தலக்காடு- 1, 2, 3, 4, 5 , 6 , 7 , 8 , 9 , 10 , 11
கோயிலைச் சுற்றிச் சிற்பங்களைப் பார்த்துக் கொண்டே முன்பக்கம் வந்து கொண்டிருக்கிறோம் இல்லையா.
இப்ப முன்பக்கத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். என்றாலும் நிறைய சிற்பங்கள்!
இப்பதிவில் கொஞ்சம் நிறையவே படங்கள் இருக்கலாம். காரணம், வேலை. இன்றோ நாளையோ வந்துவிடும். வந்துவிட்டால் வலைப்பக்கம் அதிகம் நேரம் செலவிட முடியாது என்பதால் மீதி இருக்கும் சிற்பங்களின் படங்களையும் போட்டு, கோயிலை ஒட்டி இருக்கும் வீரபத்ரேஸ்வரர் கோவிலின் படங்களையும் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்ததைச் சொல்லி மங்களம் பாடிடலாம் என்று....எவ்வளவு நாளா தலைக்காடை சுத்திட்டிருக்கோம் இல்ல?... சரி சிற்பங்கள் என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம்...
மஹிஷாசுர மர்தினி ரம்ய கபர்தினி சைலசுதே? சிற்பம் என்று எனக்குத் தோன்றுகிறது
பிரம்மா
https://www.youtube.com/watch?v=2NjWzUZSqfQ
பிரம்மா என்றதும் ஏதேனும் சினிமா பாடல் இருக்கிறதா என்று ஆராய்ந்தேன். அழகான பழைய தெலுங்கு பாடல் ஒன்று கிடைத்தது. அதன் சுட்டிதான் இது. ஆடியோ கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கிறது என்பதையும் சொல்லிவிடுகிறேன்.
சூரியன் மற்றும் அவரது இரு மனைவிமார்களுடன்? என்று எனக்குத் தோன்றுகிறது....
அழகான பெண் சிற்பம். கூடவே சுற்றிலும் எவ்வளவு அழகான நுணுக்கமான டிசைன்கள் செதுக்கியிருக்காங்க!
சிவன் என்று
தெரிகிறது ஆனால் என்ன மூர்த்தம் என்று தெரியவில்லை
https://www.youtube.com/watch?v=jLQqWQW4S4s&t=40s
எப்படி இப்பூமி, அது தரும் பிராணவாயு, காற்று, நீர், இரவு பகல், உறக்கம், உணவு எல்லா உயிர்களுக்கும் சமமோ அது போன்று சமூக அந்தஸ்திலும் அனுபவங்களிலும் வேறுபாடுகள் இருந்தாலும் அனைத்து உயிர்களுக்குள்ளும், மனித உயிர் உட்பட இருக்கும் உண்மைப் பொருள் ஒன்றே, என்று சொல்லும் பாடல். நீங்களும் கேட்டுப் பாருங்க! எனக்கு ரொம்பப் பிடித்த பாடல்.
விஷ்ணு துர்கையா?
துர்கையா?
யார் யாரைச் சுமந்திருக்கிறார்? இடுப்பில் இருப்பவரின் தலையைக் காணவில்லை. இல்லை ஃபோட்டோவுக்கு வெட்கப்பட்டுக் கொண்டு பின்பக்கம் மறைத்திருக்கிறாரா!!?
எனக்கு வேண்டும்
வரங்களை
இசைப்பேன் கேளாய்
கணபதி!
மனத்திற் சலன
மில்லாமல்,
மதியில் இருளே
தோன்றாமல்,
நினைக்கும் பொழுது
நின்மவுன
நிலைவந் திடநீ
செயல்வேண்டும்.
கனகுஞ் செல்வம், நூறுவயது:
இவையும் தரநீ கடவாயே
(பாரதியின் விநாயகர் நாண்மணிமாலை)
மீண்டும் கண்ணப்ப
நாயனார் வலப்புறம்
மார்கண்டேயர் இடப்புறம்.
அயிகிரி நந்தினி
நந்தித மேதினி
இதோ திருச்சுற்று
முடியப் போகிறது....
ஹப்பா ஒரு வழியாகச் சுற்றி முன்பக்கம் நுழைவுவாயிலுக்கு வந்துவிட்டோம் தெரிகிறதா? துவாரபாலகர் (முதல் பதிவில் போட்டிருந்தேன்)
முன்பக்கம் வந்தும்,
அடடா! சுற்றி வரத் தொடங்கும் போது வலப்பக்கம் திரும்பி சைட் சுவர் மற்றும் சைடில் இருந்த நுழைவுவாயில் தூண்களில்
சிலவற்றை எடுக்காமல் விட்டிருந்தவை தெரிந்ததும் உடனே க்ளிக்ஸ். ஏற்கனவே சைட் சுவர், மண்டபத்
தூண்கள் படங்கள் பகிர்ந்துவிட்டேன். கோவிலை விட்டு வெளியில் வரும் முன் மீண்டும் வலப்புறம் சைட்சுவர் மற்றும் சைட் நுழைவு வாயில் தூண்களில் கடைசியில் எடுத்த படங்கள் இதோ கீழே...
மன்மதன்?
வாசலில் நந்தி, உள்ளே செல்லும் முன் பகுதியில் பிள்ளையார். வேறு படங்கள் எடுக்கவில்லை. கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஜஸ்ட் பார்த்துவிட்டு வெளியில் வந்தால் நந்தி இருக்கும் படத்தில் படிக்கட்டுகள் தெரிகின்றன இல்லையா? இப்படிக்கட்டுகள் வழி ஏறி பார்க்கிங் பகுதிக்குச் செல்ல வேண்டும்.
மணலில் கால்கள் புதைய ஒரு 10 நிமிடம் நடந்தால் நேராக முதலில் பார்த்த பாதாளீஸ்வரர் கோவிலின் முன் சென்றுவிடுவோம். அப்படியே இடப்பக்கம் திரும்பி வந்த வழியே மீண்டும் மணலில் நடை. (இப்படங்கள் எல்லாம் தலக்காடு பதிவுகளின் முதல் பகுதிகளில் பகிர்ந்துவிட்டேன்) பார்க்கிங் பகுதிக்குச் சென்றடைந்த போது மணி 4.45 ஆகியிருந்தது. வண்டியில் ஏறி நேராக வீடு நோக்கிப் பயணம்.
மத்தூர் செல்லும் வழியில் இந்த இரு படங்கள் மற்றும் கீழுள்ள ஒரு படத்தில் வயல்களில் தூரத்தில் வெள்ளையாகத் தெரிபவை கொக்குகள். ஓடும் வண்டியிலிருந்து எடுத்த காட்சிகள்
வழியில் அப்பாவிற்கு எங்கேனும் சூடாகக் காஃபி வாங்கிக் கொடுக்கலாம் என்றால் எங்கும் சரியாக இல்லை. நெல்லைக்கும், எனக்கும் மத்தூர் வடை எங்கேனும் சுவைக்க வேண்டும் என்று ஆசை. மத்தூர் வழிதானே செல்வோம் எனவே "மத்தூர் டிஃபனிஸ்" (Maddur Tiffinys. கிளைகள் பல இடங்களில் இருக்கின்றன.) உணவகத்தில் நன்றாக இருக்கும் என்று இணையத்தில் பார்த்திருந்தேன். ஸ்ரீதரும் அதையே சொல்ல, மத்தூர் சென்றதும் அந்த உணவகத்தில் நிறுத்தினார். நேரம் 6 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.
உணவகத்தில் கூட்டம். பார்க்கிங் பகுதியிலிருந்து கொஞ்சம் நடக்க வேண்டும் என்பதால் அப்பாவை காரிலேயே இருக்க வைத்துவிட்டு நாங்கள் உள்ளே சென்று எல்லோரும் Refresh செய்து கொண்டு, காஃபியும் மத்துர் வடையும் சாப்பிட்டுவிட்டு அப்பாவுக்கும் வாங்கிக் கொண்டு கொடுத்துவிட்டு பெங்களூர் நோக்கிப் பயணித்தோம்.
நெல்லையின் குடியிருப்பை அடைந்த போதே மணி 7.30. அவர் இறங்கிக் கொண்டார். நாங்கள் வீட்டை அடைய 8.45 ஆகிவிட்டது. மறுநாள் நம்மவர் அலுவலகம் செல்ல வேண்டுமே! அப்படியாக என் நெடுநாள் ஆசையான தலைக்காடு பார்த்துவிட்டு வந்தாயிற்று என்றாலும் தலக்காடு பஞ்ச்சலிங்கேஸ்வரர் கோயில்களில் 3 தானே பார்க்க முடிந்தது. இன்னும் இரு கோவில்கள் இருக்கின்றன! எப்போது போக முடியுமோ! I am waiting with my fingers crossed!
-----கீதா







































கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக