புதன், 12 ஜனவரி, 2022

திருநெல்வேலி- நாகர்கோவில் – 2


பெங்களூர் – நாகர்கோவில்  (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 7

திருநெல்வேலி-நாகர்கோவில் - 1

சென்ற பதிவைப் பொறுமையாக வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி! இப்போது இன்றைய பதிவிற்கு.

காலையில் எழுந்ததும் காபி! பின்பு கனிவு கொடுக்கும் நல்ல ஃபோட்டோ ஷூட், இடையில் ஒரு பூரி மசால் என்று திருநெல்வேலியில் பிளார்ஃபார்மில் கிடைத்த ஒரு தண்ணிக் காப்பியைக் குடித்துக் கொண்டே பெட்டியின் அருகிலேயே நின்று கொண்டு சுற்றிலும் பார்த்தேன். கை/பை/யில் மிளகாய்ப்பொடி தடவிய இட்லி இரண்டு இருந்ததுதான் இருந்தாலும் நப்பாசை, அதெப்படி? திருநெல்வேலி வந்தும் பூரி மசால் சாப்பிடாமல் போகலாமோ? எங்கியாச்சும் கண்ணில் படுகிறதா என்று. குச் நஹின்!

ப்ளாட்ஃபார்ம் சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்ததுதான். ஸ்டால்கள் கொஞ்சம் தள்ளி இருந்ததால் ரயிலில் இருந்து இறங்கி நடந்து கொண்டிருந்த கூட்டத்தில் சிக்கிடாமல் பூரி-மசாலை தேடினேன். கேட்டும் பார்த்தேன். இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும்னுட்டாங்க. 

ஹூம் கீதா விஐபி யா இருந்திருந்தா ப்ளார்ஃபார்ம் முழுக்க பூரி ஸ்டாலாவே இருந்திருக்கும்!  இப்ப ஒன்லி காபி, சாய்தான்.  ரயில் கிளம்பத் தயாரானது. 

ஏறி கேமராவை அதன் வாரில் கையை நுழைத்துக் கொண்டு ரெடியாக இருந்தேன். ஸ்டேஷன் விட்டு வெளியே வந்த சில நிமிடங்களில் தாமிரபரணியை க்ளிக்கலாமே.

ஆனால் இருள் முழுதாக விலகியிருக்கவில்லை. அவ்வளவாக லைட்டிங்க் இல்லாதபோதும், இரவுக் காட்சிகளையும் என் கேமராவில் நன்றாக எடுக்க இன்னும் நான் கற்க வேண்டும். கத்துக்குட்டிதானே நான்! கற்றதை வைத்து கேமராவை எக்ஸ்போஷர் லெவல் செலக்ட் செஞ்சு பண்ணிட்டுருக்கும் போதே ரயில் தடக் தடக் தாமிரபரணியைக் கடந்துவிட்டது! சரி விடுங்க உங்களுக்கு என் மூன்றாவது விழி வழியே தாமிரபரணிய பார்க்கக் கொடுத்து வைக்கலை!!!!! 

சமீபத்திய மழையினால் நிறைய தண்ணீர் இருந்தது. ஆனால் கரை தாண்டி ஓடியதாகத் தெரியவில்லை. ஊருக்குள் சாலைகளிலும், தெருக்களிலும் தண்ணீர் என்று என் அத்தை பெண் சொன்னாள்! தெரிந்ததுதானே!!!

திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் இந்தத் தடத்தில் ரயில் போகும் திசையில் வலதுபுறம்தான் மலைத்தொடர். ஆரால்வாய்மொழி பகுதியில்தான் இரு புறமும் மலைத்தொடர் பார்க்கலாம்.  சிறிய கணவாய். 

திருநெல்வேலி ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டு ஒரு 10 நிமிடத்தில் வலது புறம் தூரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை தெரியத் தொடங்கும். அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக அருகே.

இந்த மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் தெற்குப் பகுதி பொதிகை – இதன் பெரும்பான்மையான பகுதி திருநெல்வேலி மாவட்டத்தில். தெற்கின் கடைசிப் பகுதியில் மஹேந்திரகிரி – தொடர் மலையாக அமைந்துள்ள மலைத்தொடர் திருநெல்வேலி,  கன்னியாகுமரிமாவட்ட எல்லையில் இருப்பது மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் அசம்பு மலைப்பகுதி.  இதன் கேரள எல்லைப்பகுதி - திருவனந்தபுர மாவட்டத்திற்கும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் நடுவில் தான் பொதிகை/அகத்தியர் மலையின் உயரமான சிகரமான அகத்தியர் கூடம் உள்ளது.  இதற்கு ட்ரெக்கிங்க் செல்ல ஆனலைன் புக்கிங்க் வசதி உள்ளது. ஆனால், பெண்களுக்கு அனுமதியில்லை! ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும்!

இதில் பொதிகை மலைப்பகுதியும், மஹேந்திரகிரி பகுதியும் தான் இந்தப் பயணப் பாதையில் நாம் பார்ப்பது. இவைதான் கேரளத்தின் தெற்குப் பகுதியையும் தமிழ்நாட்டின் தென் பகுதியையும் பிரிப்பவை. இம்மலைகளின் கிழக்குப்  புறமாகக் கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டமும், மேற்குப் பகுதியில் கேரளம்.

பொதிகை மலையின் மேற்குச் சரிவு திருவனந்தபுரம் மாவட்டத்தில்; கிழக்குச் சரிவு திருநெல்வேலி மாவட்டத்தில்; தெற்குச் சரிவு கன்னியாகுமரி மாவட்டத்தில். பொதிகையின் இந்த தெற்குச் சரிவில் மகேந்திரகிரி மலைத்தொடர். அதன் தொடர்ச்சியாக அசம்பு மலை. இது பற்றி பின்னர் வரும் பதிவில்.

பொதிகை/அகத்தியர் மலைப்பகுதியில் களக்காடு வனப்பாதுகாப்புப் பகுதி. இதில் தான் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயமும் இருக்கு மிகப் பெரிய பரந்து விரிந்த வனப்பகுதி. 

பாபநாசம் அணைக்கட்டு, சேர்வலார்/கோதையார் மேல் அணைக்கட்டு, மணிமுத்தார் அணைக்கட்டுகளும், பாணதீர்த்தம் அருவி, அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, குற்றால அருவிகள் (இவை எல்லாம் நான் முன்பு சென்றிருக்கிறேன்.) என்று பல அருவிகளையும் பல ரகசியங்களையும் கொண்டுள்ள மலை. சுற்றிப் பார்க்கவும், கேமராவிற்கு விருந்தளிக்கும் வகையிலும், மனதிற்கு உற்சாகம் தரும் இடங்கள் பகுதிகள் ஏராளம். கணக்கிலடங்கா. என் மனதிற்கு நெருக்கமான பகுதி.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆங்காங்கே ஒவ்வொருபகுதியில் உள்ள ஊரின் பெயரைக் கொண்டோ அல்லது வரலாற்று நிகழ்வின்/புராணத்தின் அடிப்படையிலோ அல்லது கோயில் கொண்டுள்ள இறைவனின் பெயரிலோ அழைக்கப்படும் சிறிய சிறிய மலைகள் இருக்கின்றன. பொதிகை/அகத்தியர் மலைக்குப் பல புராணக் கதைகள் உண்டு என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும். அதே போன்று மகேந்திரகிரி மலைக்கும். அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

இப்பகுதி எல்லாம் களக்காடு வனப்பகுதி. மேலே உள்ல படத்தில் உள்ள மலைக்கும் இந்த மலைப்பகுதிக்கும் இடையில் நம்பி மலை. அதைப் பற்றி பின்னர் வரும் பதிவுகளில் 

இவற்றினிடையே நிறைய கிராமங்கள், கோயில்கள், சிறுதெய்வக்கோயில்கள், புண்ணியத்தலங்கள் என்று புராணக் கதைகளுடன் நிறைய உள்ளன. இவற்றை எல்லாம் இணைத்து மலை மீது ஆன்மீகப் பயணங்களும் மேற்கொள்ளப்படுவதுண்டு. ஆனால் தற்போது காட்டிற்குள் செல்ல தடை இருப்பதாகத் தெரிகிறது.

அப்படி, பொதிகை மலையில் ஒரு சிறு மலைப்பகுதி நம்பி மலை. மேலே உள்ள மலைப்பகுதியில்தான் இருக்கிறது. இதைப் பற்றி கடம்போடுவாழ்வு பற்றிய பதிவில் சொல்கிறேன்.  

களக்காடு வன பாதுகாப்புப் பகுதி அடுத்தாற் போல் மகேந்திரகிரி மலை - வன பாதுகாப்புப் பகுதி

வள்ளியூர் பகுதியிலிருந்து தொடர்ச்சியாக மஹேந்திரகிரி மலைத்தொடர். பணகுடியை நெருங்கிவிட்டோம். கையில் கேமரா, வெளியில் ரம்மியமான இயற்கை. சுற்றிலும் நோட்டம் விட மனம் செல்லாததால் நோ வம்பு!

பணகுடியை நெருங்கிவிட்டோம். இப்படத்தில் தெரியும் மகேந்திரகிரி மலையை கொஞ்சம் க்ளோசப்பில் அடுத்த பகுதியில் பார்க்கலாம். ரம்மியமாக இருக்கும்.
பணகுடி வந்தாச்சு. கீழே உள்ள சுட்டி யுட்யூப் லிங்க்.   3 காணொளிகள் காட்சிகள் இணைத்து சிறிய காணொளியாக 

இங்கு திறக்கவில்லை என்றால் யுட்யூப் சுட்டியில் சென்று காணலாம்
https://youtu.be/BpiCfPSorN0

இப்ப ரயில் பணகுடியில் நிற்கிறது. மலையைப் பார்த்து ரசித்துக் கொண்டிருங்கள்.  நான் பயணம் செய்த ரயில் விரைவாகச் செல்லும்.  ஆனால் இந்த கீதா வண்டி கொஞ்சம் மெதுவாகத்தான் பயணம் செய்யும்.!! வண்டி கிளம்பும் வரை காத்திருக்கவும். காத்திருப்பிற்கு நன்றி!! பயணத்தை ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். 

வாருங்கள் பயணம் செய்வோம்….!!

எல்லாப் படங்களையும் போட்டால் பதிவு பெரிசிசாகிவிடுவதால் சில படங்களை மட்டும் பதிவில் கொடுத்துவிட்டு மீதியை ஸ்லைட் ஷோவாக யுட்யூபில். நேரமிருந்தால் பாருங்கள். 



----கீதா 

42 கருத்துகள்:

  1. பயண விவரம் நன்று. படங்களும் பதிவுக்கு அழகு சேர்க்கின்றன

    மகேந்திரமலை இயற்கை அழகு கொஞ்சும் இடம். அங்கு இருந்த நம்பியாறு தெள்ளத் தெளிவாக இருந்தது. திருவட்டாறு ஆறோ கலங்கலாக இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை மிக்க நன்றி

      மகேந்திரகிரி மலை ரொம்ப அழகு. நம்பியாறு களக்காடு ஃபாரஸ்ட் ரிசர்வில். நம்பிமலையில் உருவாவது. நீங்க திருக்குறுங்குடி ஊரில் பார்த்திருப்பீங்க. ஏர்வாடி பக்கத்தில் வரும் போது குறுகி ரொம்ப மோசமாக இருந்தது. மழை பெய்த போது அதுவும் கலங்கி இருந்தது. மனதிற்கு கஷ்டமாக இருந்தது. ஏனென்றால் என் மனதிற்கு நெருக்கமான ஆறு.

      திருவட்டாறு என்பது பரளியாறு. அது மகேந்திரகிரி மலையில் இருந்து உற்பத்தியாவது. ஊருக்குள் வரும் போது அப்படி ஆகிறது. இந்த முறை ஊருக்குப் போயிருந்த போது ஊர் சுற்றி உள்ள ஆறுகள் கலங்கித்தான் வந்து கொண்டிருந்தன. மழையினால். முன்பெல்லாம் தெளிவாக இருக்கும் இப்படிக் கலங்கிப் பார்த்ததில்லை.

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. நம்பியாறு பொதிகை மலையில்/நம்பி மலையில்..அதுக்கு இந்தப்புறம் தான் மகேந்திரகிரி மலை. கிட்டத்தட்ட வள்ளியூர் பக்கம் தாண்டி பணகுடி காவல்கிணறு என்று இப்பக்கம்.

      கீதா

      நீக்கு
  2. திருநெல்வேலி பூரி மசாலில் அப்படி என்ன விசேஷமோ!  அந்தக் காலத்தில் தஞ்சையில் மந்தார இலையில் கட்டி அப்பா வாங்கி வரும் பூரி மசால் தனி வாசனை, சுவை.  எனக்கு அது நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஸ்ரீராம்...நாங்க தஞ்சாவூர்ல சாப்பிட்டதில்லையே!!!!! அதனால தின்னவேலி தின்னவேலி ன்னு நானும் நெல்லையும் சொல்றோமோ?

      நெல்லையைக் கேட்டால் தெரியும் அவர் வேறு எங்கேனும் சாப்பிட்டிருப்பாரே!!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  3. இதெல்லாம் முன்னாடியே செட் பண்ணி வச்சுக்க வேண்டாமோ..   பாருங்க ரயில் தாமிரபரணியைத் தாண்டியும் படம் எடுக்கவில்லை!இயற்கைக்கு காட்சிகள் எல்லாமே நன்றாய் இருக்கின்றன.   ரயிலிலிருந்து அழகாய் படம் எடுத்திருக்கிறீர்கள்.  அதென்ன gk's clicks..  gr இல்லையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா அது வேறு ஒன்றுமில்லை ஸ்ரீராம்....ரயில் ஜன்னல் வழியாக எடுக்கும் போது மாற்றிக் கொண்டே இருக்க முடியாதில்லையா...அதனால் பொதுவான ஆட்டோ செலக்ட் செய்து போட்டு வைத்திருந்தேன். இது டக்குனு இப்படி இருள் பிரியாத வேளையில் போகும் என்பது ஸ்ட்ரைக் ஆகவில்லை அதனால்!!! அதுவும் நான் சென்றது நவம்பர் இல்லையா கொஞ்சம் நேர்மாகுமே சூரிய ஒளி வர...அது ஸ்ட்ரைக் ஆகலை...!!!

      gk's click//

      என் இரு பெயர்ககளின் முதல் எழுத்து!!!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. பாருங்க ரயில் தாமிரபரணியைத் தாண்டியும் படம் எடுக்கவில்லை!//

      ஹாஹாஹா....தாமிரபரணி தாண்டியதும் மீண்டும் மலைகள் எடுக்கத் தயாராகிட்டேனே!!!

      நல்லகாலம் வலப்புறம் ஜன்னல் ஃப்ரீயாக இருந்தது. எனக்குக் கிடைத்த ஜன்னல் இடப்புறம்...அதனால் அங்கு மாறி வெளிச்சம் வந்ததும் எடுக்கத் தயாராகி...

      யிலிலிருந்து அழகாய் படம் எடுத்திருக்கிறீர்கள்.//

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  4. காணொளி அபாயகரமாக கதவோரம் நின்று நின்று எடுத்திருக்கிறீர்கள்.  நல்லவேளை, ரயில் நிற்கப்போகிறது என்பதால் ஸ்லோவாக செல்லும் நேரம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் நிற்கப் போய், அப்புறம் நின்றுவிட்டதால் அது கடைசியில் அதற்கு முன்னானது எல்லாம் ஜன்னல் வழிதான்...3, 4 காணொளிகளை இணைத்தது அது. அதனால் கதவு பக்கம் ஆனால் உள்ளே தள்ளி ஒரு கையை மட்டுமே வெளியில் நீட்டி எடுத்தென் ஸ்ரீராம். ஸ்பீடாக வருவது எல்லாம் உட்கார்ந்துதான்

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  5. படங்கள் காணொளிகள் மற்றும் விவரிப்பு என பதிவு வழி பகிர்ந்த விஷயங்கள் அனைத்துமே ரசிக்கத்தக்கது..... பார்க்கும்போதே இந்தப் பாதைகளில் பயணிக்க ஆசை வருகிறது. ரயிலில் இந்தப் பாதையில் உள்ள இடங்களை பார்த்தபடியே பயணிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. வாய்ப்பு கிடைக்க வேண்டும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வெங்கட்ஜி நீங்கள் மிகவும் ரசிப்பீர்கள். இப்பகுதியைக் கவர் செய்ய வேண்டும் என்றால் 15 நாட்களாவது வேண்டும். நிதானமாகச் சென்று வருவதற்கு. ஏகப்பட்ட இடங்கள் இருக்கிறது. சென்று வர. அதன் பின் ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட் அனுமதியுடன் செல்லும் இடங்களும் நிறைய இருக்கின்றன.

      நீங்களும் இந்தப் பாதையில் பயணிக்க வாய்ப்பு கிடைக்கும் வெங்கட்ஜி!!

      எனக்கும் அது போல நீங்கள் எழுதும் வட இந்தியப் பயணங்கள், அந்தமான் எல்லாம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உண்டு.

      மிக்க நன்றி வெங்கட்ஜி!!

      கீதா

      நீக்கு
    2. வெங்கட்ஜி உங்கள் கமென்ட் (ஸ்ரீராம் அன்று சொல்லியிருந்தது போல்) ப்ளாகர் கமென்ட் பக்கத்தில் காட்டவே இல்லை. மெயிலில் மட்டுமே பார்க்க முடிந்தது. நல்ல காலம் அங்கிருந்து வெளியிடு என்பதை அழுத்தியதும் வந்துவிட்டது இங்கு.

      ப்ளாகர் ரொம்பப் படுத்துகிறது

      கீதா

      நீக்கு
    3. வெங்கட்ஜி உங்களுக்கு முடிந்தால் அகஸ்தியர்கூடம் செல்லும் ட்ரெக்கிங்க் போய் வாருங்கள். பெண்களுக்கு அனுமதி இல்லைய். ரொம்ப நல்ல ட்ரெக்கிங்க். ஆனால் குழுவாகப் பயணிக்க வேண்டும் அதுதான் சிறந்தது. இரண்டு வழிகள் இருக்கின்றன. தமிழ்நாடு வழி செல்வது ஒன்று மற்றொன்று திருவனந்தபுரத்திலிருந்து செல்வது. ஒரு வழி அப்படியும் மற்றொரு வழி இப்படியுமாக வர முடியுமா என்று தெரியவில்லை. முயற்சி செய்யலாம். உங்களுக்கு ரொம்பப் பிடித்த விஷயமாச்சே!! ஆன்லைன் புக்கிங்க் இருக்கிறது. சென்று வந்தவர்களின் முழு ரூட் விவரங்களும், அனுபவங்களும் இணையத்தில் இருக்கிறது.

      கீதா

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. பதிவாகட்டும், பிற பதிவுகளுக்கு கருத்துகளாயினும், நல்ல விவரணையாக சொல்லுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே..! அதற்கு முதலில் உங்களுக்கு பாராட்டுக்கள்.

    மலைகளை ரசிக்க எனக்கும் ரொம்பவும் பிடிக்கும். படங்கள் மலைகளின் இயற்கை வனப்புடன் அருமையாக உள்ளது. அதுவும் அந்த இளங்காலை வெய்யில் தலைத் தூக்கும் போது எடுத்த மலையின் படங்களை மிகவும் ரசித்தேன். இந்த பகுதியெல்லாம் உறவுகள் பெயர்கள் சொல்லி தெரியும். ஆனால் நான் அங்கிருந்த (தி.லி) வரை அடிக்கடி சென்றதில்லை. அதனால் புதிதாக உங்களுடன் பயணத்தை ரசிக்கிறேன்.

    நான்கைந்து வருடங்களுக்கு முன்பு தி.லி சென்ற போது எங்கள் அண்ணா பையன் அகஸ்தியர் நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். சென்றவிடமெல்லாம் இயற்கை வனப்புகள் கண்களை கட்டிப் போட்டது. என் அலைபேசியை தவிர நல்ல காமிரா என்னிடமில்லை. இருந்திருந்தாலும் உங்களைப் போல புகைப்படங்கள் எடுக்கும் திறமையும் என்னிடமில்லை.

    /திருநெல்வேலியில் பிளார்ஃபார்மில் கிடைத்த ஒரு தண்ணிக் காப்பியைக் குடித்துக் கொண்டே /

    ஹா.ஹா.ஹா. அதென்னவோ அந்த தண்ணீரை குடிக்க வேண்டுமென நம் எல்லோருக்கும் தோன்றுகிறதே..! அதைச் சொல்லுங்கள்.. எங்கள் திருமணமான ஆரம்பத்தில் நாங்கள் சென்னையிலிருந்து தி.லி செல்லும் போது, இந்த தண்ணீரை ஒரிரு தடவைகள் குடித்திருந்தாலும், இப்போது ரொம்ப காலமாக அந்த பழக்கத்தை விட்டு விட்டோம்.

    பதிவு உங்களுடனேயே பயணிப்பது போன்ற உணர்வை தருகிறது. ரயில் பணகுடியில் நின்று கொண்டிருக்கும் போதே காணொளிகளை கண்டு விட்டு உங்களுடன் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவாகட்டும், பிற பதிவுகளுக்கு கருத்துகளாயினும், நல்ல விவரணையாக சொல்லுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே..! அதற்கு முதலில் உங்களுக்கு பாராட்டுக்கள்.//

      கமலாக்கா நன்றி சொல்வதுடன் கூடவே கூச்சமும் வருகிறது கமலாக்கா.

      //மலைகளை ரசிக்க எனக்கும் ரொம்பவும் பிடிக்கும். படங்கள் மலைகளின் இயற்கை வனப்புடன் அருமையாக உள்ளது. அதுவும் அந்த இளங்காலை வெய்யில் தலைத் தூக்கும் போது எடுத்த மலையின் படங்களை மிகவும் ரசித்தேன். இந்த பகுதியெல்லாம் உறவுகள் பெயர்கள் சொல்லி தெரியும். ஆனால் நான் அங்கிருந்த (தி.லி) வரை அடிக்கடி சென்றதில்லை. அதனால் புதிதாக உங்களுடன் பயணத்தை ரசிக்கிறேன்.//

      மிக்க நன்றி கமலாக்கா. உண்மைதான் அக்கா நமக்கு வாய்ப்பு கிடைப்பது அரிதுதானே. அதனால் நீங்கள் சொல்வது புரிகிறது. நீங்களும் ரசியுங்கள் இப்படி. நான் வெங்கட்ஜியின் பதிவுகளை அவர் போய் வந்த இடங்களைச் சொல்லும் போது போகமுடியலையே என்று ரசிப்பது போல!!!!!!

      ஹை அக்கா அகஸ்தியர் அருவி போனீங்களா விட்டு வர மனமே இருந்திருக்காதே. இயற்கை அப்படி இருக்கும். படிக்கட்டுகள் வழி ஏறிச் சென்றால் மேலே அங்கு கல்யாணி தீர்த்தம் என்று ஒரு தடாகம் இருக்கும் அதிலிருந்து தண்ணீர் அருவியில் கலக்கும். அந்தத் தடாகம் தண்ணீர் மிகவும் தெளிவாக இருக்கும். ரொம்பவும் புனிதம் வாய்ந்தது என்றும் இரவில் அங்கு சித்தர்கள் உலாவுவார்கள் என்றும் சொல்லப்படுவதுனுட். அங்கு சிறிய சிவன் கோயிலும், சாது கிருஷ்ணவேணி அம்மாள் அவங்களோட ஆஸ்ரமமும் உண்டு. போய் பல வருடங்கள் ஆகிவிட்டது.

      //என் அலைபேசியை தவிர நல்ல காமிரா என்னிடமில்லை. இருந்திருந்தாலும் உங்களைப் போல புகைப்படங்கள் எடுக்கும் திறமையும் என்னிடமில்லை.//

      அப்படி எல்லாம் இல்லை அக்கா. என் கேமரா மிகவும் சாதாரண கேமராதான். நானும் கூகுளில் இருந்துதான் புகைப்படக் கலை கற்றுக் கொள்கிறேன் கமலாக்கா. கத்துக்குட்டிதான்.

      இது பெரிய விஷயமும் இல்லை. உங்கள் மொபைலிலேயே நீங்கள் கண் வழி ரசிப்பதை க்ளிக் செய்துவிட வேண்டியதுதான்~!! உங்களைக் குறைவாகச் சொல்லிக் கொள்ளாதீர்கள்.

      நீங்கள் ரசித்து எழுதும் ஆழமான கருத்துகளை விட என் கருத்துகள் பெரிது இல்லை கமலாக்கா

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
    2. ஹா.ஹா.ஹா. அதென்னவோ அந்த தண்ணீரை குடிக்க வேண்டுமென நம் எல்லோருக்கும் தோன்றுகிறதே..! அதைச் சொல்லுங்கள்.. //

      ஹாஹாஹா அக்கா அதே தான். நீங்கள் விட்டுவிட்டீர்களே அப்பழக்கத்தை. நான் காபி எப்படி இருந்தாலும் குடித்துவிடுவேன் தான் என்றாலும் நல்ல காபி கிடைக்குமான்னு தேடல் இருக்கு பாருங்க!!!! ஹாஹாஹா (எந்த சாப்பாடும் கூட பார்ப்பது இல்லை கிடைப்பதைச் சாப்பிட்டுவிடுவேன் நான் ஃபஸ்ஸி கிடையாதுதான். இல்லையேல் பய்ணம் செய்ய முடியாதே!!!)

      //பதிவு உங்களுடனேயே பயணிப்பது போன்ற உணர்வை தருகிறது. ரயில் பணகுடியில் நின்று கொண்டிருக்கும் போதே காணொளிகளை கண்டு விட்டு உங்களுடன் தொடர்கிறேன். //

      மிக்க நன்றி கமலாக்கா ரசிப்பதற்கும் என்னோடு பயணிப்பதற்கும்!!

      கீதா

      நீக்கு
  7. படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது.
    விபரங்கள் அருமை.
    இரண்டாவது காணொளியில் படத்தொகுப்பில் பின்னணி இசையில் நேபால் நாட்டு இசையை ஞாபகப்படுத்துகிறது அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி!!! ரசித்தமைக்கு

      ஆமாம் கில்லர்ஜி அந்தப் பாடல் எனக்கும் நேபால் இசையை நினைவுபடுத்தியது. அதுவும் அந்த ஏழாம் அறிவு ல ஒரு பாட்டு வருமே அதுவும் நினைவுக்கு வந்தது. இந்த இசை மலைகளில் பயணிக்கும் இசை என்று சொல்லப்பட்டிருந்ததால் இதை தேர்ந்தெடுத்தேன் இசை நன்றாக இருந்தது போட்டுவிட்டேன்!!!

      மிக்க நன்றி கில்லர்ஜி!

      கீதா

      நீக்கு
    2. கில்லர்ஜி ஒரு வேளை அந்தப்பாட்டுக்கு இதிலிருந்து எடுத்துருப்பாங்களோ?!!!!!!!

      கீதா

      நீக்கு
  8. நான் இந்த ரூட்டில் வருடம் இரு முறையாவது பயணம் செய்பவன். என்கிட்டேயும் சோனி சைபர் ஷாட் உண்டு. ஆனாலும் உங்களுடைய கண்ணோட்டம் இல்லை. படங்கள் அழகு. உகாரணமாக சிவப்பு குளம் பச்சை வயல் நீல ஆகாசம் வெள்ளை மேகங்கள் எல்லாம் ஒரு படத்தில் கூடி இருந்து ஒரு திருஷ்டி பரிகாரமாக கருத்த தண்டவாளத்தையும் ஒரே படத்தில்  பார்க்கலாம். இது போன்று பல. 

    தென் பாண்டி நாட்டின் ஜியாகிரபி மற்றும் சரித்திரம் பற்றிய அறிவு சிறப்பு. மலைகளின் மேல் யாரும் பேர் எழுதி வைப்பதில்லை.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இந்த ரூட்டில் வருடம் இரு முறையாவது பயணம் செய்பவன். //

      அட!!

      என்கிட்டேயும் சோனி சைபர் ஷாட் உண்டு.//

      ஓ அதான் சரியாகச் சொல்லிட்டீங்களோ.

      //தென் பாண்டி நாட்டின் ஜியாகிரபி மற்றும் சரித்திரம் பற்றிய அறிவு சிறப்பு. மலைகளின் மேல் யாரும் பேர் எழுதி வைப்பதில்லை.//

      நன்றி ஜெகே அண்ணா. நானும் யோசித்ததுண்டு மலைகளின் பெயர் எப்படி வழங்கப்படுகிறது என்று. அடையாளத்திற்காக அந்தந்தப்பகுதிக்கு என்றாலும் எப்படி மலைக்குள் அப்படி எல்லை பிரித்து இது ஆனை மலை அகத்தியமலை நம்பி மலை என்று சொல்ல முடியும் தெரியவில்லை. குத்துமதிப்பாக இருக்கும் அங்கிருக்கும் அருவிகள், ஆறுகள் வைத்து என்று.

      மிக்க நன்றி அண்ணா

      கீதா

      நீக்கு
  9. மலையும், மலைசார்ந்த பகுதிகளும் என்றுமே அழகுதான்... இயற்கை நமக்களித்த வரப்பிரசாதங்களில் உயர்வானது மட்டுமல்லாது உன்னதமானதும்கூட...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இயற்கையின் வரப்பிரசாதமே நாஞ்சில் சிவா சகோ.

      கருத்திற்கு மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  10. பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா ரசித்தமைக்கு

      கீதா

      நீக்கு
  11. மிக அருமையான காணொளிகள். மிக மிக ரசித்தேன்.
    அதுவும் அந்த ரயில் சத்தம் தண்டவாளங்கள்
    என்று மிக இனிமை.
    அன்பின் கீதாமா,
    நன்றி. அருமைத் திரு நெல்வேலியின்
    அழகு கண்டு களிக்கவே ஒரு புண்ணியம் வேண்டும்.

    அதுவும் இப்படி அழகான புகைப்படக் கலையைக்
    கையில் வைத்த்ருக்கும் உங்களை என்ன சொல்லி
    பாராட்டுவது என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமைத் திரு நெல்வேலியின்
      அழகு கண்டு களிக்கவே ஒரு புண்ணியம் வேண்டும்.//

      ஆமாம். அதுவும் மேற்குப் பகுதிதான் பசுமை. கிழக்குப் பகுதி கொஞ்சம் வறண்டதுதான். அப்புறம் கடல்.

      //அதுவும் இப்படி அழகான புகைப்படக் கலையைக்
      கையில் வைத்த்ருக்கும் உங்களை என்ன சொல்லி
      பாராட்டுவது என்று தெரியவில்லை.//

      ஆ!! அம்மா...கோமதிக்கா, ராமலக்ஷ்மி, வெங்கட்ஜி எல்லாரும் இருக்கும் போது நான் ஜஸ்ட் கத்துக்குட்டிதான். அவங்க படம் எல்லாம் செமையா இருக்கும். அவங்க எல்லாம் இப்படியான காட்சிகள் எடுத்திருந்தால் இன்னும் மிகச் சிறப்பாக வந்திருக்கும். வெங்கட்ஜியும் கோமதிக்காவும் ஓடும் வண்டிகளிலிருந்து எடுத்தவை மிகச் சிறப்பாக இருக்கும்.

      ரசித்தமைக்கு மிக்க நன்றி அம்மா

      கீதா

      நீக்கு
  12. அன்பின் கமலா ஹரிஹரன் சொல்வது போல
    உங்களின் தனித்திறமையே உங்கள் சினேகித
    பாசம் தான். உலகம் அனைத்தையும் அரவணைக்கும் அன்பு.

    இன்னும் அந்த மலைகளையும், வயல்களையும்,
    தென்னை மரங்களையும் தாண்டி வரமுடியவில்லை.

    அந்தப் புகைப்படங்கள் பேசுகின்றன.
    தாமிரபரணியை நானும் படம் எடுக்கவில்லை.

    ஏன் என்றால் அந்த மாரிகால தண்ணீரின்
    வேகம் மனதைக் கவர்ந்து விட்டதால் படம் எடுக்க மறந்தேன்.
    அதுவும் காரில் சென்றதால்
    வேகம் எடுத்து விரைந்தன காட்சிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் தனித்திறமையே உங்கள் சினேகித
      பாசம் தான். உலகம் அனைத்தையும் அரவணைக்கும் அன்பு.//

      ஆ! அம்மா நீங்களும் சேர்ந்துகொண்டீர்களா!!!! அப்படி எல்லாம் இல்லை அம்மா. நீங்கள் தான் அதில் சீனியர் மோஸ்ட் அண்ட் எங்கள் எல்லாருக்கும் உதாரணம் முன்னோடி!

      இன்னும் அந்த மலைகளையும், வயல்களையும்,
      தென்னை மரங்களையும் தாண்டி வரமுடியவில்லை.//

      உண்மைதான் அம்மா எனக்கும் ஊருக்குச் சென்று வந்ததிலிருந்து அந்தப் பசுமையும் சுசீந்திரம் ஆஞ்சுவும் மனதை விட்டு அகலவில்லை.

      அந்தப் புகைப்படங்கள் பேசுகின்றன.//

      ஆமாம் ஆனால் தென்னகம் போகப் போக மலையடிவாரங்கள் ரொம்பவே ஆக்ரமிக்கப்பட்டுவிட்டன தனியார்க்கல்லூரிகள் க்வாரிகள் என்று. அது தனிக்கதை. அதைப் பற்றி பேச முடியாதே!!!!

      ஏன் என்றால் அந்த மாரிகால தண்ணீரின்
      வேகம் மனதைக் கவர்ந்து விட்டதால் படம் எடுக்க மறந்தேன்.
      அதுவும் காரில் சென்றதால்
      வேகம் எடுத்து விரைந்தன காட்சிகள்.//

      ஆமாம் அது கண் கொள்ளாக்காட்சிம்மா நானும் லயித்துவிடுவேன். வேகமாகப் போகும் போது எடுப்பது கடினம் தான் அம்மா. அதுவும் கார், பேருந்து எல்லாம். ரயிலில் என்றால் கொஞ்சம் முடியும். ரயிலில் செல்லும் போது ஃபொட்டோ எடுப்பதை விட வீடியோ எடுத்தால் ஓரளவு வரும்.

      மிக்க நன்றி அம்மா

      கீதா

      நீக்கு
  13. மகேந்திர மலையின் கம்பீரம் சொல்ல முடியாதது. எங்களுக்குக் கூட
    திரு நெல்வேலிதான் சொந்த ஊர்ப்பா:)
    நானும் ஜிகே என்ற லேபல் பார்த்துக் கொஞ்சம் குழம்பினேன்.'

    ஸ்ரீராம் கேட்டு விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேந்திர மலையின் கம்பீரம் சொல்ல முடியாதது. //

      ஆமாம் அம்மா. என்ன ஒரு அழகு. எப்போ பார்த்தாலும் பச்சை. அடர்த்தியாகவும் இருக்கும்.

      //எங்களுக்குக் கூட திரு நெல்வேலிதான் சொந்த ஊர்ப்பா:)//

      ஹாஹாஹாஹாஹா நாமெல்லாம் ஒரே ஊர் தான். அதே போல யாதும் ஊரே யாவரும் கேளிர்!! ஊர் ஊராகச் சென்று வாசம் செய்தவர்கள்!!!

      நானும் ஜிகே என்ற லேபல் பார்த்துக் கொஞ்சம் குழம்பினேன்.'//

      ஹாஹாஹாஹா முதலில் கீதா என்று போட்டுக் கொண்டிருந்தேன்...அல்லது g's என்று அப்புறம் ஜிகே என்று நமக்கு இல்லாத ஒன்றை இப்படியேனும் போட்டுக் கொள்வோம் என்று இப்படி முன்பு பள்ளி, கல்லூரிக் காலத்தில், அப்புறம் மிகச் சிறிய காலத்தில் எழுதியவற்றை இப்படி புனைப்பெயரில் போட்டதுண்டு!!!!!

      ச்சே கௌ அண்ணா போல ரகசியமாக வைத்துக் கொள்ளத் தெரியவில்லை!!!! ஹாஹாஹாஹா

      மிக்க நன்றி அம்மா

      கீதா

      நீக்கு
  14. புகைப்படங்கள் அருமை. மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  15. புகைபடங்கள், காணொளிகள் மிக அருமை. போட்டோக்கள் திகுப்பு காணொளி பின்னனி இசை சூப்பர்.

    மலையை வெண் மேகங்கள் சூழ்ந்து இருப்பது பார்க்கவே அழகு.

    பசுமையான காட்சிகளும் காற்றாலைகள் சுற்றும் அழகும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புகைபடங்கள், காணொளிகள் மிக அருமை. போட்டோக்கள் திகுப்பு காணொளி பின்னனி இசை சூப்பர்.//

      மிக்க நன்றி கோமதிக்கா

      //மலையை வெண் மேகங்கள் சூழ்ந்து இருப்பது பார்க்கவே அழகு.//பசுமையான காட்சிகளும் காற்றாலைகள் சுற்றும் அழகும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.//

      ஆமாம் அதுவும் என்ன பெரிசா இருக்கு அவை. ரொம்ப அழகு அதுவும் கூட்டமாகப் பார்ப்பது ரம்மியம்

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  16. கள்க்காடு, வள்ளீயூர் எல்லாம் சொந்தங்கள் இருந்தார்கள்.
    நான் நன்றாக படம் எடுப்பதாய் நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள், நானும் ஏதோ எடுக்கிறேன், கற்றுக் கொள்ளவில்லை.

    நீங்கள் நிறைய விஷயம் தெரிந்து வைத்து இருக்கிறீர்கள் கீதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இப்போதும் களக்காடு, திருநெல்வேலியில் இருக்கிறார்கள். வள்ளியூரில் இல்லை. நட்புகள் இருந்தார்கள் இப்போது அவர்களும் சென்னையில்

      அக்கா நீங்கள் நிஜமாகவே ரொம்ப நன்றாக எடுக்கிறீர்கள். நான் இப்போதுதான் கற்கத் தொடங்கியுள்ளேன். நிறைய விஷ்யம் எதுவும் தெரியாது அக்கா. சமீபமாகத்தான் கொஞ்சம் கற்கிறேன். கேமராவில் உள்ள பல ஆப்ஷன்ஸையும் பயன்படுத்தி ஒரே காட்சியை எடுத்து எது எப்படி வருகிறது என்று சில சமயங்களில் தெரிந்து கொள்வேன். ஆனால் இப்போதெல்லாம் மறந்துவிடுகிறது.

      படம் எடுக்க நமக்கு நிறைய நேரம் இருந்தால் அந்த சமயத்தி ல் யோசித்து செய்யலாம் ஆனால் நாம் பல வேலைகளுக்கு இடையில் எடுப்பதால் டக்கென்று அப்போது அந்த சமயத்தில் எடுத்துவிடுகிறேன் அக்கா...

      தெரிந்து கொள்ளும் ஆசை நிறைய இருக்கிறது.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  17. இயற்கைக் காட்சிகள் அருமை. நன்றி

    பதிலளிநீக்கு
  18. நன்றி நாகேந்திர பாரதி சகோ

    கீதா

    பதிலளிநீக்கு