பாதாளேஷ்வரர் கோவிலில் இருந்து மரலேஷ்வரா கோவிலுக்கு மீண்டும் மணலில் நடக்கத் தொடங்கினோம். 4 கிமீ தூரம்.
வெயில்
தெரியாமல் இருக்க இப்பாதை முழுவதும் கூரை போட்டிருக்கிறார்கள். கீழே உள்ள படங்களில் கூரை தெரிகிறதா?
பாதையை கூரையுடன் எடுத்த படத்தைக் காணவில்லை!
போகும் வழியில் வலப்புறம் கீழே மிகுந்த ஆழத்தில் 40-50 அடி இருக்குமா? அங்கு கீர்த்தி நாராயண பெருமாள் கோவில் இருப்பது தெரியும். மேலிருந்து சில க்ளிக்ஸ்.
கீர்த்தி நாராயணர் கோவில்
கீர்த்தி நாராயணர் கோவிலுக்கு அடுத்தாப்ல போவோம். இங்கே மேலிருந்து க்ளிக்ஸ் எடுத்துக் கொண்டு போகும் போது வழியில் இடப்புறமும், வலப்புறமும் மரங்களும் மணலும்தான். பாலைவனச்
சோலை போன்று இருக்கிறது.
இடப்புறம் இப்படி ஒரு அறிவிப்புப் பலகை. இப்பண்டைய கோவில்களுக்கோ, நினைவுச்சின்னங்களுக்கோ, இப்பாதுகாக்கப்பட்ட பிரதேசத்திற்கோ சேதம் விளைவிப்பவர்கள் கடும் தண்டனைக்கு உட்படுவர். சிறைத்தண்டனை அல்லது 2000 ரூ அபராதம் அல்லது இரண்டும் என்ற அறிவிப்பு.
எல்லாவற்றையும்
பார்த்துக் கொண்டே நடந்து இதோ மரலேஷ்வரா கோவிலை நெருங்கிவிட்டோம்.
கோவில் 25-30 அடி ஆழத்தில் இருக்கிறது. எனவே
முந்தைய பாதாளேஸ்வரர் போல இங்கும் படிகள் இறங்கித்தான் செல்ல வேண்டும். படம் எங்க போச்சு
என்று தெரியவில்லை!
மரலு
என்றால் கன்னடத்தில் மணல். மணலில் புதைந்து கிடந்த மணற் கற்களினால் ஆன லிங்கம் என்ற
பொருளில் மரலேஷ்வரா என்றும் சைகதேஸ்வரா - சைகட ஷிலா - Sand stone மணலினாலானவர் என்றும் சொல்லப்படுவதாலும் இப்பெயர்.
மிகச் சிறிய கோவில். இக்கோவிலும் கிழக்கு
நோக்கி உள்ளது. கங்க மன்னர்கள், மற்றும் ஹொய்சாளர்களின் பங்கு இருக்கிறதாக வரலாறு சொல்கிறது.
இங்குள்ள சிவலிங்கம் பிரம்மாவால் பிரதிஷ்டை
செய்யப்பட்டு வழிபடப்பட்டதாகக் கருதப்படுகிறது. கொஞ்சம் பெரியதாக இருக்கிறார். முன்பக்கத்தில் அமைந்துள்ள மண்டபத்தில்
மகேஸ்வரர், சூரியன், விநாயகர், சுப்பிரமணியர், வீரபத்ரர், அம்பிகை மற்றும்
நவக்கிரங்கள் இருக்கிறார்கள்.
கோவிலுக்குள் படங்கள் எடுக்க அனுமதி இல்லை. கருவறைக்கு வெளியே சில எடுத்தேன். எடுக்கலாமா கூடாதா என்று தெரியவில்லை.
இப்படம் சரியா வரலை...பயந்துகொண்டே எடுத்ததால்...
கோவில் பிராகாரத்தைச் சுற்றி...
கீழே உள்ளவை, கோயிலுக்குப் படி இறங்கி ஏறும் இடத்தில் சிவலிங்கமும் நந்தி எம்பெருமானும்...
சில திருஉருவங்கள் மண்ணில் புதைந்து...சில சிதைந்து...
கீர்த்தி நாராயணர், வைத்தியநாதேஸ்வரர் கோவில்களுக்கு, பாதாளேஸ்வரர் கோவிலில் இருந்து வரும் போது வலப்பக்கம் திரும்ப வேண்டும். இடப்பக்கம் (மூலை) இருக்கிறது இக்கோவில். இக்கோவிலில் இருந்து படி ஏறினால் நேராகச் செல்ல வேண்டும். மீண்டும் மணல் பாதையில்....
இந்த இடத்தில் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள்
விற்கும் சிறிய கடை இருக்கிறது. நாங்கள் தண்ணீர் பாட்டில் மட்டும் வாங்கிக் கொண்டு
நடக்கத் தொடங்கினோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக