ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

சில்லு சில்லாய் – 5 - இன்ஸ்டன்ட் பலன் - பறவை நடனம்

 

இன்ஸ்டன்ட் பலன்!


சொந்தத்தில், அண்ணா ஒருவரிடம் இருந்து அழைப்பு.

ஏம்மா வாட்சப் என்னாச்சு இல்லையா? எஸ் எம் எஸ் அனுப்பிருந்தேன். பதிலே இல்லையே"

அண்ணா, ஸாரி அண்ணா, லேட்டாத்தான் பார்த்தேன்.  வருத்தமான செய்தி.....சின்ன   வயசில்லையா? என்ன பேசறது, சொல்றதுன்னு தெரியலை.”

அலைபேசியை மாற்றியதில் அவருடைய எண் பதிவாகவில்லை. குறுஞ்செய்திகள் பெரும்பாலும் முற்றிலும் வேண்டாத செய்திகள்எல்லா வசதிகளும் உள்ள '........' இடத்தில் ஃப்ளாட்டுகள் விலை சல்லிசாகக் கிடைக்கிறது 1 கோடிதான்!!!!; உங்கள் இளமையைத் தக்க வைக்க வேண்டுமா? மசாஜ் கட்டணம் பாதிதான்; கடன் வேண்டுமா எங்களை அணுகுங்கள்; சென்னையில் ஏதோ ஒரு கடையில் எப்போதோ மூக்குக் கண்ணாடி வாங்கியதற்கு இன்னமும் குறுஞ்செய்தி வந்து கொண்டிருக்கிறது, ஆஃபர், பிறந்தநாள் வாழ்த்துகள் - என்பதால் குறுஞ்செய்திகளை நான் பார்ப்பதே மேம்போக்காகத்தான் அதுவும் தாமதமாக.

அப்படிப் பார்த்த போதுதான் தெரிந்தது அவர் அனுப்பியிருந்த அவரது குடும்பத்துச் செய்தி. எங்களுக்குச்  சொந்தமான பெண்ணின் திடீர் மரணச் செய்தி. மரணச் செய்திகள் அதுவும் வயதாகாத நிலையில் மரணம். சமீபத்தில் ஏற்பட்டுள்ள பயம் அவ்வளவே. 

மிகவும் நெருக்கமான உறவுகள், நட்புகள் என்றால் உடனே அழைத்துப் பேசிவிடலாம். நேரில் செல்ல  முடிந்தால் சென்றுவிடலாம். அவர்களுடன் இருந்து உதவிடலாம். நிறைய ‘லாம்’ களையும் போட்டுக் கொள்ளலாம்.

ஆனால் இக்குடும்பத்தில் ஒரு சிலருடன் மட்டுமே தொடர்பு இருக்கிறது. நேரடித் தொடர்பு இல்லாத உறவுகள், நட்புகளின் இப்படியான செய்திகளைக் கேட்கும் போது சம்பிரதாயச் செய்திகளை அனுப்புவதில், பேசுவதில் எனக்குக் கொஞ்சம் சங்கடம் உண்டு. அதுவும் மரணச் செய்திகள். 

உதட்டளவே தவிர மற்றபடி அதில் வேறு ஒன்றுமில்லை என்றே எனக்குப்படும். அதாவது எனக்குச் செய்தி கிடைத்தது என்ற தெரிவிப்பு.

அடுத்த நிமிடம் அதைக் கடந்துவிட்டு நம் வேலைகளில் இறங்கிவிடுவோம் என்பதால் அமைதியாக இருந்துவிட்டுப் போகலாமே என்று தோன்றும். ‘நீ சொல்வதில் ஆத்மார்த்தம் இருக்கிறதாஎன்று என் மனமே என்னிடம் கேட்கும். 

நாமாக ஆத்மார்த்தமாகச் செய்வது என்பது வேறு, சமூக நிர்பந்தத்திற்காகச் செய்வது வேறு. 

ஆனால், சமூகத்தில் அப்படி இல்லை. சில நிர்பந்தங்கள். இல்லை என்றால் பராதி வரும். நான் பராதிகளைக் கண்டுகொள்வதில்லை என்பது வேறு விஷயம். ஆனால் ஒரு சிலர் நம் மனதை, குணத்தைப் புரிந்து கொள்ளாமல் பாராமுகமாய் ஆகிவிடுகிறார்கள்.

அவர்கள் இருக்கும் போது, செய்தவை - அதுதானே இன்னும் முக்கியம்? - எல்லாம் அவர்களது Selective Amnesia வில் போய்விடும். இந்தச் சம்பிரதாயம் தான் முன்னில் நிற்கும். ஆத்மார்த்தம் இல்லாத இப்படியான சம்பிரதாயங்கள், வேஷங்கள் என் மனதிற்கு உடன்படுவதில்லை. அப்படி என்றால் நீ பின்பற்றுவதில்லையா என்று கேட்டால், சில சமயங்களில் வேஷம் போட்டுத்தான் ஆக வேண்டியுள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

இந்தப்  பெண்ணை நான் நேரில் ஒரே ஒரு முறை, உறவுகளின் ஏதோ ஒரு நிகழ்வில் எப்போதோ பார்த்ததுண்டே தவிர மற்றபடி தொடர்பில்லை. என்றாலும் அவள் வயதை நினைத்துக் கொஞ்சம் அதிர்ச்சி. அவ்வளவே.

எப்படி இப்படி திடீர்னு? என்னாச்சுண்ணா?”

என்னத்த சொல்ல? ஏதோ கிரிவலமாம். கும்பலா போயிருக்காங்க. கொரோனா காலத்துல இது அவசியமா சொல்லு? கோயில் கூட்டத்துலருந்து வெளில வரப்ப திடீர்னு ஹார்ட் அட்டாக். ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போற வழியிலியே போய்ட்டா.”

! ஏற்கனவே ஹார்ட் பிரச்சனை இருந்ததா?”

அதெல்லாம் தெரியலை. ஆனா 40 வயசுக்கு மேல பெண்களுக்கு ஒரு மனோவியாதி வந்துடுதே.”

“மெனோபாஸ்?"

“அதில்லைம்மா, அதுக்குதான் டாக்டர் எல்லாம் இருக்காங்களே! இது டாக்டர் இல்லா வியாதி! இந்த பக்தி, ஆன்மீக வியாதி வந்துடுதேன்னேன்! இப்பத்தான் ஆன்மீகமும் சரி பக்தியும் சரி பிஸினஸ் ஆகிடுச்சே

ஆன்மீகம், பக்தி என்ற பெயரில் வணிகம் நடக்கிறதே என்று அவர் சொல்வதில் தவறில்லைதான். ஆனால் நான் பதில் எதுவும் சொல்லவில்லை. 

பரம்பொருளுக்குப் பூமியில் நிறைய முகவர்கள் இருக்கிறார்கள். அந்தப் பெரும் சக்திக்கே விளம்பரம் கொடுக்கிறார்கள்! இந்தக் கோயிலுக்குச் சென்று வந்தால் இது நடக்கும், அந்தக் கோயில் சாமிக்கு பரிகாரம் என்றும் ஜோசியக்காரர்கள் ஒரு பக்கம், மற்றொரு பக்கம் ஆன்மீக இதழ்கள், ஆன்மீகம் என்ற பெயரில் ஏதேதோ...பரம்பொருளுக்கே விளம்பரம்! எண்டே ஈஸ்வரா! 

"ஹலோ என்ன பதிலே காணும்?  உன் கூட்டத்தை நக்கலடிக்கிறேன்னுதானே பதில் சொல்ல மாட்டேன்ற?”

என் கூட்டமா? அண்ணா என்ன சொல்கிறார் என்று புரியவில்லை.  அப்புறம் புரிந்தது பெண்கள் கூட்டம்!!!

ஹாஹாஹா அண்ணா...This is too much! குத்தம் சொல்ல வேண்டாமே. எல்லாருக்குமே தங்களோட குறைகள், கஷ்டங்கள் ஏதேனும் ஒரு வழிசரியாகிடாதான்ற ஒரு பரபரப்பு, ஓர் எதிர்பார்ப்பு, ஏக்கம்....அதையும் பாசிட்டிவா பார்க்கலாமே.”

“என்னது பாசிட்டிவா? எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்ன்ற வியாதி. கொரோனா ஊசி இலவசமா போட்டுக்கோன்னு கத்தினா கூட ஒருத்தரும் போட்டுக்க மாட்டாங்க. ஆனாஇந்த சாமி கொரோனா சாமி. ஒரு மண்டலம் சுத்து சுத்தினா கொரோனாவா? மூச்! ஓடிவிடும்?! அண்டவே அண்டாதுன்னு கதை விட்டா கூட்டம் கூட்டமா போவாங்க, அந்தக் கூட்டத்துல கொரோனா தொத்திக்கும்னு கூட அறிவில்லாம......”

“அப்ப அவளுக்குக் கொரோனா வந்ததா? அதனால காம்ப்ளிக்கேஷன்?"

“யாருக்குத் தெரியும் ஏற்கனவே கொரோனா வந்தாலும் வந்திருக்கும்......என்னத்த சொல்ல? முக்குக்கு முக்கு திடீர் சாமிகள் முளைச்சிருக்காங்க கோயில் கட்றாங்க, 'இன்ஸ்டன்ட் பலன்' ‘நொடியில் ரெடி பலன்’ எல்லாமே இப்ப இப்படித்தானே தாரகமந்திரம்? ட்ரென்ட்? அத பெருமாளுக்கும் அப்ளை பன்றானுங்க பாவிங்க. உங்கள் துன்பத்தை நொடியில் போக்கிடுவார் 'இன்ஸ்டன்ட் பலன்'ன்னு சொல்லி கொள்ளை அடிக்கிறான், மக்களை ஏமாத்தறான்.....”

“நீங்க சொல்றது எல்லாம் ஓகே. ஏமாறவங்க ஏமாந்துட்டுப் போறாங்க விடுங்கண்ணா”

“ஏம்மா நம்ம பெருமாள், நமக்குன்னு பெருமாள் இருக்கப்ப, நம்ம பெருமாள கும்பிட்டா போறாதா? இப்படித் திடீர்னு முளைக்கற சாமிய எல்லாம்...ஹூம் என்னத்த சொல்ல? அதுவும் இப்ப பாரு பலரோட ப்ரொஃபைல் படமும் சாமின்னு சொல்ற ஒரு படம்தான்! இந்த சாமிக்கு மூலைக்கு மூலை கோயில். கோயில் கட்டி பிசினஸ். ஏதேதோ கோயில். கிரிவலம்...ரொம்ப முக்கியம் பாரு...இந்த வெயில்ல. என்னத்த சொல்ல. நான் சொன்னா யாரு கேக்கப்போறா?”

அண்ணா அதான் சொல்றேன் விடுங்கன்னு. அது அவங்கவங்க நம்பிக்கை. ஏதோ ஒரு வகைல அவங்களுக்கு அது பாசிட்டிவ் வைப்ரேஷன், நம்பிக்கை, பற்றிக் கொள்ள ஒரு கோல், மகிழ்ச்சி. ஏன் குத்தம் சொல்லணும்? அதுக்கும் இவ ஹார்ட் அட்டாக்குக்கும் என்ன சம்பந்தம்?”

அவர் குடும்பத்துப் பெண் இப்படிச் சென்ற இடத்தில் மரணம் அடைந்ததால் அந்த அடக்க முடியாத வருத்தம் இப்படி கோபமாகப் பலதையும் சாடிப் பாய்கிறது என்பது புரிந்தது.

“இவ இப்படிக் கண்டபடி போணுமா சொல்லு? என்ன சாமியோ வேண்டுதலோ. போமா, நமக்குன்னு சம்பிரதாயங்கள், அனுஷ்டானங்கள் இருக்குமா....நான் சொல்றத நீ ஏத்துக்கமாட்ட தெரியும்....”

அட! அண்ணா!!!!!!!! எப்பலருந்து இந்த அவதாரம்!!!!!!!?”

“என்ன அவதாரம்? எனக்குத்தான் பொறந்ததுலருந்தே சாமி நம்பிக்கையே கிடையாதே!!!!!!!!!!!!”

இப்பதிவை எழுதிய தினம் வியாழன். எழுதி முடிக்கிறேன், ரொம்ப ரொம்ப அபூர்வமாகச் செய்தி அனுப்பும் தோழியிடமிருந்து செய்தி. இந்தப் படத்தை 10 பேருக்கு அனுப்பவும், எனக்கும் சேர்த்து, அடுத்த நொடி, "...." உங்களை ஆச்சரியப்படவைப்பார். நீங்கள் நினைப்பது உடனே நடந்துவிடும்


***********

பறவை நடனம்

இங்கு பகிர்ந்திருக்கும் பறவை நடனம் காணொளியுடன், எபியில் வியாழனன்று ஸ்ரீராம் பகிர்ந்திருந்த பறவை நடனமும் சேர்த்திருந்தேன். ஸ்ரீராம் அங்கு பகிர்ந்திருந்ததால், இப்போது இது. 

சில பறவைகளின் அழகான நடனங்களை அவ்வப்போது பகிர எடுத்து வைத்திருக்கிறேன். தங்கள் இணையை ஈர்க்க ஆண் பறவைகள் ஆடும் நடனம்! இரண்டும் சேர்ந்து நடனம் என்று, என்ன ஒரு அழகு. பாலே நடனம் போல ஆடுகின்றன.  இயற்கையிலிருந்துதானே எல்லாமே மனிதர்கள் நாம்  கற்றுக் கொண்டோம். கற்றுக் கொள்கிறோம். நேரம் இருந்தால் பாருங்கள். இது Western Clark's Grebe - வெஸ்டர்ன் க்ளார்க்'ஸ் கிரெப் பறவைகளின் நடனம். அற்புதம்!

Western Clark's Grebe பறவைகளின் நடனம்

முந்தைய பதிவை வாசித்தவர்கள், கருத்திட்டவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி


------கீதா

34 கருத்துகள்:

  1. குடும்ப க்ரூப்களில் ஏதோ ஒரு பெயர் போட்டு பிறந்தநாள் வாழ்த்து .  பெரும்பாலும் தெரிந்திருக்கும் என்றாலும், சில பெயர்கள் யாரென்றே நமக்கு தெரிந்திருக்காது.  கடமை போல வாழ்த்து சொல்லி விடுவது வழக்கம்.  சிலர் சொவ்லதே இல்லை.  அந்த குழுவில் நானும் வரும் ஜனவரியிலிருந்து இணையப்போகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் குடும்ப க்ரூப் ஒன்று நீங்கள் சொல்வது போல ரொம்பப் பெரிதாக யார் என்று தெரியாதவர்கள் இருந்த க்ரூப்பிலிருந்து வெளி வந்துவிட்டேன். இப்போது என் தங்கைகள் மட்டுமே..

      //சிலர் சொவ்லதே இல்லை. அந்த குழுவில் நானும் வரும் ஜனவரியிலிருந்து இணையப்போகிறேன்!//

      ஹாஹாஹாஹா!!! ஸ்ரீராம்!!! புதுவருடத் தொடக்கமா?!!!

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  2. ஒருவர் மீது இருக்கும் அதிருப்தியை சில சமயங்களில் காட்டிக் கொள்ள முடியாத சூழல் இருக்கும்.    அது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வெளிபப்டுகிறது.  அதுவும் இழப்பு ஏற்பட்ட சமயங்களில் தீவிர வெளிப்பாடாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. அதே போல இந்த சாமியை கும்பிடுவதா, அந்த சாமியை கும்பிடலாமா, நம்ம சாமி இருக்கே என்கிற மாதிரியான வாதங்களும்..  என்ன சொல்ல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா...ஆமாம் ஆமாம்....இது பரவலாக இருக்கு போல!!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  4. பறவைகள் நடனம்..   அடுத்த வாரத்துக்கு இதைதான் எடுத்து வைத்திருந்தேன்!  நீங்கள் பகிர்ந்து விட்டீர்கள்!!

    அந்த இரு பறவைகளுக்கான பாரம்பர்ய நடனம் போலும் அது.  ஒரே மாதிரி அசைவுகளை தவறாமல் சேர்ந்தே செய்கின்றன!  கோரியோக்ராபர் யாரோ...  திடீரென பின்னால் முளைக்கும் இரண்டு (சீனியர்) பறவைகள் குருவா?  பெற்றோரா தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா ஹைஃபைவ்! பாருங்க நான் இதுல போட்டு வைச்சிருந்தத நீங்க வியாழன் பகிர்ந்திருக்கீங்க நான் இப்ப போட்டது நீங்க அடுத்த வாரத்துக்கு எடுத்து வைச்சிருக்கீங்க!!! சபாஷ்!

      அந்த இரு பறவைகளுக்கான பாரம்பர்ய நடனம் போலும் அது. ஒரே மாதிரி அசைவுகளை தவறாமல் சேர்ந்தே செய்கின்றன! //

      ஆமாம் என்ன அழகு! நானும் விவரித்து எழுத நினைத்தேன். நீங்கள் பகிர்ந்திருத அந்த வீடியோவுக்கு எழுதியிருந்தேன் இதற்கு எழுதாமல் பதிவு இருந்தது. மற்றொன்று கருத்திலும் வரட்டுமே என்றும் - நான் எழுதாததற்கு ஒரு சாக்கு போக்கு - விட்டுவிட்டேன்.

      அது கழுத்தை பின் பக்கம் வளைத்துக் கொண்டு வருவதைப் பார்த்ததும் நாகேஷ் பின் பக்கம் வளைந்து எழுவாரே அது நினைவுக்கு வந்தது!!!!

      திடீரென பின்னால் முளைக்கும் இரண்டு (சீனியர்) பறவைகள் குருவா? பெற்றோரா தெரியவில்லை!//

      அப்படித் தெரியவில்லை ஸ்ரீராம். பொதுவாகவே ஒரு/இரண்டு பெண்ணை/ண்களைச் சுற்றி 2,3 ஆண் பறவைகள் வருமே டான்ஸ் ஆடி ஈர்க்க....யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்குதோ!!! (நாய்களில் பாத்திருப்பீங்க அது போலத்தான் கிட்டத்தட்ட நான் பல பறவைகளைப் பார்த்த வரையில்...)

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  5. இன்ஸ்டன்ட் பலன் - இயல்பாக எழுதியிருக்கீங்க.

    என் சித்தப்பாவிடம் கோவில் பயணங்கள், ப்ரபந்தங்கள் போன்றவை சொல்வது சம்பந்தமாக சந்தேகங்கள் கேட்டேன். அவர் சொன்னார், நாம் எது செய்தாலும் நமக்கும் தெய்வத்துக்கும் மட்டும்தான் தெரியும். மூன்றாவது மனிதரின் அபிப்ராயத்துக்கு அங்கு வேலையில்லை. உன் மனதுக்குத்தான் தெரியும் நீ எந்த மாதிரி மனநிலையோடு எதனைச் செய்கிறாய் என்று, எனச் சொன்னார்.

    ஆன்மீகம் பிசினெஸ் ஆகிவிட்டது. நமக்கும் அந்த விளம்பரங்களை மட்டுமே நம்பும் மனநிலை வந்துவிட்டது. பக்கத்துத் தெரு கோவிலுக்கும் ஃபேமஸ் கோவில் தெய்வத்துக்கும் வித்மியாசம் கண்டுபிடிக்கும் அறிவற்றதன்மை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நெல்லை.

      உங்கள் சித்தப்பா சொன்னது சூப்பர்! ஆமாம் நமக்கும் இறைவனுக்கும் இடையிலானது. என் எண்ணமும் அதே.

      ஆன்மீகம் ரொம்பவே பிஸினஸ். தெய்வம் எல்லா இடங்களிலும் ஒன்றுதானே!

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  6. பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தை சகோ, உங்கள் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  7. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. மனித மனங்களில் எழும் பாகுபாடுகளை ஃபோனில் தங்களின் தூரத்து அண்ணாவுடன் பேசிய பேச்சில் விரிவாக அலசியுள்ளீர்கள்.

    நம்பிக்கைத்தான் வாழ்க்கை என்கிறோம். எப்போதும் பாஸிட்டிவாக நினைத்துக் கொண்டேயிருந்தால், நெகடிவ் சம்பவங்கள் வராமல் போக வாய்ப்பு உண்டு என்கிறோம். உண்மைதான்... ஆனால் நம் விதிப்பயனினால் அச்சம்பவங்கள் தொடர்ந்து வந்த பின் பாஸிடிவ் எண்ணங்கள் தடைபட்டு நமக்கென்று வந்த நெகடிவ்வால் இழந்ததையெல்லாம் மனது சுட்டிக்காட்டி அந்த பாஸிடிவ்வையே கொஞ்ச தூரத்தில் தள்ளியே வைக்கிறதே.... என சமயத்தில் மனம் குழம்புவதுமுண்டு. ஆனால், இதக்கெல்லாம் தீர்வு "இரண்டையும் சமநிலையில் வைத்துப் பார்க்கும் மனப்பக்குவம் இன்னமும் முன்னிலும் அதிகமாக நமக்கு கிடைக்கச் செய்து விடு.. " என நம்மை மீறிய சக்தியிடம் மனப்பூர்வமாக வேண்டிக் கொள்வதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்பது என் கருத்து. அப்படி வேண்டும் போதினில் அது அப்படியே தப்பித்தவறி இந்தப்பிறவியில் கிடைக்காமல் போனாலும், அடுத்தடுத்த பிறவிகளில் கொஞ்சமாவது நமக்காக அதுவும் நம்முடன் கைக்கூடி வரும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

    எனினும் தங்கள் உறவின் மரணச்செய்தி மனம் வருந்த வைக்கிறது. அவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    தெய்வ நம்பிக்கை, தானாக வருவது. அதை இப்படி முன்பெல்லாம் போஸ்ட் கார்டு மூலம் பயமுறுத்தி வரவழைத்து செய்வதைப் போல இன்னமும் இப்போது கைப்பேசியிலும் தொடர்கிறதா? எனக்கு வந்தில்லை என நினைக்கிறேன். ஒருவேளை நான் இதையெல்லாம் பார்க்கவில்லையோ என்னவோ? அதுவும் தெரியவில்லை..

    பறவை நடனம் நன்றாக உள்ளது. அருமையான காணொளி பார்த்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா, எப்போதும் பாசிட்டிவாக இருந்தா

      நீக்கு
    2. கமலாக்கா, ஆம் நம்பிக்கைதான் வாழ்க்கை. இல்லை என்றால் நாம் மனம் தளர்ந்துவிடுவோம்.

      பாசிட்டிவாக இருக்கச் சொல்வது நெகட்டிவ் நடக்காது என்பதைவிட, நெகட்டிவ் நடந்தாலும் மனம் அதைக் கண்டு தளராமல் அடுத்து என்ன என்று நெகட்டிவை புறம் தள்ளி பாசிட்டிவாக எடுத்து அதிலும் நல்லது தேடும் மனம். ஆமாம் நீங்கள் அடுத்த வரியில் சொல்லியிருப்பது போல் மனம் இதற்கு ரொம்பப் பக்குவப்பட வேண்டும். மனித இயல்பு எதிர்ம்றை டக்கென்று மனதில் பத்திக்கும்! அதையே தான் சிந்திக்கும் அப்ப நமக்கு மூளை அடுத்து என்ன என்பதை யோசிக்காது அதற்குத்தான் அப்படிச் சொல்லப்படுகிறது.

      இப்பவும் தொடர்கிறது முன் போஸ்ட்கார்ட் அதன் பின் மெயிலில் இப்போது வாட்சப்பில். என் தோழியிடம் அப்புறம் சொல்லிவிட்டேன். இனி இப்படி அனுப்பாதே என்று. நல்லாருக்கியான்னு கேளு அது போதும்னு...இப்போது அவள் வெளிநாடு சென்றிருக்கிறாள். நல்ல தோழி.

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  8. இறைவனை வைத்து இன்று பலரும் வியாபாரம் செய்கின்றனர்.

    ஆதி காலத்தில் கலை நயத்தோடு கட்டிய கோயில்களை வணங்கி பராமரிக்க ஆளில்லை.

    ஆனால் இன்று தெருவெல்லாம் கோயில் யாரிடம் உண்மையான பக்தி இருக்கிறது ?

    ஒரு வசதி தெருவோரக் கோயில்களை வணங்குவதற்கு கட்டணம் இல்லை.

    காணொளி சிறப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே அதே கில்லர்ஜி இருக்கற கோயிலைப் பரமாரிப்பதில்லை. இப்போது இறைவனின் பெயரில் வியாபாரம் ஓங்கி வளர்ந்திருக்கிறது. இதில் நிறைய இருக்கு சொல்ல..

      ஆமாம் எனக்கும் தெருவோரக் கோயில்கள் அதிலும் ஏற்கனவே பல வருடங்களாக இருக்கும் கோயில்கள் பிடிக்கும். இப்போது அக்கோயிலைச் சுற்றி வீடுகள் அலல்து அலுவலகங்கள் வந்து இருப்பதை இங்கு நிறைய இடங்களில் பார்க்கலாம்..

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  9. நீங்களும் உங்கள் அண்ணாவும் பேசிய உரையாடல் பகிர்வு நிறைய சிந்திக்க வைக்கிறது.

    மாயவரத்தில் பக்கத்து வீட்டு மாமி வைஷ்ணவர் அவர் பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவில், பிள்ளையார் கோவில் போவார்.வீட்டு வாசலுக்கு வரும் சாமிகளுக்கு பூஜை தட்டு கொடுப்பது என்று செய்வார், அவர் சொல்வார் எல்லாம் பெருமாள்தான் தான் என்று.


    முன்பு "மரம் வைத்தவன் தண்ணீர்விடுவான்" என்ற எளிமையான பக்தி இருந்தது.காலையில் நல்லபொழுதாக இருக்க இறைவனை வணங்குவது, இரவு இன்றைய பொழுது நல்லபடியாக போனது என்று இறைவனுக்கு நன்றி சொல்லுதுதல் இருந்தது.

    நீ எனக்கு இப்படி செய்தால் தான் நன்றாக இருப்பாய் என்று இறைவன் சொல்லவில்லை.

    நம்பிக்கையும், மனநிறைவும் தான் முக்கியம் இறைவனை வணங்குவதில்.

    எளிமையாக வணங்கினால் இறைவன் கோபித்து கொள்ள மாட்டார்.
    ஆனால் இப்படித்தான் செய்ய வேண்டும் என்றும், இப்படி வணங்க வேண்டும். படங்களை இப்படி வைக்க வேண்டும், இறந்த முன்னோர்களை இப்படி வணங்க வேண்டும். என்று நிறைய வீடியோக்கள் போட்டு மக்களை வழி நடத்துகிறார்கள்
    நாம் இப்படி செய்யவில்லையே! இப்படி வீட்டில் வைக்கவில்லையே! இறைவன் நம்மை தண்டித்து விடுவாரோ என்ற குழப்பம் மக்களுக்கு வந்து இருக்கிறது.

    //இந்தப் படத்தை 10 பேருக்கு அனுப்பவும், எனக்கும் சேர்த்து, அடுத்த நொடி, "...." உங்களை ஆச்சரியப்படவைப்பார். நீங்கள் நினைப்பது உடனே நடந்துவிடும்! //

    இந்த மாதிரி அனுப்புவர்களிடம் நான் பகிர மாட்டேன் தயவு செய்து அனுப்பாதீர்கள் என்று சொல்வேன் எனக்கு ஏதாவது நல்லது நடக்க உதவ கூடாதா என்றால் அவர்களுக்கே அனுப்பி இருக்கிறேன். உங்களுக்கு இத்தனை மணீக்குள் நல்லது நடக்கும் என்று சொன்னீர்களே நடந்ததா? என்று கேட்க நினைப்பேன் ஆனால் கேட்டது இல்லை. அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு.

    கூட்டம் இல்லாத பக்கத்தில் இருக்கும் இடத்திற்கு மக்கள் போக மாட்டார்கள். விளக்கு எரிக்க அங்கு எண்ணெய் வாங்கி தரலாம்.
    கூட்டம் அதிகம் உள்ள கோவில்கள் எண்ணெய் வழிந்து ஓடும். இத்தனை விளக்கு போடுங்கள் நல்லது நடக்கும் என்ற கோவிலுக்கு தான் போவார்கள்.

    இறைவனுக்கும் புகழ், செல்வாக்கு வேண்டி இருக்கிறது.

    பறவை காணொளி அருமை. நடனம் பிரமாதம். பறவைகளை கவனித்தால் நேரம் போவது தெரியாது மனதில் நிம்மதி, மகிழ்ச்சி பரவும்.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இறைவனுக்கும் புகழ், செல்வாக்கு வேண்டி இருக்கிறது// - நீங்க சொல்றதைப் பார்த்தால் ஒவ்வொரு கோவிலிலும் இறைவன் இதையெல்லாம் எதிர்பார்க்கிற மாதிரித் தோணுதே... செய்வது எல்லாமே நம்முடைய மனத்திருப்திக்குத்தான். கேட்ட வரங்களையெல்லாம் இறைவன் தந்துவிடமுடியுமா என்ன?

      நீக்கு
    2. இறைவன் கேட்பது இல்லை, புகழ் செல்வாக்கை. எதிர்பார்பதும் இல்லை.

      மக்கள் தான் புகழ் பெற்ற கோவில், செல்வாக்கு உள்ள கோவிலை தேடி போகிறார்கள்.

      திருவெண்காட்டில் நாங்க இருந்த போது கோவிலில் கூட்டம் கிடையாது. புதன் கோவில் என்று விளம்பர படுத்த பட்டபின்தான் கூட்டம் அதிகமாக வருகிறது.
      அதைதான் சொன்னேன்.

      இந்த கோவில் போனால் நிறைய பலன் உண்டு என்று விளம்பரம் பார்த்து வருகிறார்கள். தொலைகாட்சியில் கேட்ட வரம் கிடைத்தவர்கள் சொல்கிறார்கள்.

      யாருமே போகாத கோவில்கள் இருக்கிறது. ஆறு கால பூஜை செய்யாவிட்டாலும் ஒரு கால பூஜைக்கு குருக்கள் தன் வீட்டிலிருந்து அமுது கொண்டு வந்து பூஜை செய்து போவார்.

      நாம் செய்வது எல்லாமே நம் மனத் திருபதிக்குதான். இறைவன் அதை செய் இதை செய் என்று நம்மிடம் கேடபது இல்லை.

      கேட்ட வரங்கள் நமக்கு கொடுப்பதும் கொடுக்காததும் அவர் விருப்பம் தான்.
      நமக்கு எது கொடுக்க வேண்டும், எப்போது வேண்டும் என்று இறைவனுக்கு தெரியும் என்று சொல்வார்கள்.

      நீக்கு
    3. மாயவரத்தில் பக்கத்து வீட்டு மாமி வைஷ்ணவர் அவர் பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவில், பிள்ளையார் கோவில் போவார்.வீட்டு வாசலுக்கு வரும் சாமிகளுக்கு பூஜை தட்டு கொடுப்பது என்று செய்வார், அவர் சொல்வார் எல்லாம் பெருமாள்தான் தான் என்று.//

      மிக நல்ல விஷயம், எண்ணம் கோமதிக்கா. நானும் அப்படியே...

      //முன்பு "மரம் வைத்தவன் தண்ணீர்விடுவான்" என்ற எளிமையான பக்தி இருந்தது.காலையில் நல்லபொழுதாக இருக்க இறைவனை வணங்குவது, இரவு இன்றைய பொழுது நல்லபடியாக போனது என்று இறைவனுக்கு நன்றி சொல்லுதுதல் இருந்தது.//

      ஆமாம் அக்கா அது மிக நல்ல விஷயம் இல்லையா!?

      இப்போதும் எனக்கு இப்பழக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இரவு பிரார்த்தனை நன்றி நவிலல்!!, காலையில் எழுந்ததும் பிரார்த்தனை...

      நீங்கள் சொல்லியிருக்கும் கருத்தினை அப்படியே வழி மொழிகிறேன். இறைவன் எதுவும் கேட்பதில்லை. நாம் தான் நம் மனத் திருப்திக்காகச் செய்வதுதான்.

      நானும் தோழியிடம் சொல்லிவிட்டேன் கோமதிக்கா. அவள் இப்போது வெளிநாட்டிற்குச் சென்றிருக்கிறாள்.

      //உங்களுக்கு இத்தனை மணீக்குள் நல்லது நடக்கும் என்று சொன்னீர்களே நடந்ததா? என்று கேட்க நினைப்பேன் ஆனால் கேட்டது இல்லை.//

      ஹாஹாஹா கோமதிக்கா நான் இதைத்தான் தோழியிடம் சொல்லி...நீ அனுப்பினியே உனக்கோ அல்லது எனக்கோ நல்லது நடந்ததா அந்த நேரத்திற்குள்? இப்படிச் செய்யும் நேரத்தில் இறைவனை நினைத்துத் துதித்தாலே போதுமே என்றேன். அவள் நல்ல தோழி புரிந்து கொள்பவள் என்பதால் புரிந்து கொண்டாள். கொஞ்சம் செண்டிமென்ட்ஸ் கூடுதல் உள்ளவள்.

      கூட்டம் இல்லாத பக்கத்தில் இருக்கும் இடத்திற்கு மக்கள் போக மாட்டார்கள். விளக்கு எரிக்க அங்கு எண்ணெய் வாங்கி தரலாம்.//

      டிட்டோ செய்கிறேன். கோமதிக்கா

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
    4. ஆமாம் பறவைகளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அதுவும் இப்படியான நடனங்கள் எல்லாம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இன்னும் வைத்திருக்கிறேன்..பகிர்கிறேன்.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  10. எப்படி முழு பேச்சையும் ஞாபகத்தில் வைத்து எழுதினீர்களோ? பறவைகளின் நடனம் நன்றாக உள்ளது. மகன் எடுத்ததா? இந்த வாட்சப் தொந்தரவுகள் நிறைய!. இரவிலும் அவ்வப்போது ஏதாவது வந்து கொண்டே இருக்கும். சிலர் கேட்காமலேயே நம்மையும் அவர்களுடைய குரூப்பில் சேர்த்து விடுகிறார்கள். விலகினால் மனஸ்தாபம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெகே அண்ணா நான் உடனே குறித்து வைத்துக் கொண்டுவிட்டேன். பதிவு எழுதி சில மாதங்கள் ஆகிறது. 7,8 மாதங்களுக்கு முன் நடந்தது.

      அது போல கதை எழுத இப்படியான நிகழ்வுகளை அல்லது எழுத நினைப்பதை குறிப்புகளாகக் கதை வடிவில் எழுதி வைத்து விடுவேன் அது அப்படியே ராவாகக் கிடக்கும். அதன் பின்னர்தான் வடிவம் கொடுப்பது.
      அந்த அண்ணா இன்னும் பேசினார். அதை முழுவதும் கொடுத்தால் பதிவு பெரிதாகும் அபாயம் என்பதால் தரவில்லை.

      பறவைகள் நடனத்தை ரசித்ததற்கு மிக்க நன்றி. இல்லை அண்ணா மகன் எடுத்தது இல்லை. இது யுட்யூபில் இப்படி இருப்பதைப் பார்ப்பதுண்டு அப்படி எடுத்து வைத்திருக்கிறேன் இன்னும்///

      சிலர் கேட்காமலேயே நம்மையும் அவர்களுடைய குரூப்பில் சேர்த்து விடுகிறார்கள். விலகினால் மனஸ்தாபம்.//

      ஆமாம் அதுவும் உண்டு. எங்கள் குடும்பத்தில். ஆனால் விலகினால் மனஸ்தாபம் வருவதில்லை. நம் விளக்கத்தைப் புரிந்து கொண்டுவிடுவதால். ஆனால் நீங்கள் சொல்வது போல் பலர் புரிந்துகொள்ளாமல் மனஸ்தாபம் வரும்தான்

      மிக்க நன்றி ஜெகே அண்ணா

      கீதா

      நீக்கு
  11. //கொரோனா ஊசி இலவசமா போட்டுக்கோன்னு கத்தினா கூட ஒருத்தரும் போட்டுக்க மாட்டாங்க. ஆனா ‘இந்த சாமி கொரோனா சாமி. ஒரு மண்டலம் சுத்து சுத்தினா கொரோனாவா? மூச்! ஓடிவிடும்?! அண்டவே அண்டாதுன்னு’ கதை விட்டா கூட்டம் கூட்டமா போவாங்க...//

    இப்படியெல்லாம் பேசுனா அந்த கொரோனா சாமி கோபித்து கொள்ளாதோ?... சாமி குத்தம் ஆகிடுமுன்னு உங்க ஆண்ணாவிடம் கறாரா சொல்லி வைங்கோ... பிள்ளையாண்டான் தட்டுல காசு போடாவிட்டாலும் பரவாயில்லை. புதுசா எழுந்தருளியிருக்கிற பரந்தாமனை பழிக்கலாமோ?... ம் ...ம்ம்... வர வர இந்த மனுசாளுக்கு பக்தி குறைஞ்சுண்டே போகுது...

    அப்புறம் அந்த பறவை நடனம் பேஷ்... பேஷ்... ரொம்ப நல்லா இருக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாஞ்சில் சிவா, உங்கள் கருத்து பார்த்து சிரித்துவிட்டேன்.

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  12. அந்தக் காலத்தில் 'தமிழ் மணத்'தில் ரேங்க் வாங்குவதற்காக ஒரு பதிவர் அடுத்த பதிவரிடம் சொல்லி வைத்து, ஒரே பின்னூட்டத்தை ஐந்து அல்லது ஆறாகப் பிரித்து எழுதுவது வழக்கமாக இருந்தது. இப்போதும் அது தொடர்வது போல் தெரிகிறதே! இந்த வழக்கம் மாறவேண்டும்.
    ஏனென்றால் புதிதாகப் பின்னூட்டம் போடுபவர் எரிச்சலடைந்து விடும் அபாயம் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செல்லப்பா சார், இப்படி எல்லாம் இருந்ததா என்ன? யாமறியோம் பராபரமே.

      பொதுவாக பதிவு பெரிதாக இருந்தால் நமக்குத் தோன்று கருத்துகளை மொத்தமாகக் கொடுத்தால் அதுவே பெரிதாகிவிடும் என்பதால் அப்படிச் சின்னதாகக் கொடுக்கும் வழக்கம் உண்டு. எனக்கும் உண்டு சார். இது நாம் பதிவை ஒழுங்காக வாசித்திருக்கிறோமா அலல்து சும்மா 'அருமை' என்று கொடுத்துவிட்டும் செல்லலாமே. அதுவும் கதம்பம் போன்ற பதிவுகளுக்கு ஒவ்வொரு பகுதிக்கும் நானும் கொடுப்பது உண்டு.

      அப்படித்தான் சிலரும் கொடுப்பாங்க சார். அப்படிக் கொடுப்பதில் தவறு எதுவும் இல்லையே சார்.

      மிக்க நன்றி சார்

      கீதா

      நீக்கு
    2. செல்லப்பா சார், இப்படி எல்லாம் இருந்ததா என்ன? யாமறியோம் பராபரமே.

      பொதுவாக பதிவு பெரிதாக இருந்தால் நமக்குத் தோன்று கருத்துகளை மொத்தமாகக் கொடுத்தால் அதுவே பெரிதாகிவிடும் என்பதால் அப்படிச் சின்னதாகக் கொடுக்கும் வழக்கம் உண்டு. எனக்கும் உண்டு சார். இது நாம் பதிவை ஒழுங்காக வாசித்திருக்கிறோமா அலல்து சும்மா 'அருமை' என்று கொடுத்துவிட்டும் செல்லலாமே. அதுவும் கதம்பம் போன்ற பதிவுகளுக்கு ஒவ்வொரு பகுதிக்கும் நானும் கொடுப்பது உண்டு.

      அப்படித்தான் சிலரும் கொடுப்பாங்க சார். அப்படிக் கொடுப்பதில் தவறு எதுவும் இல்லையே சார்.

      மிக்க நன்றி சார்

      கீதா

      நீக்கு
  13. பல வாட்ஸப் குழுக்களில் அட்மின் எவ்வளவு சொன்னாலும் சம்பந்தமில்லாத தகவல்களப் பகிரும் பேர்வழிகள் பலர்.
    குறுஞ்செய்திகளிலோ பாதிக்கும் மேல் குப்பைகள்.என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் குறிப்பாகக் குறுஞ்செய்திகள். மிக்க நன்றி செபி சார்.

      கீதா

      நீக்கு