வெள்ளி, 28 ஜனவரி, 2022

திருநெல்வேலி - நாகர்கோவில் - (பொய்கை அணை) - 5

 பெங்களூர் – நாகர்கோவில்  (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 10

திருநெல்வேலி - நாகர்கோவில் - 1

திருநெல்வேலி - நாகர்கோவில் - 2

திருநெல்வேலி - நாகர்கோவில் - 3

திருநெல்வேலி - நாகர்கோவில் - 4

//இப்போது ஆரல்வாய்மொழி மலைகளைப் பார்த்துக் கொண்டிருங்கள். அதற்கு அப்புறம் நாகர்கோவில் ஸ்டேஷன் வரை உள்ள பகுதிகள் அடுத்த பதிவில். // என்று முடித்திருந்தேன். இங்கிருந்து அடுத்து நாகர்கோவில் ஸ்டேஷன்தான். எனவே ஒரு தகவலுடன் இப்பகுதி. 

ஆரல்வாமொழிப் பகுதியில் உள்ள செண்பகராமன்புதூர் கிராமத்தில் பெரிய குளம் உண்டு. செண்பகராமன்புதூர் குளம். அதே போன்று தோவாளைப் பகுதியிலும் ஆரல்வாய்மொழியிலும் பெரிய குளங்கள் உண்டு. 

நான் முன்பே சொன்னது போல் இந்தப் பகுதி முழுவதும் எங்கள் ஊர் உட்பட அடுத்தடுத்து கிராமங்கள் குளங்கள் வாய்க்கால்கள் ஆறுகள் வயல்கள் மலைகள் என்று (Cluster of Villages - க்ளஸ்டர்-வில்லேஜஸ்) ஒன்றுக்கொன்று தொடர்புடைய வளம் மிக்கப் பகுதி. விவசாயப்பகுதி. நாஞ்சில்நாடு.

என் திருமணத்தின் பின் ஊரை விட்டு வந்த பின் நான் தெரிந்து கொண்ட விஷயம். செண்பகராமன்புதூர் கிராமத்தின் (எங்கள் ஊரிலிருந்து 5.5 கிமீ தொலைவு) மரப்பாலம் பகுதியில், ஆரல்வாய்மொழி மலைப்பகுதியின் வடக்குமலை அடிவாரத்தில் மழைநீர்ப்பிடிப்புப் பகுதி என்பதால் அணை கட்டப்பட்டிருக்கும் விஷயம். ஆரல்வாய்மொழிலியிலிருந்து நெடுமங்காடு (திருவனந்தபுரம் புறநகர் பகுதி மலைப்பகுதி) செல்லும் நெடுஞ்சாலையில் அருகில்தான் பொய்கை அணை2000 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.  அணையின் பெயர் பொய்கை அணை.

பொய்கை அணை - My Kanyakumari is on Facebook.   என்று இந்த அழகான பொய்கை அணைப் படத்தப் பதிவு செய்திருந்த நண்பருக்கு  நன்றி

இந்த அணையை நான் பார்த்ததில்லை. எனவே இம்முறை இதைச் சென்று பார்க்க நினைத்திருந்த போதுதான் தொடர்ந்து கன மழை, ஊருக்குள் தண்ணீர் என்று செல்ல முடியாமல் போன இடங்கள் பட்டியலில் இதுவும் ஒன்று. இல்லை என்றால் க்ளிக்கித் தள்ளியிருக்க மாட்டேனோ உங்களுக்கு என் கைப்படக் காட்ட!!!!!

பொய்கை! -நல்ல பொருத்தமான பெயர்தான் - இயற்கை நீர்நிலைகள், குளங்கள் - கன்னியாகுமரி மாவட்டமே பொய்கைகள் நிறைந்த 'பொய்கை மாவட்டம்'தான். 

ஊரில் இம்முறை தண்ணீர் புகுந்த போது இந்தப் பொய்கை அணை பற்றித்தான் அதிகம் பேசினார்கள். இந்த அணையில் நீர் நிரம்பியதே இல்லை என்றும் இந்த முறை திறந்துவிடும் அளவிற்கு நிரம்பியிருக்கிறது என்றும் சொல்லிக் கொண்டதில் தெரிந்த விஷயங்கள் கீழே.

இரண்டு மதகுகள் கொண்ட அணையாம். ஆற்றிற்கான மதகு, கால்வாய்க்கான மதகு. அணையில் கொஞ்சம் நீர்மட்டம் உயரும் போது இதன் வழியாகத்தான் முதலில் ஆற்றின் மதகு திறந்துவிடப்படும், மேலே சொல்லப்பட்ட குளங்கள் எல்லாம் நிறைந்து சுற்றியுள்ள ஏகப்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் (அவர்கள் சொன்ன ஏக்கர் அளவு மறந்துவிட்டது ஹிஹிஹிஹி) அதற்கும் மேலே உயர்ந்தால் கால்வாய் மதகு திறந்துவிடப்படும் என்றும் அதன் வழி சுற்றியுள்ள பகுதிகளின் பாசனவசதி பூர்த்தியாகுமாம்.

ஆனால், இந்த அணைக்கு நீர் கொண்டுவரும் சிற்றாறுகள், நீரோடைகள், நீர்ப் பகுதிகள் பராமரிக்கப்படாததால் எவ்வளவு மழை பெய்தாலும் வந்து சேர்ந்ததில்லை என்றும் அதனால் பாசனம் செய்ய ரொம்பக் கஷ்டமாக இருந்ததாம். 

மழை எவ்வளவு பெய்தாலும், பெரிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி எல்லாம் நிறைந்து திறந்துவிடப்பட்ட போதிலும் கூட பொய்கை அணை நிரம்பியதே இல்லையாம்.

பாசன வசதி இல்லாததால் விளைநிலங்கள் எல்லாம் காற்றாலைகளாகவும், வீடுகளாகவும் மாறிட விவசாயிகள் அனைவரும் தங்கள் குறைகளை முன்வைத்திருந்திருக்கிறார்கள். இது 4, 5 வருடங்கள் முன்பு. 

பொய்கை அணை சமீபத்திய மழையில் நிறைந்து மறுகால் பாய்ந்த படம் - நன்றி தி ஹிந்து
“Even though copious rain in the district contributed to the dam reaching its capacity, renovation works carried out in Chunganodai and Irappaiyar ensured that the water reached the dam,” explained A. Vasanthi, PWD Executive Engineer, who has additional in-charge-of Kodayar river basin.

அதன் பின் பராமரிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. நல்ல விஷயம். அதிகாரிகளுக்கும் பணி செய்தவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைச் சொல்லிக் கொள்வோம். 

21 ஆண்டுகளில் இம்முறை பெய்த கனமழையால் அணை திறந்துவிடப்பட வேண்டிய அளவு நிரம்பியிருக்கிறது அதனால் தோவாளை, செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி குளங்கள் உடைந்து நீர் ஊருக்குள் எல்லாம் புகுந்தது பற்றி முன்னரே சொல்லிவிட்டேன்.

இதற்கும் முன்பு சொன்ன அதே காரணத்தைதான் வயல்கள், தோப்புகள் வைத்திருக்கும் நபர் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டார். கன்னியாகுமரி ரியல் எஸ்டேட் குறித்து அவர் சொன்ன ஒரு விஷயம் வேறொரு சமயத்தில் சொல்கிறேன். இப்போது நாகர்கோவில் நோக்கி. 

ஆரல்வாய்மொழியிலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் வழியில் (ஒரு 15 நிமிடம் தான்) கீழே உள்ள படங்களைப் பார்த்தாலே தெரியும் உங்களுக்கு, மலைகள் வயல்கள் குளங்கள் நிறைந்த பகுதி என்று. 3 தான் இங்கு. இவற்றோடு மற்றவற்றின் தொகுப்பு சிறிய ஸ்லைட் ஷோவாகக் கீழே.



ஊருக்குள்ள வந்தாச்சு! பழையாறு. அடுத்து ரயில்நிலையம் 

முதல் பதிவில் போட்ட படமோ என்றால்...ஆமாம்...இல்லை!!!!  படத்தின் அடுத்த கட்டப் படம் இது. ரயில் நிலையத்தின் உள் செல்லும் முன். நீல வண்ணத்தில் சிறியதாக ஒரு கூரை தெரிகிறதா? அதுதான்....

நாகர்கோவில் ஸ்டேஷன் வந்தாச்சு. ஊரிலிருந்து நண்பரின் ஆட்டோவில் ஸ்டேஷனுக்கு அப்பாவை வரச்சொல்லியிருந்ததால் அப்பா ஸ்டேஷனுக்கு வெளியே காத்திருந்தார்.  நண்பரை நலம்விசாரித்து பேசியபின்...

எலக்ட்ரிக் குக்கர், அதற்கான பொருட்கள், தங்கை வீட்டிற்கான பொருட்கள் அடங்கிய பையைக் கொடுத்து வீட்டில் வைத்துக் கொள்ளச் சொல்லி அவரிடம் ஒப்படைத்து விட்டு, என் ஒரே பையுடன் கடம்போடுவாழ்வு சித்திப்பாட்டி குடும்பத்திற்கான  (திங்க) பொருட்களையும் எடுத்துக் கொண்டேன்.  

யுடர்ன்! ரயிலில் வந்த அதே வழியிலேயேதான் மீண்டும் ஆனால் சாலை வழிப் பயணம் ஏர்வாடி வரை என்பதால் கடம்போடுவாழ்வு செல்ல பேருந்து ஏற வேண்டி வடசேரி பேருந்து நிலையத்திற்கு நானும் அப்பாவும் அதே ஆட்டோவில் பயணம். அப்பா நான் காலை உணவு சாப்பிட்டேனா என்று கேட்க, விடுவேனா!!!? பூரி கிழங்கை!!!! கையில் மிளகாய்ப்பொடி தடவிய 2 இட்லி இருந்தாலும் - அதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்! 

நண்பா, போற வழில ஏதாவது நல்ல ஹோட்டல் (சைவ) இப்ப வந்திருக்கா? இருந்துச்சுனா நிறுத்த முடியுமா? "இல்ல. இப்பம் வடசேரி பஸ் ஸ்டாண்டுக்கு போகோம்லா அங்கின உள்ள ஆரியபவன் இருக்கில்லா அங்கன விடுகேன்" 

நான் ரசித்த அழகான இடங்களை, பகுதிகளை உங்களுக்கும் காட்டிச் சொல்லலாமே என்றுதான் ஆர்வத்தில் தொடங்கினேன். மீண்டும் பயணம் செய்வோம் என்று முடிக்க நினைத்தேன். ஆனால் அதற்கு முன், பயணப் பதிவு தொடர்ந்து வருவதால் உங்களில் பலருக்கும் போரடித்திருக்குமோ என்று தோன்றுகிறது.  தொடர்ந்து எழுத வேண்டுமா என்றும் தோன்றுகிறது. 

எனக்கு எழுதவும் தெரியவில்லை என்பதும் காரணம். வேறு பதிவுகள் இருக்கின்றன ஆனால் எதுவும் இன்னும் சரியாக முடிக்கப்படாமல் இருப்பதால் இப்படி. உங்களின் கருத்தை இங்கு வெளிப்படையாகச் சொல்லலாம். 

எனவே, வடசேரி பேருந்து நிலையம் போகும் இடைவெளியில் (அதன் பின் தொடரவேண்டுமா என்று யோசிப்பதால்.) அடுத்து வேறு பதிவுகள் வரலாம்.

https://youtu.be/WMEUB4Ls9Ho


------கீதா



29 கருத்துகள்:

  1. படங்களின் பசுமை காட்சிகள் மிகவும் அழகாக இருக்கிறது.

    நேரம் கிடைக்கும் பொழுது மீண்டும் தொடர்ந்து எழுதுங்கள்...

    பதிலளிநீக்கு
  2. படங்களும் படங்களின் தொகுப்பு காணொளியும் மிக அருமை.
    தோவாளையில் உறவினர்கள் இருக்கிறார்கள்.

    இயற்கை காட்சிகள் பார்த்து கொண்டே இருக்கலாம்.ரசித்துப்பார்த்த இடங்களை பதிவாக்கியது நல்லதுதான்.
    தொடருங்கள் பதிவுகளை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோவாளையில் உறவினர்கள் இருக்கிறார்கள்.//

      அட! கோமதிக்கா, தோவாளையிலும் உறவினர்கள் இருக்கிறார்களா!!! அட அப்ப தென்னகத்தில் எல்லா இடங்களிலும் உங்கள் உறவினர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள்!!

      மிக்க நன்றி கோமதிக்கா கருத்திற்கு

      கீதா


      நீக்கு
  3. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. நீங்கள் கடைசியில் கேட்டதற்கு பதில் முதலிலேயே சொல்கிறேன். நீங்கள் நன்றாக,அதுவும் மிகவும் நன்றாக இந்த பயண கட்டுரையை எழுதி வருகிறீர்கள். உங்கள் அருமையான எழுத்துக்கள் அடங்கிய விவரிப்புகள், அழகான படங்கள் எல்லாம் உங்களுடனேயே எங்களையும் பயணத்தில் அழைத்துச் செல்கிற மாதிரிதான் நான் உணர்கிறேன். அதனால் உங்களுக்கு நேரம் இருக்கும் போது. தயக்கமின்றி மேற்படி (வடசேரி பயணமா?) பயணக்கட்டுரையை தொடர்ந்து எழுதுங்கள்.பார்த்துப் படித்து ரசிக்க நாங்கள் காத்திருக்கிறோம்.மற்ற பதிவுகளையும் படிக்க ஆவலாக உள்ளேன். அத்துடன் இந்தப் பயணம் குறித்த பதிவுகளையும் தொடருங்கள்.

    பசுமை நிரம்பிய படங்கள் அழகாக உள்ளது. பொய்கை அணை நிரம்பிய படங்கள். வயல்கள் மலைகள் என இயற்கையாய் காட்சிதரும் அத்தனைப் படங்களும் கண்களுக்கு குளிர்ச்சி. இந்தப் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் கேள்விபட்டுள்ளேன்.ஆனால், பொய்கை அணை இதுவரை கேள்விப்பட்டதில்லை. கீழே அத்தனைப் படங்களையும் தொகுத்து காணொளி கீதத்துடன் நன்றாக இருக்கிறது நாகர் கோவில் வந்ததும், இறுதியில் எடுத்த ரயில் படம் அருமை. முதலில் பயணம் ஆரம்பிக்கும் போதும் இதேப் போல் அழகாக ரயில் வளையும் கோணத்தில் எடுத்தப் படத்தைப் பகிர்ந்திருந்தீர்கள். தங்களுடனான பயணத்தை நானும் அனுபவித்து உணர்ந்தாற்ப்போல இருக்கிறது பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. அடுத்த பயணப் பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால் உங்களுக்கு நேரம் இருக்கும் போது. தயக்கமின்றி மேற்படி (வடசேரி பயணமா?) பயணக்கட்டுரையை தொடர்ந்து எழுதுங்கள்.பார்த்துப் படித்து ரசிக்க நாங்கள் காத்திருக்கிறோம்.//

      நேரம் என்பதை விட...அதை எப்படியாவது சமாளித்துவிடலாம்...வாசிப்பவர்களுக்குப் போரடிக்காமல் இருக்க வேண்டுமே என்பதுதான்...பார்க்கிறேன் கமலாக்கா நன்றி அக்கா.

      வடசேரி பேருந்து நிலையம் தான். அங்கிருந்து பேருந்து ஏறி கடம்போடுவாழ்வு எனும் கிராமத்திற்கான பயணம் பற்றிய தொடர் தான்.

      //இந்தப் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் கேள்விபட்டுள்ளேன்.ஆனால், பொய்கை அணை இதுவரை கேள்விப்பட்டதில்லை.//

      பொய்கை புதியதாகக் கட்டப்பட்டது கமலாக்கா 20 ஆண்டுகளுக்கு முன்புதான். நானும் பார்த்ததில்லை அவ்வளவு அறிந்ததில்லை. இப்போதுதான் எனக்கும் தெரிந்தது.

      மிக்க நன்றி கமலாக்கா விரிவான கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  4. படங்கள் நன்றாகத்தான் உள்ளன. ஸ்லைடு ஷோவும் அப்படியே.

    மேட்டர் தான் போத வில்லை.

    கடம்போடுவாழ்வு என்பதை விளக்கியிருக்கலாம்.


    கடம் செய்யும் ஊரா? கடம் போடு வாழ்வு. கடத்தை செய்து வாழ். 

    கடம் போடு வாழ்வு. கடன் போடு வாழ்வு. விவசாயக் கடன் வாங்கு. தள்ளுபடி பெறு. வாழ். 

    கடம்ப வாழ்வு. கடம்பையோடு வாழ். மலையாளத்தில் கடம்ப என்றால் கடமை. 

    எல்லாம் ஒரு கலாய்த்தல் தான். 

    ராமநாதபுரம் மாவட்டம் ஒரு காய்ந்த ஊராயிற்றே. எப்படிப்பட்ட போட்டோக்கள் பதிப்பீர்கள் என்று காத்திருக்கிறேன். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் நன்றாகத்தான் உள்ளன. ஸ்லைடு ஷோவும் அப்படியே.

      மிக்க நன்றி ஜெகே அண்ணா.

      மேட்டர் தான் போத வில்லை.//

      ஹாஹாஹா அண்ணா இந்தப் பதிவுக்கு பொய்கை அணை பற்றி மட்டும்தான். அதன் தகவல் நான் ஊரில் அறிந்ததை சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் இப்பதிவில் இந்தப் பகுதி மட்டும்தானே இப்பத்தானே நாகர்கோவில் வந்து சேர்ந்திருக்கு!!!!

      கடம்போடுவாழ்வு என்பதை விளக்கியிருக்கலாம்.//

      இந்த ஊர் ராமநாதபுரம் ஏர்வாடி பக்கம் அல்ல. வள்ளியூருக்கு அடுத்து ஏருவாடி இருக்கே அந்த ஊர். பசுமையான ஊர். கடம்போடுவாழ்வு பற்றி தனி பதிவுகள் என்பதால் இதில் எதுவும் சொல்லவில்லை.

      உங்கள் கலாய்த்தலை வாசித்துச் சிரித்துவிட்டேன்!

      மிக்க நன்றி அண்ணா.

      கீதா

      நீக்கு
  5. எத்தனை அழகான இடங்கள். பார்க்கும்போதே மனதை கவர்கின்றன. இங்கே எல்லாம் சென்று நேரடியாக பார்க்க ரசிக்க என்று வாய்ப்பு அமையப்போகிறதோ..... இப்போதைக்கு உங்கள் பதிவுகள் வழி பார்த்துக் கொள்கிறேன். தொடரட்டும் பயணங்களும் பதிவுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்ஜி உங்களுக்குக் கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் விரும்பும் இடங்கள்தான் எல்லாமே ஆமாம் மனதைக் கவரும் இடங்கள்.

      நான் நீங்கள் எழுதிய நான் சென்றிராத பகுதிகளைப் பற்றி வாசிக்கும் போது எனக்கும் இப்படித் தோன்றியது எப்போது நேரடியாக ரசிக்க வாய்ப்பு கிடைக்குமோ என்று.

      மிக்க நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு
  6. கீதா! பயணம் ரொம்பவும் இனிமையாக இருக்கிறது. நானும் உங்களுடன் ஆரல்வாய்மொழி மலைப்பகுதிக்கெல்லாம் சென்று அத்தனை செய்திகளையும் மனதில் ஏற்றிக்கொண்டு, இப்போது வடசேரி வரை வந்து விட்டேன். இப்போது என்ன திடீரென்று ரயிலிலிருந்து இறங்க நினைக்கிறீர்கள்?
    போரெல்லாம் அடிக்கவில்லை! உண்மையில் இனிமையாக இருக்கிறது. முக்கியமாக இதுவரை அறியாத தகவல்களையெல்லாம் தந்து கொண்டிருக்கிறீர்கள்! தொடருங்கள். நானும் ப‌யணிக்கிறேன் உங்களுடன்!

    2 வருடங்களுக்கு முன் திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரி சென்று திரும்பும்போது நாகர்கோவில் வழியாக திரும்பினோம். பயணம் கண்ணுக்குக்குளிர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் மலைப்பகுதி வழியாகவெல்லாம் வரவில்லையே? இப்போது நீங்கள் இருப்பது திருநெல்வேலியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா! பயணம் ரொம்பவும் இனிமையாக இருக்கிறது. நானும் உங்களுடன் ஆரல்வாய்மொழி மலைப்பகுதிக்கெல்லாம் சென்று அத்தனை செய்திகளையும் மனதில் ஏற்றிக்கொண்டு, இப்போது வடசேரி வரை வந்து விட்டேன். இப்போது என்ன திடீரென்று ரயிலிலிருந்து இறங்க நினைக்கிறீர்கள்?//

      ஹாஹாஹாஹா மனோ அக்கா இறங்கியாச்சு இனி பேருந்துப் பயணம்!!!! இல்லை வாசிப்பவர்களுக்குப் போரடிக்குமோ என்றுதான்...வேறு ஒன்றுமில்லை.

      //முக்கியமாக இதுவரை அறியாத தகவல்களையெல்லாம் தந்து கொண்டிருக்கிறீர்கள்! தொடருங்கள். நானும் ப‌யணிக்கிறேன் உங்களுடன்!//

      அக்கா இதுதான் முக்கியக் காரணம் நான் இடங்களைப் பற்றி எழுதுவதற்கு. செல்ல நினைப்பவர்கள் செல்லலாமே என்று. அதுவும் யாரும் அத்தனை அறிந்திராத இடங்களாக.

      பதிந்தும் வைத்தால் யாரேனும் பார்க்க நினைப்பவர்கள் பார்க்கலாமே என்று.

      மலைப்பகுதி வழியாகவெல்லாம் வரவில்லையே?//

      அக்கா மலைப்பகுதி வழியாக இல்லை. மலைகளை சாலை வழி சென்றாலும், ரயில் தடத்திலும் பார்க்கலாம். குளங்கள் கூட....ஆனால் இப்போதைய நாலுவழிச்சாலை சென்றால் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. நான் அப்படிப் பயணித்ததில்லை.

      மனோ அக்கா நான் இப்போது இருப்பது பெங்களூரில்

      மிக்க நன்றி மனோ அக்கா

      கீதா

      நீக்கு
  7. மிக அழகான இடங்கள். இன்று வரை நம் அரசியல்வியாதிகள் கண்களில் படாமல் தப்பிப் பிழைத்திருக்கிறதே! அதுவே ஆச்சரியம் தான். உங்கள் பயணம் தொடரட்டும். நாகர்கோயில் போய் 3 நாட்கள் தங்கியும் இப்படி எல்லாம் தெரியாமல் போச்சு. :( இனி பயணங்கள் அமைவது கொஞ்சம் சிரமமான காரியம். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று வரை நம் அரசியல்வியாதிகள் கண்களில் படாமல் தப்பிப் பிழைத்திருக்கிறதே! அதுவே ஆச்சரியம் தான். //

      ஹாஹஹ்ஹாஹாஹா கீதாக்கா கரெக்டா சொன்னீங்க!!!! இப்படியே இருந்திடட்டும்னும் தோன்றியது.

      அக்கா எனக்குமே பொய்கை அணை பற்றிய மேலதிகத்தகவல்கள் இப்போதுதான் ஊரில் தண்ணீர் வந்ததால் தெரிந்தது. இதை பயணத்தின் போது பார்க்க முடியாது. உள்ளடங்கி இருக்கிறது. நான் அறிந்த தகவலை இங்கு கொடுத்ததன் காரணம் ஆர்வமுள்ளவர்கள் அங்கு செல்லும் போது பார்க்கலாமே என்றுதான்.

      //( இனி பயணங்கள் அமைவது கொஞ்சம் சிரமமான காரியம். :(//

      புரிகிறது கீதாக்கா

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  8. நீங்கள் சொல்லும் செண்பகராமன்புதூர் ஊர் என்பது எம்டன் செண்பகராம்மனோடு தொடர்பு உடையதா என்று தெரியவில்லை.  ஒருவேளை அவர் பிறந்த ஊரோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ஸ்ரீராம். அவர் தமிழர்தான் ஆனால் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானம் இல்லையா...அவர் அப்பா அதில் பணிபுரிந்ததால்.

      அவர்தானே ஜெய் ஹிந்த் என்பதை உருவாக்கியவர் இல்லையா அப்படித்தான் நினைவு

      திருவந்தபுரத்தில் இருந்த போது இவரைப்பற்றிய தகவல்கள் அறிந்தேன். அதைப் பற்றி தனியாக எழுதுகிறேன் ஸ்ரீராம். குறிப்புகள் அடங்கிய நோட்புக் பப்படமாக இருக்கு!!!!! ஒரு பதிவிற்கு ஐடியா கொடுத்துவிட்டீர்கள்!!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  9. பொய்கை அணை ... செய்தித்தாளில் கூட எனக்கு பார்த்த நினைவு இல்லை!! படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொய்கை அணை ... செய்தித்தாளில் கூட எனக்கு பார்த்த நினைவு இல்லை!! //

      ஹாஹாஹாஹாஹா....எனக்கும். அணை புதுசா கட்டியிருக்காங்க என்பது மட்டுமே தெரியும். மற்றபடி எதுவும் தெரியாது. ஆனால் கன்னியாகுமரியில் இம்முறை தண்ணீர் வெள்ளம் வந்ததால் கொஞ்சம் கூடுதலாகத் தெரிய வந்துள்ளது. அப்படித் தெரிந்துகொண்டதைத்தான் எழுதிவிட்டு நான் சென்று பார்க்க நினைத்த இடம் ஆனால் பார்க்க முடியாமல் போனதால் இணையத்தில் தேடிய போதுகிடைத்த படம்...அதைப் ப்பொட்டேன். அழகான ரம்மியமான இடம் என்று தெரிகிறது அங்க இருக்கறவங்க சுற்றுலா போவாங்க போல வீடியோக்களும் இருக்கு. ஆனால் ஒழுங்கா எடுத்தவங்க ரொம்பம் கம்மி!!!!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  10. பயணத்தோடு பல்வேறு விவரங்களும் சொல்லி வருகிறீர்கள்.  தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் இப்படிப் பதிஞ்சாதானே உண்டு. இல்லை என்றால் நான் எழுதுவது ஹிஹிஹிஹி...

      எங்கள் ஊரைப் பற்றி பதிய வேண்டும் என்ற ஒரு முனைப்பில்தான். ஆனால் இன்னும் நான் அத்தனை அறிந்திராத, சென்றிராத பகுதிகள் நிறையவே உள்ளன ஸ்ரீராம். இணையத்தில் தெரிகிறது. எஃப் பி யில் கூட கன்னியாகுமரி பத்தி மக்கள் படம் எல்லாம் போடறாங்க போல. நாம ப்ளாகில் பதிந்துவிடுவோமே என்றுதான்..

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  11. புகைவண்டியிலிருந்து எடுத்த படம் அட்டகாசம்...

    பதிலளிநீக்கு
  12. ஆரல்வாய்மொழியில் "சித்தர்கிரிமலை" என்னும் ஒரு உயரமான மலைக்கோவில் உள்ளது. அங்கு அண்மையில் சுற்றுலா சென்றபோது மலைமீதிருந்து இந்த "பொய்கை" அணையை பார்த்திருக்கிறேன். மலையின் மீதிருந்து பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சி தந்தது. அருகில் சென்று பார்க்கும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் தங்கள் பதிவுமூலம் அருகில் சென்று பார்ப்பதுபோன்ற ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளீர்கள்... நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நாஞ்சில் சகோ அங்கு "சித்தர்கிரிமலை கோயில் இருப்பது தெரியும். தென்பழனி முருகன், வெள்ளிக்கிழமை மட்டுமே திறந்திருக்கும் அதுவும் காலை மூன்று மணி நேரம் மட்டுமெ. போகும் வழி ரொம்பவே க்ரடுமுரடான பாதை. இங்கு நான் அதைப் பற்றிக் குறிப்பிடவில்லை. பதிவு நீண்டு கொண்டே போவதால்....நான் சென்றது இல்லை. ட்ரெக்கின் போக ஆசை இருந்தது ஆனால் தனியாகச் செல்ல முடியாது என்பதால் இந்த முறை இது என் பட்டியலிலும் இல்லை.

      நீங்கள் போய் வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

      மிக்க நன்றி நாஞ்சில் சிவா சகோ

      கீதா

      நீக்கு
  13. அன்பின் கீதாமா,
    நலமுடன் இருங்கள்.

    இத்தனை அழகாகச் சொல்லிப் பசுமையாக மலைகளும் குளங்கள், அணை என்று
    பதிந்து விட்டு இன்னும் எழுத என்ன இருக்கு என்று தயங்குவது எதற்காக?

    நாங்கள் எல்லோரும் வீட்டைவிட்டு வெளிவரமுடியாமல் இருக்கிறது.
    உங்களைப் போன்றவர்கள்
    பகிர்ந்து கொண்டால் தான் தெரியும்.
    அதனால நிறைய எழுதுங்கள்.
    உங்களால் முடியும்.

    பொய்கை அணை அருமையாக இருக்கிறது. அதற்கு
    வரும் நீர்வாய்க்கால்களைச் சுத்தம்
    செய்து வைத்தால் எல்லோருக்கும் பயன்.
    மக்கள் மனம் மாறிப் பாதுகாக்கட்டும்.

    அருமையான படங்களுக்கு நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இத்தனை அழகாகச் சொல்லிப் பசுமையாக மலைகளும் குளங்கள், அணை என்று
      பதிந்து விட்டு இன்னும் எழுத என்ன இருக்கு என்று தயங்குவது எதற்காக?//

      இல்லை இதே பதிவுகளாக இருப்பதால் அப்ப்டித் தோன்றியது அம்மா
      '
      //நாங்கள் எல்லோரும் வீட்டைவிட்டு வெளிவரமுடியாமல் இருக்கிறது.
      உங்களைப் போன்றவர்கள்
      பகிர்ந்து கொண்டால் தான் தெரியும்.//

      நான் பதிய நினைக்கும் காரணமும் அதுதான் செல்ல முடியவில்லை என்றாலும் படங்கள், பதிவுகள் மூலம் காணலாமே என்றுதான்...

      ஆமாம் பொய்கை அணை இந்த முறை நிரம்பிவிட்டது. எப்போதும் அது நிரம்பி நீர்ப்பாசனத்திற்கு உதவியாக இருக்க வேண்டும்

      //அதனால நிறைய எழுதுங்கள்.
      உங்களால் முடியும்.//

      மிக்க நன்றி வல்லிம்மா

      கீதா

      நீக்கு
  14. அதுவும் அந்த ரயிலும் ஸ்டேஷனும் மனதைப் பிட்த்துக் கொண்டுவிட்டது. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  15. ரசனையான படங்கள். பசுமையான பகுதிகளைக் கொண்ட சில படங்களைப் பார்த்தபோது தஞ்சைப்பகுதி நினைவிற்கு வந்தது.

    பதிலளிநீக்கு