ஞாயிறு, 9 அக்டோபர், 2022

காசர்கோடு கலோல்சவம் - பகுதி - 1


கேரளத்தில் பள்ளி முதல் கல்லூரி வரை கல்வியுடன் மாணவ மாணவியர்க்குக் கலையார்வத்தையும் வளர்க்க கலோல்சவம்என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் எல்லா வருடமும் நடத்தப்படுவதுண்டு. அவற்றில் வட்ட, மாவட்ட, மாநில அளவில் மாணவ மாணவியர்கள் போட்டியிடுவதும் உண்டு. ஒப்பனா, சவுட்டு நாடகம், யக்ஷகானம், ஓட்டம் துள்ளல், நாட்டுப்புறப்பாடல்கள் போன்ற மதம் சார்ந்த, பிரதேசம் சார்ந்த பல அரிய கலைகளை எல்லோரும் அறியவும் காணவும் இதனால் முடிகிறது என்பதுதான் இதன் சிறப்பு அம்சம்.

கோவிட் காரணமாகக் கடந்த இரண்டு வருடங்கள் அவற்றிற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த்தாலோ என்னவோ இவ்வருடம் பள்ளி கல்லூரிகளில் ஒரு புத்துணர்வுடன் மீண்டும் கலோல்சவங்கள் வலம் வரத் தொடங்கியிருக்கின்ற. அப்படி நடத்தப்பட்ட கேரள ஆரோக்கிய சாஸ்திர பல்கலைக்கழக யூனியனின் (“KERALA UNIVERSITY OF HEALTH SCIENCES ) North Zone Cultural Fest – 22 ஐப் பற்றிய காட்சிகள் மற்றும் அனுபவங்களையும் மற்றும் இதன் அருகில் இருந்த கடற்கரை மற்றும் பேக்கல் கோட்டையைச் சுற்றிப் பார்த்ததையும் இங்கு நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

நடந்த இடம் SI-MET Nursing College, Periya, Kasaragod (State Institute of Medical educ ation andtechnology).   எனவே பேக்கல் கோட்டை மற்றும் கடற்கரையைப் பார்க்கவும் முடிந்தது.


கலோல்சவ தொடக்க விழாவில் சமீபத்தில் திரையிடப்பட்டு மிகவும் வரவேற்கப்பட்ட “ன்னா தான் கேஸ் கொடுக்கு” (‘நீ போய் கேஸ் போடு’) படத்தில் நடித்த காசர்கோட்டைச் சேர்ந்த புதுமுகங்களான வழக்குரைர்கள்ஆசிரியர்கள், சாதாரண மனிதர்கள் போன்றவர்களை ழைத்து கௌரவித்ததால் அந்தத் திரைப்படத்தைப் பற்றியும்  அதிகம் அறிய முடிந்தது.


கலை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்த என் மகளுக்கு நாடோடி நிர்த்தத்தில் (கிராமிய நாட்டியத்தில்) முதலிடம் கிடைத்த மகிழ்ச்சி வேறு. இப்படிப் பல நிகழ்வுகள் இருக்கின்றன, பகிர்ந்து கொள்ள. எனவே எல்லாவற்றையும் மூன்று பகுதிகளாகத்தான் சொல்ல இருக்கிறேன். வாருங்கள் பயணிப்போம் காசர்கோட்டிற்கு.

ஆரோக்கிய சாஸ்திர பல்கலைக்கழகத்தின் கலோல்சவத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்களில் அலோபதி, ஹோமியோ, சித்தா, ஆயுர்வேத மாணவ மாணவியர்களும், செவிலியர் மற்றும் பல் மருத்துவ மாணவ மாணவியர்களும் பங்கெடுப்பதுண்டு.

மகள் பங்கெடுத்த மோனோ ஆக்டிங்க்

                        குச்சிப்புடி                          

கிராமிய நடனம்

செப்டம்பர் 2, 3, 4, 5 தேதிகளில் என் வீட்டிலிருந்து 230 கிமீ தூரத்திலுள்ள காசர்கோட்டிற்கு அருகே உள்ளபெரியாஎனுமிட்த்தில் நடந்த கலோல்சவத்தில் கண்ணூர் அரசு மருத்துவ கல்லூரியில் இரண்டாமாண்டு பயிலும் என் மகள் அபிராமியின் குச்சுப்பிடி, நாடோடி நிர்த்தம் (கிராமிய நடனம்), மோனோ ஆக்டிங்க், கதாபிரசங்கம் (கதா காலட்சேபம்) எனும் நிகழ்வுகள் 3, 4, 5 ஆம் தேதிகளில் இருந்ததால் 2 ஆம் தேதி காலை 10 மணிக்கு மனவி, மகன், மகளுடன் காரில் கிளம்பினேன்.

மகள் பங்கெடுத்த கதா பிரசங்கப் போட்டி

கண்ணூர் போகும் போதெல்லாம் மாஹியில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 9ரூ குறைவு என்பதால் அங்கு காருக்கு கூடுதல் பெட்ரோல் போடுவதுண்டு. அப்படி காரில் பெட்ரோல் போட்டுவிட்டு தலசேரி கடலோரம், கொண்டு சென்ற சாப்பாட்டை உண்டோம். இரவுக்குக் கண்ணூர் சிறைச்சாலையில் தயாரிக்கப்படும் சப்பாத்தி, சிக்கன் கறி மற்றும் பிரியாணி வாங்கிய பின் (கண்ணூர் சிறைச்சாலைக்கு வெளியே ஒரு விற்பனை நிலையம் உண்டு), 7 மணியளவில் கலோல்சவம் நடக்கும் SI-MET கல்லூரியை அடைந்தோம்.

அக்கல்லூரி ஒரு கிராமப்பகுதியில் இருப்பதாலும் தங்குவதற்கான விடுதிகள் கொஞ்சம் தொலைவிலுள்ளதாலும் ஹோம்ஸ்டே பற்றி விசாரித்தோம். மனைவியின் பள்ளி தலைமை ஆசிரியையின்  சகோதரியான உஷா டீச்சரின் உதவியால் அவரது நண்பரான கலோல்சவ நிகழ்ச்சி கமிட்டி உறுப்பினர் திரு நாராயணன் என்பவர் ஒருவர் வீட்டில் தங்க ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். அவரைக் கண்டோம். SI-MET க்கு அருகிலுள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

நாங்கள் தங்கியிருந்த வீடு

அந்த வீட்டில் ஒரு வயதான அம்மா, மருமகள், பேரன் மூன்றே பேர். மாடியில் 2 அறைகளை எங்களுக்குத் தங்க தயாராக்கித் தந்தார்கள். நீண்ட பயணக் களைப்பால் சாப்பிட்டுப் படுத்ததும் நல்ல உறக்கம். மறு நாள்....

மறு நாள் காலை, நாங்கள் நால்வரும் குளித்துவிட்டு SI-MET கல்லூரியை அடைந்தோம். சிற்றுண்டிக்குப் பின், அபிராமியின் போட்டிக்கான பதிவு முடிந்த பின் 4 ஆம் அரங்கில் மோனோ ஆக்டிங்கான, சீட்டு குலுக்கலில் இவளுக்குக் கிடைத்த எண் 22. 21 பேருக்குப் பிறகுதான் எனவே 12 மணிக்குத்தான் மேடையில் ஏற முடியும்.

நான் அரங்கின் வெளியே அடுக்கி வைப்பட்டிருந்த வெட்டுக்கற்களைப் பார்த்தேன். காசர்கோடு வெட்டுக்கற்கள் வீடு மற்றும் மதில் கட்ட பேர் பெற்றவை. தமிழகத்தில் பெரும்பாலும் கட்டிடங்கள் செங்கற்களும் கருங்கற்கள் மற்றும் சிமென்ட்,, ஹாலோ பிரிக்ஸ் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் கேரளத்தில் பெரும்பான்மையான இடங்களில் இந்த வெட்டுக் கற்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன.



வெட்டுக்கற்கள்
மஞ்சள் மற்றும் சிவப்பு நிறமுள்ள பாறையளவுக்குக் கடினமல்லாதவை என்றாலும் பாறைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் கற்கள்தான் இவை கல்லூரி வளாகத்தில் உள்ள இந்த வெட்டுக்கற்கள் பாறையை இரண்டு தட்டாய் வெட்டி சமப்படுதியிருந்தார்கள்.

வெட்டுக்கல் தரை

இந்த வெட்டுக்கற்கள் வீடு கட்டவும், மதில் கட்டவும் மட்டுமல்ல தரையில் அடுக்கி இடைவெளியை சிமென்டால் அடைத்து அருமையான கான்க்ரீட் வழி போல் பல இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.

நாங்கள் தங்கிய வீட்டின் முற்றமும் இப்படி வெட்டுக்கல்லால் அமைக்கப்பட்ட ஒன்றுதான். அவற்றைப் பல் சக்கர யந்திரத்தால் அறுத்து ஒரு அடி நீளம் முக்கால் அடி அகலம் அரை அடி உயரமுள்ள கற்கலாக வெட்டி எடுக்கும் குன்று இதுதான்.

வெட்டி எடுக்கப்படும் கற்களை இப்படிப் பயன்படுத்தி ஒரு வீடாகக் கட்டியிருப்பதைத்தான் இப்போது நீங்கள் பார்க்கிறீர்கள். இப்படிப்பட்ட கற்களில் சிறிய துவாரங்கள் நிறைந்திருந்தாலும் காலம் செல்ல செல்ல இதன் கடினத் தன்மை கூடிக் கொண்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது.

பேக்கல் கோட்டை

1650 ல் சிவப்ப நாயக்கரால் கட்டப்பட்ட, 40 ஏக்கரில் பரந்துகிடக்கும் பேக்கல் கோட்டையே இந்த வெட்டுக்கற்களால்தான் கட்டப்பட்டிருக்கிறது என்பதிலிருந்து அதன் உறுதித் தன்மையையும், கேரளத்தில் அதன் முக்கியத்துவத்தையும் நாம் உணர முடியும்இயக்குநர் மணிரத்தினம் இயக்கிய பாம்பே படத்தில் வரும்உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடுபாடல் எடுக்கப்பட்டது காசர்கோடு அருகே இள்ள இந்த பேக்கல் கோட்டையில்தான்.

இவற்றின் தொகுப்பை ஒரு காணொளியாகவும் கொடுத்திருக்கிறேன் (9.6 நி தான்) குறிப்பாகக் காணொளியின் 6.13 நி-க்குப் பின் வெட்டுக்கல் பற்றி. சுட்டி இதோ...

https://youtu.be/l2CoJIjjj6I


அனுபவங்கள் தொடரும்....

----துளசிதரன்

 


27 கருத்துகள்:

  1. தமிழ்நாட்டிலும் சில வருடங்கள் முன்பு வரை கனிமொழி ஜகத் கஸ்பர் கூட்டணியில் பொங்கல் சமயங்களில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பதுண்டு..  இதில் சில மத அரசியல்களும் நடந்தன, இப்போது திமுக ஆட்சிதான் அடக்கிறது என்றாலும் அது நடப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது கல்லூரி, பள்ளிகளில் அல்ல, நாட்டுப்புறக் கலைகளை ஊக்குவிக்க நடந்தது என்ற நினைவு. செய்திகளில் வாசித்திருக்கிறேன். இது பள்ளி கல்லூரியில் மிகப் பெரிய அளவு நடக்கும். மதிப்பெண்களில் வெயிட்டேஜ் உண்டு. குறிப்பாகக் கல்லூரியில் சேர்வதற்குக் கொஞ்சம் உதவியாக இருக்கும். கல்லூரிகளிலும் இது மிகப்பெரிய அளவில் நடப்பதால் இதன் வழியாகத் திரைப்படத் துறையில் அறிமுகம் ஆனவர்களும் உண்டு. உதாரணம் மஞ்சுவாரியார் மற்றும் வினீத்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

      துளசிதரன்

      நீக்கு
    2. கனிமொழி நடத்தியது அரசு விழா. கல்லூரி விழா அல்ல.

      நீக்கு
  2. நீங்கள் சொல்லியிருக்கும் மலையாளபபிடம் அமேசான் பிரைமில் இருக்கிறது என்றாலும் பார்க்கத் தோன்றவில்லை.  அட, உங்கள் மகள் பரிசு வாங்கினாரா?  பலே..  மூன்று நான்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதும் சிறப்பு.  சகலகலாவல்லி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படம் நானும் பார்க்கவில்லை. படத்தைப் பற்றி செய்திகளில் அறிந்தவைதான். காசர்கோடு சென்றிருந்த போது கலோல்சவத்தில் அதில் நடித்தவர்களைச் சந்திக்க நேர்ந்ததில் கொஞ்சம் கூடுதல் அறிய முடிந்தது. அதைப் பற்றியும் பதிவு வரும்.

      // மூன்று நான்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதும் சிறப்பு. சகலகலாவல்லி.//

      இறை அருள். மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி. உங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  3. நிகழ்வுகளை சிறப்பாக சொல்லி இருக்காறீர்கள்.
    உங்கள் மகள் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.
    தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி, உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

      துளசிதரன்

      நீக்கு
  4. தமிழகத்திலும் பள்ளிகளில் இதுபோன்ற வட்டம், மாவட்டம், மாநிலம் என்ற அளவில் போட்டிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
    தங்கள் பதிவும் படங்களும் அருமை.
    தங்களின் அன்பு மகளுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழகத்திலும் நடப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி.

      தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பர் கரந்தையாரே!

      துளசிதரன்.

      நீக்கு
  5. தங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள் சகோ.
    திறமைகள் நிறைய இருக்கிறது மகளிடம்.
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    ‘//உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு’ பாடல் எடுக்கப்பட்டது காசர்கோடு அருகே இள்ள இந்த பேக்கல் கோட்டையில்தான்.//

    கோட்டையை பார்த்தவுடன் நினைத்தேன். நீங்கள் சொல்லி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு, உங்களின் வாழ்த்திற்கு. எல்லாம் இறை அருள்தான்.

      /கோட்டையை பார்த்தவுடன் நினைத்தேன். நீங்கள் சொல்லி விட்டீர்கள்.//

      மிக்க மகிழ்ச்சி சகோதரி. படம் பார்த்தவர்கள் எல்லோருக்கும் இது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

      உங்கள் கருத்திற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு!

      துளசிதரன்

      நீக்கு
  6. விவரிப்பு அருமை...

    வெட்டுக்கல் எதற்கெல்லாம் பயன் தருகிறது என்பதை அறிந்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெட்டுக்கல் எதற்கெல்லாம் பயன் தருகிறது என்பதை அறிந்தேன்...//

      பதிவில் சொல்லப்பட்ட விஷயம் உங்களுக்குப் பயன் தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி டிடி.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி டிடி

      துளசிதரன்

      நீக்கு
  7. கலை + உற்சவம் என்பதே கலோல்சவம் என்று விளக்கி இருக்கலாம். இது பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர் பள்ளி நிலையில், கல்லூரி நிலையில் மாவட்ட நிலையில், கடைசியாக பல்கலை அளவில் மற்றும் மாநில அளவில் நடத்தப் பட்டு பரிசு  அளிப்பர். பரிசு பெற்றவர்களுக்கு மொத்த  மதிப்பெண்ணில் வெயிட்டேஜ் கிடைக்கும் என்பதையும் தெரியப்படுத்தி இருக்கலாம். 

    தென் கேரளத்தில் வீட்டுக் கற்கள் அரிதாகி விட்டன. வர்கலை, ஆற்றிங்கல் போன்ற பகுதிகளில் laterite மண்ணிலிருந்து இக்கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இந்த கற்கள் காலப் போக்கில் காற்றுடன் கிரியை புரிந்து செங்கற்களுக்கு மேல் கடினத்  தன்மை அடைகின்றன. எவ்வளவு வருடங்கள் கழிக்கின்றனவோ அவ்வளவு கடினத்  தன்மையும் கூடும்.
    மேற்கூறிய யாவும் மற்றவர்களுக்காக ஒரு விளக்கமே. 

    கட்டுரையும் படங்களும் நன்றாக உள்ளன. மகளுக்கு  பரிசு கிடைத்தது சந்தோசம். பாராட்டுக்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இக்கலோல்சவம் பற்றி முன்பே பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருப்பதால் இங்கு அதைப் பற்றி அதிகம் விவரிக்கவில்லை, ஜெயக்குமார் சந்திரசேகரன் சார். இப்பதிவில் இந்தப் பயணத்தின் நிகழ்வுகள் மற்றும் அனுபவங்களைத்தான் சொல்லிச் செல்கிறேன்.

      //தென் கேரளத்தில் வீட்டுக் கற்கள் அரிதாகி விட்டன. வர்கலை, ஆற்றிங்கல் போன்ற பகுதிகளில் laterite மண்ணிலிருந்து இக்கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இந்த கற்கள் காலப் போக்கில் காற்றுடன் கிரியை புரிந்து செங்கற்களுக்கு மேல் கடினத் தன்மை அடைகின்றன. எவ்வளவு வருடங்கள் கழிக்கின்றனவோ அவ்வளவு கடினத் தன்மையும் கூடும்.
      மேற்கூறிய யாவும் மற்றவர்களுக்காக ஒரு விளக்கமே. //

      ஆமாம். மற்றவர்கள் அறிய இந்தத் தகவல்கள் உதவும். மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், தகவல்களுக்கும் கருத்திற்கும்.

      துளசிதரன்

      நீக்கு
  8. கலா உற்சவம் சம்பந்தப்பட்ட பதிவு நன்றாக ஆரம்பித்திருக்கிறது.

    கேரளா, கலைகளை ஆதரிப்பதில் முன்னோடி என்றால் தவறில்லை. இதில் கலந்துகொள்பவர்களுக்கு மதிப்பெண்களில் வெயிட்டேஜ் உண்டு என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலா உற்சவம் சம்பந்தப்பட்ட பதிவு நன்றாக ஆரம்பித்திருக்கிறது.//

      மிக்க நன்றி நெல்லைத் தமிழன். எங்கள் ப்ளாகின் ஞாயிறில் நீங்கள் எடுத்த படங்களைக் குறித்தும் பயணம் குறித்தும் நீங்கள் எழுதுவதை வாசித்தேன். இனி வரும் உங்கள் பதிவுகளுக்கும், மற்றவர்களின் பதிவுகளுக்கும் எனது கருத்துகளும் வரும்.

      //கேரளா, கலைகளை ஆதரிப்பதில் முன்னோடி என்றால் தவறில்லை.//

      ஆமாம். தமிழகத்தில் இப்படியான நிகழ்வுகள் குறித்து அதிகம் அறிய முடிவதில்லை. நண்பர் கரந்தை ஜெயக்குமார் சொல்லியிருப்பதைப் பார்த்தால் அங்கும் நடக்கிறது என்று தெரிகிறது. இங்கு செய்தித்தாள்களில் அதிக அளவு இடம் பெறும் வகையில் மிகப் பெரிய அளவில் நடக்கின்றன.

      இதில் கலந்துகொள்பவர்களுக்கு மதிப்பெண்களில் வெயிட்டேஜ் உண்டு என்று நினைக்கிறேன்.//

      ஆமாம் உண்டு. குறிப்பாகக் கல்லூரியில் சேர்வதற்கு உதவும்.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      துளசிதரன்

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. கலோல்சவம் பற்றிய ஒவ்வொரு விபரத்தையும் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். கல்லூரியில் நிறைய போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளை பெற்ற தங்கள் மகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள். இது போன்ற கலைகளை பள்ளி, கல்லூரிகளிலேயே கற்று தேர்வதும் அன்னை சரஸ்வதியின் பரிபூரண அருளால்தான். தங்கள் மகளும் அவ்விதம் அன்னையின் அருள் பெற்றுள்ளார்.மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    வட்டக்கற்கள் பற்றி தெரிந்து கொண்டேன். எங்கள் அம்மா வீட்டிலும் நான் சின்னவளாக இருந்த போது முற்றத்தில் இது போன்ற கற்களை கீழே தரையில் (செங்கல் தரை மாதிரி) பதித்து பார்த்ததாக நினைவு. பரபரவென்று இப்போது படத்தில் பார்த்தது போல் இருக்கும். ஒருவேளை இதுதானோ என்னவோ.. அப்போது நிறைய விபரங்கள் இதுபோல் அறிந்ததில்லை.

    காணொளியும் பார்த்து ரசித்தேன். நன்றாக உள்ளது. அதில் பேக்கல் கோட்டையையும் கடற்கரையையும் பார்த்ததும் பம்பாய் படத்தின் பாடல் காட்சியும் நினைவுக்கு வந்தது. அது விபரம் தெரியபடுத்தியதற்கு நன்றி. இனி வரும் பகுதிகளையும் ஆவலுடன் தொடர்கிறேன்.

    நேற்று பதிவுக்கு உடனடியாக என்னால் வர இயலவில்லை. தாமதமாக வந்துள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை ரசித்ததற்கும், உங்கள் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.

      உங்கள் அம்மாவின் வீட்டு முற்றத்திலும் இருந்திருப்பதன் காரணம் முந்தைய காலகட்டத்தில் வெட்டுக்கற்களின் பயன்பாடு அதிகமாக இருந்திருக்கும்.

      காணொளியை ரசித்ததற்கும் மிக்க நன்றி. எல்லோருக்குமே பேக்கல் கோட்டையைப் பார்த்தால் பம்பாய் படம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலாதுதான்.

      உடனடியாக வர வேண்டும் என்பதில்லை சகோதரி எப்போது உங்கலுக்கு நேரம் கிடைக்கிறதோ பார்க்கலாமே.

      வந்து ரசித்து விவரமாகக் கருத்திட்டதற்கு மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.

      துளசிதரன்

      நீக்கு
  10. //‘கலோல்சவம்’ //
    ஓ இது நிகழ்ச்சியின் பெயரோ.. நான் சுற்றுலாப்போன இடமாக்கும் என நினைச்சேன்..:).

    //கலை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்த என் மகளுக்கு நாடோடி நிர்த்தத்தில் (கிராமிய நாட்டியத்தில்) முதலிடம் கிடைத்த மகிழ்ச்சி வேறு///

    ஓ.. மகளுக்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள் துளசி அண்ணன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி அதிரா உங்களை இங்கு காண்பதில் மிக்க மகிழ்ச்சி. இடையில் உங்கள் வீடியோக்கள் பார்ப்பதுண்டு. அப்போது பதிவுகளில் உங்களைக் காணவில்லையே என்று கீதாவிடம் கேட்டதுண்டு.

      கலோல்சவம் - முன்பே ஏதோ ஒரு பதிவில் சொல்லியிருந்ததால் இதில் சொல்லவில்லை. இந்த நிகழ்ச்சியோடு சுற்றுலாவையும் பிள்ளைகளுக்காக இணைத்துக் கொண்டோம்.

      உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி அதிரா.

      துளசிதரன்

      நீக்கு
  11. சிறைச்சாலையில் உணவு தயாரித்து, வெளி ஆட்களுக்கு விற்கிறார்களோ...

    நீங்கள் தங்கியிருந்த வீடு சூபராக இருக்குது, பொதுவா இலங்கையிலும் வீடுகள் இப்படித்தான் கட்டிடமும், சோலையுமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இங்கு கேரளத்தில் சிறைச்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்கள், உணவுகள் அந்தக் கடைகளில் விற்கப்படுகின்றன. விலையும் கொஞ்சம் குறைவாக இருக்கும். இது ஒரு நல்ல விஷயமாகப் படுகிறது.

      இலங்கையும் ஒரு காலத்தில் இந்தியாவின் தெற்கு முனையுடன் ஒட்டிக் கொண்டுதானே இருந்தது அதனால் அதன் நிலப்பரப்பும் கேரளம், கன்னியாகுமரி போன்று இருக்கும் என்று தோன்றுகிறது. இங்கு பெரும்பாலான வீடுகள் தோட்டத்துடன் இருக்கும்.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி அதிரா

      துளசிதரன்

      நீக்கு
  12. வெட்டுக்கற்கள் நன்றாக இருக்குது, இதுதானே ஆரம்பகாலம் பாவித்தார்கள், இப்போ எல்லாம் சீமேந்துக் கற்களாக மாறிவிட்டது. களிமண்ணில் செய்வதை கிட்டத்தட்ட நிறுத்தி விட்டார்கள் என்றே சொல்லலாம்.. தொடருங்கோ துளசி அண்ணன், வருகிறேன்.

    எனக்குக் கேரளா என்றாலே ஒரு தனி விருப்பம்.. கேரளா படகுக் கப்பலில் போகோணும் இனிவரும் எங்கட இந்திய ட்ரிப்புகளில் ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஆரம்பகாலத்தில் இக்கற்களின் பயன்பாடு அதிகம்தான். சீமேந்துக் கற்கள் என்றால் சீமைக்கற்கள் அதாவது டைல்ஸ் மார்பிள் என்ற பொருளோ?

      களிமணில் கட்டப்படும் வீடுகள் Mud houses இப்போதும் மஹாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு பகுதிகளில் இருப்பதாகத் தெரிகிறது. களிமண்ணில் தயாரிக்கப்படும் சில பொருட்களும் வருகின்றன.

      கேரளத்திற்கு வாருங்கள். அப்படியே எங்கள் வீட்டிற்கும் வாருங்கள். உங்கள் ஆசை நிறைவேறிடட்டும்.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி அதிரா.

      துளசிதரன்

      நீக்கு
  13. மகள் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள். பாராட்டுகள். அலங்காரம் (குச்சுப்புடி) அருமையாகப் பொருந்தி இருக்கிறது. வெட்டுக்கற்கள் பற்றிய தகவல்கள் அருமை. இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடையை நாம் சரியானபடி பயன்படுத்திக்கொள்ளுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாழ்த்துகளுக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம். நீங்கள் விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள். உங்கள் உடல் நலக்குறைவிற்கு இடையிலும் இங்கு வந்து கருத்திட்டதற்கு மிக்க நன்றி.

      ஆம், இயற்கை அளித்திருப்பதை நாம் சரியானபடி பயன்படுத்துவதில்லைதான்.

      உங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரி

      துளசிதரன்

      நீக்கு