வியாழன், 13 பிப்ரவரி, 2025

கொக்கரேபெல்லூர் - பறவைகளும் மனிதர்களும் இயைந்து வாழும் கிராமம் - 1


நெடு நாளைய ஓர் ஆசை நிறைவேறியது. (என்னிடம் இப்படியான ஆசைகளுக்குப் பஞ்சமில்லை. Lord Buddha Please! கண்டுக்காதீங்க!) கொக்கரேபெல்லூர். பெயரே வித்தியாசமாக இருக்கு இல்லையா? முதலில் கிராமத்தைப் பற்றிச் சொல்லிவிட்டு அதன் பின் அனுபவங்களைச் சொல்லலாம் என்று நினைத்ததால் பதிவை இரண்டு அல்லது மூன்று பாகங்களாகப் போட வேண்டி வரும் என்று தோன்றுகிறது.

பண்டைய கல்வெட்டுகளின்படி பெல்லூரு, சிக்கபெல்லூரு என்றிருந்த இக்கிராமம் அதன் பின் Painted Storks-மஞ்சள் மூக்கு நாரை/வண்ண நாரைகளும், Spot-billed Pelicans-புள்ளி மூக்கு/சாம்பல்நிற கூழைக்கடாக்களும்  அடையாளமாகி கிராமத்தின் பெயர் கொக்கரே பெல்லூரு என்று ஆனதாகத் தெரிகிறது.

வண்ண நாரைகள்-Painted Storks

Spot-Billed Pelicans - சாம்பல் நிற கூழைக்கடாக்கள்

இது முக்கிய சாலை-இதன் வழி கிராமத்திற்குள் செல்லும் போது இந்த வளைவு-கொக்கரே பெல்லாலிக்கே சுஸ்சுவாகதா - கொக்கரே பெல்லூருக்கு வரவேற்கிறோம். மற்றொரு வழி பற்றி அடுத்த பதிவில்

வழக்கு மொழியில் கொக்ரேபெல்லூர். கன்னடத்தில் கொக்கரே என்றால் நாரை-மஞ்சள் மூக்கு நாரை/வண்ண நாரை/, புள்ளி மூக்கு/சாம்பல் நிற கூழைக்கடா. பெல்லூர் என்பது வெள்ளை கிராமம் - ‘பெல்லக்கி’ வெள்ளைப் பறவைகள் வருவதால். மற்றொரு வகையில் (கிராமம் இருக்கும் மாவட்டமான மாண்டியாவில் கரும்பு விளைச்சலும் வெள்ளைச் சர்க்கரை மற்றும் வெல்லம் தயாரிப்பும் பிராபல்யம்)  கரும்பு விளைச்சல் அதிகம் என்பதாலும் இப்பெயராம். கன்னடத்தில் பெல்லா என்றால் வெல்லம்.

கரும்பு வயல்கள் - ஆட்டோவில் செல்லும் போது எடுத்த படம்

சென்னையில் இருக்கும் போதே இக்கிராமத்தைப் பற்றி அறிந்த போது என் விருப்பப் பட்டியலில் இந்தக் கிராமமும் சேர்ந்து கொள்ள, வாய்ப்பிற்காகக் காத்திருந்தேன். பெங்களூர் வந்ததிலிருந்து ஆசையும் ஆர்வமும் கூடியது. முதலில் இணையத்தில் இந்தக் கிராமம் பற்றித் தெரிந்து கொள்ள வலம் வந்தேன்.

ஒரு வண்ண நாரை பறந்து வந்து உட்காரப் போகிறது. எங்கு உட்கார்ந்திருக்கும் என்பதைச் சொல்ல முடியுமா பாருங்க

இந்தக் கிராமம் பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் பேருந்தில் 2 - 2 1/2 மணிநேரப் பயணத்தில் - நம் வண்டி என்றால் 1 1/2 மணி நேரப் பயணத்தில் - இருக்கும் மத்தூர் (தாலுக்கா) எனும் சிறிய ஊரிலிருந்து உட்பக்கம் 12-15 கிமீ தூரத்தில், இருக்கிறது என்று தெரிந்தது. ருத்ராக்ஷிப்பூர் - ஹலகுரு சாலை வழியாக

இந்தக் கிராமத்தைப் பற்றிய சில தகவல்கள் என்னை மிகவும் கவர்ந்தன. நேரிலும், அங்கிருந்த தகவல் பலகைகளிலிருந்தும் இணையத்திலிருந்தும்,  மற்றும் பறவைகளைப் புகைப்படம் எடுக்கும் ஆர்வலர், பயணக் காதலர் ராகுல்தேவ் ராஜ்குரு என்பவருக்கு நேரடி அனுபவம் இருந்ததால் அவர் மூலம் அறிந்து கொண்டதையும் தருகிறேன்.

கொக்கரேபெல்லூரை முதன்முதலில் 1864 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இயற்கை ஆர்வலர் டிசி ஜெர்டன் உலகுக்கு அறிமுகப்படுத்தினாராம். அவர் இக்கிராமத்தை Pelicanry என்று குறிப்பிட்டிருக்கிறார். அங்கு மனிதர்கள் இருந்தாலும் பயப்படாமல், கிராமங்களில் இருந்த மரங்களில் தங்கள் கூடுகளைக் கட்டி இனப்பெருக்கம் செய்து வந்திருக்கின்றன கூழைக்கடாக்களும் வண்ண நாரைகளும்.


ஷிம்ஷா நதி -  கரையில் தெரியும் கிராமம் பதிவில் சொல்லப்படும் கிராமம் அல்ல. இது ஊரிலிருந்து 9 கிமீ தூரத்தில் - ஆட்டோவில் இருந்து

உள்ளே கிராமத்திற்கு அருகில் ஷிம்ஷா செல்கிறது என்றாலும் தற்போதைய கிராமத்திலிருந்து 4, 5 கிமீ தூரத்தில் இருக்கிறது - ஆட்டோவில் செல்லும் போது எடுத்த படம்

1990களின் தொடக்கத்தில் இக்கிராமம், ஷிம்ஷா நதிக் கரையில் (காவிரி நதியின் கிளை) அமைந்திருந்ததாம். 1916ல் பிளேக் நோய் பரவிய போது இக்கிராம மக்கள் நதிக்கரை ஓர தங்கள் இருப்பிடத்தைத் துறந்து சில கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் பகுதிக்குத் தங்கள் இருப்பிடத்தை மாற்றிய போது வியந்து போயிருக்கின்றனர். தற்போது இக்கிராமம் நதிக்கரையிலிருந்து 4, 5 கிலோமீட்டர் தூரத்தில். 

நதிக்கரை ஓரம் இருந்த போது தங்களுடன் இருந்த பறவைகள் இவர்கள் இடம் பெயர்ந்த அதே இடத்திற்கு இடம் பெயர்ந்ததுதான் ஆச்சரியம். இடம் பெயர்தல் என்பது சாதாரண நிகழ்வுதான் ஆனால், காரணம் அனைத்தும் நீர்நிலைகளைச் சார்ந்து, நீர்நிலை ஓரங்களில் வாழ்பவை.

அப்படியிருக்க பெரிய குளங்களோ, நதியோ இல்லாத இடத்திற்கு மக்கள் இடம் பெயர்ந்த போது இப்பறவைகளும் பின்தொடர்ந்து சென்றிருக்கின்றன. அவர்களுக்கு இது அபூர்வமாகத் தெரிந்திருக்கிறது. பலருக்கும் புரியாத நிகழ்வாக இருந்திருக்கிறது.

ஏற்கனவே நதியின் பக்கம் இருந்த போதே இப்பறவைகளோடு இருந்த பந்தம் இப்படி இடம் பெயர்ந்ததும் இவற்றைத் தங்கள் குழந்தைளாகவே பாவிக்கத் தொடங்கியிருக்கின்றனர். குறிப்பாகப் பறவைகளில் பெண் பறவைகளைத் தங்கள் பெண்களாக எண்ணி பிரசவத்திற்குப் பிறந்த வீடு வருவதாக.

விவசாயம்தான் இவர்களுக்கு வாழ்வியல் - ஆட்டோவில் செல்லும் போது எடுத்த படம்

இப்படி இக்கிராம மக்கள் இப்பறவைகளோடு உணர்வு ரீதியாகப் பாசத்தையும், பிணைப்பையும் கொண்டு, பரம்பரை பரம்பரையாகப் பாரம்பரியமாகக் கருதி வருகின்றனராம். இப்பறவைகள் அவர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் நல்ல நேரத்தையும் கொண்டு வருவதாகவும் கருதுகின்றனராம். கூடவே விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் கிராம மக்களுக்கு இப்பறவைகளின் எச்சம் உரமாகவும் பயன்படுகிறதாம்.

மைசூரைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் மனு கே என்பவரால் ஹெஜ்ஜர்லே பாலகா (கன்னடத்தில் ஹெஜ்ஜர்லே என்றால் பெலிக்கன்-கூழைக்கடா)  - ‘பெலிக்கனின் நண்பர்கள்’ எனும் ஒரு  உள்ளூர் குழு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு பறவைகளின் குஞ்சுகளைக் கீழே விழாமல் பாதுகாப்பது, வண்ண நாரைகளும் சாம்பல்நிற கூழைக்கடாக்களும் புளியமரங்கள் பூவரசு மரங்களில் கூடு கட்டும் வழக்கம் உடையதால் அம்மரங்களை நடுதல், நீர்நிலைகளைச் சுத்தம் செய்தல், பறவைகளோடு எப்படி நட்புடன் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவற்றால் மக்களும் விழிப்புணர்வுடன் செயல்படுகிறார்கள். 

25, 26 வருடங்களுக்கு முன்னால் உள்ளூர் விவசாயி ஒருவர் பறவைகளின் இருப்பிடமான புளியமரத்தை வெட்டுவதை இந்த ஹெஜ்ஜர்லே பாலகா குழுவினர் தடுத்ததோடு அந்த மரத்திற்கான வாடகையைக் கொடுப்பதாகச் சொல்லி ஏற்பாடும் செய்தனராம். அப்படி மரம் இருக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும், வனத்துறை பணம் கொடுத்து பறவைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகச் சொன்னார்கள். கிராமத்தின் வழி செல்லும் மின்சாரக் கம்பியால் மின்சாரம் தாக்கி ஒவ்வொரு பருவகாலத்திலும் பல பறவைகள் இறந்ததால் அதிகாரிகளின் கவனத்திற்கு அது கொண்டு செல்லப்பட்டு 48 லட்சம் செலவழிக்கப்பட்டு கம்பிகள் insulation செய்யப்பட்டனவாம். முன்னெடுத்துச் செய்தவர்  அக்கிராமத்தைச் சேர்ந்த திரு லிங்கெ கௌடா. மற்றும் அவருக்கு உதவியாக இருக்கும் திரு சிவப்பா. அவர் பேசும் காணொளி கூட இணையத்தில் இருக்கிறது. இவர், இப்பறவைகள்தான் தங்கள் கிராமத்தை உலகிற்கே அடையாளம் காட்டியுள்ளன என்று பெருமைப்படுகிறார்.

இந்த ஹெஜ்ஜர்லே பாலகா குழுவின் முயற்சியால் 2007 ஆம் ஆண்டில், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இக்கிராமம் 'சமுதாய சம்ரக்ஷிதா பிரதேஷா' (Community Bird Conservation) என்று அறிவிக்கப்பட்டது. கர்நாடகாவில் இப்படிப் பறவைகளின் காப்பகமாக இருக்கும் கிராமம் இது ஒன்று மட்டுமே. இந்த சம்ரஷிதா பிரதேஷா பகுதிக்குள் அரசின் அனுமதி இன்றி, கிராம மக்கள் எந்த வளர்ச்சிப் பணியையும் மேற்கொள்ள முடியாது என்பதோடு அடுக்கு மாடிகள் கொண்ட வீடுகளையும் கட்ட முடியாது. 

நாங்கள் சென்று வந்த போது பார்த்த, அறிந்த விவரங்களைப் பற்றி அடுத்த பதிவில்/பதிவுகளில் சொல்கிறேன்.


-----கீதா

47 கருத்துகள்:

  1. அடுத்த பதிவு வரை காத்திருக்கணுமா நீங்கள் போயிருந்த கதையை.... காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஆமாம் நெல்லை!! இது அந்தக் கிராமத்தைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம். பறவைகள் ஆர்வம் இருக்கறவங்களுக்கு உதவும் என்பதால்.

      ஆனால் அடுத்த பதிவும் போட வேண்டும் இதுதான் சீசன். அதைப் பற்றி சொல்லணும் அப்பதான் ஆர்வலர்களுக்கு வசதியா இருக்கும். இணையத்தில் கொடுத்திருக்கும் மாதங்கள் சரியா இல்லை. சரியான தகவல்கள் கொடுக்கலாம்னு..

      கீதா

      நீக்கு
  2. ஊர் பெயரே வாயில் நுழையாது போலிருக்கிறது!

    //என்னிடம் இப்படியான ஆசைகளுக்குப் பஞ்சமில்லை.//

    ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா....ஸ்ரீராம் ஈசிதான் சொல்ல. கொக்குன்னுனாம சொல்றதுண்டே.

      அதைச் சொல்லுங்க ஆசைகளின் அலையில் தத்தளிப்பு....ஆனா அதைக் கொஞ்சமேனும் நிறைவேற்றிக்கணும்னு......

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  3. கூழைக்கடா என்று படித்தால் எனக்கு புழ்பெற்ற ஜெயகடா நினைவு வருகிறது!

    அதென்னா.. வண்ண நாரைகள்னு சொல்லி வெண்ணிற பறவையை போட்டிருக்கிறீர்கள். ஓரத்தில் மட்டும் லேசான ஷேட்... ! ஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரு அந்த ஜெயகடா? எனக்குத் தெரிந்ததும் நீங்கள் சொல்வதும் ஒன்றே தானா என்று யோசிக்கிறேன். அப்புறம் கேட்டுக் கொள்கிறேன் ஒன் டு ஒன்னில்

      அடுத்த அப்திவில் வரும் ஸ்ரீராம் நாரைக்களின் பின் பக்கம்- அது இறக்கைகளின் ஓரங்களில் கருப்பு, நுனியில் பிங்க் கலர், கால்கள் சிவப்பு கலந்த ஆரஞ்சு, மூக்கு மஞ்சள்...ஏதோ பெயிண்ட் அடிச்சாப்ல அதான் painted stork னு!!!

      வெள்ளைதான் ஆனா....அதான் வெள்ளை கிராமம்

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      கீதா

      நீக்கு
  4. கரும்பு வயல்கள் இளைத்து ஏழையாய் காணப்படுகின்றன! ஆரம்பகட்டத்தில் அப்படிதான் இருக்குமோ என்னவோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், பார்த்தப்ப எனக்கும் அப்படித்தான் தோன்றியது. காரணம் நம்ம ஊர் கரும்பு போல நிறம் இல்லை. ஒரு மாதிரி லைட் கலரா இருக்கு. இது சின்னதுங்க. வளர்ந்தாலும் அப்படித்தான் ஒல்லியா லைட் ஷேட்லதான் இருக்கு.

      இன்னும் அடுத்த பதிவுகளில் வரும் படங்கள்.

      நன்றி ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
    2. இந்தக் கரும்பு ஆலைக்கரும்பு. நம்ம பொங்கல் கரும்பல்ல. வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும். பொங்கல் கரும்பு கறுப்பு நிறம். பொங்கலுக்கு அறுவடை முடிந்துவிட்டதால் புதிதாகப் போட்டிருக்கிறார்கள்

      நீக்கு
    3. ஆமா அடுத்த பதிவுல சொல்லியிருக்கேன்.... ஆலைக்கரும்புன்னு.....ஒரு அறுவடை முடிந்து மீண்டும் போட்டிருக்காங்க. பொங்கலுக்கு அங்க போயிருந்தப்பவும் இதே ஆலைக்கரும்புதான் நெல்லை....கேட்டேன் அப்ப அவங்க சொன்னது இங்க இதுதான் விளைவிக்கிறாங்கன்னு. அறுவடை முடிந்து ரோடுகளில் கட்டிப் போட்டிருந்தாங்க. ஓலைகளை எல்லாம் தனியா கட்டி கரும்பு தனியாகக் கட்டி.

      ஃபோட்டோ எடுத்திருந்தேன் ஆனா இப்ப காணலை தொகுக்கும் போது. மொபைல்ல இருக்கா கேமராலா இருக்கா இல்லை சேவ் பண்ணறப்ப கட் பண்ணி போச்சான்னு தெரியலை பார்க்கணும்.

      கீதா

      நீக்கு
    4. ஃபோட்டோ எடுத்து மொபைல் டு கம்ப்யூட்டர் எடுக்கறதுல பல வீடியோக்கள், படங்கள் வர மாட்டேங்குது. வீடியோக்கள் ப்ளே ஆகாம போய்டுது.

      கேமரால வரும் பிரச்சனை இல்லை ஆனா கேமரா சட்டுனு பேட்டரி போய்விடுகிறது. முதல் முறையும் அப்படித்தான் ஆச்சு, அடுத்த முறையும் அப்படித்தான் ஆச்சு.

      கீதா

      நீக்கு
  5. //எங்கு உட்கார்ந்திருக்கும் என்று..//

    ஈஸி கொஸ்டினுங்க.. அந்த வீட்டின் மேல்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா.........பின்னால வாரேன்

      கீதா

      நீக்கு
    2. பார்த்து... விழுந்துடாம வாங்க..!

      நீக்கு
    3. ஹாஹாஹாஹா.....வேறு யார் சொல்றாங்கன்னு பாக்கலாம்னு

      கீதா

      நீக்கு
    4. இந்த அக்கா படமெடுத்து முடியட்டும்னு ஒரு அரைமணி நேரம் பறந்தபடியே இருந்திருக்குமோ? கடைசியில் இவங்க படமெடுத்து முடிச்ச மாதிரியே தெரியலையேன்னு வேற எங்கயாவது போயிருக்கும்

      நீக்கு
    5. இதற்கு நான் கொடுத்த பதில் வரவே இல்லை போல!!!

      சிரித்துவிட்டேன் நெல்லை....அது வேற எங்கயும் போல....அந்த மரத்துலதான் உட்கார்ந்தது. ஆனால் அது இப்படி வந்ததும் எடுத்த ஷாட் டக்கென்று பதிந்தது எனக்கே ஆச்சரியம்...அட என்று நினைத்துக் கொண்டேன்.

      கீதா

      நீக்கு
  6. மனிதர்கள் இருந்தாலும்...

    நம்மேல்தான் என்ன நம்பிக்கை அந்த பறவைகளுக்கு... அடித்து வறுத்து சாப்பிடமாட்டார்கள் என்கிற நம்பிக்கை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக ஸ்ரீராம்.....இங்கலாம் ஏரில எடுக்கறப்ப நம்மள கண்ட உடனேயே பறந்துடும்.....அடுத்த பதிவில் படத்தோடு சொல்றேன்.

      ஆனா இந்தக் கிராமத்துல அத்தனை நடமாட்டம், மாடு....ஆடு எல்லாமும் தான் ஆனா என்ன பிணைப்புன்னு ஆச்சரியம். ஆனா அதுக்கேத்தாப்ல மக்களும் நல்ல ஒத்துழைப்பு.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  7. நதிக்கரை ஓரம் நதிக்கரை ஓரம்னு படித்ததும் 'நதிக்கரையோரத்து நாணல்களே' பாடல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை/ ஏன் நதியோரம் பாடல் முதலில் நினைவுக்கு வரவில்லை? விடை சிம்பிள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நதிக்கரையோரத்து நாணல்களே - நான் கேட்டிருக்கிறேனா? டக்குனு நினைவுக்கு வரவில்லை னெட் கொஞ்சம் சரியாகட்டும் கூகுளில் போட்டுக் கேட்டுவிடுகிறேன். நெட் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப படுத்தல்

      நதியோரம் பாடல் நினைவுக்கு வந்துவிட்டது ரஜனி படப் பாடல்....எஸ்பிபி நதியோரம் நீயும் ஒரு நாணல்?

      கீதா

      நீக்கு
    2. நதிக்கரையோரத்து நாணல்களே பாட்டும் கேட்டதும் கேட்டது நினைவுக்கு வந்திருச்சு.....

      கீதா

      நீக்கு
  8. நதியை விட்டு தள்ளி இடம் மாறியதும் பறவைகளும் பின்தொடர்ந்தது உண்மையிலேயே ஆச்சர்யம், நெகிழ்ச்சி.

    மனிதர்களை நம்பி, அண்டி வாழ தலைப்பட்டிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் எனக்கு ரொம்ப ஆச்சரியா இருந்துச்சு. ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது. மனிதர்களை அண்டின்னு சொன்னா....பாவம் மரங்களை வெட்டாமல் இருத்தல் அதைச் செய்யறாங்க அந்த ஊர்ல நிறைய மரங்கள் இருக்கு ஸ்ரீராம் அங்க....ஒரு நம்பிக்கை அதுங்களுக்கு அந்த இடத்துல பாதுகாப்பு என்று...வேறு சில தகவல்கள் நேரில் அறிந்தது அடுத்த பதிவில் சொல்லறேன்

      கீதா

      நீக்கு
  9. பறவைகளை மரங்களை வெட்டாமல் இருப்பது, அரசாங்க உதவி போன்ற செய்திகள் மனிதம் இருப்பதை உணர்த்தி நெகிழ வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனாலதான் ஸ்ரீராம் எனக்கு இந்தக் கிராமத்துக்குப் போய் பார்க்கணும்னு ரொம்ப ஆசையாக இருந்தது. 2007க்கு அப்புறம் அதாவது நான் சென்னை அப்புறம் பாண்டிச்சேரில இருந்தப்ப கேள்விப்பட்டேன். அப்ப நேர்ல பார்த்துட்டு வந்தவந்த சொன்னதை வைச்சு எனக்கும் பார்க்க வேண்டும் என்ற ஆசை. அப்பல்லாம் கிராமம் ஃபுல்லும் பறவைகளாதான் இருக்குமாம் இந்த சீசன்ல....

      அடுத்த பதிவுல சொல்றேன்...

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  10. ஆஹா மிக அருமையான ஆரம்பம் அக்கா, இந்த இடமும் தகவல்களும் மிக புதிது அக்கா .. மிக சுவாரஸ்யமான இடமாக உள்ளது தொடர்கிறேன் பதிவு வழியே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அனு உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்னு எனக்குத் தெரியும்....

      ரசிப்பீங்கன்னும்....

      நீங்க எவ்வளவு போட்டிருக்கீங்க இப்படியான இயற்கை விஷயங்கள் வீடியோவாகவும்....

      நன்றி அனு

      கீதா

      நீக்கு
    2. அனு உங்க பதிவுகள் பார்க்கணும் இனிதான்....சித்திர சந்தே போட்டிருந்தீங்க 2 பாகம்...அதுக்குப் பிறகு பார்க்கலை...பார்க்கிறேன்

      கீதா

      நீக்கு
  11. கீதா பதிவில் கிராமத்து அறிமுகம் அருமை.
    இன்று முழுவதும் சரியான வேலை. உறவினர்கள் போன் பேசினார்கள்.
    இப்போது தான் நேரம் கிடைத்தது. பதிவு அருமை.
    படங்கள், செய்திகள் எல்லாம் அருமை.
    வண்ண நாறைகள் அழகு.
    கிராமம் படங்கள் , நதிக்கரை படங்கள் அழகு. ஆட்டோவில் செல்லும் போது எடுத்த வயல் படமும் அழகு.

    //25, 26 வருடங்களுக்கு முன்னால் உள்ளூர் விவசாயி ஒருவர் பறவைகளின் இருப்பிடமான புளியமரத்தை வெட்டுவதை இந்த ஹெஜ்ஜர்லே பாலகா குழுவினர் தடுத்ததோடு அந்த மரத்திற்கான வாடகையைக் கொடுப்பதாகச் சொல்லி ஏற்பாடும் செய்தனராம். அப்படி மரம் இருக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும், வனத்துறை பணம் கொடுத்து பறவைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகச் சொன்னார்கள். கிராமத்தின் வழி செல்லும் மின்சாரக் கம்பியால் மின்சாரம் தாக்கி ஒவ்வொரு பருவகாலத்திலும் பல பறவைகள் இறந்ததால் அதிகாரிகளின் கவனத்திற்கு அது கொண்டு செல்லப்பட்டு 48 லட்சம் செலவழிக்கப்பட்டு கம்பிகள் insulation செய்யப்பட்டனவாம். முன்னெடுத்துச் செய்தவர் அக்கிராமத்தைச் சேர்ந்த திரு லிங்கெ கௌடா. மற்றும் அவருக்கு உதவியாக இருக்கும் திரு சிவப்பா. அவர் பேசும் காணொளி கூட இணையத்தில் இருக்கிறது. இவர், இப்பறவைகள்தான் தங்கள் கிராமத்தை உலகிற்கே அடையாளம் காட்டியுள்ளன என்று பெருமைப்படுகிறார்.//

    வனத்துறை மற்றும் பதவியில் இருக்கும் மனிதர்கள், அந்த ஊர் மக்கள் அனைவரையும் பாராட்ட வேண்டும். அந்த பறவைகள் கிராமமக்களின் மனித நேயத்தை உலகிற்கு சொல்கிறது. பறவைகள் வாழ்க!


    நானும் தாய்லாந்தில் பார்த்த பறவைகள் படம் போட வேண்டும் என்ற ஆசையை தூண்டுகிறது உங்கள் பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை அக்கா. இப்போது ஓய்வு எடுக்க முடிகிறதா அக்கா?

      //படங்கள், செய்திகள் எல்லாம் அருமை.
      வண்ண நாறைகள் அழகு.
      கிராமம் படங்கள் , நதிக்கரை படங்கள் அழகு. ஆட்டோவில் செல்லும் போது எடுத்த வயல் படமும் அழகு.//

      மிக்க நன்றி கோமதிக்கா.

      //வனத்துறை மற்றும் பதவியில் இருக்கும் மனிதர்கள், அந்த ஊர் மக்கள் அனைவரையும் பாராட்ட வேண்டும். அந்த பறவைகள் கிராமமக்களின் மனித நேயத்தை உலகிற்கு சொல்கிறது. பறவைகள் வாழ்க!//

      ஆமாம் அக்கா அதனால்தான் அந்தக் கிராமத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது.

      அந்த லிங்கெ கௌடா காணொளியில் பேசுவதும் இருக்கிறது இணையத்தில். கன்னடத்தில் என்பதால் நான் இங்கு தரவில்லை.

      நீங்க விதம் விதமாகப் பார்த்திருப்பீங்க தாய்லாந்தில். போடுங்க அக்கா. இப்படி நாம ஒருத்தருக்கொருத்தர் ஆர்வத்தை தூண்டிக் கொள்வோம்.

      மிக்க நன்றி கோமதிக்கா.

      கீதா

      நீக்கு
  12. //ஒரு வண்ண நாரை பறந்து வந்து உட்காரப் போகிறது. எங்கு உட்கார்ந்திருக்கும் என்பதைச் சொல்ல முடியுமா பாருங்க//

    ஓட்டு கூரை மேல் தான் உடகார்ந்திருக்கும் கீதா.

    பதிலளிநீக்கு
  13. ஆட்டோவில் செல்லும் போது எடுத்த படம் நன்றாக இருக்கிறது, நீரில் தென்னைமரங்கள் தெரிவது அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அக்கா. பறவைகள், கிராமத்தில் எடுத்த படங்கள் தவிர மற்றவை பெரும்பாலன படங்கள் வழியில் கிராமத்தைச் சுற்றியிருக்கும் படங்கள் ஆட்டோவில் சென்ற போது எடுத்தவை.

      கீதா

      நீக்கு
  14. நதிக்கரையில் இறங்க படித்துறை இருக்கு போலவே!
    ரயில் போக பாலம் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா, இது கிராமத்திற்குச் செல்லும் வழியில் இந்தக் கிராமத்திலிருந்து ஒரு 9 கிமீ தள்ளி. இதே நதி கிராமத்திற்கு அருகிலும் போகிறது....3, 4 கிமீ தூரத்தில்.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
    2. அக்கா அது ரயில் பாலம் இல்லை. ரயில் நிலையம் இப்பகுதிக்கு எதிர்ப்புறம் பெங்களூர் மைசூர் சாலையின் அப்பக்கம் இருக்கு. இது இப்பக்கம்.

      அது நடக்க வண்டி செல்ல பாலம் என்று நினைக்கிறேன். ஆனால் வண்டியோ யாரும் நடந்தோ செல்வதைப் பார்க்கவில்லை. கிட்ட போனால் தெரியும். அது தூரத்தி இருக்கு. நான் கொஞ்சம் ஜூம் பண்ணி எடுத்தேன் தூரத்தில் எடுத்ததும் இருக்கிறது. அது ஒரு வேளை கிராமத்தின் உள்பக்கம் செல்லும் நதியின் நடுவில் இருப்பதோ என்னவோ? கிராமத்திற்குள் போனப்ப நதி அருகில் போக நினைத்திருந்தேன் ஆனால் அந்தச் சமயத்தில் டக்குனு தோன்றவில்லை.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  15. ஸ்ரீராம், கோமதிக்கா,

    பறவை ஓட்டின் மேல் உட்காரவில்லை. அருகில் மரத்தில். அந்த ஆங்கிள் டக்கென்று கேமராவில் சிக்கியது. ஓட்டில் உட்காருவது போல! ஏதேச்சையாக அமைந்த ஒரு ஷாட்.

    நிலாவை, தாஜ்மஹாலைக் கையில் ஏந்துவது போல தலைக்கு மேல் இருப்பது போல எல்லாம் கோணம் வைத்து ஷாட்ஸ் எடுப்பதுண்டு இல்லையா? அல்லது வேறு வேறு படங்களில் இருந்து கட் பண்ணி போட்டு....போடுவதுண்டு இல்லையா

    ஆனால் இது அப்படி எதுவும் செய்யாமல் அமைந்த ஷாட். நான் பறப்பதை எடுக்க முயற்சி செய்த போது டக்கென்று அமைந்த ஷாட்! கேமராவில் பார்த்த போது ஓட்டில் உட்காரப் போகுதோன்னு தோணும் ஆனா மரத்தில்!!

    மிக்க நன்றி ஸ்ரீராம் அண்ட் கோமதிக்கா...

    கீதா

    பதிலளிநீக்கு

  16. ​அப்பாடா மேட்டர் கிடைச்சுடுச்சு. கதை எழுதுவது போல ரொமப சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. பயணம் பற்றயும், போய் வந்த இடம் பற்றியும், கண்ட காட்சிகளை பற்றியும் எழுதி கொஞ்சம் படங்களையும் சேர்த்தால் அருமையான பதிவு. படங்கள் நன்றாக உள்ளன.

    கூட்டிகிட்டு போறீங்க.. சரி வரேன், நடுவில கொஞ்சம் வேர்கடலையாவது கொடுங்க திங்கறதுக்கு.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா....ஜெ கே அண்ணா சொல்லப்போனா நிறைய மேட்டர் இருக்கு எழுத ஏற்கனவே படங்களுடன் எடுத்துவைத்தவை இருக்கின்றன.

      நெல்லைக்குத் தெரியும். அதான் அவர் அப்பப்ப என்னைக் கலாய்ப்பார்.

      அதை எல்லாம் பின்னில் தள்ளி இது இப்ப போடலைனா, நெல்லை என்னை இன்னும் கலாய்த்துத் தள்ளிவிடுவார். காரணம்? காத்திருங்க!

      ஆனா நீங்க சொல்றாப்ல கதை எழுதுவது ரொம்ப யோசிக்க வேண்டும். இப்ப அது கொஞ்சம் முடியலை. இதுனா படங்கள் போட்டு போய்வந்த விவரங்கள் சொன்னா போதும்.

      //பயணம் பற்றயும், போய் வந்த இடம் பற்றியும், கண்ட காட்சிகளை பற்றியும் எழுதி கொஞ்சம் படங்களையும் சேர்த்தால் அருமையான பதிவு. படங்கள் நன்றாக உள்ளன.//

      மிக்க நன்றி அண்ணா.

      படங்கள் பத்தி அப்பால கொஞ்ச நாள் கழிச்சு என்ன சொல்லுவீங்கன்னு பார்ப்போம்...ஒரு வேளை ....ஒரு வேளை.....ஓகே சஸ்பென்ஸ்!

      கண்டிப்பா தரேன் வேர்க்கடலை!! என்ன? சாப்பாடே கொடுக்கறேன். ஆஹா இப்பதான் நினைவுக்கு வருது கொண்டு போன சாப்பாட்டை எடுக்காம விட்டுவிட்டேனே! நெல்லை இதுக்கும் என்ன சொல்லப் போகிறாரோ?!!!!

      மிக்க நன்றி ஜெ கே அண்ணா.

      கீதா

      நீக்கு
  17. அழகான தொடக்கம். நீங்கள் அங்கே சென்ற அன்று கொடுத்த தகவல் நினைவில்...

    இப்படியான இடங்களுக்குச் செல்வது ஒரு சுகானுபவம். பயணங்கள் மீதான காதல் தொடரட்டும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பயன்படுத்திக் கொள்வோம்.

    படங்கள் அனைத்தும் நன்று. தற்போது நானும் எனது டி.எஸ்.எல்.ஆர் எடுத்துச் செல்வதில்லை. அலைபேசி வழியே தான் படங்கள் எடுக்கிறேன்.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யெஸ் வெங்கட்ஜி. அதே இடம்தான். நினைவில் இருந்ததற்கு மிக்க நன்றி. எனக்கும் நீங்கள் சொல்லும் இடங்கள் பெரும்பாலும் நினைவில் இருக்கும்.

      ஆமாம் மிகவும் சுகானுபவம் ஜி. ஆமாம் வேறு எந்த ஆசையும் இல்லை. இப்படிப் பயணம் செய்யும் ஆசைகள் மட்டும்.....ஆமாம் வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்வோம்.

      படங்கள் அனைத்தும் நன்று.//

      நன்றி ஜி.

      நான் கேமராவில் எடுத்தவை இதெல்லாம். என் கேமரா டி எஸ் எல் ஆர் இல்லை. சாதாரண கேமராதான். அதுவும் திறக்கவே டைம் எடுக்கும் அதுக்குள்ள பறக்கற பறவை ஸ்க்ரீன்லருந்து காணாம போயிருக்கும்!!!!!

      என் அலைபேசியில் கட்டிடங்கள் அருகில் இருக்கும் பூக்கள் விலங்குகள் பரவாயில்லாமல் வரும் ஆனால் பறவைகள் அதுவும் கொஞ்சம் 50 அடி தூரத்தில் இருப்பவை பெரும்பாலும் நல்லா வரதில்லை.

      ஆமாம் ஜி உங்க பதிவில் தெரிகிறது நீங்க அலைபேசியில்தான் எடுக்கறீங்கன்னு ஆனா நல்லா இருக்கு எல்லாமே.

      மிக்க நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு
  18. கிராமிய தொடக்கம் படங்களோடு அருமையாக உள்ளது.

    தொடர்ந்து வருகிறேன் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி.

      வாருங்கள் தொடர்ந்து

      கீதா

      நீக்கு
  19. வித்தியாசமான இடம்! வித்தியாசமான பெயர்! வித்தியாசமான அனுபவம்! எல்லாவற்ரையும்விட உங்களின் வித்தியாசமான ஆசை! நிஜமாகவே பிரமிப்பும் ஆச்சரியமும் எழுகிறது கீதா உங்கள் மீது!!
    படங்கள் அனைத்தும் அழகு! உங்களின் விவரிப்பும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மனோ அக்கா, உங்கள் கருத்து பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு எல்லோரும் செல்லும் இடங்களையும் நான் பார்க்க ஆசைப்பட்டாலும் வித்தியாசமான இடங்களைப் பார்க்க ஆசைப்படுவேன். அப்படிச் சென்றதுதான்.

      படங்கள் அனைத்தும் அழகு! உங்களின் விவரிப்பும் அருமை!//

      மிக்க நன்றி மனோ அக்கா

      கீதா

      நீக்கு
  20. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. கொக்கரே பெல்லூர் என்ற சொல்லுக்கு நீங்கள் தந்த விளக்கங்கள் மிக அருமையாக உள்ளது. ஒவ்வொரு இடத்தையும், ஊன்றி கவனித்து, பல வழிகளின் மூலமாக கண்டுணர்ந்து தந்திருக்கும் பதிவை படித்ததும், எத்தனை எழுத்து திறமை தங்களிடம் என மிக வியப்பாக இருக்கிறது சகோதரி. அதிலும், அக்கறையோடு அந்த இடத்திற்கு சென்று பறவைகளை புகைப்படங்கள் எடுத்து, அவற்றைப்பற்றிய விபரங்களை தொகுத்து என..... உங்களின் அயராத முயற்சிக்கும், மனம் நிறைந்த ஆசைகளுக்கும், எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

    படங்கள் அனைத்தும் சிறப்பாகவும், தெளிவாகவும் உள்ளது. அந்தப் பறவைகளின் குணநலன்களை தெரிந்து கொண்டதும், மகிழ்ச்சியாக இருக்கிறது. மனிதர்களை நேசிக்கும், அவைகளை, மனிதர்களும் பத்திரமாக அவற்றிற்கு தகுந்த பாதுகாப்புகளை தருவதும், அன்போடு கவனித்துக் கொள்வதும் படிக்கவே எத்தனை சந்தோஷமாக உள்ளது தெரியுமா..? தங்கள் பதிவின் முகப்பு பக்கத்திலும் அந்த நாரைகளின் படங்கள்தாம் என நினைக்கிறேன். அழகாக இருக்கிறது.

    மேலும் பல விபரங்களை தங்கள் அடுத்தப் பதிவிலேயும் அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். இந்தப்பதிவுக்கு தாமதமாக வந்தமைக்கு மன்னித்துக் கொள்ளுங்கள். மூன்று நாட்களாக வலைப்பக்கம் வர இயலவில்லை. அதனால்தான் தாமதமாகி விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு