புதன், 24 ஜூன், 2026

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - நாமக்கோழி - Common Coot - பகுதி - 1

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் Profile - பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.

=========================================================================ந்த நீர்ப்பறவையின் பெயரே வித்தியாசமாக இருக்கிறது இல்லையா? இங்கு பெங்களூர் ஏரிகளில் நிறைய பார்க்கலாம். நாமக்கோழியை இதற்கு முன்னும் பார்த்திருந்தாலும் படங்கள் காணொளிகள் எடுத்ததில்லை. அப்போதெல்லாம் கேமரா அலைபேசி இல்லையே. 

பெங்களூரில் நான் இருந்த/இருக்கும் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் ஏரிகளில் நடைப்பயிற்சி சென்ற/செல்லும் போதெல்லாம் நிறைய புகைப்படங்களும், காணொளிகளும் எடுத்திருக்கிறேன். அவற்றின் செயல்பாடுகள், வாழ்க்கை முறை உட்பட. 

தன் உடல் முழுவதும் கறுப்பு நிறம் அல்லது கரும் சாம்பல் நிறத்தில் இருப்பதைப் பார்க்க முடியும். இதன் அலகு (மூக்கு) மற்றும் நெற்றிப் பகுதி மட்டும் பளிச்சென்று வெள்ளை நிறத்தில் இருப்பதைப் பார்க்க முடிகிறது இல்லையா? நாமம் போல என்று தோன்றுகிறதா? அதுதான்  பெயர்க்காரணம். நாமக்கோழி. ஆங்கிலத்தில் Common Coot. (இதை ஸ்ரீராம் மறக்க மாட்டார்! இனி வசந்தின் டயலாக் சொல்ல மாட்டீங்கல்ல?!!!! 
திருப்பதி பாலாஜி போல நாமம்ல!

இவற்றின் கண்கள் சிவப்பாகத் தனியா தெரியும். ஆனால் closeup எடுக்க முடிந்ததில்லை. 

வாத்துகளைப் போல இவற்றின் விரல்கள் சவ்வினால் இணைக்கப்பட்டிருக்காது. மாறாக, இவற்றின் விரல்களில் அகலமான துடுப்பு போன்ற தோலமைப்பு (Lobate feet) இருக்கும். இது சேற்றில் நடக்கவும், நீரில் நன்றாக நீந்தவும் உதவுகிறது. (இதற்கு மேலே உள்ள படத்தைக் கொஞ்சம் பெரிது பண்ணிப் பார்த்தால் தெரியும்) காலைத் தூக்கிக் காட்டு, இப்படிக்காட்டு அப்படிக் காட்டுன்னு டான்ஸ் ஆட வைக்க  முடியுமா என்ன? சொல்லுங்க!

வை அனைத்துண்ணிகள் வகையைச் சேர்ந்தவை. நீரில் இருக்கும் பாசிகள், நீர்ச்செடிகள், புற்கள், சிறு பூச்சிகள், புழுக்கள் மற்றும் சிறிய மீன்களை உணவாக உட்கொள்ளும். தலைகீழாக நீரில் மூழ்கி அடிமட்டத்தில் இருக்கும் உணவை உண்ணும் காட்சி மிக அழகாக இருக்கும்.  நீரில் டைவ் அடிச்சு உணவு சாப்பிடுவதை நீங்க காணொளியில் பார்க்கலாம்.

ண்ணீரில் மட்டும் அல்லாமல், இவை தரைப்பகுதிக்கும் வந்து புல்வெளிகளில் உள்ள விதைகள், தானியங்கள் மற்றும் பூச்சிகளையும் விரும்பி மேய்கின்றன. சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் குணம் கொண்ட இந்த நாமக்கோழிகள், பிற பறவைகளின் உணவைப் பறித்து உண்ணும் தந்திரமும் வாய்ந்தவை.

கூட்டமாக இருப்பது தெரிகிறதா?

ரிகள், குளங்கள், பெரிய குட்டைகள் மற்றும் சதுப்புநிலங்கள் போன்ற நன்னீர் நிலைகளில் இவை, இனப்பெருக்கக் காலம் அல்லாத சமயத்தில் (Non-breeding season) கூட்டமாக 'ராஃப்ட்ஸ்' (Rafts) எனப்படும் பெரிய குழுக்களாக வாழும். இதனால் எதிரிகளிடம் இருந்து தப்பிக்கவும், நிம்மதியாக உணவு தேடவும் அவற்றுக்கு வசதியாக இருக்கும். இனப்பெருக்கக் காலத்தில் மட்டும் எல்லை போட்டுக்குவாங்க! கூட்டமாக இருக்க மாட்டாங்க.

ல நீர்வாழ் பறவைகளைப் போலவே, நாமக்கோழிகளும் தங்களின் மூக்குத்துவாரங்களில் (Nostrils) இருக்கும் அழுக்கு, சேறு மற்றும் கழிவுகளை வெளியேற்றுவதற்காகத் தங்களின் அலகுகளை, முகத்தை அடிக்கடி தண்ணீருக்குள் அமிழ்த்தி அமிழ்த்தி எடுத்து உதறுவதைக் காணலாம். கண்ககளையும் அப்படியே சுத்தம் செய்யுமாம். (காணொளியில் தலையை மட்டும் தண்ணீருக்குள் அமிழ்த்தி அமிழ்த்தி எடுப்பதைப் பார்க்கலாம்.)

ன் தலை மற்றும் கழுத்துப் பகுதியின் மேல் தண்ணீரை அள்ளித் தெளித்துக் கொண்டு, பின்னர் உடலை பலமாக உதறுகிறது. இது சிறகுகள் முழுவதும் தண்ணீர் பரவுவதற்கு உதவுகிறது. இதுவே அவை தங்கள் சிறகுகளைச் சீரமைப்பதற்கான (Preening) மிக முக்கியமான முதல் படியாகும். அதன் பிறகு, நாமக்கோழிகள் தங்களின் வால் பகுதிக்கு அருகில் இருக்கும் சுரப்பியில் (Preen gland) இருந்து சுரக்கும் இயற்கையான, நீர் புகாத எண்ணெய்ப் பசையை (Water-proofing oils), புதிதாகக் கழுவப்பட்ட தங்களின் தலைச் சிறகுகளின் மீது தடவிப் பரப்பிக் கொள்கின்றன.

வெப்பம் அதிகமாக இருக்கும்போது, தலையைத் தண்ணீரில் மீண்டும் மீண்டும் முக்கி, பின்னர் உடலில் ஒட்டியிருக்கும் நீர்த்துளிகளை உதறித் தள்ளுவது, அவை தங்கள் உடலின் வெப்பநிலையைக் குறைத்துக் கொள்வதற்கான ஒரு சிறந்த வழியாகும்.

நாமக்கோழிகள் தங்கள் இறக்கைகளை லேசாகத் தூக்கி, பஃப் என்று உப்பலாக விரித்துக் கொண்டு (Arching wings/Puffing up) நீந்துவதைப் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். இது என்னன்னு பார்த்தீங்கனா (பதிவின் கடைசியில் உள்ள காணொளியில் கடைசி க்ளிப் இதுதான். )

ப்படத்தில்பின் பக்கம் வெள்ளையாகத் தெரிகிறதா?

நாமக்கோழிகளின்  பின்புறத்தில் வெள்ளையாகத் தெரிகிறதா?  அவற்றின் உடலமைப்பில் உள்ள ஒரு மிக முக்கியமான பகுதி.இதை ஆங்கிலத்தில் "White Under tail Coverts" (வாலின் அடிப்பகுதி இறகுகள்என்று சொல்வார்கள். 

வை தண்ணீரில் நீந்தும்போதுதங்களின் தலையை முன்னும் பின்னும் ஆட்டிக்கொண்டே நீந்தும்அப்போது உடலின் பின் பகுதி லேசாக மேல்நோக்கி எழும்பும் போதெல்லாம் அந்த வெள்ளை நிறம் நமக்குத் தெரியும்வாலின் கீழ் இருக்கும் இந்த வெள்ளை நிறமும் அவற்றுக்கு இடையே பேசிக்கொள்ள உதவும் ஒரு "இயற்கை அடையாளக் குறியீடு". 

ச்சரிக்கை மற்றும் தகவல் தொடர்புக்காக (Signaling) அதாவது  ஆபத்தை உணரும்போதோ அல்லது மற்ற நாமக்கோழிகளுக்கு ஏதேனும் தகவல் சொல்ல நினைக்கும்போதோ, தங்களின் வாலை மேல்நோக்கித் தூக்கிக் காட்டுமாம் (Tail flicking). அப்படிச் செய்யும்போது அந்த வெள்ளை நிற இறகுகள் பளிச்சென்று தெரியும். இது பின்னால் வரும் மற்ற பறவைகளுக்கு ஒரு 'சிக்னல்' போலப் பயன்படுகிறது. என்ன ஒரு டெக்னிக் இயற்கையின் படைப்பு இல்லையா!! 

https://www.youtube.com/watch?v=5LBoXpBQMQ4

ஏரி குளங்களின் ரௌடி -Beautiful Chasing Scene!

Chasing Scene! இரண்டு நாமக்கோழிகள் தண்ணீரின் மேல் மிக வேகமாக ஒன்றையொன்று துரத்திக் கொண்டு ஓடுவதைப் பார்த்தால் இது விளையாட்டுப் போலத் தோன்றினாலும், அதுவல்ல, காரணம்.

ங்களின் எல்லை விஷயத்தில் மிகவும் பிடிவாதமானவை. தனது எல்லைக்குள் வேறு எந்த நாமக்கோழியும் நுழைவதை இவை விரும்புவதில்லை. உணவுத் தேடலுக்கான இடத்தை தங்களுக்குள்ளேயே பிரித்து வைத்திருக்கும். அங்கே யாராவது அத்துமீறி நுழைந்தால், ஆக்ரோஷமாக விரட்டியடிக்கும்.

ப்படி ஒன்றை ஒன்று துரத்தும் போது, இறக்கைகளைப் படபடவென அடித்துக் கொண்டு கால்களால் தண்ணீரை உதைத்து, நீர் மேலேயே ஓடுவது போல வேகமாகப் பாய்வது தெரிகிறதா காணொளியில்? இதற்கு "ஸ்கிட்டரிங்" (Skittering) என்று பெயர். எதிராளியைப் பயமுறுத்தி ஓட வைப்பதற்கான ஒரு ஆக்ரோஷமான எச்சரிக்கை. இறுதிவரை விடாமல் துரத்தித் தனது எல்லையைத் தக்க வைத்துக் கொண்டது பாருங்க இந்த ரவுடி பேபி!  பார்ப்பதற்கு மிக சுவாரசியமாக இருக்கும்.  

கீழே இப்பகுதி காணொளியாகக் கொடுத்திருக்கிறேன். 3 நி.15 நொ தான் முடிந்தால், விருப்பமிருந்தால் பாருங்கள்.

இத்தொகுப்புக் காணொளியில் கடைசி க்ளிப்பிங்கில் வேறொரு துரத்தலைப் பார்க்கலாம். ஒரு பெண் நாமக்கோழிக்காக இரண்டு ஆண் நாமக் கோழிகள் இறக்கைகளை உப்பலாக விரித்து போட்டி போடுவதைப் பார்க்கலாம். 

"ஏய் இது என் ஏரியா உள்ள வராதே!" என்று மிரட்ட தங்கள் இறக்கைகளை இப்படி உப்பலாக விரித்துக் கொண்டு நீந்தும். தன்னை விடப் பெரிய எதிரிகளை அல்லது சக பறவைகளைப் பயமுறுத்தி ஓட வைப்பதற்கும் இந்த டெக்னிக். ஆனால்....

னப்பெருக்கக் காலங்களில் (Mating season) ஆண் நாமக்கோழிகள், பெண் நாமக்கோழிகளைக் கவர்வதற்காகத் தங்கள் இறக்கைகளை இப்படி அழகாக வளைத்து, கம்பீரமாக நீந்திக் காட்டும். கூடவே வேறு ஒரு ஆண் நாமக்கோழி வந்தா துரத்தும்.

https://www.youtube.com/watch?v=1Fgmm-5GNaw

அடுத்த பகுதியில் நாமக்கோழி கூடு கட்டும் விதம், குஞ்சுகள் எல்லாம் பார்ப்போம்...தொடர்வோம்...


-----கீதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக