்லாமல் இருந்தால் அந்த சர்வீஸிலும் போய்விடலாம்!!
நெடுஞ்சாலையில் நாகலாபுரம் கோயில் நிறுத்தத்தில் இறங்கினால், இறங்கி வலப்புறம் (சாலையைக் கடந்து) கோயிலுக்குச் செல்லும் சாலையில் நடராஜா சர்வீஸில் 10 நிமிடத்திற்குள் சென்றுவிடலாம். அல்லது ஆட்டோவில் 2 நிமிடங்களில் சென்று விடலாம்.
சுருட்டப்பள்ளி, புத்தூர் வழி திருப்பதி நெடுஞ்சாலையில் செல்லும் பெரும்பான்மையான பேருந்துகள் கோயில் நிறுத்தத்தில் நிற்கும் அல்லது நாகலாபுரம் பேருந்து நிலையத்திற்கும் செல்லும். எங்கு இறங்கினாலும் பிரச்சனை இல்லை.
நாலுசக்கரம் என்றால் நெடுஞ்சாலையில் கோயில் நிறுத்தத்திலிருந்தே வலப்புறமாகத் திரும்பி கோயிலுக்கு அருகில் 2 நிமிடத்தில் சென்று விடலாம். வண்டிகள் நிறுத்திக் கொள்ளலாம். அப்போது கட்டணம் இல்லை. இப்போது வண்டிகள் நிற்பதற்கு அனுமதி இருக்கிறதா, கட்டணம் உண்டா என்று தெரியவில்லை. கேட்டுக் கொள்ளலாம்.
நாங்கள் சர்வதரிசனத்தில்தான் சென்றோம். அப்போது அதிகம் கூட்டம் இருக்கவில்லை. நவராத்திரி உத்சவம் நடந்து முடிந்திருந்த சமயம். தரிசன நேரம் மாறுபட வாய்ப்பு உண்டு என்பதால் கோயிலுக்குச் செல்லும் முன் தெரிந்து கொண்டு செல்வது நல்லது.
அடுத்து இங்கிருந்து மிக அருகில் இருக்கும் ராமகிரி எனும் இடத்தில் உள்ள வாலீஸ்வரர் கோயிலுக்குப் போலாம்.
சென்ற பதிவுகள், இப்போதைய பதிவு எல்லாம் வாசிப்பவரகள், கருத்திடுபவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
-----கீதா
கோவில் படங்கள் அழகு. ஆயினும் வெண்மை நிறம் அமெர்க்கக் கோவில்களை நினைவு படுத்துகிறது. நம் பழமையைக் காணோமே என்று பார்த்தால் செடி வளர்ந்திருக்கும் படங்களில் பழமை தெரிகிறது!
பதிலளிநீக்குஆமா ம் எனக்கும் இந்த வெள்ளை ஈர்ப்பதில்லை. கோபுரங்களில் வண்ணம் தீட்டுவதும் ஈர்ப்பதில்லைதான்...முன்பு எப்படி இருந்ததோ அப்படியே இருப்பது பிடிக்கும்.
நீக்கு//நம் பழமையைக் காணோமே என்று பார்த்தால் செடி வளர்ந்திருக்கும் படங்களில் பழமை தெரிகிறது!//
ஹாஹா ஆமாம்..அந்த பழமை பிடித்தது அதனால்தான் இரு புறமும் தனியாக எடுத்தேன். அங்கு தள்ளி நின்று முழுவதும் எடுக்க இடம் இல்லை ...வெடிப்புகளில் செடிகள் வளர்ந்துள்ளன...பராமரிப்பு என்று வண்ணம் தீட்டாமல் பழமையை பராமரிக்கலாம்
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
புளியோதரை! ஆம்.. சென்ற வாரம் சனிக்கிழமை மறுபடி நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் சென்றேன். கும்பாபிஷேகம் சமீபத்தில் முடிந்திருந்தது. நான் போன நேரம் திரை போட்டு, அம்சி சம்பிரதாயங்கள் முடிந்தபின். (காத்திருந்தேன்,, காத்திருந்தோம்!) பிரசாதம் கொடுத்தார்கள். வெண்பொங்கல்!
பதிலளிநீக்குஆ!! இம்முறையும் ஆஞ்சு ஏமாற்றிவிட்டாரா!! ஆஞ்சுவோடு பேசிவிட்டுச் செல்லுங்கள் ஸ்ரீராம்!!!!!!
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
ஆமாம், இந்தக் கோவில்களுக்கெல்லாம் எப்போது சொல்லப்போகிறேன்?!
பதிலளிநீக்குவிரைவில்.
நீக்குஇந்தக் கோயில்களுக்குச் செல்வது எளிதுதான் ஸ்ரீராம். ஒரே நாளில் சென்று வந்துவிடலாம். திட்டமிடாமல் தடாலென்று கிளம்புங்கள். ஆனால் உத்சவமாக இல்லாத நாட்களாக...
கீதா
படங்கள் எல்லாம் அழகு. கோப்ரத்தில் உள்ளே சூரிய ஓளி அழகு கொடிமரத்து கீழே வட்டவடிவ பிரிதிபலிப்பு எல்லாம் அழகு.
பதிலளிநீக்குமலர்கள் படம் அருமை.
//ஒருவர் தெலுங்கு தமிழில் செப்பிட, நமகே கொத்தாயிட்டு! நோட்டுக்குத்தான். //
கொத்தில்லா என்று சொல்லாமல் கொத்தாயிட்டா என்று சொன்னது மகிழ்ச்சி.
//நாகலாபுரம் ஆந்திரா மாநில பேருந்து நிலையத்தில் இறங்கினால் ஆட்டோவில் 3 நிமிடங்களில் சென்று விடலாம். நடராஜா சர்வீஸ் பழுதில்லாமல் இருந்தால் அந்த சர்வீஸிலும் போய்விடலாம்!!//
என் அப்பாவிற்கு நாகலாபுரம் கந்தசாமி என்ற நண்பர் இருந்தார்கள். எங்கள் வீட்டுக்கு அவர்கள் வந்தால் நாகலாபுரம் மாமா வந்து இருக்கிறார்கள் என்று அப்பாவிடம் சொல்வோம்.
உண்மை, "நடராஜா சர்வீஸ்" நடராஜர் அருளால் பழுதில்லாமல் இருந்தால் போய்வரலாம் எங்கும்.
//அருமையான புளியோதரை நிறையவே கிடைத்தது, கொஞ்ச நேரத்தில் தயிர்சாதமும் கிடைத்தது//
என் கணவருக்கும் புளியோதரைதான் பிடிக்கும் சர்க்கரை பொங்கல் கொடுத்தால் புளியோதரை கொடுத்து இருக்கலாம் என்று சொல்வார்கள்.
அந்த சூரிய ஒளிப் படம் இணையத்திலிருந்து...கோமதிக்கா...நாங்கள் அந்த நிகழ்வுக்குச் செல்ல முடியவில்லை.
நீக்கு//என் அப்பாவிற்கு நாகலாபுரம் கந்தசாமி என்ற நண்பர் இருந்தார்கள். எங்கள் வீட்டுக்கு அவர்கள் வந்தால் நாகலாபுரம் மாமா வந்து இருக்கிறார்கள் என்று அப்பாவிடம் சொல்வோம்.//
அட! கோமதிக்கா...பெரும்பாலும் உங்களுக்கு எல்லா இடங்களிலும் நட்பு அல்லது உறவு இருக்கிறார்கள்!! நல்ல விஷயம்...
//என் கணவருக்கும் புளியோதரைதான் பிடிக்கும் சர்க்கரை பொங்கல் கொடுத்தால் புளியோதரை கொடுத்து இருக்கலாம் என்று சொல்வார்கள்.//
ஆஹா! புளியோதரைக்கு ஆதரவு நிறையத்தான் இல்லையா...
//படங்கள் எல்லாம் அழகு.//
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குவிபரங்கள் நன்றாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றி
மிக்க நன்றி கில்லர்ஜி. கருத்திற்கு
நீக்குகீதா
நாகலாபுரம் கோவில் படங்களும் விவரணைகளும் நன்று. பூக்கள் படம் பதிவுக்குப் பொருத்தமாக இல்லை.
பதிலளிநீக்குதிருப்பதி தேவஸ்தான கோவில்களில் பிரசாதம் உண்டு. திருப்பதியில் பல்வேறு கோயில்களில் பிரசாதம் கிடைத்திருக்கிறது
மிக்க நன்றி நெல்லை. பூக்கள் நந்தவனத்தில் எடுத்ததால் போட்டேன்...
நீக்குஆமாம் திருப்பது தேவஸ்தான கோயில்களில் பிரசாதம் உண்டு...நானும் சுவைத்திருக்கிறேன். திருப்பதி மிளகோரையும் பிரமாதமாக இருக்கும்.
மிக்க நன்றி நெல்லை
கீதா
கோபுரங்களில் வளர்ந்திருக்கும் செடிகள் ஆபத்துதான். யார் உழவாரப் பணி செய்வார்களோ
பதிலளிநீக்குஆமாம்...கோபுரம் வயதான நிலையில் இருக்கிறது. சும்மா ப்ளாஸ்டரிங்க் தான் செய்கிறார்கள்
நீக்குமிக்க நன்றி நெல்லை
கீதா
படங்களும் பகிர்வும் அருமை அருமை
பதிலளிநீக்குமிக்க நன்றி கரந்தை சகோ கருத்திற்கு
நீக்குகீதா
கோவில் குறித்த தகவல்கள் அனைத்தும் சிறப்பு. படங்களும் நன்று. ஆங்காங்கே முளைத்திருக்கும் செடிகள் - வேதனை. பராமரிப்பில்லாமல் போனால் கொஞ்சம் கொஞ்சமாக பாழடைந்து போகக்கூடிய அபாயம் இருக்கிறதே! தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கும். தொடரட்டும் கோவில் உலா.
பதிலளிநீக்குகோவில் குறித்த தகவல்கள் அனைத்தும் சிறப்பு. படங்களும் நன்று.//
நீக்குமிக்க நன்றி வெங்கட்ஜி
//ஆங்காங்கே முளைத்திருக்கும் செடிகள் - வேதனை. பராமரிப்பில்லாமல் போனால் கொஞ்சம் கொஞ்சமாக பாழடைந்து போகக்கூடிய அபாயம் இருக்கிறதே!//
ஆமாம் ஜி...ஏதோ பராமரிப்பு என்று செய்கிறார்கள் ஆனால் இதைச் சரி செய்வதாகத் தெரியவில்லை. பழமையான கோயில் உள்ளே சுத்தமாகவும் இருக்கிறது
மிக்க நன்றி வெங்கட்ஜி
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் கண்களை கவர்கின்றன. கோபுர தரிசனம் செய்து கொண்டேன். ஸ்தல புராணம் தெரிந்து கொண்டேன். பூங்காவனத்தின் பசுமை மிகுந்த இடங்களும், மலர்கள் படமும் நன்றாக உள்ளது. மஞ்சள் நிற அடுக்கு பூக்கள் பார்க்கவே மிக அழகு.
கோவிலைப்பற்றிய விபரமும், செல்லும் வழிகள் குறித்த விபரமும் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். நாங்களும் என்றாவது இந்த கோவிலுக்குப் போனால் இந்த தகவல்களை அறிந்து கொண்ட திருப்தியுடன் பயணிக்க சௌகரியமாக இருக்கும்.:) உங்களின் இக்கோவில் களைப் பற்றிய பயண விபரங்களை படிக்கும் போது இங்கெல்லாம் செல்ல வேண்டும் போல் இருக்கிறது. அடுத்த கோவிலா ராமகிரி கோவிலின் பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
படங்கள் கண்களை கவர்கின்றன. //
நீக்குமிக்க நன்றி கமலாக்கா
ஆமாம் கோயில் உள்ளே அழகுதான். சுத்தமும் கூட.
//நாங்களும் என்றாவது இந்த கோவிலுக்குப் போனால் இந்த தகவல்களை அறிந்து கொண்ட திருப்தியுடன் பயணிக்க சௌகரியமாக இருக்கும்.:)//
மிக்க நன்றி கமலாக்கா. கண்டிப்பாகச் செல்வீர்கள்.
ஆமாம் ராமகிரி. அது இன்னும் பழமையான கோயில் அழகு இடம்
மிக்க நன்றி கமலாக்கா
கீதா
மீள்பதிவா? கட்டுரை நன்றாக உள்ளது. மூண்றாவது விழி நோட்டம் போட வாய்ப்பு கிடைக்கவில்லை. பூக்கள் அழகு.
பதிலளிநீக்குJayakumar
இல்லை ஜெகே அண்ணா புதிய பதிவுதான்.
நீக்கு//கட்டுரை நன்றாக உள்ளது. மூண்றாவது விழி நோட்டம் போட வாய்ப்பு கிடைக்கவில்லை. பூக்கள் அழகு.//
மிக்க நன்றி அண்ணா
கீதா
பூந்தோட்டம், நந்தவனம், பளீரென்று பளிச்சிடும் அந்த கோவில் கோபுரம் அனைத்துமே அழகு !!! அப்புறம் புளியோதரை... தயிர்சாதம்...பற்றியும் சொல்லலாம் என்றால்... ம்.... ம்ம்... நமக்கு தான் அந்த கொடுப்பினை இல்லையே??...
பதிலளிநீக்குமிக்க நன்றி கருத்திற்கு...
நீக்குபெயரில்லா - வல்லிம்மாவா? யாரென்று தெரியவில்லையே
மிக்க நன்றி
கீதா
வல்லிம்மா இல்லை என்று தெரிகிறது. ...யாரென்று தெரியவில்லையே...
நீக்குகீதா
அம்மாடியோவ்... நாம தப்பிச்சோம்... நல்லவேளை நம்மளை யாரும் கண்டுபிடிக்கலை... நமக்கு பதிலா "வல்லியம்மா" மாட்டிக்கிட்டாங்க... ஹைய்யா... (குறிப்பு :- அவசரத்தில் google account login செய்யாததை கவனிக்க மறந்ததால் இந்த "நாஞ்சில் சிவா" கணநேரத்தில் "பெயரில்லா"தவனாக ஆகிவிட்டான்... சாரிங்கோ.)
நீக்குஹாஹாஹா சிவா இந்த துள்ளல் பதிலை மிகவும் ரசித்தேன்...இந்தப் பெயரில்லா நீங்கதானா!! கண்டுபிடிக்க முடியலை சிவா அதுக்கும் சாரிங்கொ!!
நீக்குமிக்க நன்றி..
கீதா
ஆஹா!! கோவில் கோபுரம் மிக அழகு... புகைப்படமாக பார்க்கும்போதே நேரில் சென்று தரிசிக்க வேண்டும் என்னும் எண்ணம் மனதில் எழுகிறது!!..
பதிலளிநீக்குமிக்க நன்றி நாஞ்சில் சிவா....வாய்ப்புக் கிடைத்தால் சென்று வாருங்கள்
நீக்குநன்றி சிவா
கீதா
இந்தக் கருத்தும் இருந்ததால் அக்கருத்து உங்களுடையது என்று கணிக்க முடியவில்லை சிவா...
நீக்குகீதா