வெள்ளி, 29 டிசம்பர், 2023

சில்லு சில்லாய் - 17 - பாட்டியின் ரகசியம் - ஓவியம் - கரும்புலிகள்

சில்லு - 1 - சினிமா வைபவங்கள்

சிறு வயது, இளம் வயதில் சினிமா பார்க்கச் சென்ற அனுபவங்களை ஸ்ரீராம் எழுதியிருந்தார். வாசித்த போது சினிமாவில் ஃப்ளாஷ் பேக் வரும் முன் ஒரு சக்கரம் போல வருமே அது மனதில் வந்தது. 

திங்கள், 25 டிசம்பர், 2023

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 27 - தருமபுரி - கிருஷ்ணகிரி மலைகள் - 1

வணக்கம், வந்தனம். பதிவுகளுக்கு இடையில் ரொம்பவே இடைவெளி வந்துவிட்டது. இதென்ன புதுசான்னு கேட்கக் கூடாது. இது Customary வசனம். எழுதிய பதிவுகளில் சில தொடரும் என்று போட்டிருந்த பதிவுகள் என்னன்னு எனக்கே மறந்துவிட்டது. உங்களுக்கும் மறந்திருக்கலாம். அப்பதிவுகளின் தொடர்ச்சி வருமா? புகழ்பெற்ற வசனமான "வரும் ஆனா வராது" கேஸ் தான்.  இதற்கான காரணத்தை - ஏன் என்னால் எழுத இயலவில்லை என்பதை - என்னை நானே சுயபரிசோதனை செய்து ஆராய்ந்த போது தெரிந்து கொண்டதைச் சொல்ல வேண்டும் என்றால் பின்னோக்கிச் செல்ல வேண்டும். அதை முன்னோக்கி எடுத்துச் செல்ல எழுத வேண்டும்.

வியாழன், 23 நவம்பர், 2023

எங்கள் வீட்டுப் பிதாமகர்


“கோந்தே, பாரு எவ்வளவு சமட்டினாலும் திடீர்னு சைக்கிள்ல லைட் ஏரியலை. டைனமோ பாக்கணும். இது டவுன் இல்லியா, போலீஸ் பாத்தா பிடிப்பா. நீ எறங்க வேண்டாம். அப்படியே உக்காந்திண்டிரு, Bar அ கட்டியா பிடிச்சுக்கோ. சைக்கிள தள்ளறேன். ஒழுகினசேரி பாலம் ஏறி இறங்கினதும்  ஹைவே. போலீஸ் இருக்கமாட்டா, அப்புறம் சைக்கிள சமட்டறேன்.”

புதன், 15 நவம்பர், 2023

சில்லு சில்லாய் - 16 - மங்கையராகப் பிறப்பதற்கே...- கங்கு கீரை - வானுலகம்

 

சில்லு - 1 - மங்கையராகப் பிறப்பதற்கே...

மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும் என்று எங்கள் ஊர் தாத்தா கவிமணி பாடியிருக்கிறார். கல்லூரியில் படித்த போது இதை நான் மேடை தோறும் முழங்கியிருக்கிறேன். ஆனால் அந்த முழக்கம் எல்லாம், எப்போது பெண்கள் பாலியல் துன்பத்துக்கு ஆளாவதும், சிவப்பு விளக்கிற்குத் தள்ளப்படுவதும் என்னைத் தாக்கத் தொடங்கியதோ அப்போது நின்றுவிட்டது.

செவ்வாய், 7 நவம்பர், 2023

ஒன்று கூடல் நிகழ்வும், ஈஷா பயணமும் பகுதி – 2


மகிழ்ச்சி என்பது இயற்கை, ஆனால் துக்கம் என்பது செயற்கை அதாவது துக்கம் என்பது நாமாக உருவாக்கிக் கொள்வது - இது சத்குருவின் வாக்கு. அதனால்தான் இறைவனை துதித்துப் பாடி ஆடி ஆனந்தம் கொள்வது ஈஷா மையத்தில் நித்ய நிகழ்வாகிறது. - 1

“சிவ சிவ என்றிடத் தீவினை மாளும். சிவ சிவ என்றிட என்னச் சிவகதி தானே” எனும் சான்றோர் வாக்கும் அதுதானே. பிறவிப் பெருங்கடலை நீந்தி இறைவன் திருவடி சேர்வதுதானே சைவ நெறி. அதைப் பின்பற்றும் சத்குருவின் ஈஷா மையத்தில் தூரத்திலிருந்து நம்மை அதிசயம் கொள்ள வைக்கும் பிறை சூடிய சிவரூபம் வரவேற்கிறது. - 2

வெள்ளி, 3 நவம்பர், 2023

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 26 - லால்பாக் மலர் கண்காட்சி - 2023 - 3

இந்த வருடத்து லால்பாக் மலர் கண்காட்சி சென்று வந்ததும் சுடச் சுடப் போட்டுவிட நானே என்னைப் பார்த்து மயங்கிட இரண்டாவது பதிவு தாமதித்தது அதன் பின் மீண்டும் 3 வது பதிவு போட தாமதம். காரணம் படங்கள் காணொளிகளை அடுக்கிக் கோர்க்க. இடையில் ஒத்தி வைக்கப்பட்டிருந்த பெங்களூர் சாப்பாட்டு நகரம்னு எழுதி திசை மாறியது. துளசியின் பதிவுகள், எனக்கு வேலைப்பளு, பயணம் என்று போக, மீண்டும் மனம் தேங்கியது.  

சாப்பாட்டு நகரம்னு அதைப் பற்றியே வந்து கொண்டிருந்தால் போரடித்துவிடுமே, அடடா, லால்பாக் மலர் கண்காட்சி தொடர் அப்படியே நிக்குதேன்னு இதோ மீண்டும் தூசி தட்டி....கொஞ்சம் கலர்ஃபுல்லாகப் பகிரலாம் என்று அதன் தொடர்ச்சி.

மூன்றாவது பகுதிக்கு இடையில் இடைவெளி கூடிவிட்டதால் ஒரு சின்ன Recap! ற்கான சுட்டிகள் இங்கே பகுதி 1 - பகுதி 2 

வெள்ளி, 27 அக்டோபர், 2023

சில்லு சில்லாய் - 15 - இந்தியாவின் சிலிக்கன் நகரம் உணவு நகரமாய் மாறி வருகிறதா - 2

 

35 வருடங்களுக்கு முன் பங்களூர் அனுபவங்கள் என்றால், கிராமத்தை விட்டு வந்த எனக்குச் சென்னை நகரத்திற்கு அப்புறம் ஒரு நகரத்திற்குப் பயணம் என்றால் அது பெங்களூர், மைசூருக்கு ஒரு வாரம் பயணத்தில் சென்றதுதான். சிலவற்றை இப்போதையதுடன் (கறுப்பு நிற எழுத்துகள்) சேர்த்துச் சொல்லியிருக்கிறேன். அப்போது நாங்கள் தங்கியிருந்தது பெங்களூர் ஐஐஎஸ்ஸி வளாகத்துள் இருந்த உறவினர் வீட்டில்.

திங்கள், 23 அக்டோபர், 2023

ஒன்று கூடல் நிகழ்வும், ஈஷா பயணமும் பகுதி - 1

 

எப்போதாவது காண நேரும் நம் பள்ளித் தோழர்கள், அந்த இனிமையான நாட்களுக்குக் கொண்டு சென்று கடந்து போன அந்தப் பொன்னான நாட்களை நாம் சுவைத்து மகிழ உதவுவார்கள். அது போல் சமீபத்தில் நான் 23 ஆண்டுகள் பணியாற்றிய CFDVHS - சிஎஃப்டிவிஹெச்எஸ் பள்ளியில் 1998 – 2000 வருடங்களில் பயின்ற மாணவ மாணவியர்கள் ஒரு சந்திப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள். Voice 1

திங்கள், 9 அக்டோபர், 2023

சில்லு சில்லாய் - 14 - இந்தியாவின் சிலிக்கன் நகரம் உணவு நகரமாய் மாறி வருகிறதா - 1


என்னைப் போல் சாப்பாட்டை விரும்பி ரசித்துச் சாப்பிடும் பிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்! பெங்களூருக்கு வந்ததிலிருந்து இப்பதிவை எழுதத் தொடங்கி எழுதிக் கொண்டே……..இப்போதுதான் முடிக்க முடிந்தது. எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊரின் வாழ்க்கை, உணவு முறை, உணவகங்கள் என்று நான் கொஞ்சம் கூர்ந்து நோக்குவது வழக்கம்.

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 25 - லால்பாக் மலர் கண்காட்சி - 2023 - 2

இந்த வருடத்து லால்பாக் மலர் கண்காட்சி சென்று வந்ததும் சுடச் சுடப் போட்டுவிட ஆ கீதாவான்னு!!!! எல்லாரும் மயங்கினீங்கதானே! பாருங்க அடுத்தது போடுவதற்குள் வாலு போச்சு கத்தி வந்ததுன்னு சில பணிகள் வந்துவிட அதில் ஆழ்ந்து செய்து முடித்ததும் மனமோ கெஞ்சியது ரிலாக்ஸ் ப்ளீஸ் என்று. சரி ரொம்ப நாளாச்சு, ஒரு தமிழ் கீர்த்தனை கற்றுக் கொள்ளலாம் என்று இணையத்தில் ஆராய்ச்சி. நாம ஏகலைவிதான்! அது ஒரு புறம்.