திங்கள், 17 ஆகஸ்ட், 2015

சாம்பார்

Image result for vegetable sambar

சகோதரர் விஜு அவர்கள் தனது ஊமைக்கனவுகள் தளத்தில் “தோசை” என்ற பதிவில் அதனை பழைய இலக்கியத் தொடர்புகளோடு தமிழர்களின் உணவு என்று மிக அருமையாகச் சொல்லியிருந்தார். அன்றே தோன்றியது, தோசை என்றால் சாம்பார் வேண்டாமோ என்று! அதுவும் தமிழ்நாட்டு மக்களின் காலை உணவு சாம்பார் இல்லாமல் புலர்வதில்லை! தொடர்ந்து மதிய உணவிலும் இடம் பெறும் அளவு தமிழ்நாட்டின் அடையாளமாகவும், தமிழ் மக்களின் நாவிற்கும், மனதிற்கும் உகந்ததாகவும் ஆகிய ஒன்று. என்னதான் இப்போது ஏற்பட்டுள்ள நாகரீக வளர்ச்சியினால் எல்லா மாநில உணவுகளும், ஏன் பல நாடுகளின் உணவும், பல தமிழக நகரக் குடும்பங்களிலும், உணவகங்களிலும் கலந்து விட்டாலும், சாம்பார் காலை உணவிலும், மதிய உணவிலும் ஆட்சி புரியத்தான் செய்கின்றது.

தமிழ்நாட்டிற்கு வரும் பல மாநிலத்தவரும், ஏன் வெளிநாட்டவரும் கூட, “தமிழ்நாட்டில் உங்களுக்குப் பிடித்த உணவு எது” என்று கேட்டால், சாம்பாரைத் தாங்கள் விரும்பிக் கேட்டுச் சாப்பிடுவதாகச் சொல்வதைக் கேட்கும் போது  அது தமிழ் உணவாகத்தான் இருக்க வேண்டும். அப்படி என்றால் நான் கேள்விப்பட்டக் கதை? அது சொல்லும் வரலாறு?


                       குடம்புளி                         கோக்கம்

10 வருடங்களுக்கு முன் புனாவிற்கு என் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த போது, அங்கு ஒரு நண்பரின் வீட்டிற்கு விருந்திற்குச் சென்றிருந்தோம். நம்மூர்காரர்தான் ஆனால் பல வருடங்களாக அங்கேயே இருப்பவர். அங்கு ஆம்டி எனப்படும் பருப்பு (குழம்பு) சாதத்திற்கு வைத்திருந்தார்கள். அது வேறு ஒன்றுமில்லை, புளிக்குப் பதிலாக கோக்கம் - புளியைப் போன்றது - போட்டு செய்திருந்தார்கள். (கேரளத்தில் இதைக் குடம் புளி என்று சொல்லுகின்றனர்.) சாம்பார் பொடிக்குப் பதிலாக கோடா மசாலா எனப்படும் மஹாராஷ்ட்ரா மசாலா போட்டு செய்திருந்தார்கள். நன்றாக இருந்தது. நான் அதன் குறிப்புகளை வாங்கிக் கொண்டேன். புளியும் போட்டு செய்வார்களாம். ஆம்டியிலிருந்து வந்ததுதான் சாம்பார் என்று சொல்லி நண்பர் இந்தக் கதையைச் சொன்னார்.


அதாவது, தமிழ்நாட்டில் தஞ்சாவூர் (நண்பர் தஞ்சாவூர்காரர்தான்) தஞ்சாவூரை மகாராஷ்ட்டிரா மன்னர் சம்பாஜி ஆண்டு கொண்டிருந்த போது ஒரு நாள் அவரது அரண்மனையில் கோக்கம் தீர்ந்து விட சமையல்காரர் தமிழகத்தில் விளையும் புளி போட்டு செய்தாராம்.  மன்னரும் மிகவும் விரும்பி உண்டாராம், வித்தியாசம் எதுவும் தெரியாமல். பின்னர் ஒரு நாள் சம்பாஜி மகாராஜா அரண்மனைக்கு வந்த போது அரண்மனையில் யாரும் இல்லாததால், தனது பசியைப் போக்கிக் கொள்ள தானே சமையற்கட்டிற்குள் சென்று தனது நளபாகத் திறமையைக் காட்டினாராம். அங்கிருந்த காய்கறிகளையும், பருப்பையும் சேர்த்துச் சமைத்து உண்டாராம். அதுதான் பின்னாளில் சாம்பார் என்று சொல்லப்பட்டது என்றார்.

அப்படியென்றால், சாம்பார் தமிழர்களின் உணவில்லையா என்ற கேள்வி எழ, அதன் வரலற்றைச் சற்று தேட ஆரம்பித்தேன் உட்கார்ந்த இடத்திலிருந்தே..அதாங்க இணையத்தில் தேட கிடைத்த தகவல்கள் சாம்பார் தமிழர்களின் உணவுதான் என்று தெரிய வந்தது.

அமுதுபடி கறியமுது பல சம்பாரம் நெய்யமுதுள்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக,” (கல்வெட்டடு, 503, 1530 CE) என்ற கல்வெட்டிலிருந்து நாம் அறிய வருவது, சம்பாஜி மன்னரின் ஆட்சிக்கு (கி.பி.1675) முந்தைய காலத்திலேயே தமிழகத்தில் இருந்திருக்கின்றது என்பது. கறியமுது - சம்பாரம் என்றால் பல காய்களையும், அரிசியையும் (அமுது) கொண்டு சமைக்கப்படும் உணவு என்ற பொருள். கறியமுது, நெய்யமுது, தளிகை என்பன வைணவத் தமிழில் வரும் சொற்கள் என்பது எனது புரிதல். (கேரளத்தில் சம்பாரம் என்றால் நீர் மோர் –உப்பு, கறிவேப்பிலை, மிளகாய், கடுகு என்று தாளித்து செய்யப்படுவது).

சாம்பு எனப்படுவது அரைத்த தானியங்கள், தேங்காய் என்ற பொருள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த சம்பாரம் என்படும் சொல்தான் சாம்பார் என்று பின்னர் அழைப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இந்தச் சொல் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சம்பல் எனப்படும் உணவுடனும் தொடர்புபடுத்தப்படுகின்றது.

இதுவரை மேலே சொல்லப்பட்ட கதைதான் மனதில் இருந்தது.  தோசை தமிழ் இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ளது என்றும் இது தமிழ் உணவு என்றும் சகோ விஜு அவர்கள் பல பாடல்களுடன் சொல்லியிருந்ததை வாசித்த போது அதற்குத் துணை போகும் சாம்பாரும் இலக்கியத்தில் சொல்லப்பட்டுளாதா என்று சில தேடல்கள்.  ஆனால், தமிழ் உணவு என்று, எங்கள் அறிவிற்கு எட்டிய தமிழ் விக்கியின் உதவியுடன் இங்கு சொல்லியாயிற்று. சகோ விஜு அவர்கள் இலக்கியப்பாடல்களுடன் சொல்லலாம் என்று நினைக்கின்றோம்.

---கீதா

படங்கள் : நன்றி - இணையம்

(ஹப்பா கீதா சின்னதா பதிவு போட்டுருக்காப்பா...அப்படியாவது மழை நல்லா பெய்யட்டும்...மழை வருதானு பாருங்க..)

65 கருத்துகள்:

  1. ஹை!!! நான் நெனச்சேன்! நீங்களே சொல்லீடீன்களே!! பதிவின் நீளத்தை சொன்னேன்:)))

    இப்படி அம்புட்டு பேரும் ஆராய்ச்சி, இலக்கியம்னு கிளம்பின என்ன மாதிரி பாமரர்கள் என்ன செய்யமுடியும்:(( j.k குடம்புளி இங்கயும் நாட்டு மருந்து கடைகளில் மட்டும் கொஞ்சம் அதிக விலையில் கிடைக்குது கீத்து. பதிவு ஸ்பைசியா இருந்துச்சு டியர்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மைத்தூ மிக்க நன்றி....ஆமாம்பா....இந்த முறை எப்படியோ பதிவின் நீளத்தைக்/கதையைச் சுருக்கியதால் முடிந்தது. இனியும் இப்படி முடியுமா ..??!!! முயற்சிதான் செய்ய வேண்டும்...பார்ப்போம் ...ஆமாம் இங்கயும் கிடைக்குது....பாம்பே ஸ்டோர் எனப்படும் கடையில் அவர்கள் ஊர் கோக்கமும் கிடைக்கின்றது....நான் இதை அடிக்கடி புளிக்குப் பதில் உபயோகப்படுத்துவது உண்டு....நன்றாகவே இருக்கிறது..மைத்தூ உடம்புக்கு நல்லது என்பதால். குடம்புளி கேரளத்திலும் கிடைப்பது உண்டு...

      நீக்கு
  2. சாம்பார் பற்றி சில அறிந்தனவும், பல அறியாதனவும். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. மழை பெய்துச்சா என்ன ம் ம்.. இங்க எல்லாம் அப்பிடி பெய்யலையே. சரி இப்போ இப்படி தேடி இலக்கியத்தில இல்லை அதனால இது தமிழ் உணவு இல்ல அதனால சாப்பிடக் கூடாது என்று போரரட்டம் கீராட்டம் செய்யாம இருந்தா சரி தான். ஹா ஹா ........பெரும் பாலும் காலையுணவு அநேகருக்கு இது தான் இல்ல. அவங்க வயித்தில அடிக்கதீங்காப்பா அப்புறம் இலக்கியத்திற்கே ஆபத்தா போயிடும்.

    நல்ல விடயம் தோழி உண்மையில் ஒரு திருப்தி நம்ம சாப்பாட்டை தான் சாப்பிடுகின்றோம் என்று.
    நம்ம ஊரில் தேங்காய் சட்னியை சம்பல் என்று தான் அழைப்போம் .
    நன்றி கீதாம்மா ! தேடுதல் தொடரட்டும் ! வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹஹ் ஆம் சம்பல் பற்றித் தெரியும்....இப்போது எல்லா நாட்டவரின் சாப்பாடும் கலந்ததுதான் நமது உணவு என்றாகிப்போனாலும் நம் உணவும் இருக்கத்தானே செய்கின்றது...மிக்க நன்றி தோழி தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
    2. ஓ தேங்காய்ச் சட்னியா இனியா? Island of thousand mirrors என்ற நூலில் மீனும் சம்பலும் என்று இருந்தது,, குழம்பு என்று நினைத்தேன் . :-)

      நீக்கு
    3. க்ரேஸ் சம்பல் என்பது தேங்காய் சட்னி மட்டும் இல்லை, தேங்காயும் சேர்த்தும் செய்யலாம். வெங்காயம் புளி உப்பு சேர்த்தும் செய்யலாம். நீங்கள் சொல்லி இருக்கும் மீன் சம்பலும் உண்டு....நம்மூரில் நிறைய சட்னி வகைகள் உள்ளது போல் அதை அங்கு சம்பல் என்று சொல்லுகின்றார்கள்.

      நீக்கு
  4. மதுரையில ரெண்டு நாளா நல்ல மழ இப்பதானே தெரியுது, என்ன காரணமுன்னு.
    வழக்கம்போல அரிய தகவல்களுடன் நல்ல பதிவு. நான் பயன்படுத்திக் கொள்கிறேன். தங்கள் அனுமதியுடன்.
    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ் ஓ! அப்படியா! மிக்க நன்றி நண்பரே! தங்களின் ரசனையான கருத்திற்கு....தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்..சாம்பாருக்கா பஞ்சம்?!!!!

      நீக்கு
  5. நம்முடன் இணைந்து விட்டது - சாம்பார்..

    ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு பக்குவம்!..

    இனிய தகவல்களைக் கண்டு மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா..ஒவ்வொரு பகுதியிலும் சாம்பார் வித்தியாசமாக இருக்கும்....மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
    2. ஆம் ஐயா..ஒவ்வொரு பகுதியிலும் சாம்பார் வித்தியாசமாக இருக்கும்....மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
  6. சாம்பார் என்றால் எனக்கு நினைவுக்கு வருவது வேறு...

    யார் என்று சொல்லுங்களேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ் சொல்ல வந்ததை மதுரைத் தமிழன் அவர்கள் சொல்லி விட்டார்...

      தமிழ் இளங்கோ அவர்களும் கூட சொல்லி இருக்கிறாரே!..

      நீக்கு
  7. சாம்பார் ஆராய்ச்சி நன்று! :)

    பலரும் சொல்வது மராட்டியர்கள் இங்கே கொண்டு வந்தது என்று தான். இலக்கியங்களில் சாம்பார் இருக்கிறதா என தேடி யாராவது பதிவிட வேண்டுகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ...ஆமாம் அப்படித்தான் நாங்களும் கேள்விப்பட்டிருக்கின்றோம் வெங்கட்ஜி.....ஆனால், இணையத்தில் தேடிய போது விக்கி சொல்லியது அந்தக் கல்வெட்டு பற்றி. அப்போதுதான் இது இங்கும் இருந்திருக்கின்றது என்று தெரியவந்தது. பார்ப்போம் யாராவது இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளதா என்று சொல்லுவார்கள். நாங்கள் தேடிய போது எங்கள் அறிவுக்கு ஒன்றும் எட்டவில்லை..

      மிக்க நன்றி வெங்கட்ஜி! கருத்திற்கு..

      நீக்கு
  8. தமிழ்நாட்டில் சாம்பார் என்றால் ஜெமினி கணேசன்தான் நினைவுக்கு வருவார். நீங்கள் ‘சாம்பார்’ என்றதும், எனக்கு அவரைப் பற்றிய பழைய சினிமா நினைவலைகளாக இருக்கும் என்று எண்ணினேன். நானும்
    ’சாம்பார் – கணேசன்’ என்று ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்.

    உங்கள் சாம்பார் நல்ல காரம், நல்ல புளிப்பு மற்றும் சரியான உப்பு கலந்து சுவையாக உள்ளது. ராஜா அரண்மனைக்கு வந்தபோது அங்கே யாருமே இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளங்கோ ஐயா...எல்லோருக்குமே சாம்பார் என்றால் ஜெமினி தான் நினைவுக்கு வருவார். சாம்பார் கணேசன் பார்க்கின்றோம்...

      சாம்பார் நல்ல காரம், புளிப்பு மற்றும் சரியான உப்பு கலந்து சுவை என்று பாராட்டியதற்கு மிக்க நன்றி...ஐயா

      நீக்கு
  9. நான் கூட ஜெமினி பற்றி ஏதோ சொல்லியிரூக்கிறீர்கள் என்று நினைத்தேன்!
    அடுத்து ரஸம் ப்ற்றி ரசமாகச் சொல்லி விடுங்கள்!பின்னர் some more!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ ரசம் பற்றிச் சொல்லிட்டா போச்சு.....பின்னர் சம் மோர்?? சொல்லிட்டாப் போச்சு..இதிலேயே மோர் பற்றி ஒரு வாக்கியம்...கேரளத்து மோர் பற்றி சம்பாரம் என்று..ஹஹஹ்

      மிக்க நன்றி குட்டன். சார்...தங்களின் முதல் வருகைக்கும்???!!! (இந்தப் பெயரில் முதல்...மற்றபடி இல்லை என்பது தெரியும்...,) கருத்திற்கும்....

      நீக்கு
  10. அன்றாடம் புழங்கும் விஷயம்தான் ஆயினும்
    அறியாது இருந்த விஷயத்தை
    இந்தப் பதிவின் மூலம் அறிந்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. சாம்பார் என்றதும் - திரு. ஜெமினி கணேசன் அவர்களை ஏன் எல்லோரும் அவ்வாறு ஏளனம் செய்தார்கள் என்ற எண்ணமும் கூடவே வந்தது..

    ஆனாலும் - அந்த கால கட்டத்தில் மிக அதிகமான வெள்ளிவிழா படங்கள் இவருடையதே - என்று சில தினங்களுக்கு முன் படித்தேன்..

    பொது நிகழ்ச்சிகளில் கூட - ஜெமினி கணேசன் அவர்களை - சாம்பார் என்று கூச்சல் போட்டு அநாகரிகமாக நடந்து கொண்டனராம் - அன்றைக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு...
      ஓ அது ஏளனமாகச் சொல்லப்படுவதா...இது நாள் வரை எனக்கு அப்படித் தோன்றவில்லை ஐயா...மிக்க நன்றி..

      நீக்கு
  12. பருப்பு சாம்பார் வைக்கவே பயமாக இருக்கிறது! துவரம் பருப்பு கிலோ 150 ஐ தாண்டிவிட்டது! ஆனாலும் சாம்பார் இல்லாமல் ஒரு சாப்பாடு என்பது நினைத்து பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பல சமயங்களில்...ஆனால் 150 ஆகி விட்டதா? இங்கு அதைவிடக் குறைவாகக் கிடைக்கின்றதே சுரேஷ்...சகோதரி கீதா அவங்க கொடுத்துருக்கற விலை பாருங்க...மசூர் பருப்பு என்று சொல்லப்படுவதுண்டு இல்லையா அது கொஞ்சம் விலை குறைவு..அதுவும் உபயோகப்படுத்திப் பாருங்கள்....

      நீக்கு
  13. சாம்பார் என்றதும் - திரு. ஜெமினி கணேசன் எனக்கு நிணைவில் வந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹ பெரும்பான்மையோர் அப்படித்தான் சொல்லி இருக்கின்றார்கள்...மிக்க நன்றி வலிப்போக்கன்...

      நீக்கு
  14. அருமையான சாம்பார் தான். ஆனாலும் எனக்கு என்னமோ தோசையை விட இட்லிக்குத் தான் சாம்பார் பிடிக்கும். :) தோசைக்குக் காரசாரமாகத் தக்காளி, கொத்துமல்லி வைத்து அரைத்த துவையல் அல்லது வெங்காயத் துவையல். இப்போதெல்லாம் வெங்காயத் துவையல் சாப்பிடுவதே குறைஞ்சும் போச்சு! :)))) சாம்பார் தமிழர் உணவு தான் என்றே கேள்விப் பட்டிருக்கேன். :) கோக்கம்புளி போட்டுச் செய்தது இல்லை. ஒரு முறை அதையும் முயற்சிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! நீங்கள் சொல்லி இருக்கும் காம்பினேஷனும் மிகவும் பிடிக்கும்...இங்கு சாம்பார் தலைப்பு என்பதால் இதை மட்டும் சொன்னோம்...பார்க்கப்போனால் சாம்பாருடன் மற்ற சட்னிகளும் செய்வதுண்டே....

      கோக்கம் போட்டுச் செய்யுங்கள் மிகவும் நல்லது சுவையும் மாறுபடுவதில்லை நன்றாகவே இருக்கிறது...

      நீக்கு
  15. தளிர் சுரேஷ், இந்த மாத மளிகை சாமான் விலைப்பட்டியலின் படி துவரம்பருப்பு (நேற்று வரை) 115 ரூபாய் தான். இது சூப்பர் மார்க்கெட் எனப்படும் வணிக வளாகங்களில் விற்கும் விலை! அண்ணாச்சி மளிகைக்கடைகளில் இன்னும் கொஞ்சம் குறைவாகவே (பத்து ரூபாயாவது) இருக்கும். பாசிப்பருப்பு 90 ரூ ஒரு ரகம், 100 ரூ இன்னொரு ரகம், கடலைப்பருப்பு 80 ரூபாய்ன் முழு உளுத்தம்பருப்பு 120 ரூ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோதரி நீங்கள் சொல்லி இருப்பது போலத்தான் இங்கும்...பக்கத்தில் உள்ள கடையில்

      நீக்கு
    2. ஆம் சகோதரி நீங்கள் சொல்லி இருப்பது போலத்தான் இங்கும்...பக்கத்தில் உள்ள கடையில்

      நீக்கு
  16. கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு முன்பு பரிமாறப்பட்ட தோசைக்கு இன்றைக்குச் சாம்பார் விட்டிருக்கிறீர்கள்!! :-) அருமை!

    நானும் வெகுநாட்களாகச் சாம்பார் மகாராட்டிர உணவு என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். பலரும் அப்படித்தான் சொல்கிறார்கள். கடந்த ஆண்டு பொங்கலின்பொழுது 'தமிழர் திருநாளாம் பொங்கலைத் தமிழன் தமிழல்லாத அடையாளங்களுடன் கொண்டாடுகிறான்' என்கிற பொருளில் ஒரு கவிதை எழுதி முகநூலில் வெளியிட்டேன். அதில் மகாராட்டிர உணவான சாம்பாரைத் தமிழன் பொங்கலன்று இறைவனுக்குப் படைப்பதையும் குறிப்பிட்டிருந்தேன். அப்பொழுது முகநூலில் அதைப் பார்த்த முன்னாள் நண்பர் ஒருவர், "பழைய கல்வெட்டு ஒன்றில் சம்பாரம் என்கிற பெயரில் 'சாம்பார்' குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, 'சாம்பார்' தமிழர் உணவுதான்" என்றார். மிகவும் வியந்தேன்! மகிழ்ந்தேன்! ஆனால், அவர் பாடலைச் சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிட்ட பாடலையே எடுத்துக்காட்டி அசத்தி விட்டீர்கள். நன்றி கீதா அம்மணி!

    ஒரு சிறு வேண்டுகோள்! இந்தப் பதிவுக்கு நீங்கள் 'சாம்பார்' என்று மட்டும்தான் பெயர் வைத்திருக்கிறீர்கள். இதை விட 'சாம்பார் - தமிழர் உணவு இல்லையா? - இதோ சான்று' என்று நீங்கள் தலைப்பிட்டிருந்தால், அதாவது, 'சாம்பார், தமிழர், உணவு' என்கிற சொற்கள் இடம்பெறும்படி தலைப்பை வைத்திருந்தால், இணையத்தில் இது குறித்துத் தேடும் பலருக்கும் சிறந்த தெளிவை அளிக்கும் பதிவாக இது என்றும் திகழும்! இப்பொழுதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. இந்தச் சாம்பாரில் நீங்கள் மேற்கொண்டு எதுவும் சேர்க்க வேண்டியதில்லை. :-) பதிலாக, இந்தப் பதிவின் தேடல் விளக்கம் (Search Description) பகுதியில் நீங்கள் இதைக் குறிப்பிட்டால் கூடப் போதும். நல்ல பலன் இருக்கும். 'சாம்பார் தமிழர் உணவா இல்லையா' என்பதை அறியத் தேடும் அனைவருக்கும் இது வழிகாட்டியாக இருக்கும் என்றென்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரரே! தங்களின் விரிவான பயனுள்ள பின்னூட்டத்திற்கு. அந்தக் கல்வெட்டுச் சான்று தமிழ் விக்கியிலிருந்துதான் எடுத்தேன். அதையும் அங்கு குறிப்பிட்டுள்ளேன். வேறு சான்றுகள் இருக்கின்றனவா என்று தேடினேன் இணையத்தில் கிடைக்கவில்லை. அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கும் செல்லமுடியவில்லை...பார்ப்போம் அப்படிக் கிடைத்தால் பகிர்ந்துகொள்கின்றேன். ஆனால் சகோ விஜு அவர்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டு. அவர் சொன்னால் சரியான விளக்கத்துடன் சொல்வார்...

      நிச்சயமாகச் செய்கின்றோம் நீங்கள் சொல்லியிருக்கும் தேடல் குறிப்புகள் பற்றி. சேர்க்கின்றோம்...நீங்கள் சொல்லி இருப்பது மிகவும் பயனுள்ள விடயம்....மிக்க நன்றி...சகோ...

      நீக்கு
  17. இதைத்தான் நேற்று சாம்பார் அடுப்புல இருக்குனு சொன்னீங்களா ? ஸூப்பர் விடயங்கள்
    தமிழ் மணம் 10

    நண்பர்கள் பலரும் சாம்பாரைபபற்றி வசாரித்தமைக்காக...

    எனக்கு தெரிந்ததை பதியவைக்க விரும்புகிறேன் அதாவது எம்ஜிஆர், சிவாஜி நடிக்கும் படங்களில் சண்டைக்காட்சிகள் பெரும்பாலும் இருக்கும், அதேபோல் ஜெமினி கணேசன் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் சண்டைக்காட்திகள் இருக்காது மேலும் அவர் கூடுதலாக காதல் செய்பவராகவே வருவார் இந்த காலகட்டங்களில் சண்டைப்பிரியர்கள் (ரசிகர்கள்) அவரை சாம்பார் என்றழைத்தனர் அதாவது சைவம் மற்ற இருவரும் அசைவம் அதாவது கத்தி கம்பு எடுத்து அடிப்பவர்கள் அதற்காக புராணப்படங்களில் ஜெமினி கணேசன் வாள் எடுக்காமல் இல்லை இருப்பினும் கூடுதல் படங்களில் இவர் இப்படியும், அவர்கள் இருவரும் அப்படியும் நடித்ததே காரணம்,

    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹஹ்...ஆமாம்......நீங்க கேப்பீங்கனுதான்...திரும்ப திரும்ப சொல்லிருந்தேன்...ஆனா நீங்க உண்மையான சாம்பார்னு நினைச்சுட்டீங்கல்ல..அஹஹஹ்...

      மிக்க நன்றி நண்பரே! ஜெமினி அவர்களை ஏன் சாம்பார் எனச் சொல்லுகின்றார்கள் என்ற விளக்கத்திற்கும்....சரியான விளக்கமாகத்தான் தெரியுது....

      நீக்கு
  18. பிள்ளைகளைக் கிளப்பிப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வந்து ஆயாசமாக அமர்ந்தேன்,, கீதா எனக்குத் தோசையும் சாம்பாரும் கொடுத்துட்டாங்களே :-)
    நன்றி கீதா
    உங்கள் இலக்கியத் தேடலுக்கும் பகிர்விற்கும் நன்றி
    ஆஹா, இங்க நேற்றிலிருந்து மழை பெய்கிறதே :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ்...தோசை விஜு அவர்கள் சுட்டது......அடடா இப்ப சுட்டது என்பதன் அர்த்தமே மாறிவிட்டதே...அதனால் விஜு அவர்கள் படைத்தது....சும்மா அதற்கு சாம்பார் அப்போதே விளம்பிட நினைத்து தாமதமாகிவிட்டது....

      தேடல் என்று பெரிதாகச் சொல்லுவதற்கில்லை க்ரேஸ்...நீங்கள், விஜு, சுரேஷ் எல்லாம் தமிழ் பாடல்கள் பற்றி எல்லாம் நிறைய எழுதுவதை வாசிக்கும் போது, கல்லூரிக் காலத்தில் எழுதியதும் ஆர்வமும் மேலெழுந்து விடுகின்றது அவ்வப்போது. அதன் விளைவே...உங்கள் எல்லோருக்கும் நாங்கள் நன்றி சொல்லவ் வேண்டும்...இதோ எங்கள் நன்றிகள்!

      மழையா? அட..சரி அப்போ நான் நீளம் குறைத்துப் பதிவு எழுதுவதை வழக்கமாக்கி விட்டால் மழை நின்று விடுமே...வராதே...அதனால் அவ்வப்போது சிறிய பதிவு என்றால் தான் மழை வருமோ...அஹஹஹ்ஹ. முயற்சி செய்கின்றேன்/றோம்
      மிக்க நன்றி...க்ரேஸ்...

      நீக்கு
  19. ஜோசப் விஜு அவர்கள் தோசை பற்றி பல இலக்கிய பாடல்களைக் காட்டி எழுதினார். எனக்கு என்னவோ கான மயிலாட என்னும் பாட்டுதான் நினைவுக்கு வந்தது. உங்களுடைய தேடல் விக்கி வரையில்தான். ஆனால் விஜுவோ.....? தவறாக எண்ண வேண்டாம். எல்லோரும் போல் நானும் கருத்திட்டால் சுவைக்காதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சார்! விஜு அவர்கள் தான் இலக்கியத்தில் இருந்தும் சொல்லுவார். நீங்கள் சொல்லியதில் தவறு இல்லையே சார். நாங்களும் அதைத்தான் சொல்லி இருக்கின்றோம்...நாங்கள் இலக்கியத்தில் தேட முயற்சித்தோம். நூலகம் செல்ல முடியவில்லை...இணையத்தில் தேடியும் கிடைப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது. இன்னும் கொஞ்சம் தேடிவிட்டு பதிவாக்கி இருக்கலாம்...ஆனால் ஏற்கனவே சாம்பார் செய்து அது பாதியில் கெட்டு பின்னர் செய்து அது கிடப்பிலிருக்க என்று ஒரு வழியாக சிறிதேனும் முடித்து வெளியிட நினைத்து வெளியிட்ட பதிவு சார்...

      மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
  20. Thillaiakathu சாம்பாரும் கருத்துரைகளும் ரசிக்கவைத்தன...
    பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் சாம்பாரும் கருத்துரைகளும் ரசிக்க வைத்தமைக்கு மிக்க நன்றி சகோதரி

      நீக்கு
  21. சாம்பார் போலவே சுவையாய்...
    இருக்கிறது சாம்பார் பற்றிய ஆராய்ச்சி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்கநன்றி முஹம்மது னிஜாமுத்தீன் சகோ..தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
  22. பதிவு சிறியதாக இருந்தாலும் நல்ல பகிர்வு...
    கீதா மேடத்துக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி குமார் தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும்...

      நீக்கு
  23. ஆராட்சி அழகாய்த்தான் இருக்கு சாம்பார் தமிழர் உடமை என்பதில் பெருமிதம்.

    பதிலளிநீக்கு
  24. சுவையான பதிவு என்று சொல்லலாமா? சாம்பார் பற்றியதாச்சே... வரவர சாம்பார் ருசி எனக்குக் கொஞ்சம் அலுத்திருக்கிறது. கொஞ்சம் இடைவெளி விட வேண்டும். எனவே இரண்டு நாட்களுக்கு நோ சாம்பார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம் தங்களின் கருத்திற்கு...சாம்பார் அலுத்துவிட்டதா...ஹ்ஹ்ஹஹஹ் சரி வேற என்ன போடலாம்...பார்க்கிறேன்...

      நீக்கு
  25. தினமும் செய்யும் சம்பாரின் வரலாறு ...ஆகா அருமை ...

    பதிலளிநீக்கு
  26. மன்னிக்கவும் சகோ.

    நானும் சேர்ந்திருக்கும் சாம்பார் மிகவும் ஆறியபிறகு வருகிறேன்.

    குடம்புளி என்னும் புளிதான் நம் மரபார்ந்த புளி. இன்று நாம் பயன்படுத்தும் புளி அயல்நாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டதே!

    சாம்பார் பற்றி மட்டுமல்ல இன்னும் சில உணவு வகைகள் குறித்துச் சில குறிப்புகளைச் சேர்த்து வருகிறேன்.

    பதிவாகும் அளவிற்குப் போதுமானவை அல்ல அவை.

    சில தரவுகளும் தேடியபின் சாம்பார் பற்றி நிச்சயம் ரசமான கட்டுரையைத் தருகிறேன்.

    ஒரு பத்துநாள் பயிற்சி முகாமிற்கான ஆயத்தங்களால் தொடரவோ பல பதிவுகளுக்குப் பின்னூட்டம் இடவோ முடியவில்லை.

    பொறுத்தாற்றுங்கள்.

    உங்களின் அன்பினுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடம் புளிதான் நல்லது எங்கள் வீட்டில் பெரும்பாலும் அதைத்தான் உபயோகப்படுத்துகின்றோம். ஆனால் நாம் பொதுவாக உபயோகப்படுத்தும் புளி நம்மூர் புளி இல்லையா? அப்படி என்றால் புளியமரத்தில் பேய் என்பதைச் சொல்லும் போது குடம் புளி மரம் குறிப்பிடப்படுவதில்லையே.

      நானும் கல்வெட்டுச் சமையல் குறிப்புகள் சேகரித்து வருகின்றேன். ஜேக்கப் எனும் சமையல் நிபுணர் கூட கல்வெட்டுச் சமையல் பற்றியும், நமது பாரம்பரிய தானியங்கள் உணவு வகைகள் பற்றியும் தொடர் எழுதிவந்த நினைவு 7, 8 வருடங்களுக்கு முன்....அவர் திடீரென மறைந்துவிட்டார்....

      பழந்தமிழர் உணவு முறை பற்றியும் புத்தகத்தில் வாசித்தேன். ஆனால் அதன் பின் நூலகம் செல்ல இயலாத நிலை. அதனால் அப்படியே நிற்கின்றது...

      நேரம் வாய்க்கும் போது...வாருங்கள் சகோ உங்கள் ரசமான பதிவுகளைக் காண ஆவலுடன் உள்ளோம்...

      மிக்க மிக்க நன்றி சகோ தங்களின் அழகான தகவலுடன் கூடிய பின்னூட்டத்திற்கு..

      நீக்கு
  27. அஹா அருமையான சாம்பார். எத்தனை நாளானாலும் சூப்பரா இருக்கு. கீதாவின் கைப்பக்குவம் சூப்பர்.

    நானும் இதுபோல் சில விஷயங்களை எழுத நினைக்கும்போது பக்கத்தில் ஒரு லைப்ரரி இல்லையே என வருதியதுண்டு. தற்காலத்தில் நம்மிடம் இருக்கும் புத்தகங்கள் எல்லாம் கவிதை, கதை, கட்டுரைகளே. & மொழிபெயர்ப்பு நூல்கள் . எனவே ஆதாரங்களுடன் கொடுக்க இயலா நிலைமை.

    இருந்தத வைச்சு செய்த சாம்பார் அட்டகாசம் போங்க. அப்படியே முருகலா ரெண்டு தோசைமட்டும் அனுப்பிடுங்க. கீத்ஸ் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தேனு! நீங்கள் எழுதுவதை விடவா நாங்கள் எழுதுகின்றோம்....நீங்கள் நிறைய அருமையாக படைக்கின்றீர்கள்...உங்கள் கவிதைகள்..நாங்கள் வியப்பதுண்டு.அதுவும் 80 களிலேயே

      மிக்க நன்றி...தங்களின் கருத்திற்கு..

      நீக்கு
  28. சாம்பாரின் தொன்மை தெரியதா? புராணத்துலயே இருக்குங்க.

    தமிழ் தெரியுமுல்ல தமிழ்.. அதான் பேசுறமே (சில பேர்).. தமிழ் மொழி இறைவனருளால வந்ததுனு கேள்விப்பட்டிருப்பீங்க. தமிழ் என்பது அமிழ்து என்பதன் திரிதிரி (திரும்பத் திரும்ப சொல்வது) என்றும் கேள்விப்பட்டிருப்பீங்க. அமுதினும் இனிய தமிழ் உருவான கதை இத்.

    அதாவது சிவன், பார்வதி, கணபதி, முருகன் எல்லாரும் பேமிலி டின்னருக்கு மீட் பண்ணினப்ப.. முருகன் கேட்டாராம்.."யப்பாவ். யப்போவ்.. கூப்பிடுறேன் இல்லே? நீங்கள்ளாம் சமஸ்க்ருதத்துலயே பேசுறீங்க.,. எனக்காக ஒரு மொழி வேணும்"னு சிணுங்கிக்கிட்டே சொன்னப்ப சிவன் தடுத்து "நோ நோ முருகா.. யுவர் மதர் டங் இஸ் வாட் யு ஹேவ் டு ஸ்பீக்" என்றார். முருகன் அடம்பிடிக்க.. சிவனுக்கு லேசாக பயம் வந்துவிட்டது. எங்கே மறுபடி கோவணத்தோடு கிளம்பிவிடுவானோ இளையவன் என்று. அப்போது முருகன் அருளினால் அங்கே ஒரு மணம் மிதந்து வந்தது. "ஆ! எத்தனை இனிய மணம்!" என்று சிவன் வியக்க.. "ஆமாம்.. நான் கூட நினைச்சேன்! அம்மா செய்யுற சாம்பாருக்கு எத்தனை மணம்!" என்று தொப்பையைத் தடவியபடி கணபதி வியக்க.. முருகனுக்குக் கோபம் வந்து "அட.. இது வேறே மணம். தமிழ்மணம்..அம்மா செய்யும் அமுதினும் இனியது" என்று சொல்லி மணத்தைக் கட்டி மொழியாக்கினார். அதுவே தமிழ் மொழியானது. ஆக, சாம்பார் தமிழ் மொழிக்கே முன்னோடி என்பதை இதனாலறிக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹ நகையுடன் கூடிய பின்னூட்டம் கதையுடன்...அறியாத கதை..உங்கள் கற்பனைதானே சொல்லுங்கள் சகோதரரே! அப்போ அவுங்க எல்லாம் சமஸ்க்ருதம்தான் பேசினாங்களா?! ஓ..வடக்குல்ல...ரைட்டோ....சாம்பார் புராணம் சொன்னதற்கு மிக்க நன்றி சகோதரரே....மிகவும் ரசித்தோம் உங்கள் சாம்பார் புராணத்தை...

      நீக்கு
  29. வணக்கம்,
    சாம்பார் பற்றி நானும் எழுதனும் என்று இருந்தேன்,,,,,, இனி அவ்வளவு தான்,
    சரி சின்ன வயதில் பள்ளி நாட்கள் இன்னும் சரியாக எனில் 8 ஆம் வகுப்பு பட்டிமன்ற தலைப்பு இட்லிக்கு தேவை சட்னியா? சாம்பாரா?
    எனக்கு பிடிக்காத ஒரு குழம்பு சாம்பார்,,,,,,,,,
    தலைப்பில் நான் பேச வேண்டியது சாம்பார் பற்றி,,,,,,,, என்ன செய்வது பிடிக்கலையென்றாலும் பரிசு பிடிக்கும் இல்லையா?
    சாம்பார் பற்றி குறிப்பு எடுத்தேன். அத பாருங்க அப்பவே அவ்வளவு தகவல் எமக்கு,,,,,,,, பேசியாட்டியதும் எமக்கு தான் பரிசு என்ற எல்லோரும் பாராட்ட,,,,, எப்பவும் எமக்குத் தான்)
    ஆனா முடிவு வேற மாதிரி,,,,,,,,,
    எல்லாம் எங்க செட்டிங்க தான்.
    நீண்ட நாளைக்கு பிறகு இப்போ இதே தலைப்பில் பிஎட் படிக்கும் போது பேசியது,,,,,
    அதனால் எழுதலாம் என்று, ஆனால் அவர் அளவுக்கு நமக்கு ரசனையாக வராது என்பதால்,
    தங்கள் தொகுப்பு அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  30. ஊமைக்கனவுகள்
    இங்கேயும் தொடர்வது அருமை
    நல்ல பணி
    சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலை பலமாடிக் கட்டிடம் ஒன்றை வைத்திருகிறது பண்டைய உணவு குறித்த ஆய்வுக்காக ...
    விஜுவின் குறிப்பை படித்தவுடன் பலமாடிகள் பத்தாது என்றே தோன்றுகிறது

    பதிலளிநீக்கு