ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 25 - லால்பாக் மலர் கண்காட்சி - 2023 - 2

இந்த வருடத்து லால்பாக் மலர் கண்காட்சி சென்று வந்ததும் சுடச் சுடப் போட்டுவிட ஆ கீதாவான்னு!!!! எல்லாரும் மயங்கினீங்கதானே! பாருங்க அடுத்தது போடுவதற்குள் வாலு போச்சு கத்தி வந்ததுன்னு சில பணிகள் வந்துவிட அதில் ஆழ்ந்து செய்து முடித்ததும் மனமோ கெஞ்சியது ரிலாக்ஸ் ப்ளீஸ் என்று. சரி ரொம்ப நாளாச்சு, ஒரு தமிழ் கீர்த்தனை கற்றுக் கொள்ளலாம் என்று இணையத்தில் ஆராய்ச்சி. நாம ஏகலைவிதான்! அது ஒரு புறம்.

அடுத்த இரு வாரங்களில் வேறு முக்கியமான விஷயம் காரணமாகச் சில முன்னேற்பாடுகள் என்று மனம் அதற்குத் தாவியதும் – மனம் ஒரு குரங்கு என்று சும்மா சொல்லலை! - மீண்டும் பதிவு எழுதுவதில்  தேக்கம். எனவே அடுத்து எழுத வேண்டும் என்று நினைத்திருந்த சில்லு சில்லாய் (சாப்பாட்டுக் கதைதான்!!) ஒத்தி வைக்கப்பட்டது.

ஆ! இரண்டாவது பகுதிக்கு இடையில் இடைவெளி கூடிவிட்டதே எல்லாரும் மறந்திருப்பீங்களே! எனவே ஒரு சின்ன Recap! 

சென்ற பதிவான லால்பாக் மலர் கண்காட்சிபகுதி 1ல் உள்ளே நுழைந்து சென்ற போது அடுக்கி அழகு செய்யப்பட்டிருந்த மலர் காட்சிகளைப் பார்த்தோம் இல்லையா. அங்கு நெல்லையையும் அவரது மனைவியையும் சந்தித்ததையும் சொல்லியிருந்தேன். அந்த இடத்தில் இருந்த 80 வருடமான பழைய மரத்தில் செதுக்கியிருந்ததையும் அதைச் சுற்றி பலவகை மலர் தொட்டிகளை அடுக்கி அழகு செய்திருந்ததைக் காணொளியாகப் போட்டிருந்தேன். அப்பதிவில் அப்படம் கொடுக்க விட்டுப் போச்...இப்போது அந்தப் படம் இதோ….

நாங்கள் நின்றிருந்த பகுதி இடப்புறம் ஒரு அறை. அங்கு உணவாகப் பயன்படும் மலர்கள் என்று மலர்கள், உலர் மலர்கள் நாம் சாப்பிடும் வகையில் எப்படி எல்லாம் பயன்படுத்தப்படுகின்றன என்னென்ன பூ வகைகள் பயன்படுத்தப்படுகின்றன  என்பது பற்றிய ஒரு கண்காட்சி. வழக்கமாகப் பயன்படுத்தப்படும் வாழைப்பூ, காலிஃப்ளவர் எல்லாம் கிடையாதுங்க அவை எல்லாம் காய்வகையில் போய்விடும். இவை பூக்கள். நாம் கேட்டிராத பூ வகைகள் உட்பட. பல வகை மலர்கள் சாப்பிடக் கூடியவையாக இருந்தாலும் மிகக் குறைவானவையே சந்தைப்படுத்தப்படுகின்றன. அதுவும் நம்மூரில் குறைவு.

உணவில் ரோஜாவின் பயன்பாடு உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். குல்கந்து, ரோஜா எஸன்ஸ், மற்றும் உலர வைக்கப்பட்ட ரோஜா இதழ்கள் பிரியாணி, கேக் வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஓமப்பூ, வேப்பம்பூ, துளசிப்பூ, குங்குமப்பூ, பூஷணிப்பூ, முருங்கைப்பூ, சூரியகாந்தி போன்றவையும் நாம் அறிந்ததே.  அது போல பல மலர் வகைகள் – ஆவாரம்பூ, தாமரைப்பூ, பப்பாளிப்பூ,  இன்னும் பல மருந்தாக அதாவது நேரடியாகவோ அல்லது அதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வேதியல் பொருட்களைக் கொண்டோ தயாரிக்கப்படுகின்றன.

சில வகைகள் மருத்துவத் துறையில் தயாரிக்கப்படும் மயக்கமருந்துகளுக்கும், மூலிகைத் தேநீராகவும் பயன்படுகின்றன - உலரவைக்கப்பட்ட க்ரிஸாந்தமம், மல்லி, கமோமைல் போன்றவை. தேயிலையுடன் கலந்தும் தயாரிக்கப்படுகின்றன.

வெளிநாடுகளில் பல வகை உலர் பூக்கள் சாலட், சாஸ், தேநீர், இனிப்புகள், சுவையூட்டிகள் என்று என்று பயன்படுகின்றன. நம் நாட்டில் வடகிழக்கு மாநிலங்களில் பலவகை மலர்களை உணவில் பயன்படுத்துகின்றனர். மக்னோலியா, மொனார்டா, லில்லி வகைகள், டெய்சி, கார்னேஷன் Cattail - கட்டெயில் (சம்பு - தாவரம் இது பற்றி பதிவு போட்டிருந்தேனே அதில் சொல்லியிருந்தேன்), டேன்டெலியன், இவான்டீ, க்ளோரல் என்று நிறைய.

இதோ மேலே வெளியில் வைத்திருந்த படங்கள். உள்ளே யானை புகுந்தாலும் தெரியாத அளவு கூட்டம். எனவே என்னால் புகைப்படங்கள் எடுக்க முடியவில்லை. ஆனால் நல்ல விழிப்புணர்வு சமையல் கலையில் தொழில் செய்பவர்கள் மற்றும் ஆராய்ச்சி செய்பவர்களுக்கான தகவல்கள் நிறைந்த சிறிய அரங்கம்.

இந்தப் படத்தில் விதானசௌதா சித்திரம் பற்றிய சிறிய விவரம் மற்றும் இந்த வருடத்து தீம் இருக்கிறது பாருங்க வாசிக்க முடியும் என்று நினைக்கிறேன். 

இந்த வருடம் விதானசௌதா மற்றும் ஸ்ரீ கெங்கல் ஹனுமந்தையா அவர்களின் உருவத்தை மலர்களால் உருவாக்கியிருந்தாங்க அதுதான் தீம். கண்ணாடி அறைக்குள். அதைக் காண கூட்டமோ கூட்டம் எனவே நாங்கள் அதைக் காண முடியவில்லை புகைப்படமும் இல்லை என்பதை போன பதிவிலேயே சொல்லியிருந்தேன். இணையத்தில் நிறைய காணொளிகள் இருக்கின்றன. தட்டினால் கொட்டும்!

அதே இடத்தில் வலப்புறம் சிறிய பூங்கா அதில் அழகான வடிவத்தில் ஒரு மரம் அதன் இரு புறமும் மரங்களில் செதுக்கப்பட்ட விலங்கு உருவங்கள். முதலில் காணொளி எடுத்துவிட்டேன் எனவே கீழே காணொளியில் மரத்தைப் பார்க்கலாம்.

படத்தில் விலங்குகள் உருவங்களும் மரத்தின் அடிப்பகுதி மட்டுமே தெரியும். மரத்தின் முழு உருவமும் எடுத்த போது ஒருவர் வந்து இடித்திட மொபைல் கீழே விழுந்திடாம இருக்க பிடிக்கவும் அப்படம் போயே போச். 

அழகான மரமும் அதன் இரு புறமும் மரத்தில் வடிவமைக்கப்பட்ட விலங்குகளும். மிக்ச் சிறிய காணொளிதான்


அப்புறம் அங்கிருந்து படத்தில் எதிரே தெரியும் கடைகள் இருக்கும் பாதை வழியே நடக்கத் தொடங்கினோம். அதைக் கடந்ததும் கொஞ்சம் பெரிய திறந்த வெளி. அங்கும் கடைகளோ கடைகள் – அலங்காரப் பொருட்கள், கைப்பைகள் என்றும் பெண்களுக்கான குழந்தைகளுக்கான பொருட்கள் என்றும் விற்பனைக் கடைகளின் இடையே பூந்தொட்டிகள் விற்கும் கடைகளும். கீழே சிறிய காணொளி.

என்றாலும் பூச்செடிகள் விற்க என்று சில பண்ணைகள் தனியாகவும் கூடாரங்கள் போட்டிருந்தன. அவை அடுத்த பகுதியில்.

அந்தக் கடைகள் ஒருபுறம் மறுபுறம் திறந்த வெளிப் பூங்காவில் இப்படி பூந்தொட்டிகளை அடுக்கி அலங்காரம் செய்திருந்தாங்க.

சிறிய காணொளிதான். இப்பதிவின் சாராம்சம் காணொளியாய்…. https://youtu.be/LxNQv8cJOPs

பதிவுகளைப் பார்ப்பவர்கள், கருத்து சொல்பவர்கள் அனைவருக்கும் நன்றி. அடுத்த பதிவில் சந்திப்போம்!


------கீதா

 

20 கருத்துகள்:

 1. படங்கள் அனைத்தும் வழக்கம் போல அழகு.

  தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது பயனுள்ளவையும்கூட காணொளி காண்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. படங்கள் தெளிவாக இருந்தாலும் அதிகம் ஈர்க்கவில்லை. காரணம் தெரியவில்லை. ஓரு வேளை எல்லாம் மிடில் ஷாட் ஆனதால் இருக்கலாம்.
  Jayakumar​

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜெ கே அண்ணா படங்களில் க்ரெய்ன்ஸ் இப்பது போல இருக்கோ? அல்லது சில ஓவர் ப்ரைட்னெஸ் போல எனக்குத் தெரிந்தது. ஒரே கூட்டம் ஆட்கள் வராமல் எடுக்கணும்னு கவனத்தில் அப்படி மிடில் ஷாட் அதுவும் ஃபோனை சரித்து வைத்து ஆங்கிள் பார்க்க முடியாத அளவு கூட்டம் அப்படி சில படங்களை எடுத்தேன் அதனால் இருக்கலாம்.

   மிக்க நன்றி ஜெ கே அண்ணா

   கீதா

   நீக்கு
 3. லால்பாக் மலர் கண்காட்சியை சுற்றிப்பார்த்து விட்டேன் உங்களுடன் வந்து.
  எல்லாம் நன்றாக இருக்கிறது. காணொளிகள் நன்றாக இருக்கிறது.
  ரோஜா செடிகள் 100 ரூபாய் விற்பனைக்கு. ரோஜா பூக்களை காணோம், இது ரோஜா சீஸன் இல்லையோ! செம்பருத்தியும், செண்டு பூவும் தான் தெரிகிறது.
  கோழி கொண்டை பூக்கள் மரத்தை சுற்றி இருக்கு.
  புலி ,சிறுத்தை எல்லாம் பாயும் நிலையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

  விலங்கு உருவங்கள் எல்லாம் சர்க்கஸில் வரிசையாக நிற்பது போல நிற்கிறது.
  மர ஆசனத்தில் அமர்ந்து இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதிக்கா நீங்களும் சுற்றிப் பார்த்ததுக்கு மிக்க நன்றி.

   காணொளிகள் பார்த்து சொன்னதுக்கும் மிக்க நன்றி கோமதிக்கா

   ஆமாம் அக்கா ரோஜா 100 ரூ கொஞ்சம் கூடுதல்தான். ரோஜா தோட்டம் பக்கம் போகவில்லை நேரமில்லை கோமதிக்கா. ஆனால் சீசன் தான் போனமுறை ரோஜா தோட்டத்தில் நிறைய பூக்கள் இருந்தன. இப்பவும் இக்கடைகளில் இருந்தன. காணொளியில் தெரியும் என்று நினைக்கிறேன்.

   ஆமாம் கோழி கொண்டை பூக்கள் மரத்தைச் சுற்றி அந்த தொட்டிகளை வைத்திருந்தாங்க. இப்படி ஆங்காங்கே அலங்காரம் பண்ணியிருந்தாங்க இதெல்லாம் லால்பாக் பூங்கா நிறுவன அலங்காரங்கள். அவங்க இப்படி வைச்சிருந்தாங்க ஃப்ரீயா ஃபோட்டோ எடுக்கலாம்.

   காஞ்ச மரங்களில் அப்படி நிறைய வடிவங்கள் செஞ்சிருக்காங்க. இன்னும் இருக்கு போடுகிறேன்.

   இன்னும் இப்படி வடிவங்கள் செதுக்கிக் கொண்டு இருக்காங்க

   விலங்கு உருவங்கள் எல்லாம் சர்க்கஸில் வரிசையாக நிற்பது போல நிற்கிறது.
   மர ஆசனத்தில் அமர்ந்து இருக்கிறது.//

   சர்க்கஸில் காட்சி இப்படி இருக்குமே உட்கார்த்தி அப்படி...ஆமாம்

   மிக்க நன்றி கோமதிக்கா

   கீதா

   நீக்கு
 4. ஒரு தமிழ் கீர்த்தனை கற்றுக் கொள்ளலாம் என்று இணையத்தில் ஆராய்ச்சி. நாம ஏகலைவிதான்! அது ஒரு புறம்.//

  நன்றாக கற்றுக் கொண்டு பாடுங்கள். வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுதான் ஆராய்ந்தேன் ஆனால் காது பிரச்சனை ஆகிவிட்டதே கோமதிக்கா ஹியரிங்க் எய்ட் அதுவரை பயன்படுத்த முடியாது எனவே சரியான பிறகுதான் பார்க்க வேண்டும். முருகன் பட்டுதான் பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று உங்களுக்கு அனுப்பியிருந்தேனே அந்தப் பாட்டும் கற்க நினைத்தேன்...நல்ல உச்சரிப்புக்கும் பாடும்க் போது மூச்சுப் பயிற்சிக்கும் நல்ல பாட்டு.

   வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிகோமதிக்கா

   கீதா

   நீக்கு
 5. படங்கள் அழகு.

  இவற்றில் பலவற்றை நான் பார்க்கவில்லை. சாப்பாடு, ஊறுகாய், பழக் கடைகள் மற்றும் பல்வேறு கடைகளின் பக்கம் ஒதுங்கிவிட்டோம்.

  ரொம்பக் கூட்டம். அதனால் வரிசையில் நின்றெல்லாம் பார்க்கும் பொறுமை எனக்கு இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாப்பாடு, ஊறுகாய், பழக் கடைகள் மற்றும் பல்வேறு கடைகளின் பக்கம் ஒதுங்கிவிட்டோம்.//

   நாங்களும் ஓரிரு கடைகள் போனோம்...மகன் இங்க வந்தப்ப இங்கிருந்த குழிப்பணியாரக் கல்லை எடுத்துக்கொண்டு போனான். ஸோ நான் Cast iron குழிப்பணியாரக் கல் வாங்கிக் கொண்டேன். அப்புறம் பழம் ஏதோ வாங்கிய நினைவு என்ன பழம் என்பது மறந்து போச்.

   எங்களுக்கும் வரிசை.யில் நின்று பார்க்கும் பொறுமை இல்லை நேரமும் இல்லை விருப்பமும் இல்லை. இந்த முறை ரோஜா தோட்டம் பக்கம் போகலை அந்தப் பக்ககளில் பூ செடிகள் வேறு அலங்காரங்கள் இருந்தன போலும். கண்ணாடி அறைக்கு வெளியே பார்த்துவிட்டு வந்துவிட்டோம் அந்தப் பக்கம் போயிருந்தா வெளியில் உள்ளவற்றை க்ளிக்கி இருக்கலாம் ...நேரம் ஆகிவிட வீட்டுக்கு வந்துவிட்டோம் இப்பலாம் அரை நாள் சுற்றல்தான்

   மிக்க நன்றி நெல்லை

   கீதா

   நீக்கு
 6. படங்கள் யாவும் அழகு. சிரத்தையாக எடுத்திருக்கிறீர்கள். விவரங்கள் சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
 7. "தமிழன் கல்லிலே கலைவண்ணம் கண்டான்" என்ற பாடலை பலமுறை ரசித்துள்ளேன்...
  ஆனால் மரத்தில் பட்டைதீட்டப்பட்டுள்ள கலைவடிவம் கல்லையும் மிஞ்சும் விதத்தில் அமைந்துள்ளது கண்டு வியப்பாக உள்ளது.
  கலைவடிவத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 8. ஆமாம் காய்ந்த வயதாகி இறக்கும் மரங்களை ரொம்ப அழகாக வடிவமைக்கிறார்கள், நாஞ்சில் சிவா. இன்னும் சில வடிவங்கள் இருக்கின்றன எடுத்துள்ளேன். பகிர்கிறேன்.

  மிக்க நன்றி நாஞ்சில் சிவா

  கீதா

  பதிலளிநீக்கு
 9. படங்கள் அனைத்தும் அழகு. பார்த்து ரசித்தேன். காணொளிகள் சிறப்பு. பாராட்டுக்கள். வெங்கட், புது தில்லி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வெங்கட்ஜி ரசித்ததற்கும் பாராட்டுகளுக்கும், கருத்திற்கும்

   கீதா

   நீக்கு
 10. பதில்கள்
  1. கதைகள், கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வமும், சிறப்பாகவும் எழுதும் செல்லப்பா சாரின் இக்கருத்திற்கு மிக்க நன்றி!

   கீதா

   நீக்கு