பகுதி 9, பகுதி 8, பகுதி 7, பகுதி 6, பகுதி 5, பகுதி 4, பகுதி 3, பகுதி 2, பகுதி 1
நாங்கள் அரக்கு ரயில் நிலையத்தில் இறங்கிட முடிவு செய்தோம் என்று சென்ற பதிவில் சொல்லியிருந்தேன். பார்த்தால் ரயில் நடைமேடையைக் கடந்து சென்ற போது, நாங்கள் இருந்த பெட்டியும் நடை மேடையைக் கடந்து சென்று கொண்டிருந்தது. அரக்கு ரயில் நிலையத்தில் நிற்க வேண்டுமே என்று குழப்பத்துடன் பேசிக் கொண்டிருந்த போது ரயிலோ எங்கள் கவலையைப் பொருட்படுத்தாமல் மெதுவாகச் சென்று நின்றது.
நடை மேடை தாண்டியிருந்ததால் இறங்கும் இடத்தில் கற்கள். தூரத்தில் நடைமேடை தெரிந்தது. சிறிய ரயில் நிலையம் என்று தோன்றியது.
இறங்கிய இடத்தில் நேராகப் பார்த்தால் ஊருக்குள் செல்லும் சிறிய மண் பாதை, வீடுகள் தெருக்கள் தெரிய இறங்கிய கூட்டத்துடன் நாங்களும் கூடவே நடந்து சென்றோம். ஊருக்குள் பல தெருக்கள் சிறிய வீடுகள். முடுக்கு முடுக்காகக் கடந்து நடந்து சென்ற போது மலை வாழ் மக்களின் வாழ்க்கையையும் காண முடிந்தது. ஃபோட்டோ எடுக்கப் பயம், தயக்கம்.
15 நிமிட நடையில் ஊரின் மெயின் சாலையை அடைந்தோம். அங்கு உணவகங்கள், பலசரக்குக் கடைகள், காய்கறி பழங்கள் என்று கடை வீதி. போக்குவரத்து. டாக்ஸி, ஆட்டோக்கள் நிறுத்தும் இடம், பேருந்துகள் வந்து சென்று கொண்டிருந்தன. அதுதான் அரக்கு ரோடு என்று தெரிந்தது.
கடை வீதியில் உள்ள உணவகங்களில் சைவ உணவகம் என்று ஒன்று கண்ணில் பட, அங்கு கிடைத்த தோசையை சாப்பிட்டு விட்டு நான் குறித்து வைத்திருந்த பத்மாபுரம் தாவரவியல் பூங்கா மற்றும் பழங்குடி மக்கள் அருங்காட்சியகத்தைக் காணச் செல்லலாம் என்ற போது மணி 12. சாப்பிட்ட இடத்திற்கு எதிரிலேயே பழங்குடி மக்கள் அருங்காட்சியகம் இருந்தாலும், முதலில் பூங்காவைப் பார்த்துவிட்டு வரலாம் என்று பூங்காவிற்குச் சென்றோம்.
பத்மாபுரம் தாவரவியல் பூங்கா நுழைவு வாயில்
நாங்கள் சாப்பிட்ட வீதியிலேயே நேராக 10 நிமிடம் நடந்தால் (ரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ தூரம் இருக்கும் இந்தப் பூங்கா) போக்குவரத்து நெரிசலில் இருந்து ஒதுங்கி ஒதுக்குப் புறத்தில் பத்மாபுரம் தாவரவியல் பூங்கா. அரக்கு சாலையில் உள்ளது. நுழைவுக் கட்டணம் உண்டு.
இதற்கும் ஒரு வரலாற்றுக் கதை. இரண்டாம் உலகப் போரின் போது போரில் போராடும் வீரர்களுக்குக் காய்கறிகள் பழங்கள் வளர்த்து விநியோகிக்கும் நோக்கத்தில் இந்தத் தோட்டம் 1942 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாம். 26 ஏக்கராம்.
ஆனால் அதன் பின் தோட்டக்கலை பயிற்சி மையமாகவும் நர்சரியாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. அரிய வகைப் பூக்கள், அயல்நாட்டுப் பூக்கள் போன்றவை வளர்க்கப்படுகின்றன. மரங்களின் மேல் மர வீடுகள்/தொங்கும் வீடுகள் இருக்கின்றன. (நான் எடுத்த ஃபோட்டோக்கள் சரியாக வரவில்லை. மூன்றாவது விழி திடீரென்று விழியைத் திறக்கவில்லை) இந்த மர வீடுகளில் முன் பதிவு செய்து தங்கலாம்.
பெரிய பூங்காதான். நிறையப் பூக்கள் அழகுப் பூக்கள். ரோஜாவிற்காகத் தனி தோட்டம் இருந்தது.
இடையிடையே சிலைகள்
செடிகளை வண்ணத்துப் பூச்சி, ஆடு, கோழி? மயில், ஜாடி போன்ற வடிவங்களில் வெட்டி அழகுபடுத்தியிருந்தார்கள்.
சிறிய குளங்கள் (தொட்டிகள் எனலாமோ!) நடுவில் சிலைகள். பல இடங்கள் வெற்றிடமாக இருந்தன. இன்னும் நன்றாகப் பராமரிக்கலாம். பராமரித்தால் சுற்றுலாப்பயணிகளை இன்னும் ஈர்க்கலாம்.
ஒரு பகுதியில் சிவன் பார்வதி சிலை.
Engineering Marvel of Ants/Termites!
தோட்டத்தில் இயற்கைக் கட்டிடக் கலைஞர்கள் எறும்பார்கள்/கரையான்கள் கட்டிய அழகான மாளிகை! என்ன ஒரு Engineering Marvel!!!!
பூங்காவில் குழந்தைகளைக் கவரும் வகையில் சின்ன டாய் ரயில் இருந்தது. பூங்காவின் முழுப் பகுதியையும் சுற்றிப் பார்க்கலாம். பெரியவர்களும் குழந்தைகளானார்கள்.
இன்னும் அதிக நேரம் இருந்திருந்தால் நிதானமாகப் பார்த்திருக்கலாம். இப்போது இப்பூங்கா இன்னும் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
எனக்கு இப்பூங்காவிற்குப் பதில் ஊருக்குள் மக்கள் குடியிருக்கும் பகுதி தெருக்களையும் ஊரையும் சுற்றி, இந்த அரக்கு தெருவைத் தாண்டினால் மலைப்பகுதி சாலைதான் என்பதால் மலைப்பகுதியையும் பார்த்திருக்கலாம் என்று தோன்றியது. சுவாரசியமாக இருந்திருக்கும்.
இதை அடுத்து பழங்குடிமக்கள் அருங்காட்சியகம் சென்றோம். அதைப் பற்றி அடுத்த பதிவில்.
(வரும் சனி ஞாயிறு பிஸி. வலைப்பக்கம் வர இயலாது. மீண்டும் திங்களில் இருந்துதான்)
-----கீதா
போட்டோ எடுக்க ஏன் தயக்கம்? வில்லும் அம்பும் வைத்திருந்தார்களா?
பதிலளிநீக்குஹாஹாஹா இல்லை ஸ்ரீராம். நம்மைப் போலத்தான் இருந்தாங்க. கூட வந்தவர்களின் கெடுபிடியினால் எடுக்கவில்லை. ஊர் பேர் தெரியாத இடத்துல வம்பை விலைக்கு வாங்காதன்னு!!!!!
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
மரவீடுகள் தொம்மென்று கீழே விழுந்து விடாதே...!!! போட்டோ வேறு போடவில்லை நீங்கள்...
பதிலளிநீக்குஹாஹாஹா...விழாது...அப்படித்தான் நினைக்கிறேன் ஹிஹிஹி... சும்மா சொல்றேன்...வெங்கட்ஜி ஃபோட்டோ போட்டிருந்தார் என்று நினைவு.
நீக்குஎனக்குச் சின்னாரில் தங்கிய அனுபவம் உ ண்டு....வித்தியாசமான அனுபவம். நன்றாகவே இருந்தது.
நன்றி ஸ்ரீராம்
கீதா
சிறிய குளம் அல்லது பெரிய தொட்டி! செடியிலேயே வெட்டப்பட்ட வடிவங்கள்... இதெல்லாம் நாங்கள் தஞ்சையிலேயே சிவகங்கைப் பூங்காவில் பற்பல வருடங்களுக்கு முன்னாலேயே பார்த்திருக்கிறோமாக்கும்!
பதிலளிநீக்குஇதெல்லாம் நாங்கள் தஞ்சையிலேயே சிவகங்கைப் பூங்காவில் பற்பல வருடங்களுக்கு முன்னாலேயே பார்த்திருக்கிறோமாக்கும்!//
நீக்குசூப்பர் சூப்பர்....
ஆமாம் ஸ்ரீராம் நானும் பல பூங்காக்களில் பார்த்திருக்கிறேன். பூங்கா ஓகே என்றுதான் சொல்வேன். ரொம்ப ஈர்க்கவில்லை. அதான் சொல்லியிருக்கிறேன் ஊரைச் சுற்றிப் பார்த்திருக்கலாம்னு. சும்மா ஒரு ஃபோட்டோ ஷூட்!!!
நன்றி ஸ்ரீராம்
கீதா
அந்த எறும்பு கரையான் புற்றுக்குள் எண்டாஸ்க்கோப்பி கேமெரா போல அனுப்பி என்னென்ன செய்திருக்கிறது உள்ளே, என்னென்ன சேமித்து வைத்திருக்கிறது என்று பார்க்க ஆவல்!
பதிலளிநீக்குஹைஃபைவ் ஸ்ரீராம். எனக்கும் அப்படி அறிய ஆவல் உண்டு. வேறு ஏதாச்சும் வெளிய வருமோ!!!
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
பூங்கா போட்டோக்கள் எடுத்த வரையில் ஓகே. பத்மாபுரம் என்பதை பத்மநாபபுரம் என்று வாசித்து விட்டேன்.
பதிலளிநீக்குபூங்கா மழையை எதிர்பார்த்து காய்ந்து கிடக்கிறது என்று தோன்றுகிறது.
Jayakumar
பத்மாபுரம் என்பதை பத்மநாபபுரம் என்று வாசித்து விட்டேன்.//
நீக்குஹாஹாஹா...
ஆமாம் பூங்கா வறண்டு இருந்தது. அதுவும் நாங்கள் சென்றது ஏப்ரல் மாதத்தில்...
மிக்க நன்றி ஜெகே அண்ணா
கீதா
தாவரவியல் பூங்காவை சுற்றிக்காட்டியதற்கு நன்றி சகோதரி!... ஆனாலும் புகைப்படங்களைப் பார்க்கும்போது பூங்கா சரியாக பராமரிக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது... அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு இயற்கையை ரசிக்கும் மனப்பாங்கு இருந்தால் மட்டுமே இப்படியான இடங்கள் அழகுடன் மிளிர்வது சாத்தியம். அங்குள்ள சிலைகள் அனைத்தும் அற்புதம்!.
பதிலளிநீக்குபூங்கா சரியாகப் பராமரிக்கப்படவில்லைதான் நாஞ்சில் சிவா. நீங்க சொல்லும் பாயின்ட் அப்படியே ஏற்பேன். அதற்கெல்லாம் இயற்கையை ரசிக்கும் மனப்பாங்கு வேண்டும் ....சிலைகள் நன்றாக இருந்தன குழந்தைகளை ஈர்க்கும் வகையில்
நீக்குமிக்க நன்றி நாஞ்சில் சிவா
கீதா
அசர வைக்கும் அழகிய காட்சிகள்...
பதிலளிநீக்குமிக்க நன்றி டிடி.
நீக்குகீதா
படங்கள் எல்லாமே அருமை.
பதிலளிநீக்குமிக்க நன்றி கில்லர்ஜி
நீக்குகீதா
இருந்தாலும் படங்கள் அழகு..
பதிலளிநீக்குபசுமை தான் கொஞ்சம் குறைவு..
இதுதான் வாய்ப்பு என்று மழையும் இறங்கி இருந்தால்!?...
மிக்க நன்றி துரை அண்ணா. வலை வந்த போதும் ப்ளாகில் கருத்துகளை வெளியிட வேண்டும் காத்திருக்குமே என்ற எண்ணம் வரவே இல்லை என்னவோ தெரியவில்லை....பதிவுகளுக்குச் செல்கிறேன் ஆனால் எங்கள் வலைப்பூவைக் நான் கண்டு கொள்ளவே இல்லை!!!!!!!!!!!!! இப்போதுதான் நினைவு வந்து பார்த்தால் கருத்துகள் காத்திருந்தன. டக்கென்று வெளியிட்டு பதில்...
நீக்குமழை வந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் பயணம் கொஞ்சம் கஷ்டமாக இருந்திருக்கலாம். இயற்கையை நாம் வெல்ல முடியுமா!
மிக்க நன்றி துரை அண்ணா
கீதா
கொஞ்சம் தாமதமாகி விட்டது..
பதிலளிநீக்குபொறுத்துக் கொள்ளுங்கள்...
அரக்குப் பள்ளத்தாக்கு செல்லவிருக்கும் அடுத்த குழு
எபி யாக இருக்குமோ?..
அதனாலென்ன்ன துரை அண்ணா. நேரம் கிடைக்கும் போது வாருங்கள்.
நீக்குநானுமே வலைப்பக்கம் வர இயலவில்லை. நேற்றிலிருந்துதான் வருகிறேன்.
அரக்குப் பள்ளத்தாக்கு செல்லவிருக்கும் அடுத்த குழு
எபி யாக இருக்குமோ?..//
ஹாஹாஹா.....ஓ அப்ப உங்கள் கதை ஏதேனும் இதைச் சார்ந்து வரப் போகுதோ...!!!!!!
மிக்க நன்றி துரை அண்ணா
கீதா
அருமையான உலா. ரசிக்க வைக்கும் ஒளிப்படங்கள். ரசித்தேன்.
பதிலளிநீக்குசோழ நாட்டில் பௌத்தம் என்ற என்னுடைய நூல் அச்சேற்றப்பணி காரணமாக சில மாதங்களாக வலைப்பூக்களின் பக்கங்கள் வர இயலா நிலை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். அண்மையில் இந்நூல் வெளியாகியுள்ளது. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம்.
உங்கள் புத்தகம் வெளியானது குறித்து அறிந்தோம் ஐயா.
நீக்குவாழ்த்துகள்!
படங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா,
கீதா
இலைப் பட்டாம்பூச்சி, ஜாடி, சிமிண்ட் சிற்ப மெர்மெயிட், டைனோசரின் வயிற்றில் பாதை எல்லாமே சூப்பர்.
பதிலளிநீக்குமிக்க நன்றி தேனு. ரொம்ப நாளாச்சு. உங்க பதிவுக்கு இடையிடையில் வந்தாலும்....
நீக்குகீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குநலமா? பதிவு அருமை. படங்கள் ஒவ்வொன்றும் எப்போதும் போல் துல்லியமாக உள்ளது. அழகான மலர்கள படங்கள் அனைத்தும் அருமை. சிலைகள், மற்ற படங்கள் அனைத்துமே நன்றாக உள்ளது. செடிகளை சிற்பம் போல் செதுக்கியிருப்பதை ரசித்தேன்.
கரையான் புற்றா அது ? பார்க்க பாம்புப் புற்று போல் உயரமாக உள்ளது. ஆனால், திறமையாகவும், பொறுமையாகவும் கட்டி உள்ளன. பழங்கால வீடுகளை இந்த கரையான் முழுதுமாக , அரித்தே அழித்து விடும் திறமையும் கொண்டவை. படங்களும், பதிவும் அனைத்தும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. தொடர்ந்து வருகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
படங்களையும், பதிவையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி கமலாக்கா.
நீக்குகரையான் புற்றுதான். பாம்புகள் புற்றுகள் கட்டுவதில்லை. ஆனால் உள்ளே நுழைந்து சென்று வரும். கரையான் முட்டைகள் கொத்து கொத்தாக இருப்பதால். நாம் தான் பாம்புப் புற்று என்று சொல்கிறோம். ராஜநாகம் மட்டுமே கூடுதான் கட்டும் என்றுதான் அறிந்திருக்கிறேன் கமலாக்கா
மிக்க நன்றி கமலாக்கா
கீதா
வணக்கம் சகோதரி
நீக்கு/ராஜநாகம் மட்டுமே கூடுதான் கட்டும் என்றுதான் அறிந்திருக்கிறேன் /
அப்படியா? தகவலுக்கு நன்றி சகோதரி. இங்கு கொஞ்சம் தள்ளி தாவர வகைகள் நிறைந்திருக்கும் இடங்களில் இது போலவே உயர உயரமாக புற்றுகள் இருப்பதை பார்த்ததும் அது பாம்பு புற்றுகள் என நினைத்து விட்டோம். தவிரவும் புற்றுகளுக்கு பால் ஊற்றுவதையும், அதனுள் இருந்து பாம்புகள் எட்டிப் பார்ப்பதையும் திரைப்படங்களில் பார்த்திருக்கின்றேன் அல்லவா? அதனால் அப்படி நினைத்து விட்டேன். இன்று எங்கள் அப்பார்ட்மெண்டில் கார் பார்க்கிங்கில் ஒரு பாம்பு வந்திருப்பதாக கூறுகின்றனர். ஒரிரு வாரங்களுக்கு முன்பும் இதே நிலைமை. அருகிலேயே எங்கோ கரையான் புற்றுக்கள் உள்ளது போலும். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இங்கு ஒரு பதில் கருத்துரை போட்டிருந்தேனே..! அதை காணவில்லையே...? அதை நீங்கள் இன்னமும் விடுவிக்கவில்லையா சகோதரி. ? இல்லை மறைந்தே போய்விட்டதா?
நீக்குகமலாக்கா ரொம்ப ரொம்ப ஸாரி. எங்களின் தளம் உள்ளே போகவே இல்லை...இப்பத்தான் ஐயையோ தளத்தையே மறந்துவிட்டோமேன்னு போனால் கருத்துரைகள்.
நீக்குஅந்த அளவிற்கு மனம் நிறைந்து எண்ணங்கள், முட்டி மோதி, ஒரு சில முக்கியமான செயல் குறித்த முடிவுகள் ஆலோசனைகள், வழி நடத்தல்னு போவதால் ரொம்ப டைட்டாக இருக்கு.
ஸாரி கமலாக்கா..இதோ போட்டுவிட்டேன்...
பாம்புகள் புற்றுகளைக் கட்டுவதில்லை என்றாலும் அவற்றுள் சென்று உணவுக்காக இருக்கும். எலி வளைகள் என்றும்....
எலி வளைகள், புற்றுகள் இருந்தால் பாம்பு இருக்கக் கூடிய வாய்ப்பு உண்டு கமலாக்கா....கவனமாக இருங்க. இருட்டில் போகாதீங்க....வெளிச்சத்திலேயே போங்க...
கீதா
படங்கள், பதிவு சிறப்பு. மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஎன் சோழ நாட்டில் பௌத்தம் நூல் அச்சுப்பணி காரணமாக சில மாதங்களாக வலைப்பூவில் தொடர்ந்து வரமுடியவில்லை. இனி பதிவுகள் மூலமாகச் சந்திப்போம்.
வாழ்த்துகள், முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குகருத்திற்கு மிக்க நன்றி
கீதா
தோட்டத்தில் இயற்கைக் கட்டிடக் கலைஞர்கள் எறும்பார்கள்/கரையான்கள் கட்டிய அழகான மாளிகை! என்ன ஒரு Engineering Marvel!!!! //
பதிலளிநீக்குமிக அழகான மாளிகை தான்.
படங்கள் எல்லாம் அருமை. மலர்களும், சிலைகளும் அருமை.
தாவிரயியல் பூங்காவை நன்றாக சுற்றிப்பார்த்து விட்டேன்.
மிக்க நன்றி கோமதிக்கா....உங்க பதிவு வந்திருக்கு பார்த்தென் இனிதான் வாசிக்க வேண்டும். வருகிறேன்...மிகவும் டைட்.
நீக்குகீதா
அனைத்து நல் உள்ளங்களுக்கும் "சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்" நிறுவனத்தின் மகிழ்ச்சி பொங்கும் "ஆங்கில புத்தாண்டு" நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு"Happy New Year 2023" Wishes from "Scientific Judgment" to all friends...
மிக்க நன்றி சிவா.
நீக்குஉங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்!
கீதா