புதன், 2 செப்டம்பர், 2015

கும்மியடி! உலகம் முழுவதும்! புதுகையில் தமிழ்பதிவர் சந்திப்பென்று கும்மியடி!


கும்மியடி! உலகம் முழுவதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
புதுக்கோட்டையில் பதிவர் சந்திப்பென்று
புத்துணர்ச்சி யுடனே கும்மியடி!

அக்டோபர் பதினொன்று இரண்டயிரத்தி பதினைந்து
அன்று தான் சந்திப்பென்று கும்மியடி!
ஆரோக்கியமாதா மக்கள் மன்றம்
ஆங்குதான் கூட்டமென்று கும்மியடி!

மதமில்லை சாதியில்லை குணம் ஒன்று மட்டுமே
மனிதம் போற்றுவோம் கும்மியடி!
எண்ணிலடங்கா பதிவர்கள் எல்லோரது
எண்ணங்கள் ஈடேறிடும் கும்மியடி!

வலையுலகம் பல படைப்புகள் படைத்திட்டு
கலையுலகம் ஆக்கிடுவோம் கும்மியடி
எல்லை யில்லா அன்பைப் பெருக்கியே
எல்லோரும் இன்புறுவோம் கும்மியடி!

வாருங்கள் வாருங்கள் என்று சொல்லியே
வணங்கி வரவேற்போம் கும்மியடி.
தமிழை வளர்த்துப் போற்றிடுவோமே
தலை நிமிர்ந்து நின்றிடுவோம் கும்மியடி!

சந்திப்பு விழா பத்தி தெரிஞ்சுகிடணுமா? இதா இருக்குல்லா இந்தச் சுட்டிக்குள்ளார போனா தெரிஞ்சுரும்லா

நம்மள பத்தி கையேடு வருதாம்லா....அதுல வெவரம் கொடுக்கணும்லா அதுக்கும், பொறவு நம்ம புக்கு, குறும்படம் வெளியிடனும்னாலும், இதா இருக்குல்லா இந்த மின் அஞ்சலுக்கு மூச்சுக் காட்டாம கொடுத்துட்டுப் போயிரலாம்ல

 விளாவுக்கு ஏதாச்சும் கொடுக்கணுனு/மொய் வைக்கணும்ணு தோணிச்சுனாலும் பேங்க் அக்கவுண்ட் டிடெய்ல்ஸ் வேணுமில்லா அதுக்கு  நம்ம டிடி இருக்காருல்லா அதான் நம்ம வலைச்சித்தரு...டிடி தளத்துல அங்ஙன போனா தெரிஞ்சுக்கலாம்வே.

போட்டியெல்லாம் இருக்குதாம்வேய் அதுக்கு இதுக்குள்ளாற போனா தெரிஞ்சுரும்லா

உங்க பேர என்ட்ரி போட்டாச்சா? போடலைனா. இதா இருக்காருல்லா...நம்ம டிடி இதுக்குள்ளார போனா ஒரு படிவம் இருக்குதுவே அதுல ஒரு என்ட்ரி போட்டுருங்கவே.

"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல், வேறொன்றறியேன்(யோம்) பராபரமே

(பின் குறிப்பு : மதுரைத் தமிழன் அவர்கள் விழாவுக்கு வந்து உங்களுடன் இருக்கலாம்....ஒருவேளை வந்தால்....அது பரம ரகசியமாக.....வெல்லூரில் நடந்த விசுவின் விழாவிற்கு அவரது நண்பரை அனுப்பியது போன்றோ, இல்லை மச்சம் ஒன்று வைத்துக் கொண்டு மாறு வேடத்திலோ, இல்லை உலகிலேயே க்ளோனிங்க் வைத்துள்ள ஒரே ஒருவர், இந்தியர், தமிழர், பதிவர் என்ற பெருமையையுடைவர் என்பதால் தனது க்ளோனிங்கைக் கூட அனுப்பலாம்....கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு பரிசு? அது அவரிடம் கேட்டுக் கொள்ளலாம்... ஹஹஹஹ...இதன் பின் பதிவின் கடைசி வரியை வாசித்துக் கொள்ளவும்...."எல்லோரும்.....)62 கருத்துகள்:

 1. கரை புரண்டோடும் உற்சாகம் பதிவில் தெரியுதுலா :)))))

  பதிலளிநீக்கு
 2. அட அட்டகாசம் தான் கும்மியடிச்சே கூப்பிடுகிறீர்களா பேஷ் பேஷ் ....
  ஆமா நம்ம மதுரை வீரர் வருகிறாரா ? சொல்லவே இல்லை அட நான் ஒருக்கா அவரை பார்க்கணுமே ...என்ன எதுக்கா அது ஒண்ணுமில்லைங்க அந்த பூரிக் கட்டை விபரம் பற்றிக் கேட்க தான் ஐயோ அவர்க்கிட்ட சொல்லிடாதீங்கப்பா அப்புறம் வராமல் விட்டிடப் போகிறார். ஹா ஹா .....கலந்து கொள்ளும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ...! நன்றி வரவேண்டும் என்று ஆவல் பெருகுகிறது ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதுரை வீரர் வருவதே மர்மமாச்சே....ஹஹஹஹ் சகோதரி கீழ பாருங்க அவர் கொடுத்திருக்கும் பதிலை....வாருங்கள் நீங்களும் !

   மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு..

   நீக்கு
  2. அந்த முதல் நாள் பூரிக்கட்டை விபரம் வேண்டுமானால் மதுரைத்தமிழனின் மனைவியிடம் கேட்க வேண்டும்...... ஆமாம் திடீரென்று எதுக்கு பூரிக்கட்டை பற்றி விபரம் கேட்குறீங்க....வீட்டுக்காரர் ஏதும் வாலை ஆட்டுகிறாரா என்ன?

   நீக்கு
 3. புதுகைனா பாண்டிச்சேரினு நினைச்சிட்டிருந்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சும்மாதானே சொல்றீங்க நீங்க?!!!

   பாண்டிச்சேரி/புதுச்சேரி - புதுவை

   புதுக்கோட்டை - புதுகை...

   ஓர் எழுத்து/ஒரு சொல் மாறிடுச்சுனா ஊரே மாறிடுது...ஹ்ஹ்ஹ

   நீக்கு
 4. ஹிஹி.. நல்ல வேளை விவரமா சொன்னீங்க.. நான் நவம்பர் பத்தாம் தேதினு நினைச்சிட்டிருந்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையாவா...அப்படித் தெரியலையே..ஹஹஹ் என்னவோ கலாய்க்கற மாதிரில தெரியுது....

   நீக்கு
 5. வெல்லூருக்கு வந்தது மதுரைத்தமிழந்தான் என்று பல அப்பாவிகள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் வெல்லூருக்கு வந்தது மதுரைத்தமிழன் என்றால் அவரை இதுக்கு முன்னால் மதுரை பதிவர் விழாவில் நீங்கள் கண்டிப்பாக சந்தித்து இருக்க வேண்டும். ஏனென்றால் மதுரைபதிவர் விழாவிற்கு அடியேன் வேறுபதிவர் பெயரில் வந்து இருக்கிறேன். அங்கு நான் வந்தற்கு ஆதாரமாக அங்கு நான் என் செல் போனில் எடுத்த புகைபடங்களை நாளை வெளியிடுகிறேன். அந்த படங்கள் இதுவரை இணையத்தில் வெளிவாரதவைகள் அதை பார்த்த பின் நீங்கள் முடிவீற்கு வாருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதுரைப் பதிவர் விழாவிற்கு நாங்கள் போகலையே! வேறு பதிவர் பெயரிலா?!!!யப்பா புதுக்கோட்டைப் பதிவர்களே என்ட்ரிக்கு அடையாள அட்டை போடுங்கப்பா...(ந்ம்ம ஊர்ல இந்த ஐடி ப்ரூஉஃப் எல்லாம் ஜுஜுபினு நீங்க சொல்றதும் கேக்குது தமிழா...)
   ம்ம்ம் நாளை வரும் உங்க செல்ஃபோன் படங்கள் என்னவா இருக்கும் எப்படி இருக்கும்னு யூகிக்க முடியுது..அதுவும் இணையத்தில் வெளிவராதவை!!! போடுங்க போடுங்க...ஹஹஹ

   நீக்கு
  2. நிஜ போட்டோதான் காமெடி கிராபிக்ஸ் அல்ல.

   நீக்கு
  3. பாப்பமே! பாத்துட்டுச் சொல்றோம்...காமெடி க்ராஃபிக்ஸ்னு சொல்லல ஆனா ஃபோட்டோல என்ன வேணா பண்ணலாமே...ஹஹஹஹ் பார்ப்போம்ல...

   நீங்க புதுகைக்கு வந்தீங்கனா எங்களுக்குத் தெரியாமலா போகும்...சரி மேற்குக் கடற்கரைக்காரரை அழைப்போம்...நாட்டாமையாச்சே அதான் நம்ம விசு...அவரு நாட்டாமை...கண்டிப்பா பொய் சொல்ல மாட்டாரு....அவரையே கேட்டுட்டாப் போச்சு...ஹஹஹ்

   நீக்கு
  4. பூரிக்கட்டையில் அடிவாங்கி, பூரிபோல் இருக்கும் மண்டைக்குரியவர் மதுரைக் காரர்,,,,,,,,,,
   அப்பாடா, கண்டுபிடிச்சுருவோம்ல,

   நீக்கு
  5. ஹஹஹ்ஹ ஹும் சகோதரி மஹேஸ்வரி நீங்க ஏமாந்துருவீங்க...அப்படி நினைச்சுப் பார்த்தீங்கனா...அவரு படா கில்லாடி..அதெல்லாம் வெளில தெரியாதபடிதான் வருவாரு....

   நீக்கு
 6. திருவிழா உற்சாகம் தெரிகிறது... கொண்டாடுங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஸ்ரீராம்....எல்லோரையும் சந்திக்கலாமே என்ற ஒரு உற்சாகம்தான்....

   நீக்கு
 7. தாங்கள் வருகிறீர்களா நண்பரே
  தங்களை அவசியம் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்
  நன்றி
  தம =1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகின்ற எண்ணம் இருக்கின்றது நண்பரே! நாங்களும் சந்திக்கும் ஆவலுடன் இருக்கின்றோம்..மிக்க நன்றி!

   நீக்கு
 8. கிராமத்து கோவில் திருவிழாக்களில் தமிழர்களின் வழக்கமாக இன்னமும் இருக்கும் கும்மியடி பாடலோடு பதிவர் திருவிழாவை வரவேற்ற உங்களுக்கு ஒரு "ஒ..!!!" போடுகிறோம்! அதாவது ஒட்டு.
  த ம 7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! நண்பரே! செந்தில்... நாங்களும் அடிப்படையில் கிராமத்தவர்கள்தானே! இந்தக் கும்மிப் பாடல்கள் பழக்கமுண்டு...மிகவும் பிடித்த ஒன்று...பாரதியாரின் கும்மிப் பாடல்களும் பிடிக்கும் அதனால் ஒரு முயற்சி அவ்வளவே. பா எழுத என்று எதுவும் தெரியாது நண்பரே! அதனால் ஏதோ தெரிந்த வகையில்....

   மிக்க நன்றி செந்தில்!

   நீக்கு
 9. புதுக்கோட்டையில் நடைபெறவிருக்கும் வலைப்பதிவர் திருவிழா- 2015 இற்கு புதுமையான முறையில், உற்சாகக் கும்மியடித்து வரவேற்பு.

  பதிலளிநீக்கு
 10. பதிவர்கள் விழா சிறக்கப் பாடு படும் அத்தனை உள்ளங்களுக்கும்
  மிகவும் அருமையாகப் பதிவிட்டுக் கலக்கும் தங்களுக்கும் இவ்
  விழா சிறக்கவும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோதரா ! கும்மிப்
  பாட்டு அருமை ! பாராட்டுக்கள் ::)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி! தங்களின் வாழ்த்திற்கு! கும்மிப்பாட்டு அருமையா! தமிழில் இலக்கண முறையில் வெண்பா, மூன்று கடிலம், 14 கடிலம் என்று கலக்கும் நீங்கள் பாட்டு அருமைனு சொல்றீங்களே சகோ! மிக்க நன்றி!

   நீக்கு
 11. ஆஹா பதிவர்கள் விழாப் பற்றிய தகவல்கள் தங்கள் பார்வையில் அருமை,
  பாட்டெல்லாம் பாடி, கும்மியடித்து, ஓரே கூத்துதான் போல புதுவையில,
  விழா சிறக்க வாழ்த்துக்கள். பகிர்வு அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி மஹேஸ்வரி தங்களின் கருத்திற்கு...சகோதரி அது புதுவை அல்ல புதுகை....வை எடுத்து கை வை அங்கு என்று சொல்லி ...ஹஹஹ

   நீக்கு
 12. வாழ்த்துக்கள், அன்பர்களே புதுக்கோட்டையில் குறைந்தது 3 ஆடுகளும் 20 30 கோழிகளும் உயிரைவிட்டு, கோழிகளின் உறவினர்கள் சேர்ந்து விட்ட 500 முட்டைகளையும், சைவப்பிரியர்களுக்கான காய்கறி உணவுகளும், உற்சாகப்பிரியர்களுக்கான கூல்டிரிங்ஸ் ஏற்பாடுகளையும் சேர்த்தே தடாபுடாலாக நடைபெறுவதாக ஒரு ரகசிய செய்தி... உண்மையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சிவபார்கவி சகோதரி...தங்களின் கருத்திற்கும் முதல் வருகைக்கும்...

   அட இப்படிக் கூட நடக்குதா அங்க.........எங்களுக்கும் கொஞ்சம் கசிந்தது...ஹஹ் ஹஹ ஆனால் வேறு பல ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாகப் போவதாக....

   நீக்கு
 13. பதில்கள்
  1. ஹலோ சக்தி இது தொரை மட்டுமில்ல ஹஹஹ கீதாவும் சேர்ந்து...ஹஹஹ்

   சரி சரி...சும்மாதான் உங்களக் கலாய்ச்சோம்...அட அப்போவே சொல்லிட்டீங்களா..தெரியாமப் போச்சே...

   நீக்கு
 14. பதில்கள்
  1. மிக்க நன்றி வலிப்போக்கன் நண்பரே! தங்களின் வாழ்த்திற்கு!

   நீக்கு
 15. ஆனந்தக் கும்மி.. ஆரவாரக் கும்மி!..

  சந்தோஷத் தோரணங்களைக் கட்டியாகி விட்டது!..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா! தங்களின் கருத்திற்கு....

   நீக்கு
 16. கலந்து கொள்பவர்களுக்கு வாழ்த்துகள்..பல கோப்பெருஞ்சோழர்களும்,பிசிராந்தையார்களும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹ்...என்ன சரித்திரக் கதை எழுதியதின் தாக்கமோ....மிக்க நன்றி சென்னைப்பித்தன் சார் தங்களின் வாழ்த்திற்கு...

   நீக்கு
 17. ஆனந்த கும்மியைக் கண்ட ஆர்வமுடன் வந்தேன். பதிவர் சந்திப்பு பகிர்வில் தங்கள் பகிர்வில் இணைகிறேன்.
  அனைவருக்கும் விழா குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வாங்க சசிகலா சகோதரி....பகிர்வில் இணைந்து கொள்ளுங்கள். மிக்க நன்றி சகோதரி!

   நீக்கு
 18. அடடே பாட்டுப்பாடியே வரவழைக்கிறீங்க நீங்க சொன்னபடியே செய்துட்டோம்

  கரீக்டா வந்துருவோம்ல.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ! நீங்க வர்ரீங்களா சூப்பர்! மிக்க நன்றி கில்லர் ஜி!

   நீக்கு
 19. அன்புள்ள அய்யா,

  கும்மியடி! தமிழ் வலைப்பதிவர்

  குதுகலத்துடன் கூடிடக் கும்மியடி!

  புதுகையில் புதிய வரலாற்றைப்

  புதுமையாய்ப் படைத்திடக் கும்மியடி!


  -வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா பற்றி விரிவாக விளக்கியது கண்டு மகிழ்ச்சி.

  நன்றி.
  த.ம.12

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா! அருமை! அதான் தமிழ் ஆசிரியர்னு சொல்றது/....நாங்க அந்த அளவிற்குத் தமிழில் விற்பன்னர் இல்லையே நண்பரே! மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 20. என்னது.... மதுரைத் தமிழன்... புதுகைக்கு வர்றாரா? விழா சிறக்க வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹ தெரியலை..அட இதுவே ஒரு கதைக்குத் தலைப்பு போல இருக்கே...மிக்க நன்றி சுரேஷ்!

   நீக்கு
 21. www.youtube.com/watch?v=GBU5edBz5ZY

  பாடுவது யாருன்னு புரியுது .

  யாரு யாரு கும்மி ஆட்டத்துலே இருக்காக ..

  தெரியலயே...

  நீங்களும் பார்த்து, கேட்டு சொல்லுங்களேன்.

  சுப்பு தாத்தா.
  www.vazhvuneri.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ ! தாத்தா சூப்பர் சூப்பர்!!! கேட்டோம்....
   தாத்தா சூப்பரோ சூப்பர்!! உங்கள் புத்துணர்வையும், இந்த வயதிலும் இளமையுடன், சுறுசுறுப்பாய் இருப்பதையும் என்னவென்று சொல்ல! பெருமைப்படுகின்றோம்..புளகாங்கிதம் அடைகின்றோம். .தங்கள் தாள் பணிந்து நல்லாசி வேண்டுகின்றோம் !!! தாத்தா அது புதுவை அல்ல புதுகை...மாற்ற முடியுமா?
   மிக்க மிக்க நன்றி தாத்தா....கீதா இதனை பழைய மெட்டிலேயே பாடினார்..அதற்கேற்ப வார்த்தைகளைப் போட முடிந்த அளவு கோர்த்தோம் ....

   மிக்க மிக்க நன்றி தாத்தா...We all bloggers are proud of YOU!!!!

   நீக்கு
 22. கும்மியை படித்ததும் சுப்பு தாத்தா ஞாபகம் வந்தது ,கடைசியில் அவரே, பாடி விட்டதை பார்த்து வியந்தேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி பகவான் ஜி தங்களின் கருத்திற்கு! ஆம்! தாத்தா பாடிவிட்டார்!

   நீக்கு
 23. ஆனந்தக் கும்மி, ஆரவாரக் கும்மி, புதுக்கோட்டையில் சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி முனைவர் ஐயா! தங்களின் கருத்திற்கு...ஆம் சந்திப்போம் ஐயா!

   நீக்கு
 24. அடடா... களைகட்டிடிச்சு வலைப்பதிவர் விழா!..:)

  எல்லாம் சந்தோஷ மயம்!..சிறக்கட்டும்!
  வாழ்த்துக்கள் சகோதரரே!

  த ம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்கநன்றி சகோதரி இளமதி! தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும்!

   நீக்கு
 25. கும்மிப்பாட்டு சூப்பரா இருக்கு சகாஸ்!!!
  நாங்களும் பாடிகிட்டே வேலை செய்யலாம் போல:)
  உங்கள் இந்த மேலான பங்களிப்புக்கு புதுகை பதிவர் குழு சார்பாக என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அஹஹஹ் ஆமாம் பாடிக்கிட்டே வேலை செய்யலாம் ஆனா கும்மி அடிச்சா வேலை??!!! காமெடி கும்மி அடிங்க எனர்ஜட்டிக்கா இருக்கும்....சரி இதுக்கு எதற்கு நன்றிகள்? நாங்களும் இதில் உண்டுதானே!

   மிக்க நன்றி மைதிலி சகோதரி!

   நீக்கு
  2. கும்மி அடிப்போமே - ஆண்கள்
   கும்மி அடிப்போமே!
   குனிஞ்சு வளைஞ்சு கைகள் கொட்டி
   கும்மி அடிப்போமே!

   வாங்க துளசி அய்யா..நிஜமாவே கும்மியடிச்சு வரவேற்போம் உங்கள் தலைமையில் (அதான் நம்ம விழானு சொல்ட்டீங்கல்ல..?)
   மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறோம் தங்கை மைதிலி சொன்னது போல!

   நீக்கு
  3. பிரகாஷ்ராஜ் விளம்பரம் பற்றிய பதிவு படித்தேன். பதில் நீளும் என்பதால் இப்போது எழுத முடியவில்லை. நாய்விற்ற காசு குரைக்காதுதான்! ஆனாலும் பிணத்தின் நெற்றியிலிருந்து காசைத் திருடுவது வியாபாரமல்லவே? இதுபற்றித் தனியாக ஒரு கட்டுரையே எழுத வேண்டும். கீதாவுடன் சண்டைதான் இருங்க.

   நீக்கு
  4. மிக்க நன்றி ஐயா! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்...கும்மிப்பாட்டில் நாங்கள் இருவருமே உண்டு....ஐயா! கொண்டாடிவோம்....

   நீக்கு
  5. ஐயா அந்த விளம்பரம் பற்றி நான் எழுதியது ....நானும் ஒரு பெண்தானே ஐயா! ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்டக் கருத்து....இந்தச் சமுதாயம் பார்க்கும் பெண் அல்ல...ஐயா நீங்கள் வேண்டுமென்றால் பரந்த மனப்பான்மையுடன் விரிந்த பார்வையுடன் வாழலாம் ஆனால் பொதுவாக இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்புக் காட்டிய ஆண்களும் சரி, பெண்களும் சரி...நகைகள் எல்லாம் வரதட்சணையாகக் கொடுக்க மாட்டோம், வாங்க மாட்டோம் பெண்ணை அப்படியே ஏற்றுக் கொள்கின்றோம் என்று எவரேனும் சொல்லுகின்றார்களா ஐயா? ஏழைக் குடும்பத்தில் கூட அப்படி இல்லையே. அதனால் தானே பெண் சிசுக் கொலைகள்...அதைத்தான் நையாண்டியாக இந்த சமுதாயம் மாறாத வரை அந்த வார்த்தைகள் சரிதான்....என்று...பெண்ணைப் பெற்றவர்களின் பார்வை மாற வேண்டும் ஐயா. புதுமைப் பெண்ணாக வளர்க்க வேண்டும் ஐயா....எதிர்க்கும் பெண்களே தங்கள் பெண்களுக்காக, திருமணத்திற்காக நகை வாங்கிச் சேமிக்கத்தானே செய்கின்றார்கள்?! விளம்பரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உணர்ச்சிவசப்படுவதை விட நாம் நம்மை முன்னேற்றிக் கொண்டு பெண்க்ளை புதுமைப் பெண்களாக வளர்த்திடுவோம் ஐயா....பார்வையை மாற்றிக் கொள்வோம் என்ற நோக்கில்தான் நையாண்டி ஒரு புறம்....ஆதங்கம் மறு புறம் என்று இந்த சமூகத்தின் பார்வையை எழுதியிருந்தேன்....ஐயா!

   மிக்க நன்றி ஐயா தங்கள் வேலைப்பளுவின் இடையிலும் வந்து கருத்து தெரிவித்தமைக்கு.....

   கீதா

   நீக்கு
 26. புதுகை வலைப்பதிவர் விழா சிறக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு