வெள்ளி, 18 செப்டம்பர், 2015

ஆயிரம் கண்களால் காக்கின்றேன் நான் உனை

Image result for accident cartoon motorcycleImage result for motorbike hitting a car cartoon
படங்கள் - இணையம்.

       இறைவனைக் கண்டதுண்டா?  இறைவனைக் காண்பிக்க முடியுமா?, இளைஞனான விவேகானந்தர் தன் கண்களில் படும் எல்லா சன்னியாசிகளிடமும் இறுதியாக ஒரு நாள் அதிகாலை இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் இக்கேள்விகளைக் கேட்ட போது, அவர் உதித்துக் கொண்டிருந்த சூரியனைக் காண்பிக்க உலகில் வாழும் உயிரினங்களுக்கெல்லாம் உயிர் வாழத் தேவையான நீர், நெருப்பு, மண், காற்று, வெளி போன்றவை நிலைத்திருக்க வைக்கும் அச்சூரியனைப் படைத்த, இயக்கும் ஜோதி ஸ்வரூபனான இறைவனை, விவேகானந்தர் உணர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. உடனே அவர் பரமஹம்சரைத் தன் குருவாக ஏற்று அவரது சீடனாக ஆனாராம். இனி பரமஹம்சர் எப்படி இறைவனை உணர்ந்தார் என்பது இதைவிட விசித்தரமான சம்பவம்.  அவரது கண்மூடித்தனமான தீவிர பக்திக்குமுன் வேறு வழியின்றி ஆதிபராசக்தியான காளியே அவர் முன் தோன்றி அவர் படைத்த படையலை (நிவேதியத்தை) புசித்ததாகச் சொல்லப்படுகிறது. இவர்களைப் போன்றப் புண்ணியாத்மாக்களுக்கு இயன்ற இக்காரியங்கள் நம் போன்ற சாதாரண மனிதர்களுக்கு இயலாத காரியம் என்றாலும் நம் எல்லோரது வாழ்விலும், “கடவுள் மாதிரி அவர் வந்து என்னைக் காப்பாற்றினார்”, “என்னால நம்பவே முடியலை.  எப்படி நான் அந்த விபத்திலிருந்து உயிர் தப்பினேன்.” “டாக்டர் நீங்கள் கடவுள் மாதிரி.....” போன்ற வார்த்தைகளை குரல் தழுதழுக்க பேசிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்கலாம்.  அப்படி நம் எல்லோருக்கும் இறைவன் இருப்பதை உணர்ந்து மெய் சிலிர்க்க வைத்த சம்பவங்கள் நம் வாழ்வில் இடையிடையே எப்போதாவது நிகழ்ந்திருக்கும்தான்.  நீங்களும் யோசித்துப் பாருங்கள். ஓரிரு சம்பவங்கள் உங்கள் நினைவிற்கும் வருகிறது தானே. 

       பல்வேறு மதங்களைச் சார்ந்து வாழும் நாம் அனைவரும் பல மொழிகளில் பல பெயர்களில் அழைக்கப்படும் எல்லாம் வல்ல இறைவனிடம் நம் தேவைகளை, நம் ஆசைகளை, நம் எதிர்ப்பார்ப்புகளைம், நம் ஏக்கங்களையும் வெளியிட்டு அவை எல்லாம் ஒரு நாள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் வாழ்பவர்கள் தானே.  நம் இடையே இறை உணர்வும், மூட நம்பிக்கைகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே என்று நம்பி நாத்திகர்களாய் வாழ்பவர்கள் மேற்கூறியவற்றைச் சொல்லாமலும், செய்யாமலும் வாழ்ந்தாலும் அவர்களது கடின உழைப்பு, சமயோசித புத்தி, தன்னம்பிக்கை, நேர்மை, கடமை உணர்வு, கண்ணியம், கட்டுப்பாடு போன்றவற்றில் அவர்களுக்குத் தெரியாமல் உறையும் இறைவன் அவர்களுக்கு வாழ்வில் வெற்றியே தருகிறார்.  ஆனால், அவர்கள் தங்கள் கண்களால் காணாததை ஏற்றுக் கொள்வதில்லை என்பதால் கடவுளை அவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்தான்.

       அப்படி எல்லாம் சிந்திக்க முடியாத நான் என் பிரார்த்தனைகளின் போது நீண்ட தேவைப்பட்டியலை இறைவன் முன் வைப்பது வழக்கம்.  நிவர்த்திச் செய்யப்படும் தேவைகளுக்குப் பதிலாக, புதிய புதிய தேவைகள் அவ்வப்போது பட்டியலில் இடம் பிடித்து பட்டியலின் நீளத்தை குறையாமல் பார்த்துக் கொள்வதுண்டு.  வாரம் ஒரு முறை வீட்டிலிருந்து 115 கிமீ தூரமுள்ள பள்ளிக்குப் போகும் போது, வழியில் 27 கிமீ தொலைவில் உள்ள வண்டூர் சிவாலயத்திற்குச் சென்று வணங்கிவிட்டுப் போவேன்.  அது போல வெள்ளி அல்லது சனி மாலை வீடு திரும்பும் போது பள்ளிக்கு அருகே உள்ள காவில் பகவதியை வணங்கிப் போவேன். 100கணக்கான வாகனங்கள் சீறிப்பாய்ந்து செல்லும் பாதையில், என் பைக்கின் மீதும், என் மீதும் உள்ள நம்பிக்கையை விட நான் வணங்கும் இறைவன் ஆபத்தேதும் நேராமல் என்னைப் பத்திரமாகச் சேரவேண்டிய இடத்தில் சேர்ப்பார் என்ற நம்பிக்கைதான் அதிகம்.  சில நேரங்களில் அந் நம்பிக்கையின் தைரியத்தில் ஓய்வு தேவையான நேரங்களிலும் வேறு வழியின்றி ஓய்வெடுக்காமல் பயணம் மேற்கொண்டதுண்டு.  அப்போதெல்லாம் ஏற்பட்ட விபத்துகளில் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது இறையருளால்தான் என்று எண்ணி கண்ணீர் மல்க இறைவனுக்கு நன்றி கூறியதும் உண்டு.

       அது போன்ற ஒரு சம்பவம் கடந்த 13.09.2015 ஞாயிறு அன்று எர்ணாகுளத்திலிருந்து நிலம்பூர் வரும் வழியில் நடந்தது.  பொயட் தெ க்ரேட் குறும்படத்தின் முன்னோட்டக் காட்சியை ஒட்டி, 19.06.2015 க்ளாசிக் காலேஜ் நிலம்பூரில் படப்பிடிப்பு நடத்திய மாணவர்களின் பங்கேற்பு நிகழ்வின் படத்தொகுப்பு வெள்ளி இரவு, சனி பகலும், இரவுமாக நடந்து ஒரு வழியாக ஞாயிறு காலை 6 மணிக்குத்தான் படத் தொகுப்பு முடிவடைந்து அதன் முதல் காப்பி எடுக்க முடிந்தது.  மூன்று மாதமாகியும், படம் பிடிக்கப்பட்ட மாணவர் பங்கேற்பு நிகழ்ச்சிக் காணக்கிடைக்கப் பெறாத்தால், க்ளாசிக் கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும், முதல்வராக நடித்த டோனி சாரும் என்னிடம் கோபம் கொண்டிருக்கும் இவ்வேளையில், அன்றே அந்த டிவிடியை டோனி சாரிடம் ஒப்படைப்பது நல்லது என்று தோன்றியாதால் உடனே 180 கிமீ தொலைவிலுள்ள நிலம்பூருக்குப் பயணம் செய்ய முடிவு செய்தேன். முன்னால் குறிப்பிட்டபட என் மீதும், என் பைக்கின் மீதும் உள்ள நம்பிக்கையை விட எல்லாம் வல்ல இறைவனிடம் உள்ள நம்பிக்கையில் படத் தொகுப்பு நடந்து முடிந்த இடப்பள்ளி ஸ்டூடியோவிலிருந்து 7 மணிக்குக் கிளம்பி களமச் சேரியிலுள்ள அக்கா வீட்டிற்குச் சென்று குளித்துக் காலைச் சிற்றுண்டி உண்டு அங்கிருந்து 8.30க்குக் கிளம்பினேன்.  இடையே கண் அயர்ந்தால், சாலை ஓரம் நிறுத்தி சிறிது நேரம் வண்டியில் சாய்ந்து அமர்ந்து உறங்கிச் செல்லலாம் என்ற எண்ணத்துடன் எப்படியும் 2 மணிக்கு முன் டோனி சாரிடம் டிவிடியை ஒப்படைத்துவிட்டு வீடு சென்று நல்ல ஒரு தூக்கம் போட்டுவிடலாம் என்ற எண்ணத்துடனும் தான்.

       அங்கமாலியைத் தாண்டியதும் என் எச் 47, 4 வழிச் சாலை ஆரம்பித்தது.  எதிரே வண்டிகள் வராது.  ஏறத்தாழ 10.30 மணி அளவில் இடையிடையே கண் அயர்ந்து உறங்குகின்றேனோ என்ற சந்தேகம் வந்ததும் வண்டியை நிறுத்தி, தண்ணீர் குடித்துவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தேன்.  கண் திறந்த போது என்ன நிகழ்ந்தது என்று தெரியவில்லை.  கண் திறந்த போது ஒரு கண்டெய்னர் ட்ரக்கின் பின்னால் என் பைக் மோதுகிறது.  இடக்கையின் வலப்பக்கத்தில் இருந்த பின் பக்கம் பார்க்கும் கண்ணாடி, கண்டெய்னரின் இடது ஓரத்தில் தட்டி வளைகிறது. கூடவே கைப்பிடியிலிருந்து விடுபட்ட இடக்கையின் மூட்டிற்குக் கீழ் பாகம் கண்டெய்னரில் பலமாக இடிக்கிறது.  வலப்புறம் சரியும் வண்டியும் நானும் சாலையில் விழுகிறோம்.  வலது காலில் மூட்டில் நல்ல வலி. மூட்டின் கீழ் பாகம் உராய்ந்திருக்கிறது.  பைக்கில் எங்கெல்லாமோ தட்டியதால் வலது கணுக்காலில் மேலும் கீழுமாக இரண்டு இடங்களில் சின்னக் காயங்கள்.  எழுந்து நின்ற நான் எப்படியோ, 132 கிலோகிராம் பாரமுள்ள “யூனிகார்னை” உயர்த்தினேன். 

   எங்கிருந்தோ ஓடி வந்த உதவி மனப்பான்மை உள்ள இருவரில் ஒரு இளைஞன் என் வண்டியைப் பிடித்து நிறுத்தி ஏதாவது சிரமம் இருக்கிறதா? ஏதேனும் மருத்துவமனைக்குப் போக வேண்டுமா என்றார்.  சாலை ஓரத்தில் ஹெல்மெட் விற்கும் ஒருவர், “கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துப் போனால் போதும்” என்றார்.  சுற்றும் பார்த்த எனக்கு ட்ரக்கின் பின்னால் 10 அடி தூரத்தில் ரோடு டிவைடர் உயபோகிக்கும் பைபரால் உருவாக்கிய கூம்பு வடிவுள்ள இரண்டு வைக்கப்பட்டுள்ளது.  களைப்பில் கண்கள் அயர்ந்து வேகம் குறைந்து வந்த வண்டி கண்டெய்னர் லாரியின் பின் புறம் மோதிய போதுதான் நான் கண்களைத் திறந்திருக்கின்றேன்.  மோதிய இடம் 3 அங்குலம் வலப்புறமாகத் தள்ளி மோதியிருந்தால், க்ளச் பிடித்திருந்த என் கைவிரல்கள் கண்டெய்னரில் பலமாய் மோதி விரல் எலும்புகளுக்குச் சேதமேற்பட்டிருக்கலாம்.  அறுவைச் சிகிச்சை, மாவுக்கட்டு, படுக்கையில் ஓய்வு, என்று 6, 7 மாதங்கள் வலியுடனும், வருத்தத்துடனும் கடத்த வேண்டியிருந்திருக்கலாம்.  அது இறை அருளால் நிகழாமல், சின்னதாகச் சில காயங்கள், சிராய்ப்புகளுடன் விபத்து நடந்து முடிந்த்தை எண்ணி நெகிழ்ந்தேன்.  மனம் எத்தனை முறை இறைவனுக்கு நன்றி சொன்னது என்பது நினைவில்லை.  வீட்டை அடைந்து பைக்கை நிறுத்தும் வரை சிவ நாமம் தான்.

       இது போல்தான் 2 வருடங்களுக்கு முன்பு பெருந்தல்மன்னா அருகே, பைக்கில் வேகமாகச் சென்று கொண்டிருந்த போது திடீரென சாலையின் இடப்புறமுள்ள ஒரு சிறிய சாலையிலிருந்து ஒரு ஆல்டோ கார்.  கார் நின்றதோ நடுச் சாலை.  நான் ப்ரேக் போட்டும் பலனின்றி என் பைக் காரின் நடுவில் மோதியது.  உடனே பைக்கிலிருந்து மேல் நோக்கி எறியப்பட்ட நான் காருக்கு மேலே பறக்கிறேன்.  முதலில் காரின் மேல்பாகம் கண்ணில் தென்படுகிறது.  பின் கண்ணில் படுவதோ ஆகாயம்.  அதன் பின் காரின் மறுபுறம் உள்ள சாலையில் உட்காருவது போல் விழுகின்றேன்.  விழுந்ததும் பின்னால் சரிகின்றேன். என் தலையிலிருந்த ஹெல்மெட் சத்தத்துடன் சாலையில் இடிக்கின்றது.  பையை முன்னால் வைத்து நீண்ட, கால் முட்டின் கீழ் வரை மறக்கும் மழைக் கோட்டைத் திருப்பிப் (பின் பாகம் முன்னிலும், முன் பாகம் பின்னிலும்) போடுவதுதான் என் வழக்கம்.  மழை வெயில் இரண்டிற்கும் மட்டுமல்ல என் ஆடையிலும், பையிலும் தூசிகள் படியாமல் போவது நல்லது என்று அனுபவ ரீதியாக உணர்ந்ததால் நான் அப்படிப் பயணிப்பது உண்டு.  நான் காரில் மோதி காருக்கு மேல் தூக்கி எறியப்பட்ட போது, அந்தக் கோட்டும், பையும் ஒரு வேளை பாரசூட் போல் மாறி இப்படி ஆபத்தில்லாமல் என்னை மெதுவாக விழ வைத்திருக்கலாம்.  என் கால்சராய் பாக்கெட்டிலிருந்த மாவுக்கல் பிள்ளையார் மேல்தான் நான் உட்கார்ந்த படி விழுந்தேன். 

    அப்போது ஓடிவந்த பலரும், எழுந்து நின்ற என்னை அருகிலிருந்த என்னைப் பிடித்துச் சென்றனர். உடலெங்கும் வலி.  கையிலும் கால்களிலும் அங்கிங்கு சிராய்ப்புகள்.  கூடி நின்ற எல்லோருக்கும் அதிசயம்.  இறையருளால்தான் நான் இப்படிப்பட்ட விபத்திலிருந்து தப்பினேன் என்றார் ஒருவர்.  நான் அவர்களிடம் என் ஹெல்மெட்டைக் காண்பித்து, அதன் பின் பாகத்தில் அடிப்பட்ட இடத்தையும் காண்பித்து உயிர்காத்தது அந்த இறைவனும் ஹெல்மெட்டும் தான் என்றேன்.  முன் சக்கரம் வளைந்த என் வண்டியை ஒரு பெட்டி ஆட்டோவில் ஏற்றி ஒரு பணிமனைக்குக் கொண்டுச் சென்றேன்.  இது போல் ஓரிரு விபத்துகளிலிருந்தும் இறையருளால் இதன் முன் தப்பி இருக்கிறேன்.  எல்லாம் வல்ல இறைவன் இதுவரை காத்தது போல் இனியும் காப்பார் என்ற நம்பிக்கையில் என் நம்பிக்கையில் என் பயணத்தை இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்.  ஒவ்வொரு முறை விபத்து நேர்ந்த பின்னும் என் வேகம் குறைகிறது.  தேவையான அளவு ஓய்வு எடுத்த பின்புதான் பயணிக்கின்றேன்.  

    ஆனால், எப்படியோ, இதெல்லாவற்றிற்கும் மேலாக இது போன்ற சம்பவங்கள் இறையுணர்வை வெகுவாக வளர்க்கச் செய்கின்றது.  என்பதற்காக “சக்திமான்” காப்பார் என்று நம்பி உயர்ந்த கட்டிடத்தின் மேலிருந்து, “சக்திமானே என்னைக் காப்பாற்று” என்று தாவிய குழந்தையின் மன நிலைதான் எனக்கு என்றெல்லாம் எண்ணிவிட வேண்டாம்.  இறையருள் என்பது ஒரு கவசம் போல் எப்போதும் நம்மைக் காக்கின்ற ஒன்று.  இறையருள் பெற இறையுணர்வு எப்போதும் நம் மனதில் நிறைந்திருக்க நாம் எல்லா வழிகளிலும் முயல வேண்டும். இறைவன், “எப்போது நான் இருக்கிறேன் உன் அருகே உனைக்காக்க”, என்பதை உணர்த்தும் சம்பவங்களை அடையாளம் கண்டு, இறைவனுக்கு நன்றி கூறி, நம் வாழ்வின் இறுதிவரை இறை தொடர்பைப் பலப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இராமகிருஷ்ண பரமஹம்சராகவோ, விவேகானந்தராகவோ ஆக முடியாத நம் போன்றவர்களுக்கு, இது போன்ற பலப்படுத்தல்தான் நோயற்ற வாழ்வுக்கு, நோய் எதிர்ப்புச் சக்தி நமக்கு எப்படி உதவுகிறதோ, அது போல் உதவி, பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க உதவும் சக்தியாக நமக்கு அமையவிருப்பது என்பதை மறக்கக்கூடாது.

55 கருத்துகள்:

 1. பதர றக்கும் சம்பவங்கள். மிகவும் எச்சரிக்கையுடன் வண்டி ஓட்டுங்கள் துளசிஜி.. படிக்கும்போதே கவலை வருகிறது. அரைத் தூக்கத்தில் வண்டி ஓட்டிய சம்பவம் படித்தபோது உங்கள் மேல் நிஜமாகக் கோபம் வந்தது.

  தம ​+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாக இனி மிகவும் கவனமாக ஓட்டுகின்றேன் ஸ்ரீராம்...உங்கள் கோபம் நியாயமானதே. அன்று வீட்டிற்குப் போக வேண்டிய சூழல் வந்துவிட்டதால்...படத் தொகுப்பு அன்று செய்தே ஆக வேண்டிய பொறுப்பும் வந்துவிட்டதால்....தங்கள் அக்கறைக்கும், அன்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்...

   நீக்கு
 2. அசைக் க முடியாத நம்பிக்கை
  தளரா முயற்சி
  மனிதனைக் காப்பாற்றும் நண்பரே
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பர் கரந்தையாரே தங்களின் கருத்திற்கும் !

   நீக்கு
 3. உங்கள் இரண்டாம் அனுபவம் போல் தான் எனக்குத் திருகயிலை யாத்திரையின் போது ஏற்பட்டது. குதிரை தள்ளிவிட்டதில் இப்படித்தான் ஆகாயத்தில் பறந்து பூமியில் விழுந்தேன். இடப்பக்கமாக விழுந்திருந்தால் 500 அடிக்கு மேல் ஆழமான நதியில் விழுந்திருப்பேன். வலப்பக்கமாக விழுந்ததோடு உடலைக் குறுக்கிக் கொண்டு உட்காரும் நிலையில் விழுந்தேன். இடுப்பில் பலமான உள்காயத்தோடு பிழைத்தேன். அதன் பின்னர் திருச்சுற்றைத் தொடர முடியாமல் போனாலும் உயிர் பிழைத்தது அந்தக் கயிலைநாதன் அருளே! :)

  பதிலளிநீக்கு
 4. திரும்பி வரும்போதும் இரு முறை எங்கள் வண்டியின் சக்கரங்கள் கழன்று உருண்டோடிப் பள்ளத்தில் விழுந்தும் அடிபடாமல் தப்பியதும் எங்கள் அதிர்ஷ்டமே! அங்கேயும் கயிலை நாதனே காத்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களின் அனுபவம் கண்டு பிரமித்துவிட்டோம். உயிர் தப்பியது நிஜமாகவே நாதனின் அருள்தன். தங்கள் அனுபவத்தை இங்கு பகிர்ந்ததற்கு மிக்க நன்றி. நானும் எச்சரிக்கையுடன் இருப்பேன் சகோதரி. மிக்க நன்றி

   நீக்கு
 5. அண்ணா....ரொம்ப அதிர்ச்சியா இருக்கு...இனிமேல் இப்படிப் பயணிக்காதீர்கள் அண்ணா, ப்ளீஸ். உண்மைதான், கடவுளுக்குத் தான் நன்றி!
  காயங்கள் விரைவில் குணம்பெற வேண்டுகிறேன்.
  பள்ளி அவ்ளோ தூரமா? தினமும் அவ்ளோ தூரம் பிரயாணம் செய்யணுமா?
  பார்த்துக் கொள்ளுங்கள் அண்ணா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி க்ரேஸ் சகோ/...தங்களின் அன்பிற்கும் அக்கறைக்கும். உங்கள் பெட்டியில் கொடுத்த அதே பதிலதான்/..
   மிக்க நன்றி சகோஈ!

   நீக்கு
  2. இல்லை சகோ வார இறுதியில்தான் வீட்டிற்குப் பயணம். மீண்டும் வார தொடக்கத்தில் பள்ளிக்குப் பயணம்

   நீக்கு
 6. அது இறை அருளால் நிகழாமல், சின்னதாகச் சில காயங்கள், சிராய்ப்புகளுடன் விபத்து
  நடந்து முடிந்த்தை எண்ணி நெகிழ்ந்தேன்.////


  muthalil ningal avvalvu kalaippodu en vaakanathai 180kimi otti sella mudivu eduthirukka vendum sir?
  irandu naal thukkam illa ungalukku therinthirukkalam
  bus laiyaachum poy kodukka try panni irukkalam illaiyaa sir?
  vipathu siriyathaaka irunthathaal entha pathippum illai.
  oruvelai periya vipathaaka nadanthirunthal?
  ithai oru paadamaaka kondu
  adutha murai ithu ponra vipathu eppothum nadakkaamal irukka thadukkalam illaiya.

  பதிலளிநீக்கு


 7. enakkum sila anupavangal undu siru vayathil.
  nadantha vipathukkalil irunthu thapithathal iraivan uthaviyodu pizaithen nampi vanthen ( viraivil pathil).
  aanal tharppothu,

  namakku ethaavathu saathakamaaka nadappathale iraivan iruppathaaka nan othukkolla maatten. (athu suya nalamaaka karuthukiren).
  ulakengilum ladchakanakkaanavarkal ore nerathil/ore nattil thunpappadukirarkal, kashtta padukirarkal, vethanai padukirarkal.
  avarkalukkellam en iraivan kai koduppathillai?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாரி மகேஷ்! இதில் நமக்குச் சாதகம் என்றோ, எதிர் என்றோ அல்ல. இதில் எது நடந்திருந்தாலும் அது இறைவனின் இச்சை என்றுதான் கொள்வோம். காப்பாற்றினால் இறைவன் என்றோ. இல்லை என்றால் இறைவன் இல்லை என்றோ அல்ல. அப்படி எதிராக நடந்திருந்தாலும் சரி இப்போதும் சரி தவறு எனதுதான் என்று எனக்கு நன்றாகத் தெரியும். எது நடந்தாலும் நான் இறைவனுக்கு நன்றி சொல்லுவது வழக்கம். அது எதிர்மறையாக இருந்தாலும். இதுவும் அவரால் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி. எனது செயலுக்கு, முட்டாள்தனமான மூளைக்கு...

   பல கேள்விகளுக்கு விடை இல்லை மகேஷ். அறிவியலில் கூட. அட்லாண்டிக் கடலின் மேலே ஒரு ஏரியாவில் தொடர்பு என்பதே கிடையாது....விமானம் பறந்தால். அது பெர்முடா அல்ல வேறு ஒரு இடம்...இன்னும் அறிவியல் அதற்கு பதில் சொல்லவில்லை. அதே போல அண்டார்ட்டிக்காவில் ஒரு மையப்பகுதி யில் என்ன நடக்கின்றது என்பது இதுவரை மனிதருக்குப் புலப்படாத ஒன்று. ஆனால் ஏதோ ஒன்று நடப்பதாகச் சொல்லப்படுகின்றது சமீபத்தில் ஒரு விஞ்ஞானி கட்டுரை எழுதியுள்ளார்.
   சுனாமி வருவது எதனால்? தெரியும் இரு ப்ளேட்டுகள் உராய்வதால்..ஏன்ன் உராய்கிறது? இன்னும் பதில் இல்லை சரியான..

   ஒரு உயிர் உருவாகும்சமயம் யாருக்கேனும் தெரியுமா? அறிவியல் எவ்வள்வோ முஅன்றும் இன்னும் பதில் இல்லை.......

   எங்கள் இருவருக்கும் மூட நம்பிக்கைகள் கிடையாது. ஆனால் இறை உணர்வும் நம்பிக்கை அருளில் நம்பிக்கை உண்டு.

   நீக்கு
 8. அடடா..... கவனம் தேவை துளசிஜி..... விரைவில் உடல் நலம் பெற எனது பிரார்த்தனைகள். வண்டி ஓட்டும் போது இன்னும் கவனமாக இருங்கள். தூக்கம் வரும் என்ற நிலையில் வண்டி ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் வெங்கட்ஜி! கவனமாக இருப்பேன். இப்போது நான் நலமுடன் தான் இருக்கின்றேன்...ஜி! இனி அப்படி ஓட்ட மாட்டேன். மிக்க நன்றி ஜி!

   நீக்கு
 9. உங்க மீது எந்த பச்சாதாபமோ பரிதாபமோ சத்தியமா வரல...
  பயங்கர கோவம் தான் வருது...
  உடம்பு தான் ஒத்துழைக்கல..., மூளை கூடவா வேலை செய்யல..?!
  தூக்கம் வருத்தி வண்டி ஒட்டி சீக்கிரமா போய் அப்படி என்ன, இந்த நாட்டை காப்பாத்த போறீங்களா?!!
  GET WELL SOON......
  பஸ் டிரைவரோ, ரயில் டிரைவரோ வண்டி ஓட்டில தூங்கினா என்ன நடக்கும்?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கோபம் நியாயமானதே மலர்வண்ணன். இது மற்றவர்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக இருக்குமே என்று தான் பகிர்ந்தேன். முதலில் எழுத தயக்கம் இருந்ததுதான்....மிகவும் யோசித்த பிறகுதான் எழுதினேன். இனி அவ்வாறு நடக்காது. உடம்பு ஒத்துழைக்க வில்லை மூளை வேலை செய்யாததால்தான் அந்தப் பிழை. மட்டுமல்ல போக வேண்டிய சூழல் உருவாகியது. இனி அப்படி நடக்காது...நான் நலமே....மிக்க நன்றி மல்ர் தங்களின் கோபத்தினூடே வெளியான அந்த அன்பிற்கு....

   நீக்கு
  2. படித்தவுடன் சட்டென தோன்றியதை அப்படியே எழுதி விட்டேன்..
   புரிதலுக்கு நன்றி...

   நீக்கு
 10. நம் நாட்டில் வாகன ஓட்டிகள் கவனமாக இருத்தல் அவசியம் இனிெனும் கவனமாக இருங்கள் தூக்கம் வரும் சூழலில் வண்டி ஓட்டுவது தவறுதானே...
  தமிழ் மணம் 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் கில்லர்ஜி! இருப்பேன் கவனமாக இருப்பேன் இம்முறைதான் என் தவறு. எச்சரிக்கை மணி...கவனத்துடன் ஓட்டுவேன் ஓய்வெடுத்து....மிக்க நன்றி ஜி

   நீக்கு
 11. படிக்கும் போதே மனம் பதைக்கிறது....கவனமாக இருங்கள் .......கடவுள் துணை கண்டிப்பாக இருந்தாலும் நாமும் முடிந்தவரை கவனத்தோடு இருக்க வேண்டும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோததரி அனுராதா...கவனமாக இருப்பேன்...மிக்க நன்றி..

   நீக்கு
 12. ஆமாங்க இந்த பதிவர் சொல்வது போல படிக்கும் போது பதைக்கும் மனதோடு அவ்வப்போது கோபமும் எட்டிப்பார்த்தது. அப்படியென்ன வேகமாக அல்லது உடனே சென்று ஆகவேண்டியது தூக்கம் என்றால் நீங்கள் ஆண் என்பதால் சற்று மரத்தடியில் படுத்து எழுந்து கூட செல்ல முடியும் அப்படியிருக்க ஏன் இப்படிச்செய்கிறீர்கள். ஒரு ஆசிரியராக இருந்துகொண்ட நாங்க என்ன சொல்வது?
  கவனமாக இருங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கோபம் நியாயமானதே! தவறு இல்லை. என் மீதுதான் தவறு. இனி நிச்சயமாக கவனத்துடன் ஓட்டுவேன். மிக்க நன்றி சகோதரி சசிகலா....தங்கள் அக்கறைக்கும் அன்பிற்கும்

   நீக்கு
 13. உங்களுக்கு நடந்த அத்தனை விபத்துகளிலும் அருவுருவமாய்
  அந்த இறையருள் கூடவே இருந்து காத்திருக்கின்றது சகோதரரே!..
  அற்புதம்!..

  உங்களுக்காகப் பரம்பொருளுக்கு நன்றி சொல்லுகின்றேன். அதேசமயம்
  என் வாழ்வில் நடந்த கடந்துபோன பல சம்பவங்கள் என்
  நினைவில் தோன்றி அதே நன்றியைக் கூறிட வைத்தாலும்
  தற்போதைய நிலையால் விக்கி விம்மி அழுதிட வைக்கின்றது!..
  யாவற்றிற்கும் ஏதோ காரணம் உண்டென உணர்கின்றேன்!

  அவதானமாக இருங்கள் சகோதரரே!
  இறையருள் தொடர்ந்துங்களைக் காக்க வேண்டுகிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி இளமதி...உங்களுக்கு நேர்ந்த துன்பத்தை விடவா உண்மைதான் நம்மை மீறி துக்கம் செல்லும் போது, எல்லையை விட்டு செல்லும் போது என்னதான் இறை நம்பிக்கை உணர்வு இருந்தாலும் துக்கம் நம்மை வாட்டத்தான் செய்யும் அதையும் மீறி.. எல்லாவற்றிற்கும் காரணம் உண்டுதான் ஆனால் காரணங்கள் ஒரு சிலதை மட்டும் ஆராயலாம் எல்லாம் ஆராய முடியாதே....தங்களுக்கு இறையருள் முழுவதும் கிடைக்க வேண்டி நாங்கள் பிரார்த்திக்கின்றோம் சகோதரி!

   மிக்க மிக்க நன்றி தங்களின் அன்பிற்கும் அக்கறைக்கும்.

   நீக்கு
 14. யாருக்காகவும் வேகம் வேண்டாம் நண்பரே! இரு சக்கர வாகனத்தை விட்டுவிட்டு நான்கு சக்கர வாகனத்தை இனி கையாளுங்கள். இறைவனை நினைக்கும்போதெல்லாம் உங்கள் நண்பர்களான எங்களையும் நினைத்துக் கொள்ளுங்கள். எங்களுக்காகவும் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியது அவசியம். (௨) சரி, இப்போது ஆரோக்கியம் எப்படி ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை சார்...இனி கவனமாக இருப்பேன்...நண்பர்கள் சகோதரிகள் இத்தனை பேரின் அன்பும் என்னைக் கட்டிப் போட்டுவிடது உங்கள் எல்லோருக்காகவும் கவனமாக இருப்பேன்...

   நீக்கு
 15. விபத்திலும் தப்பித்த நீங்கள் அஜாக்கிரதையாகக் கடவுள் காப்பார் என்று இருக்கக் கூடாது. இப்போது தேவலாமா.?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் நன்றாகவே இருக்கிறேன் சார்! நம்பிக்கைதான் ஆனால் எச்சரிக்கைதான். இனி நிச்சயமாக கவனத்துடன் ஓட்டுவேன் சார்...பல வருடங்களாக ஓட்டிக் கொண்டுதான் இருக்கின்றேன்...

   மிக்க நன்றி ஜிஎம்பி சார்

   நீக்கு
  2. நான் நன்றாகவே இருக்கிறேன் சார்! நம்பிக்கைதான் ஆனால் எச்சரிக்கைதான். இனி நிச்சயமாக கவனத்துடன் ஓட்டுவேன் சார்...பல வருடங்களாக ஓட்டிக் கொண்டுதான் இருக்கின்றேன்...

   மிக்க நன்றி ஜிஎம்பி சார்

   நீக்கு
 16. முதலில் தற்காப்பு;பின் இறைகாப்பு.
  1999 இல் புனேவில் ஏற்பட்ட விபத்தில்(என் தப்பே இல்லை) விலா எலும்பு முறிவு ஏற்பட்டுப் பின் பைக் ஓட்டுவதையே விட்டு விட்டேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ!

   ஆமாம் ஐயா! சரிதான்..ஐயா இனி கவனமாக இருக்கவேண்டும் என்று உணர்ந்தேன் ஐயா....

   நீக்கு
 17. நான் ஸ்கூட்டி ஓட்டத் தொடங்கிய புதிதில் கஸ்தூரி நாளும் எனக்குச்சொல்லும் அட்வைஸ் "ரோட்ல வண்டியை விட்டதும் வேற எந்த சிந்தனையையும் ஓரம் கட்டிட்டு. வேனும்ன உனக்கு (உன்னிடம் படிக்கும் பிள்ளைகள் மட்டுமல்ல) வீட்டிலும் ரெண்டு பிள்ளைகள் இருக்கு என்பதை மட்டும் நினைத்துக்கொள்:) அதே தான் அண்ணா! வேறன்ன?? உங்களுக்கு அட்வைஸ் பண்ண எனக்கு அனுபவம் போததில்லையா? so, கஸ்தூரி சொன்னதை உங்களும் FORWARD பண்ணுறேன்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி மைதிலி.....தங்களின் அன்பிற்கும் கஸ்தூரியின் அட்வைஸ்....யெஸ் மிக மிகச் சரியே....நிச்சயமாக கவனத்துடன் இருப்பேன் இனி...

   மிக்க மிக்க நன்றி

   நீக்கு
 18. இறை அருளால் விபத்தே வராமல் போனால் நல்லது :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுவும் சரிதான் பகவான் ஜி. ஆனால் மேடு பள்ளங்கள் வரத்தானே செய்யும். பள்ளங்களில் பல நமது தவறுகளால்தான் நிகழ்கின்றது....நம்பிக்கையின் அடிப்படையில்தான் வாழ்க்கை. இனி நேராது கவனமாக இருப்பேன்,

   மிக்க நன்றி ஜி!

   நீக்கு
 19. வணக்கம்
  அண்ணா
  எல்லாம் இறைவன் செயல்... விரைவில் குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன்.த.ம 9
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் நலமே! இனி கவனமுடன் இருப்பேன் தம்பி. மிக்க நன்றி ரூபன் தம்பி தங்களின் அன்பிற்கு...

   நீக்கு
 20. அன்புள்ள அய்யா,

  இந்த விபத்திற்கு;f காரணம்... கலையின் மீது தீவிர... அபரிவிதமான காதல்தான் என்று நினைக்கின்றேன். காரணம்...திரு. டோனி சாரிடம் டி.வி.டி. -யை ஒப்படைத்துவிட்டு வீடு சென்று நல்ல ஒரு தூக்கம் போட்டுவிடலாம் என்ற எண்ணம் என்பதால் சொல்கிறேன்.

  விபத்திற்கு முக்கிய காரணமாக ஒன்று மனிதத் தவறுகள்... மற்றொன்று இயந்திரத் தவறுகள்.


  கண்மூடி கண் திறப்பதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது என்பார்கள். நல்ல வேளையாக... ‘தலைக்கு வந்து தலைப்பாகையோடு போச்சு’ என்பார்களே... அதுபோல... பெரிய அசம்பாவிதம் நிகழாமல்... இத்தோடு போனது எவ்வளவோ சிறப்பு என்று எண்ணி... இனி வருங்காலங்களில் இந்தப் படிப்பினையால் இதுபோல் நிகழாமல் நிச்சயம் கவனமாக இருப்போம்... வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு படிப்பினைதானே என்ற நம்பிக்கையுடன்... உடல் நலமடைய வேண்டுகிறேன்!

  த.ம.10.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கு நேர்ந்த விபத்தை விடவா நண்பரெ! தங்களுக்கு னேர்ந்தது தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போலத்தானே. ஆனால் இன்னும் நீங்கள் அதிலிருந்து முழுவதும் மீளவில்லையே நண்பரே! பிரார்த்தனைகள் உண்டு..

   இது மிக மிகச் சிறிய விபத்துதான் என் தவறுதான். அன்று போக வேண்டிய சூழல் வந்து விட்டது. நீங்கள் புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே!

   மிக்க நன்றி நண்பரே தங்களின் அன்பிற்கும் அக்கறைக்கும். இனி மிக கவனமுடன் ஓட்டுவேன். இது எச்சரிக்கை எனக்கு...

   நீக்கு
  2. அன்புள்ள அய்யா,

   இது மிக மிகச் சிறிய விபத்து அன்று. தங்களின் வண்டி இடதுபுற பின் பக்கம் பார்க்கும் கண்ணாடி, கண்டெய்னரின் இடது ஓரத்தில் தட்டியதால் இத்தோடு போனது. கண்டெய்னரில் தங்கள் வண்டி பின்புறமாக மோதி இருந்தால் பாதிப்பு அதிகமாக இருந்திருக்கும். நல்ல வேளை...!

   விபத்து நடந்ததற்குப் பிறகுதான் இவ்வாறு சென்றிருக்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றுகிறது. சிறிய தவறு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். நான் இன்னும் ஒரு கையால்தான் தட்டச்சு செய்ய முடிகிறது. இதுவே பழகிவிட்டது.

   நான்கூட ஒரு முறை நண்பரிடம் மாருதி 800 இரவலாகப் பெற்று... ஒரு வாரகாலத்திற்கு தேவைப்பட்டது என்பதற்காகத் திருச்சியிலிருந்து மணப்பாறைக்குக் காரை தனியாக ஓட்டிக்கொண்டு வருகிறேன்... நீண்ட தூரமும் இல்லை... 40 கி.மீ. தொலைவுதான்... மதியவேளை...உண்டமயக்கம் உறக்க வர.. லேசாக கண்கள் மூட முயற்சிக்க... சைடு தடுப்புச் சுவருக்கு கார் செல்ல...சுதாரித்துக் கொண்டு... ‘கார் ஓட்டிக் கொண்டு இருக்கிறோம்... கவனமாகச் செல்‘ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு வந்து சேர்ந்தேன்.

   ‘இதயங்கள் சங்கமம்’ நான் எழுதி இயக்கி கலைஞராக நடித்த நாடகம் பள்ளியிலே இரவு முழுக்க தங்கி ஒலிப்பதிவு செய்து... அடுத்த நாள் பள்ளியில் வேலை செய்து... அன்றைய இரவு 11 மணிக்கு மேல் பேருந்தில் மணவைக்கு வீட்டிற்கு வர திண்டுக்கல் வண்டியில் அமர்ந்தேன். அமர்ந்தவுடன் அயர்ந்து தூங்கிவிட்டேன். கண்டக்டர் என்னைத் தட்டி எழுப்பி‘எங்கே போகனும்?’ என்று கேட்க ‘ மணப்பாறை’ என்றேன். அவர் ஒரு மாதரி விழித்தார்... நான்தான் வண்டி மாறி ஏறிவிட்டோமோ? என்று சற்று கலக்கம் அடைந்தேன். வண்டி ‘திண்டுக்கல்
   வண்டி‘ என்றார். வண்டி மாறி ஏறவில்லை என்று எண்ணி நிம்மதி அடைந்தேன். ‘சார்... வண்டி மணப்பாறை தாண்டி போயிட்டு இருக்கிறது என்றார். ’அடுத்த ஸ்டாப்பில் இறங்கிக் கொள்கிறேன் என்றேன். ‘ இரவு நேரத்தில் இங்கெல்லாம் வண்டி நிற்காது... வையம்பட்டியில் இறக்கி விடுகிறேன்’ என்று இறக்கி விட்டுச் சென்றார். ‘டிக்கெட் எடுத்தமா?’ என்று பாக்கெட்டைப் பார்த்தால்... டிக்கெட் இல்லை. அதன் பிறகு அங்கிருந்து ஒரு பேருந்தில் வீடு வந்து சேர்ந்தேன். இரவு மணி 1.00.

   நீக்கு
 21. வேகம் சில நேரத்தில் வேதனையைத்தருகின்றது.கடவுளுக்கு மிகவும் நன்றி சொல்வோம் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் தனிமரம் நேசன் இது ஒருஎச்சரிக்கை மணி..இனி கவனமுடன் இருப்பேன் மிக்க நன்றி நண்பரெ!

   நீக்கு
 22. கவனமாக இருங்கள். முன்னெச்செரிக்கையும் நிதானமும் கைகொடுக்கும். இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கும் அன்பிற்கும். இனி கண்டிப்பாக கவனமுடன் இருப்பேன்....என் தவறுதான் ஐயா...

   நீக்கு
 23. என்ன சகோ இது இப்போ நலம் தானே ?எம் சகோவைக் காப்பாற்றிய ஆண்டவனுக்கு பலநூறு நன்றிகள் !
  பதறாத காரியம் சிதறாது என்பார்கள். நாம் நிதானமாக எந்தக் கருமத்தையும் செய்யவேண்டும் என்று நினைப்பவள் நான். அப்படித் தான் செய்தும் வருகிறேன். கடைசி நிமிடம் வரை நான் எதையும் வைத்துக் கொள்வது இல்லை நேரத்தோடேயே செய்து நிதானமாக வீட்டை விட்டு இறங்குவேன். காரினுள் ஏறினால் நான் வீடு வேலை பிள்ளைகள் எல்லாம் மறந்து விடுவேன் எந்த டென்சனுக்கும் இடம் கொடுக்க மாட்டேன். நிதானமாகவே வண்டியை ஓட்டுவேன். ஸ்பீட் லிமிட்டை ஒருபோதும் தாண்ட மாட்டேன்.
  இம்மியளவும் கூடிக் குறையாது. ஆனால் மகளோட கல்யாண வேலைகளுக்கிடையில் ஓடி ஓடி ரொம்பவே களைத்திருந்தோம். வெளிவேலைகள் நிறைய இருந்தமையால் பெரும் பாலான நேரங்கள் சாலையிலேயே தான் கழிந்தன. அன்றும் அப்படித் தான் நாள் முழுவதும் சுற்றிக் கொண்டிருந்தோம். அன்றைய தினம் என் கணவர் தான் வண்டியை ஓட்டினார். லேசாக மழையும் தூறிக் கொண்டிருந்தது. ட்ராபிக் ஜாம் என்பதால் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தோம். என் மகள் பின்பக்கம் உட்கார்ந்திருந்தார். திடீரென்று ஒரு பெரிய சத்தம். திடுக்கிட்டுப் பார்த்தால் எமது ஜீப் முன்னுக்கு நின்ற இன்னுமொரு ஜீப்பை முட்டியிருந்தது. எப்போதும் கவனம் கவனம் என்று சொல்லிக் கொண்டு இருப்பேன். ஆனால் அன்று ஒரு செக்கன் தான் இருவருமே கண்னை மூடி விட்டிருந்தோம். முன்னும் பின்னுமாக நின்றிருந்த வண்டி என்றாலும், அவர் வாகனத்தில் இருந்த வீலில் மோதியதால் நமக்கு இல்லை இல்லை நம் வண்டிக்கு பலத்த காயம் முன் பக்கம் முழுவதும் சேதமடைந்திருந்தது. எவ்வளவு கவனமாக இருந்தாலும் காலம் பிழைக்கும் போது இப்படி நடந்து விடுகிறது. தூங்கும் சந்தர்ப்பங்களும் இப்படி அமைந்து விடுகிறது. களைப்போடு ஒரு நாளும் பயணங்களை மேற்கொள்ளதீர்கள் சகோ இனி ஒரு போதும்.பல நேரங்களில் ஆண்டவன் தன்னை உணர்த்துவதற்காக மட்டும் அல்ல இச்சம்பவங்கள் மேலும் பேராபத்துக்கள் நேராமல் தடுப்பதற்க்காகவும் தரப்படும் முன்னேச்சரிக்கையும் தான் என்பதை மறவாதீர்கள் சகோ ! கடவுள் ஒருபோதும் நேரில் வருவது இல்லையே மனித வடிவில் தான் எப்போதும் நம்மைக் காக்க வருகிறான். இதை பல சந்தர்ப்பங்களில் நான் உணர்ந்திருக்கிறேன். இது எல்லோருக்கும் ஒரு பாடமாக அமையும் என்று நம்புகிறேன். சீக்கிரம் நலமடைய வேண்டுகிறேன் ! அட திருவிழாவிற்கும் போகணும் இல்ல ம்..ம் அதெல்லாம் சீக்கிரம் மாறிடும் ok வா .....ஹா ஹா ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் நலம் அடைந்துவிட்டேன் சகோதரி இனியா. தங்களின் அன்பு கண்டு மெய் சிலிர்த்துவிட்டேன். என் தவறுதான்....இனி அப்படி அரைத் தூக்கத்தில் ஓட்ட மாட்டேன்...

   //.பல நேரங்களில் ஆண்டவன் தன்னை உணர்த்துவதற்காக மட்டும் அல்ல இச்சம்பவங்கள் மேலும் பேராபத்துக்கள் நேராமல் தடுப்பதற்க்காகவும் தரப்படும் முன்னேச்சரிக்கையும் தான் என்பதை மறவாதீர்கள் // மிக மிக சத்தியமான வார்த்தைகள். னான் நலம்தான்.

   நல்ல வேளை உங்கள் யாருக்கும் எதுவும் ஆகாமல் தப்பித்தீர்கள். அதுவும் தங்கள் மகள் மணப்பெண்ணாக இருக்க வேண்டிய தருணத்தில்.... உங்களுக்கும் இனி னீங்கள் சொல்ல்யது போல் நடக்காது. பிரார்த்தனைகளுடன் அன்புடன்.....

   மிக்க நன்றி சகோதரி...

   நீக்கு
 24. பரபரப்பு இல்லையென்றால் பதபதப்புக்கு அவசியமில்லை.என்று . நண்பர் ஒருவர் எனக்குச்சொன்னார்........அதேதான்..தங்களுக்கும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாக ஏற்றுக் கொள்கின்றேன் நண்பரே! மிக்க நன்றி !

   நீக்கு
 25. சகோ துளசி & கீதா,

  டிரைவரை நம்பாமல் இறைவனை நம்பும் கதைதான். பதிவிலிருந்து இது தொடர்கதையாக இருப்பதுபோல் தெரிகிற‌து. இனியும் இது தொடர வேண்டாமே. தகுந்த ஓய்வுடன், நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே வண்டியைத் தொடுங்க ..... ஏகப்பட்ட கர்ர்ர்ர்ர்ருடன் சித்ரா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடராது சகோதரி சித்ரா.....உங்கள் கோபம் நியாயமானதே....தங்களின் அக்கரைக்கும், அன்பிற்கும் மிக்க நன்றி!

   நீக்கு
 26. அன்றொரு நாள்
  "ஓட்டுனர் தூங்கினால்
  எல்லோரும் சாவோமே!
  பயணிகள் தூங்கினால்
  எல்லோரும் நலமே!" என
  பேருந்திலே படித்தேன்!
  இன்றைய நாள்
  தங்கள் தளத்தைப் படித்ததும்
  இருருளி ஓட்டுவோரும் தூங்கினால்
  இருருளி உடன் ஆள்களும் சாவு தான்
  என்றறிகிறேன் - ஆயினும்
  கடவுளும் தலைக்காப்பு அணிகலனும்
  எவரையும் காப்பாற்றும் தான்
  ஆனால் - அது
  ஓட்டுவோரின் வேக எல்லையைப் பொறுத்தே!

  பதிலளிநீக்கு
 27. உங்கள் மீது கடும் கோபம்தான் எனக்கு
  வெகு சிலருக்கு இருசக்கர வாகனம் ஓட்டும்பொழுது தூக்கம் வரும்
  எனது அறந்தை நண்பர் ஒருவர் இதபோல நிகழ்வதைத் தவிர்க்க புதுகை பேருந்து நிலையத்திற்குள் புகுந்து அகப்படும் யாரவது ஒருவரை இலவசமாகவே அறந்தை அழைத்துச் செல்வார்.

  நூற்றி என்பது கி.மீ என்பது சலிப்பூட்டும் பைகிங் அனுபவம். சலிப்பு களைப்பைத் தூண்ட தூக்கம் நிகழ்கிறது...

  எந்த சாமி புண்ணியமோ நீங்கள் பிழைத்தது..
  எல்லோரும் எதோ ஒரு தருணத்தில் எடுக்கும் அவசர முடிவுகளைத் தான் நீங்களும் எடுத்துள்ளீர்...

  இனி தவிர்க்கவும்
  இரு சக்கர வாகனம் என்றாலும் ஓட்டுனரை அமர்திக்கொள்ளவும்
  பிரார்த்தனைகள் தோழர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கஸ்தூரி! உங்கள் கோபம் நியாயமானதே ! அன்பின் வெளிப்பாடல்லவா...ஆம் அன்று எனக்குப் போக வேண்டிய சூழல்...இனி தவிர்த்துவிடுவேன் தோழரே! மிக்க மிக்க நன்றி!

   நீக்கு