இதற்கு முன் ஒரு பதிவில் சியாமளா மாமி எழுதிய சாம்பு ஸ்டைல் கதை ஒன்று வெளியிட்டிருந்த நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன். இதோ அவர் எழுதிய மற்றொரு கதை
-----கீதா
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
காலத்தி
னால்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
பாண்டுரங்கபுரம். அழகான சிறிய ஊர். அழகான பாண்டுரங்கன் கோயில்கிழக்கே. மேற்கே அருள் தரும் உமையொருபாகன் சிவனார் கோயில். தெற்கே முத்துமாரியம்மன் கோயில். நீண்ட கடைத்தெரு. பஸ்டான்ட் என எல்லா வசதிகளும் கொண்ட டவுன்.
கடைத்தெருவின்
நடுவே பெரிய
கடைத்தெருவின் நடுவே
ஊருக்கே பெரிய
கட்டிடம் பாண்டுரங்கன்
ஹைஸ்கூல். எல்
கே ஜி
முதல் 12 ஆம்
வகுப்பு வரை.
மாணவ மாணவிகள்
அழகான சீருடையொடு
கல கலவென
பேசிக் கொண்டும்
சிரித்துக் கொண்டும்
கொடியேற்றத்திற்கு முன் செல்ல வேண்டும் என்று வேகமாகச்
சென்றனர்.
பள்ளியில் இருக்கும்
நல்ல விசாலமான
விளையாட்டு மைதானம்
நடுவே தேசிய
கொடிக் கம்பம்.
1500 மாணவ மணிகளும்
வகுப்பு வாரியாக
வரிசையில் நிற்க
தலைமையாசிரியர் தில்லைவாணன்
கொடியேற்ற மாணவ
மணிகள் தேசிய
கீதமும், தமிழ்த்தாய்
வாழ்த்தும் பாடி
அப்பள்ளியின் முக்கியப் பிரார்த்தனையான
“பாண்டுரங்கா
எங்களை நல்வழி
நடத்துவாயாக, பாண்டுரங்கா
எங்களை நல்வழி
நடத்துவாயாக” என்பதைக்
கூறி இரு
கரம் கூப்பி
வணங்கி பின்
அவரவர் வகுப்புக்குச்
சென்றனர்.
ருக்மணி
மேடம் துணை
தலமையாசிரியர், தலைமையாசிரியர்
தில்லைவாணனுக்கு எதிரில்
அவருக்குக் காலை
வணக்கம் சொல்லியபடி
அமர்ந்தார்.
“என்ன
மேடம்? உங்களுக்கு
இன்று 1 ஸ்ட்
பீரியட் ஃப்ரீதானே?
நல்லதாப் போச்சு.
இன்னிக்கு புதிய
அட்மிஷன் 10 பேர்.
நீங்க உதவிக்கு
இருப்பது ‘பாண்டுரங்க
அருள்தான்’ “ என்றார்.
முதல்
அட்மிஷன் மிஸ்டர்
ரங்கநாதன் தன்
மகள் வாசுகியை
12 ஆம் வகுப்பில்
சேர்க்க வந்திருந்தார்.
சென்னை தலைமை
தபால் அலுவலகத்தில்
பணிபுரிந்தவர். இப்போது
போஸ்மாஸ்டராக அவர்
சொந்த ஊரான
பாண்டுரங்கபுரத்துக்கே வந்திருந்தார்.
தன்
மகளுக்குத் தான்
படித்த பள்ளியை
காண்பிப்பதில் ரொம்பப்
பெருமை.
அதே பள்ளியில்
அவளுக்கு அட்மிஷன்
கிடைக்க வேண்டுமே
என வேண்டிக்
கொண்டே இருந்தார்.
துணை
தலமையாசிரியரைப் பார்த்த்தும்
அவர் கண்கள்
விரிந்தது. ருக்மணியும்
அவரைப் பார்த்து
வியந்தார்.
“நீங்கள்
ரங்கநாதன் தானே?
எனக்கு 2 வருடம்
சீனியர் ஸ்டூடன்ட்”
“ம்.
நன்றாக நினைவிருக்கு.
ருக்மணிதானே நீங்கள்?”
பரஸ்பரம்
அறிமுகம் முடிந்ததும்,
“உங்கள் மகள்
வாசுகியின் அட்மிஷன்தானே?
10 ஆம் வகுப்பில் நல்ல மார்க்
வாங்கியிருக்கிறாளே. அட்மிஷனுக்கு
ஒரு ப்ராப்ளமும்
இல்லை” என்றவாரே வழிமுறைகளைச்
சொன்னார். ரங்கநாதனும் தன் வீட்டிற்குப் பக்கத்துத் தெருவில்தான் சொந்த வீடு வாங்கிக்
கொண்டு வந்திருப்பதும் தெரியவந்தது.
அட்மிஷன் கிடைத்ததில் மன மகிழ்ச்சியோடு சென்றார்கள் தந்தையும்
மகளும்.
“நான் எதிர்பார்க்கவே இல்ல எனக்கு ஜூனியரா படிச்சவளே அங்க அஸிஸ்டென்ட்
ஹெட்மிஸ்ட்ரஸ்ஸா இருக்கா. உடனே அட்மிஷன் கிடைச்சிருத்து.” என்று தன் மனைவியிடம் சொல்லி
மகிழ்ந்தார் ரங்கநாதன்.
அங்கு பள்ளியில், அட்மிஷன் வேலைகளை முடித்துவிட்டு தலைமை ஆசிரியரிடம்
எல்லாத் தகவல்களையும் சொல்லிவிட்டு, சிறிது ஓய்வெடுக்க ஸ்டாஃப் ரூமுக்குள் சென்ற ருக்மணியின்
கண்கள் பனித்திருந்தது.
அவர் மனம் 25 வருடங்கள் பின்னோக்கிச் சென்றது.
இரட்டைப் பின்னலும், பாவாடை தாவணியுமாக தோழிகளோடு சிரித்துப்
பேசியபடியான இனிமையான நாட்கள்.
வீட்டிற்குச் செல்லப்பெண். கெட்டிக்காரி. எல்லாவற்றிலும் படு
சுட்டி.
அன்றைக்கு வெள்ளிக் கிழமை. சனி, ஞாயிறு விடுமுறை. விடுமுறையில் பேச்சுப் போட்டிக்குத் தயார் செய்யலாம்
என்ற எண்ணத்தில் அது சம்பந்தமாக இரண்டொரு புத்தகங்களை எடுக்க லைப்ரரிக்குப் போனாள்.
தோழிகள் சுமதி, முத்துமணி, லீலா எல்லோரும் போட்டி ஆர்வம் இல்லாதவர்கள்
என்பதால் கிளம்பிவிட்டார்கள். வேகமாக லைப்ரரி முடியும் முன் புத்தகங்களை எடுக்க ஓடினாள்.
ஒவ்வொரு ஜன்னல்களாக அடைத்து வந்து கொண்டிருந்தார். ப்யூன் முனிசாமியை
ஆசிரியர்கள் மாணவர்கள் எல்லோரும் அப்படித்தான் கூப்பிடுவார்கள்.
லைப்ரரி கதவைப் பட்டென்று சாத்தும் சத்தம் கேட்டதும் புத்தகங்களை
எடுத்துக் கொண்டு முனியண்ணா என்று கூப்பிட்டுக் கொண்டே விரைந்து வந்த ருக்மணி கதவு
வெளிப்பக்கமாகத் தாள் போட்டிருப்பதைப் பார்த்த ருக்மணி,
“முனியண்ணா கதவை திறண்டுவிடுங்க” எனச் சத்தம் போட்டுக் கதவைத்
தட்டினாள்.
முனியண்ணா வேகத்தோடு வந்து
கதவைத் திறந்தவன் மீண்டும் கதவை மூடி அவள் கையைப் பற்றி இழுக்க,
“ஐயோ காப்பாற்று பாண்டுரங்கா, காப்பாற்று” என்று அலறினாள்.
எல்லோரும் பள்ளியை விட்டுப் போயாச்சு. யாரும் இல்லை என்ற தைரியத்தில்
அவளை நெருங்கிட ருக்மணி கதவு மேல் சாந்து முதுகால் இடித்து,
“பாண்டுரங்கா , ரங்கா காப்பாத்து” எனக் கூச்சலிட, வெளியில் கிரிக்கெட்
விளையாட்டு முடிந்து மெதுவாக வெராண்டாவில் வந்து கொண்டிருந்த ரங்கநாதனுக்கு வெராண்டாவை
அடுத்தாற்போல் இருந்த லைப்ரரி கதவு தடதடக்கும் சத்தமும் கூடவே “ரங்கா ரங்கா பாண்டுரங்கா”
என்ற கூக்குரலும் கேட்டிட ரங்கநாதனுக்கு ஏதோ பொறி தட்டியது
“டேய் முரளி, கேசவ், பாண்டு இங்க வாங்கடா” என, புறப்பட்டுக்
கொண்டிருந்த தன் நண்பர்களைக் கூப்பிட்டான்.
உள்ளே பயந்து போன முனியண்ணா வேகமாய்க் கதவைத் திறந்துவிட, சிட்டாய்
வெளியே பாய்ந்தாள் ருக்மணி.
கை கூப்பியபடி கண்களால் ரங்கநாதனுக்கு நன்றி கூறியபடியே படபடப்புடன்
வேகமாகச் சென்று விட்டாள் ருக்மணி.
வெளியே வந்த முனியண்ணா ரங்கநாதனைப் பார்த்து,
“என்னடா இந்நேரத்துக்குப் பள்ளிக் கூட்த்தில?” என்று மாணவர்களை
விரட்டினான்.
ரங்கநாதனுக்கு எதுவும் புரியவில்லை என்றாலும் ஏதோ ஆபத்து விலகியது
என்று நினைத்துக் கொண்டே சென்றுவிட்டான்.
வீட்டுக்கு வந்த ருக்மணிக்கு மனம் படபடத்துக் கொண்டே இருந்தது.
அந்த நிகழ்வு ரொம்பவும் பாதித்திருந்தது. பாண்டுரங்கன் சன்னதியில் விழுந்து கும்பிட்டு
நன்றி சொல்லி, அம்மாவைக் கட்டி அணைத்துக் கொண்டு தேம்பினாள்.
“என்னடி ஏன் ஒரு மாதிரி இருக்கே?” என்று கேட்ட அம்மா, ‘குழந்தை
எதையோ பார்த்து பயந்துட்ட போல’ என நினைத்துக் கொண்டு, ருக்மணியை நிற்க வைத்து மிளகாயும்
உப்பும் சுற்றிப் போட்டாள்.
அன்றிலிருந்து ருக்மணி துணைக்கு யாரும் இன்றித் தனியாகப் போனதில்லை. பாண்டுரங்கன் ரங்கநாதனாக வந்து தன்னைக் காப்பாற்றியதாகவே மனதில் பதிந்து போனது.
பின் +2 முடித்து காலேஜில் சேர்ந்து ஆங்கில இலக்கியம் எடுத்துப்
படித்து நல்ல தேற்சி பெற்று அவள் படித்த பள்ளியிலேயே துணை தலைமை ஆசிரியை பதவி.
கை நிறைய சம்பளம். அருகிலிருந்த சர்க்கரை ஆலையில் மேனேஜராக அன்புக்
கணவன் ஜகன். அவர்களுக்கு அருமை மகன் பாண்டுரங்கன்.
மகன் வளர்ந்து பெரியவனாகி ஒரு சாஃப்ட்வேர் இஞ்சினியர்.
எல்லாம் நல்லபடியாகத்தான் இருந்தது என்றாலும் அந்த +2 சம்பவம்
நெஞ்சுக்குள் புதைந்திருந்தது. ரங்கநாதன், பாண்டுரங்கனாகவே மனதில் உறைந்திருந்ததால், ரங்கநாதனைப் பார்த்தவுடன் அந்த பாண்டுரங்கனையே பார்த்தது
போல் தோன்றியது.
வாசுகியும் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிப் படிப்பையும்
முடித்து கல்யாணத் தகுதி பெற்றுத் தயாராகி நின்றாள். வாசுகிக்கு வரன் தேடும் விஷயம் ருக்மணிக்கும் தெரியவந்தது. ருக்மணிக்கு ஏற்கனவே அந்த எண்ணம் இருந்தது.
கணவன் ஜகனிடம், “ஏங்க நம்ம பாண்டுவுக்கு, நம்ம பக்கத்துத் தெருல
இருக்கற ரிட்டையர்ட் போஸ்ட்மாஸ்டர் ரங்கநாதன் பெண்ணைப் பார்த்தால் என்ன” என்றதும்,
‘மனைவி செய்வது, சொல்வது எல்லாம் சரியாத்தான் இருக்கும்- வாழ்க்கை அனுபவம்' என்று நினைத்த ஜகன், “பாண்டுவையும் ஒரு வார்த்தை கேட்டுடலாம்” என்றார்.
பாண்டுவோ, அம்மா அப்பா விருப்பம் என்று சொல்லிட, ரங்கநாதனிடம்
தாங்கள் வருவதாகச் சொல்லிவிட்டு வெள்ளிக்கிழமை அன்று ருக்மணியும், ஜகனும் கூடை நிறைய
பூக்கள், தட்டு நிறைய வெற்றிலை பாக்கு, மஞ்சள், கூடவே வைர நெக்லஸ், ஒரு சிறிய கவரில்
உள்ளே 2 லட்ச ரூபாய் இவற்றோடு ரங்கநாதன் வீட்டிற்குச் சென்றார்கள்.
வெற்றிலைப் பாக்கு பூ பழத்தோடு வந்தவர்களைக் கண்டு ரங்கநாதனுக்கு
ஆச்சரியம். ஒன்றும் புரியாமல் ரங்கநாதனும் அவர் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து குழம்பினர்.
“உங்க பெண்ணை எங்களுக்குப் பிடிச்சிருக்கு. ஜாதகப் பொருத்தம் எல்லாம் வேண்டாம், பாண்டுரங்கன் பார்த்துப்பான்னு தோணித்து அதனால எங்க பையனுக்குச்
சம்பந்தம் பேசலாம்னு…..”
என்று தயங்கியபடியே அவர்கள் சொல்ல, ரங்கநாதனும் அவர் மனைவியும்
ஆச்சரியத்தில் வாயடைத்துப் போயினர். ஒரு நல்ல சம்பந்தம் வீடு தெடி வருகிறதே என்று.
ஜகனும், ருக்மணியும் அவர்கள் கொண்டு வந்தவற்றை ரங்கநாதனிடம்
கொடுத்து அப்படியே அவர்கள் காலில் விழுந்துவிட்டால் ருக்மணி.
ரங்கநாதனுக்கும் அவர் மனைவிக்கும் என்ன சொல்ல செய்ய என்று தெரியாமல்
இன்னும் ஆச்சரியத்தில் இருந்து விலக முடியாமல், ஜகனும், ருக்மணியும் எழுந்ததும்
“எதற்குமா இத்தனையும்” என்றிட
“எங்கள் மருமகளுக்கு இது. தட்டாமல் வாங்கிக்கோங்கோ, உங்களுக்குப் பொருத்தம் பார்க்கணும்னா...”,
"பாண்டுரங்கனை நம்பி நீங்க இவ்வளவு பெரிய மனசு பண்ணி வரப்ப, நாங்க என்ன சொல்றது? அவனே பார்த்துப்பான்...."
“கல்யாண செலவு எல்லாம் எங்களோடதே. நீங்களும் உங்க மனைவியும்
எங்களை வேறா நினைக்காதீங்கோ” என்று கண்களில் நீர் மல்க தன் நெடுநாள் நன்றிக் கடனைத்
தீர்த்த மகிழ்ச்சியில் நெஞ்சம் நிறைய கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கத் தனக்கு வாழ்வு
கொடுத்த ரங்கநாதனை, தான் வணங்கும் பாண்டுரங்கனாகவே நினைத்துக் கைகூப்பி நின்றாள் ருக்மணி.
இது எதுவும் மனதில் தோன்றாத ரங்கநாதனோ வியப்பிலிருந்து மீள முடியாமல் பிரமிப்புடன் நின்றிருந்தார்.
-----சியாமளா – 24-06-2013
அருமை...
பதிலளிநீக்குமிக்க நன்றி டிடி கருத்திற்கு
நீக்குகீதா
தலைப்பு மிகவும் அழகாக இருக்கிறது. கதைக்கு ஏற்றார்போல்... வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு
நீக்குகீதா
கதை பாட்டி சொன்ன கதையா? பிள்ளைகளுக்கு சொல்லுவது போல் இருக்கிறது. முரளி சார் கிண்டிலில் நாவல் வெளியிட்ட செய்தியின் இலவச இணைப்பு?
பதிலளிநீக்குJayakumar
சியாமளா மாமி - இவரைப் பற்றி முன்பு பதிவில் சில்லியிருக்கிறேன் ஜெகெ அண்ணா. திருவனந்தபுரத்தில் இருந்த போது எங்களுக்கு நட்பான குடும்பம். மாமி எழுதிய கதை.
நீக்குமுரளி சார்? ஓ துளசி - கிண்டிலில் நாவல் வெளியிட்ட செய்தியின் இலவச இணைப்பு?//
ஹாஹாஹா இது ஒரு பதிவாகத்தான் மாமி எழுதியிருந்த கதைகள் 3, 4 தான் என்னிடம் அவர் மகள் கொடுத்தது இருக்கிறது. (அவர் மகளும் எனக்கு நல்ல தோழி) பதிவாகத்தான். மிச்சத்தையும் கேட்டிருக்கிறேன். மாமி இப்போது இல்லை.
மிக்க நன்றி அண்ணா
கீதா
சில்லியிருக்கிறேன் - சொல்லியிருக்கிறேன்
நீக்குவர வர தட்டச்சில் ரொம்பப் பிழைகள் வருகின்றது.
கீதா
அவ்வளவு அப்பாவியா ரங்கநாதன் என்று தோன்றினாலும் நல்லதொரு கதை. யாருக்கு ரிட்டையர்மெண்ட் சமயத்தில் சொந்த ஊரிலேயே போஸ்டிங் கிடைக்கிறது? எல்லாமே பாசிட்டிவாக நடக்கும் இனிய கதை. ருக்மணி அதே பள்ளியில் வேலையில் சேரும்போது அந்த முனியண்ணா என்ன ஆனான் என்கிற கேள்வியும் மனதில் எழுகிறது!
பதிலளிநீக்குஸ்ரீராம் எனக்கும் கதையை தட்டச்சு செய்த போது தோன்றியது அந்த முனியண்ணாவைப் பற்றி மாமி எதுவும் எழுதியிருக்கவில்லையே என்று. நோட்டில் வேறு பக்கங்களில் ஏதேனும் இக்கதையின் குறிப்புகள் அல்லது விட்டவை ஏதேனும் இருக்கிறதா என்றும் தேடினேன். நான் கதையில் சில முடிவு பெறாமல் இருந்த வாக்கியங்களையும் கொஞ்சம் சரியாக இல்லாத வாக்கியங்களையும் திருத்தினாலும் அவர் படைப்பில் நான் எதுவும் நானாக எழுத முடியாதே என்று எழுதவில்லை. முதலில் தோன்றியது முனியண்ணா இல்லாததால்தான் ருக்மணி அதே பள்ளியில் சேர்ந்தாரோ என்றெல்லாம் கூடத்தோன்றி இடையில் நம்ம கைவரிசையை காட்டலாமா என்று தோன்றியது ஆனால் மனம் ஒப்பவில்லை என்பதால் எழுதவில்லை.
நீக்குநம் கேள்விக்கு மாமி எப்படி பதில் சொல்வார்!!!???? ஹாஹாஹா
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
நல்லதொரு சிறுகதை. முனி அண்ணா என்னவானார் என்ற கேள்வி மனதுக்குள் எழுந்தாலும் நேர்மறை எண்ணத்தோடு கதையை கொண்டு சென்றது சிறப்பு.
பதிலளிநீக்குமிக்க நன்றி வெங்கட்ஜி உங்கள் கருத்திற்கு.
நீக்குஆமாம் எனக்கும் அந்தக் கேள்வி எழுந்தது..
கீதா
மிக்க நன்றி வெங்கட்ஜி கருத்திற்கு
நீக்குகீதா
கதையில் ஒரு நீதியை சொல்லியேத் தீர வேண்டும் என்று நினைத்துக் கொண்டு கதை எழுதினால் சுவை குன்றி விடும்.
பதிலளிநீக்குபானுக்கா மிக்க நன்றி கருத்திற்கு
நீக்குமாமி இருந்திருந்தால் அவரோடு இது பற்றி நிறைய பேசியிருக்கலாம். ரொம்ப நல்ல மனதும் கருத்தைக் கேட்டுக் கொள்ளும் பரந்த மனதும் உடையவராக இருந்தவர்
கீதா
இது கதையோ நிகழ்வோ தெரியலை/புரியலை. ஆனால் வருடங்கள் இடிக்கின்றனவே. சுதந்திரத்திருநாள் ஆகஸ்டில் வருகிறது. அப்போத் தான் ரங்கநாதன் மாற்றலாகி வந்திருப்பார் என நினைத்தாலும் அந்தச் சமயம் கூட அந்தக் கிராமத்துப் பள்ளியில் சேர்க்கைகள் நடைபெற்றன என்பது முதல் வியப்பு. மாற்றலாகி வந்த பெண்ணிற்கு அந்தப் பள்ளியில் சேர அனுமதி கிடைப்பது ஆச்சரியம் இல்லை தான். ஆனால் அவளோடு சேர்ந்து பல புதிய மாணவர் சேர்க்கைகள் இருப்பதாகக் காட்டியது இன்னும் ஆச்சரியம்.
பதிலளிநீக்குகதைதான் என்று நினைக்கிறேன் கீதாக்கா. அது சுதந்திர் தினம் இல்லை அக்கா. முன்பு நான் படித்த போது கூட தினமும் அல்லது வாரத்தில் ஒரு நாள் விட்டு, வாரத்தில் ஒரு நாள் என்றெல்லாம் கூட கொடியேற்றம் ப்ரேயர் இருந்தது.
நீக்குமற்றபடி விவரங்கள் மாமிதான் எழுத்தாளர் என்பதால் அவர் அறிந்ததே...ஆனால் ஒன்று நான் இப்படி மாறி வந்து கொஞ்சம் தாமதமாகப் பள்ளியில் சேர்ந்த போது என்னோடு கூடவே வேறு வேறு வகுப்புகளுக்கு மாணவிகள் சேர்ந்ததும் நடந்திருக்கிறது.
மிக்க நன்றி கீதாக்கா
கீதா
நல்லவேளையாக ருக்மிணி அப்போது தப்பினாலும் முனியண்ணா அவளை அன்றோடு விட்டு விட்டானே என்பதும் இன்னொரு ஆச்சரியம். பொதுவாக இந்தக் கதை கடைசியில் எல்லாம் சுபம் என்பதைச் சொல்லும்படியாகவே அமைந்து விட்டது. ருக்மிணியின் நன்றிக்கடன் ரங்கநாதனுக்குத் தெரிய வாய்ப்பில்லை தானே!
பதிலளிநீக்குமாமி ரொம்பவே பாசிட்டிவ் திங்கிங்க் உடையவராக இருந்தவர். ஆமாம் ருக்மணியின் நன்றிக்கடன் ரங்கநாதனுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான்
நீக்குமிக்க நன்றி கீதாக்கா
கீதா
கதையில் சுவையோ, சுவாரசியமோ எதுவும் தேடினாலும் கிடைக்கவில்லை. குழந்தைகளுக்கான நீதிபோதனைக் கதை போலவே நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்பதே அழுத்தமாகச் சொல்லப் பட்டிருக்கிறது. மனைவி சொல்வதைத் தட்டாத கணவன், அம்மா/அப்பா தேர்வை மறு பேச்சின்றி ஏற்கும் மகன். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குஅக்கா பெரும்பாலும், கதைகள் எழுபவர்கள், நடக்காத சில விஷயங்கள் நடந்தால் நன்றாக இருக்குமே என்று மனதிற்குள் இருக்கும் சில மனக் குறைகளைக் கதைகளில் சொல்லும் போது ஒரு ஆறுதல் என்றும் எடுத்துக் கொள்ளலாம் இல்லையா எனக்குச் சில கதைகளை வாசிக்கும் போது அப்படித் தோன்றியதுண்டு.
நீக்குமிக்க நன்றி கீதாக்கா
கீதா
அந்த காலத்திலும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாமி கதை மூலம் தெரிகிறது. ரங்கநாதன் பாண்டு ரங்கன் ரூபத்தில் வந்து வந்து காப்பாற்றியது அருமை.
பதிலளிநீக்குஅவர் மகளை தன் மகனுக்கு பெண் எடுப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.
கதை நன்றாக இருக்கிறது.
எல்லாக் காலத்திலும் உண்டு கோமதிக்கா இது. ஆமாம் நேர்மறையாக முடித்திருக்கிறார்.
நீக்குமிக்க நன்றி கோமதிக்கா
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குகதை நன்றாக உள்ளது. தன்னை அந்த தருணத்தில் காப்பாற்றியவர் என்ற எண்ணத்தை எப்போதும் மறக்காமல் நினைத்திருப்பதே இறைவன் கொடுத்த ஒரு வரம். இதற்கு முந்தி இவர் எழுதிய சாம்பு ஸ்டைல் துப்பறியும் (அதை நினைவூட்டும் கதை மாதிரி வந்ததையும்) கதையையும் படித்திருக்கிறேன். இதையும் அழகாக எழுதியுள்ளார். பாராட்டுகள். கதையை பகிர்ந்த உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
(அதை நினைவூட்டும் கதை மாதிரி வந்ததையும்)// ஆமாம் கமலாக்கா அதேதான்.
நீக்குஅவர் இப்போது இறைவனடியில் இருந்து தன் கதைகளுக்கான கருத்துகளைப் பார்த்துக் கொண்டிருப்பாரோ?!!
மிக்க நன்றி கமலாக்கா
கீதா
அன்பின் கீதாமா,
பதிலளிநீக்குஅந்தக் கால நடையில் மாமி கதை எழுதி இருக்கிறார்.
எங்க அம்மா கதை எழுதுவார். அதிலும் அவர்கள் வாழ்வில் நடப்பது
போலவே இருக்கும்.
ருக்மிணி தப்பியது பாண்டு ரங்கன் அருளால்.
ரங்க நாதனின் பெண்ணைத் தன் மகனுக்குத் திருமணம்
செய்து
தன் நன்றியை நிறைவேற்றுகிறார்.
இவர் பாதிக்கப் பட இருந்ததால் ருக்மிணிக்கு
நினைவிருக்கிறது.
ரங்க நாதனுக்கும் நினைவுக்கு வந்திருக்கலாம்.
மாமி அதைப் பற்றி எழுத நினைக்கவில்லை.
மொத்தத்தில் நல்ல கதை.
நன்றி யும் வாழ்த்துகளும்.
அந்தக் கால நடையில் மாமி கதை எழுதி இருக்கிறார்.
பதிலளிநீக்குஎங்க அம்மா கதை எழுதுவார். அதிலும் அவர்கள் வாழ்வில் நடப்பது
போலவே இருக்கும்.//
ஓ! மிக்க நன்றி அம்மா. பாட்டி எழுதிய கதைகள் இருந்தால் நீங்கள் உங்கள் வலையில் முடிந்தால் வெளியிடலாமே அம்மா.
//ருக்மிணி தப்பியது பாண்டு ரங்கன் அருளால்.
ரங்க நாதனின் பெண்ணைத் தன் மகனுக்குத் திருமணம்
செய்து
தன் நன்றியை நிறைவேற்றுகிறார்.
இவர் பாதிக்கப் பட இருந்ததால் ருக்மிணிக்கு
நினைவிருக்கிறது.//
ஆமாம் மாமியின் கதை அப்படித்தான் செல்கிறது.
ரங்க நாதனுக்கும் நினைவுக்கு வந்திருக்கலாம்.
மாமி அதைப் பற்றி எழுத நினைக்கவில்லை.//
ஆமாம் நமக்கும் அது தெரியவில்லை. என்றாலும் எப்படியோ பாசிட்டிவ் முடிவு!
வித்தியாசமான ஆங்கிள் அந்தக்கால நடை என்பது நான் யோசிக்கவில்லை. அம்மா
மிக்க நன்றி அம்மா
கீதா
சூப்பர். அருமையான நடை. ரசித்தேன்.
பதிலளிநீக்கு