அகரா கிராமம்/அகரா வில்லேஜிற்கு பெங்களூருக்கு இடம் பெயர்ந்த போது, கோவிட் சமயத்திற்கு முன் இரு முறை சென்றதுண்டு. அகரா வில்லேஜும் ஹெச் எஸ் ஆர் லே அவுட்டில்தான்.
(அந்தப் பகுதியில்தான் நம் கௌ அண்ணன் இருக்கிறார். அகரா வில்லேஜ் தாண்டினால் நம் பதிவர் அனு பிரேம் இருக்கும் இடம்.)
சமீபத்தில் அகரா வில்லேஜிற்குச் செல்ல நேரிட்டது. அதுவும் மழைநாளில் செல்ல வேண்டுமா? அப்படித்தான் ஆனது. இப்பகுதி பற்றி முன்பே எழுத நினைத்து வழக்கம் போல் தாமதித்து......சரி விடுங்க. கீதா அப்படித்தான்னு ஊர் அறிந்த விஷயமாச்சே. இப்போது பதிவு.
பூரி ஜகன்னாதர் கோயிலைப் போன்று அதே வடிவமைப்பில், பெங்களூரில் உள்ள அகரா கிராமத்தில் (AGARA VILLAGE) சார்ஜாபூர் சாலையில் அமைந்துள்ளது இக்கோயில்.
பேருந்து நிறுத்தம்
– அகரா – அகரா வில்லேஜ். பேருந்து நிறுத்தத்தை ஒட்டியே உள்ளது கோயில்.
வருடந்தோறும் நடைபெறும் இதன் முக்கிய திருவிழாவான ரத யாத்திரையின் போது, பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை கலந்து கொள்கிறார்கள். பெங்களூரின் ஸ்ரீ ஜெகநாதர் கோவில் அறக்கட்டளையால் இந்த கோவில் பராமரிக்கப்படுகிறது என்று விக்கி உதவினார்.
கோவில் திறந்திருக்கும் நேரம் - காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும்.
முன்னில் ஒரு சிவப்பு வண்ணத்தில் பலகையுடன் கம்பிகள் தெரியுது பாருங்க அதுதான் ஆஞ்சநேயர் சன்னதி. சுற்றி வரும் போது சன்னதியின் இடப்புறப் பக்கவாட்டில் அழகான தோட்டம் உண்டு.
கோயில் நேரம் - 9.00Am-12.00PM, 6.00PM-8.00PM
இந்தக் கோயிலுக்கும் ஜகன்நாதர் கோயிலுக்கும் இடையில் செல்லும் தெரு மேலே சொன்னது போல் அகரா கிராமத்தின் உட்புறம் செல்லும். ஆஞ்சநேயர் கோயிலும் பின்னில் மாலூர் ஸ்ரீ பாலாம்பிகா கோயிலும் (இது மிக மிக அழகாக இருக்கும். இதிலும் சுற்றிலும் தோட்டம்.) அதன் பின் அத்தெருவில் சிவன் கோயில், முருகன் கோயில், வெங்கடேஸ்வரர் கோயில் (இது தமிழ்நாட்டுப் பாணி கோபுரமுள்ள கோயில். அர்ச்சகர் தமிழ் பேசுபவர்). இப்பகுதியின் வேறு ஒரு இடத்தில் ஐயப்பன் கோயிலும் இருக்கின்றன.
இப்படி ஜகன்நாதர் கோயில், மிக உயரமான ஆஞ்சநேயர் கோயில் என்று பல கோயில்கள் இருப்பதால் தற்போது அகரா வில்லேஜ் சுற்றுலாப் பயணிகள், கோயில் உலா பயணிகள் வரும் தலமாக மாறியிருக்கிறது என்பது ட்ரிப் அட்வைசர் தகவல்!
நாங்கள் இருக்கும் பகுதியிலிருந்து 37 கிமீ தூரம். பேருந்தில் சென்றால் முன்பு 1 1/2 மணி நேரத்திற்கும் சற்றுக் கூடுதலாக ஆகும். இப்போது மெட்ரோ பணிகள் நடப்பதால், அதுவும் நாங்கள் சென்றது மழை நேரத்தில் என்பதால் 2.1/2 மணி நேரம் ஆனது. வீட்டருகில் இருக்கும் பேருந்து நிறுத்ததிலிருந்து ஏறுவது எளிது.
கோயில் அருகில் மெட்ரோ பணிகள் நடப்பதால், சில பேருந்துகள் மட்டுமே முன்பு போல் பாலத்தின் அடி வழிச் சாலையில் செல்கின்றன. அப்படிச் சென்றால் முன்பு போல் கோயில் முன்னில் இறங்கிக் கொள்ளலாம். ஆனால் பல பேருந்துகள் மெட்ரோ பணி காரணமாக மேம்பாலம் வழி செல்வதால் மேம்பாலம் தொடக்கத்தில் இறக்கி விட்டுவிடுகின்றனர். 6 நிமிட நடை கோயிலுக்கு. பேருந்து நிறுத்தங்கள் முன்பு எளிதாக இருந்தது இப்போது பல இடங்களில் மெட்ரோ பணி காரணமாக இல்லை என்பது தெரிந்தது.
திரும்பும் போது மிகவும் சிரமப்பட வேண்டியதானது. எங்கள் பகுதிக்குச் செல்லும் (எப்படியும் இரு பேருந்துகள் மாற வேண்டும்) பேருந்துகள் கீழ் வழிச் சாலையில் வரவே இல்லை. எல்லாம் மேம்பாலம் வழியாகச் சென்றதால், மேம்பாலம் இறங்கும் இடத்தில் போய் நிற்கச் சொன்னார்கள்.
அங்கு சென்று நின்றால் கை காட்டியும் பேருந்துகள் எதுவும் நிற்கவில்லை. அந்த இடத்தில் இறங்கும் வண்டிகள் அடி வழியாக வரும் வண்டிகள் என்று எல்லாம் இணைந்து ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதால் பேருந்துகள் நிற்காமல் சென்றுவிடுகின்றன.
அப்புறம் விமான நிலையம் செல்லும் ஒரு ஏசி பேருந்து நின்றதால் அதில் ஏறி மாரத்தஹல்லி எனும் இடம் வரை சென்று அங்கிருந்து நாகாவரா எனும் இடம் வரை சென்று அங்கிருந்து எங்கள் பகுதிக்குச் செல்லும் பேருந்தில் வந்து வீட்டருகில் 7 நிமிட நடையில் உள்ள நிறுத்தத்தில் இறங்க முடிந்தது.
3 மணிக்கு வீட்டை விட்டு இறங்கி, வீடு வந்து சேர 9.30 மணி ஆனது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
முதலில் நான் செல்வதாக இல்லை. மனதில் பிரார்த்தனை உண்டு. ஆனால் கோயிலுக்கு அதிகம் செல்வதில்லை. ஆனால் வீட்டுக்கு வந்தவங்களுக்குப் போக வேண்டும் என்று ஆசை.
அங்கிருக்கும் அம்மை அப்பன் கோயில் மற்றும் முருகன் கோயில் செல்ல திட்டமிட்டுத் தயாரானோம். இரு வருடங்களுக்கு முன்னர் நான் எடுத்திருந்த புகைப்படங்கள் ரிப்பேர் ஆன ஹார்ட் டிஸ்கில் மாட்டிக் கொண்டதால், நப்பாசை எழுந்தது. குறிப்பாக இந்த ஜகன்நாதர் கோயில் புகைப்படம் எடுக்கவாவது செல்லலாமே என்று. அப்படித்தான் சென்றேன்.
இனியும் ஆசைப்படுவாயா கீதா இப்படிச் சென்று ஃபோட்டோ எடுக்க? என்று என்னை நோக்கி என் விரல் வடிவேலு பாணியில் நீண்டது!! 'ஃபோட்டோ எடுக்க என்றால் கண்டிப்பாக' என்று உள்ளிருக்கும் கீதாவின் பதில்!!
பெங்களூர் போக்குவரத்தை நாம் தினமும் பயன்படுத்த வேண்டிய சூழல் என்றால் நம் வாழ்நாளின் பாதி நேரத்தைப் பேருந்திலேயே கழிக்க வேண்டியதுதான்! பாவம் பேருந்தில் வேலைக்குச் சென்று திரும்பும் மக்கள்! எண்டே பகவானே!
பதிவில் உள்ள படங்களையும் இன்னும் இருக்கும் சில படங்களையும் படங்களின் தொகுப்புக் காணொளியாகத் தந்திருக்கிறேன். விருப்பம் உள்ளவர்கள், நேரம் உள்ளவர்கள் பார்த்துக் கொள்ளலாம்.
------கீதா
அனைத்தும் அழகு. மொட்டை கோபுரங்களைப்பார்த்ததும் தஞ்சைப்பக்கத்திலுள்ள அழகு மிக்க கோவில்கள் அனைத்தும் நினைவில் உலா வந்தன. ஆனால் உள்ளே உள்ள சின்னச் சின்ன நுணுக்கமான சிற்பங்கள் அந்தக்குறையை ஈடுகட்டி விட்டன என்று தான் கூற வேண்டும்.
பதிலளிநீக்குஆமாம் மனோ அக்கா. நுணுக்கமான சிற்பங்கள். அந்த அழகிற்காகத்தான் படம் எடுத்தேன். பூரி,ஒடிசாவிலுள்ள கோயில் அதேதான் இங்கும். ஆனால் மெயின் கோயில் அமைப்பு மட்டுமே.
நீக்குஆம் தஞ்சை கோயில்கள் அனைத்தும் அழகாக இருக்கும்.
மிக்க நன்றி மனோ அக்கா
கீதா
/தஞ்சைப்பக்கத்திலுள்ள அழகு மிக்க கோவில்கள்// - ஒரு சில கோவில்களின் பெயர் குறிப்பிட்டிருக்கலாம் (பெரியகோவில் தவிர). நான் போய்ப்பார்க்க ஏதுவாக இருந்திருக்கும்
நீக்குபடங்கள் அருமை வித்தியாசமான அமைப்பாக இருக்கிறது.
பதிலளிநீக்குகாணொளி இயங்கவில்லையே... யூடியூப் சென்றும் பயனில்லை.
பிறகு வந்து பார்க்கிறேன்.
மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குஓ பப்ளிக் போட மறந்துவிட்டேன். இப்ப போட்டாச்சு. பார்க்க முடியும். காணொளி படங்கள் கோர்க்கப்பட்ட காணொளி கில்லர்ஜி. மற்றபடி காணொளி எடுக்க முடியவில்லை, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி
மிக்க நன்றி கில்லர்ஜி
கீதா
போட்டோக்கள் அருமையாக உள்ளன. நிழல் தெரியாமல், நல்ல ஷார்ப்பாக அருமையான கோணங்களில் எடுக்கப்பட்டுள்ளன.
பதிலளிநீக்குJayakumar
படங்களை ரசித்தமைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி ஜெ கே அண்ணா
நீக்குகீதா
படங்கள் அனைத்தும் அழகு. என் வீட்டிலிருந்து 15 கிமீ தூரம் என்று தெரிந்துகொண்டேன். எப்பயாவது போனால் சொல்லுங்க... நானும் சேர்ந்துக்கறேன். காணொளி பிறகு பார்க்கிறேன்
பதிலளிநீக்குபடங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி நெல்லை. ஆமா உங்க பகுதிலருந்து 15 தான். கண்டிப்பா சொல்றேன் நெல்லை. நீங்களும் வாங்க...அது காணொளி எல்லாம் இல்லை படங்களின் தொகுப்புதான் காணொளியாக, நெல்லை
நீக்குமிக்க நன்றி நெல்லை
கீதா
காணொளி கண்டேன்
பதிலளிநீக்குகில்லர்ஜி, காணொளி பார்த்ததற்கு மிக்க நன்றி
நீக்குகீதா
படங்கள் எல்லாம் மிக அருமை. காணொளிகளும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபடங்கள் மிக துல்லியமாக இருக்கிறது.
அனுமன் கொஞ்சம் கோபமாக இருப்பது போல தோற்றம் அளிக்கிறது.
ராமர் ராதாகிருஷ்ணர் விமானம் மிக அழகாய் எடுத்து இருக்கிறீர்கள்.
ஒவ்வொரு கோணமும் பார்க்க அழகு.
சிற்பங்கள் அழகு.
படங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி கோமதிக்கா.
நீக்குஅனுமன் கொஞ்சம் கோபமாக இருப்பது போல தோற்றம் அளிக்கிறார்//
ஆமாம் கோமதிக்கா எனக்கும் அப்படித்தான் தோன்றியது. அது வடிவமைப்பவரைப் பொறுத்து இருக்கு இல்லையா? சிலைகள் வடிவமைக்கும் போது கண்களை திறந்தது போல் வடிவமைக்க மாட்டார்களாம். கண் திறப்பது என்று ஒரு நிகழ்வாகவே வடிவமைப்பார்கள் என்று கேட்டதுண்டு சிறு வயதில். குறிப்பாகக் கடவுள் திருஉருவங்களின் கண்கள். இப்போது எப்படி என்று தெரியவில்லை.
எனக்கு ஒரு பழக்கம் உண்டு... இறைவன் திரு உருவங்களின் கண்களைக் கவனிப்பது உண்டு கோமதிக்கா. இதுவரை நான் பார்த்ததில் சுசீந்திரம் ஆஞ்சநேயர் வடிவமைப்பு சிறப்பாக இருப்பதாகப்படும். எனக்கு மிகவும் பிடித்த மனம் லயிக்க வைக்கும் திருஉருவ அமைப்பு.
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
தோற்றம் அளிக்கிறார்.
பதிலளிநீக்குபுரிந்து கொண்டேன் கோமதிக்கா
நீக்குகீதா
கோவிலா? ம்ம்ம்... பக்தி வரவில்லை. ஆனால் ரசிக்க முடிகிறது கட்டிடக்கலையை...கட்டிடக்கலையும், சிற்பங்களும் ஆஹா... அருமை.
பதிலளிநீக்குஹாஹாஹாஹா ஸ்ரீராம்....அதே அதே எனக்கும். நானும் கட்டிடக் கலையை சிற்பங்களை ரசித்தேன். அதனால்தான் படங்கள்!!!
நீக்குபடங்களை ரசித்ததற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
காணொளிகள் பார்த்து ரசித்தேன். விஸ்வரூப ஆஞ்சநேயர் கம்பீரமாக நிற்கிறார். அவர்தான் கொஞ்சம் பக்தி ரசத்தை மனதில் ஊட்டுகிறார்.
பதிலளிநீக்குகாணொளிகளை ரசித்தமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம். ஆஞ்சநேயர் கம்பீரம் ஆனால் கொஞ்சம் கோபமாக இருப்பது போல் எனக்கும் தோன்றியது கோமதிக்கா சொல்லியிருப்பது போல்....அந்தக் கோயில் ஆஞ்சு சன்னதி நன்றாக இருக்கும் ஸ்ரீராம்.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
2018 என்று நினைவு. இந்த ஜெகந்நாதர் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். நீங்கள் அதிவிமரிசையாகப் போட்டிருக்கும் படங்களைப் பார்த்த பின் தான் நினைவில் வந்தது, அந்த விசிட். ஆனால், இதுதான் அகரா வில்லேஜ் என்பது இப்போதுதான் அறிந்தேன்!
பதிலளிநீக்குநீங்கள் அதிவிமரிசையாகப் போட்டிருக்கும் படங்களைப் பார்த்த பின் தான் நினைவில் வந்தது, அந்த விசிட்.//
நீக்குஹாஹாஹா...படங்கள் உங்கள் விசிட்டை நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா...
// ஆனால், இதுதான் அகரா வில்லேஜ் என்பது இப்போதுதான் அறிந்தேன்!//
அட! ஏகாந்தன் அண்ணா! மெய்யாலுமா? ஆச்சரியமாக இருக்கிறதே!
மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா
கீதா
படங்களும் பகிர்வும் அழகு அருமை
பதிலளிநீக்குமிக்க நன்றி கரந்தை சகோ படங்களை ரசித்தமைக்கும், கருத்திற்கும்
நீக்குகீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் தங்களின் கைவண்ணத்தில், ஒவ்வொரு கோணத்தையும் அழகாக எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.இந்தக் கோவிலை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். எங்கள் குழந்தைகளுக்கு இதுப்பற்றி தெரிந்திருக்கும். ஒருநாள் அவர்களை இங்கு அழைத்து செல்ல சொல்ல வேண்டும். பார்க்கலாம். எங்கள் மகன் இளையவனும், மாராத்த ஹல்லி என்ற இடத்திற்கு தினமும் அலுவலத்திற்கு சென்றவர்தான். தினசரி பிரயாண அலுப்பைப் பற்றி நிறைய சொல்லியுள்ளார்.
ஆஞ்சநேயர் திருவுருவம் நன்றாக உள்ளது. கட்டிடக்கலை சிற்பங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. நேரில் சென்று தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறதா எனப் பார்க்கலாம். நல்லதொரு கோவில் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நேற்று என்னால் வலைத்தளம் வர இயலவில்லை. என் கைப்பேசி வேறு அடிக்கடி தானகவே ஸ்விஸ் ஆப் ஆகி என்னமோ படுத்துகிறது. அதன் ஆயுள் முடியப்போகிறதோ என்னவோ? அதனாலும் இரவு ஒய்வு நேரத்திலும் வர இயலவில்லை. தாமதமாக இன்று வந்தமைக்கு மன்னிக்கவும் சகோதரி. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தாங்கள் எடுத்த படங்களின் தொகுப்பான காணொளியையும் பார்த்து ரசித்தேன் சகோதரி. என் கைப்பேசியும் இப்போது சரியென ஒத்துழைத்தது. அதற்கும் நன்றி.
நீக்குஉங்கள் கைப்பேசி இப்போது ஒத்துழைப்பது மகிழ்ச்சியான விஷயம். கைப்பேசி இல்லைனா எதுவுமே ஓடாதது போல ஆகிவிட்ட காலம் இல்லையாக்கா..அக்கா தாமதமாக வந்ததுக்கு எல்லாம் எதற்கு மன்னிப்பு. அதனாலென்ன எப்போது முடிகிறதோ நேரம் கிடைக்கிறதோ அப்போது வாசிக்கலாமே..
நீக்குஎங்கள் குழந்தைகளுக்கு இதுப்பற்றி தெரிந்திருக்கும். ஒருநாள் அவர்களை இங்கு அழைத்து செல்ல சொல்ல வேண்டும். பார்க்கலாம். எங்கள் மகன் இளையவனும், மாராத்த ஹல்லி என்ற இடத்திற்கு தினமும் அலுவலத்திற்கு சென்றவர்தான். தினசரி பிரயாண அலுப்பைப் பற்றி நிறைய சொல்லியுள்ளார்.//
கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். சென்று வாருங்கள் அக்கா. அங்கு அடுத்தடுத்து நிறைய கோயில்கள் இருக்கின்றன. ஒன்றில் ஏறி இறங்கினால் அடுத்து வேறொன்று என்று. கோயில் செல்லும் ஆர்வமுள்ளவர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும் இப்பகுதி.
காணொளிகளையும் கண்டு ரசித்தமைக்கு மிக்க நன்றி கமலாக்கா
கீதா
கலைக்கோயில் ஒன்றினைப் பற்றிய கண்கவரும் பதிவு..
பதிலளிநீக்குமனங்கவரும் அழகான படங்கள்.. சுற்றுலா செல்வோர்க்கு விரிவான செய்திக் குறிப்புகள்..
நமக்கெல்லாம் அந்தப் பக்கம் செல்வதற்கு வாய்ப்பு அமைவதென்பது அரிது..
அருமை.. அருமை..
காணொளி பிறகு தான்..
மிக்க நன்றி துரை அண்ணா, உங்கள் உடல் நிலைக்கிடையிலும் வ்ந்து கருத்திட்டமைக்கு.
நீக்குமீண்டும் நன்றியுடன்
கீதா
கோவில் சிற்பங்கள் அனைத்தும் அழகு. அதனை நீங்கள் படம் எடுத்த விதமும் அருமை... வாழ்த்துக்கள்!.
பதிலளிநீக்குமிக்க நன்றி நாஞ்சில் சிவா ரசித்தமைக்கும் கருத்திற்கும்
நீக்குகீதா
அழகிய புகைப் படங்கள்.வீடியோக்களும் அருமை.கோவிலை நேரில் பார்த்து வந்தது
பதிலளிநீக்குபோன்ற அனுபவம்! நன்றி
மிக்க நன்றி செபி சார், ரசித்தமைக்கும் கருத்திற்கும்
பதிலளிநீக்குகீதா
Thanks for sharing wonderful info. Hearing for first time though a long time resident of blr.
பதிலளிநீக்குOh really? I am happy that this post and the information is helpful to you. Welcome for your first visit to our blog. Noted your blog. Thank you for visiting our blog and commenting.
நீக்குgeetha