இந்தக் கதை பிறந்த கதை : எல்லாக் கதைகளும் கற்பனையல்ல. சில கதைகள் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டவை. அதை எழுதும் எழுத்தாளனுக்குக் கிடைக்கும் ஒரு மன நிறைவு பெரிது.
எங்கள் பகுதியில் நடந்த ஓர் உண்மைச் செய்தியை அடிப்படையாக வைத்துப் புனைந்தது. இதன் தொடர்ச்சிதான் எங்கள் குறும்படம் பரோட்டா கார்த்திக். அதில் நம் வலை நண்பர்கள் திருவாளர் இராயசெல்லப்பா, நண்பர் குடந்தை ஆர் வி சரவணன், திருவாளர் திண்டுக்கல் தனபாலன், கோவை ஆவி நடித்துள்ளனர் என்பதை இங்கு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்/றோம்.
எங்கள் ப்ளாக் நண்பர் ஸ்ரீராம், ====>“கேட்டு வாங்கிப் போடும் கதை”க்காக<===== எங்களிடம் தனித்தனியாக இருவரிடமிருந்தும் கதை வேண்டும் எனவும், எனது கதையாகிய இந்தக் கதையை அனுப்பலாம் என்று முடிவு செய்தோம். நண்பர் ஸ்ரீராமிற்கும், எங்கள் ப்ளாகிற்கும் எனது, எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக