புதன், 26 ஆகஸ்ட், 2015

தலைவாரிப் பூச்சூடி உன்னை - ஆவியின் குறும்படம்

     நண்பர் ஆவியின் தனிப்பட்ட கன்னி முயற்சி அதாவது, கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம், தயாரிப்பு என்று குருவி தலையில் பனம்பழம் போல - ஒன் மென் ஷோ வாக எல்லா பொறுப்புகளையும் சுமந்து இயக்கிய படம் "தலைவாரிப் பூச்சூடி உன்னை"

       ஸ்க்ரிப்ட் என்று எதுவும் இல்லாமல், மனதிலேயே எல்லாம் வடிவமைத்து இயக்கியது எனலாம். அவர் இதற்கு முன் இயக்கிய காதல் போயின் காதல் ஸ்க்ரிப் எழுதி அதை எங்களுடன் விவாதித்து, மெருகேற்றி, பல நாட்கள் எடுத்துக் கொண்டு, ஒளிப்பதிவு, படத் தொகுப்பு எல்லாம் அதற்கானவர்கள் செய்து இயக்கியதற்கும், இரண்டே நாட்களில் முடிவு செய்து, அதுவும் எல்லாவற்றையும் தானே சுமந்து ஒரு பரீட்சார்த்த வடிவில் இயக்குவதற்கும் வித்தியாசம் இருக்கத்தானே செய்யும்! என்பதால் சில குறைகள் இருக்கலாம்.   என்றாலும், படத்தைப் பார்த்து தங்களது மேலான கருத்துக்களை, விமர்சனங்களை பதியலாம்.  வரவேற்கின்றோம்.  அது ஆவியின் அடுத்த முயற்சிக்கு உதவியாக இருக்கும்.

           இப்படம் இபோதைய பள்ளிக் கல்வியால் பெற்றோர்கள் படும் டென்ஷனும், அதனால் குழந்தைகள் படும் அவஸ்தையையும் மிக மிகச் சுருக்கமாகப் பதிய வைக்கும் முயற்சி எனலாம்.

   இதில் அம்மாவாக நடித்திருப்பவர் தோழி அனன்யா மகாதேவன். ப்ரின்சிபாலாக நடித்திருப்பவர் ரமேஷ்.  அவருக்குக் குரல் கொடுத்திருப்பவர் நம் நண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்.  மிக்க நன்றி எல்லோருக்கும்!

        காணொளியும் அதன் சுட்டியும்..


https://www.youtube.com/watch?v=1HgDhF0ci80

நன்றி!


27 கருத்துகள்:

  1. ஆனந்த் விஜயராகவனுக்கும் அனன்யாவுக்கும் வாழ்த்துகள்.

    ஒலி அமைப்பு முதலில் குறைவாய் இருப்பது போலப் பட்டது. இப்போது அது தேவலாம். அனன்யா அனாயாசமாக நடித்திருக்கிறார்.

    மொத்தத்தில் குறைகளை விட நிறைகள் அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம் தங்களின் கருத்திற்கும், வாழ்த்திற்கும். அதில் உள்ள குறைகள் நன்றாகவே தெரியும். அடுத்ததில் திருத்திக் கொள்ளலாம் என்று பேசியாகிவிட்டது....

      நீக்கு
  2. நண்பர் ஆவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    தம2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தையாரே! தங்களின் வாழ்த்திற்கு!

      நீக்கு
  3. குறும்படம் பார்த்து கருத்து சொல்லும் அளவுக்கு நானொன்றும்
    பெரும் அறிவு கொண்டவன் இல்லை. ஆதலால் வழக்கம் போல
    வாக்கு மட்டும் அளித்து விட்டு உடு ஜூட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சக்தி தங்களின் விடு ஜூட்டிற்கு! ஹஹஹஹ்

      நீக்கு
  4. ஆவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்


    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. மிக்க நன்றி ப்ரொஃபசர் தங்களின் வாழ்த்திற்கு!

      நீக்கு
  6. நல்ல ஒரு பொருண்மையினைத் தெரிவு செய்து பெருமுயற்சி எடுத்து சாதனை படைத்துள்ள ஆவிக்கும், குழுவினருக்கும், பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. நண்பர் ஸ்ரீராம் அவர்களின் பதிவில் போன மாதமே பார்த்து விட்டோம் விடயத்தை அருமையாக நகர்த்தி இருக்கின்றார் ஆவிக்கு எமது வாழ்த்துகள் பல தொடரட்டும் ஆக்கங்கள்...

    மேலே வச்ச மொய் யாருக்கு போகும் உங்களுக்கா ? ஆவிக்கா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னது போன மாதமேவா? கில்லர்ஜி? டீசர சொல்றீங்களா?!! நேத்துதானே படமே ரிலீஸ் ஆச்சு....

      மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் வாழ்த்திற்கு!

      நீக்கு
    2. மேலே வைச்ச மொய் அவருக்குப் பாதி எங்களுக்குப் பாதி..ஓகேயா...ஹ்ஹஹ

      நீக்கு
  8. ஸ்ரீராமின் படம் வலைகளில் பகிராததால் குரல் கொடுத்த அவரே நடித்திருக்கிறாரோ என்னும் சந்தேகம் இப்போது இல்லை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. அன்புள்ள அய்யா,

    தலைவாரிப் பூச்சூடி உன்னை - ஆவியின் குறும்படம் பார்க்கின்ற வாய்ப்பைக் கொடுத்ததற்கு நன்றி.
    ‘தலைவாரிப் பூச்சூடி உன்னை’ முதலில் தலைப்‘பூ’ அசத்தால்... பாரதிதாசனின் பாடலோடு தொடங்கும் படம்... இரண்டு பாத்திரங்களோடு இன்றையப் பெற்றோரின் மனநிலையைப் படம் பிடித்துக்காட்டும் ஒரு நல்ல படம். அவசியம் பெற்றோர்கள் பார்க்க வேண்டிய படம். 85 மதிப்பெண்ணுக்கு மேல் வாங்கும் புதல்வி மேலும் இவர்களின் மருத்துவராக்க வேண்டும் என்கிற கனவிற்கு இளம் தளிரை சருகாக்கும் அவலம்.

    இன்னும் ஒரு படிமேலே போய் கணக்கில் 99 எடுத்த மகளைப் பாராட்டாமல் எப்படி ஒரு மதிப்பெண்ணைக் கோட்டை விட்டாய் எனத் திட்டும் பொற்றோரை என்ன சொல்ல...?

    கவிஞர் முத்துநிலவன் அய்யாவின் ’முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே...!’ அந்த நூலின் நகலைத்தான் என் வீட்டில் மகளின் பார்வையில் படும்படி ஒட்டி வைத்துள்ளேன். அவளும் பத்தாம் வகுப்பு படிக்கின்றாள். படிப்பு... எதுவரை போகுமோ அதுவரை இயல்பாய் போகலாம்...!

    கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம், தயாரிப்பு என்று கோவை. ஆவி அனைத்தும் அவரே பொறுப்பு எடுத்து மிக நேர்த்தியாக... அழகாக கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரியது.

    அன்னையாக வருபவர் நன்றாகத் தன் பங்கையாற்றியிருக்கிறார். ’வாசிங் மெஷினை சாத்துகின்ற பொழுது அவரின் கோபத்திற்குத் தகுந்தாற்போல ’டோர்’ சாத்தப்படும் இசை. ஒலி & ஒளி நன்றாக இருக்கிறது.

    பிரின்சிபால் தன்பங்கை நிறைவு செய்திருக்கிறார். ஒரு இடத்தில் ‘நீங்க....பூர்ணிமா மதர்தானே...?’ என்கிற இடத்தில் ‘நீங்க’ அவரின் வாயசைவு இல்லாமல் இருப்பதை ஒரு குறையாகச் சொல்லமுடியாது.

    கோவை ஆவியின் தனிப்பட்ட கன்னி முயற்சி என்று சொல்ல முடியாத அளவிற்கு அருமையாக அழகாக சொல்ல வருவதை ‘நச்’ சென்று சொல்லிச் செல்கிறார். சபாஷ்...!
    கன்னி முயற்சி அல்ல... கண்ணியமான முயற்சி! பாராட்டுகளுடன் வாழ்த்துகள்!

    மலைவாழை அல்லவோ கல்வி? - நீ

    வாயார உண்ணுவாய் போ என் புதல்வி! ||

    (ஒரு கையால் தட்டச்சு செய்கிறேன்...பிழையிருந்தால் பொருத்தருள்க)

    -நன்றி.
    த.ம. 6.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே முதலில் உங்களுக்கு மிக்க மிக்க நன்றி! ஒரு கையால் தட்டச்சு செய்து பின்னூட்டம் அதுவும் இவ்வளவு விரிவாக ஒவ்வொன்றையும் விவரித்து சொல்லியமைக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

      ஆம் குறைகள் இருப்பது தெரியும். மேலும் பலரும் சொல்லும் கருத்துகளும் மனதில் கொள்ளப்பட்டு அடுத்த படம் மேம்படுத்தப்படும். னீங்கள் கல்வி பற்றிச் சொல்லி இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையே...மிக அழகாகச்க் சொல்லி இருக்கின்றீர்கள். தங்களின் ஆர்வம் தான் காரணம்! மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  10. பார்த்து விட்டேன்.சிலர் டெக்னிகலாகச் சில குறைகள் சொல்லியிருக்கிறார்கள்..அதெல்லாம் எனக்குத் தெரியாது.கான்செப்ட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா தங்கள் கருத்திற்கு! தங்களுக்கும் பிடித்திருந்ததை நினைத்து மகிழ்வு!

      நீக்கு
  11. நல்ல கதையம்சத்தோடு சிறு குறும்படம்...

    பார்த்துவிட்டு ஆவியின் தளத்திலும் என் விமர்சனத்தை பதிவு செய்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கும் விமர்சனத்தைப் பதிவு செய்தத்ற்கும் ...

      நீக்கு
  12. ஆவிக்கு வாழ்த்துக்கள் குறும்படம் வார இறுதியில் பார்க்கின்றேன்.வேலைத்தளத்தில் வாசிப்புக்குத்தடையில்லை))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தனிமரம் நேசன் !தங்கள் வாழ்த்துகளுக்கு!

      நீக்கு
  13. எல்லோருக்கும் என் நன்றிகள்

    பதிலளிநீக்கு
  14. படம் பார்த்தேன்..உடனே குறை நிறை சொல்லத் தெரியவில்லை..நன்றி!..

    பதிலளிநீக்கு