புதன், 15 நவம்பர், 2023

சில்லு சில்லாய் - 16 - மங்கையா ராகப் பிறப்பதற்கே...- கங்கு கீரை - வானுலகம்

 

சில்லு - 1 - மங்கையராகப் பிறப்பதற்கே...

மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும் என்று எங்கள் ஊர் தாத்தா கவிமணி பாடியிருக்கிறார். கல்லூரியில் படித்த போது இதை நான் மேடை தோறும் முழங்கியிருக்கிறேன். ஆனால் அந்த முழக்கம் எல்லாம், எப்போது பெண்கள் பாலியல் துன்பத்துக்கு ஆளாவதும், சிவப்பு விளக்கிற்குத் தள்ளப்படுவதும் என்னைத் தாக்கத் தொடங்கியதோ அப்போது நின்றுவிட்டது.

தனிப்பட்ட முறையில் எனது தேவைக்காக உளவியல் கற்ற போது (பாடசம்பந்தாமாகவோ பரீட்சை எதுக்காகவோ இல்லை) பொதுவாக, என் தலைமுறை வரை - நம் சமூகத்தில் திருமணமான ஓர் ஆணுக்கு மனநிலை சரியில்லை என்றால் அவ்வளவாகப் பிரச்சனைகள் இல்லை. கல்லானாலும் புருஷன் என்ற ரீதியில் மனைவி பார்த்துக் கொள்வதுண்டு. ஆனால் அதே சமயம் பெண்ணுக்குச் சற்று மனநிலை தடம் புரண்டால் அங்கு முடிந்தது! பல மருத்துவமனைகளில் இதைக் கண்டதுண்டு. இப்போது நிலை மாறிவிட்டது. ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி என்றில்லை. பெரும்பாலும் ரத்துதான்!

இது கவிதைக்கும், கட்டுரைக்கும், மேடையில் முழங்கவும் நல்லாதான் இருக்கும் ஆனால் நடைமுறையில், அதுவும் பச்சிளம் பெண் குழந்தைகள் பாலியல் துன்பத்துக்கு உட்படும் போது, இந்த வரி எனக்குக் கேள்விக்குள்ளாகத் தொடங்கியது. இது என் தனிப்பட்டக் கருத்து.

“உனக்கு முடியலைல்லியா, போய் ரெஸ்ட் எடுத்துக்க. நான் சமையல பாத்துக்கறேன்”

ஆஹா! நான் ரெஸ்ட் எடுக்க போயாச்சு. அப்போதுதான் கண் அசந்திருப்பேன்.

“புடலங்காய் பொரிச்ச கூட்டுதானே நான் கட் பண்ணிட்டேன், சின்னதா பண்ணனுமா?”

“பரவால்ல எப்படி இருந்தா என்ன? நோ ப்ராப்ளம்”

எனக்கு எந்தவித ஸ்பெசிஃபிக்கேஷனும் கிடையாது. இப்படித்தான் அப்படித்தான் செய்ய வேண்டும் என்றோ இது போட வேண்டும் அது போடவேண்டும் என்றோ. ஏதோ ஒன்று நமக்கு முடியாத போது செய்யப்படுகிறதே என்று இருப்பேன். இந்த பங்களூர் மக்கள் மாதிரின்னு வைச்சுக்கோங்க எதை எப்படிக் கொடுத்தாலும் சாப்பிடும் ரகம். நம் வீட்டில் எல்லாருமே இந்த ரகம் தான்.

“பாசிப்பருப்பா? துவரம்பருப்பா?”

“பாசிப்பருப்பு”

“எவ்வளவு போடணும்?”

“1/3 சரியா இருக்கும்”

“தண்ணி எவ்வளவு விடணும்? சரியான்னு பாத்து சொல்றியா…”

சென்றேன். கேள்விகள் செயல்பட்டிருக்கவில்லை. எல்லாம் செய்துவிட்டு, “கொஞ்சம் படுத்துக் கொண்டுவிட்டு வந்து மீதிய செய்யறேனே”

“ஓகே அவ்வளவுதானே? போய் ரெஸ்ட் எடு”

மீண்டும்….

“ரெட் ரைஸ் தானே?”

“ஆமா”

“குக்கர்லே வேற ஏதாவது வைக்கணுமா?”

“இல்லை…”

“ரெட் ரைஸ் எவ்வளவு?”

“அரை கப்”

“கூட்டுக்கும் குக்கர் உள்ள வைக்கணும்தானே…?”

மீண்டும் எழுந்து சென்று அரிசி அலசி தண்ணீர் வைத்து, கூட்டுக்கும் உள்ளே வைத்து குக்கர் மூடி இண்டக்ஷனில் டைமர் போட்டாச்சு. கொஞ்சம் நேரம் படுத்துக் கொள்ளலாம்.

“சரி நீ போய் படுத்துக்க மீதிய பார்த்துக்கறேன்”!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கண் அயரத் தொடங்கிய போது…

“கூட்டுக்கு என்னெல்லாம் வறுக்கணும்?”

மீண்டும் எழுந்து போனேன். வறுத்து அரைத்து……மதியத்துக்குக் கொண்டு போக டிஃபனும் செய்து…..ரெடி…மீண்டும் கொஞ்சம் படுத்துக் கொள்ளலாம் என்று படுக்கப் போனேன்

“நான் ரெக்கார்டிங்க் பண்ணின இந்த வீடியோ சரியா ப்ளே ஆகல இன்னிக்கு அனுப்பணுமே….இல்லைனா திரும்பவும் ரெக்கார்ட் பண்ணனும்……இது என்ன பண்ணி பார்த்தாலும் ஸ்ட்ரக் ஆகுது”

“ம்…என்னன்னு பார்க்கணுமா?”

“பார்க்கறியா? இல்ல வேண்டாம்….நீ படுத்துக்க….ஆனா இன்னிக்கு அனுப்பினா பேமென்ட் பண்ணிடுவான்…அதான் யோசிக்கறேன்……..”

ஏழுந்து சென்றேன். தலையைத் தூக்கவே முடியவில்லை அத்தனை பாரம்….

மங்கையாராகப் பிறப்பதற்கே……….!!! ம்ஹூம் நான் முடிக்க மாட்டேனே!

சில்லு - 2 - கங்கு கீரை - தண்ணீர்க் கீரை

சில நாட்களுக்கு முன் கடைத் தெருவில் உலா வந்த போது இதோ இந்தக் கீரை கண்ணில் பட்டது. கீரையின் பெயர் அறிந்ததில்லை. ஆனால் எங்கள் ஊர் ஆற்றங்கரை, வாய்க்கால் பக்கங்களில் பார்த்ததுண்டு. என்றாலும் அது சமைக்க உதவும் கீரை வகை என்று அறிந்ததில்லை. கேட்டேன் அவர் ஏதோ ஒரு பெயர் சொன்னார். புரியவில்லை. ஆனால் பொரியல் செய்யலாம் என்றார். ஆ! எங்கள் ஊரில் இலவசமாகக் காடு போல் வாய்க்கால், ஆற்றங்கரையில் வளர்ந்திருந்தப்ப செய்ததே இல்லையே!


தண்ணீர்க்கீரையும் அதில் உள்ள பூவும்

வாங்கிக் கொண்டேன். கோமதி அக்காவுக்குப் படம் அனுப்பிக் கேட்டேன். தெரியவில்லையே என்றார். கூகுளில் தேடினேன். கங்கு கீரை (எங்கள் ஊரில் கங்கு என்றால் தீக்கங்கு) – தண்ணீர்க்கீரை – தண்ணீர் பசலைக்கீரை – water spinach என்றாள் கூகுள் தோழி. கூடவே இக்கீரையின் மருத்துவப் பயன்களும் சொன்னாள். கல்லீரல், மஞ்சள் காமாலை, தோல் பிரச்சனைகளுக்கு இக்கீரை நல்லதாம். பசலை என்பதற்கேற்ப கொஞ்சம் வழ வழப்பு இருந்தாலும் பொரியல் செய்ய முடிந்தது. தண்டும் சேர்த்துச் செய்யலாம். தண்டு தாமரைத் தண்டு போல, வாழைத்தண்டு போல உட்புறம் தண்ணீரை உள் வாங்கிக் கொள்ளும் ஸ்பாஞ்ச் போன்று இருந்தது. நான் வெங்காயம் இல்லாமல் செய்வது இல்லை! இதோ அக்கீரையும் நான் செய்த பொரியலும்! நல்ல சுவை! சூப்பும் செய்யலாம்.

 

சில்லு – 3 – என் மூன்றாவது விழியில் சில ஷாட்ஸ் 

வியந்து பார்த்து ரசித்து அங்கு நடப்பது போல் கனவு கண்டு சஞ்சரித்து  எடுத்த சில காட்சிகள். வர்ணித்திட வார்த்தைகள் இல்லை! 

இப்படியான காட்சிகள் படங்களாகவும், காணொளிகளாகவும் அவ்வப்போது பதிவுகளில் வரும். 

பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். வாசிக்கும், கருத்திடும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!


------கீதா


34 கருத்துகள்:

 1. மனதில் தோன்றுவதை உடனுக்குடன் குறித்து வைத்தால் பதிவு எழுதுவது சுலபம். அம்முறையில் இன்று பதிப்பித்த சில்லு சில்லாய் கதம்பம் நன்றாக இருக்கிறது.

  திருச்சியில் இந்த கீரையை பார்த்திருக்கிறேன். பெயர் தெரியாது.

  போட்டோக்கள் பறக்கும் போது எடுத்தவையா?


  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜெ கே அண்ணா. ஆமாம் ரொம்பவே சரி. உடனுக்குடன் எழுதி வைத்துவிட்டால் பதிவு எழுதுவது எளிதுதான். துளசியும் எனக்கு இதைத்தான் சொல்லுவார். ஆனால் என்ன ஆகும் என்றால் நான் நடைப்பயிற்சி செல்லும் போது, படுத்த பிறகு, குளிக்கும் போது, அடுக்களையில் வேலை செய்யும் போது பல கருத்துகள் வரும்....அதை உடனே எழுதி வைக்க முடிவதில்லை. அதனால் அப்படியே மறந்து போகும். ஆமாம் இது இப்போது எழுந்தது உடனே எழுதிவிட்டேன்...எனக்கே ஆச்சரியம்.

   மிக்க நன்றி ஜெ கே அண்ணா.

   கீதா

   நீக்கு
  2. ஆமாம் ஜெ கே அண்ணா ஃபோட்டோக்கள் பறக்கும் போது எடுத்தவைதான். காணொளியும் எடுத்திருக்கிறேன். யுட்யூபில் போட்டிருக்கிறேன் இங்கு இணைக்க வில்லை. அடுத்த முறை இணைக்கிறேன்.

   மிக்க நன்றி அண்ணா

   கீதா

   நீக்கு
  3. //அடுக்களையில் வேலை செய்யும் போது பல கருத்துகள் வரும்.// - சமையலில் கவனம் இல்லாமல் செய்வதெல்லாம் நன்றாக வருமா?

   நீக்கு
  4. வருதோ இல்லையோ, எப்படியும் நீங்க வந்து சாப்பிடப் போறதில்லையே!!!!! ஹாஹாஹாஹா.....

   கீதா

   நீக்கு
 2. பெண்ணின் பெருந்தக்க யாவுள?

  முப்பால் எப்போது நமக்கு கிடைத்தது?

  யாரால் ?

  ஏன்?

  பதிலளிநீக்கு
 3. ஓய்வெடுக்க முடியாத ஏழைகள் பரிதாபம்தான்.  ஒவ்வொன்றையும் கேட்டு கேட்டு இப்போது செய்வதை விட முன்னரே அறிந்து வைத்திருந்தால் நலம்.  அல்லது இந்தக் காலத்தில் இல்லாத வசதியா..  யு டியூப் உதவியை நாடலாம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா ஸ்ரீராம். அதுவும் காலையில் தான் அந்த ஓய்வு தேவைப்படுகிறது. சமைக்க எல்லாம் தெரியும் ஸ்ரீராம். சமைப்பவங்கதான் ஸ்ரீராம். அதென்னவோ நாம படுத்துட்டா இப்படி....

   மிக்க நன்றி ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
  2. இவங்கதான் முக்கியம்று உணர்த்த சில கேள்விகள் கேட்டா இப்படி அலுத்துக்கறாங்களே. கொஞ்சம்கூட கேட்டுக்கொள்ளாமல் எல்லாமே நடந்தால் தன் முக்கியத்துவமே இல்லையே என்ற வருத்தம் வாராதோ?

   நீக்கு
  3. ஹாஹாஹாஹாஹாஹா...நெல்லை....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீகீய்கீய்ழ போய்ப்பாருங்க....இது ரொம்ப முடியலைன்னு ஒரே ஒரு நாள்......ஆனால் நான் தான் செய்தேன் என்ப்து வேறு விஷயம்.

   கேக்கலைனா ரொம்ப சந்தோஷப்படுவேன். முக்கியத்துவம் இல்லையேன்னு அதெல்லாம் ஒரு நாளும் வராது. மகனிடமும் கூட வராது. அவன் தனியாகச் செய்தால் பாராட்டுவேன். எப்பவும் நாம இருப்போமா சொல்லிக் கொடுக்க?!!!

   ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அவர்களுக்குத் தெரிந்தபடி சமைப்பாங்க அதை நாம் பாராட்ட வேண்டும். மகன், கணவர் செய்யும் விஷயங்களை நான் பாராட்டுவேன். குறைகள் இருந்தாலும் பாராட்டிவிட்டு அப்புறம் அதைச் சொல்லுவேன்.

   கீதா

   நீக்கு
 4. உடம்பை பார்த்து கொள்ளுங்கள்.

  “உனக்கு முடியலைல்லியா, போய் ரெஸ்ட் எடுத்துக்க. நான் சமையல பாத்துக்கறேன்”//

  நல்லா சொன்னார்கள்.

  என் மகனிடம் மருமளுக்கு உடம்பு சரியில்லை என்றால் கூட மாட ஒத்தாசை செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன்.

  நான் உடம்பு சரியில்லாமல் இருந்தாலும் நானே எழுந்து எல்லாம் செய்வேன், செய்து கட்டி கொடுத்து அனுப்புவேன், கல்லூரிக்கு போகும் போது "உனக்கு உடம்பு முடியவில்லை நன்றாக ஓய்வு எடு" என்று சொல்லி விட்டு செல்வார்கள். (எனக்கு சிரிப்புதான் வரும்) கோபம் வந்தால் "சுக்கு காசாயம் சாப்பிட்டுவிட்டு எல்லாம் செய்யவேண்டும் அதுதான் தலைவிதி பெண்களுக்கு" என்பேன்.

  தண்ணீர்க்கீரையும் அதன் பூவையும் பார்க்கும் போது பிள்ளையார் சதுர்த்திக்கு இந்த பூ கொண்டு வந்து தருவார்கள். அது போல் இருக்கு. நீங்கள் காட்டியது மொட்டா பூவா
  ரேடியோ பூ என்றும் ஸ்பீக்கர் பூ என்று சொல்வார்களே அதன் இலை, பூ போல உள்ளது.

  விமான ஜன்னல் வழியே மேக கூட்டங்களை எடுத்த படம் நன்றாக இருக்கிறது.
  நானும் நிறைய எடுத்து வைத்து இருக்கிறேன். கீழே இறங்கும் போது தெரியும் ஊர்களின் காட்சியும், மேலே போகும் போது வானத்தில் மேக கூட்டங்களையும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கோமதிக்கா நானும் என் மகனிடம் சொல்லியதுண்டு. முன்ன இல்ல இப்ப.

   ஆமாம் நீங்கள் சொல்லியிருப்பதேதான்....எனக்கும் சில சமயம் கோபம்வ் அரும்.

   அந்தப் பூ செம்பருத்தி போல இருக்கோஒ டக்குனு பார்க்க..? அக்கா இது மொட்டுதான் என்று நினைக்கிறேன். விரிந்தால் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. இப்படிக் கூம்பித்தான் இருந்தது. அடுத்த முறை வாங்கக் கிடைத்தால் பார்க்க வேண்டும்

   விமானத்தின் ஜன்னல் வழி எடுத்தவை இன்னும் இருக்கின்றன காணொளிகளும் படங்களும். ஒவ்வொன்றாக வரும் கோமதிக்கா. பார்த்து அதிசயிக்கும் ஒன்று. நீங்களும் பகிருங்கள் கோமதிக்கா.

   மிக்க நன்றி கோமதிக்கா

   கீதா

   நீக்கு
 5. கீரை என்றாலே எங்கள் வீட்டில் கூட்டுதான்.  மசியல் அலலது கூட்டு.  ரொம்ப அகேஷனலாய் சாம்பார்!  இது போன்ற பொரியல்கள் அபூர்வம்.  பசளைக் கீரை என்றால் பாசிபபருப்பு கூட்டுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம் வீட்டிலும் கீரைக் கூட்டு, மசியல், சாம்பார், பொரியல், சுண்டல் போன்று கீரைத்தண்டு மட்டும் போட்டும் பொரியல், சுண்டல், புளிக்கீரை என்று செய்வதுண்டு. கீரையின் அளவைப் பொருத்து, நிறைய இருந்தால் பொரியல், கொஞ்சமாக இருந்தால் கூட்டு அல்லது மசியல். இப்படி.

   ஆமாம் நம் வீட்டிலும் பசலைக்கீரை பாசிப்பருப்பு போட்டுக் கூட்டு, அப்புறம் பசலை பனீர் போட்டு கிரேவி சப்பாத்திக்கு என்றும் செய்வதுண்டு

   மிக்க நன்றி ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
  2. அம்மா கீரைச் சுண்டல்னு கரேமது மாதிரிச் செய்வார்கள். மனைவி செய்து நினைவில்லை

   நீக்கு
  3. கீரைச் சுண்டல் தமிழ்நாட்டின் தெற்குப்பக்கம், திருநெல்வேலி, கன்னியாகுமரிபக்கம் செய்வாங்கன்னு நினைக்கிறேன் நெல்லை. ஏனென்றால் புகுந்த வீட்டில் செய்வதில்லை.

   கீதா

   நீக்கு
 6. மேகத்தின் படங்கள் அபாரம். அழகு. இயற்கையின் அற்புதங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீராம். அழகோ அழகு. இன்னும் வரும்

   மிக்க நன்றி ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
 7. வணக்கம்.

  மூன்று சிலுக்களும் அருமை.

  முதல் சில்லில் சொல்லி இருந்த கவி மணி உங்களுக்கு தாத்தா முறையா? எனக்கும் அவர் நெருங்கிய சொந்தம்தான், என் பெயரை நீட்டி பார்த்தாலே புரியும், நான் தான் யாரிடமும் இதுவரை சொன்னதில்லை.(உங்களோடே வைத்துக்கொள்ளுங்கள்)

  சரி மங்கையராய் பிறந்தவர்கள் இந்த மண்ணுலகை ஆட்டி படைத்த - படைக்கின்ற செய்தி தெரியாதா? எல்லாவற்றிற்கும் கெஞ்சவேண்டும் , கொஞ்சவேண்டும். கொஞ்சம் கோபப்பட்டாலும் ,அம்மா வீடு அப்பா வீடு, அதையும் மீறி கொஞ்சம் கோபமாக பேச நேர்ந்தால் மகளிர் காவல் நிலையம், அப்புறம், வரதட்சணை கொடுமை பிரிவில் வழக்கு, பின்னர், கோர்ட்டு, கச்சேரி, விவாக ரத்து...... ஆணைவிட பெண்ணுக்கு முன்னுரிமையும் சட்ட சலுகையும்; பெண் சொல்லிவிட்டால் அதுதான் உண்மை என்றெண்ணி , சாலைகளில் , பேருந்துகளில், கடைகளில் , கடை தெருவில், அலுவலகத்தில் ஆணுக்கு கிடைக்கும் தர்ம (சங்கடம்) அடியில் இருந்து சிறை தணடனைவரை அனுபவிக்கும் அப்பாவி ஆண்களை பார்க்கும்போது எங்க நெருங்கிய சொந்தமான உங்கள் தாத்தா விஷயமறிந்துதான் எழுதி இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.

  பெரிய மனுஷர் பொய் சொல்லி இருக்க மாட்டார் என்பதை நம்புங்க.

  ஆமாம் முதல் சமயல் எப்படி வெந்தது.... சாரி எப்படி வந்தது.? பசி ஆறும் வகையில் இருந்ததல்லவா? ஆண்கள் எது செய்தாலும் குத்தம் பார்ப்பீர்கள்.

  இரண்டாம் சில்லு அருமையான வாசத்துடன், "எப்படிக்கீர"? எப்படி இருக்கின்றீர்கள் என்பதை மரியாதை குறைவாக கேட்பதாக நினைக்கவேண்டாம், என்னை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியுமல்லவா?நீங்கள் சமைத்த கீரை எப்படி என்றுதான் கேட்கிறேன்.

  மூன்றாவது சில்லு உங்கள் மூன்றாவது விழியில் விழுந்தவற்றை அப்படியே எங்களுக்கும் காட்சிப்படுத்தியது அருமை.

  இப்போது பெங்களூரிலா இருக்கின்றீர்கள்?
  நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா கவிமணி உங்களுக்கும் உறவா!!!! அப்ப கோ நானும் நீங்களும் கூட ஏதோ ஒரு தூரத்து.....ஹிஹிஹி அதான் இப்ப எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சே!!!

   ஆட்டிப் படைத்த மங்கையர் என்று ஆண்கள் சொல்லுவீர்கள். நாங்கள் இப்படிச் சொல்லுவோம். இரு பாலாரிலும் நலல்வர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டுதானே. பெண்கள் எத்தனை மோசமானவர்களாக வேண்டுமானாலும் இருக்கட்டும் கோ ஆனால், பாலியல் துன்பம் என்பதும் சிவப்பு விளக்கிற்குத் தள்ளப்படுவதுமான அதுவும் பச்சிளம் குழந்தை பாலியல் துன்பம் என்பதெல்லாம் கொடுமை. அதுவும் திருமணம் ஆகி குடும்பத்துக்குள்ளும் கூட கணவன் மனைவி என்றாலுமே அத்து மீறல் என்பது கொடுமைதான். குடித்துவிட்டு வந்து பெண்களை இப்படி ச் செய்வது?
   பெண்கள் அவர்கள் ஆட்டிப்படைப்பவர்களாகவே இருக்கட்டும் இதை ஏற்பீர்களா கோ? நிச்சயமாக மாட்டீர்கள். அதுவும் நீங்கள் மரியாதைக் குறைவாக யாரையும் சொல்ல மாட்டீர்கள் என்று நன்றாகத் தெரியும்! ...

   இரண்டாவது சில்லுக்கான உங்கள் கருத்தைப் பார்த்து சிரித்துவிட்டேன், கோ. நான் சமைத்த கீரை நன்றாகவே இருந்தது.

   இன்னும் மேகக் காட்சிகள் வரும்.

   மிக்க நன்றி கோ.

   கீதா   நீக்கு
 8. கீதா! உங்கள் கதம்பத்தொகுப்பு மிகவும் சுவாரஸ்யம்!
  //மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும்//
  உண்மையைத்தான் பகிர்ந்திருக்கிறார் உங்கள் ஊர் தாத்தா!
  வீட்டுப் பெண்கள் படுத்து விட்டால் அந்த வீடு என்ன ஆகும் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் நன்கு தெரியும்! அதனால் தான் தன் வீடு, தன் கணவன், தன் குடும்பம் என்று வரும்போது முடியாமல் இருந்தாலும் சிரமப்பட்டு எழுந்து தட்டுத்தடுமாறி சமைத்து தன் நோவை மறைத்து அன்னமிடுகிறாள் அவள்! இந்த உண்மையை உணர்ந்தது தான் கவிமணி இந்த வரியை எழுதியிருக்கிறார்!
  கீரைப்பொரியல் பார்க்க அழகு! செய்முறையையும் சுருக்கமாக எழுதியிருக்கலாமல்லவா கீதா?
  மேகங்களின் அழகு பிரமிக்க வைக்கிறது! 49 வருடங்களாக பறந்து கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கென்னவோ புகைப்படம் எடுக்கத்தோன்றியதில்லை! ஏனோ இந்த மேகக்குவியலைப்பார்க்கும்போது நாம் இந்த உலகத்தில் தனியாக இருப்பது போலத்தோன்றும். இப்போதெல்லாம் அடிக்கடி எழுந்து போக வசதியாக AISLE SEAT புக் பண்ணுவது வழக்கமாகி விட்டது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனோ அக்கா ஆமாம் கவிமணி தாத்தா அப்படியான பொருளில்தான் பாடியிருக்கிறார் ஆனால் என்னுள் எழுந்த கேள்வி பாலியல் துன்பம் பற்றியதானது.

   கீரைப் பொரியல் அதிகம் படங்கள் எடுக்கவில்லை மனோ அக்கா. அடுத்த முறை செய்யும் ப்ோது படங்களுடன் செய்முறை கொடுத்துவிடுகிறேன் திங்க வில்.

   பறக்கும் போது மேகங்களைக் காண அது ஒரு தனி உலகம் போல் தோன்றும் ஆமாம் அக்கா இன்னும் படங்கள் வரும்

   ஓ ஆமாம் Aisle Seat எழுந்து செல்ல நல்லதாக இருக்கும். வயதாகும் போது இது சௌகரியம்.

   மிக்க நன்றி மனோ அக்கா

   கீதா

   நீக்கு
 9. கதம்பத் தொகுப்பு நன்று.

  பெண்கள் வீட்டின் கண்கள். அதனால்தான் மற்றவர்கள் அவங்களையே நம்பியிருக்க வேண்டியிருக்கு

  மேகங்களின் படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நெல்லை.

   பெண்கள் வீட்டின் கண்கள்!! ஹாஹாஹா எங்கள் வீட்டைப் பொருத்தவரை என்னைச் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் அப்பாவைத் தவிர யாருக்கும் இல்லை நெல்லை.

   //மேகங்களின் படங்கள் அருமை.//

   நன்றி நெல்லை. இன்னும் வரும்.

   கீதா

   நீக்கு
  2. எங்க வீட்டுல நான் மனைவியைச் சார்ந்துதான் இருக்கிறேன். அவங்க வாய்க்கு ருசியாகவும், விரும்பிக் கேட்பதையும் தடை சொல்லாமல் செய்துகொடுத்துடுவாங்க. ஹா ஹா ஹா

   நீக்கு
  3. உங்க ஹஸ்பன்ட் நல்லா செய்வாங்க தெரியுமே...

   இங்கும் விரும்பிக் கேட்பது எல்லாம் செய்து கொடுக்கப்படும். பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் நடப்பதுதானே!!

   கீதா

   நீக்கு
 10. இந்தக் கீரையெல்லாம் பார்த்ததே (சமையலில்) இல்லை.

  அது சரி...இத்தனை வருடங்கள் திருமணமாகி ஆகிவிட்டது. ஒரு செய்முறை கூட கணிணியில் எழுதிவைக்கவில்லையா? அப்படி இருந்திருந்தால் ஏன் எதற்கெடுத்தாலும் உங்களைக் கேட்கப் போகிறார்கள்?

  எனக்கு நான் பஹ்ரைனில் இருந்தபோது தேவையான ரெசிப்பிக்களை மனைவி கொடுத்துவிட்டார். அதுபோக நானும் அவ்வப்போது அதில் இன்னும் சில ரெசிப்பிக்களையும் சேர்த்துக்கொள்வேன். பழியை உங்களிடம் வைத்துக்கொண்டு மற்றவரைப் பழி சொல்லலாமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானுமே இங்குதான் இந்தக் கீரை சமையலுக்கு உதவும் என்பதைத் தெரிந்து கொண்டேன். ஊரில் பார்த்திருந்தாலும்.

   கணினியில் எல்லாம் இருக்கு குறிப்புகள். மட்டுமல்ல செய்யவும் தெரியும். தனியாகத்தானே பல வருடங்கள் ஒவ்வொரு ஊராக இருந்திருக்காங்க. இப்படிக் கேட்பது என்பது தெரியாததால் அல்ல. சமையலும் செய்யத் தெரியும்.

   பழியை உங்களிடம் வைத்துக்கொண்டு மற்றவரைப் பழி சொல்லலாமா?//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....ஹாஹாஹாஹா நெல்லை....குற்றமில்லை.....எனக்கு கவிமணியின் வரிகள் நினைவுக்கு வந்தது அம்புட்டுத்தேன்

   கீதா

   நீக்கு
  2. இப்போதும் ஒரு சில ஐட்டங்கள் தவிர மற்றவற்றை ஒரு முறை ரெசிப்பி பார்த்துவிட்டுத்தான் செய்வேன். நான் பண்ணும்போது அவங்க குடும்பத்தில் வந்த சில பொருட்கள் ரெசிப்பியில் இருந்தாலும் என் அம்மா வழக்கப்படிதான் செய்வேன். புளிசேரிக்கு அவியலுக்கு சீரகம் சேர்க்கமாட்டேன்.

   நானும் செய்யும்போது, 1 டம்ளருக்கு எவ்வளவு வெல்லம், சீனி என்பதைக் கேட்டுக்கொள்வேன். இறக்கும் பத்த்திற்கு ஒருமுறை பார்த்துவிடச் சொல்லுவேன், இனிப்புகளுக்கு

   நீக்கு
  3. நெல்லை, கேட்டுக் செய்வதில் என்ன குறை. நானுமே சில பதம் எல்லாம் (பல சமயங்களில் மணம் தெரியாதே) கேட்டுக் கொள்வதுண்டு. இது நான் சொன்னது, உடம்புக்கு ரொம்ப முடியாமல், அதுவும் ரொம்ப என்பதைச் சொல்லிக்கறேன், இல்லைனா நான் படுக்கும் வழக்கமே கிடையாது. சும்மா கூட படுக்க மாட்டேன்.....இருமலினால் இருமி இருமி நெஞ்சுக் கூடு மஸில் எல்லாம் வலி பிடித்துக் கொண்டு, தலைபாரம், சாதரணமாகக் கூடப் பேசமுடியாமல் வலி, தொண்டைக்கட்டு என்று முடியாமல் படுத்திருந்ததால்.

   மோர்க்குழம்பு, புளிசேரிக்கு, ஜீரகம் சேர்ப்பதில்லை தென்னகத்தில். அவியலுக்குச் சிலர் சேர்ப்பதுண்டு சிலர் சேர்ப்பதில்லை. நானும் பெரும்பாலும் சேர்க்காமல் செய்வேன். புகுந்த வீட்டு முறைப்படியும் எங்கள் வீட்டு முறைப்படியும் கலந்து கட்டி மாற்றி மாற்றி செய்வதுனு.

   நீங்கள் செய்வது தெரியும், நெல்லை நல்லா செய்வீங்க.

   மீண்டும் வந்து கலாய்த்ததுக்கு நன்றி!!!!!!!!!

   கீதா   நீக்கு
 11. இந்தக் கீரை நம்நாட்டில் கங்குன் என்போம். சிங்கள சமையலில் முதலிடம் பெறும்.

  தண்டுகளுடன் பெரிதாக வெட்டி எடுத்து சோட்டே முறையில் வதக்கி எடுப்பார்கள்.நானும் செய்வேன்.

  நீங்கள் செய்ததுபோல நாங்கள் தேங்காய் சேர்த்த பொரியலும் செய்வோம். பருப்புடன் கலந்தும் மசிப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கோ மாதேவி. கிட்டத்தட்ட அதே பெயர்தான் இல்லையா....இங்கும் கங்கு என்கிறார்கள் அங்கு கங்குன். ஓ சிங்கள சமையலில் முதலிடம் பெறுகிறதா. அட!

   தண்டை வதக்கி எடுப்பாங்க இல்லையா....இங்கும் தண்டுக் கீரையில் அப்படிச் செய்வதுண்டு. இனி இதையும் அப்படிச் செய்து பார்க்கிறேன். சோட்டே முறையில்...

   நீங்களும் பொரியலும், பருப்புடன் மசித்தும் செய்வது மகிழ்ச்சி. நானும் பருப்புடன் செய்கிறேன் அடுத்த முறை.

   மிக்க நன்றி மாதேவி

   கீதா

   நீக்கு
 12. இந்தக்கீரை சிங்கள சமையலில் பிரபலம் . கங்குன் கீரை என்போம். சாட்டே முறையில் கீரையை தண்டுடன் பெரியதாக வெட்டி செய்வார்கள் நானும் செய்வேன்.

  எங்கள் முறையில் தேங்காய் சேர்த்து பொரியலும், பருப்பு மசியலும் செய்யலாம்..

  பதிலளிநீக்கு