ஞாயிறு, 23 அக்டோபர், 2022

காசர்கோடு கலோல்சவம் - பகுதி - 2


காசர்கோடு கலோல்சவம் - பகுதி - 1 ன் தொடர்ச்சி. முந்தைய பதிவுகளை வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.

போட்டிகளில் மகளின் பங்கெடுப்பிற்கான பயணம், ரப்பர் வேலைகள், கல்லூரி வகுப்பிற்கான பாடங்கள் தயாரிப்பு, விருந்தினர் வருகை, அவர்களோடு பயணம் என்று நேரப்பளு. அதனால் உங்கள் பதிவுகளுக்கான கருத்துகளைத் தாமதமாகத்தான் அனுப்ப முடிகிறது.  

மகளின் மோனோ ஆக்டிங்க் காணொளியில் ஒரு 30 நொடிகள் இங்கு கட் செய்து தந்திருக்கிறேன்.  முடிந்தால் பாருங்கள்

மோனோ ஆக்டிங்க் இது முழு வீடியோ யுட்யூப் சுட்டியுடன்

12 மணி அளவில் மோனோ ஆக்டிங்க் முடிந்த பின் 4 மணிக்கு மேடை ஏற வேண்டிய குச்சுப்புடி நடனத்திற்கான ஒப்பனை செய்து கொள்ள மாடியில் இரண்டாவது தளத்தில் உள்ள ஒரு பெரிய அறைக்குப்ஹாலுக்கு - போனோம்.


அது ஒரு நர்ஸிங்க் கல்லூரி ஆனதால் அந்தப் பெரிய அறையில் - ஹாலில் - நிறையக் கட்டில்கள். எல்லாம் மாணவ மாணவியர்களின் Practical – பிராக்டிகல் - நடைமுறை வகுப்புகளுக்கானவை. இருபதுக்கும் மேலான மாணவிகளுக்கு ஒப்பனை செய்து கொண்டிருந்தார்கள். 
மகளின் குச்சுப்புடி ஒப்பனை முடிந்திட......

அபிராமியின் நடன ஆசிரியர் அன்வர் மற்றும் ஷிபு இருவரும் ஒப்பனைக் கலைஞரின் உதவியுடன் ஒப்பனையை முடித்திட, அபிராமியை மேடைக்கு அழைத்துச் சென்றோம்.  நடனங்களில் பரதநாட்டியம் தமிழுடனும், மோகினி ஆட்டம் மலையாளத்துடனும், குச்சுப்புடி தெலுங்குடனும் தொடர்புடையதால் அபிராமியின் குச்சுப்புடிப் பாடல் தெலுங்காக இருந்தது. குச்சுப்புடி நடனத்திற்குப் பின் மோகினி ஆட்டம் அங்கு அதே அரங்கில் தொடரவிருந்தது.

இதனிடையே கலோல்சவத்தின் தொடக்க விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முந்தைய நாளே கலோல்சவம் (கலை விழா தான் மலையாளத்தில் கலோல்சவம். உல்சவம்-உற்சவம் எனும் சமஸ்கிருதச் சொல்பொருள் - விழா) தொடங்கயிருந்தாலும், இரண்டாம் நாளான (03-09-22) அன்று மாலைதான் தொடக்க விழா நடத்த முடிவு செய்திருந்தார்கள்.

விழாவில் உதுமா எம் எல் திரு குஞ்ஞம்பு கலந்து சிறப்புரை ஆற்றினார் (உதுமா - இது காசர்கோடில் இருக்கும் ஒரு கிராமம். கலைவிழா நடந்த செவிலியர் கல்லூரி இருந்த இடம்)

"ன்னா தான் கேஸ் கொடுக்கு" (நையாண்டி நகைச்சுவைப் படம்)

பல பிரமுகர்களுடன் அண்மையில் வெளி வந்தன்னா தான் கேஸ் கொடுக்கு” (அப்படின்னா நீ போய் கேஸ் போடு) படத்தில் நடித்த காசர்கோட்டைச் சேர்ந்த பல நடிகர்களையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து கௌரவிக்கவும் முடிவு செய்திருந்ததால், மேடையில் அவர்கள் எல்லோரும் அமர்ந்திருந்தார்கள்.

அதற்குச் சில தினங்களுக்கு முன் நான் அப்படம் கண்டிருந்ததால் அவர்கள் எனக்கு மிகவும் பரிச்சயமுள்ளவர்களாகவே தோன்றினார்கள். திரைப்படங்களில் பெரும்பாலும் நடிக நடிகைகள் எல்லாம் மாறி மாறி வருவார்கள். பெரும்பாலும் காவலதிகாரிகள், வக்கீல், ஜட்ஜ், பக்கத்து வீட்டுக்காரர்கள் இப்படி நமக்குப் பரிச்சயமான முகங்கள் எல்லாப் படங்களிலும் இருக்கும்.  

கதாபாத்திரத் தேர்வு என்பது அதற்கு ஏற்ற ஆட்களைக் கண்டுபிடித்து அவர்களைக் கொண்டு அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டுவது என்பதுதான். இந்தப் படத்தில் காசர்கோடு மொழிகுறிப்பாக காஞ்ஞங்காடு, நீலேஸ்வரம் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், அதைச் சரளமாகப் பேச முடிகின்ற, ஓரளவு நடிக்கவும் தெரிந்த ஆட்களைத் தேர்வு செய்திருந்தார்கள்.

அவற்றில் வழக்குரைஞர்கள், ஆசிரிய ஆசிரியைகள், சாதாரண மனிதர்கள் என்று ஏராளமான அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நடித்திருந்தார்கள். நாடகத்திற்கு ரிகர்சல் எடுப்பது போல் ரிகர்சல்கள் எடுக்கப்பட்டன. அவற்றிலும் சிறப்பான பல காட்சிகளைத் தேர்ந்தெடுத்து, நடித்தவர்களே அறியாமல் படத்தில் சேர்த்திருந்தார்கள். அப்படி அந்தப் படம் இயல்பான நடிப்பால் கவர்ந்த ஏராளமான, இதுவரை கண்டிராத புதுமுகங்களால் நிரம்பிய ஒன்றாக இருந்தது.

அப்படி, கதாபாத்திரத் தேர்ந்தெடுப்பில் இது போன்ற ஒரு முயற்சியும், தேர்வும் நல்ல படங்களை உருவாக்கும் என்பதற்கு இப்படம் ஒரு நல்ல உதாரணம் என்று எல்லோரும் ஒத்துக் கொண்ட ஒரு படமும் கூட, இப்படம்.

படத்தில், நாயகனுக்கு எதிராத வாதிடும் ‘வக்கீல் ஷுக்கூர்’ (நிஜ வாழ்விலும் வக்கீல்தான்)  எல்லோர் சார்பிலும் பேசினார். காணொளியில் இருந்து  25 நொடிகள் இங்கு...

அவர்களில், படத்தில், நாயகனுக்கு எதிராத வாதிடும் ‘வக்கீல் ஷுக்கூர்’ (நிஜ வாழ்விலும் வக்கீல்தான்)  எல்லோர் சார்பிலும் பேசினார். இந்த சினிமா அவர்களுக்கெல்லாம் ஏற்படுத்தித் தந்த திடீர் புகழைப் பற்றிப் பேசினார். சினிமா அப்படித்தானே! திடீர்ப் புகழ் ஈட்டித் தரும் ஒன்று. எம் ஜி ஆர், என் டி ஆர், ஜெயலலிதா போன்றவர்களை நாடாள வைத்த ஒன்று.  ஆனால் அது பழைய தலைமுறை. இப்போதைய தலைமுறை அப்படி எல்லாம் செய்யத் தயாராக இல்லை.


நன்றி - இந்த 5 படங்களும் இணையத்திலிருந்து

அதை உணராத கமல் அதனால்தான் கட்சி ஆரம்பித்தார். அதை உணர்ந்த ரஜனி, விஜய் போன்றவர்கள் அதனால்தான் அதற்கு முயலவில்லை. முந்தைய தலைமுறை சினிமா, அரசியல் போன்றவற்றில் வேற்றுமையில் ஒற்றுமையும், இப்போதைய தலைமுறை இது போன்றவற்றில் ஒற்றுமையில் வேற்றுமையும் காண்கிறதோ என்ற சந்தேகம் எனக்குப் பலமாகிக் கொண்டே வருகிறது.

மகள் ஆடிய குச்சுப்புடி நடனம் காணொளியின் சிறிய பகுதி - 41 நொடிகள். முடிந்தால் பாருங்கள்

முழு நடனமும் யுட்யூப் சுட்டி இதோ


எப்படியோ, விழா தொடங்கும் முன் அபிராமியின் நடனம் அரங்கேறியது. விருந்தினர்கள் அனைவரும் அதைக் காணவும் செய்தார்கள். அதனால் அரங்கும் நிறைந்திருந்தது. கண்ணனின் குறும்புகளை இன்முகத்துடன் சகிக்கும் யசோதையை, ஓரளவு, மனதைத் தொடும் விதம் என் மகள் செய்திருந்தாள். (முழு நடனமும் யுட்யூபில் இருக்கிறது. சுட்டியும் மேலே. நேரம் இருந்தால், விருப்பம் இருந்தால் பாருங்கள்)

விழா முடிந்த பின் வக்கீல் ஷுக்கூர், வக்கீல் கங்காதரன் போன்ற அப்படத்தில் நடித்த நிஜ வக்கீல்களுடன் புகைப்படம் 

விழா முடிந்த பின் ‘வக்கீல் ஷுக்கூர், வக்கீல் கங்காதரன் போன்ற அப்படத்தில் நடித்த நிஜ வக்கீல்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டோம். அங்குள்ள உணவகத்தில் இரவு உணவு உண்டபின் நாங்கள் தங்கியிருந்த வீட்டை அடைந்து அடுத்த நாளைய நாடோடி நிர்த்தத்திற்கான பயிற்சிக்குப் பின் தூக்கத்தில் ஆழ்ந்தோம். 
https://youtu.be/pHt7xQG6j4U
பதிவின் தொகுப்பு காணொளியாய், பதிவை வாசிக்க முடியாதவர்கள் கேட்டுக் கொள்ளலாம் என்பதற்காக

அடுத்த நாள் அனுபவங்களை அடுத்த பதிவில் சொல்கிறேன்.


----துளசிதரன்

29 கருத்துகள்:

  1. மகளின் மோனோ ஆக்டிங் சிறப்பாக இருந்தது.  மொழிதான் புரியவில்லை.  உடனே நாட்டியமும் ஆட தயாராகி விட்டதும் சிறப்பு.  காபி ராக(ம்தானே கெத்தா?!) கீர்தனைக்கு மகள் ஆடும் நடனமும் சிறப்பு.  நான் குட்டிக் காணொளிதான் பார்த்தேன்.   வாழ்த்துகளும்.  பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், ஆமாம் காபி ராகம் தான். பாட்டு கெத்தான்னு தொடங்குதா? எனக்குப் பாட்டு சுத்தமாகப் புரியவில்லை!!!

      துளசி தன் உறவினருடன் குடும்பத்தோடு இன்று ஊட்டிக்குச் சென்றுள்ளார். நேற்று இரவு அவர் கொடுத்த தகவல். இன்று இரவு ஆகிவிடும் வருவதற்கு என்று சொல்லியிருந்தார். அதன் பின் இன்னும் இதுவரை மெசேஜ் எதுவும் இல்லை.

      அவர் வந்து பார்த்து கருத்து கொடுக்க நாளை அல்லது நாளை இரவு ஆகிவிடும் என்று நினைக்கிறேன். அதை நான் இங்கு பதிய நாளை மறுநாள் ஆகிவிடும் ஹிஹிஹிஹி...நாளையும் அவர் பிஸி உறவினர்களோடு.

      கீதா

      நீக்கு
    2. பயணத்தில் இருந்ததால் கருத்து தாமதமாகிவிட்டது. ராகம் எல்லாம் கீதா தான் சொல்வார் அவரிடம் இருந்துதான் நான் தெரிந்து கொள்வேன். பிறகு இங்கு இது போன்ற கலோல்சவங்களுக்கு ஓரளவு நடனப் பயிற்சி செய்தவர்களுக்கு அவர்கள் ஒரு ஐட்டம் பயிற்சி கொடுத்து, மேடையில் அதைச் செய்ய வைப்பார்கள். அதுதான் நடக்கிறது.

      மகளை வாழ்த்தியதற்கும், பாராட்டியதற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி.

      துளசிதரன்

      நீக்கு
  2. நீங்கள் சொல்லும் அந்த மலையாளப்படம் அமேசானில் கிடைக்கிறது என்றாலும் ஏனோ பார்க்கத் தோன்றவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முந்தையப் பதிவிலும் நீங்கள் சொல்லியிருந்தீர்கள் என்று நினைவு. நையாண்டி நகைச்சுவைப்படம்.

      கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  3. சிறு சிறு பகுதிகளாக காணொளிகள் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்திற்கும் ரசித்ததற்கும் மிக்க நன்றி டிடி

      துளசிதரன்

      நீக்கு
  4. மகளின் மோனோ ஆக்டிங்-ம் குச்சிப்புடி நடனமும் மிகவும் சிறப்பாக, அருமையாக இருந்தது. வீடியோவில் கிளாரிட்டி போதவில்லை என்பதால் முழுமையாக பார்த்து ரசிக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளின் மோனோ ஆக்டிங்-ம் குச்சிப்புடி நடனமும் மிகவும் சிறப்பாக, அருமையாக இருந்தது.//

      மகளின் காணொளிகளை ரசித்ததற்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி சகோதரி மனோசாமிநாதன்.

      அரங்கத்திற்குள், சற்று தூரத்தில் இருந்து மொபைலில் எடுத்ததால் அத்தனை க்ளியராக வரவில்லை.

      கருத்திற்கு மிக்க நன்றி

      துளசிதரன்

      நீக்கு
  5. “ன்னா தான் கேஸ் கொடுக்கு
    அமேசானில் பார்த்தேன், மகிழ்ந்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் கண்டு மகிழ்ந்ததற்கு மிக்க நன்றி நண்பர் கரந்தையார்.

      துளசிதரன்

      நீக்கு
  6. காணொளிகள் முழுவதும் கண்டேன்.

    பதிவின் தகவல்கள் சிறப்பு.
    கூத்தாடன்களைப்பற்றிய தங்களது கருத்தை இரசித்தேன் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளிகள் கண்டதற்கும், பதிவை ரசித்ததற்கும், கருத்தை ரசித்ததற்கும் மிக்க நன்றி கில்லர்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  7. நேர்முக வர்ணனை போல அழகான பதிவு..

    காணொளிகள் அருமை அருமை..

    அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவையும் காணொளிகளையும் ரசித்ததற்கும், தீபாவளி வாழ்த்திற்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்

      துளசிதரன்

      நீக்கு
  8. அபிராமியின் மோனோ ஆக்டிங் சூப்பர். மிகத் திறமைசாலி. அவளது நடனமும் மிகவும் பிடித்திருந்தது. குழந்தைகள் மிகத் திறமையானவர்களாகவும், மேடை பயமில்லாதவர்களாகவும், ஆர்வமுடையவர்களாகவும் இருப்பதைக் காணும்போது மகிழ்ச்சி.

    இரண்டையும் முழுமையாகப் பார்த்து ரசித்தேன். பாராட்டுகள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளைப் பாராட்டியதற்கும் அவள் திறமைகளை ரசித்ததற்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      ஆமாம் அவர்களுக்கு மேடை பயமில்லை. இங்கு கலோல்சவங்கள் ஒவ்வொரு வருடமும் தவறாமல் (கோவிட் சமயம் தவிர) நடப்பதால், மதிப்பெண் வெயிட்டேஜ் உண்டு என்பதால் சிறு வயதிலிருந்தே பங்கெடுப்பதால், பயமின்றி செய்ய முடிகிறது.

      கருத்திற்கு மிக்க நன்று நெல்லைத்தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
  9. உங்கள் மகளின் மோனோ ஆக்டிங், "வடக்கன் வீர கதா"வின் மாதவியையும் மணிச்சித்திரத்தாழ் படத்தின் ஷோபனாவையும் நினைவூட்டுகிறது. அருமையாக நடனம் ஆடி இருக்கார் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "வடக்கன் வீர கதா"வின் மாதவியையும் மணிச்சித்திரத்தாழ் படத்தின் ஷோபனாவையும் நினைவூட்டுகிறது. //

      மகளைப் பாராட்டியதற்கும், நடனத்தையும் மோனோ ஆக்டிங்கை ரசித்ததற்கும் வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம்

      துளசிதரன்

      நீக்கு
  10. உங்கள் மகளின் மோனோ ஆக்டிங் அருமை. நடனமும் நன்றாக இருக்கிரது.
    மகளுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    நிகழச்சிகளை அழகாய் தொகுத்து வழங்கி விட்டீர்கள்.
    நேரில் காண்பது போல இருந்தது.
    தீபாவளி நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளின் நடனத்தையும் மோனோ ஆக்டிங்கையும் ரசித்துப் பாராட்டியதற்கும் வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு.

      //நிகழச்சிகளை அழகாய் தொகுத்து வழங்கி விட்டீர்கள்.
      நேரில் காண்பது போல இருந்தது.//

      மிக்க நன்றி சகோதரி

      தீபாவளி வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரி.

      துளசிதரன்

      நீக்கு
  11. உங்களுக்குள்ள (துளசி சார்) அதே ஆர்வம், நடிப்பு போன்றவற்றில் மகளுக்கும் ஆர்வம் இருப்பதைப் பாராட்டுகிறேன். Very much impressed with her mono acting

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Very much impressed with her mono acting//

      மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நெல்லைத்தமிழன்.

      பாராட்டுகளுக்கும் கருத்திற்கும் , மீண்டும் வந்துகருத்து பதிந்ததற்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே
    வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி.

    உங்கள் இருவருக்கும் இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீபாவளி வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி கமலாஹரிஹரன்

      துளசிதரன்

      நீக்கு
    2. மிக்க நன்றி கமலாக்கா உங்கள் வாழ்த்துகளுக்கு. உங்களுக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!

      கீதா

      நீக்கு
  13. நட்புகள் அனைவருக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் மனம்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது.படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. விழாவை தொகுத்து நன்றாக வழங்கியுள்ளீர்கள்.
    தங்கள் மகளின் கலையார்வம் பிரமிக்க வைக்கிறது. தங்களது மகளின மோனோ ஆக்டிங் பார்த்தேன். குச்சுப்புடி நடனமும் கவர்கிறது. நடனத்தின் பாவனைகள் அற்புதம். ரசித்துப் பார்த்தேன். தங்கள் மகளுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    அந்த நகைச்சுவைப் படத்தையும் என் குழந்தைகளிடம் விபரம் சொல்லி காண்கிறேன். அவர்கள் மலையாளப் படங்களை நெட் சானல்களில் போட்டு மிகவும் ரசித்துப்பார்ப்பார்கள்.

    நேற்று முழுவதும் தீபாவளி வேலைகள். உடன் வர இயலவில்லை. அதனால் தாமதமாக வந்துள்ளேன். மன்னிக்கவும்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம்!

    அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழட்டும் தலைமுறை !

    பதிலளிநீக்கு