திங்கள், 6 மார்ச், 2023

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 19 - சாம்பல் நாரை - Grey Heron

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - வீட்டருகே இருக்கும் இரு ஏரிகளில் நடைப்பயிற்சி செய்யும் ஒவ்வொரு தினமும் பார்த்து ரசித்த பறவைகள் ஒவ்வொன்றைப் பற்றியும் படங்களுடன் ஒவ்வொரு பதிவில். 

ஹெரான் வகையில் பல உள்ளன. நான் பார்த்த மூன்று வகைகளில் - Purple Heron (செந்நாரை), Grey Heron (சாம்பல் நாரை), Pond Heron (குளத்துக் கொக்கு) - முன்பு செந்நாரை (Purple Heron) பற்றி நான் எடுத்த படங்களுடன் தகவலும் பகிர்ந்திருந்தேன்.  இப்போது அதே வகையைச் சேர்ந்த சாம்பல் நாரை - GREY HERON

ஏதோ என் மூன்றாவது விழிக்கு எட்டிய வரையில், எனக்குப் புகைப்படக் கலை தெரியாவிட்டாலும் புகைப்படங்கள் எடுக்கும் ஆர்வத்தில் நான் ரசித்து எடுத்தவற்றைப் பகிர்கிறேன். மகனுக்காக வாங்கியிருந்த, சலீம் அலி அவர்கள் எழுதிய "இந்தியப் பறவைகள் புத்தகம் மற்றும் இணையத்தில் வாசித்ததிலிருந்து தெரிந்து கொண்டதையும் இங்கு பகிர்கிறேன். நான் பார்த்ததில் அறிந்தவை கறுப்பு வண்ணத்தில் இருப்பவை. .....ஓவர் டு சாம்பல் நாரை

இப்படி அசையாமல் நின்று கொண்டே இருக்கும்...போரடிக்காதோ?

பாருங்க நான்தான் சாம்பல் நாரை. என் உறவுக்கார செந்நாரை தன்னைப் பத்தி ரொம்பவே சொல்லிருக்குமே. அதுக்குத் தன் குடும்பம் ரொம்ப அழகுன்னும், தன் நிறத்தைப் பத்தியும் பெருமை. நாங்களும் அழகுதான். எங்க நிறம் நல்லாதானே இருக்கு இல்லையா? 

எங்களுக்கும் நீர் நிலைகள் பக்கம்தான் வாழப் பிடிக்கும். நாங்க செந்நாரை போல எங்களை மறைச்சுக்கிட்டு வாழ மாட்டோம். எல்லாரும் எங்களைப் பார்க்கறா மாதிரிதான் இருப்போம். நாங்களும் உயரமா, ஒல்லியா, நீண்ட வளைந்த கழுத்தோடும் நீண்ட கால்களோடும் இருப்போம். பாக்கப் போனா நாங்க செந்நாரையை விடக் கொஞ்சம் பெரிய சைஸ். (ஆனால் என் கண்ணில் செந்நாரைகள் கொஞ்சம் பெரிதோ என்ற எண்ணம்)

எங்களை நதியன், நாராயணப் பட்சி, நரையான், கொய்யடி நாரை, கருநாரை, பெருங்கொக்கு, சாம்பல்கொக்கு ன்னும் சொல்றாங்க. 

நாங்க சாப்பிடுவது  மீன், தவளை, தேரை, பாம்புகள், பல்லிகள், சிறு பாலூட்டிகள், மற்றும் சிறு பறவைகள். அதுக்காக அசையாம ஆழமில்லாத தண்ணீரில் பல மணி நேரம் கூட நிற்போம். இரையை அலகில் பிடித்தவுடன் தலையினை ஆட்டி அவற்றை செயலிழக்கச் செய்தும் அப்படியேவும் முழுங்குவோம். சில சமயம் மெதுவே இரையை பின்தொடர்ந்து செல்லவும் செய்வோம். இதோ இப்படித்தான் மெதுவாக இரையின் பின் நடப்போம்..(அது கால்களை எடுத்து வைக்கும் அழகே அழகு. நாட்டியம் போன்று! தண்ணீரில் இரைக்காக நடந்து செல்லும் காணொளி. நேரமிருந்தால் பாருங்க)

எங்க இனம் அழியக் கூடாதில்லையா? இப்பதான் அதாவது ஃபெப்ருவரிலருந்து ஜூன் வரை எங்க இனப்பெருக்கக் காலம்.

நாங்க மரங்கள் மேல் குச்சி எல்லாம் பொறுக்கி அடுக்கி அல்லது காய்ந்த கோரைப் புற்கள் மேல், அல்லது மரக்கிளைகளில் கூட்டம் கூட்டமாகக் கூடு கட்டுவோம். சில சமயம் என் சொந்தக்காரங்க செந்நாரைகள் கட்டியிருக்கும் கூட்டையும் பயன்படுத்திக் கொள்வோம். இப்படிக் கூட்டம் கூட்டமாகக் கூடுகள் இருக்கும் இடம் ஹெரான்ரி காலனி. சில இடங்களில் நதி, குளம், மற்றும் கடற்கரைகளிலும் கூட்டினை கட்டுவோம்.

எங்களில் ஆண் பறவைகள் கூடு கட்டத் தேவையான குச்சிகள் பொருட்கள் எல்லாம் கொண்டு தரும், பெண் பறவைகள் அழகா அடுக்கிக் கூடு கட்டும்.

ஒரு வருஷம் கட்டின கூடு கலையாம இருந்தா அதே கூட்டுலதான் அடுத்த வருஷமும் அதைக் கூடக் கொஞ்சம் பெரிசா கட்டிக் கொண்டு குஞ்சு பொரிப்போம்.

எங்க இனப்பெருக்கக் காலம் சுவாரசியமாக இருக்கும். ஜோடிகளைத் தேர்ந்தெடுத்த பின் ஒரே ஒரு இனப்பெருக்கக் காலம் வரை ஒன்றாக இருப்போம், பெரும்பாலும் ஃபெப்ருவரி மாதம் தொடக்கம் முதல் மே, ஜூன் தொடக்கம் வரை. (நான் பார்த்த வரையில் மே மாதம் பகுதியிலேயே இவற்றைக் காண்பது அரிதாகிவிடும்) இணைதலை ஒரு சின்ன விழா போல நடத்துவோம். கூடு கட்டியதும், எந்தக் கூட்டை - சில சமயம் ஏற்கனவே கட்டின கூடுகள், மற்ற ஹெரான்கள் கட்டியிருக்கும் கூடுகள் இவற்றையும் பயன்படுத்துவோம் என்பதால் - ஆண் பறவை விரும்புகிறதோ அங்க இருந்து குரல் கொடுக்கும். பெண் பறவை வந்ததும், இறக்கையை விரித்து விரித்து அசைக்கும். (வரவேற்பாம்!)

அடுத்து ரெண்டும் எங்களின் சங்கேத பாஷையைப் பரிமாறிக் கொண்டு…..ஒரு வார்ம் அப் செய்யத் தொடங்குவோம். அதாவது கால்களை நீட்டி மடக்கி, கழுத்தை நேராக வைத்துக் கொண்டு சுருக்கி, முன்னே நீட்டி தலையை கால் பகுதி வரை கொண்டு சென்று தாடையை ஸ்னாப் செய்தல் இப்படி 20-40 முறை செய்வோம். (கிட்டத்தட்ட நடனம்னு சொல்லலாம். ஒரு சில பறவைகள் பெரும்பாலும் இனப்பெருக்க காலத்தில் இப்படி நடனம் செய்வது உண்டு)

நீட்டி மடக்கி முடித்ததும் இரண்டு பேரும் தாங்கள் ரெடி என்ற சங்கேத பாஷை பரிமாற்றம் செய்துக்குவோம். இரண்டும் ஒன்றை ஒன்று இறக்கையை வருடிக் கொண்டு அன்புப் பரிமாற்றம். அப்போது ஆண் பறவை பெண் பறவைக்கு ஒரு குச்சியை கொடுக்கும். (அன்புப் பரிசாம்!!!). பெண் பறவை அதை வாங்கிக் கூட்டில் செருகிக் கொள்ளும். இதைப் பார்த்ததும் ஆண் பறவைக்கு ஒரே குஷியாகி, இணைந்து, அடுத்து கொஞ்ச நாட்களில் பெண் பறவை முட்டை போட்டு….எங்களில் இருவருமே சேர்ந்துதான் முட்டையை 25-26 நாட்கள் அடைகாப்போம். குஞ்சுகளுக்கு இரண்டு பேருமே உணவு கொடுப்போம்.  எங்கள் இருவரில் ஒருவர், முதல் இருபது நாள் கூட்டிலேயே இருந்து கவனமாகப் பார்த்துக் கொள்வதுண்டு. குஞ்சுகள் 50 நாட்களில் பறக்கத் தொடங்கிவிடும்.

நாங்கள் பறக்கும் போது இறக்கைகளை ரொம்ப வேகமாக அடித்துக் கொள்ளாமல் மெதுவாகப் பறப்போம். ஆங்கில எழுத்தான "S" வடிவில் கழுத்தை மடித்து வைத்துக்கொண்டு பறப்போம். பறக்கும் காணொளி இதோ...

             https://youtu.be/xyV9d_KWl78                      https://youtu.be/lvLBe29iX5Y

இது குளிர்காலத்தில் பனி போர்த்தியிருக்கும் காலை வேளையில் எடுத்த படம். படத்தில் புகை போன்று படர்ந்திருப்பது தெரியும்...




இங்கு கொடுத்திருக்கும் காணொளிகள் - யுட்யூபில் நான் போட்டிருப்பவைதான் - தவிர யுட்யூபில் உண்டு. அதில் ஒன்றில் இதோ இப்படி உட்கார்ந்திருப்பவற்றை எடுத்த காணொளியில் இதன் பின்னில் இரு சாம்பல் நாரைகள் உட்காரும் இடத்திற்காகச் சின்னதாகப் போட்டியில் சத்தம் எழுப்பும். காகங்கள் கரைவது போன்றே இருக்கும்
https://youtu.be/lvLBe29iX5Y
இரு சாம்பல் நாரைகள் ஒரே செடியின் மீது உட்கார நினைக்க, ஒன்று துரத்த மற்றொன்று பறந்துவிடுகிறது
 
இப்படி சிறிய செடிகள், மரங்கள் மேல் ஆங்காகே அமர்ந்திருப்பதையும் பார்க்கலாம்

இப்போது நீர் நிலைகள் குறைந்து, கட்டிடங்கள் பெருகிப் போனதால் நாங்கள் அதற்கும் எங்களைப் பழக்கிக் கொண்டுவிட்டோம். நகரங்களிலும் வாழத் தொடங்கிவருகிறோம், மீன்கள் கிடைக்கும் இடங்களில். 

நான் முன்பு இருந்த வீட்டருகில் இருக்கும் ஏரியில் இவற்றை நிறையக் காணலாம். தனியாகவே இருக்கும். அந்தப் பகுதியில் அந்த இரு ஏரிகளும் சாலைகளிலிருந்து உள்ளடங்கி இருப்பதால் பல வகை நீர்ப் பறவைகளைக் காணலாம். இந்த சீசனில் ஜெ ஜெ என்று களைகட்டி இருக்கும். 

இப்போது இருக்கும் பகுதியில் நான் பார்த்த மூன்று ஏரிகளிலும் சாம்பல் நாரை ஒன்று கூடக் கண்ணில் தென்படவில்லை. செந்நாரையும். ஒரே ஒரு ஏரியில் மட்டும் நாமக்கோழிகள், குளத்துக் கொக்குகள், ஆட்காட்டி பறவைகள், நீர்க்காகங்கள், வாலாட்டிக் குருவிகளைக் காண முடிந்தது. ஆனால் பொதுவாக இந்த சீசனில் களை கட்டி இருக்க வேண்டிய ஏரிகள் களை இழந்து இருக்கின்றன என்பதுதான் வேதனையான உண்மை! புலம்பிப் பிரயோசனம் இல்லை.

அடுத்து Pond Heron குளத்துக் கொக்கு பற்றி வரும்.

பதிவுகளை வாசிப்பவர்கள், கருத்திடுபவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.


----கீதா


38 கருத்துகள்:

  1. சலீம் அலி புத்தகம் ரொம்ப காஸ்ட்லி இல்லை? அப்பறவை என்சைக்ளோபீடியா மாதிரி இருக்கும். ஹெரான் ஹெரான் என்றால் அந்தக் காலத்தில் ஹெரான் ராமசாமி என்றொரு நடிகர் இருந்தார். அவர் நினைவுக்கு வருகிறார். அவருக்கு ஏன் அப்படி ஒரு பெயர் வந்ததோ?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம், காஸ்ட்லி (நமக்கு) அத்தனை பெரிய புத்தகம் வாங்கவில்லை. ஒவ்வொரு பறவை பற்றியும் படங்களுடன் சிறிய குறிப்புகள் உள்ள புத்தகம்தான்.

      ஹீரோ(ரா)ன் என்று சொல்லணுமோ? ஏனென்றால் ஹெரான் என்பது ஆண் பெண் பேதமில்லாமல் ஹீரோ எனும் சொல்லில் இருந்து வந்த சொல்லாம். நீளமான கால்கள், நீளமான கழுத்துடைய பெரிய நீர்ப்பறவைகளைச் சொல்லும் சொல்.

      ஆனால் ஹெரான் ராமசாமி நடிகர் பத்தி தெரியலையே ஸ்ரீராம். ஹீரோ என்ற அர்த்தத்தில் வந்திருக்குமோ?!!!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  2. தலையை ஆட்டுவது இரை செயலிழப்பதற்கா? நான் அது மட்டுமல்லாமல் வாய்க்குள் வாகாக அது இறங்கும் வண்ணம் பொசிஷன் செய்கிறது என்று நினைப்பேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இரையை செயலிழக்கச் செய்யத்தானாம். சில சமயம் அதைக் கீழே போட்டு விட்டு மீண்டும் டக்கென்று கவ்வும். மீண்டும் கீழே போட்டு டக்கென்று கவ்வும் ஓட விடாமல்...பார்த்திருக்கிறேன் ஆனால் தூரத்தில் என் கண்களுக்குத் தெரியும் ஆனால் மூன்றாவதில் சரியாக வராது என்பதால் எடுக்க முடியவில்லை.

      அப்படியேயும் முழுங்குமே ...நீங்க நினைக்கறது சரிதான் ஸ்‌ரீராம்...அதை பொசிஷன் பண்ணி உள்ளே டபக்குன்னு தள்ள!!!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  3. எங்கோ சென்று கொண்டிருக்கிறேன் 
    என்னவோ கவனமாயிருக்கிறேன் 
    என்று நீ நினைத்து 
    எச்சரிக்கை துறந்து 
    எக்காளத்துடன் 
    என் பக்கம் நீ 
    நீந்தியே வரும்போது 
    எட்டியே பிடிப்பேன் 
    கப்பென நான்..

    ஹிஹிஹி... காணொளிக் கவிதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருத்தம் : இதில் முதல் 'நீ' யை நீக்கி விட்டு படிக்கவும்!

      நீக்கு
    2. வேலை வாக்கிங்க் முடிச்சு தான் வலைப்பக்கம் வரணும் என்றிருந்த நான் உங்கள் வாட்சப் மெசேஜ் பார்த்ததும் ஆர்வம் தாங்காமல் இங்கு வந்தால் ஆஹா....அட்டகாசமான கவிதை!!! ரசித்தேன் ஸ்ரீராம். உண்மையாகவே அதன் செயல் அப்படித்தான்....அப்படியே கவிதையில் கொண்டு வந்துட்டீங்க...

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  4. அதே வீட்டிலேயே அடுத்த வ வருஷமும் குடித்தனமா?  அந்த அளவு தெரிந்த விவரங்களுக்கு ஒரு நரையைக் கட்டி குடும்பம் நடத்துவோம்னு ஏன் தெரியலை?  வருஷா வருஷம் வேற நாரை வெரைட்டியாய்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே வீட்டிலேயே அடுத்த வ வருஷமும் குடித்தனமா? //

      ஹாஹாஹா ஆமாம் அப்படித்தான் தகவல்களில்.

      //அந்த அளவு தெரிந்த விவரங்களுக்கு ஒரு நரையைக் கட்டி குடும்பம் நடத்துவோம்னு ஏன் தெரியலை? வருஷா வருஷம் வேற நாரை வெரைட்டியாய்!//

      ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன் ஸ்ரீராம். அதானே!!!

      நான் நினைப்பது எல்லாமே தனி தனியாகத்தான் வாழ்கின்றன. ஜோடி ஜோடியாகப் பார்த்ததே இல்லை. அதனால பொண்ணு அல்லது ஆண் பறந்து வேற இடம் போயிடும் போல!! ஒரு வேளை ரிப்பீட் ஆனா வேண்டாம்னு போயிடுமோ!!! ஹிஹிஹிஹி

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  5. உயிர்ச்சுழற்சியில் இருக்கும் பல்லுயிர்களை காக்காமல் அழிக்கிறோம்.  மரங்களை அழிக்கிறோம்.  ஏர், குளம் நீர் நிலைகளை அழிக்கிறோம்.  மொத்தத்தில் இயற்கையை எதிர்க்கிறோம்.  மனித குலத்துக்கு எதிரி மனிதனேதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிட்டோ உங்கள் கருத்திற்கு, ஸ்ரீராம்.

      இங்கு முன்பு அகரா ஏரியில் நிறைய பறவைகள் வருமாம் இப்போது இரு பக்கமும் விரிவான சாலைகள் ட்ராஃபிக், மெட்ரோ வேலை வேறு இந்தச் சத்தத்தில் பறவைகள் வருவதில்லை. எல்லாம் வேறு உள்ளடங்கிய ஏரிகளுக்குச் சென்றுவிட்டன. அங்கு சுற்றிலும் வீடுகள் ...கழிவு நீர் இந்த ஏரிகளுக்குள்...பாருங்கள்...நிலையை

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  6. சாம்பல் நாரையைப்பற்றி நிறைய விவரங்கள் தெரிந்துகொண்டேன்.

    படங்கள் மிக அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நெல்லை. நான் அதிகம் விவரங்கள் தரவில்லை.நெட்டில் இருக்கின்றனவே என்று.

      கீதா

      நீக்கு
  7. காணொளிகள் நன்று. இரை தேடும் நாரை மிகப் பொறுமையாக இருக்கிறது. உங்களுக்குத்தான் அது இரை தேடும்வரை பொறுமை இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்குத்தான் அது இரை தேடும்வரை பொறுமை இல்லை//

      ஹாஹாஹாஹாஹா...நெல்லை, கர்ர்ர்ர்ர்ர்ர் அவ்வளவுதான் நான் அங்கேயே உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்!!! எனக்கு அப்படிப் படம் பிடிப்பதில் ஆசைதான் ஆர்வம் உண்டு...ஆனால் வீட்டுல சாப்பாட்டுக்குக் காத்திருப்பாங்களே!!! இதுங்க எல்லாம் பெரும்பாலும் வெயில் வரும் முன் தான்...அதன் பின் மாலையில்தான் வெளில வரும். மட்டுமில்ல....இந்தக் காணொளி எடுத்துக் கொண்டிருந்த போது மாலை 5 மணி....கிட்டத்தட்ட 20 நிமிஷம்....அதை எடிட் செய்துதான் போட்டிருக்கிறேன்..20 நிமிஷத்துக்குப் பின் அது நகர்ந்து கப்புன்னு பிடிச்ச இடம் கோரைப்புற்கள் நிறைய வளர்ந்து அதை மறைத்துவிட்டது கண்ணுக்குத் தெரிந்தது ஆனால் கேமராவில் தெரியவில்லை. அதனால் அதை டெலிட் செய்துட்டேன். அப்புறம் வீட்டுல தேடுவாங்களே!!! என்னை!!!!

      மிக்க நன்றி நெல்லை!!!

      கீதா

      நீக்கு
  8. விவரிப்பு இருக்கே, அவை நேரில் பேசினால் எவ்வாறு இருக்குமோ, அவ்வாறே உள்ளது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விவரிப்பு இருக்கே, அவை நேரில் பேசினால் எவ்வாறு இருக்குமோ, அவ்வாறே உள்ளது...!//

      சும்மா இப்படி எழுதலாமே என்று...ஒரு சிறு முயற்சி

      மிக்க நன்றி டிடி.

      நீக்கு
  9. படங்கள் வழக்கம் போல அருமை.

    பறவைகளின் விளக்கங்கள் பிரமிக்க வைக்கிறது.

    காணொளிகள் அனைத்தும் கண்டேன் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி இன்னும் நிறைய விவரங்கள் பிரமிக்க வைக்கும். ஒவ்வொரு பறவையும் ரசிக்கத்தக்க விஷயங்களைக் கொண்டது...

      காணொளிகள் அனைத்தும் கண்டமைக்கு மிக்க நன்றி கில்லர்ஜி.

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  10. நாரையைப் பற்றிய விவரங்கள் நிறைய தந்திருக்கிறீர்கள். சலீம் அலி நூல் உதவியாக இருந்திருக்கும். படங்கள் நிறைய என்றாலும் OK ரகம் தான்.. இமேஜ் எடிட்டரில்  கொஞ்சம் கான்ட்ராஸ்ட் கூட்டியிருக்கலாம். 
    சிறப்பான படக்கட்டுரை. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெ கே அண்ணா இன்னும் உண்டு. ஆனால் இணையத்தில் உள்லனவெ என்று தரவில்லை. சலீம் அலி அவர்களின் நூலில் சில எடுத்துக் கொண்டேன். என் கேமராவின் சக்தி அவ்வளவுதான் ஜெ கே அண்ணா. அதுவும் இப்பறவைகள் அனைத்தும் குளிர் காலப் பறவைகள் பனி சூழ்ந்து வெளிச்சம் கிடைப்பதே அதுவும் பின் பனிக் காலத்தில் பனி இரங்கும் சமயம்தான் காலை நடைப்பயிற்சி. இமேஜ் எடிட்டரில் செய்யலாம்....நேரம் வேண்டுமே....

      மிக்க நன்றி ஜெ கே அண்ணா.

      கீதா

      நீக்கு
  11. சாம்பல் நாரை அழகாய் இருக்கிறது. அதன் வாழ்க்கை முறையை அழகாய் சொன்னீர்கள்.
    ஏரியில் அது நிற்கும் அழகே தனிதான். ஸ்ரீராம் கவிதை நன்றாக இருக்கிறது.
    காணொளிகள் நன்றாக எடுத்து இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாம்பல் நாரை அழகாய் இருக்கிறது. அதன் வாழ்க்கை முறையை அழகாய் சொன்னீர்கள்.//

      நன்றி கோமதிக்கா

      //ஏரியில் அது நிற்கும் அழகே தனிதான்//

      ஆமாம்.
      ஸ்ரீராமின் கவிதை நல்லாருக்குல்ல!!

      காணொளிகள் நன்றாக எடுத்து இருக்கிறீர்கள்.//

      நன்றி கோமதிக்கா....ஆனால் என் கேமராவில் இவ்வளவுதான் தெளிவாக வரும்......

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  12. அடுத்து Pond Heron குளத்துக் கொக்கு பற்றி வரும்.//

    படிக்க பார்க்க ஆவல். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா. படங்கள் தொகுத்து, வீடியோக்கள் சரி செய்து...இதற்கு ரொம்ப வீடியோக்கள் இல்லை...

      கீதா

      நீக்கு
  13. //பாருங்க நான்தான் சாம்பல் நாரை. என் உறவுக்கார செந்நாரை தன்னைப் பத்தி ரொம்பவே சொல்லிருக்குமே. அதுக்குத் தன் குடும்பம் ரொம்ப அழகுன்னும், தன் நிறத்தைப் பத்தியும் பெருமை. நாங்களும் அழகுதான். எங்க நிறம் நல்லாதானே இருக்கு இல்லையா? //

    நீங்கள் சொல்வதை ரசித்தேன்.

    ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி அழகுதான், இறைவனின் படைப்பில்
    நாரை சொல்வது அழகுதான். அவை பறந்து போகும் போதும், தனித்து இருக்கும் போதும் அழகுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வதை ரசித்தேன்.//

      ரசித்தமைக்கு மிக்க நன்றி கோமதிக்கா

      ஆமாம் இறைவனின் படைப்பில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு. நாரைகள் எல்லாமே அழகுதான் அவை பறப்பது ரொம்ப நன்றாக இருக்கும்...

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  14. இங்கே வீட்டைச் சுற்றிலும் சாம்பல் நாரைகள் தான்..
    இந்த மனைக் கட்டுகள் இருபது வருடங்களுக்கு முன்பு வயல்களாக இருந்தவை..

    அதனால் இதுவே வாழ்விடம் என்று
    அவற்றின்
    மரபணுக்களில் படிந்து விட்டது..

    சென்ற வருடம் கடுமையான மழையால் வாய்க்கால் உடைத்துக் கொண்டு தண்ணீர் இங்கே தேங்கி விட்டது.. அதனால் நாரைகளுக்கு நல்ல மீன் வேட்டை..

    இந்த வருடம் மழை குறைவு.. எங்கோ இரை தேடி விட்டு இங்கே வந்து சுற்றிக் கொண்டு இருக்கின்ற்ன..

    பத்து நாட்களுக்கு முன் செங்கால் நாரைகள் கூட்டமாக வந்து இறங்கி சொந்தம் கொண்டாடி விட்டுச் சென்றது கண் கொள்ளாக் காட்சி.

    சிறப்பான பதிவு..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே வீட்டைச் சுற்றிலும் சாம்பல் நாரைகள் தான்..//

      ஆஹா பார்க்கவே அழகாக இருக்குமே துரை அண்ணா.

      இந்த மனைக் கட்டுகள் இருபது வருடங்களுக்கு முன்பு வயல்களாக இருந்தவை..அதனால் இதுவே வாழ்விடம் என்று
      அவற்றின்
      மரபணுக்களில் படிந்து விட்டது..//

      ஆமாம் பழகிவிடுகின்றன...மாற்றிக் கொண்டு விடுகின்றன...

      //சென்ற வருடம் கடுமையான மழையால் வாய்க்கால் உடைத்துக் கொண்டு தண்ணீர் இங்கே தேங்கி விட்டது.. அதனால் நாரைகளுக்கு நல்ல மீன் வேட்டை..//

      செம...

      //இந்த வருடம் மழை குறைவு.. எங்கோ இரை தேடி விட்டு இங்கே வந்து சுற்றிக் கொண்டு இருக்கின்ற்ன..//

      பாவம்ல

      பத்து நாட்களுக்கு முன் செங்கால் நாரைகள் கூட்டமாக வந்து இறங்கி சொந்தம் கொண்டாடி விட்டுச் சென்றது கண் கொள்ளாக் காட்சி.//

      ஆஹா.. ...உங்கள் இடத்தில் நிறைய பறவைகள் இருக்கின்றன இல்லையா அண்ணா. ஊரின் வெளிப்புறமோ?

      மிக்க நன்றி துரை அண்ணா

      கீதா

      நீக்கு
  15. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. சாம்பல் நாரை பற்றிய விபரங்கள் படங்கள் அனைத்தும் மிக நன்றாக உள்ளது. படங்கள் ஒவ்வொன்றும் தங்களின் கைவண்ணத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறது.

    சாம்பல் நாரையின் வாழும் முறைகள், அது வாழ்வை துவக்கும் முறைகள் என விவரித்து கூறியது அருமை. செந்நாரை சுட்டியில் சென்றும் பார்த்து வந்தேன்.

    காணொளிகளையும் ரசித்துப் பார்த்தேன். ஒவ்வொன்றும் நிறைய தூரம் பறப்பதை காண அழகாக உள்ளது. . அடுத்து குளத்து கொக்கு பற்றி அறிய ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு அருமையாக உள்ளது. சாம்பல் நாரை பற்றிய விபரங்கள் படங்கள் அனைத்தும் மிக நன்றாக உள்ளது. படங்கள் ஒவ்வொன்றும் தங்களின் கைவண்ணத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறது.//

      மிக்க நன்றி கமலாக்கா.

      //செந்நாரை சுட்டியில் சென்றும் பார்த்து வந்தேன்.//

      மிக்க நன்றி கமலாக்கா....செந்நாரை இதைவிடக் கொஞ்சம் பெரிதாக இருப்பது போலத்தானே இருக்கு இல்லையாக்கா!?

      //காணொளிகளையும் ரசித்துப் பார்த்தேன். ஒவ்வொன்றும் நிறைய தூரம் பறப்பதை காண அழகாக உள்ளது. . அடுத்து குளத்து கொக்கு பற்றி அறிய ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      மிக்க நன்றி கமலாக்கா...சாம்பல் நாரை ஓரளவு பறக்கும். அது நான் எடுத்த வீடியோக்கள் 4,5 ஐ எடிட் செய்து கொஞ்சம் பொருத்தமாக மெர்ஜ் பண்ணிப் போட்டிருக்கிறேன்.

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  16. நாரை பற்றிய விபரங்களும் படங்களும் நன்று.

    பதிலளிநீக்கு
  17. பதிவின் வழி சொன்ன தகவல்கள் அனைத்தும் சிறப்பு. படங்கள் மற்றும் காணொளிகள் ஆகியவற்றையும் உங்கள் சிறப்பான விவரிப்பையும் மிகவும் ரசித்தேன். தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  18. இந்த பதிவின்மூலம் சாம்பல் நாரையைப்பற்றி நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது.

    //அப்போது ஆண் பறவை பெண் பறவைக்கு ஒரு குச்சியைக் கொடுக்கும். (அன்புப் பரிசாம்!!!).//

    ஆச்சரியமான தகவலை தந்துள்ளீர்கள்... நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சிவா, எனக்குமே அதை வாசித்த போது ஆச்சரியமாக இருந்தது. அதனால்தான் பகிர்ந்தேன்.

      மிக்க நன்றி சிவா.

      கீதா

      நீக்கு
  19. ஓ இது தான் சாம்பல் நாரை யா, அடுத்த முறை ஏரிக்கு போகும் போது கண்ணில் படுகின்றதா என பார்க்க வேண்டும் ...நல்ல தகவல்கள் கீதா அக்கா

    பதிலளிநீக்கு