அனைவருக்கும் எங்கள் இருவரின் (துளசிதரன், கீதா) இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்! எல்லோரும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருக்க இந்த ஆண்டும் இனி வரும் ஆண்டுகளும் நல்கிட வாழ்த்துகள்!
இன்று புத்தாண்டில் என்னோடு அழகான இயற்கை இடங்களைக் கண்டு களிக்கப் பயணியுங்கள்! மன நலத்திற்கும் உடல் நலத்திற்கும் உற்ச்சாகம் தரும் இயற்கை! ஆகவே பயணம் செய்வீர், வாய்ப்பு கிடைத்தால் இப்புத்தாண்டில் பயணம் செய்து உங்களைப் புத்துணர்வோடு வைத்துக் கொள்ளுங்கள்!
துளசியின் வீட்டில் கட்டுமான வேலைகள், வீட்டை விரிவாக்கும் பணிகள் நடப்பதால் அவரால் பதிவுகள் வாசித்துக் கருத்து அனுப்ப இயலவில்லை. நேர நெருக்கடி. ஏப்ரல் வரை பணிகள் தொடரும்.
********
அங்கிருந்து வெளியில் வந்து ஒரு கார் ஏற்பாடு செய்து கொண்டு (பேருந்து நிலையத்தின் அருகிலேயே நிறைய கிடைக்கின்றன) போரா குகைகள் பார்க்கப் பயணித்தோம். தோராயமாக 36.5 கிமீ. வழியில் சில இடங்கள் பார்த்தோம்//
என்று சொல்லி முடித்திருந்தேன். கூடவே விரைவில் பதிவிடுகிறேன் என்றும் சொல்லியிருந்தேன். அப்படிப் பார்த்த இடங்கள் பற்றித்தான் இந்தப் பதிவு. கொஞ்சம் பெரிதாக இருக்கலாம். பொறுத்துக் கொள்ளுங்கள்.
கலிகொண்டா வியூ பாய்ன்ட்
அரக்கு பள்ளத்தாக்கிலிருந்து போரா குகைகள் (தோராயமாக 36.5-37கிமீ) நோக்கிய பயணத்தில் 17.5-18 கிமீ தூரம் சென்றதும் இந்த கலிகொண்டா வியூ பாயின்ட் என்ற இடம் உள்ளது. வழி முழுவதும் வலப்பக்கம் நிறைய காஃபி தோட்டங்கள்.
கலிகொண்டா வியுபாயின்ட் எனும் இந்த இடம் பல மலைப்பகுதிகளில் உள்ள வியூ பாயின்ட் போன்றுதான். சாலையின் ஓரத்திலேயே கொஞ்சம் ஒதுங்கி ஒரு முற்றம் போன்ற இடம் கம்பித் தடுப்புடன் உள்ளது. அனந்தகிரி மலைகளின் அழகான காட்சிகளை இங்கிருந்து பார்க்கலாம்.
இந்த கலிகொண்டா இங்குள்ள கிழக்குமலைத் தொடரின் இரண்டாவது பெரிய சிகரமாகும். ஏகதேசம் 4300 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இங்கிருந்து காணும் அரக்கு பள்ளத்தாக்கு மற்றும் மலைகளின் அழகைச் சொல்லிட வார்த்தைகள் இல்லை. மனதிற்கும் உடலிற்கும் உற்சாகமும் தெம்பும் கொடுக்கும் இடம். Tranquilizing Place புத்துணர்ச்சி கொடுக்கும் அனுபவம். நான் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
நம்ம குழுவோ எக்ஸ்ப்ரஸ் குழு. எப்படியோ நுழைந்து கம்பி அருகில் சென்று கிடைத்த கேப்பில் கொஞ்சம் சுட்டேன். நிறைய எடுக்க முடியவில்லை. கோணம் பார்த்து க்ளிக் செய்யும் போது செல்ஃபி எடுக்கும் ஆர்வத்தில் என்னைத் தட்டி விடுதலும் நடந்தது. எடுத்தவை போதும் என்று தப்பித்து புகுந்து வெளியில் வந்தேன்.
அங்கும் தீனிக் கடைகள், சோளம், வறு கடலை, குளிர்பானங்கள் காஃபி, தேநீர் என்றிருந்தன. சாப்பாடு, டிஃபன் கூட ஒரு சிறிய கடைக்குள் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கூடவே குப்பைகளும். நம்ம மக்கள் திருந்தவே போவதில்லை!
காஃபி Trail - காஃபி தோட்டத்தின் நடுவில் ஒத்தையடிப் பாதையில்
அனந்தகிரி மலைக் காட்சிகளைப் படம் பிடித்ததுக் கொண்டு அங்கிருந்து கிளம்பியதும் நாங்கள் சென்ற காரின் ஓட்டுநர் அடுத்து 3 கிமீ தூரத்தில் இருக்கும் காஃபி தோட்டம் பார்க்கலாம் என்றதும், நான் ஏற்கனவே குறித்து வைத்திருந்த அருவிகளில் - கடிக்கி, சப்பாறை, ரானா ஜில்லேடா, தரகட்டா, தடிகுடா/அனந்தபுரி அருவி - தடிகுடா/அனந்தபுரி அருவி இந்த அனந்தபுரி மலைகளில் இதே சாலையில் சற்று தூரத்தில் உண்டே அங்கு போக முடியுமா என்று கேட்க, அவர் போகலாம் என்று சொன்னதும் எனக்கு ஒரே மகிழ்ச்சி.
மற்ற அருவிகளுக்கு அன்று செல்ல நேரமில்லை. வேறு வேறு திக்கில் செல்ல வேண்டும். சில கொஞ்சம் காட்டில் நடக்கவும் வேண்டும். இரண்டு நாட்கள் தங்கினால்தான் செல்ல முடியும். இந்த தடிகுடா/அனந்தகிரி நீர்வீழ்ச்சிதான் போகும் வழியில் என்பதால் இதைக் குறித்து வைத்திருந்தேன்.
முதலில் காஃபி தோட்டம் அதன் பின் தடிகுடா அருவி.
காஃபி தோட்டம் என்றால் காலையில் எழுந்தவுடன் காஃபி ராகம் பாடும் கீதா விடுவாளா!!! காஃபி தோட்டத்தைக் காண கொஞ்சம் மலையின் மேலேறி அங்கிருக்கும் ஒற்றையடிப் பாதையில் நடந்து உள்ளே சென்று ஆஹா...மிகவும் ரசித்துப் பார்த்து படங்களும் எடுத்துத் தள்ளினேன். கேரளத்திலும் பார்த்ததுண்டு என்றாலும் இங்கும்.....அவற்றுள் சில இங்கு...
ஒத்தையடிப்பாதை
தடிகுடா அருவி
காஃபி தோட்டத்திலிருந்து சிறிது தூரம் - 5 கிமீ இருக்கும் - பயணித்ததும் சாலையில் ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டும் செல்லலாம் அல்லது அனந்தபுரி கிராமத்திற்குள் கொஞ்சம் தூரம் சென்று (அதன் பின் வண்டி செல்லாது) நிறுத்திவிட்டு அங்கிருந்து அரை கிமீ தூரம் நடந்து இந்த நீர்வீழ்ச்சியைக் காணலாம்.
நாங்கள் சென்றிருந்த போது இவ்வளவுதான் நீர் இருந்தது. சீசன் என்றால் தண்ணீர் கொட்டும். கடிக்கி, சப்பாறை, ரானா ஜில்லேடா அருவிகளைப் போல் அத்தனை பிராபல்யமில்லை அதுவும் கட்டிக்கி ரொம்ப பிராபல்யம்.
காரணம் இந்த தடிகுடா/அனந்தகிரி அருவி அனந்தகிரி கிராமத்தில் இருக்கிறது மட்டுமல்ல தங்கும் வசதிகளோ சுற்றுலாவிற்கான வசதிகளோ இல்லாததால் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால் தற்போது இதைஹ்யும் ஆந்திரா சுற்றுலா துறை கணக்கில் எடுத்துக் கொண்டு பல வசதிகள் செய்து வருகிறதாகத் தெரிகிறது.
எனக்கு பிராபல்யம் அல்லாத இடங்களுக்குச் செல்வதில் அலாதிப் பிரியம்.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3100 அடி உயரத்தில், அனந்தகிரி மலையில் இருக்கும் இந்த அருவி, அரக்கு பள்ளத்தாகில் ஓடும் கோஸ்தானி நதியின் கிளை எனலாம்.
சுமார் 100 அடி உயரத்தில் பல அடுக்குகள்/படிகளாகப் (Cascade) பாயும் இந்த அருவியில் தண்ணீர் அதிகம் இருக்கும் காலத்தில் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்துக் கொண்டேன்.
அழகான படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது.
பதிலளிநீக்குவழக்கம் போல விவரங்கள் அருமை.
தங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் .
மிக்க நன்றி கில்லர்ஜி, படங்களையும் பதிவையும் பற்றி சொன்னதற்கு.
நீக்குஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
கீதா
உங்கள் இருவரின் மிக அருமையான புத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றி.
பதிலளிநீக்குஇயற்கையை ரசித்து கொண்டு போகும் பயணம் மிக அருமையானதுதான் கீதா.
//துளசியின் வீட்டில் கட்டுமான வேலைகள், வீட்டை விரிவாக்கும் பணிகள் நடப்பதால் அவரால் பதிவுகள் வாசித்துக் கருத்து அனுப்ப இயலவில்லை. நேர நெருக்கடி. ஏப்ரல் வரை பணிகள் தொடரும்.//
எல்லா பணிகளும் நல்லபடியாக நடக்கட்டும். அவர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை சொல்லிவிடுங்கள்.
அழகான படங்கள், மீண்டும் வருகிறேன்.
உங்கள் இருவரின் மிக அருமையான புத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குஇயற்கையை ரசித்து கொண்டு போகும் பயணம் மிக அருமையானதுதான் கீதா.//
நன்றி கோமதிக்கா
ஆமாம் இயற்கையோடு பயணிக்கும் போது பயணம் அருமையாக இருக்கும்
துளசிக்கும் உங்கள் வாழ்த்துகளைச் சொல்லிவிட்டேன் கோமதிக்கா. நன்றி யும் உங்களுக்கும் வாழ்த்துகள் சொன்னார்.
அவர் பணிகள் நடக்க வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
அனந்தகிரி மலையில் இருக்கும் இந்த அருவி பார்க்க அழகுதான்.
பதிலளிநீக்குஇந்த மாதிரி ஓங்கி வளர்ந்த மரங்கள், காப்பித்தோட்டம், ஒத்தையடி பாதையில் பயணிப்பது மகிழ்ச்சியான ஒன்றுதான். கீழே உள்ள வேர்களை பார்த்து நடக்க வேண்டும். மலையின் மேல் இருந்து மெலிதாக விழுந்தாலும் அருவிதான் பார்க்க அழகாய் இருக்கும்.
ஆமாம் கோமதிக்கா அருவி குருவி போல சின்னதா இருந்தாலும் அதென்னவோ அழகுதான்....ஆமாம் காஃபி தோட்டம் உள்ளே நடந்து சென்றது ஆமாம் வேர்கள் பார்த்து நடக்கணும் இலைனா தடுக்கிவிட வாய்ப்பு அதிகம்...
நீக்குமிக்க நன்றி கோமதிக்கா
கீதா
வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களிருவருக்கும் எங்கள் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
நீக்குகீதா
கலிகொண்டா வியூ பாயிண்டிலிருந்து எடுத்த படங்கள் ஓகே. உங்கள் கண்கள் பார்த்த அழகை கேமிரா கண்கள் கொண்டு வராது. சுற்றிலும் எடுத்த்தீர்கள். தள்ளி வந்ததும் அந்த வியூ பாயிண்ட்டை ஒரு க்ளிக் செய்திருக்கலாம்! செல்பி எடுப்பவர்கள் அதுவும் இளையவர்கள் நிறையவே எரிச்சல் படுத்துவார்கள்!
பதிலளிநீக்குஆமாம் கண்கள் பார்ப்பதை கேமரா கொண்டு வராதுதான்....அந்த வியூ பாயின்டை எடுத்திருக்கலாம் ஆனால் கம்பி கூடத் தெரியாத அளவு இளசுகள் வட்டம்....பெரியவங்களும் இளசுகளாய் செல்ஃபி மயம்....அதனாலதான் எடுக்கலை. வெங்கட்ஜி எடுத்திருப்பார் பகிர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன் பார்த்த நினைவு
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
காப்பித்தோட்ட படங்களில் உயர மரங்கள் தவிர விசேஷம் ஒன்றுமில்லை எனினும் உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கு கொண்டோம்! காபி வேறு சுவையாய் குடித்திருக்கிறீர்கள் என்கிறீர்கள்...
பதிலளிநீக்குஆமாம் அங்கு விசேஷம் எதுவும் இல்லை ஸ்ரீராம். சும்மா உள்ளாற நடந்துவிட்டு வந்தோம்....நிறைய கோணங்களில் க்ளிக்ஸ்.....உயரம் எடுக்க.....
நீக்குஅங்கு குடித்த காஃபி அது நல்லாருந்ததுன்னாங்க....நமக்குத்தான் சுவை அப்ப சுத்தமா தெரியாத நிலை. இப்பவும் அப்பப்ப அப்படித்தான்
நீங்களும் பங்கு கொண்டதில் மகிழ்ச்சி ஸ்ரீராம்
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
அருவி என்று சொல்லி விட்டு பம்ப்செட் போல ஒரு இடத்தைப் பார்த்தது எங்களுக்கும் சற்று ஏமாற்றம்தான். எனினும் தண்ணீர் நிறைய விழும் காலங்களில் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து மகிழ வேண்டியதுதான்.
பதிலளிநீக்குஹாஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன் ஸ்ரீராம்...நல்ல ஒப்பீடு!!!!!!!
நீக்குஅதென்னவோ இப்படி வீழ்ந்தது கூட எனக்கு சந்தோஷம் அட்லீஸ்ட் ஒன்றுமே இல்லாமல் வற்ண்டு இல்லாம கொஞ்சமேனும் அருவின்னு ஒன்று இங்கு இருக்குன்னு காட்டியதே!! என்று...
கற்பனை செய்து பார்த்தேன் அப்படி ஒரு சீசனில் போக வேண்டும் வாய்ப்பு கிடைக்குமா....அங்கு தங்கி அனுபவிக்க வேண்டும் ஸ்ரீராம்...அத்தனை அழகான இடம்
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
இயற்கை தான் எத்துணை அழகு..! ஆகா...!
பதிலளிநீக்குஆமாம் டிடி இயற்கை என்றுமே எப்பவுமே அழகுதான் நாம் பாழ்பண்ணாத வரையில் ஆனால் பாழ்பண்ணினால் அது நம்மை துவம்சம் செய்துவிடும்!!!
நீக்குமிக்க நன்றி டிடி
கீதா
இயற்கை தான் எத்துணை அழகு..! ஆகா...!
பதிலளிநீக்குபடங்கள் எடுத்த வரைக்கும் OK. அருவி கொஞ்சம் ஏமாற்றம் அளிக்கிறது. விவரங்களை டைரியில் குறித்து வைத்திருந்தீர்களா? இத்தனை நாள் கழிந்தும் சரியாக சொல்வதற்கு.
பதிலளிநீக்குJayakumar
பொதுவாக எனக்கு இப்படிச் சுற்றிய இடங்கள் மறப்பதில்லை ஜெ கே அண்ணா. நல்ல நினைவு இருக்கும்.
நீக்குஇருந்தாலும் சிலவற்றை மொபைலில் என் வாய்ஸில் பதிந்து வைத்திருந்தேன் குறிப்பாகப் பெயர்களை அருவியின் பெயர்கள், சில விவரங்கள்... அதை கம்ப்யூட்டரில் காப்பி செய்து வைத்திருந்தேன்....ஆனால் அதுவும் ரிப்பேர் ஆன ஹார்ட் டிஸ்கில் போய்விட்டது...ஆனால் நினைவில் இருந்ததை நெட்டில் சரி பார்த்துக் கொண்டேன். சில விடுபட்டிருக்க வாய்ப்புண்டு...
ஆனால் என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் நினைவுகள்...இவை போன்றவைதான்...என் மிகச் சிறு வயதில் நான் அனுபவித்த இலங்கை வாழ்க்கை கூட இப்போதும் அப்படியே எழுத முடியும் அளவிற்கு நினைவில் உள்ளது. நாங்கள் இருந்த தெரு, படித்த பள்ளி, அருகில் இருந்த கோயில்கள், விவேகானந்தா கல்லூரி போன்றவை, இலங்கை வானொலிக்குச் சென்ற அனுபவம் எல்லாமே...ராஜேஷ்வரி சண்முகம் அவர்களுடன் பழகிய நாட்கள் அனைத்தும்
மிக்க நன்றி ஜெகே அண்ணா...
கீதா
ஆஹா... அத்தனை படங்களும் அருமை... குறிப்பாக அந்த மலை பகுதிகள். அதிலுள்ள ரயில் தடங்கள்... படத்திலேயே இவ்வளவு அழகாக காட்சி தருகிறது என்றால்... நேரில் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கும்!!!...
பதிலளிநீக்கு