வெள்ளி, 31 மார்ச், 2023

சில்லு சில்லாய் - 8 - கிழிஞ்சுது போ

 

கிழிஞ்சுது போ 1


யாராக்கும் வந்திருக்கறவா, இவா எல்லாம்?”

ஒன் (கொள்ளுப்) பேரனோட கூட்டாளிங்க

"கூட்டாளிகளா சரி சரி" என்று சொல்லிவிட்டு, பாட்டி குரலைத் தழைத்துக் கொண்டாள்.

“அந்தப் பையனும், பொண்ணும் பாக்க நன்னா இருக்கா ஆனா ஏன் இப்படிக் கிழிசலை போட்டுண்டு வந்திருக்குகள்.” என்று சொல்லிவிட்டு தனக்குத்தானே சொல்லிக் கொண்டார் “அவாத்துல ரொம்ப கஷ்டம் போலருக்கு. எப்படி படிக்கறதுகளோ? செலவாகுமே. நம்ம குழந்தைக்குச் செலவாகறதே. அதுகளுக்கு அப்பா இருக்காரோ இல்லையோ? பாவம்…பகவான் இப்படி ஏன் சோதிக்கறாரோ… பகவானே அதுகள் நன்னா இருக்கணும்” என்று மேலே பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு என்னிடம்

“அதுகளுக்கு நன்னா வயறார சாப்பாடு போட்டுட்டு கட்டியும் குடு”

எனக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. உள்ளே வந்த என் மகனிடம் இதைச் சொன்னதும் அவனும் சிரிக்கத் தொடங்கினான்.

“அதுகள் பாவம்னு சொன்னா அதுக்கு இப்படியா சிரிப்பா, போறும் போ. நேக்கென்ன வேணும்?”

“ஹையோ பாட்டி…கொஞ்சம் சும்மாரு….”

வந்தவர்களுக்குத் தமிழ் சுத்தமாகப் புரியாது. அறையில் அவர்கள் கணினியில் ரொம்ப மும்முரமாகப் பாட சம்பந்தமாகத் தேடிக் கொண்டும் விவாதம் செய்து கொண்டும் இருந்தனர். சாப்பிட்டுவிட்டுச் சென்றதும்…

“பாட்டி அவா ஒன்னும் ஏழைலாம் இல்ல. நல்ல பணக்காராதான். ஜீன்ஸ் பான்டை இப்படிக் கிழிச்சுப் போட்டுக்கறதுதான் இப்ப ஃபேஷன். அங்கங்க நூல் தொங்கணும்!!”

“போறும் போ என்ன ஃபேஷனோ…..ஆண் பிள்ளைதான் கிழிச்சு விட்டிருண்டுருக்குன்னா பொண்ணும்னா கண்ட இடத்துல கிழிச்சு விட்டிண்டிருக்கு….கிழிசலை போட்டுண்டா தரித்ரம்னு பெரியவால்லாம் சொல்லியிருக்கா…..தரித்ரம் வந்திடும்னும் சொல்லுவா. இதுகள் என்னவோ கிழிசலை போட்டிண்டிருக்கு…கலிகாலம்.”

“விடு பாட்டி…”

“புதுச வாங்கி இப்படிக் கிழிச்சுவிட்டுப்பாளா இல்ல இப்படிக் கிழிஞ்சேதான் விக்கறதோ?”

“அப்படியேதான் கிடைக்கிறது. அதுக்குப் பேர் Ripped Jeans

"நான் என்னத்த கண்டேன்" பாட்டி தனக்குள் அந்தப் பெயரை திரும்பத் திரும்பச் சொல்ல முயற்சித்தார்.

அப்பா காய்ந்த துணிகளை எடுத்துக் கொண்டு வந்தார். மகனின் கிழிந்த ஜீன்ஸும் இருந்தது. பாட்டியின் கண்ணில் பட்டுவிட்டது ஜீன்ஸ்.

“ஏண்டா குழந்தே நீயுமா நாகரீகம்ன்னு கிழிச்சு விட்டுண்டுருக்கியா?  ….என்ன கன்றாவியோ”

“ஹையோ பாட்டி, நான் அதெல்லாம் போட்டுக்கறதில்ல. போட்டு போட்டு கிழிஞ்சாச்சு. அதை நான் அம்மாகிட்ட அரை Pant ஆ தைச்சுத் தரச் சொல்லியிருக்கேன். வீட்டுல போட்டுக்க….”

"சமத்து. என் கொள்ளுப் பேரனாச்சே" பாட்டியின் முகத்தில் பெரிய புன்னகை. பாட்டிக்குச் சமாதானம், தன் கொள்ளுப் பேரன் கிழிந்த ஜீன்ஸ் போட்டுக் கொள்ளவில்லை என்று.

“பாட்டி, அதுக்கு ஒரு பேர் சொன்னேனே நீ கூட அதைச் சொல்லி சொல்லிப் பாத்தியே…..சொல்லு பாக்கலாம்!”

“போறும் நான் கத்துண்டு என்ன பண்ணப் போறேன்.....கிழிஞ்சுது போ…!!!!”

(இது நடந்தது 12, 13 வருடங்களுக்கு முன்)

இதை எழுதி முடித்த போது, கதவருகில் “ஆன்டி” என்ற குரல் கேட்டது. எங்களுக்கான மின்சார பில்லை வெளியிலிருக்கும் மீட்டர் பெட்டியிலிருந்து எடுத்துக் கொண்டு வந்திருந்தாள் மாடி வீட்டுப் பெண். அவள் அணிந்திருந்த ஜீன்ஸ் முட்டியில் பெரிதாகக் கிழிந்து நூல் நூலாகப்  பிரிந்திருந்தது.

சமீபத்தில் நிறைய பேர் முட்டியில் கிழிந்திருக்கும் ஜீன்ஸ் போட்டுக் கொண்டு வருவதைப் பார்க்கிறேன். 

"காலம் மாறவே இல்லையோடி குழந்தே! கிழிஞ்சுது போ!!! கலி முத்தியாச்சு. " பாட்டியின் குரல் ஒலிப்பது போல் தோன்றியது.

படம் இணையத்திலிருந்து...(பின்ன மேல் வீட்டுப் பெண்ணையோ, இப்படிப் போட்டுக் கொண்டு திரியறவங்களையா படம் பிடிக்க முடியும்!!!! கிழிஞ்சுது போ


***********

கிழிஞ்சுது போ 2

 

அண்ணா சொல்லுங்கண்ணா...எப்படி இருக்கீங்க?”

அது இருக்கட்டும், ஏம்மா இப்பல்லாம் பொண்ணுங்க இப்படி இருக்காங்க?”

ஏண்ணா என்னாச்சு?”

நம்ம லக்ஷ்மி தெரியும்லியா, புலம்பறா அவ பையன் சாரதிக்குப் பொண்ணு அமையவே மாட்டேங்குதுன்னு. 35 வயசு. பொண்ணுக்கும் அமையல

! அந்த விஷயமா…..ஆமாம்….35  சொல்றீங்க….40 எல்லாம் கூட இருக்காங்க…பையனுங்க”

பொண்ணு வீட்டு சைட்லருந்து ஏகப்பட்ட எதிர்பார்ப்பு

நிறைய பேர் வருத்தப்படறாங்கதான்...

பாவம் லக்ஷ்மி. பொண்ணுக்கும் அமையல, பிள்ளைக்கும் அமையல.  உனக்குத் தெரிஞ்சுருக்கும்னு நினைக்கறேன். பொண்ணு டாக்டரேட். அஸிஸ்டென்ட் ப்ரொசரா இருக்கா. என்ன க்வாலிஃபிக்கேஷன் இருந்து என்ன? ஒண்ணும் செட் ஆக மாட்டேங்குது

ஹாஹாஹா….அண்ணா, அவளும் எதிர்பாக்கறால்ல? சாரதியும் தான் ஏதேதோ எதிர்பார்ப்புகள். கிட்ட வரப்ப அவன் வேண்டான்றான். அப்புறம் ஏண்ணா மத்த பொண்ணுங்ககுத்தம் சொல்லணும்?”

நீ என்ன சொல்ல வரே?”

“என்ன அண்ணா புரியலையா? சாரதி தங்கையும் பையன்கிட்ட அது இருக்கணும் இப்படி இருக்கணும், சம்பள, தகுதி அப்படி இருக்கணுக்கணும்னு எதிர்பார்க்கறாதானே? அதே மாதிரிதான் சாரதிக்குப் பார்க்கற பொண்ணுங்களும் எதிர்பார்க்கறாங்க. சாரதியும் கண்டிஷன்ஸ் போட்டிருக்கான். நல்லா இருக்கறதையும் வேண்டான்றான்.  நம்ம பொண்ணு, பிள்ளைனா மட்டும் ஒண்ணு......?”

என்ன நீ? இப்படிச் சொல்ற? உனக்கும் ஒரு பையன் இருக்கான். நினைவுருக்கட்டும்ஆமா அவனுக்கும் வயசாகியிருக்குமே…” 

நடக்கும் போது நடக்கும்ண்ணா.”

அப்ப நீ இன்னும் பாக்கவே தொடங்கலையாகிழிஞ்சுது போ…..இதான் நீங்கலாம் பண்ற மிஸ்டேக். பையன்கிட்ட சொல்லணும். கேக்கணும். பேசணும்.”

அண்ணா, நீங்க என்ன சொல்ல வந்தீங்களோ அதைச் சொல்லுங்க..”

இப்படித்தான் இந்தக் காலத்து பெத்தவங்க எல்லாம்…. என்னத்த சொல்ல? பசங்ககிட்ட பேசி காலா காலத்துல பண்ண வேண்டாமா?” அவர் விடுவதாக இல்லை.

“பெத்தவங்க எல்லாம் பாக்கலைனா நினைக்கறீங்க? பாவம் அவங்க. அண்ணா காலம் மாறிப் போச்சு. பசங்களோட எதிர்பார்ப்புகள் அதுக்கேத்தாப்ல மாறிடுச்சு”

நீயும் இந்தக் காலத்து மாதிரிதான் இருக்கஎன்னத்த சொல்ல

ஹாஹாஹா....சரி அதிருக்கட்டும், லக்ஷ்மி அக்கா பொண்ண உங்க பையனுக்கே பாக்கலாமே!... எனக்குத் தெரிஞ்சு இன்னொரு பொண்ணு கூட இருக்கா. அவளும் எம் டெக் பண்ணிட்டு டாக்டரேட் பண்ணின பொண்ணு. உங்க பையன் போஸ்ட் டாக்டோரல்! பெரிய டெசிக்னேஷன்லயும் இருக்கான், அவனுக்கும்தான் வயசாகுது….பாக்கலாமா?”

“நீ வேற…..அவன் எங்க...பதிலே சொல்லமாட்டேன்றான். பொண்ணும் கல்யாணம்னா பேசவே மாட்டேன்றாளே!!!!!!!!!!!!!!

"அண்ணா நீங்கதானே இப்சொன்னீங்க…."(மேலே உள்ள அவரது உரையாடல்கள் கருப்பு வண்ணம் Recap!!)

"கிழிஞ்சுது போ! உங்கிட்ட போய் என் ஆத்தாமைய சொன்னேன் பாரு!!!!"------கீதா

 


28 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. மினி கதை சுவாரஸ்யமாக இருக்கிறது.அந்தக் காலத்திற்கே கொண்டு சென்று விட்டீர்கள். அந்தக் காலத்தில் பிச்சையெடுப்பவர்கள்தான் இப்படி கிழிந்த ஆடைகளை போட்டுக் கொள்வார்கள். அது கூட ஒரு அனுதாபத்திற்குத்தான் என அப்போது நாங்கள் பேசிக் கொள்வோம். தங்கள் அன்றாட பிழைப்புக்காக அதை முடித்ததும் இருப்பதில் நல்ல ஆடைகளை எடுத்து அணிந்து கொள்வார்களோ என்னமோ? எனவும் பேசியிருக்கிறோம் . இப்போது காலம் மாறிவிட்டது. இது ஒரு பேஷனாகி விட்டதை அவர்களே ஜீரணம் செய்ய முடியாதபடிக்கு... :)

  /படம் இணையத்திலிருந்து...(பின்ன மேல் வீட்டுப் பெண்ணையோ, இப்படிப் போட்டுக் கொண்டு திரியறவங்களையா படம் பிடிக்க முடியும்!!!! கிழிஞ்சுது போ/

  ஹா ஹா ஹா. இந்த வார்த்தையும் (கிழிஞ்சுது போ) இங்கு வந்து பொருத்தமாக அமர்ந்து விட்டது பாருங்கள். ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹாஹா வித்தியாசம் தெரியாத அளவு ஆகிவிட்டதுன்றீங்களா கமலாக்கா...

   நிஜமாகவே யாசிப்பவர் ஒருவர் இதைச் சொன்னார். நாங்கதான் வேற வழி இல்லாம கிழிஞ்சத போட்டுட்டு போக வேண்டியதா இருக்குன்னா பணக்கார பசங்களும் எங்களுக்குப் போட்டியா வந்திருச்சேன்னு!!!!! யப்பா உங்க தருமத்த மாத்தி போட்டுறாதீங்க....!!!! இது எப்படி இருக்கு!

   //ஹா ஹா ஹா. இந்த வார்த்தையும் (கிழிஞ்சுது போ) இங்கு வந்து பொருத்தமாக அமர்ந்து விட்டது பாருங்கள். ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

   ரசித்ததற்கு மிக்க நன்றி கமலாக்கா

   கீதா

   நீக்கு
 2. இப்போதைய நாட்டு நடப்பை அப்படியே சொல்லி விட்டீர்கள் கீதா. போன ஞாயிறு ஒரு குழந்தைக்கு பிறந்த நால் விழா அதற்கு போய் இருந்தோம், அங்கு வந்த நம் நாட்டு பெண் படிக்கும் பெண் இப்படி முட்டியில் கிழிந்த ஜீன்ஸ் போட்டு வந்தார்.

  என் மகன் கிழிய வில்லை ஆனால் கிழிந்து இருப்பது போல பெயிண்ட் செய்த ஜீன்ஸ் போட்டு கொண்டது பேரன் கவினுக்கு பிடிக்கவில்லை.

  பாட்டி உரையாடல் எனக்கு பிடித்தது.

  “//ஹையோ பாட்டி, நான் அதெல்லாம் போட்டுக்கறதில்ல. போட்டு போட்டு கிழிஞ்சாச்சு. அதை நான் அம்மாகிட்ட அரை ஆ தைச்சுத் தரச் சொல்லியிருக்கேன். வீட்டுல போட்டுக்க….”//

  நல்ல சமத்து பையன்.

  அண்ணன் Pant யை கட் செய்து மினி ஸ்கர்ட் தைத்து இருக்கிறேன், என் பெண்ணுக்கு. (தைத்து பழகும் போது) மகள் ஆசையாக போட்டு கொண்டாள்.

  “ஹாஹாஹா....சரி அதிருக்கட்டும், லக்ஷ்மி அக்கா பொண்ண உங்க பையனுக்கே பாக்கலாமே!... எனக்குத் தெரிஞ்சு இன்னொரு பொண்ணு கூட இருக்கா. அவளும் எம் டெக் பண்ணிட்டு டாக்டரேட் பண்ணின பொண்ணு. உங்க பையன் போஸ்ட் டாக்டோரல்! பெரிய டெசிக்னேஷன்லயும் இருக்கான், அவனுக்கும்தான் வயசாகுது….பாக்கலாமா?”

  “நீ வேற…..அவன் எங்க...பதிலே சொல்லமாட்டேன்றான். பொண்ணும் கல்யாணம்னா பேசவே மாட்டேன்றாளே!!!!!!!!!!!!!!

  "அண்ணா நீங்கதானே இப்ப சொன்னீங்க…."(மேலே உள்ள அவரது உரையாடல்கள் கருப்பு வண்ணம் Recap!!)

  "கிழிஞ்சுது போ! உங்கிட்ட போய் என் ஆத்தாமைய சொன்னேன் பாரு!!!!"

  நல்லா ரசித்து படித்து சிரித்தேன். மனிதர்கள் எப்படி எல்லாம் இருக்கிறார்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அங்கு வந்த நம் நாட்டு பெண் படிக்கும் பெண் இப்படி முட்டியில் கிழிந்த ஜீன்ஸ் போட்டு வந்தார்.//

   ஹாஹாஹா அதான் இதுக்கெல்லாம் ஊரு நாடுன்னு எதுவும் கிடையாது.

   //நல்ல சமத்து பையன்.//

   ஹிஹிஹிஹி நன்றி கோமதிக்கா...

   கீதா

   நீக்கு
  2. அண்ணன் Pant யை கட் செய்து மினி ஸ்கர்ட் தைத்து இருக்கிறேன், என் பெண்ணுக்கு. (தைத்து பழகும் போது) மகள் ஆசையாக போட்டு கொண்டாள்.//

   அட!!! நல்ல ஐடியா....நான் ஸ்கர்ட் தைத்தது இல்லை. ஆனால் பைகள், தலையணை உறை அதில் பூக்கள் சூடு பாத்திரங்கள் வைக்க என்று இப்படிச் செய்ததுண்டு.

   //நல்லா ரசித்து படித்து சிரித்தேன். மனிதர்கள் எப்படி எல்லாம் இருக்கிறார்கள்!//

   மிக்க நன்றி கோமதிக்கா ரசித்துப் படித்து சிரித்தமைக்கு.

   கீதா

   நீக்கு
 3. சுவாரஸ்யமான உரையாடல் தலைப்பு சூப்பர்.

  ஆம் கலிகாலம்தான் இப்படி எல்லாம் உடையணிகின்றார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா கில்லர்ஜி, இன்னும் சில சொல்லவில்லை விட்டுப் போச்சு. உரையாடல் என்ன நடந்ததோ அதோடு கொஞ்சம் கலந்து கட்டி!!

   //சுவாரஸ்யமான உரையாடல் தலைப்பு சூப்பர்.//

   மிக்க நன்றி கில்லர்ஜி

   கீதா

   நீக்கு
 4. கிழிசல் ஜீன்ஸ்.. இதே கருத்தில் நானும் 'மாறிய காலம், மாறாத கோலம்' என்று ஒரு கதை எழுதியிருக்கிறேன். இன்றைய கல்யாணங்கள் டிலே பற்றி நன்றாக அலசியிருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் பானுக்கா நீங்க எழுதியிருப்பது தெரியும்....பானுக்கா முதலில் அதை இங்கு சொல்லலாம் என்று நினைத்து, அப்புறம் எபிக்காக நானும் இரண்டு எழுதி இன்னும் முடிக்காமல் இருக்கும் கதைகள் - கல்யாணக் கதைகள்தான் - முடித்து அனுப்ப இருப்பதால் அங்கு சொன்னால் இன்னும் பலர் பார்ப்பாங்களே என்ற எண்ணத்தில் விட்டேன்....

   //இன்றைய கல்யாணங்கள் டிலே பற்றி நன்றாக அலசியிருக்கிறீர்கள்.//

   மிக்க நன்றி பானுக்கா

   கீதா

   நீக்கு
 5. வணக்கம் சகோதரி

  நீங்கள் எழுதியுள்ள கிழிஞ்சுது போ இரண்டாவது பகுதியும் அருமை.( இது ஒருவிதமான மனிதர்களின் மன கிழிசல்கள்..) இதையும் நன்றாக எழுதியுள்ளீர்கள். ரசித்துப் படித்தேன். ஆமாம்.. எல்லோருமே எப்போதும் ஊருக்குத்தான் உபதேசம். தனக்கென்று வரும் போது அதில் ஒரு நியாயத்தை கற்பித்து கொண்டு விடுவார்கள். அதுபோல் நம்முடைய நியாயத்தை காது கொடுத்து கேட்பதில்லை. பிறத்தியார்க்கு என்றால் நாக்கு நன்றாக தடம் புரண்டு வார்த்தைகளை ஜோடித்து வேறு தரும். என்ன உலகமோ என்ற அலுப்பு வருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் எழுதியுள்ள கிழிஞ்சுது போ இரண்டாவது பகுதியும் அருமை.( இது ஒருவிதமான மனிதர்களின் மன கிழிசல்கள்..) இதையும் நன்றாக எழுதியுள்ளீர்கள். ரசித்துப் படித்தேன். //

   மிக்க நன்றி கமலாக்கா

   ஆமாம் ஊருக்கு உபதேசம் தங்கள் வீட்டிற்கு வேறு என்று இருப்பவர்களைப் பார்க்கிறேன் அதான்...

   //அதுபோல் நம்முடைய நியாயத்தை காது கொடுத்து கேட்பதில்லை. பிறத்தியார்க்கு என்றால் நாக்கு நன்றாக தடம் புரண்டு வார்த்தைகளை ஜோடித்து வேறு தரும். என்ன உலகமோ என்ற அலுப்பு வருகிறது. //

   உண்மை கமலாக்கா....இரு காதுகள் இருக்கே..!!! வெளிய தள்ளி விட்டுருவோம்!! ஹாஹாஹா

   மிக்க நன்றி கமலாக்கா

   கீதா

   நீக்கு
 6. எனக்கும் ஆசை வருகிறது.  நானு கிழிந்த ஜீன்ஸ் போட்டுக்கொண்டு அலுவலகத்துக்கு செல்ல ஆசை.  சரி, வேண்டாம் என்றால் ஒரு நகருலாவாவது கிழிந்த ஜீன்ஸ் போட்டுக்கொண்டு போய்விட்டு வரவேண்டும்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹாஹா...ஸ்ரீராம் நீங்க போட்டுட்டுப் போறப்ப நான் ஒரு க்ளிக் எடுத்து முட்டிய மட்டும்தான் ஹிஹிஹி....முன்னாடி எல்லாம் குமுதத்துல அப்படி போட்டு இது யாருடைய கண்ணு, உதடுன்னு கேப்பாங்களே அப்படி இது ஒரு பிரபல பதிவரின் .....யாருன்னு கண்டுபிடிங்கன்னு போட்டா.....ஹிஹிஹிஹி

   கீதா

   நீக்கு
 7. ஆனால் கீதா..   இந்தக் கால பாட்டிகள் ரொம்ப விவரம்.  நம்மைவிட அப்டேட்டாக இருப்பார்கள்.  சமயத்தில் நமக்கே சொல்லித்தருவார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹாஹா....ஆமாம் ஸ்ரீராம். ரொம்பவே அப்டேட்டட்!!! அதே அதே..

   மிக்க நன்றி ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
 8. கிழிந்த ஜீன்ஸ் போலவே பின்பக்கம் அபாயகரமான அளவு இறங்கும் ஜீன்ஸ்.  தப்பித்தவறி நம்மக்குப் பின்பக்கத்தைக் காட்டிக்கொண்டு அவர்கள் முன்னால் குனிந்து விட்டால் போச்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆ!!! அதேதான். ஆண்களும் பெண்களும் இருவருமே அப்படி அணிகின்றார்கள். நான் ரயில் பயணத்தில் நிறைய பார்த்திருக்கிறேன் ஸ்ரீராம். ஆண்கள் இடுப்பில் அணியும் கயிறு உள்ளாடை கொஞ்சம் தெரியும் அளவு அணிகின்றார்கள்.....சில ச்மயம் இரண்டும் கீழே தணியும் பாருங்க....ஆஆஆ...

   மிக்க நன்றி ஸ்ரீராம் கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 9. கல்யாணக் கஷ்டங்கள் பலவகைப்படும் கீதா.  நான் கூட அதுபற்றி எழுதவேண்டும் என்று நினைத்து தள்ளிக்கொண்டே போகிறது.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் பல வகை இருக்கு. நீங்க எழுதுங்க ஸ்ரீராம். வியாழன் முதல் பகுதிக்கு ஒரு பதிவு ஆச்சு பாருங்க....ரெண்டு மூன்று வியாழன் என்ன அதுக்கும் மேலே கூடத் தேத்திடலாம் அவ்வளவு இருக்கு விஷயங்கள்!!!

   நான் ஒரு கதை எழுதி வைத்ததை இப்ப உள்ள இறங்கி எழுதி முடிக்கணும்னு ஒரு வீராப்புல தொடங்கியிருக்கிறேன் பார்ப்போம்...

   மிக்க நன்றி ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
 10. ஆனால் நிச்சயம் ஆண், பெண் என்று ஒருபக்கம் மட்டும் தவறு சொல்லவே முடியாது.  இரண்டு பக்கமும் தவறு இருக்கிறது.  திருமணம் ஆகாமல் இருக்கும் பையன்களுக்கோ, பெண்களுக்கோ வாய்ப்பே வராமலா இருந்திருக்கும்?  கட்டாயம் வந்திருக்கும்.  மிஸ் செய்திருப்பார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் இரு பக்கமுமே இருக்குதான். வாய்ப்பு வந்திருக்கும். அதுவும் ஒரு கதை இருக்கு ஸ்ரீராம்.

   அதான் சொல்கிறேனே....நான் முடிக்காம வைச்சதுல இப்படிக் கல்யாணம் பத்தின கதைகளும் இருக்கு.....இப்ப பானுக்கா எழுதின கதைகளில் கல்யாணக் கதைகள் என்று பல இருக்க அதை எல்லாம் தொகுத்து புத்தகமா கொண்டு வராங்க. என்னோடுது பார்த்தா....எழுதி முடிக்காம 4 இருக்கு....அதை முடிக்கப் பார்க்கிறேன்...

   மிக்க நன்றி ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
 11. "Ripped Jeans" ஐ பாட்டி தமிழில் சரியாகத்தான் மொழி பெயர்த்திருக்கிறார்கள் "கிழிஞ்சுது போ" என்று!!...

  பதிலளிநீக்கு