திருநெல்வேலி - நாகர்கோவில் - 1
சென்ற பகுதியின் தொடர்ச்சியாக.......களக்காடு தாண்டி, ஏர்வாடி, வள்ளியூர் பகுதியிலிருந்து தொடர்ச்சியாக மஹேந்திரகிரி மலைத்தொடர். பணகுடியை அடுத்து காவல்கிணறு பகுதி வரை திருநெல்வேலி மாவட்டம். காவல்கிணறு பகுதியில் தான் மகேந்திரகிரி மலையின் சரிவின் அடிவாரத்தில் மகேந்திரகிரி திரவ எரிபொருள் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது. சென்ற பதிவில் சொல்லியிருந்தேன்.
பணகுடியிலிருந்து கிளம்பியாயிற்று.
மகேந்திரகிரி மலையைப் பார்த்துக் கொண்டே போவோம்.
மகேந்திரகிரி யாத்திரை என்று ஆன்மீக யாத்திரை செய்பவர்கள் இருக்கிறார்கள். இதைப் பற்றி நான் இங்கு சொல்லவில்லை. கடம்போடுவாழ்வு
(இது ஏருவாடியில் உள்ள கிராமம்) பற்றி சொல்லும் போது சொல்கிறேன். ஏனென்றால் மகேந்திரகிரியின்
இந்த ஆன்மீக யாத்திரை பணகுடிக்கு முன்னான மகேந்திரகிரி மலைப்பகுதி. இப்போது பணகுடி
தாண்டிய பகுதி என்பதால் இங்கு சொல்லவில்லை.
இந்த மகேந்திரகிரி மலையின் பள்ளத்தாக்குப் பகுதியில் அதாவது பணகுடிக்கும் ஆரல்வாய்மொழிக்கும் இடையே பலமான சுழல் காற்று வீசும் பகுதியாகும். அப்படிச் சில சமயங்களில் சுழல்காற்று வீசும் சமயம் இப்பகுதியில் செம்மண் அதிகமிருப்பதால் சாலைவரை வருவதுண்டு என்று மக்கள் சொல்வதுண்டு.
ஒரே ஒரு முறை பேருந்தில் பயணித்த போது வழக்கம் போல
ஜன்னலருகில் இருந்ததால் கண்ணில் மண் விழுந்தது. அது செம்மண்ணா தூசியா என்பதெல்லாம் அப்ப தெரியலை. அது சுழல் காற்றினால் என்று அப்புறம் தெரிந்தது இப்படிச் சில சமயங்களில் ஆகும்னு. ஆனால் காற்று ஒன்றும் ரொம்பப் பெரிதாக இல்லை.
இங்கு அடர்ந்த காடுகள் இருக்கு. சின்ன சின்ன அருவிகள் உண்டு. ஐ எஸ் ஆர் ஓ இருப்பதால் இது அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட பகுதியானதால் இங்கு யாரும் எளிதில் சென்றுவர அனுமதியில்லை. மட்டுமல்ல இப்பகுதி மகேந்திரகிரி மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியும் கூட.
புராண இதிகாசமான இராமாயணத்தில் இராவணன் சீதையைக் கடத்தி இலங்கையில் சிறைவைத்தபோது சீதாதேவியைத் தேடி அனுமன் இந்த மகேந்திர கிரி மலையின் மேலிருந்து இலங்கை நோக்கித் தாவி வான்வழி சென்றதாகச் சொல்லப்படும் மகேந்திரகிரி மலைப்பகுதி இப்பகுதிதான் என்று சொல்லப்படுகிறது. அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தின் மலைப்பகுதியிலிருந்து.
பணகுடி தாண்டி அடுத்து காவல்கிணறு பகுதி வரைக்கும்தான் திருநெல்வேலி மாவட்டப் பகுதி. (சேர சோழ பாண்டிய நாட்டு வீரர்களுக்குத் தண்ணீர் வழங்கிய கிணறு இங்கு இருப்பதால், அவர்களின் எல்லைபகுதி இக்கிணறு என்பதால் காவல்கிணறு என்ற பெயராம். இது நான் கல்லூரி சமயத்தில் அறிந்தது. ஆனால் வேறு கதைகளும் சொல்லப்படுகிறது. என்றாலும் நான் இணையத்தில் தேடிய போது மூவேந்தர் காரணம்தான் சொல்லப்பட்டிருக்கிறது.
காவல்கிணறுப் பகுதியில் மலைத்தொடரின் காற்று டர்ன் அடித்து வீசுவதால் - மேலே சொன்னது போல் பணகுடிக்கும் ஆரால்வாய்மொழிப் பகுதிக்கும் இடையில் - அதனால் இங்கும் காற்றாலைகள் அதிகம் இருக்கிறது.
காவல்கிணறிலிருந்து 4 1/2 கிலோமீட்டர் தூரத்தில் 10 நிமிடத்தில் இருக்கும் முப்பந்தல் வரை (இக்கிராமமும் ஆரல்வாய்மொழிப்பகுதியில் தான் இருக்கிறது) பகுதியிலிருந்து கன்னியாகுமரி மாவட்ட எல்லை ஆரம்பம். முப்பந்தல் பகுதியிலும் மகேந்திரகிரிமலைத் தொடர் கொஞ்சம் உண்டு. அதன் பின் ஆரல்வாய்மொழிப் பகுதிமலைகள்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள இந்த மகேந்திரகிரி மலைத்தொடர் உள்ள இப்பகுதியில் உயரம் 1654 மீட்டர் (5427 அடி) ஆகும். இது நாகர்கோவில் பகுதியில் மிக உயரமான மலைச்சிகரம் என்றும் சொல்லப்படுகிறது. (நன்றி விக்கி)
அடுத்து முப்பந்தல் மற்றும் ஆரால்வாய்மொழி மலையைப் பார்த்துக் கொண்டே செல்வோம். பயணம் செய்வோம். பொறுமையாகப் பதிவை வாசிப்பதற்கும் காணொளிகளைக் கண்டு கருத்திடுவதற்கும் எல்லோருக்கும் மிக்க நன்றி.
------கீதா
இந்தப் பகுதிகள் எத்தனை அழகாக இருக்கின்றன. மலைப்பகுதிகள் என்றாலே ஒரு ரம்மியம் இருக்கத்தான் செய்கிறது. இந்தப் பகுதிகளுக்கு சென்று வர ஆசை அதிகரிக்கிறது. காணொளிகளும் கண்டு ரசித்தேன். தொடரட்டும் பயணமும் பதிவும்.
பதிலளிநீக்குமிக்க நன்றி வெங்கட்ஜி!
நீக்குநிச்சயமாக உங்க்ளுக்கு வாய்ப்பு கிடைக்கும் ஜி. இப்பகுதிகளுக்குச் செல்வதென்றால் மழை சீசன் முடிந்ததும் சென்றால் ரொம்பவே வசதியாக இருக்கும்.
கீதா
பாலம் தண்ணீர் என்றால் போதுமே உடனே ஒரு க்ளிக்... அது பழைய நிலை. இப்போது காய்ந்த பூமியைக் கண்டால்தான் க்ளிக்! தண்ணீர் ன்றால் அவ்வளவு பயமாகிக்கொண்டு வருகிறது!!!
பதிலளிநீக்குஹாஹாஹாஹா அதுவும் சரிதான். அனுபவம் அப்படியாகிவிட்டது இல்லையா ஸ்ரீராம்!?
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்.
கீதா
மகேந்திரகிரி, பணகுடி இடங்களின் பெருமைகளை நான் அறிந்திருக்கவில்லை. படங்களும், காணொளியும் அழகு.
பதிலளிநீக்குஅதேதான் கீழே சொன்ன கருத்தேதான் வெளியில் அதிகம் பேசப்படாத பகுதிகள்.
நீக்குபடங்களும், காணொளியும் அழகு.//
போகிற போக்கில் எடுத்தவைதான் அதிகம் இம்முறை. நான் நினைத்தபடி செல்ல நினைத்த எல்லா இடங்களுக்கும் செல்லமுடியவில்லை பெரும்பான்மையான நாட்கள் மழையில் சிக்கியதால். மழை விட்டிருக்கிறதே போகலாம் என்றால் எங்கேனும் வழியில் மாட்டிக் கொண்டுவிட்டால்? அதனால் செல்ல முடந்த இடங்கள் என்பவை மழை முழுவதும் நின்றபிறகு இரு நாட்களே கிடைத்தது.
நன்றி ஸ்ரீராம்
காவல்கிணறு, முப்பந்தல்.. இந்த இடங்கள் எல்லாமே இப்போதுதான் அறிகிறேன். ஆரல்வாய்மொழி பெயர் மட்டும் கேள்விப்பட்டிருக்கிறேன்! ஆனால் எல்லாமே அழகிய இடங்களாகத் தெரிகிறது.
பதிலளிநீக்குஅழகிய இடங்கள், ஸ்ரீராம். காவல்கிணறு பெரிய ஜங்க்ஷன் வேறு அது. திருநெல்வேலி மாவட்டத்தின் மழை மறைவுப்பகுதி. இங்கு மூவேந்தர்கள் தங்கிய அந்தக்காலத்து மண்டபங்கள் போன்ற இடங்கள் சாலையிலேயே உண்டு. ஆனால் என்னால் படம் எடுக்க முடியவில்லை.
நீக்குமுப்பந்தல் பத்தி அடுத்த பதிவில். ஸ்ரீராம் கன்னியாகுமரி தென்மாவட்டம் அவ்வளவாகக் கண்டு கொள்ளப்படாத பகுதி என்பதால் வெளியில் அவ்வளவாகப் பேசப்படாத பகுதிகள்தான்.
ஆமாம் ரொம்பவே அழகிய இடங்கள் ஸ்ரீராம்
கீதா
சுவாரஸ்யமான தொடர் காணொளி படங்கள் மிகவும் அழகாக எடுத்து இருக்கிறீர்கள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு
நீக்குகீதா
தொடர்ந்து வாசித்து வருகிறேன். உடன் பயணிப்பதில் சுகமே.
பதிலளிநீக்குமிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தொடர்வதற்கும் உடன் பயணம் செய்வதற்கும்
நீக்குகீதா
பயணத்தை ரசித்துக் கொண்டே வருகிறேன்...
பதிலளிநீக்குவாருங்கள் டிடி மிக்க நன்றி ரசிப்பதற்கும்
நீக்குகீதா
தொடரில் வரும் பெயர்கள் எல்லாம் திருநெவேலியை நினைவுபடுத்துகின்றன
பதிலளிநீக்குபடங்கள் மிக அழகு
பாசஞ்சர் பயணம் சூப்பராக இருந்திருக்கும்.
நன்றி நெல்லை...ஆமாம் தின்னவேலி தானே எல்லாம்...
நீக்குபாசஞ்சர் இல்லை நெல்லை. இது விரைவு வண்டி பங்களூரிலிருந்து நேரே நாகர்கோவில். திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் வரை பாசஞ்சர் என்றால் நன்றாக இருக்கும் ஆனால் படம் எடுப்பது ரொம்பக் கஷ்டம்!! கோவிட் டைம் ரூல்ஸ் அப்ப அதனால பல ரயில்கள் இல்லை. பாசஞ்சர் உட்பட.
இப்ப எல்லாமே போகிறது என்று நினைக்கிறேன்
படங்கள் மிக அழகு//
மிக்க நன்றி நெல்லை
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபயண பதிவுத் தொடர் நன்றாக உள்ளது. சுவாரஸ்யமாக ஒரு வரி விடாமல் படித்து அழகிய படங்களையும், காணொளிகளையும் கண்டு ரசித்தேன். படங்களின் தொகுப்பாக எடுத்துப் பகிர்ந்த காணொளியும் அருமை.
காற்றாலைகள் திருநெல்வேலி நெருங்கும் போதே வந்து விடுமே.. இங்கும் கண்டு கொண்டேன். இயற்கை வனப்பை கண்டு ரசித்தவாறு ஜன்னலோரத்தில் அமர்ந்தபடி செல்வதே ஒரு சுகந்தான். அதன்படி உங்கள் நாகர்கோவில் பயணத்தோடு பயணிப்பதும் மனதுக்கு நன்றாக உள்ளது. தொடர்கிறேன்.
அடுத்தடுத்து வரும் ஊர்களின் பெயர்களை விபரமாக சொல்லியுள்ளீர்கள். காவல் கிணறு பற்றி சொல்லியிருப்பதும், மகேந்திர மலைப்பற்றி சொல்லியிருப்பதும் அருமை.
வெண்மேக பொதிகளின் மடியில் தலை வைத்து படுத்திருக்கும் மலை முகடு படங்களை மிகவும் ரசித்தேன். அவைகளின் உயரம்,பரப்பளவு போன்ற விபரங்கள் பயனுள்ளவை. பகிர்ந்தமைக்கு நன்றி.
தொடர் நன்றாகச் செல்கிறது. உடன் நாங்களும் பயணிக்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பயண பதிவுத் தொடர் நன்றாக உள்ளது. சுவாரஸ்யமாக ஒரு வரி விடாமல் படித்து அழகிய படங்களையும், காணொளிகளையும் கண்டு ரசித்தேன். படங்களின் தொகுப்பாக எடுத்துப் பகிர்ந்த காணொளியும் அருமை.//
நீக்குஎல்லாவற்றையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி கமலாக்கா.
//இயற்கை வனப்பை கண்டு ரசித்தவாறு ஜன்னலோரத்தில் அமர்ந்தபடி செல்வதே ஒரு சுகந்தான். அதன்படி உங்கள் நாகர்கோவில் பயணத்தோடு பயணிப்பதும் மனதுக்கு நன்றாக உள்ளது. தொடர்கிறேன்.//
வாருங்கள். அழகான இடங்கள் கமலாக்கா
அடுத்தடுத்து வரும் ஊர்களின் பெயர்களை விபரமாக சொல்லியுள்ளீர்கள். காவல் கிணறு பற்றி சொல்லியிருப்பதும், மகேந்திர மலைப்பற்றி சொல்லியிருப்பதும் அருமை.//
கொஞ்சம் தான் சொல்லியிருக்கிறேன் அதுவும் நான் அறிந்தவை மட்டுமே. பல கதைகள் சொல்லப்படுகின்றன. அவை எல்லாம் எனக்குப் புதிதாகவும் நான் இதுவரை அறியாததாகவும் அவை உறுதியாகத் தெரியாததாலும் நான் எழுதவில்லை கமலாக்கா.
நன்றி கமலாக்கா ரசித்துத் தொடர்வதற்கு
கீதா
ரசனையோடு தொடர்கிறேன்
பதிலளிநீக்குமிக்க நன்றி கரந்தை சகோ
நீக்குகீதா
மகேந்திரகிரி மலையும்,கண்ணுக்கு குளிர்ச்சியாக பசுமையான இயற்கை காட்சியும் மிக அழகு.
பதிலளிநீக்குரயில் பயணம் ஜன்னல் பக்க இருக்கையில் அமர்ந்து வேடிக்கைப்பார்த்து கொண்டு போவது மனதுக்கு மகிழ்ச்சி தரும். கண்ணில் தூசி விழுந்து கஷ்டபட்டீர்களா?
உங்களுடன் தொடர்ந்து வருகிறேன். பணங்குடியிலும் சொந்தங்கள் உண்டு.
மகேந்திரகிரி மலையும்,கண்ணுக்கு குளிர்ச்சியாக பசுமையான இயற்கை காட்சியும் மிக அழகு//ரயில் பயணம் ஜன்னல் பக்க இருக்கையில் அமர்ந்து வேடிக்கைப்பார்த்து கொண்டு போவது மனதுக்கு மகிழ்ச்சி தரும்.//
நீக்குஆமாம் கோம்திக்கா சுகமாக இருக்கும்
கண்ணில் தூசி விழுந்து கஷ்டபட்டீர்களா?//
இப்போது இல்லை அக்கா. அது முன்பு ஊரில் இருந்த போது. ஒரு முறை திருநெல்வேலிக்கு மத்திய அரசு வேலைக்கான பரீட்சை எழுதச் சென்ற போது நடந்தது, அது வெயில் காலம்.
உங்களுடன் தொடர்ந்து வருகிறேன். பணங்குடியிலும் சொந்தங்கள் உண்டு.//
ஓ அப்படியா...நன்று அக்கா. கொஞ்சம் வெயில் தெரியும் ஊர். மற்றபடி மலைகள் இருக்கும் பகுதி சுகம் மனதிற்கு
நன்றி கோமதிக்கா
கீதா
படங்கள் அழகு. கூடவே பயணிக்கிறேன். என்னுடைய தங்கைகள் இருவர் திருச்சியிலும் இன்னுமொருவர் மதுரையிலும் இருப்பதால் இந்த வழியில் பயணிப்பது உண்டு.
பதிலளிநீக்குJayakumar
ஓ அதனால் இந்த வழியில் பயணமா. கூடவே பயணிப்பதற்கு மிக்க நன்றி ஜெகே அண்ணா.
நீக்குநன்றி அண்ணா உங்கல் கருத்திற்கு
கீதா
அன்பின் கீதாமா,
பதிலளிநீக்குநலமுடன் இருங்கள்.
தாமதமாக வருகிறேன்.
படங்கள் அத்தனையும் கல்கண்டு.
இத்தனை பசுமையும் என்றும் நிலைக்க வேண்டும்.
காணொளிகளையும் கண்டு மகிழ்ந்தேன்.
உலகின் ஆகச் சிறந்த பயணப் ஃபோட்டொக்ராஃபர்
பட்டம் உங்களுக்கு இன்றைக்கு
நாச்சியார் பதிவிலிருந்து அளிக்கப்
படுகிறது.!!!
தாமதமாக வருகிறேன்.//
நீக்குஅம்மா அதெல்லாம் ஒன்றுமில்லை. எப்போது வேண்டுமானாலும் வரலாம் அம்மா. உங்களுக்கு நேரம் இருக்கும் போது. இது எங்கே ஓடிப் போகப் போகிறது!
ஆமாம் இந்தப் பசுமை நிலைக்க வேண்டும் என்று தோன்றிக் கொண்டேதான் இருக்கிறது. காரணத்தை நாகர்கோவில்/கன்னியாகுமரி மாவட்டம் பற்றி எழுதும் போது சொல்கிறேன்.
//உலகின் ஆகச் சிறந்த பயணப் ஃபோட்டொக்ராஃபர்
பட்டம் உங்களுக்கு இன்றைக்கு
நாச்சியார் பதிவிலிருந்து அளிக்கப்
படுகிறது.!!!//
ஹையோ அம்மா என்ன இது!!!! நம்ம வெங்கட்ஜி, கோமதிக்கா, ராமலஷ்மி, கீதா மதிவாணன் (இவங்க படங்களும் அட்டகாசமாக இருக்கும். இவங்க போட்டில எல்லாம் வின் பண்ணிருக்காங்க!! ராமலஷ்மி போல) இன்னும் பலர் இருக்காங்க..பெயர்கள் டக்கென்று வர .ரொம்ப ரொம்ப அழகாக எடுக்கறவங்க...என்னை சொல்லியிருக்கீங்களே உங்கள் அன்பினால். உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி அம்மா
கருத்திற்கும் நன்றி அம்மா
கீதா
அதுவும் நீங்கள் பதிவிட்டிருக்கும் அத்தனை
பதிலளிநீக்குஊர்ப் பெயர்களும் இனிமையை அள்ளித் தெளிக்கின்றன.
அந்தக் காட்சிகளே .....
ஆஆஹா, இது நம்ம ஊர் என்று மனமே பூரிக்கிறது.
முக்கியமாக மகேந்த்ர மலை.
ஆஞ்சனேயர் முதலில் கிளம்பினார்.
இப்போது ராக்கெட் கிளம்பப் போகிறதோ!!!
மீண்டும் தொடரக் காத்திருக்கிறேன்.
அருமையான சேவை தொடரட்டும்.
ஆமாம் அம்மா பெயர்களைக் கேட்கும் போதும் காட்சிகளும் நம்ம ஊர் என்று மனதைப் பூரிக்க வைக்கிறதுதான். அதுவும் நான் பல வருடங்கள் கழித்துப் பயணித்ததால் அத்தனை உற்சாகம் எனக்கு. அதுவும் தனியாக!!! என் ஏகாந்த தருணங்கள்!
நீக்குமுக்கியமாக மகேந்த்ர மலை.
ஆஞ்சனேயர் முதலில் கிளம்பினார்.
இப்போது ராக்கெட் கிளம்பப் போகிறதோ!!!//
அங்கு ஐஎஸ் ஆர் ஓ தொடங்கிய போது நான் இந்த இரண்டையும் இணைத்துப் பார்த்துக் கொண்டதுண்டு. ISRO ப்ரொப்பல்ஷன் தான் அங்கு. அங்கு ஊர்ப்பகுதி என்பதால் ராக்கெட் கிளம்ப முடியாதே. அதுவும் சுற்றிலும் மலைகள் கிராமங்கள். கிளம்புவது ஷாரில் தான் மற்றும் பலாசூர் அங்கு மிஸைலும். மற்றும் திருவனந்தபுரத்தில் சிறிய அளவிலான லாஞ்சிங்க் அட்மொஸ்ஃபியரிக் ஸ்டடிஸ். மகேந்திரகிரியில் லிக்விட் ப்ரொபல்ஷன் தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் ஐஎஸ் ஆர் ஓ வின் கீழ் வந்தது 2014 ல்.
முன்பு திருவனந்தபுரத்தில் இருந்த போது கணவரின் தம்பி மற்றும் உறவினர்களும் வந்திருந்ததால் ஐஎஸ் ஆர் ஓ வில் பெர்மிஷன் வாங்கி ராக்கெட் கிளம்புவதைப் பார்த்தோம்...ஹப்பா பயங்கர சப்தம். காதை அடைத்துக் கொள்ளச் சொல்வார்கள். அதிரும். ஆனால் பார்க்க ரொம்ப சுவாரசியம். இதுவே இப்படி சத்தம் அதிர்வு என்றால் ஷாரில் / ஸ்ரீஹரிகோட்டாவில் எப்படி இருக்கும்!!
மிக்க நன்றி அம்மா
கீதா
என்னது கணவர் இஸ்ரோவில் இருந்தாரா? பெயர் யூனிட் டிவிஷன் சொல்லுங்கள். எனக்கு தெரிகிறதா பார்ப்போம். மஹேந்திரகிரியில் LPSC தான். LPSC 3 இடங்களில் (வலியமலை, மஹேந்திரகிரி, பெங்களூரு) இருந்தது. மஹேந்திரகிரியில் உள்ள யூனிட்டை IPRC (ISRO Propulsion complex) என்று 2014இல் பெயர் மாற்றம் தான் செய்தார்கள்.
நீக்குJayakumar
மஹேந்திரகிரியில் உள்ள யூனிட்டை IPRC (ISRO Propulsion complex) என்று 2014இல் பெயர் மாற்றம் தான் செய்தார்கள். //
நீக்குஆமாம் ஜெகே அண்ணா. அதுக்கு முன்னாடி வரை வலையமலை கன்ட்ரோலில் இருந்தது இல்லையா என் அத்தை/மாமா பையனும் வலிலயமலையில் வேலை பார்த்தான். நாங்கள் கூட்டுக்குடும்பம் அப்போது. நாங்கள் அப்போது ஊரில் தானே இருந்தோம் திருவனந்தபுரம் நாகர்கோவில் என்று. அவனும் வலியமலையில் வேலையில் இருந்தாலும் மஹேந்திரகிரிக்கு அடிக்கடி ட்யூட்டிக்கு என்று இரு இடங்களிலும் இருப்பான். அதன் பின் மேற்படிப்புக்க்கு அமெரிக்கா சென்று அதன் பின் அங்கேயே செட்டில் ஆகிவிட்டான்.
கீதா
ஒரு காலத்தில் நாங்க இருவரும் திருநெல்வேலி/கன்யாகுமரி/கேரளப்பகுதிக்கு நடுவில் இருக்கும் முப்பந்தலில் தான் கடைசியாகப் போய்த் தங்கணும்னு பேசிப்போம். பின்னர் தான் என் அத்திம்பேர் முப்பந்தலில் தங்க முடியாது என்றார். அவருக்குச் சொந்த ஊர் களக்காடு. ஆனாலும் போய்ப் பார்த்துட்டு வர நினைச்சுப் போகவே முடியலை. நல்ல அருமையான இடங்கள். எல்லாமும் கண்ணுக்கும், மனதுக்கும் விருந்து. ராக்கெட் கிளம்புவதைப் பார்க்கணும்னு எங்களுக்கும் ஆசைதான். ஆனால் பார்த்ததில்லை.
பதிலளிநீக்குவாங்க கீதாக்கா. முப்பந்தலில் இருப்பது கொஞ்சம் கஷ்டம் அக்கா.
நீக்குகளக்காடு சூப்பரான ஊர். ஆமாம் இப்பகுதிகள் எலலமே அழகுதான்.
நாங்கள் ராக்கெட் அது சின்ன ராக்கெட் தான் திருவனந்தபுரத்தில் அப்போது கணவர் ஐ எஸ் ஆர் ஓ வில் இருந்ததால். மற்றப்டியும் யாராவது தெரிந்தவர்கள் மூலம் அனுமதி கிடைத்தால் பார்க்கலாம் அக்கா
மிக்க நன்றி கீதாக்கா
கீதா
அழகு கெடாமல் இன்று வரை பாதுகாத்திருப்பதே பெரிய விஷயம்.
பதிலளிநீக்குஆமாம் கீதாக்கா பாதுக்காக்கிறாங்க இடையில் சில கட்டிடங்கள், க்வாரி என்று பிரச்சனைகளும் இருந்து வந்தாலும
நீக்குநன்றி கீதாக்கா
கீதா
புகைபடங்களும் காணொளி காட்சிகளும் அதற்கான விளக்கங்களும் அருமை. நேரில் சென்று நானே பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது..
பதிலளிநீக்குமகேந்திர கிரி யின் ராமாயண தொடர்பை குறித்த செய்தி வியக்க வைக்கின்றது.
கண்ணில் மண் பட்டாலும் உங்கள் கண்ணிலிருந்து தப்பாத இயற்கை காட்சிகளை படமாக்கி எங்கள் கண் முன் கொண்டுவந்தவிதம் பாராட்டிற்குரியது.
கொஞ்சம் கண்ணையும் பார்த்துக்கொள்ளுங்கள், பாதுகாப்பது கண்ணாடி அணிவதில் பல சவ்கரியங்கள் உள்ளனவே.
பகிர்விற்கு மிக்க நன்றிகள்.
கோ.
வாங்க கோ. நலமா.
நீக்குபுகைபடங்களும் காணொளி காட்சிகளும் அதற்கான விளக்கங்களும் அருமை. நேரில் சென்று நானே பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது..//
மிக்க நன்றி கோ.
என் கண்ணில் மண் பட்டது நான் ஊரில் இருந்த போது ரொம்ப சின்ன வயசு. இப்போது இல்லை.
ஆமாம் கண்ணாடி பாதுகாப்புதான். பல சவுகரியங்கள் அதுவும் குளிர்கண்ணாடி என்றால் !!!!! ஹாஹாஹா
மிக்க நன்றி கோ உங்கள் கருத்திற்கு
கீதா
பயண அனுபவம் அருமை. நீங்கள் குறிப்பிடும் "ஆரல்வாய்மொழி" ஒரு அற்புதமான பகுதி எனலாம்... தென்னகத்தை ஆண்ட அரசர்கள் இரு மலைகளுக்கு இடையே அரண்போன்ற மதில்சுவர்களை எழுப்பி பிரமாண்டமான வாயில் அமைத்து இப்பகுதியை பாதுகாத்துவந்ததோடு மலையின்உச்சியில் கண்காணிப்பு கோபுரத்தையும் நிறுவி எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணித்து வந்ததாகவும் அதனாலேயே இப்பகுதிக்கு "அரண் வாய் வழி" என பெயர் ஏற்பட்டதாகவும். அதுவே காலப்போக்கில் மருவி "ஆரல்வாய்மொழி" ஆகிவிட்டதாகவும் இப்பகுதி மக்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்... நன்றி!!
பதிலளிநீக்குஆமாம் அழகான பகுதி. வேனாடு ஆட்சியில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அப்படிச் செஞ்சாங்கன்னு வரலாறு உண்டு. நான் பள்ளியில் படிக்கறப்ப கூட்டிட்டுப் போனாங்க ஆனால் அப்ப கூட பரவால்ல ஏதோ அந்தக் கோட்டையின் பகுதில் கொஞ்சம் இருந்தது அப்போதெஉ ஃபோட்டோ எடுக்க வசதி கிடையாதே. ஆனால் இப்போது மிச்சம் இருந்தவையும் போய் கோட்டையாஎன்று வியக்க வைக்கும் அளவு அதை ஒட்டி ரயில் நிலையம் கட்டியிருப்பதும் தொல்லியல் துறையும் கண்டுக்கவில்லை ரொம்ப வேதனைதான் இதை அடுத்த பகுதியில் சொல்லியிருக்கிறேன்
நீக்குமிக்க நன்றி நாஞ்சில் சகோ
கீதா