‘சக்கரே நகரா’ என்று அழைக்கப்படும் மாண்டியா மாவட்டத்தில் இருக்கும் இந்த கொக்கரே கிராமத்திற்கு சக்கரே உடம்பாக இருக்கும் நான் இரு முறை சென்று வந்தேன்/தோம்.
இரண்டாவது முறை சென்ற போது எங்களுடன் இளைய பதிவர் மிகவும் சிறியவர் சேர்ந்து கொண்டார். இரண்டாவது பயணம் பற்றிச் சொல்லும் அடுத்த, நிறைவுப் பதிவில் அவர் வந்துவிடுவார்! இப்போது முதல் முறை சென்ற போது பார்த்ததைச் சொல்கிறேன்.
இணையத்தில், அக்டோபரிலிருந்து மே//ஜூன்/ஜூலை வரை சீசன் என்று இருந்ததே தவிர எந்த மாதம் என்பது தெளிவாகக் குறிப்பிட்டு இல்லை. படங்களை வைத்து சரியாகக் கணிக்க முடியவில்லை.
நம் முந்தைய வீட்டருகில் இருந்த ஏரிகளில் நடைப்பயிற்சியின் போது ஓரிரு வண்ண நாரைகள், ஓரிரு கூழைக்கடாக்கள் ஜனவரியில் வந்து மே, ஜூனில் காணாமல் போவதையும், தண்ணீரில் நீந்துவதையும் மட்டுமே பார்த்திருக்கிறேன்.
சென்ற பதிவில் சொல்லியிருந்த தகவல்கள் கிடைத்ததும், டிசம்பரில் ரிஸ்க் எடுக்க வேண்டாம், ஜனவரியில் பொங்கல் விடுமுறையில் சென்று பார்த்து பறவைகள் இருந்தால் பார்க்கலாம் இல்லை என்றால் தகவல்கள் தெரிந்து கொண்டு வரலாம் என்று முடிவு செய்தேன்.
பொங்கலுக்கு மறுநாள் சனிக்கிழமை அன்று காலையில் வீட்டிலிருந்து 7 மணிக்குக் கிளம்பினோம். கையில் காலை உணவு, மதிய உணவு என்று கட்டிக் கொண்டு, தண்ணீர் குப்பிகளுடன் கிளம்பியாச்சு.
எங்கள் பகுதியிலிருந்து மெயின் ரோட்டிற்குச் சென்று அங்கிருந்து பனசங்கரிக்குப் பேருந்தில் 40 நிமிடப் பயணம். அங்கிருந்து மெஜஸ்டிக்கிற்கு மெட்ரோவில் 25 நிமிடப் பயணம். ஸ்டேஷன் விட்டு வெளியில் வந்து ஒரு ஓரமாக அமர்ந்து காலை உணவைச் சாப்பிட்டோம். சாட்டிலைட் பேருந்து நிலையம் செல்ல வேண்டும். அங்கிருந்துதான் மத்தூர் ஸ்டாப்பிங்க் உள்ள மைசூர் செல்லும் பேருந்தில் செல்ல வேண்டும்.
மெஜஸ்ட்டிக்கிருந்து பேருந்து உடனே கிடைத்துவிட்டது. ஆனால் போக்குவரத்தினால் சாட்டிலைட் பேருந்து நிலையம் அடைய 10 மணி ஆகிவிட்டது. சாட்டில்லைட் பேருந்து நிலையத்தில் மத்தூர் செல்லும் பேருந்து 4, 4a ப்ளாட்ஃபார்மில் என்று தெரிந்து கொண்டு அந்த ப்ளாட்ஃபார்மில் தயாராக இருந்த பேருந்தில் ஏறியாச்சு. கூட்டம் இல்லை. இடம் கிடைத்தது. இடப்புற ஜன்னல். அதனால் செல்லும் வழியில் சில க்ளிக்ஸ்
இதோ மேலே உள்ள ஒற்றைப் படத்தில் நீச்சல் குளம் போல ஒன்று அது என்ன என்று தெரிந்தால் சொல்லுங்கள். வித்தியாசமாக இருக்கு ராமநகராவிற்கும், சன்னபட்டனாவிற்கும் இடையில் என்று நினைவு. எனக்கு அது என்ன என்று தெரியவில்லை. அங்கு ஏதோ எழுதிய பலகையும் இருந்தது ஆனால் பேருந்து வேகத்தில் அதை வாசிக்க முடியவில்லை
கிராமத்திற்குச் செல்லும் முக்கிய சாலையான ருத்ராக்ஷிபுர் - ஹலகுரு சாலையில் கிராமத்தை அடைய இரு வழிகள் இருக்கின்றன. அதில் பேருந்து செல்லும் மெயின் சாலையில் அன்று சென்றோம். ஆட்டோவில் செல்லும் போது சில க்ளிக்ஸ் எடுத்துக் கொண்டே சென்றேன். பச்சைப் பசேல்!
சோள வயல்கள். ஆட்டோக்காரர் திடீரென்று வண்டியை நிறுத்தினார். என்ன என்று பார்த்தால் வயலில் இறங்கிட நானும் இறங்கிச் சென்றேன். சோளம் குழந்தைப் பருவத்தில் இருந்தது. சட்டென்று ஒரு பேபி கார்ன் பறித்துக் கொடுத்தார்! நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனக்குப் பயம். ஆனால் யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க என்று சொல்லும் போதே அங்கு வயலில் வேலை செய்தவர் வந்து சிரித்துக் கொண்டே எடுத்துட்டுப் போங்க என்றார்.
வளைவைப் பார்த்ததும் கிராமத்திற்குள் வந்துவிட்டோம் என்று தெரிந்தது. 1 மணி ஆகியிருந்தது. ஆரம்பப் பகுதியில் வீடுகள் இருந்தாலும் பறவைகள் கூட்டமாகக் கூடு கட்டுவது உட்பகுதியில். வளைவு தாண்டி இடப்புறம் சென்றதும் ஒரு கடையில் உட்கார்ந்திருந்த சிலரிடம் விசாரித்த போது, ஆர்வத்துடன் ஒருவர் வந்து இன்னும் பறவைகள் வரவில்லை ஜனவரி கடைசியில்தான் வரும் அதாவது தை அமாவசையில் என்றார், ஏதோ நம்ம வீட்டு மனுஷங்க தகவல் கொடுத்து வருவது பத்தி சொல்றாப்ல!! "அதோ அடுத்தாப்ல அந்த இடப்புறம் திரும்பினால் அங்கு பறவைகள் பாதுகாப்பு மையம் மற்றும் தகவல் மையம் இருக்கிறது" என்று அவர் சொன்னதும், ஆட்டோக்காரரை வரச் சொல்லிவிட்டு நாங்கள் நடந்து சென்றோம்.
பள்ளியிலிருந்து சில பையன்கள் (10, 11, 12 ஆம் வகுப்பு) வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னைக் கண்டதும் நட்புடன் சிரித்தார்கள். ஆங்கிலம் புரியும் ஆனால் கன்னடம் மட்டுமே பேசத் தெரிந்த பையன்கள். அவர்கள் பறவைகள் கூடுகட்டும் பகுதியில் இருப்பவர்கள். அவர்களும் பறவைகள் வரவில்லை என்றார்கள்.
மருத்துவமனையை அடுத்து இருக்கும் Nature Interpretation Centre - இயற்கை விளக்க மையத்திற்குள் சென்றோம். கிராமத்தின் செயல் குழுவினரில் சிலர் அன்று கூடியிருந்தார்கள். Endangered Species Conservation - World Wildlife Fund - இயற்கைக்கான உலகளாவிய நிதியம் இந்தக் கிராமத்தை NEST IN PIECE என்று குறிப்பிடுகிறது. அரிதாகிவரும் வண்ண நாரைகள், கூழைக்கடாக்கள் இக்கிராமத்திற்குக் கூட்டமாக வருவதால் ஹெஜ்ஜரிகே பாலகா - "பெலிக்கனின் நண்பர்கள்" குழுவினரின் முயற்சியால் WWF அவற்றைப் பேண இந்த மையத்தை 2007ல் உருவாக்கியிருக்கிறது. உள்ளே சிறிய அறையில் விளக்கப் படங்கள்.
பதிவு பெரிதாகிவிட்டது. பொறுத்துக்கோங்க. இரண்டு நாட்களாக இணையத்துடன் போராடி பதிவை செட் செய்ய வேன்டியதானது. படங்கள் காணொளிகள் எல்லாம் சேர்க்க இணையம் ரொம்பப் படுத்தியது. அதனால் முடிந்தவரை பதிவில் சேர்த்ததால் பெரிதாகிவிட்டது. முடிஞ்சா காணொளிகள் பாருங்க சின்னதுதான்.
பதிலளிநீக்குநன்றி எல்லோருக்கும்
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. வீட்டிலிருந்து புறப்பட்டதிலிருந்து பறவைகள் குடி கொள்ளும் அந்த கொக்கரே பெல்லூர் கிராமம் வரை சென்று வந்ததை விளக்கமாக தெளிவாக கூறியிருக்கிறீர்கள். படித்து ரசித்தேன்.
"சக்கரே நகரா" கரும்பு விளைச்சல் மிகுந்த மண்ணாகையால் "சக்கரே நகராவா"? நீங்களும் நல்ல ரைமிங்காக சக்கரே உடம்பு என சொல்லியுள்ளீர்கள். நான் சென்று வந்தாலும், அதேதான். சர்க்கரே உடம்பு உள்ளவர்கள் அங்கு செல்லக் கூடாதென நினைக்கிறேன். கரும்பு வயல்களின் காற்று பட்டால் கூட சக்கரே அளவு நமக்கெல்லாம் ஏறி விடும். ஆனால், நான் பொங்கலன்று சக்கரைப் பொங்கல் நன்றாக சாப்பிட்டேன். அளவை பார்த்தால்தானே பீதி வரும். (கால் பாதங்கள் எப்போதும் போல் தினமும் அதிர்வுடன் திம்மென்றுதான் உள்ளது.)
படங்கள் மிக அருமையாக உள்ளது. ஆட்டோவில் பயணிக்கும் போது எடுத்த படங்கள் கூட தெளிவாக பசுமையாக உள்ளது. உங்களுக்கு ஆட்டோ ஓட்டுனரின் ஒத்துழைப்பு கிடைத்தது மகிழ்ச்சி.
அவர் கையில் எடுத்து வந்து காட்டுவது சோளந்தானா? ஆனால் பொடிதாக கேப்பையை போல உள்ளதே..!!
பசுமை மிகுந்த கிராமம்.. நீங்கள் சொல்லி வருகையில் எனக்கும் அங்குப் போய் கிராமத்தின் பசுமையையும், பறவைகளையும் பார்க்க ஆவலாக உள்ளது.
காணொளிகளை கண்டேன். பறவைகள் அனைத்தும் பாவம்...! மருத்து உதவியுடன் சோர்வாக உள்ளது. நீங்கள் மிக அழகாக படங்கள் எடுத்துள்ளீர்கள். ஊருக்கே அடையாளமாக விளங்கிய பறவை பொம்மைகள் படம், பறவைகளுக்கென்ற மருத்துவமனை, அந்த பாதுகாப்பகம் அனைத்தையும் பார்த்து விபரங்களை படித்து தெரிந்து கொண்டேன்.
இறுதியில் நீங்கள் கொண்டு சென்ற மதிய உணவை சாப்பிடவே இல்லையா? ஆட்டோ விபரங்கள், பேருந்தின் பயணம், இறுதியில் வீடு வந்துக் சேர்ந்த விபரம் என முடிந்து விட்டதே..!!
சென்ற பதிவுக்கு இன்று மாலைதான் நான் ஒரு கருத்து தந்திருந்தேன். அந்த பதிவுக்கு நான் வர தாமதமாகி விட்டதெனவும் அதில் குறிப்பிட்டிருந்தேன். நான் அதற்கு வருவதற்குள் இரண்டாம் பதிவை வெளியிட்டு விடுவீர்களோ என மனதுக்குள் நினைத்தேன். அந்த கருத்து வந்து சேர்ந்ததா? அதன்படி இதைப்பார்த்ததும், உடனே படித்து ரசித்து முதல் ஆளாக? கருத்திடுறேன் எனவும் நினைக்கிறேன். அடுத்து வரவிருக்கும் பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சுவையான விபரங்களுடன் அறியாத பறவைகள் தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. தொடர்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கொண்டு சென்ற உணவு - காலைக்கு மில்லட் குழிப்பணியாரம், மதியத்திற்கு வரகு தயிர்சாதம் மற்றும் கோவைக்காய் பொரியல்.
நீக்குகாலை உணவை மெஜஸ்டிக் போனதும், மெட்ரோ ஸ்டேஷனின் வெளியில் வந்து ஓரமாக அமர்ந்து சாப்பிட்டோம். மதிய உணவை பெங்களூருக்குப் பேருந்தில் ஏறியதும் டிக்கெட் வாங்கிய பிறகு சாப்பிட்டோம்.
பதிவு பெரிதாகியதால் பல கட் கட் கட்!!!
மீதிக்கு கொஞ்சம் நேரம் பொருத்துவந்து பதில் சொல்கிறேன் கமலாக்கா. நன்றி அக்கா
கீதா
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குபதிவு அருமை. வீட்டிலிருந்து புறப்பட்டதிலிருந்து பறவைகள் குடி கொள்ளும் அந்த கொக்கரே பெல்லூர் கிராமம் வரை சென்று வந்ததை விளக்கமாக தெளிவாக கூறியிருக்கிறீர்கள். படித்து ரசித்தேன்.//
நீக்குமிக்க நன்றி கலமாக்கா. நீங்க ரசித்து வாசிப்பீங்கன்னு தெரியும்!!!
சக்கரே//
ஹாஹாஹா நாம ரெண்டுபேருமே சர்க்கரை உற்பத்தி செய்யறவங்க!!!!
அக்கா ப்ளீஸ் அக்கா....ஒன்றே ஒன்று மட்டும் என் வேண்டுகோள். உங்கள் கற்பனை இன்னும் பல வருஷம் சிறகடித்துப் பறந்து நீங்க நிறைய எழுதணும். அதுக்காகவாச்சும் ப்ளீஸ் இனிப்பைத் தவிருங்கள். ஆசையாக இருந்தால் அரை ஸ்பீன் வாயில் போட்டுக் கொண்டுவிட்டு மனதை சமாதானப்படுத்திக்கோங்க. ...நான் இன்னும் எழுத வேண்டும் என்று....உங்க கால் பத்தி சொன்னதை வாசித்ததும் தான் இந்தக் கருத்து என் தாழ்மையான வேண்டு கோள். இங்கு என் என்பதை விட எங்கள் எல்லோரது என்று சொல்ல வேண்டும்.
உங்க அன்பான வார்த்தைகள், உங்கள் எழுத்து எல்லாமே எங்களுக்குத் தேவை. அதனால் ப்ளீஸ்...ஓகே வா?!!!
கீதா
அவர் கையில் எடுத்து வந்து காட்டுவது சோளந்தானா? ஆனால் பொடிதாக கேப்பையை போல உள்ளதே..!!//
நீக்குஆமாம் நானும் கேப்பை என்றுதான் நினைத்தேன். அதான் அவர் கையில் கொண்டு வந்து காட்டினார். அது நாட்டுச் சோளம். சில மணிகள் தோல் நீங்கி வெள்ளையாகவும் இருக்கு பாருங்க. சிவப்பு நாட்டுச் சோளம் உண்டே...அங்கு இருந்தவை சோள வயல்கள், மணிகள் கொஞ்சம் பெரிதாகவும் ஒரு சிலவற்றில் நுனியில் சின்னதாகக்கண் இருக்குமே இருக்கு பாருங்க...
கேப்பை வயல்கள் கண்ணில் படவில்லை ஆனால் அறுவடை ஆகியிருக்குமாக இருக்கலாம். அறுவடை ஆன வயல்களும் இருந்தன.
ஆமாம் அக்கா பசுமை மிகுந்த கிராமம். இந்த வழி இப்படி என்றால் இரண்டாவது முறை சென்ற வழி இதே ருத்ராக்ஷிபுர் ஹலகுரு சாலை ஆனால் கொஞ்சம் கிராம உட்புறச் சாலை அது இன்னும் பச்சை.. அது பற்றி அதில் சொல்கிறேன்
படங்களையும் காணொளிகளையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி கமலாக்கா
கீதா
ஆமாம் அக்கா உங்க கருத்தை வெளியிட்டுவிட்டேன். நேற்று நெட் ரொம்பப் பிரச்சனை காலையில் பப்ளிஷ் செய்தேன் இரு கமென்ட்களையும். அதனால் என்ன பதிவுகள் இங்க தானே இருக்கும் அக்கா.
நீக்குஆமாம் பறவைகள் சோர்வாக இருக்கு. ஆனா நல்லா கவனிச்சுக்கறாங்க.
ஆவலுடன் வந்து கருத்திட்டு அடுத்த பதிவையும் எதிர்பார்த்திருப்பதற்கு மிக்க நன்றி . எனக்கும் ஒரு ஊக்கம் கிடைக்கிறது. மிக்க நன்றி கமலாக்கா
கீதா
இளைய பதிவரா? ஆவி, சீனு யாராவதா? சீனு யு சில அல்லவா இருக்கிறார்? ஆவிக்கும் உடல் நலமில்லை.
பதிலளிநீக்குநானும் வரவில்லை.
அப்புறம் யார் அந்த இளைய பதிவர்?
நானும் வரவில்லை. //
நீக்குஹாஹாஹாஹா....மீயும் இளையவள்!
வெயிட் கீஜியே, ஸ்ரீராம்! அடுத்த பதிவில் தெரிந்துவிடும். பெரும்பாலும் வியாழன் அல்லது வெள்ளி யில் பதிவிடலாம் என்று யோசனை. எழுத வேண்டும் படங்கள் தொகுக்கணுமே. இவருடைய பெரிய அண்ணன் வியாழன் அன்று வருகை. மீதிக்கு வரேன் கதை வாசித்துக் கொண்டிருந்தேன் எபியில்
நன்றி ஸ்ரீராம்
கீதா
ஐயோ.. இளைய பதிவர்கள் எல்லாருமே ஐசியூவில் இருப்பதாக ஸ்ரீராம் எழுதுகிறாரே.....
நீக்குஒரு தடவை என்னாச்சுன்னா... என் மாமா உடம்பு சரியில்லாமல் இருந்தபோது, அப்போதுதான் சென்னை ஏர்போர்ட்டில் இறங்கியிருந்தேன். அப்பா அம்மா வந்திருந்தார்கள். நேரே மாமா வீட்டிற்குச் சென்றோம். என்னிடம் கேமரா இருந்ததால் நாலு படங்கள் எடுத்தேன். அப்புறம் ஊர் திரும்பியதும் சேதி வந்தது மாமா போய்விட்டார் என்று. அவருடைய பசங்க என்னிடம் கடைசியா எடுத்த போட்டோக்கள் கேட்டார்கள்.
பிறகு இன்னொரு சமயம் மாமா பெண் என் தம்பி வீட்டிற்கு வந்தபோது நான் புகைப்படங்கள் எடுத்தேன். எடுக்கும்போதே, தவறுதலா, மாமாவை நான் எடுத்த போட்டோக்கள்தாம் கடைசி என்றேன். ஹா ஹா. அவங்க, ஐயையோ என்னை இப்போ படம் எடுக்காதே என்று சொல்லிவிட்டார்.
அதனால் இளைய பதிவர் யாரென்று, ஒருவேளை இந்தப் பதிவை அவர் படித்தாலும் சொல்லமாட்டார் என்று நினைக்கிறேன். நீங்கள் எழுதியுள்ளதைப் பார்த்தால், அடுத்து அவருக்குத்தான் ஐசியூ என்று சொல்லாமல் சொல்வதுபோல இருக்கிறது
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லை, கடைசி வரிக்கு அப்ஜெக்ஷன் யுவர் ஹானர்!
நீக்குகீதா
சக்கரே என்றால் குன்ஸா புரிகிறது! நீங்கள் பொருள் சொன்னதும் சரிபார்த்துக் கொள்கிறேன்! முன்னரே சொல்லி மூக்குடைபட வேண்டாம்!!!
பதிலளிநீக்குஹாஹாஹா அதேதான் ஸ்ரீராம்...சர்க்கரை. சர்க்கரைக்குப் புகழ்பெற்ற மாவட்டம் மாண்டியா. சக்கரே உடம்பு நானு!
நீக்குமூக்குடைபட//
சிரித்துவிட்டேன் இதுல ஒன்றுமில்லையே...!
நன்றி ஸ்ரீராம்
கீதா
ஸ்ரீராமின் கருத்துக்கள் படிக்கச் சுவையாக இருக்கின்றன. பையனுக்கு கல்யாணம் ஆச்சு. அதனால மன பாரம் குறைந்த நிலையில் இருக்கிறார் போலிருக்கு
நீக்குஆமாம், நெல்லை, ஃபோடோ, ஃபோட்டோக்குச் சொன்னதையும் ரொம்ப ரசித்தேன்...
நீக்குகீதா
ஓ.. வீட்டருகில் வந்து 'நான் வந்திருக்கிறேன், எங்களை அங்கு வந்து பார்' என்று செய்தி சொல்லிப்போகுமோ... அதுதான் சரியான நேரத்துக்கு செல்கிறீர்களா?!
பதிலளிநீக்குஹாஹாஹா ஆமாம் அவர் சொன்ன விதம் ...அப்படித்தான் அவர் பேசிய விதம். அந்த மையத்தில் இருந்தவரும் அதே...அதை அடுத்த பதிவில் சொல்கிறேன் இது நீண்டு விட்டதால் மையம் பற்றிய பகுதியில் அவர் சொன்னதைச் சொல்லவில்லை.
நீக்குசரியான நேரத்திற்குச் சென்றது பற்றியும் அடுத்த பகுதியில் சொல்கிறேன், ஸ்ரீராம். நேரில் சென்றால்தான் சரியான தகவல்கள் கிடைக்கின்றன.
நன்றி ஸ்ரீராம்
கீதா
வண்டி போடும்போதே க்ளிக் அடித்தாலும் க்ளியராகவே இருக்கிறதே....
பதிலளிநீக்குமேலே உள்ள படத்தையா, கீழே உள்ள படத்தையா..
எதை இது என்ன என்று கேட்கிறீர்கள்?
கீழே உள்ள படமென்றால் எனக்குத் தெரியவில்லை என்பதே என் விடை.
சோள அறுவடை பற்றி எழுதிய பகுதியில் சின்ன காணொளி பார்க்கலையோ அது பார்த்துச் சொல்லுங்கன்னு
நீக்குகீதா
இல்லையே.. நீங்கள் காணொளி பற்றிக் கேட்கவில்லையே... போட்டோக்களை மத்தியில் கேட்டிருக்கிறீர்கள்.
நீக்குஸ்ரீராம், இந்த வரிக்குக் கீழே, //கிராமத்துக்குச் செல்லும் வழியில் நிறைய சோள அறுவடை. சாலைகளில்.//
நீக்குஇடப்பக்கம் ஒரு படமும், வலப்பக்கம் ஒரு சின்ன காணொளியும் மிகச் சின்னது கொடுத்திருக்கேன் பாருங்க அதைத்தான் சொன்னேன் கீழே வரிகள் பாருங்க
//இப்படி ரோட்டோரம் ஒரு ஷீட்டில் குவித்து வைத்திருந்தார்கள். நான் ஃபோட்டோ எடுத்துக் கொண்டே கேழ்வரகா, சோளமா என்று சொல்லிக் கொண்டே வந்ததை ஆட்டோக்காரர் புரிந்து கொண்டு உடனே நிறுத்தி தன் கையில் எடுத்துக் கொண்டு வந்து காட்டினார். நான் அதைச் சின்ன வீடியோ எடுத்தேன். இது என்ன என்று சொல்லமுடிகிறதா பாருங்க.//
காணொளி இயங்கலையா என்றும் பார்த்தேன் இங்கு இயங்குகிறது, ஸ்ரீராம்
கீதா
ஸ்ரீராம் புரிந்தது உங்களோடு பேசறப்ப, இப்ப ஒரிஜினல் வரியைச் சேர்த்துவிட்டேன். இப்ப பார்த்து சொல்லுங்க அது என்னவாக இருக்கும்னு
நீக்குவண்டி போடும்போதே க்ளிக் அடித்தாலும் க்ளியராகவே இருக்கிறதே....//
நன்றி ஸ்ரீராம். கண் கொத்திப் பாம்பாட்டாம் பார்த்துக் கொண்டே வருவேன். டக் டக்ன்னு க்ளிக் அடிப்பேன் மொபைலில். கேமரானா திறந்து ஒவ்வொரு படமும் சேவ் செய்து மீண்டும் ஸ்க்ரீன் வர ரொம்ப லேட்டாகும். மொபைல் அப்படி இல்லையே...அதில் பார்த்து சரியா இல்லாததை டெல் செய்துவிடுவேன்.
நன்றி ஸ்ரீராம்
கீதா
ஓ.. நீங்கள் மேலே உள்ள படத்தைக் கேட்கிறீர்களா? அதன் விடை எனக்குத் தெரியாது.
நீக்குஇந்தக் கருத்தைப் பார்த்து சிரித்துவிட்டேன் ஸ்ரீராம்...
நீக்குகீதா
ஒரு வாய்க்காலை காட்டி ஷிம்ஸா நதி என்கிறீர்களே!!! அதென்ன ஷிம்ஸா?
பதிலளிநீக்குஹாஹாஹாஅ...ஸ்ரீராம், இது ஹைவேயில்.....இது கிராமத்திற்குள் செல்லும் வழியில் தூரத்திலும், பின்னர் கிராமத்தின் அருகிலும் இருப்பதை சென்ற பதிவில் சொல்லி நதியின் படமும் போட்டிருந்தேனே.
நீக்குஷிம்ஷா நதி காவிரியின் கிளை நதியாம். பதிவிலும் ஸா என்றுவந்திருக்கிறது மாற்ற வேண்டும்
கீதா
ஹாஹாஹாஅ...ஸ்ரீராம், இது ஹைவேயில்.....இது கிராமத்திற்குள் செல்லும் வழியில் தூரத்திலும், பின்னர் கிராமத்தின் அருகிலும் இருப்பதை சென்ற பதிவில் சொல்லி நதியின் படமும் போட்டிருந்தேனே.
நீக்குஷிம்ஷா நதி காவிரியின் கிளை நதியாம். பதிவிலும் ஸா என்றுவந்திருக்கிறது மாற்ற வேண்டும்
கீதா
சரி.. சரி.. ஓகே.. ஓகே... ஒருதரம் சொன்னா ஒத்துக்க மாட்டேனா என்ன!
நீக்குஹாஹாஹாஹா..சிரித்துவிட்டேன் ஸ்ரீராம் இங்க நெட் கரன்ட் எல்லாம் படுத்துகின்றன....
நீக்குஇப்ப நெட் ஓகே நீங்க சொன்னாப்ல ...இது தொடரணுமே.
கீதா
ஷிம்ஷா - பெயர்க்காரணம் - இந்த நதி தேவராயனதுர்கா மலையில் உருவாகி காவிரியுடன் இணைகிறது. இங்கு யோகநரசிம்மர் கோயில் இருப்பதால் ஷிம்ஹ என்பது இப்படி ஷிம்ஷா ஆகியிருக்குமோ? எப்பவுமே நதியை பெண் பெயரில்தானே அழைக்கிறோம் அபப்டி...
நீக்குகீதா
ஆட்டோ - சென்றுவர 600 ரூபாய். ஒரு வழிக்கு 100 ரூபாயா? என்ன கணக்கு?!
பதிலளிநீக்குவெயிட்டிங் ஒரு மணிநேரத்துக்கு 100 ரூ. அவருக்கு அங்கிருந்து சவாரி கிடைக்காது. அதான். பதிவை ரொம்பக் கட் கட் கட் பண்ணியதில் சிலது சொல்லலை. யாராச்சும் கேப்பான அப்ப கருத்தில் சொல்லிக்கலாம்னு
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
அந்த அடிபட்ட பறவைக்கு வலிக்குமேன்னு ஃபோடோ எடுத்திருக்கிறீர்கள். இல்லாவிட்டால் ஃபோட்டோ எடுத்திருப்பீர்களே!!!
பதிலளிநீக்குஹாஹாஹா....அழுத்தி எடுக்கலை!!! இப்ப அழுத்திட்டேன் 'ட்' அதுக்கு அங்க வலிக்காதுன்னு நினைக்கிறேன்!
நீக்குநன்றி ஸ்ரீராம்.
கீதா
அந்த அரிவாள் மூக்கனை இன்னும் ஜூம் செய்து எடுத்திருக்கலாம்!
பதிலளிநீக்குகடைசியில் ஆட்டோக்காரருக்கு பணம் கொடுக்காமலே ஓடிவந்து பஸ்ஸில் ஏறிவிட்டீர்கள் போல!!
ஸ்ரீராம் இதுவே ஜூம் செய்துதான் எடுத்திருக்கிறேன். இன்னும் செய்தது தெளிவாக இல்லை அதான் போடலை.
நீக்குநம்ம கேமராவும் சரி மொபைலும் சரி அம்புட்டுத்தானே ஸ்ரீராம் ...
ஆட்டோக்காரருக்குப் பணம் ரெடியாக வைத்திருந்தோம், பேருந்து வந்து நின்றதால் டக்கென்று கொடுத்துவிட்டு பேருந்தில் ஏறிவிட்டோம்.
சொல்லியிருந்தேன் எல்லாம் கட் கட்!!!!
நன்றி ஸ்ரீராம்
கீதா
கருத்தை ரசித்தேன்...ட் விடுபட்டதைச் சொன்னவிதம்!!!!
நீக்குகீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்கு/கடைசியில் ஆட்டோக்காரருக்கு பணம் கொடுக்காமலே ஓடிவந்து பஸ்ஸில் ஏறிவிட்டீர்கள் போல!!/
என்னவெல்லாம் சந்தேகம் வருகிறது எனக்கும் சகோதரர் ஸ்ரீராமுக்கும்...? நான் மதிய சாப்பாட்டை சாப்பிடவில்லையே என்கிறேன். அவர் ஆட்டோவுக்கு பணம் கொடுக்கவில்லையே என்கிறார். நீங்கள் கொண்டு சென்ற சாப்பாடு கூட கோபித்து கொள்ளாது. ஆனால், ஆட்டோக்காரர் விடுவாரா? ஓடி வந்து ஓடும் பேருந்தில் வடிவேலு மாதிரி ஏறி விட மாட்டாரா...! ஹா ஹா ஹா.
இந்த சந்தேகங்களுக்கு காரணம். உங்கள் பதிவை படிக்கையில் உங்களுடனேயே நாங்களும் உடன் வந்த ஒரு உணர்வுதான். அதனால்தான் அடாடா..! இதைச் செய்யவில்லையே...! இதை மிஸ் பண்ணிட்டோமே என்ற ஒரு தவிப்பு வருகிறது. ...! அவ்வளவு ஈர்ப்பு உங்கள் எழுத்துக்களில்...! . நன்றி சகோதரி. உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் சகோதரி. .
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//இந்த சந்தேகங்களுக்கு காரணம். உங்கள் பதிவை படிக்கையில் உங்களுடனேயே நாங்களும் உடன் வந்த ஒரு உணர்வுதான். அதனால்தான் அடாடா..! இதைச் செய்யவில்லையே...! இதை மிஸ் பண்ணிட்டோமே என்ற ஒரு தவிப்பு வருகிறது. ...! //
நீக்குகரெக்ட்டா எஸ்பிரஸ் பண்ணி இருக்கீங்க கமலா அக்கா...
ஹாஹாஹா கமலாக்கா மனம் நெகிழ்ந்துவிட்டது //காரணம். உங்கள் பதிவை படிக்கையில் உங்களுடனேயே நாங்களும் உடன் வந்த ஒரு உணர்வுதான்.// இதற்கு அடுத்த வரிகளும் மனதை நெகிழ்வித்து இன்னும் எழுத ஊக்கம் கொடுக்கிறது கமலாக்கா..
நீக்குஅப்ப்டியே ஸ்ரீராமின் கருத்தும் தான்.
மிக்க மிக்க நன்றி இருவருக்கும்
கீதா
நன்றி சகோதரரே. தாங்கள் அனைவருக்கும் தரும் ஊக்கம் மிகுந்த கருத்துக்களை விடவா..!நானும் நன்றி கூறிக் கொள்கிறேன். உங்கள் இருவருக்கும். 🙏.
நீக்குவிளக்கம் நன்று
பதிலளிநீக்குஷிம்ஷா நதி படம் மிகவும் அழகாக இருக்கிறது.
காணொளிகள் கண்டேன்.
நன்றி கில்லர்ஜி.
நீக்குநதிகள் எல்லாமே அழகுதான் இல்லையா? ஷிம்ஷா நதி நல்லாருக்கு இடையில் பாறைகள் சில இடங்களில் தண்ணீர்னு.
காணொளிகள் கண்டதற்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
கீதா
இன்றைய பகுதி நன்றாக இருந்தது. பறவைகள் வராத சீசனில், அதுவும் நட்ட நடு மதியத்தில் சென்றிருக்கின்றீர்கள். அந்த கிராமத்தில் அவசரத்திற்கு குளிர் பானங்களோ இல்லை தண்ணீர் பாட்டிலோ கிடைக்குமா?
பதிலளிநீக்குநன்றி நெல்லை.
நீக்குபறவைகள் ஜனவரியில் வந்துவிடும் தான் ஆனால் இப்ப தாமதமாகிறதாம். சொல்றேன் அதை அடுத்த பதிவில்.
ஆமாம் அன்று நடு மதியம். கிராமத்தில் தண்ணீர் பாட்டில்கள் கிடைக்கும். குளிர்பானங்களும் கிடைக்கும். இது பற்றியும் அடுத்த பதிவில் சொல்றேன்.
நன்றி நெல்லை
கீதா
நல்லவேளை 10 மணிக்கு மத்தூருக்கு பேருந்து கிடைத்தது. இல்லைனா மதிய சாப்பாட்டை சாடலைட் பஸ் ஸ்டாண்டில் முடித்திருப்பீர்கள் போலிருக்கிறது
பதிலளிநீக்குஹாஹாஹா ஆமாம்...முடித்துவிட்டு போயிருப்போம். பேருந்துகள் நிறைய இருக்குதான்.
நீக்குநன்றி நெல்லை
கீதா
மத்தூர் வடை சாப்பிட்டீங்களா, வாங்கினீங்களா?
பதிலளிநீக்குமத்தூர் வடை சாப்பிட்டுப் பார்க்க ஆசை இருந்ததுதான் எங்களுக்கு. ஆனால் பேருந்து நிலையத்தில் பார்த்தது என்னவோ மனதிற்கு இசைவாக இல்லை. பார்த்தால் இங்கு பெங்களூரில் கிடைப்பது போல இருந்தது. நம்ம வீட்டவரும் இப்பல்லாம் எதுவும் ஒரிஜினல்னு இந்த ஊர் ஸ்பெஷல் அந்த ஊர் ஸ்பெஷல் என்று சொல்றதுக்கு இல்லை. தின்னவேலி அல்வா அப்படித்தானே இப்பன்னு....அதுவும் என்ன எண்ணையோ? நல்ல கடை இருந்தால் பார்க்கலாம் எங்க இருக்குன்னு பார்த்து தெரிஞ்சு வாங்கலாம்னு.....
நீக்குநன்றி நெல்லை
கீதா
//சக்கரே நகரா’ என்று அழைக்கப்படும் மாண்டியா மாவட்டத்தில் இருக்கும் இந்த கொக்கரே கிராமத்திற்கு சக்கரே உடம்பாக இருக்கும் நான் இரு முறை சென்று வந்தேன்/தோம்.//
பதிலளிநீக்குஇனிமையான கீதா , இனிமையான சக்கரே நகரா போய் இருக்கிறார்.
இளைய பதிவர் எனக்கு தெரிந்து விட்டது. பதிவின் நிறைவில் நான் நினைத்த பதிவர் அவர் தான் என்பதை உறுதியாகிவிடும்.
மேலே உள்ள படம் அருமை, மரங்களில் அமர்ந்து இருக்கும் பறவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி கிராஸாக அமர்ந்து இருக்கும் பறவைகள் அழகு.
இனிமையான கீதா , இனிமையான சக்கரே நகரா போய் இருக்கிறார்.//
நீக்குஹாஹாஹாஹா கோமதிக்கா...
ஆ!! அக்கா உங்களுக்கு யூகித்துவிட்டீர்களா?!! அவர் யார்னு தெரிந்துகொள்ள காத்திருங்கள்!
ஆஅமாம் அக்கா அந்தப் படங்கள் இன்னும் அடுத்த பதிவில் வரும். க்ராஸ் க்ராஸா உட்கார்ந்திருந்த அழகு...ஆணும் பெண்ணும் தான் கூட்டில் இருந்து சேர்ந்து இருக்குமாம்.
ரசித்ததற்கு மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
//இதோ மேலே உள்ள ஒற்றைப் படத்தில் நீச்சல் குளம் போல ஒன்று அது என்ன என்று தெரிந்தால் சொல்லுங்கள். வித்தியாசமாக இருக்கு//
பதிலளிநீக்குஇது நீச்சல் குளம் போல தெரியவில்லை. மதகு என்று அழைக்கப்படும்
மடை அல்லது மதகு என்பது குளம், ஏரி அல்லது கண்மாய்களில் உள்ள நீரை விளைநிலங்களின் பாசனத்திற்கு திருப்பி விடுவதற்காக நிறுவப்பட்ட கதவாகும். இது மரம் அல்லது இரும்பினால் செய்யப்பட்டிருக்கும். கைகளால் இவற்றைத் திறக்கவும் அல்லது மூடவும் இயலும்.
ஆமாம் அக்கா அது நீச்சல் குளம் இல்லை. ஆனால் மதகுனா ஒரு இடத்தில் இருக்கும் நான் ஊரில் நிறைய பார்த்திருக்கிறேனே, அக்கா. ஆனால் இது நீள் செவ்வகமாகக் குளம் போல இருந்தது சுற்றிலும் வேலி இருக்கு. குளம் முழுவதுமே ஒரு இடைவெளியில் இப்படி படிகள் போன்ற அமைப்பு இருக்கு சுற்றிலும். பார்க்கவே அழகாக இருந்தது. அடுத்த முறை இந்தச் சாலையில் பயணம் செய்ய வாய்ப்பிருந்தால் இடப்பக்கம் ஜன்னல் கிடைக்க வேண்டும் போகும் போது....அப்ப வீடியோ எடுத்துவிட்டால் பார்க்கலாம்.
நீக்குமிக்க நன்றி கோமதிக்கா
கீதா
பஸ்ஸில் போகும் போது எடுத்த படங்களும், ஆட்டோவில் பயணித்த போது எடுத்த படங்களும் காணொளிகளும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஆட்டோக்காரர் உங்கள் ஆர்வத்தை பார்த்து நிறுத்திபிஞ்சு சோள கதிர் பறித்து காட்டியதும், மற்றும் சிவப்பு சோளம் போல தெரிகிறது அதை கையில் எடுத்து வந்து காட்டியது எல்லாம் அருமை.
மிக்க நன்றி அக்கா.
நீக்குஆமாம் அவர் என் ஆர்வத்தைப் பார்த்து ரொம்பவே உதவினார். ஆமாம் அது சிவப்புச் சோளம் தான். நாட்டுச் சோளம்.
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
ஆட்டோக்காரர் கேட்டைத் திறந்து எங்களை உள்ளே அழைத்துச் சென்றார்.//
பதிலளிநீக்குநல்ல மனிதர்.
//முட்டியில் க்ளிப், உலோகக் கட்டு தெரிகிறதா? முறிவு போலும்.//
நன்றாக தெரிகிறது. பாவம் சிகிட்சையில் நன்றாக இருக்கட்டும்.
//அலகையும் பாருங்க உடைஞ்சுருக்கு இல்லேனா ஏதேனும் பிரச்சனையால் கட் பண்ணிருப்பாங்க போல. நீளம் கம்மியா இருக்கு, கூர் முனை இல்லை.//
கூர்மை உடைந்து இருப்பது தெரிகிறது.
//என்னை ஃபோட்டோ எடுக்கறியான்னு!!! மற்றவை காணொளியில்//
காணொளி நன்றாக இருக்கிறது.
பறவைகளின்
ஆமாம் அக்கா அவர் கொஞ்சம் எல்லாம் மெதுவாகச் செய்வது போல் இருந்தாலும் புரிந்து கொண்டு உதவினார்.
நீக்குஅங்கிருந்த பெரும்பான்மை பறவைகளுக்கு முட்டியில் க்ளிப் போட்டிருந்தாங்க ஒரு சிலதுக்குக் கட்டு போலவும் போட்டிருந்தாங்க.
ஒரு பறவை மட்டும் கத்திக் கொண்டே இருக்கும். காணொளியில் தெரியும் அப்பறவை. அது கத்துவதும்.
ஒரு சிலவற்றிற்கு அலகு நுனி உடைந்திருந்தது..
காணொளி நன்றாக இருக்கிறது.//
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
//இடப்புறம் வயலில் ஏதோ பறவைகள் இருக்கின்றன என்று சொன்னதும் ஆட்டோக்காரர் நிறுத்தினார். பார்த்தால்... ஆஹா Red Naped Ibis - சிவப்பு நேப்ட் அரிவாள்மூக்கன்/இந்திய கருப்பு அரிவாள்மூக்கன்/கருப்பு அரிவாள்மூக்கன். கீழே படங்கள்.//
பதிலளிநீக்குநீங்கள் ஆர்வமாக படங்கள் எடுப்பதை கண்ட ஆட்டோக்காரர் உங்களுக்கு இந்த பறவைகளை காட்டியதால் நாங்களும் அரிவாள் முக்கனை பார்த்து கொண்டோம்.
இந்த பதிவில் எங்களையும் உங்களுடன் கூட்டி சென்று காட்டி விட்டீர்கள்.நன்றி அடுத்த பதிவை பார்க்க ஆவல்.
நீங்கள் ஆர்வமாக படங்கள் எடுப்பதை கண்ட ஆட்டோக்காரர் உங்களுக்கு இந்த பறவைகளை காட்டியதால் நாங்களும் அரிவாள் முக்கனை பார்த்து கொண்டோம்.//
நீக்குநன்றி அக்கா. என் கண்ணில் பட்டதும் உடனே நான் சொன்னதும் அவர் நிறுத்தினார். ஆட்டோக்காரரும் படங்கள் எடுத்துக் கொண்டார். அவரும் பறவைகள் எல்லாவற்றையும் படங்கள் எடுத்துக் கொண்டார்.
நான் இரு பக்கமும் பார்த்துக் கொண்டே வந்ததால் அவர் மெதுவாகவும் ஓட்டினார்.
அவருக்கும் இது புது அனுபவம்.
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
தகவல்கள் அனைத்தும் நன்று. சின்னச் சின்ன காணொளிகள் அனைத்தும் கண்டு ரசித்தேன்.
பதிலளிநீக்குஉங்கள் ஆட்டோ ஓட்டுனரும் உங்களுக்கு நிறைய தகவல்களைத் தந்திருக்கிறாரே... உள்ளூர் மனிதர்களிடம் பேசுவதில் நிறைய பலன்கள் இருக்கிறது என்பதை எனது பயணங்களிலும் கண்டிருக்கிறேன்.
தகவல்கள் அனைத்தும் நன்று. சின்னச் சின்ன காணொளிகள் அனைத்தும் கண்டு ரசித்தேன்.//
நீக்குமிக்க நன்றி, ஜி.
ஆட்டோ ஓட்டுநர் என் ஆர்வம் தெரிந்து அவரும் பங்கு கொண்டார். அவரும் அங்கு கன்னடத்தில் பேசி எங்களுக்குச் சொன்னார். அவரும் தெரிந்து கொண்டதாகச் சொன்னார். அவரது கிராமம் அதே மத்தூரில் வேறொரு பகுதியில் சற்று தூரத்தில் இருப்பதாகச் சொன்னார். பிழைப்புக்காக இங்கே.
ஆமாம் உங்களுக்கும் உள்ளூர் மனிதர்களிடம் பேசுவதில் தகவல்கள் கிடைக்கும் என்பதைச் சொல்லியது நினைவு இருக்கு ஜி.
உண்மை. இணையத்தை விட நேரில் சென்று அங்கு வாழ்பவர்களிடம் சரியான தகவல்கள் கிடைத்தன. அதனால்தான் இதை எழுதவும் வேண்டும் என்று நினைத்தேன்.
மிக்க நன்றி வெங்கட்ஜி
கீதா
படங்களும் பதிவு பகிர்வும் அருமை.
பதிலளிநீக்குசர்க்கரை உள்ளவர்கள் சர்க்கரை என்று எழுதினாலே அளவு கூடிவிடும் என்ற சமீபத்தைய ஆராய்ச்சிபற்றி அறிந்தீர்களா?
தாங்கள் சொன்னது சர்க்கரையாக இருக்கும் என்று புரிந்துகொண்டதால் இந்த அக்கறை - எச்சரிக்கை.
ஹாஹாஹாஹா .....சிரித்துவிட்டேன் கோ!
நீக்குமிக்க நன்றி உங்கள் கருத்திற்கு
கீதா
தாமதம். பதிவு டைரி குறிப்பாக இருந்தது. இது போன்ற போக்குவரத்துக்கு குறைவான இடங்களுக்கு செல்ல சொந்த வாஹனம் இருந்தால் சவுகரியமாக இருக்கும். பதிவு பற்றி எ பி யில் பார்க்கவில்லை. அது தான் தாமத வரவிற்கு காரணம்.
பதிலளிநீக்குபடங்கள் பரவாயில்லை. பதிவில் சிறிதாக உள்ளதால் ரசிக்க முடியவில்லை.
Jayakumar
அதனாலென்ன ஜெ கே அண்ணா. எப்ப முடியுதோ பாருங்க.
நீக்குசொந்த வாகனம் சௌகரியம் சரிதான். எனக்கு ஓட்டிப்பழக்கமும் உண்டு. என்றாலும் இப்ப அதெல்லாம் எதுவும் இல்லை ஜெ கே அண்ணா.
அண்ணா நிறையப் படங்கள் ஆகும் போது மொபைலில் எடுத்தவற்றை சின்னது செய்வதில்லை. பிக்ஸல் குறைப்பது இல்லை. ஒரிஜினல் சைஸில் போட்டால் பெரிதாகிவிடும் இடம் அடைத்துக் கொள்ளுமே பதிவு நீண்டது போல் ஆகிவிடும். அதனால்தான் ப்ளாகரில் போடுறப்ப ஸ்மால் இல்லைனா லார்ஜ் ஆப்ட் செய்கிறேன். எக்ஸ்ட்ரா லார்ஜ் உண்டு. அது ஆப்ட் செய்தாலும் ஒன்றின் கீழ் ஒன்றுதான் போட முடியும். அதனால் இப்படி
கேமராவில் எடுப்பதை மட்டுமே ப்ளாகருக்கு ஏற்ப பிக்ஸல் குறைத்துப் போடுகிறேன். ஆனால் ப்லாகரில் போடும் போது எக்ஸ்ற்றா லார்ஜ் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கிறேன்.
இப்ப மொபைல் படங்களை ஒரிஜினல் சைஸ் கு மாற்றலாம் தான் ஆனால் நீளும்.
மிக்க நன்றி ஜெ கே அண்ணா
கீதா