ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

இந்திய கடற்படையின் கிழக்கு கரையோர தலைமையக நகரத்தில் பயணம் - 3

 

முதல் பகுதி, இரண்டாம் பகுதி

இதற்கு முந்தைய பகுதியையையும், துளசியின் சென்ற பதிவையும் வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.

இரண்டாம் பகுதியில் //வெளியில் வந்து கடற்கரைச் சாலைக்கு வந்தால், எதிரே வா வா என்று அழைக்கும் அழகான கடற்கரை. அலைகளின் சங்கீதத்தைக் கேட்போம்! கடற்கரை பற்றியும் அனுபவங்களும் அடுத்த பகுதியில். //  என்று சொல்லி முடித்திருந்தேன் இல்லையா....நீட்டி முழக்காதே மேலே சொல்லு என்று நீங்கள் சொல்வதற்குள் தொடங்கிவிட்டேன்.

கவிதை பாடும் அலைகள் ஓய்வதில்லை.  நம்மை (ஸ்ரீராமை, ஜெசி அண்ணாவை, துரை அண்ணாவை) கவிதை பாடவும் வைக்கும். ஒரு வித மோன நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.



ஆர் கே கடற்கரை மிக அழகான மனதைக் கொள்ளை கொள்ளும் கவர்ச்சியான நீளமான அகலமான கடற்கரை.  அதைப் பறவைப் பார்வையில் பார்த்தால் அதன் அழகு வேறொரு கோணத்தில் மிளிரும்! அதுவும் அந்த நீண்ட சாலையும் கடற்கரையும் பார்ப்பதற்கே அத்தனை அழகாக இருக்கும். விவரிக்க வார்த்தைகள் இல்லை.  கடற்கரை மணலில் அப்படியே நீண்ட தூரம் நடந்து நடைப்பயிற்சி செய்யலாம். அவ்வளவு விரிந்த கடற்கரை.

இங்கு அந்த ஸ்தூபி போன்ற இடத்தில் மக்கள் தெரிகிறார்களா? அவர்கள்தான் கீழே உள்ள படத்தில் காணப்படும் பொருட்களைப் போட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள்
துணிகள், சாமிபடம்...இந்த ஸ்தூபி போல இருப்பது என்ன என்று தெரியவில்லை. அதில் உள்ள எழுத்துகளும் தெளிவாக இல்லை. இணையத்திலும் தேடியும் எதுவும் அதைப் பற்றி எதுவும் கிடைக்கவில்லை.

சுத்தமாகத்தான் இருக்கிறது என்றாலும் சில இடங்களில் படத்தில் உள்ளது போல் குப்பைகள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன. அதுவும் சாமி படங்கள், துணிகள் என்று கண்ட குப்பைகள். மக்கள் திருந்தவே மாட்டாங்கப்பா.
இந்தப் படத்தில் தூரத்தில் தெரிகிறது இல்லையா அதுதான் டால்ஃபின் முனை மலை. கீழே சொல்கிறேன்.

கடற்கரையில் ஆங்காங்கே சிறிய பாறைக்கற்களும் பெரிய பாறைகளுமாக இருப்பதும் கூடுதல் ரம்மியம்.  பார்த்தவுடன் வாவ் என்று சொல்ல வைக்கும் அழகு.  பலருக்கும் அலைகளில் விளையாடுவதற்கு ஏற்ப இருக்கிறது.

காலையிலேயே வெயில் அடித்தாலும் கடற்கரையில் அலைகளில் விளையாடி, குளியல் போட்டு அனுபவித்த குழந்தைகளையும் பெரிய குழந்தைகளையும், குறிப்பாகச் சுற்றுலாப்  பயணிகளையும் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது! 

பொதுவாக நான் மக்கள் இருக்கும் பகுதியை மூன்றாவது விழிக்குள் அகப்படுத்த மாட்டேன். நான் எடுக்க விரும்பும் இடம், காட்சி எவ்வளவு அழகாக இருந்தாலும் ஃப்ரேமிற்குள் மக்கள் தெரிந்தால் தவிர்த்து விடுவது வழக்கம். தூரத்தில் என்றால் ஓகேதான் என்றாலும் கூடியவரைத் தவிர்ப்பது நல்லது என்று நினைப்பேன்.

அலைகள் பாறைகளில் மோதித் தெறித்து, காற்றின் வேகத்தில் திவலைகளாய்ச் சிதறி...

நாங்கள் நின்றிருந்த இடத்தில் சுற்றுலா வந்திருந்த வட இந்தியக் குடும்பத்தின் இளைஞர்களும் குழந்தைகளும் அலைகளில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பெரிய குழு. எனவே நான் அவர்களைத் தவிர்த்து தவிர்த்து கடல் அலைகள் மேலேழுந்து வந்து பாறையில் மோதித் தெறிக்கும் காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தேன்.

அலைகள் வந்து பாறையில் மோதித் தெறிக்கும் காட்சியை க்ளிக் செய்ய வேகமாக வந்த அலையை ஃபோக்கஸ் செய்த போது டக்கென்று அந்தக் குழுவிலிருந்த ஒரு பையன் ஒருவர் அந்தப் பாறையில் ஏறி நிற்க, மற்றொரு பையனும், பெண்ணும் ஃபோட்டோ எடுக்க என் ஃப்ரேமிற்குள் சிக்கினார்கள். அழித்துவிடலாமா என்று யோசித்து தற்செயலாகக் கிடைத்த அழகான ஷாட் என்று வைத்துக் கொண்டேன்.


நான் அடுத்த அலையைக் குறி வைத்து கோணம் பார்த்து மூன்றாவது விழியைச் சுழற்றிக் கொண்டே வர, இந்த ஷாட் சிக்கியது. அக்குழுவின் மற்றொரு இளைஞர் பச்சை டீஷர்ட் நின்றது கீழ் பகுதி. அதற்கும் மேலே நிற்க வேண்டும் என்று இந்தப் பையன் நினைத்திருப்பார் போலும்.  ஏறி நிற்க அந்த அலை அந்தப் பையனை முழுவதும் மூடியது. நல்ல ஷாட் என்று இதையும் வைத்துக் கொண்டேன்.

இரண்டு படங்களிலும் உள்ளவர்களும் டக்கென்று ஃப்ரேமில் சிக்கியவர்கள். இப்பகுதி ஆழமில்லாத பகுதி.

அந்தக் குழுவில், அலைக்குப் பயந்து தள்ளி நின்று கொண்டிருந்த ஒரு அப்பாவி அப்பாவை, குழந்தைகள் கையைப் பிடித்துக் கொண்டு இழுத்து வந்தார்கள். அவரோ பயந்து பயந்து தயங்கிக் கொண்டே வர இந்தப் பாறைக்கு அருகே குழந்தைகள் நிறுத்திட அவரது மனைவி கூப்பாடு போட்டார்!!!! அப்படித்தான் நினைக்கிறேன்.  

மற்றொரு குழந்தையை திட்டி மனிதரின் இடக்கையைப் பிடிக்கச் சொல்லிப் போகச் சொல்ல அக்குழந்தை ஓடி வந்து உடனே  இடக்கையைப் பிடித்துக் கொண்டு நின்றதும் வந்த அலை அவர்களை நனைத்துச் சென்றுவிட்டது. அந்த அப்பாவுக்கு ஒரே மகிழ்ச்சி. பயந்தவருக்கு கரைக்குச் செல்ல மனமில்லை. அடுத்த அலைக்கு நிற்போம் என்று நிற்க... 

அடுத்த அலையின் வருகையைப் பார்த்ததும் அந்த அம்மாவிற்குப் பயம் அவரும் ஓடி வர, கூடவே சிலர் வந்து பிடித்துக் கொண்டனர். அலை வந்து கொண்டிருந்தது. மோதிய அப்படத்தை நான் எடுக்கவில்லை.  இந்த இரண்டுமே அலைகளை எடுக்கும் ஆர்வத்தில் மூழ்கியதில் ஃப்ரேமை கவனிக்கவில்லை.

நான் ஃபோக்கஸ் செய்து எடுக்காததால் ஓரத்தில்தான் தெரிவார்கள். அவர்கள் நான் எடுத்துக் கொண்டிருந்ததைக் கவனித்துவிட்டார்கள். எனக்குப் பயம். குழந்தைகள் ஓடி வந்து பிதாஜி, சாச்சாஜி ஃபோட்டோவில் இருக்காரா என்று கேட்டன. அழித்துவிடலாம் என்று நினைத்திருந்த நான் அதைக் காட்டினேன். உடைந்த ஹிந்தியில் தற்செயலாக சிக்கியது என்றேன். 

இப்படி ஃபோக்கஸ் செய்யாத ஷாட்டையும் கூட ரசித்துப் பார்த்தார்கள். அனுப்ப முடியுமா என்றும் கேட்டார்கள். அனுப்ப முடியாதே! குழந்தைகளுக்கு வருத்தம்.  நம்பர் கொடுக்க குழுவின் அண்ணன்மார்களைத் தேடினார்கள். அவங்க எங்க இங்க. எல்லாரும் பாறையில் நின்று அலை வந்து மூடுவதை வித விதமான போஸ்களில் ஒரே ஃபோட்டோ ஷூட்டில் பிஸி. மொபைலில்.

தீம் பார்க்குகளில் தண்ணீரில் சறுக்கி வரதையும், வந்து நனைந்ததும் நனைந்த உடையுடன்  ஒரு ஃபோட்டோ ஷூட் எடுத்துக்குவாங்களே அப்படி எடுத்துக் கொண்டே இருந்தார்கள். பாறையின் மீது படுத்துக் கொண்டு, தவம் செய்வது போல் உட்கார்ந்து கொண்டு இருவர் கை கோர்த்துக் கொண்டு என்று வித விதமான போஸ்களில். அப்பப்ப சமூக வலைத்தளங்களில் பிஸி போஸ்டிங்க்!  

எனக்குத்தான் கவலை மொபைல் உப்புத் தண்ணியும் காத்தும் பட்டு காத்துகறுப்பு பட்டுடாதோன்னு! உப்புத் தண்ணின்றதுனால நோ திருஷ்டியோ!!!!

தூரத்தில் தெரிகிறது பாருங்க டால்ஃபின் முனை....கூடவே துறைமுகம் போன்று தெரிகிறது.

கடற்கரைக்கு வந்ததுமே இந்தப் பாறைக் குவியலைப் பார்த்து  கொஞ்சம் க்ளிக்ஸ்.  அதுதான் மேலேயும். அருகில் சென்று  ஸ்தூபி போலத் தெரிவதை விடுவமா? போயாச்சு. அதில் ஏதோ எழுதியிருந்தது. தெளிவாக இல்லை. அங்கு ஒரு ஃபோட்டோ ஷூட். கடலையும், கரையோரம் ஒதுங்கும் அலைகளையும், அலைகள் வருடிச் செல்லும் அழகான நிற மணலையும். தூரத்தில் தெரியும் டால்ஃபின் முனையையும்.

இந்தப் பெரிய குழா இங்கு மட்டும் தான் அலைகள் மணலை அரித்துச் சென்றிட.....இந்தக் குழாய் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை.

இந்த ஸ்தூபியில் ஒரு காக்கை வந்து அமர்ந்து தன்னந்தனியே ஒரு கச்சேரி ஆலாபனை செய்து கொண்டிருந்தது. சென்ற பதிவில் போட்டிருந்தேன் படம். கடல் அலையின் சத்தம் தான் ரிதம். யாருமே இல்லாத கடலைப் பார்த்துக் கொண்டு எதற்கு இப்படி ஒரு கச்சேரி? என்னாச்சோ திடீர்னு ஒரு துக்கடாவை சோகத்தில் கரைந்தது. பாவம் அப்படி ஒரு தீனக் குரல்!  

என் மூன்றாவது விழியைச் சுழற்றினேன். 

பக்கத்துப் பாறைல இன்னொரு காகம்.  ஆ எனக்கு விஷயம் புரிஞ்சு போச்சு. அது இதோட தோழனோ தோழியோ?  ஊடலோ? இந்தக் காகம் அந்தக் காகத்தின் ராகத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்துட்டு பார்க்காத மாதிரி கடலையே வெறித்துக் பார்த்துக் கொண்டிருந்தது

ராகம் பாடிய காகம் பறந்து வந்து இதன் அருகில் அமரவும்  முகத்தை இடப்பக்கம் திருப்பிக் கொண்டது.  கச்சேரி செய்த காகத்திற்கும் கோபம் போலும் அதுவும் இந்தப் பக்கம் திரும்பிக் கொண்டது.  

அது பறக்கும் என்று மனதில் தோன்றியது. எனக்கு டக்கென்று மூளையில் பளிச். ரொம்ப நாட்களாகவே பறப்பதை ஃபோட்டோ எடுக்க வேண்டும் என்று, உடன கன்டினுவஸ் ஷாட் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து வைத்துக் கொண்டேன். என் அனுமானம் சரி. கரைந்த காகம் 'சரி நான் போறேன் நீ பேச மாட்டேங்கற' என்று பறக்க யத்தனித்த போது க்ளிக்கத் தொடங்கினேன்

உடனே கோபத்தில் இருந்த காகமும் பறக்கத் தொடங்கியது.  


சுழற்றி அவை எங்கே செல்கின்றன என்பதையும் அகப்படுத்தலாம் என்றால் எங்கள் குழுவில் அனைவரும் நடந்து சற்று தூரத்தில் சென்றிருந்தனர் எனவே க்ளிக் பட்டனிலிருந்து கையை எடுத்துவிட்டேன். எனவே இது வரை மட்டுமே

சரி தூரத்தில் தெரிந்த டால்ஃபின் முனையையும் டக் டக் என்று சில ஷாட்ஸ் எடுத்துக் கொண்டு விட்டேன்.

இந்த டால்ஃபின் முனை மலை மேல் அழகான சுற்றுலா தலம்தான். 'அட பாரடா எனும் அழகான யாரடா (Yarada) பீச்' அருகில், துறைமுகம், அங்கிருக்கும் லைட் ஹவுஸ் என்று என் பட்டியல். இந்த இடம் ஆர் கே பீச்சிலிருந்து 18 கிமீ. படத்தில் தெரியும் பாருங்க இங்கிருந்து கிட்டேதான். ஆனால் நேர் வழி இல்லை என்பதால் சுற்றித்தான் செல்ல வேண்டும்.   

ஆர்கே கடற்கரையிலேயே பார்ப்பதற்கு ஐ என் எஸ் குர்சுரா நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகம் இருக்கிறது. ஆனால் அது 2 மணிக்கு மேல்தான் பார்க்க அனுமதி. எதிரில் விமானங்கள் காட்சியகம் இருக்கிறது. எதிர்ப்புறத்தில் காளி கோயில் பக்கத்தில் மத்ஸ்ய தர்ஷினி எனும் மீன் காட்சியகம் இருக்கிறது. 

அதற்கு முன் கடற்கரையின் எதிரே இருந்த காஃபி டே யில் காஃபி குடிக்கலாம் என்று சென்றோம். அப்படிச் சென்ற போது கடற்கரையில் இருக்கும் குழந்தைகள் பூங்கா வழி சென்றதால் அதையும் சில கிளிக்ஸ். புதிய மேம்படுத்தல் பணி வேறு நடந்துகொண்டிருந்தது.

என்னை பயமுறுத்திய இரு சிலைகள்!!!!


பூங்கா என்றால் பூ இல்லாமலா! ஆனால் பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன


எல்லோரும் சூடாகக் காஃபி என்றிட நான் சர்க்கரை சேர்க்காத குளிர்ந்த காஃபி, கணவருக்கு இரு மடங்கு சர்க்கரை சேர்த்த குளிர்ந்த காஃபி என்று குடித்துக் கொண்டே அடுத்து எங்கு செல்லலாம் என்று கேட்டார்கள். மணி 10 தான் ஆகியிருந்தது.

மேலே சொன்ன இடங்களைப் பற்றிச் சொல்லி டால்ஃபின் முனை, யாராடா பீச் எல்லாம் சென்று விட்டுத் திரும்பினால் நீர்மூழ்கிக் கப்பல் காட்சியகம் திறக்கும் நேரம் சரியாக இருக்கும் என்று நான் சொல்லிக் கொண்டே வர பட்டியலில் இருந்த மற்றொரு இடம் அவர்களில் கண்களில் பட்டுவிட.... மெஜாரிட்டி வின்ஸ்! அந்த மெஜாரிட்டி வின்ஸ் இடம் எது என்று அடுத்த பதிவில்! 

அதுவரை ஆர் கே கடற்கரையையும் அலைகளையும் ரசித்துக் கொண்டிருங்கள்!

(கடற்கரை க்ளிக்ஸ் இன்னும் இருக்கின்றன. எல்லாம் தொகுத்து படங்களின் காணொளியாகப் போட வேண்டும் அப்புறம். காணொளிகளும் ஓரிரண்டு இருக்கின்றன அதுவும்.)


-------கீதா

33 கருத்துகள்:

  1. தெரிந்துதான் எழுதி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...  கவிதை பாடும் அலைகள் என்று ஒரு படம் இருக்கிறது, அலைகள் ஓய்வதில்லை என்று ஒரு படம் இருக்கிறது!  இருங்கள் கவிதை எழுத வைக்கும் என்று சொல்லி என் பெயரைச் சொல்லி இருக்கிறீர்கள்...    ஒன்று முயற்சிக்கிறேன்! 1/5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் கவிதை பாடும் அலைகள்னு படமா? தெரியாது ஸ்ரீராம் அலைகள் ஓய்வதில்லை தெரியும்.

      //கவிதை எழுத வைக்கும் என்று சொல்லி என் பெயரைச் சொல்லி இருக்கிறீர்கள்... ஒன்று முயற்சிக்கிறேன்! 1/5//

      ஹாஹாஹா ஸ்ரீராம் உங்கள் கவிதையைத் தேடினேன் நீங்கள் கடல் அலைகள் பற்றி எழுதியிருந்த கவிதை எல்லாம் இருந்தது. சொன்னேனே ஒரு ஃபோல்டர் மட்டும்தான் இருக்கு இன்னொன்று ரிப்பேரான பென் ட்ரைவ் இல்லைனா ஹார்ட் டிஸ்க்ல இருக்கு.

      உங்கள் கவிதை வந்திருக்கிறதே !! ஜெசி எண்ணா ஒரு எதிர்க்கவிதை எழுதுவார்!!! என்று நினைக்கிறேன்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  2. காலைத் தழுவி 

    சரணடைவது போல நடித்து 

    ஆளை இழுத்து 

    மூழ்க வைக்கும் 

    பாசக் கடல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூப்பர் ஸ்ரீராம். செம கற்பனை. ரசித்தேன். டக்குனு வந்துருச்சு பாருங்க!!!

      ஹூ ம் நமக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. ஒருகாலத்துல இருந்ததும் இப்ப போச்சு..போயே போச்

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. //ஆளை இழுத்து
       மூழ்க வைக்கும் 
      பாசக் கடல்!//

      கூட இருந்து குழி பறித்தாலும் 
      கொடுத்தது காத்து நிற்கும் 
      செய்த தர்மம் தலை காக்கும்
      தக்க சமயத்தில் உயிர் காக்கும்


      Jayakumar

      நீக்கு
    3. ஆஹா ஜெகேசி அண்ணா கலக்கறீங்க போங்க!!! எசப்பாட்டு பாடி....

      ரசித்தேன்

      கீதா

      நீக்கு
  3. புதைய புதைய கடற்கரை மணலில் நடைபபயிற்சி செய்தால் ஆடுகால் சதை வலி பின்னி எடுத்து விடாதோ! 3/5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹ இல்லை ஸ்ரீராம் அது பார்க்கப் போனால் நல்ல உடற்பயிற்சி. கால் வலிக்கும் சரி தொப்பை குறையவும்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  4. பாறைகள் முன்னதாகவே இருந்தால் ஒருகாலத்தில் அந்த இடங்களையும் கடல் மூடி இருந்தது என்று பொருளோ? 4/5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம் ஸ்ரீராம். பாறைகள் குவிந்திருக்கும்தான் கடற்கரையில். பெரிதாக....ஆனால் சின்ன சின்ன கற்களாக இருக்கும் பாருங்க அதுதான் இங்கு...கடல் தண்ணி மறைத்திருந்தால் அந்தனால் இந்தக் கடலில் ஒரு சில இடங்களில் மட்டும்தான் நீந்த முடியும் என்றும் சொன்னார்கள்..

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா..

      நீக்கு
  5. படங்கள் யாவுமே சூப்பர்.  காக்கைகள் ஊடலும், கோபப் பறத்தலும் அருமையாய் படங்கள் ஆகி இருக்கின்றன.  பயமுறுத்தும் இரு சிலைகளும் அழகு. 5/5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காக்கைகள் படம் கண்டினுவஸ் ஆப்ஷன் தேர்ந்தெடுத்து படம் பிடித்தேன் இதுதான் முதல் முறை அப்படிக் கற்றுக் கொண்டது இந்த ஆப்ஷனை.

      படங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  6. படங்கள் அனைத்தும் ரசிக்க வைத்தன... அதன் விளக்கங்கள் அபாரம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களையும் பதிவையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி டிடி

      கீதா

      நீக்கு
  7. படங்கள் அனைத்தும் அருமை கீதா. காகம் பறப்பது சூப்பர் கிளிக்.
    //காக்கைகள் படம் கண்டினுவஸ் ஆப்ஷன் தேர்ந்தெடுத்து படம் பிடித்தேன் இதுதான் முதல் முறை அப்படிக் கற்றுக் கொண்டது இந்த ஆப்ஷனை.//

    கற்றல் தொடரட்டும். அருமையான இறக்கை விரித்து பறக்கும் காகம்.

    //உடனே கோபத்தில் இருந்த காகமும் பறக்கத் தொடங்கியது. //

    அருமையான படம்.

    .//நீட்டி முழக்காதே மேலே சொல்லு என்று நீங்கள் சொல்வதற்குள் தொடங்கிவிட்டேன்.//

    நாணல் படத்தில் ஒரு பாட்டில் "ராகம் பாடாதே பதிலை சொல்லு "என்று வரும்
    அந்த பாடல் நினைவுக்கு வந்தது.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா படங்களை ரசித்தமைக்கு.

      //கற்றல் தொடரட்டும். அருமையான இறக்கை விரித்து பறக்கும் காகம்.//

      மிக்க நன்றி கோமதிக்கா

      //நாணல் படத்தில் ஒரு பாட்டில் "ராகம் பாடாதே பதிலை சொல்லு "என்று வரும்
      அந்த பாடல் நினைவுக்கு வந்தது.//

      ஓ இந்தப் பாட்டு தெரியலையே கோமதிக்கா ...கேட்கிறேன்.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா


      நீக்கு
    2. விண்ணுக்கு மேலாடை


      https://www.youtube.com/watch?v=Zwsu2MA-GEQ

      நீக்கு
    3. "விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்" என்று ஆரம்பிக்கும்

      நீக்கு
    4. ஓஹோ கேட்கிறேன்.....மிக்க நன்றி கோமதிக்கா அண்ட் ஸ்ரீராம்...

      இன்றிலிருந்து 11 ஆம் தேதி வரை பிசி. இருந்தாலும் இடையிடையே இணையம் வருவேன்...

      கீதா

      நீக்கு
  8. அலைகள் உயர்ந்து ஆளை மறைக்கும் படங்கள் எல்லாம் அழகு கடற்கரை படங்கள் எல்லாம் அழகு. குழந்தைகள் பூங்கா படங்களும் நன்றாக இருக்கிறது.
    சிரிக்கும் குழந்தை அதிகப்படியான போஷாக்கு .
    அலைகளை ரசித்தோம். அடுத்து வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாப் படங்களையும் ரசித்ததற்கு மிக்க நன்றி கோமதிக்கா

      ஆமாம் அக்குழந்தை நல்ல போஷாக்கு...

      அலைகளை ரசித்தமைக்கு மிக்க நன்றி வாருங்கள் கோமதிக்கா

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  9. படங்கள் அழகாக  வந்துள்ளன. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு. காக்கை படம் ஜோர். போய் வா கடல்  அலையே என்று ஆரம்பித்து பாடித் திரிந்த பறவைகள் பறந்து செல்கின்றோம் என்று பாடி அசத்தியுள்ளீர்கள்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜெசி அண்ணா படங்களை ரசித்தமைக்கு. குறிப்பாகக் காக்கை படங்களை.

      //போய் வா கடல் அலையே என்று ஆரம்பித்து பாடித் திரிந்த பறவைகள் பறந்து செல்கின்றோம் என்று பாடி அசத்தியுள்ளீர்கள்.//

      ஹாஹாஹாஹா மிக்க நன்றி அண்ணா

      கீதா

      நீக்கு
  10. படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது.

    பறவை பறக்கும் படங்கள் சிறப்பாக இருக்கிறது.

    பயமுறுத்தும் சிலை அழகாக பயமுறுத்துகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி எல்லாப் படங்களையும், காகம் படங்களையும் பயமுறுத்தும் சிலைகளையும் ரசித்தமைக்கு !!

      //பயமுறுத்தும் சிலை அழகாக பயமுறுத்துகிறது.//

      ஹாஹாஹாஹா ரசித்தேன் கில்லர்ஜி இந்த வரியை

      கீதா

      நீக்கு
  11. ஆர்ப்பரிக்கும் அலைகள் அற்புதம்.

    கொந்தளிக்கும் அந்த அலைகளின் மத்தியில் அந்த ஸ்தூபியை எப்படி கட்டி முடித்தார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை கட்டிமுடிக்கும்வரை சுற்றிலும் அலைகளிலிருந்து பாதுகாக்க பாதுகாப்பு அரண் அமைத்திருப்பார்கள் போலும்.

    அப்புறம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் எல்லாம் அற்புதம். நல்லவேளை... இந்த கடற்கரை ஆந்திராவில் இருப்பதால் அழகான சிலைகளுடன் தப்பித்தது. இதுவே சென்னையில் இருப்பதாக கற்பனை செய்துபாருங்கள். இந்நேரம் ஊழலில் ஊறித் திழைத்த அரசியல் வியாதிகளின் சமாதிகளால் நிறைந்து போயிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த ஸ்தூபி என்ன்னான்னு தெரியலை நாஞ்சில் சிவா. எதற்காக என்றும் தெரியவில்லை. இருக்கலாம் நீங்கள் சொல்வது போல் பாதுகாப்பு அரண் வைத்திருந்திருக்கலாம். ஆனால் இப்போது அங்கு அலைகள் வந்து அந்த இடத்தில் மோதுவது என்பது இதன் கீழே உள்ள பாறைப் பகுதிகளில்தான்.

      இரண்டாவது பாரா// ஹாஹாஹாஹ் சிரித்துவிட்டேன் சிவா. உண்மைதான்...

      மிக்க நன்றி நாஞ்சில் சிவா

      கீதா

      நீக்கு
  12. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. கடற்கரை படங்கள் அனைத்தும் அழகோ அழகு. பார்க்கப் பார்க்க பரவசமாக இருக்கிறது. நேரில் பார்க்கும் போது எப்படி மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என உணர முடிகிறது.

    காகங்களின் உரையாடல்கள் உங்கள் கற்பனையில் மிக அற்புதம். அதன் படங்கள் உரையாடல்களை வைத்து ஒரு திரைப்படமாகவே ரசித்தேன்.

    பூங்காவின் பூக்கள் அழகு. குழந்தைகள் விளையாடுமிடத்தில் எதற்கு அந்த பயமுறுத்தும் சிலைகள்?சற்று அடங்காத குழந்தைகளை அடக்கி வைக்கவோ? அடுத்துப் சென்றவிடங்களை காண ஆவலோடு நானும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களையும், காக்கைகளின் உரையாடல்களையும் ரசித்து அதுவும் திரப்படமாகவே பார்த்து ரசித்தமைக்கு மிக்க நன்றி கமலாக்கா

      ஹாஹாஹாஹா அடங்காத குழந்தைகளுக்க்காக அந்த பயமுறுத்தும் சிலைகள்!!!! ..அடுத்து சென்ற இடங்கள் வரும் கமலாக்கா...ஆனால் தாமதமாகத்தான் வரும் என்று நினைக்கிறேன்.

      மிக்க நன்றி கமலாக்கா உங்கள் விரிவான கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  13. அருமையான சுத்தமான கடற்கரை என நினைச்சு முடியறதுக்குள்ளே குப்பைகள் கண்களில் பட்டன. நம் நாட்டில் என்னதான் கத்தினாலும் சுத்தமெல்லாம் தேடிப் பார்க்கிறது ரொம்பக் கஷ்டம்! பொது இடங்களைக் கழிப்பறையாக மாற்றும் மக்கள் மாறுவதற்கே வாய்ப்பில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாக்கா நானும் முதலில் பார்த்ததும். ஆஹா என்ன அழகான கடற்கரை...என்ன சுத்தம் என்று நினைத்தேன். ஆனால் சென்னை கடற்கரையை ஒப்பிட்டால் இது எவ்வளவோ சுத்தம்தான்.

      நம்ம மக்களை என்ன சொல்ல....ஸ்ரீராம் சொல்லியிருந்தார் நம் உடைமை என்று ....இந்திய தேசிய சின்னம் என்பது போல் இதை தேசிய அடையாளம் என்று சொல்லிவிடலாம்னு நினைக்கிறேன்!!!

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  14. படங்கள், சண்டையிட்டுப் பறந்த காக்கைகள், குழந்தைகள் பூங்கா எனஎல்லாமும் அழகு.

    பதிலளிநீக்கு