மூன்று வருடங்களுக்கு முன்பு ஹார்ட் காப்பி ஆக வெளியிட்ட என், “காலம் செய்த கோலமடி” எனும் நாவல் அமேசான் கிண்டிலில் கடந்த வாரம் வெளியிட முடிந்தது. இதற்கு எல்லா உதவியும் செய்து வெளியிட்டுத் தந்த நம் அன்பு நண்பர், பயணக் காதலர் வெங்கட்ஜிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் மிகையாகாது.
அது
போல் இப்புத்தகத்திற்கு அணிந்துரையும், முன்னுரையும், மதிப்புரையும் எழுதிய முனைவர்
திரு ஜம்புலிங்கம் ஐயா, திருமதி தேனம்மை அவர்கள், இமயத்தலைவன் திரு ராய செல்லப்பா சார்,
ஓவியம் வரைந்து உயிரூட்டிய திரு தமிழ்ச் செல்வன், நூலழகு செய்த வாத்தியார் பாலகணேஷ்
போன்றவர்களின் உதவி என்றென்றும் மறக்கவியலாததும் என் மனமார்ந்த நன்றிக்கும் உரியதாகும்.
அதே
போன்று நூல் வெளியிட்ட அன்று வருகை தந்து சிறப்பித்த நம் முனைவர் ஜம்புலிங்கம் ஐயாவின்
மகன் திரு பாரத் அவர்களுக்கும், நாவலைப் பற்றிய கருத்துரை வழங்கிய சேட்டைக்காரன் திரு
வேணுகோபால், திரு. ஆவி, திரு. கார்த்திக் சரவணன், திரு பாலகணேஷ் அவர்களுக்கும், அதன் பின் ப்திவின் வழியாகத் திருப்பதி மகேஷ்,
அரவிந்த், சகோதரி கவிப்பூரணி, பேராசிரியர் திரு முனிரத்தினம் அவர்கள் எல்லோருக்கும்
என் மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நேரமின்மையால்
அவதிக்குள்ளாகிறவர்கள்தாம் நாமெல்லோரும். இருப்பினும் இந்நாவலை இதற்கு முன் வாசிக்காதவர்கள்
வாசிப்பதுடன், மற்றவர்களுக்கும் வாசிக்கச் சொல்லி ஊக்குவிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
புத்தகத்திலிருந்து….
10
ல் லதா
“கடந்த
பதினைந்து வருடங்களில் எத்தனை மருத்துவக் கல்லூரிகள்! எத்தனை மருத்துவமனைகள்! எல்லா
இடங்களுக்கும் என்னைக் கூட கூட்டிப் போகாமல் விசாலியையும், நித்யாவையும் கூட்டிக் கொண்டு
போய் அவர்களைப் பெயர் பெற்ற மருத்துவர்களாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தது ஜெயலட்சுமிதான்.
தனியே வாழும் எனக்கு எப்போதும் துணையாய் நிற்கும் ஜெயலட்சுமி என் கணவருடன் நீண்ட காலம்
சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதுதான் நான் எல்லா தினங்களிலும் இறைவனிடம் பிரார்த்திக்கும்
பிரார்த்தனைகளில் ஒன்று. இவ்வுலகில் ஏதேனும் ஒரு பெண் இப்படிப்பட்ட என்னைப் போல் ஒரு
பிரார்த்தனை செய்வாளா?”
அமேசான் கிண்டிலில் புத்தகத்தின் சுட்டி இதோ....
மிக்க நன்றி
-----துளசிதரன்
வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்ஜி
நீக்குதுளசிதரன்
அன்பின் துளசிதரன்,
பதிலளிநீக்குஎன்றும் நலமுடன் இருங்கள்.
மிக மிக நல்ல செய்தி கொடுத்திருக்கிறீர்கள்.
மனம் நிறை வாழ்த்துகள்.
கதையின் ஒரு பாராவே வசீகரிக்கிறது.
தரவிறக்கம் செய்து படிக்கிறேன்.
இன்னும் நிறைய நூல்கள் வரட்டும். அன்பின்
வெங்கட்டுக்கு அன்பு.
மிக்க நன்றி வல்லிம்மா
நீக்குதுளசிதரன்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதங்களின் மின்னூலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். புத்தகத்தை சிறப்பான முறைகளில் அறிமுகப்படுத்த உதவியாயிருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் வணக்கங்களும், நன்றிகளும். புத்தகத்தின் அட்டைப்படம் நன்றாக உள்ளது. கதையின் ஒரு சிறு பகுதியும் படித்ததில் மனதை கவர்கிறது. மேலும் தரமிறக்கி வாசித்து மகிழ்கிறேன். நீங்களும் இதுபோல் இன்னமும் நிறைய நூல்கள் எழுதி, மின்னூலாக வெளியிட வேண்டுமென ஆண்டவனை மனமாற வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்
நீக்குதுளசிதரன்
வாழ்த்துகள் உயரம் தொட பிரார்த்தனைகளும் கூடிய...
பதிலளிநீக்குமிக்க நன்றி கில்லர்ஜி
நீக்குதுள்சிதரன்
கிண்டிலில் புத்தகம் வெளியிட்டதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோதரி அபயா அருணா
நீக்குதுளசிதரன்
வாழ்த்துக்கள்! நிறைய புத்தகங்கள் வெளி வரட்டும்.
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோதரி கோமதி அரசு
நீக்குதுளசிதரன்
அமேசான் தளத்தில் உங்கள் மின்னூல் வெளியீடு... மனம் நிறைந்த வாழ்த்துகள். மேலும் பல நூல்களை இங்கே வெளியிட எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி வெங்கட்ஜி, உங்கள் வாழ்த்திற்கு! உங்களின் உதவியால்தானே வெளியிட முடிந்தது. அதற்கும் மிக்க மிக்க நன்றி.
நீக்குதுளசிதரன்
உங்ள் முயற்சி பாராட்டத்தக்கது. மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா உங்களின் வாழ்த்திற்கும் மதிப்புரை எழுதித் தந்தமைக்கும்., தங்கள் மகனை அனுப்பிச் சிறப்பித்தமைக்கும் மிக்க நன்றி
நீக்குதுளசிதரன்
Really Great. I am unable to download. How to download?
பதிலளிநீக்குஅட்டைப் படம் அருமை. பதிவிறக்கம் செய்து விட்டேன். வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
பதிலளிநீக்குஅட்டைப் படம் அருமை. தரவிறக்கம் செய்து விட்டேன். வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
பதிலளிநீக்குசூப்பர். அருமையான நடை. ரசித்தேன்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!!!
பதிலளிநீக்கு