இந்த வருடத்து லால்பாக் மலர் கண்காட்சி சென்று வந்ததும் சுடச் சுடப் போட்டுவிட நானே என்னைப் பார்த்து மயங்கிட இரண்டாவது பதிவு தாமதித்தது அதன் பின் மீண்டும் 3 வது பதிவு போட தாமதம். காரணம் படங்கள் காணொளிகளை அடுக்கிக் கோர்க்க. இடையில் ஒத்தி வைக்கப்பட்டிருந்த பெங்களூர் சாப்பாட்டு நகரம்னு எழுதி திசை மாறியது. துளசியின் பதிவுகள், எனக்கு வேலைப்பளு, பயணம் என்று போக, மீண்டும் மனம் தேங்கியது.
சாப்பாட்டு நகரம்னு அதைப் பற்றியே வந்து கொண்டிருந்தால் போரடித்துவிடுமே, அடடா, லால்பாக் மலர் கண்காட்சி தொடர் அப்படியே நிக்குதேன்னு இதோ மீண்டும் தூசி தட்டி....கொஞ்சம் கலர்ஃபுல்லாகப் பகிரலாம் என்று அதன் தொடர்ச்சி.
மூன்றாவது பகுதிக்கு இடையில் இடைவெளி கூடிவிட்டதால் ஒரு சின்ன Recap! ற்கான சுட்டிகள் இங்கே பகுதி 1 - பகுதி 2
பூங்காவில் பல இடங்களில் செடிகளில், மரங்களில் பல வித வடிவங்கள் உருவங்களை வடிவமைத்திருந்ததோடு இடையில் பூச்செடிகள் விற்க என்று சில பண்ணைகள் தனியாகவும் கூடாரங்கள் போட்டிருந்தன. அவை அடுத்த பகுதியில் என்று சொல்லியிருந்தேன். அவற்றில் சில இப்பதிவில்.
வரிசையாகப் பார்த்துக் கொண்டே சென்றதைத்தான் ஒவ்வொரு பதிவிலும் சொல்லி வருகிறேன். இப்பகுதியில் விற்பனைக்கு வந்திருந்த பண்ணைகளைப் பார்த்துக் கொண்டே நடந்த போது எடுத்த படங்கள் காணொளிகளின் கோர்வையில் ஒரு பகுதி இன்று. மற்றவை அடுத்த ஓரிரு பதிவுகளில் தொடரும். அதன் பின் பூங்காவில் செய்திருந்த சில வடிவங்கள் இறுதியில்.
ஓரிரு பண்ணைகள் கூடாரம் போடாமல் அப்படியே வைத்திருந்தன. அப்படியான ஒரு பண்ணையின் படங்கள் முதலில் அதன் பின் கூடாரங்களில் இருந்த பூத்தொட்டிகளின் படங்கள் சில.
இப்படித் தட்டியில், படரும் செடிகள் வைத்து அலங்கரித்து முகப்பில். அதாவது இதுதான் நுழைவு என்று சொல்வது போல் இப்பண்ணையின் பெயருடன் இருந்த தட்டி. நான் பெயர் இல்லாமல் எடுத்தேன்.
கூடாரம் போடாமல் விற்பனைக்குத் திறந்த வெளியில் பூச்செடி தொட்டிகளாலேயே தங்கள் இடத்தின் எல்லையைஅரண் அமைத்துக் கொண்டு அதன் உள்ளே சுற்றிப் பார்த்து வாங்குவதற்காக பாதைக்கு இடம் விட்டு வரிசையாகத் தரையில் அடுக்கி வைத்திருந்த ஒரு பண்ணை
****************************
இப்படி வைக்கப்பட்டிருந்தவை அபூர்வ
மலர்கள் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. நீங்கள் வழக்கமாகப் பார்க்கக் கூடியவைதான்.
இப்படி விற்பனைக்கு வைக்கப்பட்டவைகளில் தனியாக மருத்துவ குணமுள்ள மரங்கள், பழ மரங்கள் என்று ஒரு திறந்த வெளி விற்பனையும், மற்றும் வித விதமான கள்ளிச் செடிகள் கூடாரமும் ஒரு பதிவில் பகிர்கிறேன்.
பதிவுகளைப் பார்ப்பவர்கள், கருத்து சொல்பவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. அடுத்த பதிவில் சந்திப்போம்!
Friends, like flowers, make life more beautiful!
- Michele Farabee
சிறிய காணொளிதான் முடிந்தால் பாருங்கள்
https://youtu.be/qaB-6whD94M
-------கீதா
லால்பாக் மலர் கண்காட்சி படங்களும் காணொளியும் அருமை.
பதிலளிநீக்குதட்டியில் படரும் செடிகள், மலர் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது கீதா.
மைக்கேல் ஃபராபி சொன்னதை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
அடுத்து கடலைக்காய் திருவிழா படங்கள் எதிர்பார்க்கிறேன்.
கமலா அவர்களை சந்திக்கமுடியுமா பாருங்கள். அவர்களும் வருவதாக சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் பதிவையும் எதிர்பார்க்கிறேன்.
ஆ.. கமலா அக்காவை சந்திக்க போகிறீர்களா?
நீக்குலால்பாக் மலர் கண்காட்சி படங்களும் காணொளியும் அருமை.
நீக்குதட்டியில் படரும் செடிகள், மலர் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது கீதா.//
மிக்க நன்றி கோமதிக்கா .
கடலைக்காய் திருவிழா டிசம்பரில் தான் என்று செய்தியில் பார்த்தேன். சென்றால் கண்டிப்பாகப் படங்கள் எடுத்துப் ப்பகிர்வேன் கோமதிக்கா.
கமலா அக்காவைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன்.
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
ஸ்ரீராம், கமலா அக்காவை தொடர்பு கொள்ள வேண்டும். இனியும் சமயம் இருக்கிறது. டிசம்பர் 9, 10, 11 தேதிகளில் கொண்டாடப்படுகிறது. 11 தான் முக்கிய தினம். 11 திங்கள் அன்று, நான் மட்டும் சென்று வர வேண்டும். பார்ப்போம்.
நீக்குகீதா
சொல்லுங்க கீதா ரங்கன். அங்கே மூவரும் சந்திப்போம் (ப தி வ ர் க ள் மூவர்)
நீக்குநான் ஒன்றும் பெரிய பதிவர் எல்லாம் இல்லை நெல்லை. அதை விடுங்க...நான் சந்திக்கலாம் என்று நினைத்தேன் ஆனா கீழே கமலாக்கா கருத்து பாருங்க...அவங்க பிஸி...
நீக்குமிக்க நன்றி நெல்லை
கீதா
வண்ண மலர்களின் அணிவகுப்பு அருமை. சட்டென மனமும் பூத்து விடுகிறது. எத்தனை வகையான மலர்கள், செடிகள். உள்நுழையும் இடத்தில் தொட்டியில் அடுக்கி இருக்கும் செடிகள் நன்றாய் இருக்கின்றன.
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம் ரொம்ப அழகாக இருந்தன. அடுத்தடுத்த காணொளிகள் படங்களில் இன்னும் வரும்.
நீக்குஆமாம் எல்லா இடங்களிலும் அடுக்கியும் வைத்திருந்தார்கள்.
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
இங்கிருந்து செடிகள் வாங்கிப் போவார்களா? விற்பனையும் உண்டா?
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம் விற்பனையும் உண்டு. இவை தனிப்பட்ட பூச்செடி நர்ஸரிகள், ஃபார்ம்கள். மலர்கண்காட்சியில் முக்கியமாக கண்ணாடி ஹாலில் இந்த முறை விதான் சௌதாவை வடிவமைத்திருந்தாங்க. ஆனால் உள்ளே போகாததால் அன்று அமைத்திருந்த வடிவத்தை எடுக்க முடியவில்லை. நெட்டில் இருந்து எடுத்து அப்பகுதி வரப்ப பகிர்கிறேன்.
நீக்குலால்பாகிலும் மற்ற நாட்களில் விதைகள் செடிகள் விற்பனை உண்டாம்.
பல நர்ஸரிகள் விற்பனைக்கு வைத்திருந்தன. மக்கள் பலரும் வாங்கிச் சென்றனர் தொட்டிகள், செடிக்கன்றுகள் என்று.
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
இருப்பதிலேயே ரொம்ப காஸ்ட்லீயான செடி அல்லது பூச்செடி எது?
பதிலளிநீக்குகுங்குமப்பூ என்று நான் சொல்வேன்!!!!....Black Orchid வகை பூ மிகவும் விலை கூடுதல் ஸ்ரீராம். ஆர்க்கிட் எல்லாமே பொதுவாகவே விலை கூடுதலாக இருக்கு.
பதிலளிநீக்குகீதா
இவையெல்லாம் பார்த்த நினைவும் வந்தது....கூடவே உங்களையும் உங்கள் கணவரையும்.
பதிலளிநீக்குஎப்போதும் பேரம் பேசும் நான், அங்கிருந்த தேன் கடையிலும் பேரம் பேசி குறைந்த விலைக்கு இரண்டு கிலோ தேன் வாங்கினேன்
ஆமாம் நெல்லை எனக்கும் இதை எழுதும் போது நினைவு வந்தது உங்கள் இருவரையும் சந்தித்தது.
நீக்குஎப்போதும் பேரம் பேசும் நான், அங்கிருந்த தேன் கடையிலும் பேரம் பேசி குறைந்த விலைக்கு இரண்டு கிலோ தேன் வாங்கினேன்//
சூப்பர் நெல்லை!! எனக்கு இந்த டெக்னிக் குறைவு...அப்படியே நான் முயன்றாலும் நம்ம வீட்டாள் திட்டிவிடுவார்.ஹாஹாஹா
மிக்க நன்றி நெல்லை
கீதா
எத்தனையோ ரோஜாச் செடிகள். ஆனால் நான் சின்ன வயதில் பார்த்த அழகிய ரோஸ் நிற மணமுள்ள ரோஜாச் செடியை எங்குமே பார்க்க முடிவதில்லை
பதிலளிநீக்குஅதே அதே நெல்லை, நானும் அதை நினைத்துக் கொண்டேன். அந்த ரோஸ் நிறம் அப்படியே ஈர்க்கும்...
நீக்குமிக்க நன்றி நெல்லை
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. மலர் கண்காட்சி படங்கள் எல்லாம் எப்போதும் போல் துல்லியமான கோணத்தில் மிகவும் அழகாக எடுத்திருக்கிறீர்கள். மனம் நிறைந்த பாராட்டுக்கள். ஒவ்வொரு மலர்களும், செடிகளும் என்னவொரு அழகாக உள்ளது. பார்த்துப் பார்த்து வியந்தேன். அத்துடன் அவை பற்றிய பல செய்திகளையும் அறிந்து கொண்டேன்.
தாங்கள் டிசம்பரில் வரும் கடலைக்காய் திருவிழாவுக்கு செல்லப் போவதாக கூறியிருக்கிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி. அத்துடன் அங்கு வரப்போவதாக (சகோதரி கோமதி அரசு அவர்களின் பதிவில்) கூறிய என்னையும் சந்திக்கப்போவதாக சகோதரர் ஸ்ரீராம், சகோதரி கோமதி அரசு அவர்களிடம் இந்தப் பதிவின் கருத்துரைகளில் கூறியதை கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், நான் கூறியபடி அந்த திருவிழாவுக்கு என்னால் வர முடியுமா எனத் தெரியவில்லை. ஏனெனில் எங்கள் இளைய மகனும், மருமகளும் வெளிநாட்டிலிருந்து இந்த தீபாவளிக்கு இங்கு வந்து விட்டு மீண்டும் இரண்டு மாதங்களில் டிசம்பர் இறுதி வாக்கில் ஊருக்கு திரும்புவதாக தகவல் வந்துள்ளது. அவர்களின் பயண திட்டங்கள் என்னவோ தெரியவில்லை. அவர்களுடன் இருக்கும் போது குறிப்பிட்ட தினங்களில் வரும் இந்த கடலைக்காய் திருவிழாவிற்கு எங்களால் வர முடியுமா என்பதும் தெரியவில்லை. அப்போது என் பதிவுலக வருகைகளே இயல்பானதாக அமையாமல், அடிக்கடி தாமதமாகும் என நினைக்கிறேன். மற்றபடி தங்கள் அன்பை கண்டு மிகவும் சந்தோஷமடைந்தேன் சகோதரி. நாம் சந்திப்பதற்கான நேரங்கள் ஒன்று கூடி நன்றாக அமையவும் பிரார்த்தித்து கொள்கிறேன். தங்கள் பதிலைக்கண்டு மகன் வீட்டிற்கு வருவதை இங்கு குறிப்பிட்டேன். அருமையான பதிவுக்கும், கருத்துரைகளும் மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக்க நன்றி கமலாக்கா பதிவு பற்றிய உங்கள் கருத்திற்கு. மலர்களைப் பார்க்கறப்ப சந்தோஷம் தான் அதனால்தான் அரவிந்த அன்னை சித்தாந்தங்களில் மலர் மருத்துவம் பற்றி இருக்கும். இயற்கையும் ஜீவ ராசிகளும், கலைகளும் மனித மன உணர்வுகளுக்கு. உளவியலில் நல்ல மருத்துவம்தான். நாம் தான் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
நீக்குஅக்கா பரவால்ல உங்கள் மகன் மருமகள் வரும் போது அவங்களோடுதானே நேரம் செலவழிக்க வேண்டும். அதுதான் மிக மிக மிக முக்கியம். கடலைக்காய் விழாவை விடுங்கள்.
நாம் சந்திப்பதற்கான நேரம் அமையும் கமலாக்கா...
மிக்க நன்றி கமலாக்கா
கீதா
நீங்கள் வருவீர்கள், சந்திப்பீர்கள் என்று மனதுக்குள் பட்சி சொல்கிறது!
நீக்குஹாஹாஹா ஸ்ரீராம், எனக்கும் சொல்லியது அந்த பட்சி ஆனால் இங்கு சொல்லவில்லை ஏன்னு கேட்டீங்கனா அந்த பட்சி என்னை கோபிச்சுக்குமோ என்று. ரகசியத்தை எல்லாம் இப்படி வெளில சொல்லலாமான்னு! ஹாஹாஹாஹா
நீக்குகீதா
ஹா ஹா ஹா. பட்சி ஜோதிடம் பலிக்கட்டும்.
நீக்கு
பதிலளிநீக்குமலர்ந்த முகமே வாழ்க்கையின் இன்பம் என்று அக்காலத்து துணிப்பைகளில் அச்சிட்டு இருப்பார்கள்..
இதுமாதிரி பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்..
பசுமையான பதிவு..
மகிழ்ச்சி.. மகிழ்ச்சி..
ஓ அப்பiடியா துரை அண்ணா! அதுவே ஒரு நேர்மறை இல்லையா...
நீக்குஇதுவரை பார்க்க முடிந்தது. இனியும் முடியும் என்று நம்பிக்கை.
இனி வரும் மலர்களைப் பார்த்தால் எல்லாருக்குமே மனம் மகிழும் துரை அண்ணா அடுத்து வரும் காணொளிகள்.
மிக்க நன்றி துரை அண்ணா.
கீதா
படங்கள் எல்லாம் அழகோ அழகு..
பதிலளிநீக்குமிkக்க நன்றி துரை அண்ணா படங்களை ரசித்தமைக்கு
நீக்குகீதா
படங்கள் அனைத்தும் அழகு. ஒரே ஒரு முறை லால்பாக் வந்திருக்றேன்
பதிலளிநீக்குஅழகான தொகுப்பு!
பதிலளிநீக்கு