திங்கள், 29 மே, 2023

சில்லு சில்லாய் – 10 - இயற்கையும் செயற்கையும்

 


(Reed Bed) நாணல்/சம்பு நீர்த்தாவர படுகை - செயற்கை நாணல்/நீர்த்தாவர படுகை

இயற்கையான Reed Bed - சம்பு - நீர்த்தாவரம் - சம்பு தாவரப்படுகை. இதைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில் வரும்
இயற்கையான படுகை

https://youtu.be/HwLa4JVyWd0

வீட்டருகில் இருக்கும் ஏரியில் இந்த நீர்த்தாவரப்படுகையின் ஒரு சிறிய பகுதி நகரத் தொடங்கியது. காணொளியில் பார்த்தால் தெரியும். அதைப் பார்த்ததும் என் மனதில் ஒரு கற்பனை. 

நாம் ஒரு தீவில் வசிக்கிறோம். அத்தீவில் நாம் வசிக்கும் பகுதி திடீரென்று நகரத் தொடங்கினால் எப்படி இருக்கும்?!!!! விரிந்த கற்பனையில் மலர்ந்தவை தொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது! இயற்கையில் தான் எத்தனை விந்தைகள்!

இப்படியான வேறொரு படுகை நகரத் தொடங்கிய போது அதில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்திருக்கும் பறவைகள் என்ன செய்தன என்பதைக் கண்ட போது என் கற்பனை இன்னும் விரிந்தது. 

அப்பறவைகளின் Reaction காணொளியுடனும், படங்களுடனும் விரைவில் வரும். இந்த நீர்த்தாவர படுகை பற்றியும், செயற்கையாக உருவாக்கப்படுகின்ற செயற்கை நாணல் படுகை பற்றிய தகவல்கள்களுடனும்  வரும். பதிவு ஓரளவு தயாராக இருந்தாலும், இப்பதிவு பெரிதானதால் அதைச் சேர்க்கவில்லை. 

Stay Tuned to our posts!


சில்லு - 2 - பெய் எனப் பெய்யும் மழை!

இது வள்ளுவர் தாத்தா சொன்ன மழை அல்ல!


வறண்ட மேகங்கள் 

மழையை பிரசவிக்கமுடியாத

மலட்டு மேகங்கள்

விடை பெற்றன

மனத் தாங்கலோடு..

அடுத்து

வந்த

சூரியன்

கடுத்து நோக்கினான்

வனமழித்துமணல் விற்ற

உலகை...  [மீள்]

-------எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்

நம் எங்கள் ப்ளாக் ஸ்ரீராமின் வியாழன் பதிவில் அவர் எழுதியிருந்த கவிதையில் கற்பனையைப் பாருங்கள்! எப்படியான கற்பனை! நான் மிகவும் ரசித்தேன். இது வேதனை, ஆதங்கத்தின் வெளிப்பாடு.

இந்த ஆதங்க கற்பனைக்கு ஆபத்தான பதிலை அறிவியல் உலகம் கொடுத்து 50 வருடங்கள் ஆகிறது!

ஆமாம்! எப்படி செயற்கைக் கருத்தரிப்போ அது போல  செயற்கை மழையும் உருவாக்கப்படுகிறது!


செயற்கை மழை என்றதும் செயற்கையாக மேகத்தை உருவாக்கி மழையைத் தருவிப்பது அல்ல. எங்கு மழை பெய்ய வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அந்த இடத்திற்கு நேர் மேலே, வளி மண்டலத்தில் இருக்கும் மேகங்கள் வரும் போது, வேதிப்பொருட்களை தூவி மழை மேகங்களாக்கி மழையைத் தருவிப்பதாகும். இதுதான் Cloud Seeding. தமிழில் மேக விதைப்பு. இப்படி உருவாக்குவது 50 ஆண்டுகளுக்கு முன்னிருந்து நடைபெறுகிறதாம்.

இதில் மூன்று படி நிலைகள் இருக்கின்றன. 1. காற்றழுத்தத்தை உருவாக்குதல் 2. மழை மேகங்களைத் திரட்டுதல் 3. மழை மேகங்களைக் குளிரச் செய்தல். (நன்றி - கூகுள்)

ஸ்ரீராமின் கவிதைக்கு வருகிறேன். மனிதர்களின் சுயநலம் பூமியை வறளச் செய்யும் போது மேகம் எப்படி மழையைச் சுமந்து வரும்? சூரியனுக்குக் கோபம்! சுட்டெரிக்கிறான். பூஜ்ஜியம் டிகிரி வெப்ப நிலைக்கு மேல் இருக்கும் வெப்பமான மேகங்கள் மழையை உருவாக்குவதில்லை. எனவே அவற்றின் மீது சில்வர் அயோடைட் மற்றும் உலர் பனிக்கட்டிகளைத் தூவி மேகங்களைக் குளிரச் செய்து நீர் பனிக்கட்டியாகிட அதிக அடர்த்தியைத் தாங்காமல் உடைந்து வானிலையில் ஏற்படும் வெப்ப மாற்றத்தினால் பனிகட்டியானது நீராகி மழையாகப் பெய்கிறது.


சில நேரங்களில் திரண்டு வரும் கார்மேகங்கள் நிறைமாத கர்ப்பிணியாய் இதோ இப்போது மழையை பிரசவித்து பரவசம் தரப் போகிறது என்று நாம் எதிர்பார்த்திருக்க அதுவோ, “இங்கு பிரசவித்தால் இவர்கள் எங்கே பாதுகாக்கப் போகிறார்கள்” என்று நகர்ந்து சென்று தன் பிறந்த வீட்டில் – அட! கடல்தாங்க – பிரசவித்துவிடும்!

சில சமயம் பொழியாமல் அப்படியே நிற்கும். காரணம் மேகங்கள் அதிகளவு குளிரடைந்திருப்பதால் இந்த நிலை உருவாகிறதாம். இந்த நிலையில் செயற்கை மழை உருவாக்கம் முறையின் மூன்றாம் நிலையை  மட்டும் பயன்படுத்தி மழையை உருவாக்க முடியுமாம். சிறிய விமானம் மூலம் வெள்ளி அயோடைடு மற்றும் உலர் பனியை தூவினால் குளிரடைந்த நிலை கலைக்கப்பட்டு மழை பெய்யத் தொடங்கி விடும்.

முதலில் அமெரிக்க வேதியியல் விஞ்ஞானி செயற்கை மழை உருவாக்கத்தைக் கண்டுபிடித்து அவருக்குப் பின் வந்த விஞ்ஞானிகள் படிப்படியாக மேம்படுத்தி வெற்றியடைய, சீனாவுக்குப் பொறுக்குமா? சீன நிபுணர் சாங் சியாங் குழுவினர் நவீன முறையில் செயற்கை மழையை தருவித்து சாதனை படைத்தனராம். இன்றளவும் செயற்கை மழை உருவாக்கத்தில் சீனா நாடு முன்னணி வகிக்கிறது! போட்டி போட்டு சீனா முன்னாடி நிக்கும்ன்றது தெரிஞ்சதுதானே! வியப்பொன்றுமில்லை.

Artificial rain eases Asia's drought என்று செய்திகளும் பார்க்க நேர்ந்தது.

As a heat wave pushes temperatures up to nearly 50 C, a recent video released by the United Arab Emirates shows a city in the arid nation lashed by torrential rain -- the result of a national cloud-seeding operation.

The program seen in the video, which was reported by the U.K.-based Independent newspaper, is just one example of emerging economies, particularly China, making their own weather to address the threat posed by droughts and other extreme events made more likely by climate change.

இந்தியாவிலும் நாக்பூர், சோலாப்பூர், ஹைதராபாத், அஹமதாபாத், ஜோத்பூர் மற்றும் சமீபத்தில் வாரணாசி போன்ற இடங்களில் செயற்கை மழையை உருவாக்கி 60-70 சதவிகிதம் வெற்றி பெற்றிருப்பதாகச் செய்தி. கூடவே தில்லி, ஹரியானா பகுதிகளில் காற்றின் மாசுக்கட்டுப்பாட்டிற்காகச் செயற்கை மழையை உருவாக்கி காற்றிலுள்ள நச்சுத் தன்மையை அகற்ற வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு, யோசனைகளும் வழங்கப்படுகின்றதாம்.

முன்பெல்லாம் மழை நாட்களில் வீட்டின் முற்றத்தில் பானைகள், அண்டாக்களை வைத்துப் பிடிப்பது வழக்கம். மழைத்தண்ணீர் சுத்தமானது என்று. செயற்கை மழை உருவாக்கம் மிகுந்தால் நான், நெல்லை எல்லாம் எப்படி நனைந்து களிப்பதாம்! காற்றில் நச்சை நீக்கத் தண்ணீரில் நச்சா!! ஆண்டவா லோகத்தை ரட்சிக்கு!

இதைப் பற்றி இங்கு அதிகம் சொல்லவில்லை. வேறு ஒரு வடிவத்தில். கொஞ்சம் ஆராய்ச்சி தேவை. இயற்கையை வென்றுவிட்டதாக மனிதன் நினைக்கலாம்....ஆனால் உலகை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறான் மனிதன் என்பதில் ஐயமில்லை.


------கீதா


54 கருத்துகள்:

 1. ஆஹா படுகை புதுப்பெயராக இருக்குது, படுகை என்றால் எப்படிச் சரிய வைப்பது.. படுக்க வைப்பது.. அதாவது நெற்கதிர்களை அப்படிச் செய்துதானே பின்பு வெட்டுவினம், அதுதானாக்கும் என வீடியோப் பார்த்தேன், அதிலும் புற்கள் மட்டுமே தெரிஞ்சன படுக்கவில்லை ஹா ஹா ஹா..

  இன்னொன்று கீதா, உங்களின் வீடியோ ஓடி முடிஞ்சதும், அப்படியே அடுத்து என் இன்று போட்ட ரியூலிப்ஸ் வீடியோ வந்து நின்றதே ஹா ஹா ஹா ஒரே குஷியாகிட்டேன்ன்ன்...:)

  பதிலளிநீக்கு
 2. இங்கு மழை வேண்டாமே என நினைக்கிறேன் நான், அங்கு மழையை செயற்கை ஆக்கி வரவைக்கப்போகினமோ.. என்ன கொடுமை.. இதனால்தான் இனி உலகம் அழியப்போவது உறுதி...

  பதிலளிநீக்கு
 3. ஸ்ரீராமின் கவிதை அழகு.. சூரியன் என்றாலே கடுப்பானவர்தானே.. அவரே கடுப்பாகிட்டார் என எழுதியிருக்கிறார் அப்போ எப்படி இருக்கும் எனக் கற்பனை பண்ணினேன் ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
 4. //நாம் வசிக்கும் பகுதி திடீரென்று நகரத் தொடங்கினால் எப்படி இருக்கும்?!!// - ஒன்றும் பயமாக இருக்காது. ஆனால் அந்தப் பகுதி கடலை நோக்கி நகர்ந்தால்தான் பயம் அதிகமாகும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை, நான் சொன்னது தீவு. தீவே கடலின் மீதுதானே....பல பல வருடங்கள் முன் நிலங்கள் drift ஆகி ஆகித்தானே இப்போதைய நில அமைப்பு இப்போதுமே நிறைய மாற்றங்கள் நடந்து கொண்டேதானே இருக்கிறது. தீவே கடலின் மீது அதில் நாம் வசிக்கும் பகுதி திடீர்னு நகரத் தொடங்கிச்சுனா? கேக், இனிப்புகளில் நாம் துண்டு போடும் போது ஓரத்தைதானே முதலில் நகர்த்துவோம் அப்படி....நகர்ந்துச்சுனா?!!! கடலில் தானே நம் நிலம் மிதக்கும்! காற்றடிக்கும் திசையில் போக... தண்ணீரின் ஓட்டம், அலைகள் நகர்த்த எந்தத் தீவோடு போய் இணையுமோ? அல்லது எந்த நாட்டின் கரையோரம் ஒதுங்குமோ?!!!! இதுவிரிந்து வரும்.....ஆனா என்னன்னா கீதாக்கு எல்லாமே நேரம் எடுக்கும் எனவே தாமதமாகும்.

   மிக்க நன்றி நெல்லை

   கீதா

   நீக்கு
  2. நெல்லைத்தமிழனோ இங்கின 1ஸ்ட்டூஊஊஊஉ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... இப்பவும் நாம் இருக்கும் உலகம் சுத்திக்கொண்டிருக்குதெனத்தானே சொல்லீனம் ஆரு கண்டா ஹா ஹா ஹா

   நீக்கு
  3. ஹாஹாஹா உலகம் சுத்துதுதான் அதான் இரவும் பகலும்!!!!

   கீதா

   நீக்கு
 5. சைனா செய்யும் பல செயல்கள் (இயற்கையிடம் வம்புக்குப் போவது) அதற்குப் பெரிய ஆபத்துகளை உண்டாக்கியிருக்கிறது. இது பற்றி வெளியில் விஷயம் வருவதில்லை. மூடி மறைக்கப்படுகிறது.

  சமீபத்தில் ஒரு காணொளியில், சைனாவில் ஒரு ஆற்றின் போக்கை, வளைந்து வளைந்து செல்லாதபடி, நீளமாகச் செல்லும்படி மாற்றி அமைத்து, அந்தப் பகுதியில் வெள்ளமே வராமல், தண்ணீரை முழுவதுமாக பூமியே உறிஞ்சிவிட்டது, ஆறு செத்துப்போச்சு என்று ஒருவர் (அந்தப் பணியில் ஈடுபட்டவர்) சொல்லியிருந்தார். அதுபோல, முன்பு, பறவைகளால் தானியங்கள் விளைச்சல் குறைகிறது என்று, பெரும் கூட்டத்தைத் திரட்டி, டமாரங்கள் அடித்து எல்லாப் பறவைகளையும் கொன்றார்களாம் (அரசு உத்தரவு). அதனால் பூச்சிகள் இனப்பெருக்கம் மிக அதிகமாகி, வெட்டுக்கிளிகள் நிறைய உற்பத்தியாகி 3 வருடங்களுக்கு மேல் அந்தப் பகுதியில் பஞ்சம் கொடூரமாக இருந்ததாம்.

  கம்யூனிச அரசு என்பதால் அவர்கள் என்ன வேண்டுமானாலும் சோதனை செய்வார்கள், அநியாயமாக நடந்துகொள்வார்கள் (நம் எல்லைப் பகுதியில் துப்பாக்கி, பீரங்கி போன்றவை உபயோகப்படுத்தக்கூடாது என்று இரு நாடுகளுக்கும் ஒப்பந்தம். அதனால் சீன போர்வீரர்களிடம், காங்க்ரீட்டால் ஆன துண்டைத் தாங்கிய வலிமையான கம்பு, அப்புறம் வேலிப்பகுதியில் உபயோகிக்கும் முள்கம்பிகளுடன் கூடிய கம்புகளை ஆயுதங்களாக்கித் தாக்குவாங்களாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சைனா உலக அரங்கில் ஒண்ணாம் நம்பர் --------------. அது செய்வது எல்லாம் நீங்கள் சொன்னது போல் இயற்கைக்கு எதிரே ஆபத்துகளைக் கொண்டு வந்திருக்கிறது. ஆமாம் நிறைய வெளியில் தெரியலை.

   ஆற்றின் போக்கு மாற்றி வற்றியது தெரியும். ஆனால் அடுத்த விஷயம் புதிது. வெட்டுக்கிளிகள் விஷயம். இயற்கையின் சுழற்சியில் நாம் தலையிட்டால் அது நம்மை வீழ்த்திவிடும் என்பது உறுதி.

   அடுத்த பாரா - ஆமாம்...எல்லைப் பகுதியில் காட்டுமிராண்டித்தனம். இப்படி இந்தக் குணம் வருவதற்கும் ஏதேனும் புகட்டுவாங்களோ என்னமோ?!

   மிக்க நன்றி நெல்லை

   கீதா

   நீக்கு
 6. இந்திராவின் காலத்தில் தில்லியில் செயற்கை மழையை உருவாக்கினதை நான் பத்திரிகையில் படித்திருக்கிறேன் (உடனே வயதைக் கண்டுபிடிக்க முயலாதீர்கள். போன ஜென்மத்தில் நடந்தது அது)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் நிழலாக நினைவு வருகிறது அந்தச் செய்தி.

   ஹிஹிஹி இல்லைனா அண்ணன் வயசு தங்கச்சிக்குத் தெரியாதாக்கும்!!! (இதுவும் போ ஜெ!!!!!)

   மிக்க நன்றி நெல்லை

   கீதா

   நீக்கு
 7. காணொளி அருமை. இப்போதான் இந்த மாதிரி பார்க்கிறேன். காவிரி கரையோரத்தில் நாம் உட்கார்ந்திருந்து வெள்ளத்தில் மெதுவாக நமக்குத் தெரியாமல் நாம் உட்கார்ந்திருக்கும் பகுதி தண்ணீரில் சென்றால்....ஐயோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா....அப்படியே படகில் செல்வது போல் போய்டலாம் அடுத்த நிறுத்தம் வரும் வரை. ஆனால் இடையில் பாறை அல்லது தடுப்பில் மோதி உடைந்தாலோ!!!ஆஆஆஆஅ!!! இது அலறல்! நீஞ்சத் தெரியும்தானே!!! நேக்குத் தெரியுமாக்கும்!
   ஆமாம் அதுவும் நாணல் இருக்கும் மண் பகுதி..ஓரத்துல உட்காரக் கூடாது!..அது எப்போது நகர வாய்ப்புண்டு என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன், நெல்லை

   மிக்க நன்றி நெல்லை

   கீதா

   நீக்கு
 8. மழையின் அடிப்படை நீர் சுழற்சி தான். கடல் நீர் ஆவியாகி மேகங்களாய் நிலத்திற்கு வந்து நிலத்தின் மேல் குளிர்ந்து மழையாகி பொழிகிறது. அந்த மழை நீர் புல்லுக்கும் பயிருக்கும் பொசிந்தது போக நதிகளில் ஓடி மீண்டும் கடலில் கலக்கிறது.

  செயற்கை மழை என்பது ஊசி போட்டு பிரசவிக்க வைப்பது போன்று தான். மழை மேகத்தில் உள்ள நீராவி மழைத் துளி ஆக உருவெடுக்க ஒரு தூண்டுதல் தான் செயற்கை மழையின் உத்தி. அப்படி மழை உண்டாகா விட்டாலும் மேகத்தில் உள்ள நீராவி எங்கும் செலவதில்லை என்பதைக் கருதவேண்டும். அந்த ஆவி எங்கேயாவது குளிர்ந்து மழை பெய்யும். சில சமயங்களில் புயலாக உருவெடுக்கும்.

  நகரும் தீவுகளை காயல்களில் காண முடியும்.

  ஸ்ரீ ராம் என்ற சூரியனுக்கு விளம்பரம் தேவையா?? (கவிதையில் கடுத்து பார்க்கும் கதிரவன் அவர் தானோ? )

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜெ கு அண்ணா நீர் சுழற்சிதான் அடிப்படை.

   ஆமாம் செயற்கை மழை உருவாக்கத்தில் சில சமயம் புயல் உருவாக்கம் துபாய், அபுதாபி போன்ற பகுதிகளில் செய்தார்களாமே..

   ஆமாம் காயல்களில் நகரும் தீவுகளைக் காணலாம். சில சமயம் இடத்தின் அடையாளமே மாறிப் போயிருக்கும் .

   //ஸ்ரீ ராம் என்ற சூரியனுக்கு விளம்பரம் தேவையா??//

   ஹாஹாஹாஹா விளம்பரம் தேவையில்லைதான். ஆனால் இது விளம்பரம் இல்லை அண்ணா. நான் அந்தக் கற்பனையை ரசித்ததும் அதற்கு அங்கு அன்று சொல்லாமல் இங்கு ப்திவாக ...ஒரு பதிவு தேற்ற முடிந்ததே!!!!!

   மிக்க நன்றி அண்ணா

   கீதா

   நீக்கு
  2. ஆஹா..  நன்றி JKC ஸார்...  தன்யனானேன்,

   நீக்கு
 9. கீதா என் கொமெண்ட்ஸ் மோனிங் போட்டனே? ஸ்பாம் ஐச் செக் பண்ணுங்கோ ஒருக்கால்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா ஒரு கருத்து வந்திருந்தது போட்டுவிட்டேனே...வேறு இல்லை...உங்கள் கருத்து மேலே நெல்லைக்கு வந்தது அங்கு இருக்கிறதே

   கீதா

   நீக்கு
  2. அச்சச்சோ மூன்று கொமெண்ட்டுகள் போட்டனே, பின்பு இன்னும் அதை வெளிவிடவில்லையே எனப் பார்த்த இடத்தில்தான் நெ தமிழனுக்குப் பதில் போட்டுவிட்டுப் போனேன்... என்னாச்சோ.. சரி நாளைக்கு வருகிறேன்.. இப்போ ரயேட் ஆகிட்டேன்.

   நீக்கு
  3. மெதுவா வாங்க அதிரா அவசரமில்லை. நான் வழக்கமாகவே ஒரு வேர்ட் டாக்குமென்டில் "பதிவுகளுக்கான கருத்துகள், பதில்கள்" என்று அதில் போட்டு வைத்துவிட்டுவிடுவது வழக்கம். ஏனென்றால் சிலப்போ கமென்ட் போவதில்லை....அப்புறம் மீண்டும் அடிக்க வேண்டும் சில சமயம் கருத்துகள் டக்கென்று மறந்துவிடும்......அதனால இப்படி அடித்து வைத்துக் கொண்டு வலைக்கு வரப்ப அதை அப்படியே Copy paste செய்து போட்டுவிடுகிறேன். கருத்து வந்த பிறகு அதை அழித்துவிடுவது வழக்கம். சில சமயம் வந்த கருத்தும் காணாமல் போவது வழக்கம். எனவே உறுதியான பின் வேர்டில் அழித்துவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன். இல்லைனா இருக்கும் நேரத்தில் வலைப்பக்கம் வருவதும், பதிவு எழுதுவதுமே பல சமயங்களில் சிரமமாக இருக்கும் போது....இது வசதியாக இருக்கிறது.

   கீதா

   நீக்கு

 10. நீர்த்தாவரப்படுகை நகருவது காணொளியில் தெரிந்தது. படுகை நகருவதால் எழுந்த எண்ணமும் உங்கள் கற்பனையும் அதில் தொடுக்கப்பட்ட மாலைகளும் நன்றாக இருக்கும். ஒவ்வொன்றாக மலரட்டும்.

  //கூடு கட்டி இனப்பெருக்கம் செய்திருக்கும் பறவைகள் என்ன செய்தன என்பதைக் கண்ட போது என் கற்பனை இன்னும் விரிந்தது. //

  கூடு கட்டி இனப்பெருக்கம் செய்த பறவைகள் என்ன செய்தன என்பதை அறிந்து கொள்ள ஆவல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீர்த்தாவரப்படுகை நகருவது காணொளியில் தெரிந்தது. படுகை நகருவதால் எழுந்த எண்ணமும் உங்கள் கற்பனையும் அதில் தொடுக்கப்பட்ட மாலைகளும் நன்றாக இருக்கும். ஒவ்வொன்றாக மலரட்டும்.//

   மிக்க நன்றி கோமதிக்கா

   கூடு கட்டி இனப்பெருக்கம் செய்த பறவைகள் என்ன செய்தன என்பதை அறிந்து கொள்ள ஆவல்.//

   இதில் கூட வலது புறம் நுனியில் கொஞ்சம் கருப்பாகத் தெரியும் கூர்ந்து பார்த்தால். அது பறவைகள்தான்.

   ஆனால் வேறொரு நாள் நான் நடந்து கொண்டிருந்த போது வேறொரு படுகை நகர்ந்திட....அதில் கூடு கட்டியவை பற்றி அடுத்த பதிவில். ஆமாம் நீங்கள் ஆர்வத்துடன் பார்ப்பீங்கன்னு தெரியும் கோமதிக்கா.

   மிக்க நன்றி கோமதிக்கா

   கீதா

   நீக்கு
 11. ஸ்ரீராம் கவிதை அருமை, அதை தொடர்ந்து எழுந்த எண்ணம் அருமை. இயற்கைக்கு மாறாக செய்யும் அனைத்தும் பின் விளைவுகளை தரும்.

  //இயற்கையை வென்றுவிட்டதாக மனிதன் நினைக்கலாம்....ஆனால் உலகை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறான் மனிதன் என்பதில் ஐயமில்லை.//

  நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

  பதிலளிநீக்கு
 12. ஸ்ரீராம் கவிதை அருமை, அதை தொடர்ந்து எழுந்த எண்ணம் அருமை. இயற்கைக்கு மாறாக செய்யும் அனைத்தும் பின் விளைவுகளை தரும்.//

  ஆமாம் அவர் கவிதை நல்லாருக்கு. மிக்க நன்றி கோமதிக்கா.

  //நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.//

  மிக்க நன்றி கோமதிக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
 13. செயற்கைப் படுகை எப்படி  இருக்கும்?  அதனால் பயன் ஏதும் இருக்குமா?  அல்லது நம் வீட்டு டெரசில், வாசலில் போட்டுக்கொள்ளும் செயற்கை புல் போல அலங்காரத்துக்குதானா...  பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அலங்காரத்துக்கானது இல்லை ஸ்ரீராம். செயற்கை மழை போல் ஆபத்தானது இல்லை. நல்ல விஷயம்தான். பதிவில் சொல்கிறேன்.

   மிக்க நன்றி ஸ்ரீராம்

   நீக்கு
 14. திடீரென்று அந்த இடம் நகர ஆரம்பித்தால்?  சுவாரஸ்யமான கற்பனை.  ஏதேதோ கற்பனை வருகிறது.  நம் இடம் மட்டும் நகருமா?  அந்தப் பிரதேசமே நகருமா?  கரையில் நிற்பவர்களிடம் "அந்தப் பக்கம் போறவங்கள்லாம் எங்க பூமிக்கு ஓடியாங்க...   ஆளுக்கு அம்பது ரூவா கொடுத்தாப் போதும்னு சொல்லி ஏத்திக்கலாம்.  ஆபத்தான பகுதிக்கு போகிறது என்று பார்த்தால் குடதித்து வெளியில் (?) ஓடி வந்து விடலாம்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கரையில் நிற்பவர்களிடம் "அந்தப் பக்கம் போறவங்கள்லாம் எங்க பூமிக்கு ஓடியாங்க... ஆளுக்கு அம்பது ரூவா கொடுத்தாப் போதும்னு சொல்லி ஏத்திக்கலாம். ஆபத்தான பகுதிக்கு போகிறது என்று பார்த்தால் குடதித்து வெளியில் (?) ஓடி வந்து விடலாம்!!!//

   ஹாஹாஹாஹா ஹைஃபைவ் ஸ்ரீராம். என் கற்பனையிலும் இதுவும் இன்னும் வந்தது.....எழுத வேண்டும்........ முயற்சி செய்கிறேன்.

   உண்மையிலேயே நகரும் தீவுகள் இருக்கின்றன ஸ்ரீராம். சிறிய தீவுகள். சில இடங்களில் முழு பிரதேசமும்...சில இடங்களில் ஒரு சிறிய பகுதி...

   இந்த ஏரிப் பகுதிகளில் நடைப்பயிற்சி செய்யும் போதும் இயற்கையை கூர்ந்து கவனிக்கும் போது பறவைகளைப் போன்று என் கற்பனையும் ரொம்பவே விரிகின்றது. ஆனால் வீட்டிற்கு வரும் முன் பறந்துவிடுகிறதே என்று ஒரு முறை என் கற்பனையை மொபைலில் குரல் பதிவாகப் பதிந்தேன் அங்கு....அப்ப அங்கு கடந்து சென்றவர் தமிழர் போலும்....அவர் உடனே என் அருகில் வந்து, "தமிழா நீங்க" என்று கேட்டு பேசிவிட்டுச் சென்றார். ஆ! நாம் நம்ம மக்கள் இருக்கும் பகுதி...கவனமாக இருக்கணும் என்று நினைத்துக் கொண்டேன். அதன் பின் ஒரு ஹிந்திக்காரர், " நான் என்ன வீடியோ எடுக்கிறேன் மூன்றாவது விழியில், அலைபேசியில் என்ன பதிகிறேன் என்று கேட்டதும் "ஆ! நாம் ரொம்ப கவனிக்கப்படுகிறோம் என்று தோன்றியதும் கொஞ்சம் தயக்கம் வந்துவிட்டது!

   மிக்க நன்றி ஸ்ரீராம்.

   கீதா

   நீக்கு
 15. இதைப் படிக்கும்போது எனக்கு வேறொன்று ஞாபகத்துக்கு வருகிறது.  என் கற்பனையில் தோன்றிய ஒன்றை முன்பு பகிர்ந்திருந்தேன்.  தொடரும் சாலைப்பொழுகுவரத்து நெரிசலுக்கு தீர்வாக நகரும் சாலைகள்.  உதாரணமாக தேனாம்பேட்டை சந்துக்குள்ளிருந்து வரவே சிறிய நகரும் சாலை பின்னாட்களில் அமையலாம்.  அல்லது நடந்து வந்து மெயின் ரோடில் ஏறிக்கொண்டு எங்கு போகவேண்டுமோ அந்த திசையில் நகரும் சாலையில் ஏறிக்கொள்ளலாம்!  அதற்கு இரண்டு படிகள் உண்டு.  இடது ஓரம் மெதுவாய் சங்கரும் பகுதி.  நடுவில் வேகமாய் நகரும் பகுதி..!  இப்படிப் போனது கற்பனை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கற்பனை அசாத்தியம் ஸ்ரீராம். நானும் கற்பனை செய்து பார்த்துக் கொண்டேன். கண்டிப்பாக இது எதிர்காலத்தில் வரும் வாய்ப்பு இருக்கு. நம்ம மதன் கூட ஒரு துணுக்கு போட்டிருந்தார். உங்களுக்கு நினைவிருக்கும். சென்னை போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க எதிர்காலத்தில் வானில் தாழ்வாக ஹெலிகாப்டர்கள் பல பறப்பது போல்!! இப்போது இங்கு பங்களூரில் அந்தச் சேவையும் வந்துவிட்டது. பங்களூர் தெற்குப் பகுதியிலிருந்து வடக்குப் பகுதியில் இருக்கும் விமான நிலையத்திற்குச் செல்ல. ஆனால் என்ன கட்டணம் அதிகம். பெரும் வியாபாரிகளுக்கு உதவக் கூடும்.

   மிக்க நன்றி ஸ்ரீராம்.

   கீதா

   நீக்கு
 16. ஆ..  என் கவிதை..  நன்றி கீதா..  அவ்வப்போது கண்கலங்க வைக்கிறீர்கள்!  இருங்கள்..  உதட்டைக் கடித்து கலங்கும் கண்களை படபடத்து சரி செய்து கொள்கிறேன்!  அதை விஞ்ஞான பூர்வமாக அணுகி எனக்கே தெரியாத கோணத்தைக் கொடுத்து சிறப்பித்திருபப்தற்கு நன்றி கீதா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹாஹா உங்கள் உணர்ச்சியை சொல்லியிருக்கும் வரியை வாசித்துச் சிரித்துவிட்டேன்!!

   // அதை விஞ்ஞான பூர்வமாக அணுகி எனக்கே தெரியாத கோணத்தைக் கொடுத்து சிறப்பித்திருபப்தற்கு நன்றி கீதா.//

   அன்றே எபியில் சிறியதாகச் சொல்ல நினைத்து வேண்டாம் பதிவாகப் போடலாம் என்று நினைத்தும் அங்கும் கூட அப்படிச் சொல்லிச் சென்ற நினைவு.

   இப்ப நீங்கள் இதற்கும் ஒரு கவிதை எழுதுவீர்கள் என்ற எதிர்பார்ப்பு! மலட்டு மேகங்களும் பிரசவம் செய்யும் ஆனால்......

   நான் இதன் விளைவுகளை வைத்து வேறு வடிவத்தில் எழுதுகிறேண். கொஞ்சம் ஆராய்ச்சி தேவை என்பதால் தாமதமாகும். ஒரு Fiction என்று கொள்ளலாம் ஆனால் நடப்பதற்கும் சாத்தியம் அதிகம்.

   இதைச் சார்ந்து உங்களிடம் இருந்து ஒரு கவிதை எதிர்பார்க்கிறேன் ஸ்ரீராம், வியாழன் பதிவில்!

   மிக்க நன்றி ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
 17. இங்கு பொழிய போகிறது அங்கு பொழியப்போகிறது என்று நினைத்துக் காத்திருந்தால் வேறெங்கோ சென்று பொழியும் மழை பற்றி கூட ஒன்று எழுதி இருந்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனுப்பி விட்டீர்கள் ரசித்து வாசித்தேன். வியாழனில் இணைக்கவும். முன்பு வியாழனில் வரவில்லையா? நான் எப்படி விட்டேன்? பொறுக்கி வைத்தவை சில பழைய ஹார்ட் டிஸ்கில் சிறைக்கைதிகள் போல இருக்கின்றன. அது எப்போது ரிப்பெர் சரி செய்யப்பட்டு கோப்புகள் மீட்கப்படுமோ? தெரியவில்லை.

   மிக்க நன்றி ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
 18. இன்றளவும் நகரும் (மிதக்கும்) தீவுகள் நிறைய இருக்கிறது மக்கள் அதில் வாழ்கிறார்கள்.

  இந்த தீவுகள் சிறிய கிராம அளவுகளில் இருக்கிறது.

  படகு வீடுகளில் மக்கள் வாழ்வது போலவே...

  ஸ்ரீராம்ஜி அவர்களின் கவிதை அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நகரும்/மிதக்கும் தீவுகள் இருக்கின்றன கில்லர்ஜி. அது சில தீவுகள் மக்களே அமைத்துக் கொண்டவையாகவும் இருக்கின்றன. பொலிவியா வில் அப்படி உண்டு.

   ஆமாம் சிறிய கிராம அளவுகள் ஆனால் மக்கள் வசிக்கும் தீவுகள் நகர்வது டக்கென்று தெரியாது கில்லர்ஜி.

   மிக்க நன்றி கில்லர்ஜி

   கீதா

   நீக்கு
 19. திரும்படியும் வந்திருக்கிறேன் கீதா, நேற்று எழுதியது நினைவில்லை, புளொக்கில் என்னமோ எல்லாம் நடக்குது, ஸ்ரீராம் சொல்லித்தந்தமையால் இப்போ அடிக்கடி என் ஸ்பாம் செக் பண்ணி, பல கொமெண்ட்ஸ் அங்கிருந்து எடுத்துப் போடுகிறேன், இல்லை எனில் பார்ப்பதில்லை அதை, சிலர் கேட்பார்கள் என் கொமெண்ட் எங்கே என, சிலர் போட்டு விட்டு ஓடிவிடுவார்கள், திரும்பவந்து செக் பண்ணாட்டில் நமக்கும் தெரிய வாய்ப்பில்லை.. நான் எப்பவும் கொப்பி பேஸ்ட் பண்ணுவதில்லை, நேரடியாகவே ரைப் பண்ணுவேன், ஆனா பொதுவாக இங்கு பப்ளிஸ் பண்ணமுன் கொப்பி பண்ணுவேன், பின்பு போய் விட்டதெனில் விட்டுவிடுவேன்.. சரி என் புலம்பல் இருக்கட்டும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அதிரா நீங்க மறுபடியும்வந்திருக்கீங்க நன்றி அதற்கு, நான் வேர்டில் அடித்து விட்டு காப்பி செய்து போடுகிறேன். இப்படி ஆனால் டக்கென்று காப்பி செய்து போட்டுவிடலாமே.

   ஆமாம், ஸ்பாமில் சிக்கிக்கொள்ளும் சில சமயம்....அதை ஏன் கேக்கறீங்க கூகுள் ப்ளாகரில் நிறைய நடக்குது இது போல,,,

   நாங்கள் இடையில் ரொம்ப புலம்பித் தள்ளினோம் பலருக்கும் கருத்து போட முடியாமல் ப்ளாகர் படுத்தியது.

   இங்கு பவர் போய் போய் வருது. எனவே பதிலும் வேர்டில் அடித்து வைக்கிறேன்.

   மிக்க நன்றி அதிரா

   கீதா

   நீக்கு
 20. படுகை என்றதைப் பார்த்ததும், படுக்க வைக்கும் முறையாக்கும் எனத்தான் நினைச்சேன், நெல் அறுவடைக்கு முன் படுக்க வைப்பார்கள் எல்லோ அப்படி ஆக்கும் என... இது தாவரத்தின் பெயரே அதுதானோ... வருகிறேன் மிகுதிக்கு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ! அதிரா ஆமாம் அறுவடைக்கு முன் நெல் படுக்க வைப்பதுண்டு. இது நீங்கள் கேட்டிருப்பீர்கள் இல்லை என்றால் வாசித்திருப்பீர்கள், ஆற்றுப் படுகை என்று சொல்வதுண்டு இல்லையா? ஆற்றின் நீர் போக்கினால் மண் படிந்து அடுக்காக மாறி மேடாக இருக்குமே அது. அது போன்று நாணல், சம்பு (இதுவும் ஒரு நாணல்/தாழைச் செடி வகை) இவற்றிற்கும் இப்படி அடுக்கு உருவாகும். அதுதான் படுகை.

   இத்தாவரத்தின் பெயர் கொடுத்திருக்கிறேனே. சம்பு என்று. இதன் அடிப்பாகம் பாருங்க காணொளியில் தெரியும் படுகை. இதைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்க்கலாம்.

   மிக்க நன்றி அதிரா.

   கீதா

   நீக்கு
 21. வீடியோப் பார்த்தேன், வீடியோ முடிஞ்சதும் அதீஸ்பலஸ் வீடியோ வந்துதே ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹாஹா....வரும்....நான் பதித்துவிட்டு பார்த்ததும் வந்தது. துளசியும் சப்ஸ்க்ரைப் செய்திருக்கிறார் கமென்ட் போடாட்டாலும். நானும் சப்ஸ்க்ரைப் செய்திருப்பதால் அடுத்து வருதோ அல்லது சமீபத்தில் பார்த்ததால் இருக்கும்.

   மிக்க நன்றி அதிரா

   கீதா

   நீக்கு
 22. ஸ்ரீராமின் கவிதை நன்றாக இருக்கு, சூரியன் என்றாலே கடுப்பானவர்தானே:), அப்படியிருக்க மீண்டும் கடுப்பாக்கிட்டார் சூரியனை ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹாஹா . ஜெகு அண்ணா ஸ்ரீராமையே சொல்லியிருக்கிறார் பாருங்க......

   மிக்க நன்றி அதிரா.

   கீதா

   நீக்கு
 23. என்னாது செயற்கை மழையோ... ஏற்கனவே செயற்கையாக விளைவனவற்றைத்தான் உண்கிறோம், இதில் மழையும் செயற்கை எனில்.. இனி மழைநீரால், ஆறு குளம் ஏன் கடல்கூட செயற்கையாகிடப்போகுது..... ஆனாலும் இங்கு நமக்கு மழை வேண்டாம்.. என்கிறோம் ஸ்கொட்லாண்டில்:)) இப்போ நல்ல வெயில், ஆசையாக இருக்கு. ஆனா மழை தொடங்கினால் ஒரே மழையாகவே இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செயற்கை மழை நல்லதல்ல அதிரா. பூமியும், நீர் நிலைகளும் செயற்கை என்பதை விட முதலில் நச்சினால் பாதிக்கப்படும். கூடவே மனித இனத்திற்கும் நல்லதல்ல....

   மழை கொஞ்சமாகப் பெய்யட்டுமே அதிரா...அதீதமாக இல்லாமல்...பெய்யட்டும்

   மிக்க நன்றி அதிரா.

   கீதா

   நீக்கு
 24. வணக்கம் சகோதரி

  பதிவு அருமையாக உள்ளது. நகரும் தாவர படுகை காணொளியில் பார்த்து ரசித்தேன். அதுவும் செயற்கையா? அது செயற்கையாக உருவாக்கப்பட்டதால்தான் இப்படி தானாக நகர்கிறதோ?

  ஆறுகளிலும், நதிகளிலும் படகை வலித்து மனிதர்கள் நகர்வதை கண்டதும் அதற்கும் நகர்ந்து பார்க்க ஒரு ஆசை வந்து விட்டதோ என்னவோ?

  தங்கள் கற்பனையை ரசித்தேன். ஆனால் பயமாகவும் இருக்கிறது. நீங்கள் சொல்வது போல் அதில் அமர்ந்து இயற்கையை ரசிக்கும் போது அது சொல்லாமல் கொள்ளாமல் நகர்ந்து விட்டதெனில், நீச்சல் தெரியாதவர்களின் நிலை என்னாவது? எப்படியும் லைப் ஜாக்கெட் துணையுடன்தான் இதில் அமர வேண்டும். :))

  சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் கவிதை அருமை. அதனால்தான் அவரை கவியரசர் பட்டியலில் அன்றே நான் சேர்த்தேன்.

  செய்கை மழை முன்பு ஒரு முறை வரவழைத்தது நினைவிருக்கிறது. எங்கு இந்த சம்பவம் நடைபெற்றது என்பது மறந்து விட்டது. நீயூஸ்களில் எப்போதொ பார்த்து கேட்டிருக்கிறேன்.

  முன்பு மழைகாலங்களில் பெய்யும் இயற்கை மழை நீரை நீங்கள் சொல்வது போல் அண்டா, குண்டாக்களில் அம்மா வீட்டில் இருந்த போது பிடித்திருக்கிறோம் . சுத்தமான நீராகையால், சமையல் முதற்கொண்டு, துணிகள் துவைக்க, போன்ற அனைத்திற்கும் பயன்படும்.

  இந்த செயற்கை மழையில் அது போன்ற என்ன பயன்பாடுகள் கிடைக்கும்? நச்சை கலப்பதால், அது பெய்து வரும் நீரில் விவசாய வகைகளிலும் நச்சுக்கள் கலந்து மனித உயிர்களுக்கும் கெடுதலைதான் தரும்.

  /இயற்கையை வென்று விட்டதாக மனிதன் நினைக்கலாம்....ஆனால் உலகை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறான் மனிதன் என்பதில் ஐயமில்லை./

  நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  இந்தப் பதிவுக்கு நான்தான் தாமதமாக வந்துள்ளேன். நேற்று கண்கள் சிறிது தொந்தரவு தந்ததினால், நிறைய பதிவுகளை மிஸ் செய்தேன். மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கமலாக்க வாங்க....இது இந்தச் சம்பு எனும் நீர்த்தாவரப் படுகை செயற்கை அல்ல. இயற்கையான ஒன்று. செயற்கை பற்றி இனிதான் வரும்.

   ஆறுகளிலும், நதிகளிலும் படகை வலித்து மனிதர்கள் நகர்வதை கண்டதும் அதற்கும் நகர்ந்து பார்க்க ஒரு ஆசை வந்து விட்டதோ என்னவோ?//

   ஹாஹாஹாஹா எனக்கு என்ன தோன்றியது என்றால், இந்த ஏரில எந்தப் பக்கம் நகரந்தாலும் மக்கள் குப்பையை எம் மேல வீசி எறியறாங்க ஒரே அழுக்காகீது....தொல்லை தாங்கலைப்பான்னு நகர்ந்து கொண்டே இருக்கலாம்னு நகர்ந்திருக்கும்னு!!!!

   செயற்கை மழை நல்லதல்ல கமலாக்கா. ஆனா பாருங்க வறட்சியை போக்கணும்னு இப்படி...அதுக்குப் பதிலா கட்டிடங்கள் கட்டுவதையும் காட்டை அழிப்பதையும் நிறுத்தி நீர்நிலைகளைப் பெருக்கினால் நல்லது இல்லையா? என்னவோ போங்க...

   உங்கள் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும்

   மிக்க நன்றி கமலாக்கா

   கீதா

   நீக்கு
 25. நகரும் நீர்த்தாவரம் கண்டதுண்டு. காணொளிப் கண்டேன். நாம் இருக்கும் தீவு நகர்ந்தால்..... கற்பனை செய்து பார்த்தேன்..... ஆஹா.... நல்லதொரு உலா வரலாம். என்ன நீங்கள் சொல்வது போல நடுவில் எங்கும் முட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்..,.

  செயற்கை மழை....... சோதனை என்ற பெயரில் செய்யப்படும் முரண்பாடுகள் ஆபத்தை விளைவிக்கும்......

  சில்லு சில்லாய் பதிவுகள்..... தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 26. நகரும் நீர்த்தாவரம் கண்டதுண்டு.//

  நீங்களும் கண்டிருப்பது மிக்க மகிழ்ச்சி, வெங்கட்ஜி

  நாம் இருக்கும் தீவு நகர்ந்தால்..... கற்பனை செய்து பார்த்தேன்..... ஆஹா.... நல்லதொரு உலா வரலாம்//

  ஆமாம் நானும் அதை நினைத்து கற்பனை செய்து பார்த்தேன் செமையா இருக்கும் இல்லையா...அந்தக்கற்பனை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது ஜி.

  ஆமாம் முட்டிக்கொள்ளாமல் இருந்தால் நலல்தே

  செயற்கை மழை....... சோதனை என்ற பெயரில் செய்யப்படும் முரண்பாடுகள் ஆபத்தை விளைவிக்கும்......//

  ஆமாம். தில்லியில் வேண்டுகோள்கள் விடுக்கப்படுகின்றனவாமே, வெங்கட்ஜி

  மிக்க நன்றி வெங்கட்ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
 27. நிஜத்தை முன்னிறுத்திய அருமையான பதிவு...

  பதிலளிநீக்கு