திங்கள், 3 ஜனவரி, 2022

திருநெல்வேலி - நாகர்கோவில் - 1

 

பெங்களூர் – நாகர்கோவில்  (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 6

பயணப் பதிவை கடைசியிலிருந்து தொடங்கியிருந்தேன்.  தண்ணீர் வந்தது பற்றிய பதிவுகள் முடிந்த நிலையில் இனி பயணம் பற்றியும், என் பிரிய சகி, என்னோடு எப்போதும் பயணிக்கும் என் மூன்றாவது விழி வழியே சேமித்த காட்சிகளோடு சில குறிப்புகளுடன் தொடர். (விசாகப்பட்டினம் பற்றி இன்னும் எழுதவில்லை!! ஹிஹிஹி! அதுவும் எழுதிவிடுவேன் படங்களைத் தொகுத்ததும்)

சமீபத்தில் மேற்கொண்ட பயணத்தை சுற்றுப் பயணம் என்று சொல்வதற்கில்லை. தனிப்பட்ட ஒரு முக்கியமான பயணம். எனவே அதற்கான திட்டமே மனதில் இருந்தது. அப்பாவின் 87 வயதான சித்தியும் அவரது இரு பெண்களும் சேர்ந்து வசிக்கும் கடம்போடுவாழ்வு கிராமம், (அவர்கள் அப்பாவை தீபாவளிக்கு அழைத்திருந்ததால்) அங்கிருந்து நாகர்கோவில் வழி திருவனந்தபுரம் (என் தங்கை) அங்கிருந்து நாகர்கோவில்- திருவண்பரிசாரம். 

நான் புறப்பட்ட சமயம் தீபாவளிக்கு முன். கோவிட் பயண விதிமுறைகளே இருந்ததால்  நாகர்கோவிலில் இருந்து திருவனந்தப்புரம் செல்ல பேருந்துகள் இல்லை என்பதோடு ரயிலிலும் கூட  - ரயிலில் 1 ½ - 2 மணிநேரப் பயணமே என்றாலும் - முன்பதிவு செய்ய வேண்டுமாக இருந்தது. உட்கார்ந்து செல்லும் பெட்டிகள் என்று ரயிலின் முன் பகுதியில் ஒரு பெட்டியும், பின் பகுதியில் ஒரு பெட்டியும். 

முன்பதிவு இல்லாத பெட்டிகள் கிடையாது. பயணிகள் ரயிலும் இல்லை. எனவே சென்று திரும்புவதற்கு முன் பதிவும் செய்தாயிற்று. நான் திருவனந்தபுரம் சென்ற மறு தினத்திலிருந்து முன்பதிவு இல்லாத பெட்டிகளும் இணைக்கப்பட்டன என்றாலும் முன்பதிவு செய்து சென்றது வசதியாக இருந்தது. தள்ளுமுள்ளு இல்லாமல், நம் இருக்கை நமக்கு. இத்தடத்தில் ரயிலில் பயணிப்பதுதான் எனக்கு விருப்பம்.

ரயில் பயணம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் ஜன்னலோர இருக்கை கிடைத்துவிட்டால் – கூடியவரை அப்படித்தான் பதிவு செய்வது வழக்கம் - மனம் மிகவும் மகிழும். பேருந்துப்  பயணம் என்றாலும் அதேதான். எப்படியான பயணம் என்றாலும் ஜன்னலோர இருக்கை என்றால் மூன்றாவது விழியையும் தயாராக வைத்துக் கொண்டுவிடுவேன்! இதிலும் அப்படியே.

பயணக் காதலியான எனக்கு, ஊர் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு அவ்வளவாகக் கிடைக்காது என்பதால், அனுமதியும், வாய்ப்பும் கிடைத்த இப்பயணத்தை அப்படியே விட்டுவிடுமா மனம்? இப்பயணத்தின் இடையிலேனும் என் சில விருப்பங்களை செயல்படுத்திக் கொண்டால் என்ன என்று மனம் கணக்கிட்டது.  புயல் பற்றியோ, மழை எச்சரிக்கை பற்றியோ சற்றும் நினைத்துப் பார்க்கவில்லை. பயண மகிழ்ச்சி அதை எல்லாம் மறைத்துவிட்டது! (ஏதேனும் சொலவடை உங்கள் நினைவுக்கு வந்தால்….ஹாஹாஹாஹா!!)

99% தனியான பயணம்தான்.  இதுவும் அப்படியே. மொத்தம் 25 நாட்கள். பெரும்பாலும் பொதுப்போக்குவரத்துதான் என்பதால், ஊர்ப்பகுதியில் எந்தெந்த இடங்கள் நான் (தனியாக) செல்ல முடியும், (அதுவும் கோவிட் சமயத்தில்) கையடக்கச் செலவில், இப்பயணத்தின் நோக்கத்திற்குப் பங்கம் வராமல் போகமுடியும் என்று மனம் கணக்கிட்டது. செல்ல முடிந்த இடங்கள், செல்ல முடியாமல் போன இடங்கள் எல்லாம் இடையிடையே சொல்கிறேன்.

பங்களூரிலிருந்து நாகர்கோவிலுக்கான ரயில்கள் பலவும் ரத்து செய்யப்பட்டிருந்ததால், மாலை  5 மணிக்குக் கிளம்பி மறுநாள் காலை 8.15ற்கு நாகர்கோவிலை சென்றடையும் ரயிலில் முன்பதிவு.

ஜன்னலோர இருக்கை. மகிழ்ச்சி. ஆனால் மூன்றாவது விழியைத் திறக்க முடியவில்லை. வெளிச்சம் குறைவானதாலும், என் கேமராவிற்கு இரவு பிடிப்பதில்லை என்பதாலும்.

எதிர் சீட்டில் கண்டோன்மென்டில் ஏறிய ஒரு குடும்பம் வீட்டையே கொண்டுவந்திருந்தார்கள். அத்தனையையும் சீட் அடியில், மேலே கீழே என்று வைக்கப் படாத பாடுபட்டார்கள்.

எனக்கு அடுத்தாற்போல் ஒரு பெண்மணியும் அவரது மகனும். மகனுக்கு 15 வயதிருக்கலாம்.  ஆனால் ரொம்பவே விளையாட்டுப் பிள்ளையாக இருந்தார். செல்லமும் போல!! அப்பெண்மணி மகனிடம் அவ்வப்போது சிரித்துக் கொண்டே ஏதோ சொல்லிக் கொண்டே வந்தார். அவர்களது சுமைகள் வெளிநாட்டுப் பயணத்தில் எடுத்துச் செல்லும் செக்கின் பெட்டி போல பெரிய பெட்டி ஒன்றும், இரு பெரிய பைகளும். எல்லாம் இருக்கையின் அடியில் கஷ்டப்பட்டுத் தள்ளப்பட்டது.

எனது லக்கேஜ் - மடிக்கணினி மற்றும் என் உடைமைகளுடன் ஆன ஒரு முதுகுப் பை என் மடியில். ஊரில் 15 நாட்கள் தங்கும் திட்டம் என்பதாலும், சாப்பாட்டுச் செலவு தாங்காது என்பதாலும், ஒரு ரைஸ்குக்கர், புளிக்காச்சல், ஓரிரு பொடி வகைகள், எனக்கான தலையணைகள், (போகும் இடத்தில் தலையணை என் உபாதைக்குச் சரியாக இருக்குமா எனத் தெரியாததால்) பெட்ஷீட் கொண்ட ஒரு பை இருக்கையின் அடியில். 

எதிர் சீட்டுப் பயணிகள் செய்த அட்ராசிட்டியில் எங்கள் சுமைகள் அட்ஜஸ்ட் செய்யப்பட்டு அமர்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. பக்கவாட்டு இருக்கையில் கணவன் மனைவி, 2 வயதிற்குள்ளான ஆண் குழந்தை. நான் இருந்த இருக்கையின் கடைசியில் ஒரு பெண்ணும் அவரது பெண் குழந்தையும். அதுவும் 2 வயதிற்குள். சிரித்துக்கொண்டே இருந்தது. சுட்டி!

இதற்குள் சைட் இருக்கை ஆண் குழந்தை அழத் தொடங்கியது. குழந்தையைப் பார்த்துக் கொள்ள அதன் அம்மாவுக்குப் பொறுமை இல்லை. அடித்து அதன் கையில் மொபைலைக் கொடுத்து தன் கடமையைத் தவிர்த்துக் கொண்டிருந்தார்.

குழந்தை அப்பாவை நாட, அவர் அந்த மொபைலை மெதுவாக வாங்கி அம்மாவிடம் கொடுத்துவிட்டுக் குழந்தையுடன் விளையாடத் தொடங்கினார். குழந்தை சிரிக்கத் தொடங்கியது. ஒரு வேளை அந்தப் பெண்ணிற்கு ஏதேனும்  உடம்பு அசௌகரியமோ தெரியவில்லை. மொபைல் அவரை ஆட்கொண்டது!

என் அருகில் இருந்த பெண்மணி தமிழா? நான் எந்த மொழியில் தொடங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போதே, அவர் திவேலி என்பதும் ஆசிரியை என்பதும் அவர் தன் மடிக்கணினியைத் திறந்ததும் தெரிந்தது. அதுவும் என்னைப் பாடாய்ப்படுத்திய சப்ஜெக்ட் இயற்பியலில் ஆசிரியை! நான் கொஞ்சம் தள்ளி அமர்ந்தேன்!!!!!! அவருக்கு நெட் சரியாகக் கிடைக்கவில்லை. சுற்றிக் கொண்டே இருந்தது.

எங்கள் இருக்கையில் இருந்த பெண் சுட்டியும் அந்த பக்கவாட்டு இருக்கை ஆண் குழந்தையும் விளையாடத் தொடங்கிட நடப்போரும், ரயில் கேண்டீன்காரர்களும் கஷ்டப்பட்டார்கள். பெற்றோர் கண்டுகொள்ளவில்லை. இரண்டும் ஒரே ஓட்டம். அங்குமிங்கும். ரயிலின் ஆட்டத்தில் கீழே விழுந்தன. அழுகை. சாப்பாடு நேரம் தொடங்கியது.

பெண் குழந்தைக்கு அம்மா ஊட்டிட, ஆண் குழந்தை தன் அம்மாவிடம் சாப்பிடக் கொஞ்சம்  படுத்திட, அவருக்கு ஊட்டவும் பொறுமை இல்லை. மிகப் பொறுமையுடன் அதை தாஜா பண்ணி அப்பாதான் சாப்பாடு ஊட்டினார்.

பெண் குழந்தை அதன் அம்மாவிடம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், அந்த ஆண்குழந்தையின் அப்பா, தன் குழந்தையின் சாப்பாட்டை இந்தப் பெண் குழந்தைக்கும் கொடுத்து இரு குழந்தைகளுக்கும் அவரே ஊட்டினார். என்னதான் குழந்தைகள் என்றாலும், ஒரு குழந்தையின் எச்சில் மற்றொரு குழந்தைக்கு நல்லதில்லை. இரு பெற்றோரும் கண்டு கொள்ளவே இல்லை.

இரு குடும்பத்திற்கும் குழந்தைகளால் ஏற்பட்ட ரயில் சினேகிதம் தான்! 8 மணி அளவில் குழந்தைகள் சாப்பிட்டு முடித்ததும் தூங்க வைத்துவிட்டார்கள். சைட் மேல் பெர்த்தில் அப்பாவும் குழந்தையும். கீழே அம்மா ஃப்ரீயாக!!! அம்மா முழுவதுமே ஃப்ரீதான்.

எதிர் இருக்கை தட்டுமுட்டு சாமான் பயணிகள் சாப்பாடு மூட்டையை அவிழ்க்கத் தொடங்கினார்கள். ஆசிரியை ரயில்வே காட்டரிங் ஊழியரிடம் சப்பாத்தி, சிக்கன் குருமா ஆர்டர் செய்தார். என் ஊண் கடமையும் முடிந்தது!

ஆசிரியைக்கு இணையம் கிடைத்திட, மாணவர்களின் தேர்வு விடைகளைத் திருத்தத் தொடங்கினார். வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்ததில் அவ்வப்போது ஆசிரியையின் கணினியில் என் கண் ஓடிட, அந்தச் செயலி மிகவும் சுவாரசியமாக இருந்ததால், அவரது அனுமதியுடன் பார்க்கத் தொடங்கினேன். திருநெல்வேலியின் பிரபலமான கிறித்தவப் பள்ளி. 9 ஆம் வகுப்பு இயற்பியல் தேர்வு விடைகள். முதல் 4 மாணவர்களின் விடைகள் அனைத்தும் டிக் டிக் டிக்!! ஆ!! நான் இன்னும் கொஞ்சம் தள்ளி அமர நினைத்தேன்!!

அவருக்குக் கொஞ்சம் வசதியாக இருக்கட்டும் என்று, பக்கவாட்டில் இருந்த மேஜையை உயர்த்திவிட்டு அதில் கணினியை வைத்துக் கொண்டு திருத்தச் சொன்னேன். அவருக்கும் மகிழ்ச்சியாகிவிட இடம் மாறிக் கொண்டோம். 9 மணிக்குள் பெட்டி முழுவதுமே லைட் ஆஃப்! திருநெல்வேலிப் பெட்டிகள் பெரும்பாலும் அப்படித்தான்!

அதிகாலையில் கண் விழித்த போது பெண்குழந்தையையும் அம்மாவையும் காணவில்லை! மதுரை என்று தெரிந்தது. 5.30க்கு  திருநெல்வேலிக்குச் சென்று விட்டது ரயில். ஆசிரியை, எதிர் இருக்கை மக்கள் இறங்கிட நானும், அந்த ஆண்  குழந்தையும் அதன் பெற்றோர் மட்டுமே. ஹப்பா ஃப்ரீ!

திருநெல்வேலி-நாகர்கோவில் தடம் மிகவும் அழகான கண் கொள்ளாக்காட்சிகள் நிறைந்த தடம். என் மூன்றாவது விழியைத் தயாராக வைத்துக் கொண்டேன்.

திருநெல்வேலியில் கொஞ்ச நேரம் நிற்கும். எனவே நீங்களும் என்னோடு ஏறத் தயாராகுங்கள்! காட்சிகளைப் பார்த்துக் கொண்டே பயணத்தைத் தொடர்வோம்!



 

------கீதா

47 கருத்துகள்:

  1. ரயிலிலிருந்து எடுக்கப் பட்டிருக்கும் அந்த முதல் படம் அழகு, அற்புதம். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நாகர்கோவில் ஸ்டேஷனை சமீபிக்கும் சமயம். இன்னொரு படம் இருக்கு இன்னும் கொஞ்சம் தள்ளி...எஞ்ஜின் ஸ்டேஷன் என்ட்ரி...அதுவும் கிட்டத்தட்ட இதே போலத்தான்..

      எனக்கு ரயில் வளைந்து செல்வதை எடுப்பது ரொம்பப் பிடிக்கும்.

      கீதா

      நீக்கு
  2. ரயில் பயணங்களில் வித்தியாசமான மனிதர்களை சந்திக்கலாம். சமயங்களில் தனியாக பெட்டியில் பயணித்தால் தேவலாம் போலவும் தோன்றும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதே ஸ்ரீராம். தனியா போகவும் பிடிக்கும். ஏகாந்தமா இருக்கும்!!! வித்தியாசமான மனிதர்களைச் சந்திப்பது பார்ப்பது கதைகளுக்கு உதவும்!!!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  3. கணக்கு, இயற்பியல், வேதியியல்... எதுவாயிருந்தாலும் நான் தள்ளி அமர்ந்து விடுவேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா ஸ்ரீராம் ஹைஃபைவ்!!! வாங்க நாம ஒரு செட் தொடங்கிடலாம்!!

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  4. அருகில் அந்நியர்களிருக்க அங்கே உறங்குவது சற்றே கடினமான செயல் எனக்கு.  ஏனோ எனக்கு ரயிலைவிட பஸ் பயணமே பிடிக்கும் - வசதிக்குறைவு இருந்தாலும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நீங்க சொல்லியிருக்கீங்க உங்க பதிவுகளில். இந்த இரண்டு கருத்துமே.

      எனக்கு நிலம் கண்டால் கண் உறக்கம் என்பது போல, என் தூக்கத்திற்கு லைட், சத்தம் கூட்டம் எதுவுமே இதுவரை பிரச்சனையாக இருந்ததில்லை. மனதில் ஏதேனும் கதை அல்லது கற்பனை ஓடிக் கொண்டிருந்தால் மட்டும் தூக்கம் வராது. அதை அசை போட்டுக் கொண்டே இருக்கும். ரயில்ல ஜன்னல் இருக்கை கிடைத்தும் ஜன்னல் மூட வேண்டியதானது. வெளியில் வேடிக்கையும் பார்க்க வழியில்லாமல் போனது!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. ஏனோ எனக்கு ரயிலைவிட பஸ் பயணமே பிடிக்கும் //

      பேருந்து பயணம் பிடிக்கும்தான் ஸ்ரீராம் - பயணம் என்றாலே எனக்கு மிகவும் இனிக்கும்!!!!! எதுவாக இருந்தாலும் - பேருந்து ஜன்னல் முழுவதும் திறந்து இருக்க வேண்டும் எனக்கு!!!!! ஹாஹாஹா...இப்பல்லாம் ஜன்னல் பாதி மூடி சிலதில் திறக்கவே முடியாமல் போகிறது.

      ரயிலில் ஏசி பெட்டியில் பயணம் இல்லை என்றால் ஜன்னல் நன்றாகப் பார்க்கும்படி இருக்குமே அது எனக்கு மிகவும் பிடிக்கும். பேருந்தில் ஒரு பக்கம் மட்டும் தான் எடுக்க முடியும். ரயிலில் கூட்டம் அதிகம் இல்லை என்றால் இரு பக்கமும் எடுக்கலாம் என்ற ஒரு வசதி பிடிக்கும். பேருந்தில் கூட ரோடைப் பொருத்து அதன் ஆட்டம் இருக்கும்!!

      முக்கியமா எனக்கு வழித்தடம் நல்ல வழித்தடமாக இருந்தால் ஃபோட்டோ எடுக்க வசதி.!!!!! அதிலும் காட்சிகள் இருக்கும் பக்கம் ஜன்னலோர இருக்கை கிடைத்துவிட்டால் ஆஹா!!

      நாகர்கோவில் டு பங்களூர் வழியில் சேலம் தாண்டி தர்மபுரி-கிருஷ்ணகிரி ஹோஸூர் வரை செமையா இருக்கும். அதுவும் ரயில் போகும் திசையில் வலதுபுறம் அமைந்தால். கூட்டம் இல்லை என்றால் இடதுபுறமும் சில இடங்களில் நன்றாக இருக்கும். மாறி மாறி பார்க்கலாம்

      நாகர்கோவில் டு திருவனந்தபுரம் - ரயில் பயணம் இனிதாக இருக்கும்.

      கீதா

      நீக்கு
  5. உங்களுக்குப் பிடித்த ரயில் பயணம்... சுவாரஸ்யமாக ஆரம்பித்திருக்கிறது. பயணத்தில் நானும் கூடவே வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வெங்கட்ஜி ரொம்பப் பிடிக்கும். பேருந்துப் பயணத்தில் நல்ல பெரியவிரிந்த முழுவதும் திறந்த ஜன்னல் இருந்தால் பிடிக்கும். ஆனால் இப்போதெல்லாம் பேருந்துகளில் அது ஒரு மாதிரி ஜன்னல் கண்ணாடி பாதி மூடி என்று இருப்பதால் அது ஏனோ சுவாரசியமாக இருப்பதில்லை.

      நீங்களும் பயணக் காதலன் ஆச்சே...வாங்க வாங்க !!

      வெங்கட்ஜி உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது தென்னகம் ஒரு ரவுன்ட் அடிங்க உங்களுக்கும் பிடிக்கும் உங்கள் கேமராவுக்கும் ரொம்பப் பிடிக்கும்

      மிக்க நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு
  6. ஒர்த்தர் செய்யறதையும் விடாம நோட்டமிட்டு எழுதறீங்களே...

    உங்களை நம்பி யாரும் பயணிக்க முடியாது போல... இது ரிட்டர்ன் ஜெர்னியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா நெல்லை, பயணத்தில் வண்டி சத்தத்தில் யார் பேசுவதும் எனக்குக் காதில் விழாது. அதுவும் மெதுவாகப் பேசினால். நான் நோட்டமிடுவது கதைகளுக்கு உதவும். இது கொஞ்சம் தான் நெல்லை. நிறைய நோட்டமிடலை. டீச்சரின் தேர்வு திருத்தும் வேலை தான் பார்த்தேன் மெயினாக.

      ஆனால் பொதுவாக கேமராவைத் திறந்துவிட்டால் என் நோட்டம் ரொம்பக் குறைவாக இருக்கும் அதில்தான் கவனம் அதிகமாக இருக்கும் ரசித்து பார்த்து எடுப்பதால்...

      ரிட்டர்ன் ஜெர்னியா?//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்...பதிவை ஒழுங்கா பார்க்கலையா...தலைப்பு!! தின்னவேலி டு நாகர்கோவில்...பயணத் தொடக்கம்னு முதல்லிலேயே சொல்லியிருக்கிறேனே...இப்பத்தான் வண்டி பங்களூர்லருந்து தின்னவேலி வந்திருக்கு இனிதான் நாகர்கோவிலுக்குக் கிளம்பப் போகுது. கீதாக்காவுக்கு வாயில சர்க்கரை போடணும். அவங்க கரெக்ட்டா சொல்லுவாங்க இந்த நெல்லை பதிவை ஒழுங்கா வாசிக்கறதே இல்லைனு!!!! ஹாஹாஹா

      நெல்லை உங்களுக்கு ரொம்ப நன்றி சொல்ல வேண்டும்.. என்னைக் கலாய்த்து கருத்து போட்டு சுவாரசியமாக்குவதற்கு, சிரிக்க வைப்பதற்கும்!!

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. உங்களை படம் எடுக்கச் சொன்னால், படத்தின் இரண்டாம் பகுதியை முதல் பகுதியாகவும், முதல் பகுதியை இரண்டாம் பகுதியாகவும் எடுத்துவிடுவீர்கள் போலிருக்கு.

      ஊர் வெள்ளம்லாம் நிறைய எழுதிவிட்டதால் இது திரும்ப வரும் பயணம் என்று நினைத்தேன்.

      எனக்கு திருச்சியிலிருந்து நெல்லை, நாகர்கோவில் வரை பாசஞ்சரில் பகலில் பயணிக்க ஆசை. அந்த அந்த ஊரில் ஏதேனும் சாப்பிடலாம். திருநெல்வேலி ஜங்ஷனில் இரயிலில் கடலைமிட்டாய் விற்பார்கள். இந்த முறை கன்யாகுமரி பகவதி அம்மனை தரிசித்தேன்.

      நீக்கு
    3. உங்களை படம் எடுக்கச் சொன்னால், படத்தின் இரண்டாம் பகுதியை முதல் பகுதியாகவும், முதல் பகுதியை இரண்டாம் பகுதியாகவும் எடுத்துவிடுவீர்கள் போலிருக்கு.//

      ஹாஹாஹா ஹையோ நெல்லை சிரிச்சு முடிலைப்பா...

      எனக்கு திருச்சியிலிருந்து நெல்லை, நாகர்கோவில் வரை பாசஞ்சரில் பகலில் பயணிக்க ஆசை. //

      சூப்பர் நெல்லை ...ரொம்ப நல்லாருக்கும்.

      //அந்த அந்த ஊரில் ஏதேனும் சாப்பிடலாம்.//

      அதே அதே. இந்த வாட்டி போறப்ப திருநெல்வேலி ல பூரி கிடைச்சான்னு நினைத்தேன் ஆனால் வண்டி 5.30 மணிக்குப் போகும். சரி வரும் போது திருநெல்வேலில வாங்கலாம்னா வெளில வாங்க கொஞ்சம் பயம். என் தங்கை ஸ்டேஷன் வரேன் உனக்கு நல்ல இடத்துலருந்து பூரி கிழங்கு வாங்கிட்டு வரேன்னு சொன்னா. டைம் 8.40 க்கு வண்டி வரும் 20 நிமிஷம் நிக்கும். ஆனா அந்த டைம் சாப்பிட மாட்டேனே என்று யோசித்தாலும் தங்கை ஆசையைக் கிளப்பி விட்டதால் ஓகே சொல்லிவிட்டேன். கடைசில அன்று நல்ல மழை. மாலை வரை விடாது மழை. அதன் பின் மழை இல்லை என்றாலும் தண்ணீர் தேங்கியிருந்ததால் அவள் வர முடியலைன்னு சொல்ல...பூரி போச்!!

      //திருநெல்வேலி ஜங்ஷனில் இரயிலில் கடலைமிட்டாய் விற்பார்கள்.// ஆமா ஆனால் வந்த ரைமும் போன டைமும் சரியான டைம் இல்லை வெண்டர்ஸ் இல்லை. ஆனால் ப்ளாட்ஃபார்ம் ஸ்டாலில் வாங்கினேன்.

      //இந்த முறை கன்யாகுமரி பகவதி அம்மனை தரிசித்தேன்.//

      சூப்பர். திருப்பதி கோயில் கட்டியிருக்காங்களே அங்கு போகலையா?

      கீதா

      நீக்கு
    4. போவதற்காக யாத்திரைக்கு அழைத்துச் சென்றவர் கேட்டார். 4 கி.மீ தூரம் என்றதும் போகலை. ஆனால் நான் முன்பு அங்கு வேறு ஒரு பெரிய கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். அடுத்த தடவை இந்தக் கோவில் வாய்க்கலாம். (வள்ளியூரில் நெடுஞ்சாலையில் இருக்கும் உணவகத்தில்-சரஸ்வதி? உண்டுவிட்டு பிறகு எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்கணும்)

      நீக்கு
    5. ஓ கோயில் போக முடியலையா. நானும் போகவில்லை. நெல்லை, வள்ளியூர் ல எந்த நெடுஞ்சாலை சொல்றீங்க? ஸ்ரீநகர் டு கன்னியாகுமரி லேன் ரோடு சொல்றீங்களா இல்லை பழைய நெடுஞ்சாலை திருநெல்வேலி நெடுஞ்சாலை சொல்றீங்களா? ஏன்னா வள்ளியூர் பஸ்டான்ட் கிட்ட ஹோட்டல் சரவணபவன் இருக்கு. கொஞ்சம் தள்ளி சரவணபவன் இருக்கற ரைட் சைட்லயே நடந்தா இடது புறம் ராதாபுரம் ரோடு போகும் அது தாண்டினதும் கொஞ்சம் உள்ளடங்கி ஓம் சரஸ்வதி பவன் இருக்கு. ஆனால் நான் சாப்பிடடதில்லை. இதெல்லாம் புதுசா வந்தவை. முன்னாடி நான் இருந்தப்ப இருந்த வள்ளியூர் இல்லை இப்ப...

      அங்கருந்து திருக்குறுங்குடி 9.5 கிமீ தான். ஏர்வாடி போய்தான் அங்கிருந்து இடது பக்கம் திரும்ம்பணும் அங்கருந்து 5 கிமீ தான். திருக்குறுங்குடி. நாங்குனேரி கிட்டதான். வள்ளியூர் பஸ்டேன்ட் பின்பக்கம் வழியா போனா (இப்ப அந்த வழி அடைத்திருக்கறதைப் பார்த்தேன்) அங்கு ஒரு பெருமாள் கோயில் உண்டு. அந்தத் தெருவில்தான் நாங்கள் கோயில் கிட்டக்க இருந்தோம்.

      கீதா

      நீக்கு
  7. சூப்பர் பயண ஆரம்பம்.
    அப்படியே கூட வந்த மாதிரி இருக்கிறது. இந்த அந்த சீட் ,
    மொபைல் அம்மா, பண்பான அப்பா,
    படுத்தும் சமத்துக் குழந்தைகள், தி வேலி ஆசிரியை
    எல்லாமே மிகப் பிரமாதம். ஒரு கதையே நடக்கிறது.

    நல்ல வேளை நீங்கள் இவ்வளவு முன்னேற்பாடுடன்
    எல்லாவற்றையும் எடுத்துச் சென்றிருக்கிறீர்கள்!!

    தனிப்பயணம் சுவைதான். கையில் ஒரு புத்தகமு, ஜன்னலோர இருக்கையும்
    மிகக் கச்சிதம்.

    இனி அடுத்த பயணத்தைப் பார்க்கலாம்.

    மிக அருமையான பதிவு கீதாமா. நலமுடன் இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு கதையே நடக்கிறது.//

      ஆமாம் அம்மா, நிஜமாகவே கதைக்குத் தோதான விஷயங்கள்தான்.

      தனிப்பயணம் சுவைதான். கையில் ஒரு புத்தகமு, ஜன்னலோர இருக்கையும்
      மிகக் கச்சிதம்.//

      நல்ல குழு அமையவில்லை என்றால் எனக்குத் தனிப்பயணம் ரொம்பப் பிடிக்கும்.
      புத்தகம் நம் வீட்டில் கிடையாதே. அதுவும் எப்போதேனும் வார இதழ்கள்தான் ஏதேனும் ஓரிரண்டு வாங்குவது வழக்கம். அவையும் சுவாரசியமாக இல்லை. கதைகள் எல்லாம் கணினியில் தான் இருக்கிறது. எனவே வாசிக்க முடியாது. ஆனால் கேமராவுக்கு வேலை இருந்தால் எதுவுமே வேண்டாம்!!!

      அடுத்த பயணத்தில் படங்களோடு வரும்.

      மிக்க நன்றி அம்மா

      கீதா

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. நல்ல அழகான தமிழில் விவரணையுடன் கூடிய பதிவு. மிகவும் அழகாக எழுதியுள்ளீர்கள். தி.லி வழி என்பதினால் நானும் உங்களுடனேயே இங்கிருந்தே ஏறி விட்ட உணர்வுடன் சுவாரஸ்யமாக பயணம் செய்தேன். தி.லி வந்தும் இறங்காமல்,இறங்கும் கால்களை கட்டிப் போட்டபடி, இயற்கை வனப்புக்களைக் காண தங்கள் நாகர்கோவில் பயணத்துடன் இணைகிறேன்.

    நாம் எங்கு சென்றாலும்,அதிகம் லக்கேஜ்களை எடுத்துச் செல்லாவிடினும், சிலர் கொண்டு வருவதை பார்க்கும் போது ரொம்ப மலைப்பாக இருக்கும். அதுபோல், அவர்கள் கொண்டு வரும் சாப்பாடும் சிம்பிளாக இருக்காது. வீடு மாதிரியே நினைத்துக் கொண்டு சாப்பிடுவார்கள். ரயில் பெட்டியில் ஏறும் எலி, கரப்பானுக்கு மிகவும் கொண்டாட்டமாக இருக்கும்.

    நீங்கள் அந்த ஆசிரியைக்கு உதவி செய்தது நல்ல செயல். உங்கள் மூன்றாம் விழி வழியே இயற்கையின் பசுமைகளை, அதிசயங்களை காண ஆவலோடு இருக்கிறேன்.தொடர்கிறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல அழகான தமிழில் விவரணையுடன் கூடிய பதிவு. //

      ஆஆஆ கமலாக்காஆஆ நல்ல அழகான தமிழ்??!!!! இங்கு எழுதும் பலரின் தமிழை விடவா!!! பெண்களின் இயல்பான நாணமே வராத எனக்கு நாணம் வருதே!!!!!!!! ஹாஹாஹாஹா. என்றாலும்நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

      ஆமாம் வாங்கக்கா நீங்களும் திவேலி இப்ப பங்களூர் என் கூடவே வாங்க நாகர்கோவில்!

      //அவர்கள் கொண்டு வரும் சாப்பாடும் சிம்பிளாக இருக்காது. வீடு மாதிரியே நினைத்துக் கொண்டு சாப்பிடுவார்கள்.//

      ஆமாம் அதே ...எல்லாம் பரத்தி வைத்துக் கொண்டு சாப்பிடுவார்கள்.

      // ரயில் பெட்டியில் ஏறும் எலி, கரப்பானுக்கு மிகவும் கொண்டாட்டமாக இருக்கும்.//

      ஹாஹாஹா சிரித்துவிட்டேன்!! ரசித்தேன் கமலாக்கா....உண்மைதான்.

      //உங்கள் மூன்றாம் விழி வழியே இயற்கையின் பசுமைகளை, அதிசயங்களை காண ஆவலோடு இருக்கிறேன்.தொடர்கிறேன்//

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா


      நீக்கு
    2. 91ம் வருடம் சென்னயிலிருந்து மும்பை, இரயில் பிரயாணம். ஒரு மார்வாடிப் பெண், கடை பரப்பிச் சாப்பிட்டதைப் பார்த்து மலைத்துவிட்டேன் (30க்கும் மேல் ஐட்டங்கள், சின்ன சின்னக் கப்புகளில் நெய் முதல்கொண்டு).

      சிலர், சாப்பிடுவதற்காகவே இரயில் பிரயாணத்தில் வருவாங்களோ?

      நீக்கு
    3. ஹாஹாஹா அப்படித்தான் தோன்றுகிறது. நெல்லை, பலரும் இப்படிச் செய்வதைப் பார்த்திருக்கிறேன். நானும் புனே டு சென்னை க்கு வந்த போது காக்ரா, அதற்கான சட்னி பொடி, வித விதமான பொடிகள் கூடவே ஜவ்வரிசி வடை, ரொட்டி, அதற்கான சப்ஜி, கோலாப்பூரி மிசல் பாவ் - தனி தனியாகக் கொண்டு வந்து அதை சாப்பிடும் சமயத்தில் மிக்ஸ் செய்து என்று நானும் மலைத்துப் போனேன் எப்படி இத்தனை சாமான்கள் சுமக்கிறார்க்ள் என்று. ஒவ்வொன்றிற்கும் ஒரு பெரிய டப்பா. அதிலும் அந்தக் குடும்பத்தில் 15 பேர், சிறிய குழந்தைகள் வேறு!! இடம் போதவே இல்லை அவர்களுக்கு!!!!!! சாப்பிட சாமான் வைத்துக் கொண்டு!!

      கீதா

      நீக்கு
  9. முதல் படம் தேர்ந்த பயிற்சியுள்ள ஃபோட்டோ நிபுணரைத் தோற்கடித்து விடும். பதிவு கொஞ்சம் பெரிசு என்பதால் பின்னர் வந்து படிக்கிறேன். படத்தின் வண்ணக்கலவை அதி அற்புதம்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புகைப்படம் சூப்பர் என்பதில் சந்தேகமே இல்லை.

      ஆனால் எதுக்கு இந்த வேண்டாத வேலை இந்த கீதா ரங்கனுக்கு? ரிஸ்க் எடுத்து இதையெல்லாம் எதுக்கு எடுக்கணும்?

      நீக்கு
    2. ஹாஹாஹா நெல்லை..ரிஸ்கா? ரிஸ்க் எதுவும் இல்லை நெல்லை! கூடவே நடந்து போற ஸ்பீட்ல வண்டி போனது. ரிஸ்க் எடுக்கறது ரஸ்க் சாப்பிடுவது போலன்னு எல்லாம் நான் டயலாக் விட மாட்டேனாக்கும்!!! ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    3. இன்னொனு சொல்ல விட்டுப் போச்சு. வண்டி ரொம்ப ஸ்லோ....அந்தப் படம் இ கை கம்பியில். வ கை கேமரா. கிளிக்! கேமரா பாக்கெட் சைஸ் கேமரா வெயிட் லெஸ்.

      கீதா

      நீக்கு
  10. முதல் படம் தேர்ந்த பயிற்சியுள்ள ஃபோட்டோ நிபுணரைத் தோற்கடித்து விடும். //

    ஆ கீதாக்கா இப்பத்தான் மேலே கமலாக்காவின் கருத்திற்கு நாணிவிட்டு வந்தால் மீண்டும் இங்கு!!!

    ராமல்க்ஷ்மி, வெங்கட்ஜி, கோமதிக்கா இவங்கலாம் இருக்கறப்ப மீ ரொம்ப சாதாரணம் கீதாக்கா. என்றாலும் மிக்க நன்றி கீதாக்கா.

    மெதுவா வாங்க கீதாக்கா. பதிவில் நிறைய கட் செய்தும் கொஞ்சம் பெரிதாகிவிட்டதுதான். பல சமயங்களில் முடியவில்லை. அடுத்த பதிவை இரண்டு மூன்றாகத் தரப் பார்க்கிறேன். 1 1/2மணி நேரப் பயணத்தை!!!!!!! அதில் மனிதர்கள் பற்றி எதுவும் வராது முழுவதும் மலைகள், இயற்கை பற்றி.

    படத்தின் வண்ணக்கலவை அதி அற்புதம்,//

    மிக்க நன்றி கீதாக்கா. அதுவும் பயணத்தில் எடுக்கும் படங்களுக்கு எக்ஸ்போஷர் லெவல் மாற்றிக் கொண்டு இருக்க முடியாதே எனவே ஆட்டோ போட்டுவிட்டேன். நாகர்கோவில் ஸ்டேஷன் நெருங்குகிறது தெரிந்ததும் அங்கு ரயில் கொஞ்சம் வளையும் எனவே டக்கென்று கேமராவில் சில அட்ஜெஸ்ட்மென்ட்ஸ் செய்து எடுத்தேன். ஏனென்றால் சூரிய வெளிச்சம் சரியாக வர..

    மிக்க நன்றி கீதாக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  11. கீதா! புகைப்படம் ரொம்பவும் அழகு! நான் கூகிளிலிருந்து எடுத்தது என்று பின்னூட்டங்களைப்படிப்பதற்கு முன் நினைத்தேன்!
    எடுத்த எடுப்பிலேயே ரயில் பயணத்தின் சக பயணிகளைப்பற்றி அச்சு அசலாக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் கீதா! உயிர்த்துடிப்புடன் யணம் ஆரம்பமாயிருக்கிறது! நானும் உங்களுடன் பயணிப்பது போலவே இருக்கிறது!
    கடம்போடு வாழ்வு, திருவ‌ண் பரிசாரம்!! எத்தனை அழகான தமிழ்ப்பெயர்கள்! இந்த இடங்கள் எங்கிருக்கின்றன? ஏதேனும் கோவில் சம்பந்தப்பட்ட, சரித்திர சம்பந்தம் கொண்ட இடங்களா இவை?
    ஒரு எழுத்தாளருக்கு, புகைப்பட நிபுணருக்கு என் இனிய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ அக்கா.

      பாராட்டுமிக்க கருத்திற்கு மிக்க நன்றி முதலில்.

      படத்தில் பல சமயங்களில் சிறியதாகப் பெயர் போட மறந்துவிடுகிறது. இதையும் பெயர் போட்டு மாற்றிவிடுகிறேன்.

      திருவண்பரிசாரம், ஆமாம் அக்கா கோயில் சம்பந்தப்பட்ட ஊர். நம்மாழ்வாரின் அம்மா உடையநங்கை பிறந்த இடம் இப்போது பஜனைமடம் என்று நம்மாழ்வாரின் விக்ரகம் (கல்லில் செய்யப்பட்டது) வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது. எங்கள் ஊர் பற்றிய பதிவு வரும் போது அதைச் சொல்கிறேன் அக்கா. நான் பிறந்து வளர்ந்த ஊர். இது நாகர்கோவில் அருகில் 3 மைல் தொலைவில், திருநெல்வேலி செல்லும் நெடுஞ்சாலையில் இருந்து முக்கால் மைல் உள்ளே அமைந்திருக்கும் சிறு கிராமம். திவ்ய ஷேத்திரம் 108 திருப்பதிகளில் ஒன்று. மலைநாடு/குட்டநாட்டுத் திருப்பதிகளிலும் ஒன்றாகப் பட்டியலிடப்பட்ட திருத்தலம். ஆனால் கேரளத்துப் பூஜை முறைகள். முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கன்னியாகுமரி மாவட்டம் இருந்ததால்.

      கடம்போடுவாழ்வு கிராமம் திருநெல்வேலி மாவட்டதில், நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் நெடுஞ்சாலையில் ஏர்வாடியிலிருந்து பிரிந்து உள்ளே 6 கிமீ தொலைவில் களக்காடு ஃபாரஸ்ட் ரிசர்வ் மலைப்பகுதிகளைப் பின்புறத்தில் கொண்ட கிராமம். நீரும் வயலும் உடைய கிராமம். என் அப்பாவின் சித்தி அவர் பெண்கள் இருக்கும் ஊர். இதைப் பற்றியும் படங்களும் பதிவும் வரும் அதில் சொல்கிறேன் மனோ அக்கா.

      //ஒரு எழுத்தாளருக்கு, புகைப்பட நிபுணருக்கு என் இனிய வாழ்த்துக்கள்!//

      அக்கா என்னை ரொம்பவே மேலே தூக்கி வைத்துச்சொல்கிறீர்கள். நான் மிகவும் சாமானியமானவள். உங்களின் அன்பான கருத்திற்கு மிக்க நன்றி மனோ அக்கா

      கீதா

      நீக்கு
  12. சுவாரஸ்ய பயணம் கீதா அக்கா ...நானும் தொடர்கிறேன் ,...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனு மிக்க நன்றி. நீங்க எங்க ஊர் போனப்ப எடுத்துப் பகிர்ந்திருந்த படங்கள் இன்னும் நினைவில்
      இப்போது நானும் நேரில் சென்றதால் எடுத்திருக்கிறேன். எனவே பதிவும் வரும்.

      நன்றி அனு தொடர்வதற்கு. கொஞ்சம் மெதுவாகத்தான் பாசஞ்சர் ரயில் போலத்தான் என் பதிவுகள் வரும்!!! ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  13. ஆஹா!!.. சும்மா சொல்லக்கூடாது.. பயணக்கட்டுரையை அதற்கே உரித்தான சுவாரஸ்யத்துடன் எழுதுகிறீர்கள்... எழுத்து நடையை பாராட்டியே ஆக வேண்டும்!!! ... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நாஞ்சில் சிவா சகோ! பாராட்டிற்கும் வாழ்த்திற்கும்

      கீதா

      நீக்கு
  14. பதிவுக்கு தாமதமான கருத்துரை இடுவதற்கு மன்னிக்கவும். பதிவு வெளியான அன்றே பதிவை படித்தேன். மிகப் பெரிய பதிவு. ஆகவே கருத்துக்களும் ஆலோசித்து எழுதலாம் என்று இருந்தேன். மறந்துவிட்டேன். ஆனாலும் ஒரு சில வார்த்தைகளில் கருத்து  பதிவு செய்யலாம் என்று வந்திருக்கிறேன். 
    திருவனந்தபுரம் திருச்சி என்னுடைய பழக்கமான ரூட்.
    மீட்டர் காஜ் இருந்த காலத்தில் இருந்தே நான் கடலூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பள்ளி ஆண்டு விடுமுறைகளில் பயணம் செய்தவன். அதுவும் 109 என்ற திருவனந்தபுரம் பாசெஞ்சரில் சாதாரண 3ம் வகுப்பு பயணம். பயணத்தின் சிறப்பு அங்கங்கே வரும் விற்பனைப் பொருட்கள் தாம். தஞ்சாவூர் : கதம்பம் குடைமிளகாய் தலையாட்டி பொம்மை, கொய்யாப்பழம். திண்டுக்கல் சிறுமலைப்பழம், திராட்சைகள், கொடை ரோடு பூரி மசால் (அந்த ஸ்டால் பிரசித்தம்.) ராஜபாளையம் போளி என்று விதம் விதமாக அனுபவிப்போம். மதுரையில் வண்டி அரை மணி நேரம் நிற்கும். அப்போது வெளியில் காலேஜ் ஹவுஸ் சென்று இட்லி வடை போண்டா காபி (பிளாஸ்கில்) வாங்கி வந்து ஏறுவோம். அது ஒரு நீராவிக் (pun intended) காலம். 

    இப்படிப்பட்ட பயணங்களை உங்கள் பயணக்கட்டுரை நினைவூட்டியது. 
    புகைப்படம் அருமை. Soni WSC with Zeiss lens?

    கடைசிப்பெட்டி, வண்டியின் ஸ்லோ ஸ்பீட், வளைவில் முழு தொடரையும் காணக்கூடிய சந்தர்ப்பம், வெயில், என்று எல்லாம் ஒருங்கிணைந்து ஒரு அருமையான படம் ஆக இருந்தது. 

    அடுத்த பகுதி எப்போது? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெகே அண்ணா. //பதிவுக்கு தாமதமான கருத்துரை இடுவதற்கு மன்னிக்கவும். பதிவு வெளியான அன்றே பதிவை படித்தேன். மிகப் பெரிய பதிவு. //

      அண்ணா ப்ளீஸ் மன்னிப்பு எல்லாம் வேண்டாம். இதில் என்ன இருக்கிறது? ஆமாம் அண்ணா பதிவு கொஞ்சம் பெரிதுதான். இந்தக் கீதா சின்னதா எழுத நினைத்தாலும் பல சமயங்களில் எழுத வரமாட்டேன்னுது!!! ஹாஹாஹா...அடுத்த பதிவும் இனி வரும் பதிவுகளையும் சிறியதாகத் தர 99% முயற்சி செய்கிறேன்!!

      செம சுவாரசியமான பயணம் உங்களுடையது. எனக்கு பாசஞ்சரில் பயணிக்கவும் ரொம்பப் பிடிக்கும். நீங்கள் சொல்லியிருப்பது போல் விற்பனைப் பொருட்கள்.

      //விதமாக அனுபவிப்போம். //

      அண்ணா உங்கள் காலத்தில் பொருட்கள் தரமானதாகவும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இப்போதும் வருகின்றன ஆனால் வாங்கக் கொஞ்சம் தயக்கம் இருக்கிறது.

      //கொடை ரோடு பூரி மசால்//
      ஆஹா ஆசையைக் கிளப்பிவிட்டீங்களே!! இதுக்காகவே இந்த ரூட்ல பயணம் செய்யணும் போல இருக்கிறது!!! ஆனால் இப்பவும் கிடைக்குமா?

      //மதுரையில் வண்டி அரை மணி நேரம் நிற்கும். அப்போது வெளியில் காலேஜ் ஹவுஸ் சென்று இட்லி வடை போண்டா காபி (பிளாஸ்கில்) வாங்கி வந்து ஏறுவோம். அது ஒரு நீராவிக் (pun intended) காலம். //

      மீண்டும் ரொம்பவே ஆசையைக் கிளப்பிவிட்டிட்டீங்க!! ஜாலி பொற்காலம்னு சொல்லுங்க!!

      //இப்படிப்பட்ட பயணங்களை உங்கள் பயணக்கட்டுரை நினைவூட்டியது. //

      நன்றி அண்ணா.

      //புகைப்படம் அருமை. Soni WSC with Zeiss lens?//

      நன்றி அண்ணா. ஆமாம் சோனி cyber shot Zeiss lens

      //கடைசிப்பெட்டி, வண்டியின் ஸ்லோ ஸ்பீட், வளைவில் முழு தொடரையும் காணக்கூடிய சந்தர்ப்பம், வெயில், என்று எல்லாம் ஒருங்கிணைந்து ஒரு அருமையான படம் ஆக இருந்தது.//

      மிக்க நன்றி அண்ணா. ரொம்பக் கடைசிப் பெட்டி இல்லை. கடைசி பெட்டி என்றால் இன்னும் அழகு. நான் இருந்த பெட்டிக்குப் பின்னால் இன்னும் பெட்டிகள் இருந்தன. ஆமாம் ஸ்லோ ஸ்பீட். ஜன்னல் வழி படங்கள் நிறைய எடுத்துக் கொண்டே வந்தேன். அப்படியே டக்கென்று கொஞ்சம் செட்டிங்க்ஸ் மாற்றி எடுத்துவிட்டேன்.

      இன்னும் இரு படங்கள் ஸ்பீடாகப் போகும் போது ஜன்னல் வழி எடுத்த படங்களும் இருக்கிறது. நாகர்கோவில் டு பங்களூர் வந்த போது. ஆனால் அது இருள் பிரிந்து வரும் சமயம் அதனால் கொஞ்சம் மங்கலாக இருக்கும்....எனக்கு வளைவில் திரும்பும் போது எடுக்க ரொம்பப் பிடிக்கும்.

      அடுத்த பகுதி எப்போது? //

      படங்கள் எல்லாம் ரெடி. அடுத்த பகுதி மலைத்தொடரும் அதைப் பற்றிய சில விவரிப்புகளும் தான். திருநெல்வேலியிலிருந்து காலை இருள் பிரியும் நேரம் அதனால் என் கவனம் முழுவாதும் ஜன்னலுக்கு வெளியேதான்!!! மக்கள் பற்றி எதுவும் அவ்வளவாக இருக்காது அடுத்த பகுதி. இன்னும் எழுதவில்லை. இன்னும் இரு நாளில் வந்துவிடும். சின்ன சின்னதாகப் போடுகிறேன்!!!

      மிக்க நன்றி ஜெகே அண்ணா. விரிவான கருத்திற்கும் முக்கியமா உங்களின் பொற்காலப் பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதற்கும்.

      கீதா

      நீக்கு


  15. கீதா பதிவு நீங்கள் போட்ட முதல் பல நாட்கள் கருத்து போட முயற்சித்தேன் முடியவில்லை இன்றும் முயல்கிறேன். முடிகிறதா என்று

    பதிலளிநீக்கு
  16. போட முடிகிறது என்று தெரிகிறது


    படம் மிக மிக அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கருத்து வந்துவிட்டது

      மிக்க நன்றி மதுரை

      கீதா

      நீக்கு
  17. ரயில் பயணம் எல்லாம் செய்து பல வருடங்கள் ஆகி விட்டது. உங்களுடைய வர்ணனை நானும் அதே ரயிலில் பயணிப்பது போன்ற உணர்வைத் தந்தது. அடுத்த பாகத்தை படிக்க ஆவலாக இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ரம்யா. இப்போதுதான் உங்கள் ஐஸ்லேன்ட் போய் குளிர்ந்துவிட்டு வந்தேன். செம...

      ஆமாம் இப்ப நீங்க அங்கிருப்பதால் ரயில் பயணம் அபூர்வம்தான். மிக்க நன்றி ரம்யா

      கீதா

      நீக்கு
  18. பயண அனுபவம், மற்றும் உடன் பயணித்தவர்கள் பற்றிய விவரமும் நேரே பார்ப்பது போல இருந்தது. கையில் தேவையானதை எடுத்து போனது நல்லதுதான்.

    ரயில் படம் மிக அருமை கீதா.
    தொடர்கிறேன் பயணத்தை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா.

      ஆமாம் அக்கா எடுத்துக் கொண்டு போனது ரொம்ப உபயோகமாக இருந்தது.

      நன்றி கோமதிக்கா

      உங்கள் உடல் நலனிக்கிடையிலும் விட்டதிற்கெல்லாம் கருத்து போட்டிருக்கீங்க மிக்க நன்றி அக்கா

      கீதா

      நீக்கு