புதன், 7 ஜூன், 2023

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 22 - லால்பாக் மலர்க்கண்காட்சி - 3

 

Bromelia

*********

Daisy வகைகள்
*********

Zinnia வகை
*********


Gymnocalycium mihanovichii  - பெயரே வாயில நுழையலீங்க. எளிதா சொல்லணும்னா Cactus வகை அம்புட்டுத்தான் அதை விட்டுட்டு....சரி
 உங்களுக்கு முடிஞ்சா வாசிச்சுக்கோங்க....தேங்காய் துருவி போல இருக்குல்ல!!!

*********

Vriesea (carinata) - Vriesea - இதன் ஒரு வகை. நிறைய வகைகள் இருக்கு...குழப்பம்...எனவே  பார்த்தமா ரசிச்சமான்னுட்டு...!!!! போய்விட வேண்டியதுதான். (என் விலைய பாத்தீங்களா? ரூ 300!! மயில் தோகை போல இருக்கேனோ?!!!)

*********




Anthurium andraeanum - Painter's-palette (அழகான காரணப் பெயர்!)- அந்தூரியம் வகைகள்

*********
Texas bluebell - Lisianthus வகை

*********

Petunia
*********
Oxalis Traingularis - நம்ம ஊரில் பச்சை நிறத்தில் இப்படி ஆற்றோரங்களிலும் நீர்நிலைகளின் ஓரத்திலும் கொத்தாக வளர்பவை உண்டு ஆரைக்கீரை - மூன்று இலைகள் (Clover) இருந்தால் அது புளியாரை. அதன் பயன்பாடுகள் அதிகம். ஆனால் இங்கு பகிர்ந்திருக்கும் வகைக்கும் நம்மூர் வகைக்கும் உறவு உண்டா என்று தெரியவில்லை. நானும் கடம்போடு வாழ்வு பதிவில் சொல்லியிருந்தேன். ஆரைக்கீரை பற்றி நம்ம நாஞ்சில் சிவா பதிவு இருக்கிறது. 
**********
Chrysanthemum - வகை

படங்கள் கூடுதலாகிவிட்டனவோ? இப்படி விலைக்கு வைக்கப்பட்டிருந்த பூக்களின் காட்சிப் படங்கள்  நான் எடுக்க முடிந்தவை இவ்வளவுதான். இனி வருபவை அங்கு மயில், தொங்கும் தொட்டிகள் போன்று வடிவமைக்குப்பட்டிருந்தவையும், பூங்காவிற்குள் வெவ்வேறு சமயங்களில் எடுத்த வேறு சில படங்களும் அவ்வப்போது, மூன்றாவது விழியின் பார்வையில் தொடரும்...

முந்தையப் பதிவுகளைப் பார்வையிட்டவர்களுக்கும், கருத்திட்டவர்களுக்கும் மிக்க நன்றி.  இப்பதிவில் உள்ள படங்களையும் ரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன். 


----கீதா




38 கருத்துகள்:

  1. படங்கள் அனைத்தும் அருமை. சில பெயர்கள் வாயில் நுழையவில்லை என்றாலும் அழகா இருக்கே என்று ரசித்தாயிற்று :-) கருநீல நிற petunia இதுவரை பார்த்ததில்லை, அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை! கௌசல்யா எப்படி இருக்கீங்க. ரொம்ப நாளாச்சு இல்லையா...உங்கப் பக்கமும் நான் வந்து வருடங்களே ஆகிவிட்டதுன்னு நினைக்கிறேன்.

      ஆமாம் பெயர்கள் நுழையலை...ரசனைதானே முக்கியம். உங்களுக்கும் தோட்ட ஆர்வம் உண்டு என்று தெரியும். தக்காளிச் செடி பத்தி நீங்க போட்டது இன்னும் நினைவில்.

      //கருநீல நிற petunia இதுவரை பார்த்ததில்லை, அற்புதம்//

      ரொம்ப அழகாக இருந்தது. எல்லாமே விலை கூடுதல். மேலும் நான் காய்கள் போடுவதில் ஆர்வம்...அதுவும் வீட்டுல வாங்கும் காய்களிலிருந்தே விதைகள். கடையில் வாங்குவதை விட இவை நன்றாக வருகின்றன,

      மிக்க நன்றி கௌசல்யா..

      கீதா

      நீக்கு
  2. மலர்கள் என்றாலும் பொறுமையுடன் கோணம் பார்த்து எடுத்த படங்கள்
    அழகாக உள்ளன.

    இப்படி மாதத்திற்கு ஒரு முறையாவது எட்டிப்பார்ப்பது (பதிவு இடுவது) நல்லது.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலர்கள் என்றாலும் பொறுமையுடன் கோணம் பார்த்து எடுத்த படங்கள்
      அழகாக உள்ளன.//

      மிக்க நன்றி ஜெகு அண்ணா.

      //இப்படி மாதத்திற்கு ஒரு முறையாவது எட்டிப்பார்ப்பது (பதிவு இடுவது) நல்லது//

      இப்ப போட்டுக் கொண்டிருக்கிறேனே...(இப்போதைக்கேனும்!!) பதிவுகள் எழுதுவதற்கு என்னவோ நிறைய இருக்கின்றனதான் அண்ணா...படங்கள் காணொளிகள் என்று இருப்பதால் தொகுத்து எடிட் செய்து அதற்கு நேரம் கிடைப்பது சிரமமாக இருக்கு.

      போடுகிறேன்

      மிக்க நன்றி அண்ணா

      கீதா

      நீக்கு
  3. படங்கள் அனைத்தும் அட்டகாசம் மிகவும் தெளிவாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. (அனைத்தும் என்பதை எத்தனை தடவை வேண்டுமானாலும் அழுத்திச் சொல்லலாம். அவ்வளவு அழகு ஒவ்வொரு பூக்களும்.) படங்கள் ஒவ்வொன்றும் கண்களை கவர்கிறது.

    அங்கு (லால்பாக்) சென்று பார்த்தால் கூட இப்படி ரசிக்க முடியாதென்பது என் கருத்து. அவ்வளவு தெளிவாக பொறுமையுடன் படங்களை எடுத்து அதன் விவரங்களையும் தந்து விட்டீர்கள். நீங்கள் சொல்வது உண்மைதான். பூக்களின் பெயர்களை வாசிக்கவே முடியவில்லை. ஆனாலும் அதன் அழகு அபரிமிதம்.

    மயில் தோகை போலுள்ள பூக்கள் மிகவும் அழகாக நன்றாக உள்ளது. செவ்வந்தி வகைப் பூக்கள் "நான் மட்டும் என்ன அழகில் குறைச்சலா".? எனக் கேட்கிறது. பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போன்ற இந்த மலர்களின் பதிவுக்கு என் மனமார்ந்த நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா உங்களுக்கு இதற்குப் பதிலும் கொடுத்திருந்தேனே...ஆ எங்கே போச்சு அந்தக் கருத்து?

      பதிவு அருமை. படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. (அனைத்தும் என்பதை எத்தனை தடவை வேண்டுமானாலும் அழுத்திச் சொல்லலாம். அவ்வளவு அழகு ஒவ்வொரு பூக்களும்.) படங்கள் ஒவ்வொன்றும் கண்களை கவர்கிறது.//

      மிக்க நன்றி அக்கா.

      //அங்கு (லால்பாக்) சென்று பார்த்தால் கூட இப்படி ரசிக்க முடியாதென்பது என் கருத்து. அவ்வளவு தெளிவாக பொறுமையுடன் படங்களை எடுத்து அதன் விவரங்களையும் தந்து விட்டீர்கள்.

      ஹையோ கமலாக்கா ரொம்ப புகழ்ந்திட்டீங்க ....இயற்கையை நம்மால் வெல்ல முடியாது.... நேரில் பார்க்கறப்ப இன்னும் அழகு.

      ஆமாம் அக்கா சில பூக்களின் பெயர்கள் நினைவில் இருப்பதில்லை....ஆனால் ரசிப்பதுதானே நமக்கு இல்லையா...

      //மயில் தோகை போலுள்ள பூக்கள் மிகவும் அழகாக நன்றாக உள்ளது. செவ்வந்தி வகைப் பூக்கள் "நான் மட்டும் என்ன அழகில் குறைச்சலா".? எனக் கேட்கிறது. பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போன்ற இந்த மலர்களின் பதிவுக்கு என் மனமார்ந்த//

      மிக்க நன்றி கமலாக்கா..

      நான் கருத்துகளை வேர்டில் அடித்து இங்கு பதிவான பிறகு அழிப்பது வழக்கம்...மற்ற வலைத்தளங்களுக்கான கருத்துகள் உட்பட....இது நான் போட்டாச்சே என்று வேர்டில் அழித்துவிட்டேன் அன்று!!!

      நல்லகாலம் ஓரளவு நினைவு இருந்தது பதில்..

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  5. அனைத்து மலர்களும் அருமை... குறிப்பாக அந்த கருமை மலர்கூட வெறுமையாக இல்லாமல் அருமையாக உள்ளது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நாஞ்சில் சிவா. ஆமாம் எல்லாமே நேரில் பார்க்க அத்தனை அழகு...

      கீதா

      நீக்கு
  6. பூ பூ பூ பூ பூ பூ பூ பூ பூ பூ பூவா படம் எடுத்திருக்கீங்க...   அதற்கெல்லாம் பெயர் தெரியாது, ஞாபகம் வாசிக்கவும் முடியாது..  பூ பூதான்...  என்ன சொல்றீங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா....ஸ்ரீராம் மலர்க்கண்காட்சியாச்சே....பூ பூவேதான்..!!!

      ரசிப்பதற்குப் பெயர் தெரியணும்னு இல்லை ஸ்ரீராம். நாம் வளர்ப்பதாக இருந்தால் அல்லது மலர் வியாபரம் செய்வதாக இருந்தால் தெரிந்து கொள்ள வேண்டும். எனக்கும் நினைவு வைத்துக் கொள்ள முடியாது, ஸ்ரீராம். பூக்கள் நினைவிருக்கும் ஆனால் பெயர்கள்!!! இதுதான் அதுவா என்றெல்லாம் தெரியாது. இதுவே எல்லாம் சரியா என்று தெரியாது கூகுள் படங்கள் தேடலில் போட்டுத் தேடி பெயர்களைப் பகிர்ந்தேன். தவறு இருந்தால் தெரிஞ்சவங்க யாராச்சும் சொல்லலாமேன்னு

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  7. டெய்ஸி, ஜெய்சி என்று பார்த்துக்கொண்டு வந்தால் அதென்ன இலையா பூவா என்று யோசித்ததற்கு அடுத்த படம் இன்னும் கேள்வி..  அதென்ன இலையில் இட்லி ஊத்தி இருக்காங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இட்லி - ஹாஹாஹாஹா Painter's-palette அது...அந்த வெவ்வேறு வண்ணங்களில் ஒரே மாதிரி இருப்பவை..

      இலை போன்ற பூ எனலாம்...அதில் பெயின்ட் அடித்தது போன்று அத்தனை அழகு நிறங்கள்...

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதாம்

      நீக்கு
  8. பெட்டுனியாவைப் பார்த்தால் ஏனோ பாவமாக இருக்கிறது.  மைக்கேல் ஜாக்சன் ஞாபகம் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா அது என் மூன்றாவது விழியில் அப்படித் தெரிகிறது என்று நினைக்கிறேன். நேரில் நல்லா இருந்துச்சு!!! ஒரு வேளை மைக்கேல் ஜாக்ஸன் பல அறுவை சிகிச்சை செய்தது போல இதுவும் பல mix match கலந்து உருவான பூவோ என்னவோ...

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  9. காக்டஸ் வகை ...  அதென்ன இயற்கைப்பூவா, செயற்கையா..  கற்றாழையில் கலர் பேப்பர்  ஒட்டி வைத்த மாதிரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரித்துவிட்டேன் ஸ்ரீராம்....இயற்கைப் பூதான். "அடி கள்ளி உனக்குள் இப்படி வண்ணமயமான கொண்டைகளை உருவாக்கும் திறமையா" என்று அதன் கீழே எழுத நினைத்து விட்டுப் போய்விட்டது கடைசியில்.

      எனக்கும் முதலில் பார்க்க வித்தியாசமாக புதுசா இருந்துச்சு. பச்சையா பார்த்த கள்ளி இங்கு கலர் கலராகன்னு..

      இந்த வகைக்கள்ளிச் செடிகள் மரபணு கலப்பு என்று சொல்லப்படுகிறது. இவற்றிற்குக் பச்சையம் - chlorophyll கிடையாதாம் அதனால் இப்படி சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் என்று விதம் விதமாக வளருமாம்..

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  10. அழகிய படங்கள். ரசித்தேன். பார்த்த நினைவும் வந்தது (ஒரு வருடத்துக்கு முன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா இந்த வருஷம் கண்காட்சி இருந்தாலும் இதே பூக்கள் இடம்பெறும்தான்....என்ன மாத்தவா போறாங்க!!!! புதுசா வேணா கொஞ்சம் சேர்க்கப்படலாம் அல்லாதைக்கு பெரிசா மாற்றம் வந்துவிடாது!!ஹிஹிஹிஹி

      பூக்களை எப்ப வேணாலும் பார்த்துக்கலாம்...சரி சரி ஒரு வருஷம் ஆகிடுச்சோ? போனா போகுது...

      அழகிய படங்கள். ரசித்தேன்.//

      மிக்க நன்றி நெல்லை

      நீக்கு
  11. வயலட் செம்பருத்திபோல உள்ளது மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ நெல்லை உங்களுக்கு அது செம்பருத்தி போலத் தெரிந்ததா..எனக்கு அது ஸ்பீக்கர் பூன்னு சொல்லுவோமே அது போலத் தோன்றியது

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  12. ஆஹா ...அனைத்தும் அழகு கா

    பதிலளிநீக்கு
  13. ஆவ்வ்வ்வ் எவ்ளோ அழகு மலர்கள்...

    டெய்சி மலர்கள் எனச் சொல்லியிருக்கிறீங்கள்.. அவற்றை இங்கு டேலியா எனவும் சொல்வோம்.. வெள்ளை மலர், குட்டியாக இருப்பதைத்தான் டெய்சி என்கின்றனர் இங்கு, கார்டினில் எல்லாம் தானாக வளரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா டேலியா என்றும் பார்த்தேன்...ஓ ஒரு வேளை சின்னவைதான் டெய்சியோ....நான் சந்தேகம் வந்தப்ப, கூகுளில் படம் போட்டுத் தேடினேன் ...எனக்கு டவுட் டவுட்டா வந்தது...அது டெய்சி வகை என்றது அப்படியே போட்டுவிட்டேன்...சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நேரில் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்..

      ஆமாம் உங்கள் ஊரில் தானாகவே வளரும்..

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  14. இங்கும் கக்ரஸ்/// எனத்தான் சொல்வோம் கீதா, பார்க்க அழகாக இருக்கும்,,

    கிரிசாந்திமம்.. எவ்ளோ வகைகள் இருக்குது தெரியுமோ.. அவ்ளோ அழகு.
    இன்று நீங்கள் போட்டிருப்பதெல்லாமே குளிர்ப்பிரதேச மலர்கள் என நினைக்கிறேன், ஏனெனில் அத்தனையும் இங்கிருக்கு.

    பதிலளிநீக்கு
  15. ஆமாம் காக்டஸ் தானே அதன் பெயர் பொதுவாகவே...இல்லையா...ஆமாம் அழகா இருக்கும்

    கிரைசாந்திமம் நிறைய இருக்கு....ஆமாம் அதுவும் வண்ண வண்ணமாக கூட்டமாக இருந்தால் அவ்வளவு அழகு...ஆமாம் அங்குள்ள மலர்கள் தான் இங்கும், பங்களூரில், வடக்கில் குளிர் பகுதிகளில் குளிர் காலத்தில் பூக்குது...

    இல்லைனாலும் நாங்க சென்னை, ஈரோடுல கூடப் பூக்க வைப்போமே ..எங்க மக்கள் அப்படியானவங்க!!!!!!!!!!!!!!!ஹாஹாஹாஹா

    குளிர் ஊரில் இருக்கும் ஹஸ்கி யையே இங்கு சென்னையில் வளர்க்கறாங்க....பாவம் எவ்வளவு கஷ்டப்படும் இல்லையா....அப்புறம் என்ன!!!! பூக்களை வளர்க்க!!! ஹாஹாஹா Husky வைத்திருந்தால் ஸ்டேட்டஸ் வகையினர்!!! என்ன சொல்ல?

    மிக்க நன்றி அதிரா

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான் கீதா.. எங்ககிட்டயேவா:)).. இங்கு பனிநாட்டில், அண்ணன் அக்கா எல்லாம் வாழைமரம், நந்தியாவட்டை, தூதுவளை, கறிவேப்பிலை எல்லாம் வீட்டுக்குள்ளேயே வச்சு வளர்க்கினம், கோடையில் சாடியுடன் தூக்கி வெளியே வைப்பினம், ஆனா நான் இந்த முயற்சிக்குப் போவதில்லை, காரணம் ஸ்கொட்லாண்ட்டில் எப்பவும் குளிர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா....அதானே!!! பூசார்கிட்ட வாலாட்ட முடியுமா!!!!!...............................................................

      அப்படின்னு எல்லாம் கேக்க மாட்டேனாக்கும்!!! ஹஹாஹாஹாஅஹா..

      ஆமா உங்க ஊர்ல அப்படி எல்லாம் வளர்ப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன் உங்க ஊர்ல இல்ல...மற்ற நாடுகளில் நம் மக்கள்!!! ஆனா பாருங்க அதில் அவற்றின் இயற்கையான தன்மை இருக்குமா என்று தெரியவில்லை. அமெரிக்காவில் உள்ளவங்க சொல்வது கொத்தமல்லி, கறிவேப்பில்லை எல்லாம் நம்மூர் போல மணமாக இருப்பதில்லைன்னு. அது போல வாழைப்பழம்...மாம்பழம், பலாப்பழம், இன்னும் சில காய்வகைகள்....

      அது அது இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சௌக்கியமே!!!

      நல்லது அதிரா நீங்கள் உங்க ஊரில் இப்படியானதுக்குப் போகாததுக்கு ஏனென்றால் குளிரில் பாவம் எல்லாம் கஷ்டப்படும்...அப்படி வருபவை அத்தனை நல்லாருக்கும்மா என்று தெரியவில்லை. மண், காலநிலை எல்லாம் இருக்கு தானே!!

      மிக்க நன்றி அதிரா மீண்டும் வந்ததுக்கு

      கீதா

      நீக்கு
  16. வணக்கம் சகோதரி

    நல்ல அழகான மலர்கள். ஒவ்வொன்றும் பார்க்க மிக ரம்மியமாக உள்ளது. நல்ல பொறுமையாக படமெடுத்திருக்கிறீர்கள். இதற்கு முன் இப்பதிவுக்கு ஒரு அன்றே ஒரு கருத்துரை தந்திருந்தேன. பகிர்வுக்கு நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கமலாக்கா...உங்களின் முந்தைய கருத்துக்கும் பதில் கொடுத்துவிட்டேன் அதில் சொல்லியிருக்கிறேன்.

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      என் மறு கருத்துக்கும் தாங்கள் உடனே பதிலளித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி. இந்த மலர்களை அடிக்கடிக் வந்து பார்த்து ரசித்துக் கொண்டேயிருக்கிறேன். இயற்கையின் படைப்புகளில் மலர்களின் அழகு மனதிற்கு இதமளிப்பது என்பது உண்மைதானே..! முந்தைய கருத்துக்கு பதில் பெறாமைக்கு விபரம் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  17. மலர்கள் மனதுக்கு இதம் அளிக்கும்.
    மலர்கள் படங்கள் எல்லாம் நன்றாக எடுத்து இருக்கிறீர்கள் கீதா.பெயர்களை தேடி தந்து இருப்பது மேலும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிக்கா.

      மலர்கள் படங்கள் எல்லாம் நன்றாக எடுத்து இருக்கிறீர்கள் கீதா.பெயர்களை தேடி தந்து இருப்பது மேலும் சிறப்பு.//

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு