ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

பிரகாஷ்ராஜ் நடித்த விளம்பரம் தவறா?!...

படம் இணையம்.

பிரகாஷ் ராஜ், சமீபத்தில் நடித்த ஒரு நகைக்கடை விளம்பரத்தின் உபயத்தில் பரபரப்பாகி சர்ச்சைக்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகியிருந்ததை நாம் எல்லோரும் அறிவோம். பெண்களை இழிவுபடுத்துவதாகச் சொல்லப்பட்ட விமர்சனம். எதிர்ப்பு விளம்பரத்திற்கல்ல அதில் நடித்த பிரகாஷ்ராஜிற்கு என்பதை அறிந்த போது ஆச்சரியமாக இருந்தது.

அந்த விளம்பரத்தில் சொல்லப்படும் வசனம்/கருத்து பிரகாஷ்ராஜ் அவர்களின் தனிப்பட்டக் கருத்தாக இருந்திருந்தால் விமர்சிக்கலாம். ஆனால், அதுவும் கூட அவர் பொது இடத்தில் முன்வைத்தால். விளக்கம் கீழே. ஆனால், அவர் தனது வருமானத்திற்காக நடித்த ஒரு விளம்பரத்தில், அதன் இயக்குனர் அவரை இயக்கியதை அவர் செய்திருக்கின்றார். அவ்வளவே. இதனை இத்தனை உணர்வு பூர்வமாக அணுக வேண்டுமா? அணுகுவதில் அர்த்தம் உள்ளதா?  நடைமுறை அந்த விளம்பரத்தில் வருவது போலத்தானே உள்ளது.  

பிரகாஷ் ராஜ் அந்த வர்த்தக விளம்பரத்தில் நடித்திருக்கக் கூடாது என்றால் அதை ஒரு கோணத்தில் சரி என்றாலும், மற்றொரு கோணத்தில் பார்த்தால், வர்த்தகம்/வணிகம் என்று வந்து விட்டால், பெரும்பான்மையான வர்த்தகங்களில்/வணிகங்களில் நெறி முறைகள்(எதிக்ஸ்) புறம்தள்ளப்பட்டு லாபம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். அதுதான் வர்த்தக உலகம். பிசினஸ் இஸ் பிசினஸ்.  நோ செண்டிமென்ட்ஸ்.

திரைப்படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இல்லையா? வசனங்கள் உட்பட. நம் தமிழ் திரைப்படங்களில் பெண்கள் மிகவும் அநாகரீகமான உடைகள் அணிந்தும், சில விரும்பத் தகாத கதாபாத்திரங்களிலும் நடிப்பதில்லையா? கல்லூரிக்கு, நடைமுறையில் இல்லாத உடைகளை அணிந்து வருவது போல்,  காட்சிகள் திரைப்படத்தில் இல்லையா? ஒரு திரைப்படத்தில் கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியையே அப்படி உடை அணிந்து வருவது போலத்தானே காட்சிப்படுத்தப்பட்டது? .அப்போது அந்த நடிகைகளை, நடிகர்களை நோக்கி ஏன் கேள்விகள் எழுப்பப்படவில்லை? 

இந்தக் கோணத்தை எடுத்துக் கொண்டால், சரி, அந்தத் திரைப்படத்தில் இயக்குனரின் சீன் அது அதனால் அப்படிப்பட்ட உடை என்று நியாயப்படுத்தினாலும் அந்த நடிகைகள், பெண்களை இழிவுபடுத்தும், ஆசிரியர்களை இழிவுபடுத்தும் கதாபாத்திரம் என்று சொல்லி அது போன்ற காட்சிகளில் நடித்திருக்கக் கூடாதுதானே? நாம் ஏன் கேள்விகள் எழுப்பவில்லை? அவர்கள் அதை வெறும் நடிப்பு, வருமானம் என்ற கோணத்தில்தானே செய்தார்கள் என்றால் பிரகாஷ்ராஜும் அதைத்தான் செய்திருக்கின்றார்.

இங்குஎங்கள் ப்ளாகில்http://engalblog.blogspot.com/2015/08/blog-post_26.html  பல்சுவைக் கதம்பம் பகுதியில் வாலியைப் பற்றிப் பகிரப்பட்டதிலிருந்து…..

கவியரங்கம் முடிந்ததும் ஒரு முதுபெரும் தமிழ்ப்புலவர் வாலியிடம் "ஐயா.. இவ்வளவு அற்புதமாக் கவியரங்கத்துல பாடுற நீங்க, சினிமாலப் பாட்டுல மட்டும் வர்த்தக நோக்கோடு செயல்படற மாதிரித் தெரியுதே.."  என்றாராம்.


அதற்கு வாலி,
"இங்கே நான் 
வண்ணமொழிப் பிள்ளைக்குத் 
தாலாட்டும் தாய்;
அங்கே நான் விட்டெறியும் 
எலும்புக்கு வாலாட்டும் நாய்"


என்றாராம்.
(நன்றி ஸ்ரீராம்)

இது திரைப்பட நடிகர்களுக்கும், விளம்பரங்களில் வருபவர்களுக்கும் பொருந்தும்.  அதனால்தானே நாம் அவர்களை நடிகர்கள் என்கின்றோம்.

விளம்பரங்கள் நொடிக்கு ஒருதடவை வருவதால் அவை மக்களின் மனதில் பதியும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டால்.... விளம்பரங்கள் ஒரு சில மாதங்கள்தான்....ஆனால், தினமும், நாள் முழுவதும் வீட்டு வரவேற்பரையில் வந்து, பெரும்பான்மையான பெண்களை வசீகரித்துக் கட்டிப் போட்டிருக்கும், பெண்களை வில்லிகளாகச் சித்தரித்துக் கீழ்தரமான வசனங்கள் பேசப்படும் தொடர்களை எந்த வகையில் சேர்க்கலாம்? ஏன் எதிர்ப்புகள் இல்லை? அதிலும் வரதட்சணைக் கொடுமைகள் காட்சிப்படுத்தப்படுகின்றனதானே!

அது நடிப்பு என்றால் பிரகாஷ்ராஜ் பேசியதும் விளம்பரத்திற்கான நடிப்பே.
நிற்க. மற்றொரு பார்வை. இப்போது விளம்பரத்தின் கருத்தை ஒத்த சமூகப் பார்வை.  ஒரு வேளை, பரந்த எண்ணங்கள் உள்ள ஒரு சில பெற்றோர்களுக்கு இந்த விளம்பரம் “டென்ஷனை” ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், பொதுவாக, விளம்பரத்தில் சொல்லப்பட்டது போல், பெரும்பான்மையான பெற்றோர்கள், குறிப்பாக நடுத்தரவர்கத்தைச் சேர்ந்தவர்களும், அதற்குக் கீழே உள்ள கோட்டில் உள்ளவர்களும், பெண் குழந்தைகள் உள்ளவர்கள், வேலைக்குப் போகும் பெண் குழந்தைகள் உள்ளவர்களும் பேசுவதுதான். பெண் குழந்தைகள் உள்ள எனது உறவினர்கள் பலரும் அவ்வப்போது நகைகள் வாங்கிச் சேமிக்கும் போதும் நான் கேட்டதுண்டு.

“ஏன் இப்படி நகைகளை வாங்கிச் சேமிக்கின்றீர்கள்? அவர்களுக்கு நல்ல கல்வி கொடுத்து, நல்ல வேலைக்கு அனுப்பி, அந்தக் குழந்தையை தன் காலில் நிற்கச் செய்து, எந்தவிதச் சூழலிலும் வாழ்க்கையைத் தைரியமாக, தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வகையில் இந்தச் சமூகத்தில் வாழக் கற்றுக் கொடுக்கலாமே என்றால், அவர்களின் பதில் இதுதான்.

“ஆமாமா நீ சொல்லுவ...உனக்கு ஒரே குழந்தை அதுவும் ஆம்பளப் புள்ளை.  பொம்பளப் புள்ள உனக்கு இருந்திருந்தா, என்னதான் பெரிய படிப்பு படிச்சு, வேலைக்குப் போனாலும், அப்ப தெரிஞ்சுருக்கும் டென்ஷன்....நீ இப்படிச் சொல்லியிருக்கமாட்ட.”

எனது மகன் எனக்குப் பெண்ணாகப் பிறந்திருந்தால்.....மேலே சொன்னதுதான்.  அது எனது தனிப்பட்டக் கருத்து....அதை இங்குச் சொல்லிப் பயனில்லை. நடைமுறையில் சாத்தியமில்லாது போனதால், எனக்கு மகனாகிப் போனதால், நிரூபிக்க வழியில்லை. எனவே, நான் அவர்களின் வாதம் சரிதான் என்பேன்.

தரக் குடும்பமானாலும், திருமணம் என்பது சமூக அந்தஸ்து அடையாளமாக மாறியிருப்பது வேதனைக்குரியதே.  திருமணத்திற்கு ஆகும் செலவு 20 லட்சம். திருமணத்திற்கு மட்டுமல்ல, ஒரு சில சமூகங்களில் பெண் குழந்தைகள் வயதிற்கு வரும் போது கொண்டாடும் சடங்கு என்பதற்கும் செலவுகள் செய்யப்படுகின்றதுதான். இது மக்களே உருவாக்கிக் கொண்டதுதான்.

அடுத்து நல்ல கணவன், குடும்பம் அமைவது என்பன போன்ற பல கவலைகள், இருக்கத்தானே செய்கின்றது? என்னதான் சமுதாயம் முன்னேறி இருக்கின்றது என்றாலும், திருமணங்களில் நகைகள், பட்டுப் புடவைகள், வர்த்தகப் பரிமாற்றம் (சொத்து, பணம் முதலியவை), வரதட்சணை, அந்தஸ்து, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் என்பன இன்னும் மறைந்ததாகத் தெரியவில்லை. தங்க நகைகள் இல்லாமல் திருமணம் நடக்கின்றதா? இப்போது அது விற்கும் விலையில் எத்தனைக் குடும்பங்களால் ஒரு குந்துமணி அளவேனும் வாங்க முடிகின்றது?

ஆண் பிள்ளைகள் இருக்கும் குடும்பத்தினரோ, ஆண் பிள்ளைகளோ தனக்கு வரப் போகும் பெண் வீட்டிலிருந்து எந்த நகையும் வேண்டாம், பணமும் வேண்டாம், பெண்ணை அப்படியே ஏற்றுக் கொள்கின்றேன்.  திருமணமும் சிம்பிளாக இருக்கட்டும் என்று சொல்பவர்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள்? ஏன் செய்தித் தாள்களில் கூட இன்னும் வரதட்சணைக் கொடுமைகள், கொலைகள், தற்கொலைகள் என்று வரத்தானே செய்கின்றது!

(ஒரு சில விதிவிலக்குகள் இருக்கின்றார்கள் நிச்சயமாக. அதே போன்று பெண்கள் வீட்டார், கணவனின் வீட்டிலிருந்து பணம் பிடுங்கும் கூட்டமும் இருக்கத்தான் செய்கின்றன. அதையும் நான் அறிவேன். இங்கு நான் சொல்லி இருப்பது பெரும்பான்மை சமூகத்தையே)

திருமண வயதில் பெண் இருந்து திருமணம் தாமதித்தாலோ, நிகழவில்லை என்றாலோ பெற்றோர்கள் பெரும் கவலைக்கு உள்ளாவதை நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன் எனது குடும்பத்திலும், நட்பு வட்டத்திலும்.

திருமணக் கவலை ஒரு புறம் இருக்க, பெண் குழந்தைகள் வெளியில் தனியாகச் செல்ல முடிகின்றதா? பெண் குழந்தைகள் வீடு திரும்பும் வரை கலவரப்படாமல் நீங்கள் இருக்கின்றீர்களா? தாமதமானால் நிம்மதியாக இருக்க முடிகின்றதா உங்களால்? இப்போது நிகழும் நிகழ்வுகள் உங்கள் மனதில் நிழலாடத்தானே செய்கின்றது? ஒரு சில பெற்றோர் வேண்டுமானால் தைரியமாக, நிம்மதியாக இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையான பெற்றோர் நிம்மதியாக இருக்க முடிவதில்லைதானே? அதையும் நாம் டென்ஷன் என்று எடுத்துக் கொள்ளலாம் தானே? நண்பர் விசுAwesome அவர்கள் இதை அழகாகச் சொல்லி இருந்தார். http://vishcornelius.blogspot.com/2015/08/blog-post_22.html. ஆம்! அவருக்கும் இரு பெண்-ராசாத்திகள் – முதல் டென்ஷன், இரண்டாம் டென்ஷன் என்று!

எனவே, நம் சமுதாயம் இப்படி இருக்கும் வரை, மாறாத வரையில், பெண்கள், திருமணம் போன்றவற்றின் மீதான சமுதாயப் பார்வை மாறாத வரையில், நமது பார்வையும், எண்ணங்களும் மாறாத வரையில் டென்ஷன் என்ற வார்த்தை நிலவத்தான் செய்யும். விளம்பர வசனம் தவறே இல்லை! உண்மையைத்தான் சொல்லி இருக்கின்றது!

----கீதா

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வலைப்பதிவர்கள் சந்திப்பு மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது என்பதும் அதற்கான ஏற்பாடுகள் நம் புதுகை அன்பர்களால் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது என்றும் அவ்வப்போது புதுகையிலிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. சந்திப்போம! இதைப்பற்றிய பதிவு, விரிவாக அடுத்து வருகின்றது... 

 , 

63 கருத்துகள்:

  1. அன்புள்ள சகோதரி,

    தாங்கள் கூறுவதை எதுவும் மறுப்பதற்கில்லை.... உண்மைதான்.

    நன்றி.
    த.ம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மணவை ஜேம்ஸ் நண்பரே! தங்களின் கருத்திற்கு!

      நீக்கு
  2. இங்கே தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் தான் பெண்ணின் திருமணத்திற்கு அதிகமான வரதக்ஷிணை, நகைகள் என்று. வடக்கே மஹாராஷ்டிராவில் எளிமையான திருமணம். எண்ணினாற்போன்ற குறிப்பிட்ட நபர்களைத் தான் அழைப்பார்கள். பிள்ளை வீட்டில் 50 எனில் பெண் வீட்டில் 50. அதற்கு மேல் எனில் அவரவர் பொறுப்பு. திருமணச் செலவைப் பகிர்ந்து கொள்வார்கள். குஜராத்திலும் அப்படியே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! சகோதரி கீதா சாம்பசிவம்.. சமீபத்தில் கூட தோழியின் பெண் கல்யாணத்திற்குச் சென்றிருந்தேன். அவள் விரும்பிய பையனின் அப்பா மஹாரஷ்டிரா, அம்மா ஆந்திராவைச் சேர்ந்தவர். மஹாராஷ்டிரா முறையும் , தென்னிந்திய தமிழ்நாட்டு முறையும் கலந்து கல்யாணம். அதற்கு முன்னரே பூனேவில் அந்தூர் மக்கள் கல்யாணம் கலந்து கொண்டிருக்கிறேன். நல்ல முறைதான் இல்லையா....மிக்க நன்றி சகோதரி....நல்ல தகவலுடன் கூடிய பின்னூட்டத்திற்கு...

      நீக்கு
  3. விடுங்கள் சகோ...

    விளம்பரதாரர்களுக்கு அது பிழைப்பு. விமர்சிப்பவர்களுக்குப் பொழுது போகணும்.

    எங்கள் ப்ளாக்கிலிருந்து எடுத்துப் போட்டதற்கு நன்றி. அதிலிருந்த எழுத்துப் பிழைகளை அங்கு உடனே திருத்தியிருந்தேன். நீங்கள் அதற்கும் முன்னரே எடுத்திருக்கிறீர்கள் போல!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ ஸ்ரீராம் நன்றி ...விட்டாச்சு!!!

      ஆம் வாசித்த உடனே நான் பதிவு ஏற்கனவே எழுதி வைத்திருந்ததால் எடுத்துக் கொண்டேன். இப்போது உங்கள் பின்னூட்டம் பார்த்து மாற்றிவிட்டேனே!!!..

      மிக்க நன்றி..

      நீக்கு
  4. ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆடம்பரத் திருமணம். என்றாலும் கல்யாணப் பெண்ணுக்குப் புகுந்த வீட்டினர் தான் நகை, புடைவைகள் என வாங்கிக் கொடுக்க வேண்டும். நம் காரைக்குடிப் பக்கம் செட்டிநாட்டில் பெண்ணின் திருமணம் சமயம் சீர் வரிசைகளை அலங்கரித்து வைத்திருப்பதைப் போல் அவர்களும் அலங்கரித்து வைப்பார்கள். மருமகள் புகுந்த வீட்டிற்கு வரும் முன்னரே அவளுக்குத் தேவையான அனைத்தும் இங்கே மாமியார் வீட்டில் சேகரிக்க வேண்டும். திருமணச் செலவும், பராத் எனப்படும் மாப்பிள்ளை ஊர்வலச் செலவும், அதில் வருவோர்க்குக் கொடுக்கும் பரிசுகளும் பெண் வீட்டைச் சேர்ந்தது. அவங்களும் அதில் அதிகம் செலவழிப்பார்கள். ராஜஸ்தானில் ஒரு திருமணத்தில் போடப்படும் இனிப்பு வகைகளை வைத்தே அவர்கள் எவ்வளவு வசதி படைத்தவர்கள் என்று சொல்லி விடலாம். :) ஆக நம் நாட்டில் திருமணச் செலவுகள் என்னமோ குறையப் போவதில்லை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோதரி! கீதா சாம்பசிவம், வட ந்தியத் திருமணங்கள் குறித்து அறிந்ததுண்டு...உறவினர்கள் இருப்பதாலும், நான் ஒரு சில திருமணங்கள் சென்றிருப்பதாலும்...ஆம் குறையப்போவதில்லை செலவுகள். வெங்கட்ஜி கூட சொன்னார் ...மாப்பிள்ளைப் பையன் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதும் நடக்கும் என்றும்....

      நீக்கு
  5. சொல்ல வருவது எங்கே புரிந்து கொள்ள முடியாமல் போய் விடுமோ என்னும் அச்சத்தில்(?) மிகவும் நீளமாகவே எழுதுகிறீர்கள். பிரகாஷ் ராஜின் விளம்பரம் இன்னும் என் கண்ணில் படவில்லையே. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஜிஎம்பி சார்! இருக்கலாம். சின்னதாக எழுதமுயற்சிக்கின்றேன்...பலசமயங்களில் முடியாமல் போகின்றது. .நிச்சயமாக....அடுத்த பதிவிலிருந்து..செய்கின்றேன்..மிக்க நன்றி சார்...

      நீக்கு
  6. பதில்கள்
    1. ஹாஹ்ஹ டிடி அதாங்க எனக்கும் கடைசில தோணிச்சு...மிக்க நன்றி டிடி...

      நீக்கு
  7. சரியாக சொல்லியிருக்கின்றீர்கள்..

    சமுதாய பிரச்னைகளை முன்னெடுத்துச் செல்லும் அன்பிற்குரிய தளத்தில் கூட - பிரகாஷ் ராஜ் இப்படிச் சொல்லலாமா?.. என்று கேட்கப்பட்டிருந்தது..

    இதுவரைக்கும் - ஏதோ ஊருக்கு உழைத்து - உருகியதைப் போல!..

    அது ஒரு விளம்பரம்.. அவ்வளவு தான்!..

    எதை எதையோ கடந்து செல்வது போல - இதையும் கடந்து சென்று விடலாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! தங்களின் கருத்திற்கு! ஆம் இதையும் கடந்து சென்றுவிடலாம் இது ஒரு விளம்பரமே..

      நீக்கு
  8. நம் சமூக அமைப்பால் , வகுத்து வைத்திருக்கும் பலவற்றினால் டென்சன் தான் கீதா.. இதைத் தான் விசு அவர்களின் பதிவிலும் பின்னூட்டமிட்டேன். பெண் பிள்ளைகளைக் படிக்க வைத்தாலும் வைக்காவிட்டாலும் திருமணம் செய்து போகும் குடும்பத்தின் மன விசாலத்தைப் பொறுத்தே எல்லாம். திருமணத்தோடு 'டென்சன்' முடிவதில்லை, அதற்குப் பின்னும் பல விசயங்களில் தொடரும்..விசாலமாகவும் புரட்சிகரமாகவும் சிலர் சிந்தித்தாலும் செயல்படுத்தும் பொழுது டென்சன் தானே.. நிறையச் சொல்லலாம்....
    சமூகம் தன் பார்வையை தன் எண்ணத்தை சீர்படுத்தாமல் இப்படி ஏதாவது செய்து கொண்டிருக்கும்..

    சகோதரி, உங்களுக்கு ஒரு தகவல்..நாங்கள் உடன்பிறந்தோர் நான்கு பெண்கள் :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி க்ரேஸ்! தங்களின் அழகான கருத்துள்ள பின்னூட்டத்திற்கு! ஆம் நிறையச் சொல்லலாம். ஆஹா தாங்கள் நால்வரா?!!!! பாராட்டுகள் தங்கள் பெற்றோருக்கு!

      நீக்கு
  9. பெண்பிள்ளைகள் வேண்டுமானால் நாங்க என்ன டென்ஷனா என குதிக்கலாம். ஆனா பெண் பெற்றுவைத்திருக்கும் என் போல, விசு அண்ணா போல பலருக்கும் பல டென்ஷன். அதை பிரகாஷ் கொஞ்சம் சத்தமா சொல்லிட்டார். அப்படி பிரகாஷ்ராஜ் மேல் கோபப்படுவோர் என் வாழ்வில் நான் வரதட்சணை வாங்கவும் இல்லை கொடுக்கவும் இல்லை என்ற STATEMENTஉம் கொடுத்துவிட்டால், அது உண்மையாகும் இருந்துவிட்டால் ஐயா புன்னியவனே உங்களால் தான் இன்னும் உலகத்தில் மழை பெய்கிறது என நான் அகமகிழ்ந்து போவேன். உங்கள் கண்ணோட்டம் தான் எனது கண்ணோட்டமும்,,, மிகுந்த மகிழ்ச்சி கீத்து டியர் and துளசி அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் மைத்து...எங்கள் குடும்பங்களிலும் பலரும் வெளியில் சொல்லா விட்டாலும், மனம் தவிப்பதையும், கவலைப்படுவதையும் பார்த்திருக்கின்றேன். ஏன் என் பெற்றோர் கவலைப்பட்டார்கள் அந்தக் காலத்தில் என்றால் இப்போதும் நம் தலைமுறையும் கவலைப்படத்தான் செய்கின்றார்கள். ப்ரகாஷ் ராஜ் எங்க சொன்னாரு அவரு அவருக்கு எழுதிக் கொடுக்கப்பட்டதைச் சொல்லி நடித்தாரு. அவ்வளவுதானெ...மிக்க நன்றி மைத்து/சகோதரி தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
    2. உண்மைதான் மைத்து...எங்கள் குடும்பங்களிலும் பலரும் வெளியில் சொல்லா விட்டாலும், மனம் தவிப்பதையும், கவலைப்படுவதையும் பார்த்திருக்கின்றேன். ஏன் என் பெற்றோர் கவலைப்பட்டார்கள் அந்தக் காலத்தில் என்றால் இப்போதும் நம் தலைமுறையும் கவலைப்படத்தான் செய்கின்றார்கள். ப்ரகாஷ் ராஜ் எங்க சொன்னாரு அவரு அவருக்கு எழுதிக் கொடுக்கப்பட்டதைச் சொல்லி நடித்தாரு. அவ்வளவுதானெ...மிக்க நன்றி மைத்து/சகோதரி தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
  10. //Chandrasekaran Narayanaswami
    August 16 at 11:11am ·

    ”இது என் மூத்த டென்சன்”
    “இது என் இரண்டாவது டென்சன்”
    நல்லாப்படித்து ரேங்க் வாங்கினாலும் டென்சனாம்.இது என்று குறிப்பிடப்படுவது,அவர்களின் பெண்.
    பையனால் டென்சனே இல்லையா?
    பெண் என்றாலே டென்சனா?
    “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”’’//
    இது என் முகநூல் பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னைப்பித்தன் சார் இது ஒரு பக்கம். நீங்கள் சொல்லுவதை தவறுஎன்று சொல்லவில்லை. ஆண் குழந்தைகள் என்றாலும் டென்ஷன் இருக்குதான் ஆனால் அது வேறு விதம். ஆனால் பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர் நடுத்தரவர்கத்துப் பெற்றோர் வெளியில் சொல்லவில்லை என்றாலும் கவலைப்படத்தான் செய்கின்றார்கள். இல்லை என்று சொல்லுவதற்கில்லை. எனது தனிப்பட்டக் கருத்து வேறு ஆண் குழந்தை என்றாலும், பெண் குழந்தை என்றாலும் வளர்ப்பு என்று....நான் இங்கு சொல்லியது பொதுவான பெரும்பான்மையான பெற்றோர் மனனிலை. அவர்கள் தங்கள் பெண் குழந்தைகளை அன்பு செய்யவில்லை என்ற அர்த்தம் இல்லை. ஆனால் டென்ஷன் இருக்கத்தான் செய்கின்றது...இல்லை என்பதற்கில்லை. எனக்கு அனுபவம் இல்லை என்றாலும், எனது கருத்து பார்வை வேறு. பிறரது கோணங்களில் புரிந்து கொள்ள முடிகின்றது. அதைத்தான் இங்கு சொல்லியிருக்கின்றோம் சார்...

      மாதர்தம்மை இழிவு படுத்தும் மடமை என்றால் பலவற்றைக் கொளுத்த வேண்டும் செய்வார்களா?

      நீக்கு
    2. மிக்க நன்றி சென்னைப்பித்தன் சார்...

      நீக்கு
  11. தாங்கள் கூறுவது உண்மைதான். இருந்தாலும் விளம்பரம் என்ற நிலையில் அவர் இவ்வாறான சொல் பயன்பாட்டைத் தவிர்த்திருக்கலாம். சம்பந்தப்பட்ட சொல்மீதான விவாதம் என்பதைவிட பிரகாஷ்ராஜ் இவ்வாறு கூறியுள்ளாரே என்றுதான் விவாதிக்கிறோம். அந்த அளவு அவர் மீது நாம் தனியாக ஒரு மரியாதை வைத்துள்ளோம். நம்மவர் மனதில் விழும் சில தாக்கங்கள் இவ்வாறான விளைவுகளை ஏற்படுத்துவது இயற்கையே. நாளிதழில் பழைய ஒரு நிகழ்வு ஒன்றைப் படித்தது நினைவிற்கு வருகிறது. பாசமலர் திரைப்படம் (சிவாஜிகணேசன் அண்ணனாக, சாவித்திரி தங்கையாக) மிக வெற்றிகரமாக ஓடிப் பெயர் பெற்ற அடுத்த ஆண்டு இருவரும் கணவன் மனைவியாக நடித்த ஒரு படம் வெளிவந்து தோற்றுப்போனதாம். அந்த அளவு ரசிகர்கள் மனதில் இரு நடிகர்களும் ஒரு நல்லெண்ணத்தையும் அன்னியோன்னியத்தையும் வைத்திருந்ததை அந்நிகழ்வு நினைவுபடுத்தியது. அதுபோலத்தான் இதுவும் எனக் கொள்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஐயா! தங்கள் கருத்தையும் ஏற்றுக் கொள்கின்றேன். பிரகாஷ் ராஜ் இவ்வாறு என்பதெல்லாம்...ஐயா அவரும் ஒரு நடிகர் என்பதே. அவ்வளவே. நம்மவர் மனதில் விழும் சில தாக்கங்கள் என்பது சரிதான் அப்படிப்பார்த்தால் இன்னும் பல விளம்பரங்களும், படனளும் பெண்களைக் கேவலப்படுத்தவில்லையா...

      நீங்கள் சொல்லி இருக்கும் உதாரணம் ச்ரிதான்....இன்று வீட்டில் வரும் பல தொடர்கள்?

      மிக்க நன்றி ஐயா...

      நீக்கு
  12. நாத்த மருந்து அடிச்சிக்கிட்டா பிகினி போட்ட பொண்ணுங்க பின்னாடியே ஓடி வர்றதையும், களிம்ப மூஞ்சில பூசுன உடனே செவப்பாகி வாழ்க்கையில வெற்றியடையிற மாதிரி வர்ற விளம்பரங்களை எதிர்த்து ஒரு புரட்சிப் போராட்டம் பண்ணினா என்ன?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹ்ஹஹஹஹ...சூப்பார் கேள்வி! மலர்வண்ணன்! நிறையவே சொல்லலாம்...

      மிக்க நன்றிப்பா....

      நீக்கு
  13. விளம்பரங்கள்
    அதில் நடிப்பவர்களால்
    மக்கள் மனதில் விதையாக விதைக்கப்படுகின்றது
    இதனால்தானே, மாகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்தமைக்காக
    அமிதாப் சிக்கலில் மாட்டினார்
    விளம்பரங்களை நம்பி மக்கள் , அப்பொருள்களை வாங்குவதால்தான்
    விளம்பரங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன

    பதிலளிநீக்கு
  14. பதில்கள்
    1. மிக்க நன்றி பனித்துளி சங்கர் தங்களின் முதல் வருகைக்கும், கருத்திற்கும்.

      நீக்கு
  15. உங்க தளத்துக்கு வந்து ரொம்ப நாளாச்சுங்க!


    ***திரைப்படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இல்லையா? வசனங்கள் உட்பட. நம் தமிழ் திரைப்படங்களில் பெண்கள் மிகவும் அநாகரீகமான உடைகள் அணிந்தும், சில விரும்பத் தகாத கதாபாத்திரங்களிலும் நடிப்பதில்லையா?***

    திரைப்படங்கள் ஃபிக்‌ஷன் ? விளம்பரங்கள்ஃபிக்‌ஷனா?? இல்லைனு நினைக்கிறேன்.

    அதனால் நீங்க திரைப்படங்களையும் இதுபோல் கமர்ஷிலையும் மிக்ஸ்ப் பண்ணக் கூடாதுனு நினைக்கிறேன்.

    பிரகாஷ்ராஜ், சத்தியராஜ் (இன்னும் பல பிரபலரை இதில் சேர்த்துக்கலாம்) எல்லாம் சாதாரண மனிதர்கள்தாம். பணத்துக்காக நடிப்புத் தொழில்ல நுழைந்தவர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் தாழ்ந்த சிந்தனைகள் உள்ள அசிங்கமான மனிதர்கள்தாம். இவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்தவர்கள், இவர்கள் மனசாட்சி எல்லாம் அப்படித்தான் சொல்லும். ஆனால் மீடியாவில் வரும்போது தன் அந்தஸ்தை காப்பாத்த மிகவும் நாகரீகமாக நடந்து கொள்வார்கள். "நான் உண்மையிலேயே மட்டமான ஆளுங்க, சும்மா மீடியாவில் நடிக்கிறேன்" னு உண்மையை எல்லாம் சொல்ல மாட்டாங்க. தன் அந்தஸ்தை மெய்ண்டைன் செய்ய பணத்துக்காக இதுபோல் விளம்பரங்களில் வர்ராங்க. இதை ஒரு சிலர் கவனமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

    எனக்கு என்ன புரியலைனா..பிரகாஷ்ராஜ் ஏன் உங்களை என்னைவிட உயர்ந்தவர் என்று மக்கள் நம்பினார்கள்??? னு எனக்குப் புரியவில்லை. ஒரு சிலர் இவருக்காக வரிந்துகட்டிக் கொண்டு வர்ராங்க! இவர்மேல் உள்ள நல்ல அபிமானத்தால். இவர் மீடியாவில் க்ரியேட் செய்த இமேஜை வைத்து இவர்கள் நிறுத்த நிறுவை இது.

    சாதாரண பணப்பேய் பிடித்த ஒரு மனிதன்னு தான் பிரகாஷ்ராஜ்னு நான் அவரை எப்போதும் பார்ப்பதுண்டு. கவனம்!!! என் பார்வை சரியானதுனு நான் ஒரு போதும் சொல்லவில்லை!!!! இதில் அதிர்ச்சி அடைய எதுவும் இல்லை- என்னைப் பொருத்த வரையில்.

    நமக்கு அபிமானமானவர்னா.. சினிமாவை சினிமாவாப் பாருங்க.. எதுக்கு அவர் பெட்ரூம் வாழக்கை பத்தி நமக்கு? விளம்பரத்தில் அவர் ஒரு நடிகர்தான்.. ஆமா, நம்ம எல்லாம் யோக்கியமா?னு நம்மையே இப்படி மட்டம்தட்டிச் சொல்லி சப்பைக் கட்டலாம்.

    நமக்கு பிடிக்காத நடிகர்னா.. இதை வச்சே அந்த நடிகரைக் கவுத்தலாம். இது நியாயமா? இது அடுக்குமா? னு பெண்ணியம் பேசலாம்.

    வேடிக்கையான உலகம் இது. இதில் நானும் ஒரு அங்கத்தினர்தான். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வருண்! ரொம்ப நாளாச்சுதான்...

      வருண் நாங்களும் எந்த நடிகருக்கும்...ப்ரகாஷ் ராஜ் உட்பட ரசிகர்கள் என்று கிடையாது. நன்றாக அவர்களது தொழிலான நடிப்பைச் செய்திருந்தால் ஐ மீன் சினிமாவில்....அதைப் பாராட்டுவோம். அவ்வளவே. கமர்ஷியலும் திரைப்படங்கள், அதை விட தொடர்கள் என்பன தினமும் வீட்டில் வந்து பயமுறுத்துகின்றனவே....

      பிரகாஷ்ராஜும் ஆஃப்டர் ஆல் நடிகரே....அதைத்தான் சொல்லிருக்கு ...எல்லாமே கமர்ஷியல்தான் ..வருண்...

      நீங்க சொல்லிருக்கறத ஒத்துக்கறேன் சில கருத்துகள்....வேடிக்கையான உலகம் தான்...எதற்கு குரல் கொடுக்கணுமோ அதுக்கு கொடுக்காது இந்த உலகம், சமூகம்...

      மிக்க நன்றி வருண்....

      நீக்கு
    2. நாங்கள் இந்த விளம்பரத்தின் வசனங்களை மட்டுமே சமூக ரீதியில் பார்த்தோம். முதலில் சொல்லப்பட்டது அவருக்கு சப்போர்ட் என்ற கோணத்தில் அல்ல...அது விளம்பரமே. அப்படிப்பார்த்தால் எத்தனையோ மட்டமான விளம்பரங்கள் இருக்கின்றனவே...அதெல்லாம் யார் கண்ணிலும் படாது...

      நீக்கு
  16. சில நடிகர்கள் மீது மக்களுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. அதிலும் ஆனந்த விகடனில் பிரகாஷ் ராஜின் தொடரைப் படித்தவர்கள் இன்னும் சற்று கூடுதலான மதிப்பை அவர் மீது வைத்திருப்பார்கள். அதனால் இந்த விவாதமெல்லாம். அவரை வெறும் நடிகராக பார்த்தால் எந்த சிக்கலும் இல்லை.
    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே! மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு..

      நீக்கு
  17. வணக்கம்
    திரைப்படங்களில் எல்லாத் துறையினரையும் கேலவப்படுத்தி விட்டார்கள், கேவலப்படுத்திக்கொண்டும் இருக்கின்ரார்கள் அவர்கள் கேவலப்படுத்தாத துறை ஒன்றே ஒன்றுதான் அது சென்ஸார் போர்டு அவர்களைக் கேவலப்படுத்தினால் என்னாகும் 80 தெரிந்த சூத்திரதாரர்கள் நம் திரைப்படத்துறையினர்
    நடிகன் பணத்துக்காக அப்படியும் நடிப்பான் இப்படியும் நடிப்பான் ஏன் எப்படியும் நடிப்பான் இந்த இடத்தில் வாலியின் கவிதை பொருந்துகிறது

    இதை வேறொரு கோணத்தில் பார்க்கிறேன்
    சமீப காலமாக வலையுலகில் பேசப்படும் இந்த நகைக்கடைக்காரர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வலையுலகில் முண்ணனி பதிவவர்களாகிய வில்லங்கத்தைரை வைத்து மேலும் விளம்பரப்படுத்த தங்களிடம் எத்தனை பெட்டி கொடுத்தார்களோ.... என்று.... நான்....

    என்னமோ... போங்க...

    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹஹஹ் கில்லர்ஜி! நீங்க ரொம்ப கற்பனைல ஹஹ..எங்களைப் போய் முன்னணிப்பதிவர்னு ..ஹஹஹ ஒரே சிரிப்பு சிரிப்பா வருதுங்க....

      பெட்டியா ...அடப்பாவி...ஹஹ்ஹ

      மிக்க நன்றி கில்லர் உங்கள் கருத்திற்கு....

      நீக்கு
  18. பிரகாஷ்ராஜ் ஒரு நடிகர் அவர் விளம்பரபடத்தில் நடித்திருக்கிறார் அவ்வளவுதான் காரணம் அதுதான் அவர் தொழில்... அதில் தப்புஇல்லை. அவர் அப்படி நடித்து சம்பாதிக்கவில்லை என்றால் அவரை விமர்சிப்பவ்ர்களா அவருக்கு பணத்தை அள்ளி தரப் போகிறார்கள் குறை சொல்ல வேண்டுமானல் அந்த விளம்பரத்திற்கு ஸ்க்ரிப்ட் எழுதியவரைதான் குறை சொல்ல வேண்டும் அந்த காலத்தில் திரைப்படங்களில் வில்லனாக நடித்த நம்பியார் மிக நல்லவர்தான் அதற்காக அவர் நல்லவர் என்பதால் வில்லனாக நடிக்க கூடாது என்றா நாம் சொல்லிக் கொண்டிருந்தோம். தவறு நடிகர்களிடம் இல்லை நடிகன் சொல்வதை எல்லாம் வேதவாக்காக நம்புமும் கூமுட்டை மக்களிடம்தான் இருக்கிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் த்மிழா அந்த விளம்பரம் பண்ணியவர்களைத்தான் கேட்டிருக்க வேண்டும். இவர் ஆஃப்டர் ஆல் நடிகர் அவ்வளவே. மிக மிகச் சரி..நடிகர்கள் சொல்வதை எல்லாம் மக்கள் எடுத்துக் கொள்வது முட்டாள்தனம்தான்...

      இங்கு அந்த வசனம் சமூகத்தின் பார்வையில் சொல்லப்பட்டதே.
      மிக்க நன்றி தமிழா தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
  19. இந்த விளம்பரம் வரதட்சனையை ஊக்கப்படுத்துவதாகவே எனக்குதெரிகிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் கருத்திற்கு...இப்படியும் எடுத்துக் கொள்ளலாமோ...ம்ம்

      நீக்கு
  20. ஏமாற்றுகிற அரசியல்வாதியை நம்பி வோட்டு போடுவோம் ,நடிகர் மட்டும் நாணயமா இருக்கணும்னு நினைப்பது நியாயமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ்ஹ் அவரும் சம்பாதிப்பது இப்படித்தானே ஜி....இதுவும் நல்ல கேள்வியே...மிக்க நன்றி பகவான் ஜி தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  21. வணக்கம்,
    பொதுவாழ்க்கைக்கென்று வருபவர்கள் கவனமாகத் தான் இருக்கனும்.
    தங்கள் பகிர்வு தெளிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி மகேஸ்வரி தங்களின் கருத்திற்கு!

      நீக்கு
  22. நான் ஏற்கனவே போட்ட தமிழ் மண வாக்கு எவிடே ? தம்ஸ் அப்பில் காணோம் எடுத்து விட்டீர்களோ... நாங்களெல்லாம் சொன்னா சொன்ன (தமிழ்) வாக்கு தவற மாட்டோம்
    ஆகவே மீண்டும் 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட கில்லர்ஜி தமிழ்மண வாக்கை எப்படி எடுக்க முடியும் ஜி?!!! புரியலையே! முதல்ல அதப் பார்க்கற வழக்கமே இல்லையே ஜி! கருத்து மட்டும்தான் பாக்கற வழக்கம்....நீங்க வாக்கு தவற மாட்டீங்கனு தெரியும்...ஹஹஹ் நாங்க வாக்கு தவறுகின்றோம்னு சொல்லுறீங்களா அஹ்ஹ அதான் இப்பல்லாம் வாக்கு போடறோமே.....ஜி...இல்லைனா சொல்லிடுங்க ஜி...போட்டுடறோம்...

      நீக்கு
  23. இந்த விளம்பர எதிர்ப்பே ஓர் விளம்பரம் என்று தோன்றுகிறது! இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இன்னும் மோசமான ஆக்ஸ்( axe) செண்ட் விளம்பரத்துக்கெல்லாம் கொடி பிடிக்கவில்லையே! நல்லதொரு அலசல் பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுரேஷ்! தங்களின் கருத்திற்கு! உங்கள் கேள்வியும் மிக மிக நியாயமானதே....

      நீக்கு
  24. விளம்பரத்துக்கே விளம்பரம் தேடும் கூட்டங்கள் சிலரின் தொல்லைகளே இப்ப டென்ஷந்தான் .டிடி சொன்னது போலத்தான் அட போங்க )))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தனிமரம் தங்களின் கருத்திற்கு! அதேதான் நண்பரே!

      நீக்கு
  25. வாலி அவர்களின் பதிலை எடுத்துக்காட்டியுள்ள விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  26. அன்றே பதிவை வாசித்தேன் .வீட்டில்தமிழ் தொல்லைக்காட்சி கனெக்சன் இல்லை .பிறகு யூ டியூபில் தேடி விளம்பரத்தையும் பிறகு எதிர்ப்பு என்ற பெயரில் நடத்தப்பட்ட நாடகங்களையும் பார்த்தேன் . .எதற்கு போராடணும்னு கூட common சென்ஸ் இல்லை .
    5 வயசு குழந்த சின்ன வீடா வரட்டுமா போன்ற பாடலுக்கு போட்டியில் ஹிப்ஸ் ஆட்டி டான்ஸ் ஆடறப்போ வராத அறச்சீற்றம் .? நகை விளம்பரத்துக்கு வருதே ? :)
    ஒரு டெலி சீரியல் fb பக்க கமெண்ட்சில் அதில் நடிக்கும் பெண்ணை மாற்ற சொல்லி பின்னூட்டம் பார்த்தேன் .கமெண்ட்ஸ் போட்டோர் எல்லாம் இந்த பெண்கள் தான் .ஒருவர் உருவத்தை குறை சொல்வது எதில் செர்த்தியாம் ?.


    விரைவில் /dowry /பற்றி எனக்கும் மகளுக்கும் இடையில் நடந்த சமீபத்து உரையாடல் ஒன்றை பதிவிடுகிறேன் .ஒன்று மட்டும் கூறுகிறேன் டௌரி கொடுக்க வாங்கமாட்டோம்னு பெண்கள் மட்டும் உறுதியா இருந்தா வரதட்சிணை டென்ஷன் ஒழியும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள் ஏஞ்சலின்! பல விஷயங்கள் மிக மிக மோசமாகப் போய்க்கொண்டிருக்கின்றன ஆனால் அதற்கெல்லாம் அறச்சீற்றம் இல்லை...இது மட்டும்தான் ஏதோ பெண்களை இழிவு படுத்தியது போல.....

      அந்த விளம்பரம் என்னைப் பொருத்தவரை ஜஸ்ட் லைக் தட்....பெண்கள் கல்யாணம் என்பதைப் பற்றிய எனது தனிப்பட்ட கருத்தும் வேறு.
      அந்த வார்த்தைகளை மட்டுமே எடுத்துக் கொண்டோம்...அவை இப்போது பெரும்பான்மையான பெற்றோர்கள் எவ்வளவு கவலைப்படுகின்றார்கள் என்ற பார்வையில் எழுதப்பட்டது...
      உங்கள் டவுரி பற்றிய கருத்தே எனதும். பதிவிடுங்கள்...ஆர்வம் மேலிடுகின்றது...வாசிக்க...

      மிக்க நன்றி ஏஞ்சலின்...

      நீக்கு
  27. கீதா அவர்களே! உங்கள் கருத்துக்களை வரிக்கு வரி நான் அப்படியே ஒப்புக் கொள்கிறேன். ஆம்! வரதட்சிணை, ஆடம்பரத் திருமணம் போன்றவை ஒழியாத வரை பெண் குழந்தைகள் பற்றிய மதிப்பீடும் மாறாதுதான். சொல்லப் போனால், தருமபுரி போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் இன்றும் குழந்தைத் திருமணங்களும், பெண் குழந்தைகளைக் கள்ளிப்பால் கொடுத்துக் கொல்லும் கொடுமையும் தொடரக் காரணமே பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கு ஆகும் கூடுதல் செலவுதானே? அப்படிப்பட்ட ஒரு மாநிலத்தில் இருந்து கொண்டு உங்களுடைய இத்தகைய கருத்துக்களை மறுக்க முடியாதுதான்.

    ஆனால் அதற்காக, "கல்யாண வயசுல வீட்டுல ஒரு பொண்ணு இருந்தாலே டென்சன்தான்" எனக் கூறுவதை ரசிக்கச் சொல்கிறீர்களா? இதன் பொருள் என்ன? 'பெண் குழந்தை என்பதே பாரம்தான்' என்பதுதானே? பெண்ணாக இருந்து கொண்டு இப்படி இழிவான பொருளைத் தரும் ஒரு விளம்பரத்தை நீங்கள் எப்படி ஆதரிக்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை.

    திரைப்படங்களில் இப்படி வரவில்லையா, தொலைக்காட்சித் தொடர்களில் இப்படிப்பட்ட காட்சிகள் இடம்பெறவில்லையா எனவெல்லாம் நீங்கள் கேட்பதைப் படிக்கும்பொழுது, ஆளுங்கட்சியின் குறைபாடுகளை எடுத்துச் சொன்னால் அதற்கு விளக்கம் சொல்லாமல் முந்தைய எதிர்க்கட்சியின் ஆட்சி மட்டும் ஒழுங்கா எனக் கேட்கும் ஆளுங்கட்சியினரின் போக்குத்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. குறிப்பிட்ட திரைப்படங்களிலோ, தொலைக்காட்சித் தொடர்களிலோ அத்தகைய காட்சிகள் இடம்பெறும்பொழுது நாம் கண்டிக்கத் தவறி விட்டோம் என்பதற்காக இதைக் கண்டிக்கக்கூடாது என்பது என்ன பார்வை அம்மணி? இது சரியா?

    நாட்டில் நடப்பதைத்தான் காட்டுகிறார்கள், சமூகத்தில் இருப்பதைத்தான் காட்டுகிறார்கள் எனவெல்லாம் நியாயப்படுத்தத் தொடங்கிவிட்டால் நாட்டில் எதுவுமே தவறில்லை என ஆகிவிடாதா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்! நாட்டில் அன்றாடம் எத்தனையோ வன்முறைகள் நடக்கின்றன, எத்தனையோ சாதி - சமயக் கலவரங்கள் நடக்கின்றன. இவற்றைப் பற்றிப் படம் எடுக்கிறோம் எனும் பெயரில் இருப்பவற்றையெல்லாம் அப்படிக்கு அப்படியே காட்சிப்படுத்தத் தொடங்கினால் காணச் சகிக்குமா? காட்சிப்படுத்தத் தொடங்கினால் என்ன? ஏற்கெனவே பல படங்கள் இங்கு அப்படித்தான் காட்சிப்படுத்தப்படுகின்றன. நாட்டில் நடக்கும் அட்டூழியங்களை உண்மையிலேயே தட்டிக் கேட்கும் நோக்கில் எடுக்கப்பட்ட தேவர் மகன், தம்பி, பேரண்மை, பாபநாசம் போன்ற படங்களில் இடம்பெற்ற வன்முறை - விரசக் காட்சிகளுக்கும், இன்ன பிற விஜய், அஜீத் பட வன்முறை - விரசக் காட்சிகளுக்கும் இடையில் எப்பேர்ப்பட்ட வேறுபாடு உண்டு என்பது தாங்கள் அறியாததில்லை. அத்தகைய ஒரு பொறுப்புணர்ச்சியின் பெயராலோ, சமூக நலன் கருதியோ பெண் குழந்தைகள் வளர்ப்பிலுள்ள பதைப்புப் (tension) பற்றிப் பேசினால் அது வரவேற்கக்கூடியதே. ஆனால், தங்களுக்கு நகை விற்க வேண்டும் என்கிற, முழுக்க முழுக்க வணிக நலன் அடிப்படையிலான ஒரு விளம்பரத்தில் பெண்கள் பாரம் எனப் போகிற போக்கில் சொல்வது ஏற்க முடியாதது, ஏற்கக்கூடாதது என்பதே என் கருத்து!

    சிந்தித்துப் பாருங்கள்!

    பதிலளிநீக்கு
  28. வாங்க இபுஞா சகோ! உங்கள் கருத்தை அதாவது பொறுப்பான டென்ஷன் ஆம் அதை முற்றிலும் ஏற்றுக் கொள்கின்றேன்/றோம் சகோ....அதே போன்று....ஆனால் பாருங்க சகோ பெரும்பான்மையான பெற்றோர் ஐயோ நகை விலை ஏறுதே....வாங்கி வைக்கணுமே கல்யாணத்திற்கு என்றும் வரதட்திணை பற்றியும்...உனக்கென்ன கவலை...பையன் என்றுமே சொல்லிக் கேட்டதினாலும்.....
    பெண் பற்றிய பார்வை, எனது பார்வை தனிப்பட்டது.. என்பதாலும் இந்த சமுதாயத்தின் பார்வையில் எழுதி அதை நையாண்டி என்று...எழுதிய ஒன்று ஹ்ஹ்ஹ்
    //நாட்டில் நடப்பதைத்தான் காட்டுகிறார்கள், சமூகத்தில் இருப்பதைத்தான் காட்டுகிறார்கள் எனவெல்லாம் நியாயப்படுத்தத் தொடங்கிவிட்டால் நாட்டில் எதுவுமே தவறில்லை என ஆகிவிடாதா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!// நிச்சயமாக இதையும........ஏற்றுக் கொள்கின்றேன்/றோம்
    நான் கொஞ்சம் நையாண்டி, ஆதங்கம் கலந்த ஒன்றாகத்தான் எழுதினேன் என்று நினைத்திருந்தேன்...ஹஹ சரி அதில் பெண் குழந்தைகள் தனியாக சென்று வர முடியய்வில்லை என்பதும் குறிப்பிட்டிருந்தேன் அதுவும் ஒரு டென்ஷன் தானே சகோ....பெண்களை பாரமாக நினைக்கும் எண்ணம் இன்னும் மாறவில்லை சகோ..நீங்கள் சொல்லி இருப்பது போல்...அது காலம் காலமாக தொடர்ந்து வரும் ஒரு நோய். பரம்பரை நோய் என்று கூட சொல்ல்லாம்....இன்னும் “ஐயோ பொம்பளை பிள்ளையா” என்று கேட்கும் குடும்பங்கள் இருக்கத்தானே செய்கின்றன்...மட்டுமல்ல...சமீபத்தில் எனது குடும்பத்தில் ஒரு இளம் பெண் கருவுற்று அது ஆண் என்று தெரிந்த்தும் அவர்கள் அடைந்த மகிழ்வை நீங்கள் பார்க்க வேண்டுமே...ஏனென்றால் அவளது அம்மாவிற்கு இவளையும் சேர்த்து இரண்டுமே பெண்கள். மற்றொரு பெண்ணிற்கு 27 வயதாகிறது ஆனால் திருமணம் நடக்கவில்லை என்பதால் என்ன ஒரு கவலை தெரியுமா? இன்னும் அதிகமாக நகைகள் கொடுக்கவும், பணம் கொடுக்கவும் தயராக இருக்கின்றார்கள்!!!!!!!!

    பதிலளிநீக்கு
  29. நான் பெண் குழந்தைகள் பெற்ற பலரிடமும் இதைப் பற்றிப் பேசிவிட்டுத்தான் எழுதினேன். எனது பக்கத்து வீட்டுப் பெண் கூட....மிகவும் நலிந்த குடும்பம்..இரு பெண் குழந்தைகள். அந்தப் பெண் சொல்லுவது...”ஹும் இந்த விளம்பரத்த..ஏதோ பேப்பர்ல கூட வந்துச்சாம்...ஏன் இப்படி எல்லாரும் குத்தம் சொல்லுறாங்கனு தெரிலக்கா....அவன் சொல்லிப்புட்டான்...நாங்க சொல்ல முடியலக்கா....பொண்ணப் பெத்த எங்கள மாதிரி இருக்கறவங்களுக்குத்தான் தெரியும் அதோட வலி....எம்ம்புட்டுக் கொடுக்கனும் தெரியுமா...எவன் ஒண்ணும் வேணான்னு கட்டிக்கிறான்...” எல்லோருமே ஏதோ பெண் குழந்தைகள் என்றால் பாரம் போல பேசுவதைக் கேட்டு...சலிப்படைந்து விட்டேன் சகோ...ஏனென்றால் எனது பார்வை முற்றுலும் வேறுபட்ட்து....
    அந்த விளம்பரம் பற்றி நான் எழுதியது ....நானும் ஒரு பெண்தானே! எப்படி நான் ஆதரிப்பேன்? இல்லை... ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்டக் கருத்து....இந்தச் சமுதாயம் பார்க்கும் பெண் அல்ல இங்கு நான் சொன்னேன் என்றால் என்னை எல்லோருமே அடிக்க வந்துவிடுவார்கள்! ஹ்ஹ்ஹ்..... அதை நான் வெளியில் சொல்லுவதில்லை. எனது நெருங்கிய வட்ட்த்திற்குள் இருப்பவர்களிடம் மட்டும் பெண்குழந்தைகளை வளர்ப்பது பற்றிப் பேசி வருகின்றேன். நெருங்கிய வட்ட்த்திற்குள் இருக்கும் ஆசிரியர்களிடமும் சொல்லி வருகின்றேன். பள்ளியில் பெண் குழந்தைகளின் மன நிலையை புதுமைப் பெண்ணாக மாற்ற...
    எனக்குத் திட்டும் விழும்...வேலைக்கு ஆகாத, நடைமுறைக்குச் சாத்தியமில்லாத்தை எல்லாம் பேசாதனு...நீ ரொம்ப என்னவோ பெரிய இது மாதிரி....ரொம்ப ஐடியலிஸ்டிக்கா இருக்க” என்று...ஹ்ஹ்ஹ்
    நீங்கள் வேண்டுமென்றால் பரந்த மனப்பான்மையுடன் விரிந்த பார்வையுடன் வாழலாம் ஆனால் பொதுவாக இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்புக் காட்டிய ஆண்களும் சரி, பெண்களும் சரி...நகைகள் எல்லாம் வரதட்சணையாகக் கொடுக்க மாட்டோம், வாங்க மாட்டோம் பெண்ணை அப்படியே ஏற்றுக் கொள்கின்றோம் என்று எவரேனும் சொல்லுகின்றார்களா? ஏழைக் குடும்பத்தில் கூட அப்படி இல்லையே. அதனால் தானே பெண் சிசுக் கொலைகள்...அதைத்தான் நையாண்டியாக இந்த சமுதாயம் மாறாத வரை அந்த வார்த்தைகள் சரிதான்....என்று...நாம் மாற வேண்டும் சகோ...நமது பார்வையும் மாற வேண்டும்...
    பெண்ணைப் பெற்றவர்களின் பார்வை மாற வேண்டும் புதுமைப் பெண்ணாக வளர்க்க வேண்டும். எதிர்க்கும் பெண்களே தங்கள் பெண்களுக்காக, திருமணத்திற்காக நகை வாங்கிச் சேமிக்கத்தானே செய்கின்றார்கள்?! சிறிது காலம் வரக்கூடிய விளம்பரத்திற்கு, அதுவும் பணம் என்ற குறிக்கோளுடன் வரும் விளம்பரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உணர்ச்சிவசப்படுவதை விட, நிரந்தரமாக, வாழ்க்கை முழுவதும் அதைப் பின்பற்றும் வகையில் நாம் நம்மை முன்னேற்றிக் கொண்டு பெண்களை புதுமைப் பெண்களாக வளர்த்திடுவோமே....பார்வையை மாற்றிக் கொள்வோம் என்ற நோக்கில்தான் நையாண்டி ஒரு புறம்....ஆதங்கம் மறு புறம் என்று இந்த சமூகத்தின் பார்வையை எழுதியிருந்தேன்....ஒரு வேளை நான் அதைச் சரியாக வெளிப்படுத்தவில்லையோ என்றும் தோன்றுகின்றது...
    தாங்கள் வழக்கம் போல் மிக விரிவான கண்ணோட்ட்த்துடன், அலசி எழுதியிருப்பதற்கு மிக்க நன்றி சகோ...
    கீதா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் கருத்துக்கு இவ்வளவு விளக்கமாகப் பதில் உரைத்ததற்கு முதலில் என் நன்றி!

      என்னை விட நீங்கள்தாம் மிகவும் அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள். :-) நீங்கள் கூறுவது சரிதான். சமூகத்தை விமரிசிக்கும் ஒரு விளம்பரத்தைக் கண்டு கொதிப்பதை விட, அப்படி யாரும் விமரிசிக்காத அளவுக்குச் சரியான சமூகமாக நாம் மாற வேண்டும் என்கிறீர்கள். நூற்றுக்கு நூறு சரிதான். ஆனால், சமூக அக்கறை காரணமாகவோ அல்லது அது போன்ற வேறு ஏதேனும் காரணத்தை முன்னிட்டோ அல்லாமல் வெறும் சொந்த நலனுக்காக விளம்பரம் எடுக்கிற ஒருவனுக்கு சமூகத்தை விமரிசிக்கும் உரிமை எங்கிருந்து வந்தது என்பதே இங்கு கேள்வி.

      எது எப்படியோ, இப்படி சர்ச்சைக்குரிய ஒரு விளம்பரத்தின் மூலம் எதிர்பார்த்ததை விடப் பன்மடங்கு கூடுதலாக அவர்கள் விளம்பரமடைந்து விட்டார்கள்!

      நீக்கு