ரங்கனதிட்டு பறவைகளைப் பார்க்க டிக்கெட் வாங்கும் வரை கொஞ்சம் இடைவெளியில் ஒரு பதிவு.
என் ஃபோல்டரில் மூன்று வருடங்களுக்கும் மேலாகக் கிடந்த (அப்பாவின்) நாற்காலி, 2025 மார்ச் மாத கணையாழி இதழில் வெளியானது. கணையாழி ஆசிரியருக்கும், குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றி. முதன் முறையாக இதழில் வெளிவந்திருக்கிறது. கணையாழிக்கு அனுப்புவதற்கு முதற் காரணமாகவும் தூண்டுகோலாகவும் இருந்தவர் நம்ம நட்பு எங்கள் ப்ளாக் ஸ்ரீராம். அவருக்கு என் நன்றி உரையை வழங்கிக் கொள்கிறேன்!
அதற்கும் முன், இக்கதையை எழுதி முடித்ததும் முதலில் துளசிக்கு அனுப்பினேன். “நல்லா எழுதியிருக்கே” என்று சொன்னார். எப்போதும், ‘யார் என்ன சொன்னாலும் இது நம் எழுத்து, தயங்காதே’ என்று ஊக்கப்படுத்துபவர் ‘பார்த்துக்க, யார் மனதும் பாதிக்காமல்’ என்று சொல்லவும், நான் விளக்கவும், அவரும் ஆமோதித்து ஊக்கப்படுத்தினார்.
அதன் பின் நம்ம எபி ஸ்ரீராம், கதை இருக்கான்னு கேட்டப்ப ‘உங்கள் பார்வைக்கு’ என்று அனுப்பினேன். வாசித்ததும் நல்லாருக்கு, ஆழமான கதை, எபியில் போட்டிடலாம் என்றதும் எனக்கு ரொம்பவே தயக்கம். வேண்டாம் என்றேன். அவரும் புரிந்து கொண்டார்.
ஒரு பெண்ணின் கோணத்திலான கருத்தைக் கேட்க (கீதாக்கா ஸாரி உங்க சிச்சுவேஷன் தெரியும் என்பதால் உங்களைச் சிரமப்படுத்த தயக்கத்துடன்.....) பானுக்காவுக்கு அனுப்பினேன். அவரும் ‘வழக்கம் போல ஆழமான கதை’ என்று சொன்னார். அப்புறம் சில மாதங்களுக்கு முன் கோமதி அக்காவுக்கும் அனுப்பிக் கேட்டேன். நல்லாருக்கு என்ற பதில். இதற்கிடையில் ஸ்ரீராமும் பானுக்காவும் இந்தப் பத்திரிகைக்கு அனுப்பலாம், அந்தப் பத்திரிகைக்கு அனுப்பலாம் என்று பரிந்துரைத்துக் கொண்டிருந்தனர். வழக்கம் போல் என் தயக்கத்தினால் பெரிதாக முயற்சி எடுக்கவில்லை.
ஸ்ரீராம் கதை இருக்கா என்று கேட்கும் போதெல்லாம் ‘என்னிடம் முடிக்கப்பட்டு இருப்பது இந்த ஒரே ஒரு கதைதான், மற்றவை முடிக்க வேண்டும் ஆனால் மனம் ஒத்துழைக்க மறுக்கிறது’ என்று சொல்லி வந்த வேளையில்தான்…….
முதல் பத்தி கணையாழி விஷயம்...
கணையாழியில் வெளிவந்ததும் துளசிக்கும் ஸ்ரீராமிற்கும் என் மகனுக்கும் மெசேஜ் அனுப்பினேன், ஸ்ரீராம், உடனே, "எபி வாட்சப் குழுவில் போட்டீங்களா" என்றதும், "இல்லை, தயக்கமாக இருக்கு. கூச்சமாக இருக்கு...போடணுமா?" என்றேன். தன்னம்பிக்கை இல்லை.
ஆனால் அடுத்த நொடி, மிகவும் சந்தோஷத்தோடு எபி வாட்சப் குழுவில் மெசேஜை போட்டு இதழையும் இணைத்துவிட்டார், ஸ்ரீராம். என்னிடம், “மகிழ்ச்சியில் மிதப்பது் போல் இருக்கா?” என்றதும் எனக்கு “அப்படி எதுவும் இல்லை ஸ்ரீராம்” என்றதும் “கொஞ்சமாச்சும்?” என்றார். நான் தயக்கத்துடன், பாவம் ஸ்ரீராம் எவ்வளவு சந்தோஷத்தில் இருக்கிறார். அவர் மனம் வருத்தப்படக் கூடாது என்று, “ஆம் கொஞ்சம்” என்று சொன்னேன்.
உண்மையில், மகிழ்ந்தவர்கள் துளசி, ஸ்ரீராம், அப்புறம் அக்காஸ்.
ஆனால், எனக்கு எந்தவிதமான உணர்வும் இல்லை என்பதுதான் உண்மை. வாழ்க்கையில் அடிபட்டு அடிபட்டு, 2 படி ஏறினால் சறுக்குதலும், ஒரு படி ஏறினால் சறுக்கி மூழ்குதலுமான அனுபவங்களினால் வந்ததால் இருக்கலாம்.
மிகச் சிறிய வயதில், என் மிகச் சிறிய திறமைகளையும் கூடப் பாராட்டி ஊக்கப்படுத்தும் ஃப்ரீ சைல்ட் சூழலில் இருந்து மிக மிகக் கட்டுப்பாடான கூட்டுக் குடும்பச் சூழலுக்குத் தள்ளப்பட்டதால் நொறுங்கிய ஒவ்வொரு தருணங்களின் காயங்கள்.
என் திறமைகளுக்குப் பூட்டு போட்டு, படிப்பு மட்டுமே, அதுவும் ரேங்க் ஒப்பீடும், Corporal Punishments ம். 22 வயது வரை தொடர்ந்ததால் என்னை ஒரு Rebellious Child ஆக மாற்றியது.
வெளியில் தெரியாத மறைமுகமான மனஅழுத்தம். வெளியில் Bubbly Child/Person. நல்ல விஷயங்களை அறியும் வாசிக்கும் ஆர்வம் இருந்ததால் Behavioural Issues இல்லாமல் நல்ல பெயருடன் கடந்து வந்துவிட்டேன். காரணம் என் பள்ளி ஆசிரியர்கள் - மேரி லீலா, ஸ்டெல்லா மேரி, கல்லூரி ஆசிரியர் உஷா ஜார்ஜ். இவர்கள் counsellors அல்ல ஆனால் எனக்கு counsellors!
வேலைக்கான பரீட்சைகள் எழுதியும் வேலை கிடக்காத போதான தருணங்கள் தனிக்கதை. மத்திய அரசு வேலை அதுவும் தில்லியில் கிடைத்த போது சுதந்திரப் பறவையாக இருக்க வேண்டும். என் விருப்பமான வாசிப்பு, எழுத்து போன்றவை செய்ய வேண்டும் என்று கனவு கண்ட வேளையில் வாழ்க்கைப் பாதை மாறியது.
நன்றாக இருந்த கொஞ்சமே கொஞ்சம் அறிவும் சிந்தனைத் திறனும் அதை வெளிக் கொணரும் சூழல் இல்லாமல் பல வருடங்கள் சுருண்டு கொண்டது. துளசியுடன் வலைப்பக்கம் தொடங்கியதும் மகிழ்ச்சியுடன் சுருண்டு கிடந்தவை எழுந்து எழுதத் தொடங்கினேன். அப்போது எங்கள் தளத்தில் நான் எழுதிய கதைக்கு நம் ஸ்ரீராம் பாராட்டி இட்ட கருத்துடன் அவர் என்னிடம் “கேட்டு வாங்கிப் போடும் கதை” க்குக் கேட்க அப்படி அனுப்பும் வழக்கம் தொடங்கியது.
வலைப்பக்கம் தொடங்கியதும் மகிழ்ச்சியுடன் எழுதத் தொடங்கினாலும், மீண்டும் தொய்வு. காரணம் அதளபாதாளத்திற்குச் சறுக்கி விழுந்த தருணங்கள்.
பிரச்சனைகளை எதிர்கொள்வதிலும், வேலைகள் செய்வதிலும், தனியாக எங்கு வேண்டுமானாலும் செல்வதிலும் தன்னம்பிக்கை இருந்தாலும், என் விருப்பமான எழுத்தில் தன்னம்பிக்கை குறைவாகத்தான் இருக்கிறது. என்னை எழுதத் தூண்டும் துளசி மற்றும் நம் நட்புகள் இருந்தாலும்…….
சரி இதை எதற்குச் சொல்கிறேன்? ஹிஹிஹி….அதாங்க அப்பப்ப ஏன் என்னால் எழுத முடியாமப் போகுது? ஏன் மேலே சொன்ன தயக்கம் வருகிறது? எதனால் என்று என்னையே என்னை கேள்விகள் கேட்டுக் கொண்டு ஆராய்ந்த போது காரணம் தெரிந்தது இருந்தாலும், உளவியல் Counsellor ஆன என் தங்கை பெண்ணிடமும் உரையாடினேன். Pin Point பண்ணிய போது மேலே சொன்ன அந்த ஃப்ளாஷ்பேக்கும் ஒரு காரணம் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. “அதெல்லாம் மறந்து பல வருஷங்கள் ஆச்சே” என்றேன். “இல்லை…..அது என்னதான் ஆறியிருந்தாலும், நீ வெளியில் ஜாலியாக இருந்தாலும், உள் மனதில் அவை முழுவதும் குணமாகாததால் அவ்வப்போது வருகிறது, அதை முதலில் ஹீல் செய்ய வேண்டும்” என்று இருவருமாகப் பேசி அது ஓகேயானது இப்போது.
அதோடு தொடர்புடைய மற்றொன்றுதான் இப்போது தலைதூக்கி நிற்கிறது. மனம் மிகவும் வேகமாகச் செயல்படுவதால், கதைகளுக்கும் கட்டுரைகளுக்குமான சிந்தனைகள், கற்பனைகள் மூளைக்குள் முட்டி மோதுகின்றன. எழுத்தில் போட்டு வைக்கலாம் என்று முனையும் போது, வேறு பல வேலைகளின், எண்ணங்களின் குறுக்கீட்டில் அவை காணாமல் போய்விடுகின்றன.
அல்லது கொஞ்சமே கொஞ்சம் நினைவில் தங்குவதைப் போட்டு வைத்துவிடுவோம் எனும் போது அடுக்களை வேலைகள், வீட்டு வேலைகள், வெளி வேலைகள், துளசி மற்றும் கணவரின் வீடியோ வேலைகள், சின்ன வருமானத்திற்குச் செய்யும் வேலைகள் என்று இப்படி ஏதோ ஒன்று முட்டும் போது எழுதுவதற்கான நேரம் பின் தள்ளப்பட்டு எழுதுவதும் பின் தள்ளப்படுகிறது. அதுவும் அமைதியான எந்தவிதமான தொந்தரவும் இல்லாத நேரம், அறை? ம்ஹூம்.
எதிர்கொள்ளும் தைரியமும், தன்னம்பிக்கையும் என்னை வழிநடத்தி வந்தாலும், எழுத்தில், என் திறமைகளின் மீதான என் தன்னம்பிக்கை மட்டும் ஆட்டம் காணும். அதனாலேயே தயக்கம். சமீப வருடங்களில் மனம் மிகவும் சோர்ந்து போனப்பதான் தெரிந்தது ஏன் என் தைரியமும் தன்னம்பிக்கையும் ஆட்டம் காண்கின்றன என்பதற்கான காரணங்கள் மேலே சொன்னவையும். ஆழ் மனதுள் உறைந்து கிடக்கும் தாழ்வுமனப்பான்மையும், நமக்கு எந்தத் திறமையும் இல்லை என்ற எண்ணமும்தான்.
எழுத முடியாமல் போகிறதே நாம் விரும்புவதைச் செய்ய முடியாமல் போகிறதே என்ற மனப்போராட்டம். எழுத உட்கார்ந்தால் ஏதேனும் வேலை நினைவுக்கு வரும். வேலை செய்யும் போது எழுதுவதற்கு மனம் முனையும். இப்படி மனம் அங்குமிங்கும் கிளை கிளையாகத் தாவும்.
கொஞ்சம் நேரம் கிடைத்தாலும், கதைகளோ பதிவுகளோ எழுத நிறைய நேரம் தேவைப்படுகிறது என்பதால், மனம் relax செய்யத்தான் விரும்புகிறது.
இதென்ன பெரிசா சொல்ற? பெரும்பான்மை மக்களுக்கு நடப்பதுதானே? உண்மைதான். ஒவ்வொருவரின் மனதை, மனவலிமையைப் பொருத்து இது வேறுபடும்.
மனதுள் பல விஷயங்கள் ஓடுவதால், மூளை பலவற்றை ப்ராஸஸ் செய்வதால் System slowdown! ஆக இருக்கு. இது அவ்வப்போது நடக்கும் ஒன்று. மனதின் ஆர்கனைஸரை தாறுமாறாக அடுக்கி வைத்திருக்கும் வில்லியை விரட்ட ஹீரோயின் கீதா எழ வேண்டும்!!!!!
கணையாழியில் வெளி வந்த கதை =======> எங்கள் ப்ளாகில் <===== இன்று கேட்டு வாங்கிப் போடும் கதையில்.
-----கீதா
நன்றி கீதா. உங்கள் எழுத்துகள் அச்சு ஊடகத்தில் இடம்பெற தாராள தகுதியுடையவை.
பதிலளிநீக்குநன்றி நன்றி ஸ்ரீராம். ஊக்கமான கருத்திற்கு.
நீக்குகீதா
யார் மனதும் புண்படாமல் என்று ஏன் துளஸிஜி சொன்னார் என்று புரியவில்லை. படிப்பவர் மனம் புண்படும்படி இதில் ஒன்றுமிலையே....
பதிலளிநீக்குதுளசி சொன்னதை...அப்புறம் ஒன் டு ஒன்னில் சொல்கிறேன்...
நீக்குகதையில் எதுவும் இல்லைதான்
நன்றி ஸ்ரீராம்
கீதா
சில விஷயங்கள் தனக்குதானேதான் மருத்துவம் பார்த்துக் கொள்ள வேண்டும். அதை அபப்டியே வைத்துக் கொண்டிராமல் துடைத்துத் தூக்கி எறிந்துவிடுவது து நமக்கு நல்லது.
பதிலளிநீக்குஆமாம், ஸ்ரீராம்...அது கூட இப்ப சரியாகிவிட்டது. கடைசியில் சொன்னவைதான் இப்ப ...அதுவும் சரியாகிவிடும். மூளை யோசிப்பதை ஆர்கனைஸ் செய்துவிட்டால்...ஹிஹிஹி
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
இந்தப் பதிவுக்கு எங்கள் இடுகை - உங்கள் படைப்பிலும் - லிங்க் கொடுத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குபார்த்துவிட்டேன் ஸ்ரீராம். மிக்க நன்றி ஸ்ரீராம்...
நீக்குகீதா
அப்பாவின் நாற்காலி வாசித்தேன். மிக அருமையான கதை. கதையை விடவும் கதை பிறந்த கதை அதிகம் மனதைப் பாதித்தது. இவ்வளவு நல்ல கதையை வெளியிடுவது குறித்து ஏன் உங்களுக்கு அவ்வளவு தயக்கம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இந்தப் பதிவில் விடை கிடைத்தது.
பதிலளிநீக்கு\\எதிர்கொள்ளும் தைரியமும், தன்னம்பிக்கையும் என்னை வழிநடத்தி வந்தாலும், எழுத்தில், என் திறமைகளின் மீதான என் தன்னம்பிக்கை மட்டும் ஆட்டம் காணும். அதனாலேயே தயக்கம். \\ தயக்கம் உடைத்து வெளியில் வாங்க. அருமையான திறமைசாலி நீங்க. கூடிய சீக்கிரம் வில்லியை விரட்ட வாழ்த்துகள்.
நன்றி கீதா மதிவாணன் உங்கள் பாராட்டு மிக்க கருத்திற்கு
நீக்கு//கதையை விடவும் கதை பிறந்த கதை//
கதை பிறந்த கதை ஒரு பெண்மணியை பல வருடங்களுக்கு முன்னால் அறிந்த போது எழுந்த கரு. அப்போது எழுத முடியாத சூழல்.
நான் எழுதும் கதைகளில் பெரும்பாலும் பெண்களின், ஆண்களின் வலிகளை , குறிப்பாகப் பெண்களின் நுண்ணிய உணர்வுகளைப் பதிய விரும்புகிறேன். நீங்கள் அங்கு எபியில் கொடுத்த கருத்தைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் கதையை. நீங்கள் மிக அழகான சிந்தனைகளும் எழுத்தும் உடையவர்!
கதை, கட்டுரை எழுதுவதற்கு எனக்கு நேரம் நிறைய அதுவும் அமைதியான சூழல் தேவைப்படுகிறது...ஆனால் நடைமுறையில் அது சற்று பாதிக்கப்படும் போதுதான்... காரணங்கள்தான் பதிவில். மற்றபடி கதையின் கதாபாத்திரங்கள் வேறு!
//தயக்கம் உடைத்து வெளியில் வாங்க. அருமையான திறமைசாலி நீங்க. கூடிய சீக்கிரம் வில்லியை விரட்ட வாழ்த்துகள்.//
மிக்க நன்றி கீதா மதிவாணன் உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும். நிச்சயமாக.
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குதங்களது அருமையான எழுத்துக்கள் திறம்பட இருக்குமென நான் கூறிக் கொண்டேயிருக்கிறேன். அது இன்று முழுமையாகிப் போனது குறித்து மிகவும் சந்தோஷ மடைந்தேன்.
உங்களது கதை கணையாழி பத்திரிக்கையில் அச்சு கோர்ப்பில் வெளிவந்தமை கண்டு மிக்க மகிழ்வு எய்தினேன். மேன் மேலும் பல பத்திரிக்கைகளில் பல நூறு கதைகளை எழுதி நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளினியாக வலம் வர வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன்.
எபியில் தாங்கள் தந்த விபரங்களை படித்தேன். இன்னமும் கதையையும் படித்து விட்டு அங்கும், இங்குமாக வருகிறேன். நன்றி சகோதரி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது அருமையான எழுத்துக்கள் திறம்பட இருக்குமென நான் கூறிக் கொண்டேயிருக்கிறேன். அது இன்று முழுமையாகிப் போனது குறித்து மிகவும் சந்தோஷ மடைந்தேன்.//
நீக்குமிக்க நன்றி கமலாக்கா.
நானும் அடிக்கடி நினைப்பது உங்களைப் பற்றித்தான்.
உங்கள் மின்னஞ்சல் வேலை செய்கிறதா கமலாக்கா? செய்தால் இங்கு சொல்லுங்களேன்.
//உங்களது கதை கணையாழி பத்திரிக்கையில் அச்சு கோர்ப்பில் வெளிவந்தமை கண்டு மிக்க மகிழ்வு எய்தினேன். மேன் மேலும் பல பத்திரிக்கைகளில் பல நூறு கதைகளை எழுதி நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளினியாக வலம் வர வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன்.//
நன்றி கமலாக்கா பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்திற்கும்
அங்கும் வாசித்துவிட்டுச் சொல்லுங்க
நன்றி கமலாக்கா
கீதா
சிறப்பு எ.பி.க்கு செல்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி
நீக்குகீதா
அப்பாவின் நாற்காலியைக் காட்டிலும் இந்தக் கதை மிகவும் நன்றாக இருக்கிறது. அசல் பாலகுமாரன் எழுத்து போலவே உள்ளது. இனி கற்பனை கரை புரண்டோட செவ்வாய் தோறும் கதையை எதிர் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குJayakumar
ஹாஹாஹா...ண்ணா......ஆ! பாலகுமாரனா!!! ஆ கடவுளே! அவர் எங்கே..நான் எங்கே?!
நீக்குஉங்க எதிர்பார்ப்புக்கு நன்றி, அண்ணா. முயற்சி செய்கிறேன். நேரத்தையும் மூளையில் ஓடும் எண்ணங்களையும் முதலில் ஒழுங்குபடுத்த வேண்டும்!!!!!!
மிக்க நன்றி ஜெ கே அண்ணா
கீதா
என்னவோ உங்க்ள் பதிவைப் படித்ததும் எனக்கு சலங்கை ஒலி கமலஹாசன் நினைவுக்கு வந்தார் (சம்பந்தமில்லாதபோதும்).
பதிலளிநீக்குஅவருக்கும் நடனத் திறமை இருந்தும் அதில் அவர் மிளிரவில்லை. கடைசி காலத்தில் ஒரு சிஷ்யை மூலம் தன் நடனத் திறமையை உலகுக்கு உணர்த்துகிறார்.
சிலருக்கு திறமைகள் இருந்தாலும் அது மிளிர காலம் வசதி செய்துகொடுக்காது. சிலருக்கு சின்ன வயது ரொம்பவே controlled ஆக, வசதிகள்/சந்தோஷங்கள் கொடுக்காமல் வளர்க்கப்படுவதால் சுருங்கிவிட்ட மலர்போல ஆகிவிடும்
எனக்கும் பதின்ம வயதின் சில வருடங்களை இப்போதும் திரும்ப நினைக்கப் பிடிக்காது. சில வருடங்களே ஆனாலும் அது மனதில் வருத்த நிலைமையை உண்டாக்குவதால் எனக்கு அந்த வருடங்கள் பிடிக்காது. அப்போது என்னைப் பார்த்தவர்கள், பழகியவர்கள், பிற்காலத்தில் நான் ஒரு நிலைக்கு வந்ததை ஜீரணிக்கமுடியவில்லை என்றும் தோன்றும் (இவனா..இப்படிப்பட்ட இடத்திலா என்பது போல)
நெல்லை, எந்த வயதில் சில சந்தோஷங்கள், அந்த வயதிற்கே உரிய சந்தோஷங்கள் கிடைக்காமல் போச்சோ அது போனது போனதுதான்....
நீக்கு//சுருங்கிவிட்ட மலர்போல ஆகிவிடும்//
அதேதான் , எனக்கு என் சிறு வயதை அதாவது இலங்கையில் இருந்த வாழ்நாட்களை நினைக்கப் பிடிக்கும். அதன் பின் வேண்டாம் மீண்டும் பார்க்கப் பபிடிக்காது
என் மகனுக்கு இப்ப பள்ளியை கல்லூரியை நினைவு படுத்தினால் சுத்தமாகப் பிடிக்காது. தயவு செய்து அதை நான் நினைச்சுப் பார்க்க விரும்பலை என்பான். ஏனென்றால் இந்தச் சமூகம் மற்றும் சில நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் அவனைப் படுத்திய பாடு.
//பிற்காலத்தில் நான் ஒரு நிலைக்கு வந்ததை ஜீரணிக்கமுடியவில்லை என்றும் தோன்றும் (இவனா..இப்படிப்பட்ட இடத்திலா என்பது போல)//
நெல்லை ஹைஃபைவ்!! என் மகனைக் கண்டு இப்ப சிலர் கேட்பது எப்படி அவன் அமெரிக்கா போனான் என்று?!!!!
நன்றி நெல்லை
கீதா
நீங்க ரொம்பவே ஜாலியான பெர்சன். எப்போப்பார்த்தாலும் புலம்பும் மனிதர்களுக்கிடையே, எதைப்பற்றியும் ரொம்பவே குறை பட்டுக்கொள்ளாத ஆனால் மகிழ்ச்சியுடன் இருக்கும் மனிதர் நீங்கள்.
பதிலளிநீக்குசில நேரங்களில் எனக்குத் தோன்றும், நகைச்சுவை என்று நினைத்துப் பேசுவது கேட்பவரிடத்தில் ஆழ் மனதில் அவங்களுக்கு வருத்தத்தை உண்டாக்கிவிடுமோ என்று.
முதல் வரியை அப்படியே டிட்டோ செய்கிறேன், நெல்லை நிஜமாகவே நான் ஜாலி தான்,
நீக்குஇல்லை நெல்லை..நீங்க என்னைக் கலாய்க்கறதை ஹையோ சிரித்து முடியாது...
இல்லைனா உங்ககிட்டயே நேரடியா சொல்லிடுவேனே...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்றோ இல்லை வேறு வடிவத்திலோ!!!!
இது வேறான ஒன்று சில விஷயங்கள் நம் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் நெல்லை அது சில இடங்களில் நாம் என்ன ஜாலியாக இருந்தாலும் அந்த உள் மனசு இருக்கு பாருங்க அது நம்மை அறியாமலேயே எழும், அது சூழலைப் பொருத்து...
கீதா
அப்படி ஜாலியாக எதையும் ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ளாததால் தான் மிகப் பெரிய அடிகளைக் கூட நான் கடந்து வர முடிந்தது, நெல்லை
நீக்குஉடல் ரீதியான அடிகள் அதன் பின் மன ரீதியான அடிகளைத் தாங்கிக் கொண்டு கடந்து வர முடிந்தது.
கீதா
வாழ்க்கையின் என் புரிதலில் நான் ஒன்று சொல்கிறேன்.
பதிலளிநீக்குதிருமணத்துக்கு முன்பு கஷ்டப்பட்டால், திருமணத்திற்குப் பின்பு நல்ல வாழ்க்கை அமையும். 30-40 வரை கொஞ்சம் கடினமாகவே வாழ்க்கை அமைந்தால் அதற்குப் பிறகான வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறையவே இருக்கும்.
பிறருக்கு உதவும் குணமுள்ள உங்களுக்கு நல்லதே நடக்கும்.
என்ன நெல்லை... சொல்லிக்கொள்ளும்படியாக ரொம்பவே மகிழ்ச்சிலாம் இல்லை என்று நினைத்தீர்களானால்......... என்ன பண்றது... வாங்கி வந்த வரம் அப்படி.
தி மு, தி பி எல்லாம் ஒருசிலருக்குத்தான் நெல்லை. எல்லாருக்கும் இல்லை.
நீக்கு//பிறருக்கு உதவும் குணமுள்ள உங்களுக்கு நல்லதே நடக்கும்.//
நன்றி நெல்லை
//வாங்கி வந்த வரம் அப்படி.//
இது மட்டும் என்னால் ஏற்க முடியாத ஒன்று நெல்லை.
இது பற்றி அப்புறம் சொல்கிறேன். ஏன்னா இதுவும் கொஞ்சம் மனசு ரீதியாகச் சொல்லணும்
நன்றி நெல்லை
கீதா
கீதா நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குநிறைய திறமைகள் உள்ளவர்கள் நீங்கள்.
பழைய வேண்டாத நினைவுகளை உதறி விடுங்கள். இப்போது இருக்கும் நிலை மாறும்.
நல்லதே நடக்கும்.
//மனதுள் பல விஷயங்கள் ஓடுவதால், மூளை பலவற்றை ப்ராஸஸ் செய்வதால் System slowdown! ஆக இருக்கு. இது அவ்வப்போது நடக்கும் ஒன்று. மனதின் ஆர்கனைஸரை தாறுமாறாக அடுக்கி வைத்திருக்கும் வில்லியை விரட்ட ஹீரோயின் கீதா எழ வேண்டும்!!!!!//
சில நேரங்களில் இப்படித்தான் மனம் நம்மை வலிமை குன்ற வைக்கும், அதிலிருந்து விடுபட்டு வெளிவாருங்கள் உங்களை நீங்களே உற்சாகபடுத்தி கொள்ளுங்கள்.
பல வேலைகளுக்கு இடையில் இப்படி கதைகள், கட்டுரைகள் எழுதி வருவது மகிழ்ச்சி.
உறவுகள் சிலர் வாழ்ந்தாலும் பேசுவார்கள், கஷ்டப்பட்டாலும் பேசுவார்கள்.அவர்கள் பேச்சுக்களை காதில் வாங்கி விட்டு விடுங்கள். மண்டையில் ஏற்றி கொண்டால் தலை பாரம் தான் ஏற்படும். நட்புகளுடன் பேசி சிரித்து மகிழ்ந்து இருங்கள்.
நிறைய எழுதுங்கள், எழுதி வைத்து இருப்பவற்றை பத்திரிக்கை, மற்ரும் வலைதளத்தில் பதிவு செய்யுங்கள்.
கோமதிக்கா மிக்க நன்றி அக்கா.
நீக்குஜஸ்ட் என் தயக்கம் எதனால் வந்தது என்று ஆராய்ந்ததில் தெரிந்து கொண்டதை எழுதினேன். உளவியல் கதை அதனால் இந்த உளவியலையும் எழுதினேன்...
பொதுவாகவே நான் ஜாலிதான். இந்த எழுத்து மட்டும் தான் அப்பப்ப ஆட்டம் காண்கிறது நேரப் பளுவும் அந்த எழுத்தில் புகும் அளவிற்கான மன நிலையும் வேண்டுமே அதுவும் இப்ப கொஞ்சம் குறைவு அதான்
உங்கள் ஊக்கமிக்க கருத்துகளுக்கு மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
நீங்கள் எழுதியிருப்பது அத்தனையும் உண்மை கீதா... சின்ன வயதில் எது நமக்கு நடந்திருந்தாலும் அது வயதாக ஆகத்தான் நம்மை மிகவும் பாதிக்கும்... கனவு கனவாக வந்து மிரட்டும் ஹா ஹா ஹா.. அதனால தான் குழந்தைகளாக இருக்கும்போது பத்திரமாக வளர்க்கப்படோணும் என்பினம்...
பதிலளிநீக்குஇலங்கையில் நாங்கள் ஆமிக்கும் வெடிச் சத்தங்களுக்கும் பயந்தது.. இப்பவும் ஆமியை பொலீஸைக் கண்டால் ஒரு கணம் நடுங்கித்தான் நோர்மலாகிறது ஹா ஹா ஹா...
நமக்கு நாமே இன்னர் எஞ்சினியரிங்.. செய்து வெளியே வந்திடோணும்...:))
நன்றி அதிரா...ஆமாம் அதனால்தான் குழந்தை வளர்ப்பு மிக மிக முக்கியம்.
நீக்குஹாஹாஹா நினைச்சேன் ஏன்னா நீங்க கங்கை பத்திதானே வீடியோ போட்டீங்க அப்புறம் பதிவும் போட்டிருந்தீங்க. அது நினைவிருக்கே. கங்கையில் நீராடியது, சுத்தம் பற்றிச் சொல்லியது...எல்லாம்...
புரிந்து கொள்ள முடிகிறது. இலங்கை உங்கள் பகுதியில் வெடிச் சத்தங்கள் மனதில் பதிந்த பயம்...
நமக்கு நாமே இன்னர் எஞ்சினியரிங்.. செய்து வெளியே வந்திடோணும்...:))//
அதேதான். அதெல்லாம் வந்தாச்சு ஆனா இந்த நேரப் பளு இருக்கே அதுதான் இப்ப அதை கையாள்வதுதான் கொஞ்சம் சிரமமா இருக்கு மனம் தாவிக்கொண்டே இருக்கு!!
பதிவு எழுதுவதுதான் சிரமமாக இருக்கு. படங்கள், வீடியோக்கள் போடுவது எளிதாக இருப்பது போல் இருக்கு.
நன்றி அதிரா
கீதா
சாதாரணமாக உங்கள் மனக்காயங்களை வெளியே காட்டாதவர் நீங்கள். இந்தப் பதிவில் சொல்லி விட்டீர்கள், ஒரு வகையில் நல்லதுதான். கிடைக்கும் நேரத்தில் நிறைய எழுதுங்கள்.
பதிலளிநீக்குபானுக்காதானே இது? நீங்க நேத்து சொன்னதுனால் புரிந்து கொள்கிறேன்.
நீக்குஆமாம் இப்போது எழுத முடியாமல் போவதால் தோன்றியது. ஆனால் இனி வராது, எழுத முயற்சி செய்கிறேன்
நன்றி பானுக்கா உங்கள் ஊக்கத்திற்கு
கீதா