புதன், 11 மார்ச், 2026

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 29

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

ரி பற்றி எழுதலாம் என்றிருந்தேன். இன்னும் எழுதி முடிக்கவில்லை. எழுதி முடிக்கவில்லை என்பதோடு, ஏரிப்பக்கம் அவ்வப்போது செல்லும் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காட்சிகள், பார்த்ததும் புகைப்படங்கள் காணொளிகள் என்று எடுப்பதை உங்களோடு பகிர வேண்டும் என்ற ஆவலும் வந்ததா...(உங்களுக்குப் பிடிக்குதோ இல்லையோ, சுவாரசியமோ இல்லையோ என் ஆசை/திருப்திக்காக உங்களைப்படுத்திவிடுவேன்!)  வேகத்தடை எழும்பியது. 

"ஏன்? இப்படிச் செய்யேன். ஏரியை முடித்துவிடு. முன்பு ஏரிக்கரைகளில் பார்த்த பறவைகள் பற்றி எழுதியவை அப்படியே நிற்கிறதே! அவ்வப்போது பறவைகள் பற்றி தொடரலாமே! அப்படி எழுதும் போது இப்ப எடுத்தவற்றை அந்தந்தப் பறவைகளைப் பற்றிச் சொல்லும் போது படங்களையும் காணொளிகளையும் (நன்றாக வந்திருந்தால்) சேர்க்கலாமே" என்று நம்ம உள்ள ஒன்று உட்கார்ந்திருக்கே ஈசிசேர் போட்டு ஆசுவாசமாக, விஸ்ராந்தியாக.....அது இப்படித்தான் அவ்வப்போது நல்ல ஐடியாக்களை கொடுக்கும்.   வெளிய ஒன்னு இருக்கே பரபரன்னு....அது கேட்டால்தானே!

கொஞ்சம் புத்துணர்ச்சியோடு இருந்தால் இணையம் படுத்துகிறது, கூகுள் படுத்துகிறது. அல்லது கணினி ஆமை போல் ஆகிவிடுகிறது.  உடனே ஈசிசேர்ல ஆடிக்கிட்டே உள்ளருந்து பேச்சு. "சரி, அப்படினா...ஏதோ எனது மூன்றாவது விழியின் பார்வையிலேன்னு ஒன்னு சும்மானாலும் போட்டு ஒப்பேத்துவியே....மரங்களை எல்லாம் எடுத்தியே அதைப் போட்டு ஒப்பேத்து...எவ்வளவு ஐடியா கொடுத்தாலும் உருப்படியா ஏதாச்சும் செஞ்சாத்தானே. கொடுத்துக் கொடுத்து அலுத்துப் போச்சு!" 

ள்ளே இருப்பது பாவம். அது எப்பவுமே உருப்படியா நல்லதுதான் சொல்லும். அதையும் கொஞ்சம் அமைதிப்படுத்தலாம்னு...

னது மூன்றாவது விழியின் பார்வையிலே பகுதிக்குக் கொஞ்சம் புத்துணர்வு கொடுப்போம் என்று இப்பதிவு. நிறைய இருக்கின்றன. படங்கள் எடுப்பதற்குக் கேட்பானேன்? இப்படி வித்தியாசமான அழகான மரங்களையும் படங்கள் எடுத்தேனா.... அப்படி எடுத்த படங்கள் இதோ. 

1

மரத்தின் அடி 'தடி'யாக இருக்கிறது பாருங்க

2

மரத்திற்குக் கேடு விளைவிப்பவர்களுக்கும் கூட  அம்மரங்கள் அவர்களுக்கு நிழல் தருகின்றன

3

4

வலப்புறம் மேலே அனக்கோண்டா போல ஒன்று தன் தலையைக் கவிழ்த்துப் பார்ப்பது போல் இருக்கிறதோ? இந்த மரத்தின் வடிவத்தைப் பார்த்தீர்களா? ஆங்காங்கே எவ்வளவு பாக்கெட்டுகள் வைச்சிருக்கு பாருங்க! ஏதேதோ விலங்குகளின் முகங்கள் போன்ற தோற்றங்கள்! ஒரு மரத்தில் இத்தனை வடிவங்களா!!

5

இந்த மரத்தின் வடிவத்தைப் பாருங்க. ஒரு பெண் தன் கைகளைத் தூக்கிக் கோர்த்துக் கொண்டிருப்பது போல அல்லது ஏதோ ஒரு விலங்கின் / கலைமானின் நீண்ட கொம்புகள் ஒன்றுக்கொன்று முட்டிக் கொண்டு (லஸ்ஸி என்ற எழுத்துகளுக்கு அருகில் இருக்கும் பகுதி)

6

இதன் வேர்கள் எங்கருந்து வருது பாருங்க. அதன் வடிவம் எவ்வளவு அழகா இருக்கு. சுத்தி சிமென்ட் போட்டு எப்படி மனுஷங்க நாசம் பண்ணி வைச்சிருக்காங்க பாருங்க.

7

 

இந்த மரத்தின் வேர்களும் வித்தியாசமாக எவ்வளவு அழகாக இருக்கு இல்லையா?....இடையில் சிமென்ட்! இப்படிப் பார்க்கும் போது மனம் ரொம்ப வருத்தமாகிறது.

நிழல் தரும் மரத்திற்குக் கெடுதல் செய்வதும், உதவி செய்பவருக்குக் கெடுதல் செய்வதும் ஒன்றுதான்.

8

பறவைகள் கூடுகட்ட குச்சிகளைதரும்! கூடு கட்ட இடமும் தரும்! குடும்பம் நடத்த வீடாய் இருக்கும் மரத்திற்கு, பறவைகள் தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் குரலெழுப்பி சங்கீதமாய்த் தெரிவிக்கும்.  அப்படியான மரங்களின் நிலை சுயநல மனிதர்களால் பரிதாபமாய்.....

9

இப்படத்தில் வலப்புறம் கவனித்துக் கொள்ளுங்கள் யானையின் துதிக்கை போன்று?...அப்படியே கீழே வாருங்கள்...

10


இப்படத்தில் உங்களுக்கு ஏதேனும் Technic நான் பயன்படுத்தியிருப்பது தெரிகிறதா என்று சொல்லுங்கள். 

முதுகுச் சுமையுடன் ஒருவர் கைககளால் மரத்தைப் பிடித்துச் சரியாமல் தாங்குவது போன்று அல்லது பிடித்துக் கொண்டு ஏற முயல்வது போன்று. அதன் தொடர்ச்சியாய் கீழே...

11

 

யானை தும்பிக்கையை நீட்டியிருப்பது போல் தெரிகிறதா?

12

இதோ இன்னும் கொஞ்சம் கோணம் மாற்றி, Close up 

13

மரத்தின் அடி வேரிகளின் வடிவம் - யானைகள் துதிக்கையுடன் போல் உங்கள் கண்களுக்குத் தெரிகிறதா? கீழே வாங்க

14

இடப்புறம் யானை யானையின் மேல் ஒரு யானையின் துதிக்கை நீண்டு கீழே, இடப்புற யானையின் அடியில் ஒரு குட்டி யானை, கூடவே இரு யானைகள் படுத்துக் கொண்டு தும்பிக்கையை நீட்டியிருப்பது போல் கூட்டமாக யானைகள்.....என் கண்ணிற்குப்படுகிறது.

15


அதே படம் ...horizontal 


*****************************************************************************

ஆலமரம்போல அடர்ந்தே நானும்

வளர்ந்துநல் நிழல்தரவேண்டும்

தென்னைக்கும் உண்டிங்கு ஆசை..

வாழைபோல, வந்தோமா

பயன் தந்தோமா சென்றோமா

என்று வாழ்வதே வாழ்க்கை

வருடங்கள் பலவாழ்ந்து

வாழ்க்கை போரடிக்கிறது..

ஆலமரத்துக்கும் இருக்கிறது

அடுத்த வாழ்க்கை மீதான ஆசை..

இங்கு எவரும்

தன் வாழ்க்கையை

வாழ்வதேயில்லை.

----எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்

 

ஏரிக்கு வெளியிலே சாலை ஓரம் ஏரி மற்றும் பூங்காவின் தடுப்புக் கம்பிகளை ஒட்டி

தடைகள் வந்தாலும்

இடத்தைக்  குறுக்கினாலும்

தகர்த்தெறிந்து

தலைமுறை வளர்க்க

 விழுதுகளை

ஊன்றி நிற்கும் ஆல்! 

ஏரிக் கரையிலே

தலைமுறை விழுதுகள்

 ஊன்றி வளர்த்த

தாயை

தாங்கி நிற்கும் அழகு!

படங்களை ரசித்தீர்களா? அடுத்த பதிவில் சந்திப்போம்...


--------கீதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக