புதன், 24 மே, 2023

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 21 - குளத்துக் கொக்கு - INDIAN POND HERON

 

எங்களின் முந்தைய பதிவை/வுகளை வாசித்த, வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்!

ஹெரான் வகைகள் வேறு சில இருந்தாலும் நான் பார்த்த ஹெரான் வகைகள் மூன்று. அதில் செந்நாரை - PURPLE HERON, சாம்பல் நாரை - GREY HERON பற்றி போட்டிருந்த நினைவு உங்களுக்கு இருக்கலாம். அந்த வகையில் இன்று மூன்றாவதாக குளத்துக் கொக்கு - INDIAN POND HERON.

https://youtu.be/ng9uZXpo6m0
குளத்துக் கொக்கு - அறிமுகம்!

4, 5 சேர்ந்து ஒரே இடத்தில் பார்ப்பது என்பது கொஞ்சம் அரிது 

ஹெரான் வகையில் இவை கொஞ்சம் சிறியவைதான். இவற்றை நீர்நிலைகளான சதுப்பு நிலங்கள் குளங்களில் அதிகமாகப் பார்க்க முடியும்.  என்பதால் குளத்துக்கொக்கு என்ற பெயர்.  வயல்களிலும் பார்க்கலாம். பொதுவாகத் தனியாகவே இருக்கிறது. 4, 5 சேர்ந்து ஒரே இடத்தில் பார்ப்பது என்பது கொஞ்சம் அரிது. நீர் நிலைகளின் புற்களில் சில சமயம் 4, 5 இரை தேடும் போது பார்க்கலாம் அல்லாமல் தனியாகவே இருக்கிறது. பறவையைப் பற்றி இணையத்தில் தகவல்கள் இருப்பதால் நான் பார்த்ததை மட்டும் இங்குச் சொல்லிப் பகிர்ந்திருக்கிறேன்.

பொதுவாக எப்போதும் கழுத்தை  படத்தில் உள்ளது போல் சுருக்கியே குட்டையாக வைத்துக் கொண்டிருக்கும். பழுப்பு நிறத்தில் இவை இருப்பதால் பல சமயங்களில் இவை இருப்பதே தெரிவதில்லை. அருகில் செல்லும் போது பறந்துவிடும். 

நாம் அருகில் சென்றால், அல்லது நாம் வரும் சத்தம் கேட்டால் அல்லது மூன்றாவது விழியை திறக்கும் சத்தம் கேட்டால் பறந்து விடும். பழுப்பு நிறத்தில் இவை இருந்தாலும் பறக்கும் போது இறக்கை நல்ல வெண்மை நிறத்தில் இருப்பதைக் காணலாம். 

வளர்ந்த பறவை. பொன் மாலைப் பொழுதில் எடுத்ததால் மாலைச் சூரியன் கதிர்களின் நிறத்தில்!! தக தக என்று... இரையைப் பிடிக்க வெகுநேரம் காத்திருக்கும்.
நல்ல வளர்ந்த குளத்துக் கொக்கின் கழுத்து (மேலே இரு படங்களிலும்) சற்று நீண்டு இருக்கிறது தெரிகிறதா? அப்படி கழுத்தை நீட்டி இருக்கும் போது வரிகள் இருப்பது போன்று தெரியும். 

அலகு நல்ல தடிமனாக நீண்டு இருக்கும். 


இந்தப் படத்தில் குளத்துக்கொக்கின் முதுகில் இறக்கை நல்ல அடர் ப்ரௌன் நிறத்தில் இருக்கிறது இல்லையா பருவ காலத்தில் இருப்பதன் முதுகு  இப்படித்தான் இருக்கும். Breeding Plumage

நிம்மதியா வயிற்றுப் பிழைப்பை பாக்க விடாம படம் பிடிக்க வந்துட்டாங்கப்பா....
ஹூம்...இனி இங்க வேண்டாம் என்று பறக்கிறது பாருங்கள்!இப்படி தாமரை இலைகளின் மீது ஜம்மென்று நிற்கும், நடக்கும். 


மரக் கிளைகளில் இரண்டு அமர்ந்திருப்பது தெரிகிறதா


குளக் கொக்கு குஞ்சு இரை தேடப் பழகுகிறதுhttps://youtu.be/aeObEwYJzmk

குளத்துக் கொக்கு பெரும்பாலும் தண்ணீரை ஓட்டியிருக்கும் மரக் கிளைகள், கற்கள், பாறைகள், தண்ணீரில் மேற்புறத்தில் இருக்கும் பொருட்களின் மீது இருந்து கொண்டு, கழுத்தை நீட்டி இரையைப் பிடிக்கும். இரையைப் பிடிக்க வெகு நேரம் அசையாமல் காத்துக் கொண்டிருக்கும். அது இரையை (மீன், புழுக்கள், சிறிய பூச்சிகள்) பிடித்து உண்பதைப் பார்க்கவும், நம் புகைப்படக் கருவியில் படமும் பிடிக்க வேண்டும் என்றால் நமக்குப் பொறுமையும் அதிர்ஷமும் வேண்டும். 

சில சமயம் டக்கென்று கிடைத்துவிடும். சில சமயம் நாம் எடுக்க முயற்சிக்கும் போது பறந்துவிடும் அல்லது நம் பொறுமையை சோதிக்கும். எவ்வளவு நேரம் காத்திருக்க முடியும்? பெரும்பாலும்  ஏரிப்பக்கம்தான் நான் நடைப்பயிற்சி செல்வதுண்டு. எனவே மூன்றாவது விழியைத் தயாராக வைத்துக் கொண்டு அவ்வப்போது சிக்கியவற்றை பிடித்துக் கொண்டு Edit செய்து பல காணொளிகளை இணைத்துப் போட்டதுதான் இந்தக் காணொளிகள் எல்லாமே.

இப்படி உட்கார்ந்து இரைக்காகக் காத்திருக்கும். நீரின் ஆழமற்ற பகுதிகளில் இருந்து கொண்டு இரை தேடும். ஆழமான பகுதிகளுக்குச் செல்லாது.

https://youtu.be/ZpnM5nlJIbw

ஒரு குளக் கொக்கு பறந்து வந்து ஏரியின் கரையை நெருங்கும் போது கரையில் கல்லின் மீது அமர்ந்திருக்கும் மற்றொரு குளக் கொக்கு, பறந்து வரும் கொக்கோடு சேர்ந்து இரண்டும் பறக்கும் போது, ஒன்று மீண்டும் கரையில் கல்லின் மீது அமர, மற்றொன்று ஏரியைச் சுற்றி வருகிறது. மீண்டும் கரையில் இருக்கும் கொக்கு அதைப் பின்னில் தொடர்கிறது. எதிர்ப்புறம் இருக்கும் கரையை அடைகின்றது. இதை நேரில் பார்த்த போது மிகவும் சுவாரசியமாக இருந்தது. என் புகைப்படக் கருவியின் சக்தி மிகக் குறைவுதான் என்றாலும் முடிந்த அளவு எடுத்துள்ளேன்.

அழகான பதிவுகள், படங்கள், பறவைகள் படங்களும் போடும் நம் வலைப்பதிவர் ராமலஷ்மி இப்பறவை பற்றி எழுதியிருந்தாங்க. சுட்டி இங்கே

சைனா குளக்கொக்கு என்றும் வகை உண்டு. நம்மூர் குளக் கொக்கு போன்றேதான் ஆனால் கொஞ்சம் நிற வித்தியாசத்தில்.  பறவைகள் பற்றி படங்களோடு பதிவுகள் நிறைய எழுதும் கோமதிக்கா, சீனிவாசப் பெருமாள் கோயில் அப்பன் திருப்பதி என்ற பதிவில் "இயற்கை அழகும் சீதோஷ்ண நிலையும் நன்கு இருப்பதால் இங்கு வந்து இருக்கும் அயல் நாட்டுப் பறவை" என்று படத்துடன் கொடுத்திருந்தாங்க. அதுவும் குளக் கொக்குதான். 

ஆனால் பருவத்தில் இருக்கும் பறவை எனவே முதுகுப் புறம் அடர் காப்பித் தூள் வண்ணத்தில் இருப்பது கொஞ்சமாகத் தெரிகிறது. மரத்தின் மீது கூடு கட்டி முட்டை இட்டிருக்கிறது. அந்த நிறம் அந்த ஊர் மக்களுக்குப் புதிதாக இருந்திருக்கலாம் அல்லது சைனா குளக்கொக்காக இருக்கும் அதனால் அயல்நாட்டுப் பறவை என்றிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.  சுட்டி இங்கு.


----கீதா

30 கருத்துகள்:

 1. சுவாரஸ்யமான விவரங்கள். கஷ்டப்பட்டு படங்கள் எடுத்திருக்கிறீர்கள்! படங்களும் அழகு.

  பதிலளிநீக்கு
 2. தாமரை இலைமேலே அலட்டிக்காமல் நிற்கும் ஸ்டைல்...!    நாம் நின்றால் என்ன ஆகும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் யோசித்தேன். அதை படத்தின் கீழ் எழுத நினைத்து விட்டேன் என்னவோ ஒரு எதிர்பார்ப்பு நீங்கள் சொல்லுவீங்கன்னு. கரெக்ட்டா வந்துருச்சு!!

   மிக்க நன்றி ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
 3. படங்கள் அழகாக உள்ளன. பெங்களூரிலும் வீட்டுப் பக்கத்தில் கொக்குகள் வருகின்றனவா?

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போதும் வீட்டருகில் இருக்கும் ஏரிகளில் பறவைகள் வருகின்றன, ஜெ கே அண்ணா அங்கு எடுத்தவை சில ...பழைய ஏரியா ஏரியில் எடுத்தவை சில

   மிக்க நன்றி ஜெ கே அண்ணா

   கீதா

   நீக்கு
 4. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. குளத்தில் வாழும் கொக்குகள் பற்றி நன்றாக எழுதியுள்ளீர்கள். படங்கள் ஒவ்வொன்றும் தங்கள் வழக்கப்படி தெளிவான கோணத்தில் அழகாக அமைந்திருக்கின்றன. தாமரை இலையில் அது லாவகமாக நிற்கும் / நடக்கும் படங்கள் மிகவும் அழகாக உள்ளது. இந்த கலைகள் எல்லாம் இறைவன் அவைகளுக்கு பரிசாக தந்தவை இல்லையா?

  காணொளிகள் சிறப்பாக இருக்கிறது. இறுதி காணொளி பார்த்தேன். இரண்டு கொக்குகளும் மாற்றி, மாற்றி குளக்கரையை சுற்றிச்சுற்றி வருவது அழகாக உள்ளது. அதை அழகாகவும் படமெடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

  பறவைகள் என்றாலே பார்த்து ரசிப்பதற்கு எல்லோரும் பிடிக்கும். நம் மன அழுத்தத்தையும் அது சிறிது குறைக்கும். இன்றும் உங்கள் படங்களின் மூலமாக இதை பார்த்து ரசித்தேன் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவையும் காணொளிகளையும் பார்த்தமைக்கும் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி கமலாக்கா.

   நம் மன அழுத்தத்தையும் அது சிறிது குறைக்கும். //

   ஆமாம் கமலாக்கா சரியாகச் சொன்னீங்க. இயற்கையைப் பார்த்தாலே மனதுக்குஇதம்தான்..

   //இன்றும் உங்கள் படங்களின் மூலமாக இதை பார்த்து ரசித்தேன் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.//

   ரசித்தமைக்கு மிக்க நன்றி கமலாக்கா

   கீதா

   நீக்கு
 5. நிறைய விவரங்கள். அனைத்தும் நன்று. கஷ்டப்பட்டு எடுத்து இருக்கீங்க.

  ரொம்பவே ரசித்தேன்.

  அது சரி... நடைப்பயிற்சிக்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டு படங்கள் எடுத்துட்டிருக்கீங்களே. அன்று நடைப்பயிற்சி அவ்ளோதானா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்பவே ரசித்தேன்.//

   மிக்க நன்றி நெல்லை

   அது சரி... நடைப்பயிற்சிக்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டு படங்கள் எடுத்துட்டிருக்கீங்களே. அன்று நடைப்பயிற்சி அவ்ளோதானா?//

   ஹாஹாஹா நேற்றும் சிரித்து இப்பவும் இதை வாசித்து சிரித்துவிட்டேன். நடைப்பயிற்சி பாதி முடிச்சுட்டு இடையில் இதுங்களை எல்லாம் பார்த்து ரசித்து பிடிச்சிட்டு அப்புறம் மீண்டும் நடைப்பயிற்சி...

   சில சமயம் நீங்கள் சொல்றாப்லதான் ஆகும்....சில அரிய காட்சிகளை எதிர்பார்த்து காத்திருந்து ஏமாந்து நேரமாகி விட்டுக்கு வந்துவிடுவேண். ஆனால் எப்படியும் பாதி நடைப்பயிற்சி முடித்திருப்பேன்!!!

   மிக்க நன்றி நெல்லை

   கீதா

   நீக்கு
 6. நான்லாம் இந்த மாதிரி உயிரினங்களை பார்த்து புகைப்படம் எடுத்து அவங்க ப்ரைவசில நுழையறதில்லை (ஹா ஹா ஹா. நான் படம் போடும்போது நீங்க என்ன சொல்லப்போறீங்களோ)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹாஹா.....இருங்க இருங்க நீங்க போடுங்க அப்ப பாத்துக்கலாம்...

   மிக்க நன்றி நெல்லை

   கீதா

   நீக்கு
  2. அதனாலதான் 4ம் மாடியில நிறு ஆனைப்பிள்ளைகளைப் படமெடுத்தாரோ நெ த:)) பொறுங்கோ அந்த ரேஸ் ல முதலாவதாக வந்த கொம்பன் ஆனைக்கு இத்தகவலைச் சொல்லி அனுப்பப்போறேன் ஹா ஹா ஹா:)

   நீக்கு
  3. மூன்றாவது விழி, 21 ஐத்தொட்டு விட்டதே...

   குளத்துக் கொக்கைப் பற்றிக் கொஞ்சம் நான் வர்ணிக்கிறேனே கீதா:)..

   உன் கண்களோ ஆந்தைபோல
   உன் சொண்டோ மீன் கொத்திபோல
   உன் உடம்போ சீஹல் போல
   உன் கால்களோ நாரைபோல
   உன் உருவமோ இப்போ கீத்ஸ் இன்
   மூன்றாவது விழிக்குள் அடக்கம்..

   ஹா ஹா ஹா, படங்கள் எல்லாமே அழகு, வீடியோவும் நன்றாக இருக்கிறது.

   நீக்கு
  4. சூப்ப சூப்பர் !!! ரசித்து வாசித்தேன், அதிரா! நல்லா வர்ணிச்சிருக்கீங்க!

   மிக்க நன்றி அதிரா

   கீதா

   நீக்கு
  5. அதனாலதான் 4ம் மாடியில நிறு ஆனைப்பிள்ளைகளைப் படமெடுத்தாரோ நெ த:))//

   அதான் அவர் சொல்லிருக்கிறாரே, அவங்க ப்ரைவசிக்குள்ள நுழையறதில்லைன்னு....ஆனைகள் சரியா ஓடவே இல்லைன்னும் சொல்லிருந்தாரே. அப்படி எடுக்கப் போய் அதுங்களுக்கு ஷை ஷையா ஆய்டுச்சுனா?! அதான் நெல்லை எடுக்கலையாக்கும்!!!!!

   கீதா

   நீக்கு
  6. மூன்றாவது விழி, 21 ஐத்தொட்டு விட்டதே...

   குளத்துக் கொக்கைப் பற்றிக் கொஞ்சம் நான் வர்ணிக்கிறேனே கீதா:)..//

   பாருங்க இதுக்கு நான் கொடுத்த கருத்தே இnங்கு வரவில்லை என்பதை இப்பதான் பார்த்தேன்!!!!!!!

   உங்கள் வர்ணனையை ரசித்தேன் அதிரா!!! நல்லா எழுதியிருக்கீங்க...

   நீங்க முன்ன வந்த போதே தொடங்கியதுதான்னு நினைக்கிறேன் இந்த மூன்றாவது விழியில்.....ஆனா பாருங்க நீங்க இடையில் வலைப்பக்கம் வராத போது உள்ள நாட்களைக் கணக்கிட்டால் 21 என்பது மிகக் குறைவுதானே....நானும்/நாங்களும் இடையில் அப்பப்ப வராமல் அல்லது பதிவு போடாமல் இருந்திருக்கிறேன். துளசியும் ரொம்ப பிஸி.

   2013 ல் வலை தொடங்கியும் 587 போஸ்ட் தான் வெளியாகியிருக்கின்றன. இப்பதான் அதையும் பார்த்தேன்!!!! ஏனோ அதைப் பற்றி நினைப்பதில்லை என்பதால் புள்ளிவிவரம் பார்க்கும் வழக்கமும் இல்லாமல் போய்விட்டது.

   மிக்க நன்றி அதிரா

   கீதா

   நீக்கு
 7. நெல்லை உங்க கருத்து பார்த்து செமையா சிரிச்சிட்டேன்.

  நாளை வந்து எல்லோருக்கும் பதில் சொல்கிறேன். தாமதத்திற்கு ஸாரி சொல்லிக் கொள்கிறேன். இன்று நெருங்கிய உறவினர் வருகை...நேரம் சரியாக இருந்தது. நாளையும்.தான். இருந்தாலும் நாளை வந்துவிடுவேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
 8. படங்கள் எல்லாம் மிக அருமை கீதா.
  கானகத்தில் போய் எடுத்தது போல அழகு.
  பசுமையும் கண்களை நிறைக்கிறது.
  குளத்து கொக்கு அழகு.காணொளிகள் அருமை.
  இந்த மாதிரி பசுமையை பார்த்து கொண்டு நடப்பது மன மகிழ்ச்சியை தரும்.

  நான் எடுத்த கொக்கு வெளிநாட்டு படம் தான். இனபெருக்க சமயத்தில் பறந்து அநத் பகுதிக்கு வந்து விட்டு பின் தன் நாட்டுக்கு திரும்பி போய் விடும்.

  தாமரை இலையில் நடக்கும் கொக்கும் நானும் காணொளி, மற்றும் படம் போட்டு இருக்கிறேன் ஒரு பதிவில், தேட வேண்டும். திருக்கோஷ்டியூர் கோயில் அருகே என்று நினைக்கிறேன்.

  பறக்கும் போது எடுத்த கொக்கின் படம் அழகு.

  தகவல்கள் நன்றாக சேகரித்து இருப்பதும் அருமை.
  தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த மாதிரி பசுமையை பார்த்து கொண்டு நடப்பது மன மகிழ்ச்சியை தரும்.//

   ஆமாம் அக்கா அவை எல்லாம் பழைய பகுதியில் இருந்தப்ப எடுத்தவை. அங்கு ஏரி சுற்றி வீடுகள் இருந்தாலும் நல்ல பசுமை பூங்கா மரங்கள் என்று நடை ரொம்ப நன்றாக இருக்கும். இங்கு ஒரு ஏரி மொட்டையாக எந்தச் செடிகளும் இல்லை. அங்கு எடுத்தவை பல பறக்கும் காணொளிகள்.

   பெரிய ஏரி அது நிறைய மரங்கள் இருக்கும். ஆனால் எனக்கு என்னவோ பழையபகுதி ஏரி போல் இல்லை இங்கு பறவைகள் ...

   //நான் எடுத்த கொக்கு வெளிநாட்டு படம் தான். இனபெருக்க சமயத்தில் பறந்து அநத் பகுதிக்கு வந்து விட்டு பின் தன் நாட்டுக்கு திரும்பி போய் விடும்.//

   ஓ! புரிந்தது கோமதிக்கா...

   //தாமரை இலையில் நடக்கும் கொக்கும் நானும் காணொளி, மற்றும் படம் போட்டு இருக்கிறேன் ஒரு பதிவில், தேட வேண்டும். திருக்கோஷ்டியூர் கோயில் அருகே என்று நினைக்கிறேன்.//

   ஆஹா! அது ரொம்ப அழகா இருக்கும். நான் எடுக்க முடியவில்லை. சரியாக பேட்டரி சக்தி குறைந்து விழி மூடிக்கொண்டது. அதன் பின் எடுப்பதற்கு வாய்க்கவும் வில்லை. கோமதிக்கா நீங்க எடுத்ததை யுட்யூபில் போட்டுவிடுங்க.

   //பறக்கும் போது எடுத்த கொக்கின் படம் அழகு.

   தகவல்கள் நன்றாக சேகரித்து இருப்பதும் அருமை.//

   மிக்க நன்றி கோமதிக்கா!

   கீதா

   நீக்கு
 9. என் கொமெண்டை இடம் மாறி மேலேயே போட்டுவிட்டேன், மற்றதோடு:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதனால் என்ன லேடி அம்பாணி!!!!

   எங்கு போட்டாலும் தளத்துல தானே போட்டிருக்கீங்க!!!

   மிக்க நன்றி அதிரா

   கீதா

   நீக்கு
 10. படங்கள் அத்தனையும் அழகு, தகவல்களும் அருமை...

  பதிலளிநீக்கு
 11. படங்கள் வழக்கம் போல அழகு.

  தகவல்கள் சொல்லிய விதம் அருமை

  மூன்று காணொளிகளும் சிறப்பு

  பதிலளிநீக்கு
 12. படங்கள் மற்றும் தகவல்கள் அனைத்தும் சிறப்பு. படங்கள், காணொளிகள் எடுக்க அதிக நேரம் தேவை - குறிப்பாக இயற்கையையும் பறவைகள், விலங்குகள் போன்றவையும் எடுக்க. எல்லாம் சிறப்பாக வந்திருக்கின்றன. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி இயற்கையையும், பறவைகள் விலங்குகள் எல்லாம் எடுக்க நேரம் எடுக்கும். கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சேமித்து திருத்தி சேர்த்திருக்கிறேன். அதனால் பதிவு போடவும் நேரம் எடுக்கிறதுதான் ஜி.

   எல்லாம் சிறப்பாக வந்திருக்கின்றன. பாராட்டுகள்.//

   மிக்க நன்றி வெங்கட்ஜி.

   கீதா

   நீக்கு