தை பிறந்தால் வழி பிறக்கும்! தங்கமே தங்கமான எங்கள் நட்புகள் அனைவரும் நல்ல உடல் நலத்துடன் மகிழ்வாக வாழ்ந்திட வாழ்த்துகள்! (துளசிதரன், கீதா)
(இந்த வரியைப் பார்த்து வாழ்த்துகளை மட்டும் சொல்லிவிட்டு
ஓடிடாதீங்க! இதை முன்னரே சில பதிவுகளில் சொல்ல நினைத்ததுண்டு. இப்ப
எபி வியாழன் பதிவில் நம்ம ஸ்ரீராம் சொல்லியிருந்த ஒரு வரி எனக்கு இதை நினைவுபடுத்தியது!!)
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!
இது எவ்வளவு உண்மை! இப்ப மருத்துவமனைச் செலவுகள் கதிகலங்க வைக்கிறது இல்லையா? நம்மில் பலரும் உணர்ந்திருப்போம். மருத்துவமனைக்குப் போகும் சூழல் வராமல் வாழ்பவர்களை மனதார
வாழ்த்திடுவோம்!
பதினாறும் பெற்று வளமாக வாழ்க! இதில் மிக முக்கியமானது
உடல்நலம். அதிருந்தால்தான் மற்ற 15ம்
நூறாண்டு காலம் வாழ்க! இல்லை இப்படி வைச்சுக்குவோம், “ஆயுசு நூறு! இப்பத்தான் உன்னை நினைச்சேன் நீயே வந்துட்ட, கூப்பிட்ட” என்று யாரேனும் சொன்னால்
“நூறா யம்மாடியோவ் வேண்டவே வேண்டாம்பா....” ன்னு உடனே நம்மில் பலரும் சொல்வதுதான். இது எதிர்மறையான ஒன்று என்பது என் தனிப்பட்ட கருத்து.
சொல்பவர்களுக்கு நான் நன்றி சொல்வது வழக்கம். நூறாண்டு என்பது கணக்கில்லை. வாழும் வரை இந்த உலகை, இயற்கையை ரசித்து வாழப் பிடிக்கும். ஆனால், நிற்க.... வாழும் வரை நோய் நொடியில்லாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் உண்டு.
விதி, நடப்பது நடக்கத்தான் செய்யும் என்று சொல்வது நம் கடமையிலிருந்து தப்பித்தல்.
‘கடமையைச் செய்’ இதுதானே நம் தத்துவம் சொல்வது? சம்பாதிப்பதும், பிள்ளை குட்டிகளைப்
பார்த்துக்கறதும் மட்டும் கடமை இல்லை. நம் உடல்நலத்தைப் பார்த்துக் கொள்வதும் நம் கடமை.
நம்மை மீறிய சக்தி எல்லாத்தையும் நமக்கு ஸ்பூனில் ஊட்டிக் கொண்டிருக்காதுங்க.
நாம் தான் அந்த சக்தியை நம்முள் கொண்டு வர உழைக்க வேண்டும். எந்த முயற்சியும் செய்யாமல்
விதியின் மீது பழி போடக் கூடாது. வாழும் வரையிலும் நம்ம உடம்பை நாமதானேங்க பாத்துக்கணும்.
சிறு வயதில் ஓடி ஆடி விளையாடுவது, பள்ளியில் விளையாட்டுகளில், குழுவில் பங்கெடுத்து விளையாடுவது, ட்ரில் போன்றவை எவ்வளவு நல்ல உடற்பயிற்சிகள்! அக்காலக்கட்டத்தைக் கடந்த பிறகு?
அதன் பின் பொதுவாக நம் உடல் நலனைப் பாதுக்காக்கத் தேவையான உடற்பயிற்சிகளுக்கு நாம் பழக்கப்படுத்தப்படுவதில்லை. பெற்றோர் பாதுகாப்பிலிருந்து நாம் வெளி வந்து தனியாக இயங்கத் தொடங்கிய பிறகும் கூட நம்மை நாம் பழக்கப்படுத்திக் கொள்வதில்லை. தொட்டில் பழக்கம் சுடுகாடுமட்டும்!
அளவான உடற்பயிற்சி, அளவான (இது மிக முக்கியம்) நல்ல ஆரோக்கியமான உணவு, நடைப்பயிற்சி, இதெல்லாம் நாம செய்யறதுக்குக் காசா பணமா? ஆனால் ஏனோ ஒரு சோம்பல். செய்யாததுக்கு ஏதோ ஒரு காரணத்தைக் கற்பித்தல்.
வீட்டு வேலைகள், வெளி வேலைகள், வீட்டிலுள்ளவர்களுக்காக உழைப்பது, நேரம் செலவழிப்பது என்றிருக்கும் பெரும்பான்மை ஆண்களும் சரி, பெண்களும் சரி தம்மைப் பாதுகாத்துக் கொள்ள நேரம் ஒதுக்குவதில்லை என்பதுதான் உண்மை. குறிப்பாகப் பெண்கள். நம்மையும் பார்த்துக் கொண்டு நம் குழந்தைகளையும் பழக்கலாம். பேரன் பேத்திகளையும் கூடப் பழக்கலாம்!!
அதுவும் தற்போதைய இளையவர்களில் பலரும் கணினித் துறையில் அல்லது பெரும்பாலும் கணினியில்தான், அதுவும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்ய வேண்டியதாக இருக்கிறது. மருத்துவத் துறையில்
இருப்பவர்களுக்கும் பிரச்சனைகள் உண்டு.
நேரம் கெட்ட நேரத்தில் வேலை, உணவு, உறக்கம், அதனால் சர்க்கேடியன் ரிதம் பாதிப்படைதல், அதனால் ஏற்படும் பின் விளைவுகள், நம் வாழ்க்கை முறை, எல்லாமே காரணக்கர்த்தாக்கள்தான்.
அதுவும் இக்காலகட்டத்தில் வளரும் (மத்தியதரக் குடும்பம், பணக்காரக் குடும்பம்)
குழந்தைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். கணினி அல்லது மொபைலில் விளையாட்டு, கையில்
சாப்பாட்டைக் கொண்டு கொடுக்கும் பெற்றோர், எந்த வீட்டு வேலைகளையும் கொடுத்துப் பயிற்சி
கொடுக்காமல் வளர்த்தல் என்ற வாழ்க்கை முறை. இவை எல்லாம் எதிர்காலச் சந்ததியின்
உடல் நலக் கவலைகளாகின்றன.
உடலுழைப்பு என்பது வழக்கொழிந்து போய்விட்டது. (பங்களூரில் எங்கு நோக்கினும் உணவகங்கள், அடுமனைகள்) அதனால் முளைத்திருக்கும் work
out மையங்கள்! ஆனால், எந்த வகைச் செலவும் இல்லாமல் வீட்டிலேயே இந்த வகைப் பயிற்சிகளை
நாம் செய்யலாமே.
மருத்துவரிடம் செல்ல நேர்ந்தாலும், அவர்கள் அறிவுறுத்துவதை நாம் பின்பற்றி, சில பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து நம்ம நலத்தைப் பாதுகாக்கலாம் இல்லையா? நம் மனம் ஒத்துழைக்க வேண்டும்தான். இரண்டுமே ஒன்றை ஒன்று சார்ந்தவை. எனவே இங்கு சில அடிப்படை உடற்பயிற்சிகள் பற்றி மட்டும் சொல்லிச் செல்கிறேன்.
பாதத்திலிருந்து தொடங்குவோம்! (SURRENDER!) உடலிலுள்ள மிகப் பெரிய தசைகளில் ஒன்றான கால்களுக்கு வலிமை தேவை என்பதோடு கால்கள் நன்றாக இருந்தால் எலும்பும், தசைகளும் வலுப்பெறும், உடல் வலிமையும் கூடும். கூடவே இவை அதிகமான கலோரிகளை எரிக்கும். (என் அனுபவமும். என் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க உணவுக்கட்டுப்பாட்டோடு இந்தப் பயிற்சிகள் உதவுகின்றன. அதாவது மேலே சொன்ன WORK OUT)
கால்கள் நல்லாருந்தாதான் இடுப்பு மற்றும் முதுகுத் தண்டுவடம் நல்லாருக்கும். தோள்பட்டை, கழுத்து நல்லாருந்தாதான் முதுகு நன்றாக இருக்கும். இது வைஸ்வெர்சா என்றும் சொல்லலாம். ஒன்றுக்கொன்று தொடர்புடையவைதானே.
மட்டுமல்ல, கை வலி, கால் வலி, இடுப்பு வலி, கால் மூட்டு வலி, முதுகு வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி இவற்றிற்கு ஃபிசியோதெரப்பி/உடற்பயிற்சி நிபுணர்களிடம் பயிற்சி எடுத்துக் கொள்வது மிக மிக நல்லது. அவர்கள் சொல்லிக் கொடுக்கும் உடற்பயிற்சிகளை நாம் வீட்டில் தொடர்ந்து செய்வதும் நல்லது. கூடவே யோகாவும்.
சில ஃபிசியோதெரப்பி உடற் பயிற்சிகளிலும் சரி, யோகப் பயிற்சியிலும் சரி (யோகா செய்யும் முன் செய்யும் WARM
UP பயிற்சிகள் இரண்டிலும் உண்டு), செய்யும் போது சரியாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுவதும் முக்கியம். ஒவ்வொரு பயிற்சியின் இடையிலும் ஆழ்ந்த மூச்சு எடுத்து வெளியிடுதலும் வேண்டும்.
விடாது கருப்பு போன்று, மறைந்திருந்து
தாக்கும் சமீபத்திய வில்லன் தொடர்ந்து கொண்டுதான் இருப்பான் என்று தெரிகிறது. எனவே
மூச்சுப் பயிற்சியுடனான இந்த உடற்பயிற்சிகள் நம் உடலுக்கு வலுவும், நுரையீரல் விரிந்து நன்றாக மூச்சு - பிராணவாயுவை - இழுத்து விடுவதற்கும், உடலில் உணவினால் சேரும் கலோரியை எரிப்பதற்கும் உதவுகின்றன.
முதலில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, நிற்கும் போது இரு கால்களையும் ஒரே அளவிலான அழுத்தம் கொடுத்து, வளைந்து நெளிந்து இல்லாமல் நேராகச்
சரியான நிலையில் நிற்க வேண்டும். ஒரு காலில் அழுத்தம் கூடுதலாகக் கொடுத்து, தாறுமாறாகக்
கால்களை வைத்துக் கொண்டு நின்றால் கால் வலி, இடுப்பு வலியோடு உடலின் பாகங்கள் பாதிப்படையவும் வாய்ப்பு உண்டு.
முதலில் நின்று கொண்டு செய்யும் சில பயிற்சிகள்,
நிறைய இருந்தாலும், எளிதாகச் செய்ய முடிந்த, நான் ஃபிசியோதெரப்பிஸ்டிடம் கற்றுக் கொண்ட
சில பயிற்சிகள் பற்றி மட்டும், இணையத்திலிருந்து
எடுத்த படங்களுடன் அடுத்த பதிவில் சொல்கிறேன்....விரைவில்....
தை பிறந்தால் வழி பிறக்கும்! பழையன கழிதலும் புதியன புகுதலும்!
இப்பதிவை எழுதத் தொடங்கக் காரணமாக இருந்த நெல்லைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
பதிலளிநீக்குஉண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், விசாகப்பட்டினத் தொடர் முடிக்கும் முன்னரேயே பதிவுலகை விட்டு விலகிவிடலாம், இனி எழுத மாட்டேன் என்ற மன நிலையில்தான் இருந்தேன். இப்போதும் எழுதுவதற்கு நிறைய நல்ல விஷயங்கள் இருந்தும், மனதில் வரும் வரிகள் பல வேலைகளில் மறந்துபோய்டுது....அப்புறம் கோர்வையாக சுவாரசியமாக எழுத முடிவதில்லை தற்போதைய சூழலில்.
நெல்லையிடம் இரு மாதங்கள் முன் பேசிய போது நான் செய்யும் உடற்பயிற்சிகள் மற்றும், வீட்டில் நடந்த நிகழ்வு அதில் கற்ற சில விஷயங்கள் பற்றி சொல்லிய போது உடனே எழுதச் சொன்னார். அப்போது நம் நட்புகள் கீதாக்கா, கோமதிக்கா, கமலாக்கா, ஸ்ரீராம், பானுக்கா எல்லாம் கால் வலி இடுப்பு வலி, மற்றும் பல உடல் பிரச்சனைகளால் சிரமப்பட சரி எழுதலாம் என்று....ஆனா பாருங்க அதுவே இப்போது இவ்வளவு காலம் எடுத்துவிட்டது. அதனால் நெல்லைக்கு மிக்க நன்றி. வல்லிம்மா, துரை அண்ணா, ஜெகே அண்ணா, காமாட்சிம்மா எல்லாம் உடல் நலப்பிரச்சனைகளில். வெங்கட்ஜிக்கும் ஆதிக்கும் பொறுப்புகளுடனான பிரச்சனைகள். மதுரைத்தமிழன் சென்ற வருடம் பல உடல் நலப்பிரச்சனைகளில், பிரச்சனைகளில் கஷ்டப்பட்டு மீண்டிருக்கிறார். நெல்லைக்கும் சிறு சிறு உபாதைகள் என்று சொல்லியிருந்த நினைவு. கில்லர்ஜிக்கு மன உளைச்சல்கள். துளசிக்குப் பணிச் சுமை அதனால் அசதி. ஜிம் எம் பி சாருக்கு உடல் நலப்பிரச்சனை தொடர்கிறது.ராமலக்ஷ்மி அவங்களுக்கும் ஒரு விபத்து ஏற்பட்டு இப்போதுதான் மீண்டிருக்காங்க.... இப்படி ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பிரச்சனையில். எல்லோருக்கும் இந்தத் தை பிறந்து நல்ல வழிகள் பிறக்கட்டும்.
கீதா
பதிவு நல்லதொரு ஊக்கசக்தியை கொடுத்தது.
பதிலளிநீக்குநான் மன உலைச்சலில் இருந்தாலும் இயன்றவரை எழுதிக்கொண்டு இருப்பேன்.
தங்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துகள்.
மிக்க நன்றி கில்லர்ஜி. ஏதோ எழுதும் நாலு வரிகள் உங்களுக்கு ஊக்க சக்தியை கொடுத்தது என்றால் மிக்க மகிழ்ச்சி.
நீக்குஆமாம் நீங்க சொல்லியிருக்கீங்க மன உளைச்சலில் இருந்தாலும் நீங்க எழுதுவீர்கள் என்று. வாழ்த்துகள். தொடருங்கள் ஜி. நல்லது நடக்கும்.
எங்கள் மன உளைச்சல்கள் வேறு கில்லர்ஜி. நிறைய பொறுப்புகள், எழுதுவதற்கு என்று நேரம் ஒதுக்க மிகவும் கடினமாக இருக்கு இப்போது. ...எல்லாம் வீட்டு வேலைகளே சரியாக இருக்கு.
பொங்கல் வாழ்த்துகள்!
மிக்க நன்றி கில்லர்ஜி
கீதா
தை பிறந்து அனைவருக்கும் நல்ல வழிகள் பிறக்கட்டும். நல்ல ஒரு பதிவு தொடங்கி இருக்கீங்க. நெல்லைக்கும் நன்றி.
பதிலளிநீக்குஅந்த அனைவரில் நானும் ஒருவன்.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம். ஆமாம் எல்லோருக்கும் நல்ல வழிகள் பிறக்க வேண்டும். தொடங்கியிருக்கிறேன். சட் சட்டென்று அடுத்தது போட வேண்டும். பொறுப்புகள், அதிகமாகிக் கொண்டே இருக்கு ஸ்ரீராம். மனம் டைட்...இல்லைனா இங்கு வந்தா மறந்து விடுகிறதே! பல வேலைகள்!
நீக்குநெல்லை நீங்களும் உட்படத்தான்!!!!!!!
மிக்க நன்றி ஸ்ரீராம், நெல்லை
கீதா
இப்பதான் நேரம் இங்கு பதில் கொடுக்க....என்ன கீதா ரங்கன்(க்கா) பொங்கப்பானை வைக்க ரெடி பண்ணாம இங்க உலாத்திட்டுருக்கீங்கனு உரிமையோடு கேக்க வருவார் என் தம்பி!!! ஹிஹிஹிஹி நெல்லை!!!! அதுக்குள்ள முடிச்சுட்டு ஓடணும்!!
நீக்குகீதா
தின்ம வயதுகளில் உடற்பயிற்சிகள் வீட்டிலேயே செய்ததுண்டு. ஜிம்மில் எய்வது போல வீட்டிலேயே அமைத்துச் செய்திருக்கிறேன். அதெல்லாம் ஒரு கட்டம் வரைதான்.
பதிலளிநீக்குஅதாவது..... ஆண் பறவை நடனமாடுவது, நல்ல வீட்டைக் கட்டுவது....எல்லாமே ஒரு காரணத்துக்குத்தான். அப்புறம் காரியம் முடிந்ததும்.........
நீக்குஸ்ரீராம் நீங்க இது பத்தி எப்பவோ ஏதோ ஒரு பதிவில் சொல்லியிருந்தீங்கன்னு நினைக்கிறேன். ஆண்கள் பெரும்பாலும் பதின்ம வயதில் செய்வதுண்டு தெரியும்.....அந்த வயதில் செய்வது பற்றி நான் ஒரு பதிவு...சரி இதுக்கு மேல தொடரலை உங்களுக்கே தெரியும் கோடிட்ட இடத்தை நிரப்புக என்னன்றது!!!
நீக்குஅப்புறம் தொடர்வதில்லை பல ஆண்கள் ஒரு சிலரைத் தவிர!!!
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
நெல்லை...சிரித்துவிட்டேன்.....நான் தொடங்கிய பதிவுல கூட இதை வேறு விதமா சொல்லியிருக்கேன்....ஹையோ நாங்க பொண்ணுங்க கூட்டம் போறப்ப எக்ஸர்சைஸ் பண்ணுற ஒரு கூட்டம் இருக்கும் பாருங்க!!!!! ஹாஹாஹாஹா...பஸ்கி தண்டால்னு
நீக்குகீதா
பதின்ம வயதுகளில் உடற்பயிற்சிகள் வீட்டிலேயே செய்ததுண்டு. ஜிம்மில் எய்வது போல வீட்டிலேயே அமைத்துச் செய்திருக்கிறேன். அதெல்லாம் ஒரு கட்டம் வரைதான்.
பதிலளிநீக்குரிப்பீட்டு!!! (ப்ளாகர்) "அப்" பீட்டு!!!
நீக்குகீதா
உடற்பயிற்சி போன்ற நல்ல விஷயங்களோ, இல்லை உடல்நலத்தை பாதிக்கும் நல்லன அல்லாத வழக்கங்களோ எதுவுமே நான் பொறுமையாக தொடர்ந்து செய்தது கிடையாது. என் பதிவிலும் சொல்லி இருக்கிறேன்! நல்ல வழக்கம் இல்லைதான்.. என்ன செய்ய..
பதிலளிநீக்குஹாஹாஹாஹா நான் இந்தப் பதிவ எழுதறப்ப நீங்க தான் ரொம்பவே நினைவுக்கு வந்தீங்க ஸ்ரீராம். தெரியும் நீங்க சொல்லிருக்கீங்க, நான் பேசும் போதும் சொல்லிருக்கீங்க!!! பரவால்ல இப்பவாச்சும் இந்த நல்ல நாள்லருந்து கொஞ்சம் தொடங்குங்களேன்...
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்.
கீதா
பதிவை எழுத பிள்ளையார் சுழி போட்டதற்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குஇப்போல்லாம் எந்தக் காணொளியாக இருந்தாலும் (அரசியல் பேட்டி, விவாதம் போன்று எதுவாக இருந்தாலும்...கோலாகலாஸ் போன்றவைகளும்) முதல் 5-8 நிமிடங்களை ஓட்டிவிடவேண்டும். அதன் பிறகுதான் பேட்டியோ கருத்தோ ஆரம்பிக்கும். அதுபோல, அடுத்த இடுகைக்காகக் காத்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
ஹிஹிஹிஹி நெல்லை தொடங்கிட்டேன். முடிக்கணும்....
நீக்கு//அதுபோல, அடுத்த இடுகைக்காகக் காத்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.//
ஹாஹாஹாஹா...ஹையோ நெல்லை...ஒரு பதிவு எழுதறதுக்குள்ள முழி பிதுங்கிடுது....அப்படி நெருக்கடி நெல்லை....ப்ளீஸ்....ஆனா இதுதான் அடுத்தது போடறதுக்கும் தூண்டுதல்னு சொல்லுவேன். ஹையோ இந்த நெல்லை இல்லைனா வந்து இப்படிச் சொல்லுவாரே என்று
போடுறேன் விரைவில். அடுத்தது.
மிக்க நன்றி நெல்லை
கீதா
பதிவுகளுக்குக் கருத்து போட்டு, நம்ம பதிவுக்கு பதில் கொடுத்து போறதே கஷ்டமா இருக்கு நெல்லை. சும்மா சொல்லிப் போக முடியலையே....
நீக்குகீதா
நான் 10,000 க்கும் குறையாமல் தினம் நடக்கிறேன். ஆவரேஜாக 14,000 ஸ்டெப்ஸ் வருகிறது. கால் பாதவலியும், கழுத்துவலியும் இருக்கிறது. பார்க்கலாம் என்ன என்ன உடற்பயிற்சிகள் சொல்றீங்கன்னு.
பதிலளிநீக்குதெரியும் நெல்லை...நீங்கள் நடப்பது....
நீக்குசொல்றேன் ஆனா உங்களுக்குத் தெரிந்ததாகத்தான் இருக்கும் நீங்க செய்யும் பயிற்சிகளாகத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.
இப்ப நின்று கொண்டு செய்வது வரும் இல்லையா அதில் சொல்றேன்...
மிக்க நன்றி நெல்லை
கீதா
நல்ல பதிவு. தேவையான பதிவு.
பதிலளிநீக்குநானும் 2010 ல் உடல் நலம் என்ற தலைப்பில் எழுதினேன்.
https://mathysblog.blogspot.com/2010/01/blog-post_24.html
உடற்பயிற்சிகளை என்னால் முடிந்தவரை செய்து கொண்டு இருக்கிறேன்.
அடுக்கு தும்மல், ஒற்றை தலைவலியை சரி செய்து இருக்கிறேன்.
கீழே விழுந்து விழுந்து இடுப்பில் அடிப்பட்டு சிறிது காலம் மருத்துவர்கள் சொன்னதால் மகராசன பயிற்சியை விட்டு இருந்தேன், இப்போது மீண்டும் ஆரம்பித்து இருக்கிறேன்.
நம் உடல் நலத்தை பார்த்து கொள்வது சுயநலம் மட்டும் அல்ல குடும்பநலமும் இருக்கிறது. வீட்டில் ஒருவருக்கு உடம்பு சரியில்லை என்றால் எல்லோரும் பாதிப்பு அடைகிறார்கள். மேலும் குடும்பத்தினரை நன்கு பார்த்து கொள்ள நம் உடலை நல்லபடியாக பார்த்து கொள்ளலாம்.
//கை வலி, கால் வலி, இடுப்பு வலி, கால் மூட்டு வலி, முதுகு வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி இவற்றிற்கு ஃபிசியோதெரப்பி/உடற்பயிற்சி நிபுணர்களிடம் பயிற்சி எடுத்துக் கொள்வது மிக மிக நல்லது. அவர்கள் சொல்லிக் கொடுக்கும் உடற்பயிற்சிகளை நாம் வீட்டில் தொடர்ந்து செய்வதும் நல்லது. கூடவே யோகாவும்.//
எதற்கும் வலி மாத்திரைகளை எடுத்து கொள்ளாமல் இப்படி உடற்பயிற்சி செய்து வலிகளை போக்கி கொள்ளலாம்.
நமக்கு என்று ஒரு மணி நேரம் ஒதுக்கி செய்ய வேண்டும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்து
வலிகளை விரட்டி மகிழ்வுடன் இருப்போம்.
கோமதிக்கா உங்கள் சுட்டியைப் போய் பார்க்கிறேன்.
நீக்குஆமாம் நீங்களும் உடற்பயிற்சி செய்வதுதெரியும்.
//அடுக்கு தும்மல், ஒற்றை தலைவலியை சரி செய்து இருக்கிறேன்.//
அருமை. மகிழ்வான விஷயம்.
//கீழே விழுந்து விழுந்து இடுப்பில் அடிப்பட்டு சிறிது காலம் மருத்துவர்கள் சொன்னதால் மகராசன பயிற்சியை விட்டு இருந்தேன், இப்போது மீண்டும் ஆரம்பித்து இருக்கிறேன்.//
அடிபடும் போது சில பயிற்சிகள் செய்ய முடியாதுதான்....மீண்டும் மகராச பயிற்சியைத் தொடங்கியது நல்ல விஷயம் கோமதிக்கா. சவாசனா மகராசனா மிக நல்ல பயிற்சிகள் முதுகுவலி இடுப்பு வலிக்கு. அதுவும் மகராசனா செய்யச் சொல்வாங்க
/நம் உடல் நலத்தை பார்த்து கொள்வது சுயநலம் மட்டும் அல்ல குடும்பநலமும் இருக்கிறது. வீட்டில் ஒருவருக்கு உடம்பு சரியில்லை என்றால் எல்லோரும் பாதிப்பு அடைகிறார்கள். மேலும் குடும்பத்தினரை நன்கு பார்த்து கொள்ள நம் உடலை நல்லபடியாக பார்த்து கொள்ளலாம்.//
அப்படியே டிட்டோ செய்கிறேன் கோமதிக்கா...இதை அடுத்த பகுதியில் சொல்ல இருந்தேன். நாம் படுத்துக் கொண்டால் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்குக் கஷ்டம்தானே க்கா...இல்லையா
/எதற்கும் வலி மாத்திரைகளை எடுத்து கொள்ளாமல் இப்படி உடற்பயிற்சி செய்து வலிகளை போக்கி கொள்ளலாம்.
நமக்கு என்று ஒரு மணி நேரம் ஒதுக்கி செய்ய வேண்டும்.//
ஆமாம் ஆமாம் இதையும் அடுத்த பகுதியில் சொல்ல இருந்தேன். வலி மாத்திரைகள் இல்லாமல் குணப்படுத்தத்தான் இந்தப் பதிவே...நீங்க சொல்றாப்ல ஒரு மணி நேரம் தேவைப்படும். இப்பவும் எனக்கு நடைப்பயிற்சி உடற்பயிற்சி காலை மாலை எல்லாம் செய்ய கிட்டத்தட்டா 2 1/2 மணி நேரம் மொத்தம் இது தவிர இடையிடையெ கடைக்குச் செல்லும் நடை, அப்பாவை நடைப்பயிற்சிக்குக் கூட்டி போதல் அது 45 நிமிடங்கள் ஆகிறது... என்று நேரம் சரியாக இருக்கு.
/தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்து
வலிகளை விரட்டி மகிழ்வுடன் இருப்போம்.//
ஆமாம் அக்கா.....
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
//நான் ஃபிசியோதெரப்பிஸ்டிடம் கற்றுக் கொண்ட சில பயிற்சிகள் பற்றி மட்டும், இணையத்திலிருந்து எடுத்த படங்களுடன் அடுத்த பதிவில் சொல்கிறேன்....விரைவில்....//
பதிலளிநீக்குநல்லது. பகிர்ந்து கொள்ளுங்கள். தடை ஏற்படாமல் தொடர்ந்து சொல்ல வாழ்த்துகள்.
கை பயிற்சி, கால் பயிற்சி, நரம்பு தசைநார் பயிற்சி, கண்பயிற்சி, கபாலபதி, மகராசனம், (முதல்பகுதி)
மகராசனம் (இரண்டாம் பகுதி)
உடலை தேய்த்து விடுதல்(மசாஜ்)
உடலை அழுத்தி விடுதல்( அக்குபிரஷர்)
உடலை தளர்த்துதல்
ஆகியவற்றை முறையாக செய்தால் நோயிலிருந்து விடுபடலாம்.
நல்லது. பகிர்ந்து கொள்ளுங்கள். தடை ஏற்படாமல் தொடர்ந்து சொல்ல வாழ்த்துகள்.//
நீக்குஆமாம் நன்றி கோமதிக்கா தடை ஏற்படாமல் போகணும் ...
நீங்கள் சொல்லியிருக்கும் பயிற்சிகள் மிக நல்ல பயிற்சிகள். ஆமாம் யோகாவிலும் கற்றதுண்டு குருஜி கேட்டுக் கொண்டதற்கிணங்க நான் வகுப்பும் எடுத்திருக்கிறேன் கோமதிக்கா பொது வகுப்பும், பெண்களுக்கான வகுப்பும்
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது. உங்களுக்கும், சகோதரர் துளசிதரன் அவர்களுக்கும், மற்றும் நம் பதிவுலக நட்புகள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
இனிப் பதிவுகளே எழுத வேண்டாம், பதிவுலக விட்டு விலகி விடலாமென்ற தங்களின் முடிவு எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. ஏன் அப்படி? தங்களின் சூழல் எனக்குப் புரியவில்லை யென்றாலும், உங்கள் எழுத்துக்களைப் பார்த்து நான் நிறைய கற்றுக் கண்டுள்ள காரணத்தால் தங்களின் முடிவு எனக்கு வருத்தமளித்தது. தொடர்ந்து எப்போது முடியுமோ அப்போதெல்லாம் எழுதுங்கள் என விரும்பி கேட்டுக் கொள்கிறேன். என் வேண்டுகோள் தங்களுக்கு தவறாக பட்டதெனில் மன்னிக்கவும்.
பதிவுலக நட்புகளாகிய நம் ஒவ்வொருவருக்கும், அடிக்கடி சில பிரச்சனைகளுடன் (கால்வலி, உடல் அசதிகளின் வலி , இடுப்பு வலி. பல் வலி என பல வலிகள் தந்த பிரச்சனையுடன்) சென்ற வருடம் முடிந்து புது வருடம் நலமாக பிறந்துள்ளது. நீங்கள் சொல்வது போல் தை பிறந்தால் நல்லவழிகள் பிறக்க வேண்டும்.
தாங்கள் பதிவில் கூறியதனைத்தும் உண்மை. நம்மை எந்த வித உடற்பயிற்சிக்கும் ஆட்படுத்தாமல் இருக்கிறோமோ என எனக்கும் தோன்றுவதுண்டு. காரணம் நீங்கள் கூறுவது போல அனைவரையும் கவனிக்கவே நேரம் சரியாக உள்ளது என்ற நமது மனப்பான்மைதான். மேலும், குனிந்து நிமிர்ந்து நாம் அன்றாடம் செய்யும் வேலைகள் ஒரு உடற்பயிற்சி மாதிரிதானே என்ற போதுமென்ற மனமும் அடிக்கடி எழுந்து விடும். ஆயினும் முன்பிருந்த வேலைகளை போல இப்போது செய்ய முடிகிறதா? (துணிகளை அடித்து துவைத்தல், உரலில் மாவு முதலியவற்றை இடித்தல், கல்லுரலில், அம்மியில் அரைத்தல் என கடினமான வீட்டு வேலைகள்) அந்த வேலைகளை தினமும் செய்யும் போது உடற்பயிற்சி என்ற ஒன்றே பெண்களுக்கு தேவையற்றதாக இருந்தது. காலம் மாறி விட்டது. நவீன வீடுகளுக்குள் நவீனமயமாக்கப்பட்ட சாதனங்கள் வரப்போக இப்போது தனியாக உடற்பயிற்சி அத்தியாவசமாகி விட்டது. மன்னிக்கவும். நான் ஏனோ அந்த காலத்துக்குள் சென்று விட்டேன்.
/தை பிறந்தால் வழி பிறக்கும்! பழையன கழிதலும் புதியன புகுதலும்! நம் எல்லோர் மனதிலும் உடல் நலம் பேணும் வழி பிறக்கட்டும்/
ஆம். இப்போதுள்ள காலகட்டத்தில் இது தேவைதான். உடற்பயிற்சியை பற்றி நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். தங்களின் உடற்பயிற்சி முறைகளை விளக்கமாக கூறுங்கள். என்னால் முடிந்தவரை நானும் கற்றுக் கொள்கிறேன். தினமும் தியானம் செய்யச் சொல்லி என் இரண்டாவது மகனும் வலியுறுத்துகிறார். (அவர் செய்கிறார்) என்னால் என் மன பிரச்சனைகளில் அதில் ஏனோ முழுமையாக ஈடுபட முடியவில்லை. உங்களின் வழிகாட்டல்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கட்டும். தொடர்கிறேன் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நான் ஏதாவது தவறாக சொல்லியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இனிப் பதிவுகளே எழுத வேண்டாம், பதிவுலக விட்டு விலகி விடலாமென்ற தங்களின் முடிவு எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. ஏன் அப்படி? தங்களின் சூழல் எனக்குப் புரியவில்லை யென்றாலும், உங்கள் எழுத்துக்களைப் பார்த்து நான் நிறைய கற்றுக் கண்டுள்ள காரணத்தால் தங்களின் முடிவு எனக்கு வருத்தமளித்தது. //
நீக்குஅது இடையில் .....கமலாக்கா உங்களுக்கு அப்ப இடுப்பில் வலியுடன் இருந்த சமயம் என்று நினைக்கிறேன். இடையில் உங்களால் வர முடியலையே அப்ப.....என் பதிவுகளில் இருந்தும் கத்துக்கறீங்களா?!!!!!!!!!!!!!!!!! ஆஆஆஆஆஆஆஅ கமலாக்கா....நிஜமாவா...,.
சூழல் இங்குப் பொதுவெளியில் நான் அதிகம் சொல்லவில்லை கமலாக்கா....அச்சமயத்தில்.
இப்பவும் கூட நேரம் சரியாக இருக்கு. இடையில் இங்கு வந்தால் பல வேலைகள் விட்டுப் போகுது. முடிந்த அளவு எழுத ஆசை உண்டுதான்...ஆனால் தருவதை நன்றாகத் தர வேண்டுமே..
எல்லோருக்கும் நல்லது நடக்கட்டும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
வீட்டு வேலைகள் மட்டும் போதாது என்பதுதான் சொல்லப்படுகிறது கமலாக்கா. இப்போதைய வீட்டு வேலைகள் முன்பு போல் இல்லையே பல இயந்திரங்களுக்குப் பழகிவிட்டோம். அதனால் நீங்கள் சொன்னது போல் தனிப்பயிற்சிகள் அவசியமாகிப் போகிறது....
ஆனால் இப்போது வீட்டு வேலைகள் என்பது நாம் முறையாகச் செய்வதில்லை உதாரணத்திற்குக் குனிவது என்பது குனிந்து பொருள் எடுப்பது என்பதெல்லாம் ....
தியானம் செய்வது என்பது கடினம் தான். முதலில் எண்ணங்கள் பல சிதறும்தான் ஆனால் மெதுவாகத் தொடர்ந்து பயிற்சி செய்தால் செய்ய முடியும்...இருந்தாலும் நாம் ஒன்றும் பெரிய மகான்கள் இல்லையே ...எனவே முயற்சி செய்யுங்க கமலாக்கா
மிக்க நன்றி கமலாக்கா
கீதா
எல்லோருக்கும் இந்தத் தை பிறந்து நல்ல வழிகள் பிறக்கட்டும்.//
பதிலளிநீக்குஆமாம், ஆரோக்கியம் இருந்தாலே போதும் மனம், நன்றாக இருக்கும். உடல் நிலை சரியில்லையென்றால் அலுப்பு, சலிப்பு, கோபம், வருத்தம் எல்லாம் வந்து விடுகிறது.
பதிவுலகை விட்டு விலக வேண்டாம் நேரம் கிடைக்கும் போது நல்லதை பகிரலாம்.
மனதுக்கு உற்சாகம் கிடைக்கும். நட்புகள் ஆறுதல் நமக்கு.
ஆமாம் கோமதிக்கா ஆரோக்கியம் இருந்தால் மனம் மகிழ்வாக இருக்கும்....இல்லைனா நீங்கள் சொல்லியிருப்பது போல் அலுப்பு சலிப்பு வந்துவிடும் மனமும் நலத்துடன் இருந்தால்தான் எல்லாமே சாத்தியம். அது முடங்கிக் கொண்டால் உடலும் ஒத்துழைக்காதுதான்......
நீக்கு/மனதுக்கு உற்சாகம் கிடைக்கும். நட்புகள் ஆறுதல் நமக்கு.//
உண்மை கோமதிக்கா....
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
ஒவ்வொன்றும் அருமை என்பதை விட உண்மை...
பதிலளிநீக்குமிக்க நன்றி டிடி !!!!
நீக்குகீதா
// நம்மை மீறிய சக்தி எல்லாத்தையும் நமக்கு ஸ்பூனில் ஊட்டிக் கொண்டிருக்காது.. //
பதிலளிநீக்குநியாயமான வார்த்தைகள்..
மிக்க நன்றி துரை அண்ணா.
நீக்குகீதா
அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி துரை அண்ணா.
நீக்குகீதா
பயனுள்ள பதிவு..
பதிலளிநீக்குஎன்னைப் போன்றவர்களுக்காகத் தொடரட்டும் தங்களது பணி..
என்னல் முடிந்த அளவு தொடர முயற்சி செய்கிறேன்...//என்னைப் போன்றவர்களுக்காக// நானும் இதில் உண்டுதான் துரை அண்ணா.
நீக்குமிக்க நன்றி அண்ணா.
கீதா
அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.. தை பிறப்பு அனைவர் வாழ்விலும் புதிய வெளிச்சத்தைக் கொடுக்கட்டும்...
பதிலளிநீக்குமிக்க நன்றி சிவா சகோ. ஆமாம் எல்லார் வாழ்விலும் நல்ல உடல்நலத்தைக் கொடுக்கட்டும்.
நீக்குகீதா