முந்தைய பதிவை வாசித்த, கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. செந்நாரை, சாம்பல் நாரை எனும் ஹெரான் - HERON வகைகளில் அடுத்து குளக் கொக்கு/POND HERON அது ப(ம)றந்து போகும் முன், பற்றி போட நினைத்தேன். ஆனால் இன்னும் சில காணொளிகள் தொகுத்து எடிட் செய்ய வேண்டும்.
அதற்கு முன் லால்பாக் மலர் கண்காட்சி பூக்கள் வேறு "ரெண்டு பதிவுதான் போட்ட அதுக்கப்புறம் எங்களை வாரிசையில காத்திருக்க வைச்சுட்டியேன்னு" என்னைப் பார்த்துக் கொண்டே இருக்க...சரி இதை இன்று வெளியிட்டுவிடுவோம்ன்னு..இதோ...
"அதிருக்கட்டும் முதல் ஷோவை இங்க காட்டு. பாக்காதவங்க பாத்துக்குவாங்கல்ல?"
அவ்வளவுதானே? போட்டா போச்சு! முதல் ஷோ இங்க இருக்கு!! திருப்தியா லால்பாக்?!!! இப்ப சந்தோஷம்தானே! சரி இப்ப நீங்க நம்ம மக்களை எல்லாம் மகிழ்வியுங்கள்!
Gerbera டெய்சி போன்ற பூ வகை
*************************
********************
பூக்களின் அணிவகுப்பு மிக அழகு. அனைத்தும் ரசித்தேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி, வெங்கட்ஜி.
நீக்குகீதா
இந்தப் படங்களை 1250ம் ஆண்டு நடந்த லால்பாக் மலர் கண்காட்சியில் கீதா ரங்கன் எடுத்தது என்று சொல்லிக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குஹாஹாஹாஹாஹா...சிரித்துவிட்டேன். தெரியும் இப்படி ஏதாச்சும் உங்ககிட்டருந்து வரும்னு!!!!
நீக்குமிக்க நன்றி நெல்லை
கீதா
ரப்பர் வேளாண்மை மாதிரி நிறைய தகவல்கள் இல்லை. காணொளி கோர்க்கலை. சில மலர்களின் படங்களுடன்கூடிய பதிவை எப்போதோ சுடச்சுட போட்டிருக்கலாமேன்னு நினைத்தேன். இப்போ லால்பாக்ல மாங்காய் விற்பாங்க. பலாப்பழ விற்பனையும் ஆரம்பித்திருக்கலாம். நெல்லை
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குநெல்லை, ரப்பர் வேளாண்மை பதிவு துளசி எழுதியது. நான் எழுதியது அல்ல.
நீக்குபூக்களை எதற்குக் காணொளி வேண்டும் என்று எடுக்கவில்லை. மேலும் அங்கு எடுக்கலாமோ கூடாதா என்ற பயம் இருந்தது ஆனால் எல்லோரும் மொபைலில் எடுத்ததால் நானும் கேமராவில் எடுத்தேன்.
எனக்கு பதிவு எழுத நேரம் ஒதுக்குவது என்பது கடினமாக இருக்கிறது, நெல்லை. இருக்கும் பதிவுகளையே இன்னும் முடித்துப்போட மனம் ஒத்துழைக்க மாட்டேங்குது....மனதில் பல்வேறு சிந்தனைகள்.... வீட்டு வேலைகள், மகனுக்காகச் சில தயாரிப்புகள் என்று வேலை....இப்போது கணினி பழுது...என் கணவரின் கணினியில் தான் அடிக்கிறென்.
அதுவும் படங்களை ஆர்கனைஸ் செய்து, என்று...எதை ;எபியில் போட்டோம் இங்கு போட்டோம் என்பதைத் தனிப்படுத்தி...இப்படி...நேரம் எடுக்கிறது. கணினியும் மிக மிக மிக ஸ்லோ. வயதாகிடுச்சு அதுக்கும்...என்னால் முடிந்ததை செய்கிறேன்.
பூக்களைப் பற்றிய விவரங்கள் இணையத்தில் இருக்கின்றன. எனக்குப் பரிச்சயமில்லாத பூக்கள். எனவே அனுபவம் இல்லை. இங்கு சும்மா பெயர்களுடன் படங்களைப் பகிர்ந்தேன் அவ்வளவுதான் நெல்லை...பதிவுகள் இல்லாமல் கேப் வேண்டாம் என்பதால்....பட உலா போல
மாங்காய் சரி, மாவடு கிடைக்குமா அங்கு? ஈரோடிலும் மாவடு ஒரு கிலோ 200 ரூ. அங்கு பலாப்பழம் முழுதாகக் கண்ணில் படவில்லை ஆனால் packed சுளைகள் பழமுதிர் நிலையத்தில் கிடைக்கின்றன. விலை கேட்க மறந்து போச்சு...
இங்கு நாங்க இருக்கற பகுதில கால் கிலோ ரூ 50
கீதா
லால்பாக் படங்கள் அழகாத்தான் இருக்கும் இன்னும் நிறைய வெரைட்டி இருந்தது.
பதிலளிநீக்குஆமாம் நிறைய....நான் எடுத்தது இன்னும் அடுத்து வரும்.
நீக்குஎடுக்கக் கூடாதோன்னு நினைத்தேன். அப்படித்தான் சொல்லப்பட்டது. ஆனால் இதுவே ரொம்ப பயந்து பயந்து எடுத்தேன். எல்லாரும் எடுத்தாங்க நானும் எடுத்தேன்...அதனால் சிலது விட்டுப் போச்சு....எடுத்தவை வரை போடுகிறேன்
மிக்க நன்றி நெல்லை
கீதா
அழகிய மலர்கள் பார்த்து ரசிக்க வைத்தது.
பதிலளிநீக்குரசித்ததுக்கு மிக்க நன்றி கில்லர்ஜி
நீக்குகீதா
மலர்களின் அணிவகுப்பு அருமை. அழகிய மலர்களின் என்கிற உல்லாசப் பறவைகள் பாடல் நினைவுக்கு வருகிறது. பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ பாடலும் மனதுக்குள் எட்டிப்பார்த்து "நானு?" என்கிறது!
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம் பூப்பூவா பூத்திருக்கு பாடல், அப்புறம் மலர்களே மலர்களே பாடல், எல்லாம் நினைவுக்கு வந்தது....இந்தப் பதிவுல கொடுக்கவில்லை அடுத்து இன்னும் வருமே அதுக்கு சொல்லலாம்னு...வேலை அதிகமா இருக்கு பதிவு போட்டாச்சு இப்ப...
நீக்குஉல்லாசப்பறவைகள் அந்தப் பாட்டு நினைவுக்கு வரவில்லை. கேட்டுப் பார்க்கிறேன்
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
மாடரேஷன்ல இன்னு என் ஒரு கமெண்ட் பாக்கின்னு நினைக்கிறேன்.
நீக்குஉல்லாச பறவைகள் பாடல்\https://www.youtube.com/watch?v=-ViphQ4X4l8
வெளியிட்டுவிட்டேன்....இடையில் வேலை ஓடிட்டேன்...
நீக்குபாட்டு கேட்கிறேன் நன்றி ஸ்ரீராம்
கீதா
அதென்ன, இந்தப் பூக்கள் எதெடுத்தாலும் ஐநூறு ரூபாயா? எல்லா பூக்களின் அருகேயும் ஐநூறு ரூபாய் போர்ட் தென்படுகிறது!
பதிலளிநீக்குஹாஹாஹாஹா இல்லை ஸ்ரீராம், 500 ரூ ன்னு போட்டிருக்கும் படம் கீழே இருப்பதில் பக்கவாட்டில் இருக்கு அதை நேரே எடுத்தது தான் முதலில் ரூபாயை முழுதும் காட்டும் படம்.
நீக்குகிட்டத்தட்ட இப்படியான பூக்கள் எல்லாம் 500 ரூ. சில 150 ரூபான்னும் இருந்தது அது எபிக்கு அனுப்பியதோடு அங்கு வந்திருக்கு.
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
கடைசிப் படத்தில் உள்ள பூ முகம் கழுவி பவுடர் பூசி இருக்கிறதா, ரங்கோலி கொண்டாடி இருக்கிறதா?!
பதிலளிநீக்குஹாஹாஹாஹா ..முன்ன எல்லாம் ஃபோட்டோன்னதும் உடனே ஓடிப் போய் பவுடர் அடிச்சிட்டு வந்து நிப்பாங்கல்ல அது போல இதுவும் ஃபோட்டோக்கு பவுடர் பூசிருக்கு போல!!!!
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
அத்தனை மலர்களுமே புதுமை...
பதிலளிநீக்குமிக்க நன்றி நாஞ்சில் சிவா..
நீக்குகீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. மலர்களின் விதவிதமான கலர்கள் தாங்கள் எடுத்த கோணங்களில் அழகாக ஜொலிக்கிறது. ஆர்கிட் வகைகளில் வண்ணத்துப் பூச்சியின் அமைப்பில் உள்ள பூக்களின் படங்கள் மிக அழகாக இருக்கிறது. வெள்ளை மலர்கள் "நாங்கள் மட்டும் அழகில் சளைத்தவர்களா ?" எனக் கேட்கிறது. இறுதியாக இடம் பெற்ற பூக்களின் படங்கள் "இந்த அழகு என்ற சொல்லிற்கு நாங்கள்தான் மறு வடிவமாக்கும்" என்கிறது. அத்தனையும் ரசித்தேன்.
நானும் லால்பாக் சென்ற போது அங்கு படங்களை(மலர்களை அல்ல.) என் கைப்பேசியில் எடுத்து வைத்துள்ளேன். ஆனால் உங்களுடையதைப் போல் படங்கள் துல்லியமாக இருக்காது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலாக்கா உங்கள் வர்ணனை ரொம்ப அருமை கற்பனையுடன் விரிகிறது!!! உங்கள் கருத்தையும் ரசித்தேன் கமலாக்கா...
நீக்குபதிவில் பூக்களின் படத்துடன் கருத்து, பாடல் சொல்ல நினைத்து முடியவில்லை இறுதியில்....
உங்கள் படங்களும் அருமையா இருக்கும் கமலாக்கா...கைப்பேசி பல சமயங்களில் புகைப்படக் கருவியை விட நன்றாக எடுக்கிறதோ என்று தோன்றும். போடுங்க கமலாக்கா...அதுங்க வருத்தப் படும் முன் போட்டுருங்க!!!!
ஆனாலும் எனக்கு என் மூன்றாவது விழிதான் பிடிச்சிருக்கு!!! ...
என்னுடைய படங்கள் என்னவோ இந்த முறை ஓரளவு நன்றாக வந்திருக்கின்றன. எனக்கே ஆச்சரியம்!! என் மூன்றாவது விழி அப்படியாச்சே...நல்ல சூரிய ஒளி வெளிச்சம் இருந்தால் கிட்டப்பார்வையில் ஓரளவு நன்றாக வரும்...இல்லைனா சரியா வருவதில்லை
மிக்க நன்றி கமலாக்கா
கீதா
க ஹ... உங்களைவிட வேகமாக பதிவு எழுதுவாரே... இன்னும் லால்பாக் பதிவு எழுதவில்லையே... நெல்லை
நீக்குஆகா...! அழகான மலர்கள்...
பதிலளிநீக்குஆம் டிடி அழகான மலர்கள்.....பார்க்க அத்தனை அழகா இருந்தன அத்தனையும்..
நீக்குமிக்க நன்றி டிடி
கீதா
அழகு
பதிலளிநீக்குமிக்க நன்றி கரந்தை சகோ!!
நீக்குகீதா
அழகான மலர்கள் நானும் புற்களில் , காட்டிச்செடிகளில் பூத்து இருக்கும் பூக்களை இன்று எடுத்தேன். மகள் வீட்டுக்கு முன்.
பதிலளிநீக்குலால்பாக் பூக்கள் படங்களை அதன் பேருடன் கொடுத்து இருப்பது அருமை.
பூக்கள் அழகாய் இருக்கிறது.
நீங்களும் எடுத்ததை பகிர்வீங்க. என் கணினியில் குறுக்கும் நெடுக்குமாகக் கோடுகள்....கறுப்பு சாந்துப் பொட்டு வைத்தது போல் ஒன்று என்று திரையில் வருவதால் ஒரு சில கருத்துகள் அதாவது கோடுகளுக்கு மேலே வருவது மட்டுமே பார்த்துக் கருத்திட முடிகிறது. அதனால்தான் சென்ற நாட்களில் வலைக்கு வர முடியவில்லை இப்பவும்....கோடுகள் மறைக்கும் கருத்துகளை வாசிக்கவோ, நான் பதில் சொல்வதோ முடியலை......இப்ப வந்திருக்கும் கருத்துகளுக்குக் கொடுக்க முடியும் இனி வந்தால் வாசிப்பதும் கடினம் கொடுப்பதும் கடினம் கோடுகள் மறைத்துவிடும் என்பதால்....
நீக்குமிக்க நன்றி கோமதிக்கா
கீதா
மிக்க நன்றி கோமதிக்கா.
என் பின்னூட்டம் காணவில்லையே!
பதிலளிநீக்குஅக்கா அதான் மேலே உள்ள பதில்தான் இப்ப இந்தக் கருத்து, அடுத்த ஜெ கே அண்ணாவின் கருத்துவரை தெரியும் ஆனால் அதன் கோடுகள் மறைத்துவிடும் ....திரையைச் சரி செய்ய வேண்டும்.
நீக்குபயணத்தில் இருந்ததால் மொபைலில் எங்கள் தளத்திற்குச் செல்ல முடிவதில்லை.
இப்ப கருத்துகள் போட்டாச்சு கோமதிக்கா
மிக்க நன்றி'
கீதா
பதிலளிநீக்குநலம் விசாரிக்க வந்தேன் மகராசி!
ஜெ கே அண்ணா நான் நலம். பயண்த்தி ல் இருந்தேன். மற்றும் கணினிப் பிரச்சனை....
நீக்குநலம் விசாரித்தமைக்கு மிக்க நன்றி
கீதா
Being in Bangalore missed the show. Happy to see itbin your space.
பதிலளிநீக்குThank you vasumathy
நீக்குgeetha