படம் கூகுளிலிருந்து...
வலைப்பதிவ நண்பர்களே, சகோதரிகளே! எல்லோருக்கும் எங்கள் வணக்கம். வலைப்பதிவர் விழா 11-10-2015, புதுக்கோட்டைல. இன்னும் ஒரு மாதம் தான் இல்லையா! என்ன எல்லோரும் வலைப்பதிவர் விழாவுக்குத் தயாராகி விட்டீர்களா! தயாராகி இருப்பீர்கள். சொல்லவே வேண்டாம்!! சரி, தயாரானால் போதுமா? வருகைப் படிவத்தில் தங்கள் வருகை குறித்துச் சொல்லி விட்டீர்களா? பதியவில்லை என்றால் பதிந்து விடுங்களேன் தயவாய்!
மட்டுமல்ல உங்க எல்லோருக்கும் தெரிஞ்சுருக்கும், வலைப்பதிவர் கையேடு தயாராகிக் கொண்டிருப்பது பற்றி. அதில் நம்ம வலைப்பதிவர்கள் பெயர்கள், விவரங்கள், வலைத்தளம் பற்றி எல்லாம் வரும். உங்களுக்கு எப்படி உங்கள் தொழில் சார்ந்த கையேடு, தொலைபேசி குறிப்பேடு, உதவியாக இருக்குமோ, உங்கள் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் குறித்து அறிய ஆவலாக இருக்குமோ அது போல இந்தக் கையேடும் நம் பிற வலை அன்பர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள, நட்புறவு கொள்ள உதவியாக இருக்கும். னாம் எல்லோரும் ஒருங்கிணைய இது உதவியாக இருக்கும். நட்புறவு கொள்ள ஒரு பாலமாக இருக்கும். கையேட்டில் வரவேண்டிய உங்கள் விவரங்கள்
உங்கள்
- பெயர்
- வயது
- வலைத்தளத்தின் பெயர்
- வலைத்தளத்தின் முகவரி
- புகைப்படம் அல்லது உங்கள் வலைத்தளத்தின் லோகோ இணைக்கவும்
- மின் அஞ்சல் முகவரி
- தொலை/அலை பேசி எண்கள் - நீங்கள் விரும்பினால்
- சமூகவலைத்தள முகவரி நீங்கள் விரும்பினால்
- நீங்கள் நூல்கள், குறும்படங்கள் வெளியிட்டிருந்தால் அவை பற்றிய தகவல்கள்
- நீங்கள் பெற்ற விருதுகள்
- பிற தகவல்கள் முக்கியமானவை, பயன்படும் என்றால், நீங்கள் விரும்பினால் அவற்றையும் பதியலாம். பதிவதற்கு என்ன செய்யணும் என்றால்
இதோ இருக்குப் பாருங்க இந்த வலைத்தளத்துல, அதாங்க டெக்னிகல் பிரச்சனையா கூப்பிடுங்க டிடி அப்படின்ற "டிமான்ட் ட்ராஃப்ட்" டிடியேதான் அவரது வலைத்தளத்தில் வருகைப் படிவத்தில் போட்டுருங்க உங்க என்ட்ரியை.
வருகைப் படிவத்துல ஒருவேளை குறிப்பிடாம விட்டுட்டீங்கனா பரவாயில்லை. நம்ம புதுக்கோட்டை விழாக்குழுவினர் ஆரம்பித்துள்ள மின் அஞ்சலுக்குத் தட்டி விடுங்க உங்க விவரங்களைக் குறித்து. இதோ இருக்கு பாருங்க அந்த மின் அஞ்சல்.
ஹாங்க் ஒண்ணு மறந்துட்டோமே....தேதி 20-09-2015 க்குள்ள அனுப்பிடுங்க அப்பதான் கையேடுல வரதுக்கும் அச்சாவதற்கும் உபயோகமாக இருக்கும்.
ஹாங்க் ஒண்ணு மறந்துட்டோமே....தேதி 20-09-2015 க்குள்ள அனுப்பிடுங்க அப்பதான் கையேடுல வரதுக்கும் அச்சாவதற்கும் உபயோகமாக இருக்கும்.
முந்தைய தினம் அதாவது, 10-10-2015 அன்றே வருபவர்களுக்கு, மண்டபத்தில் தங்குவதற்கு தலையணை, போர்வை ஏற்பாடு செய்யப்படுகின்றது. மறுநாள் காலை குளிப்பதற்கும் அங்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது. தனியாக அறைகள் தேவைப்படுமெனில், அருகிலுள்ள விடுதிகளில் ஏற்பாடு செய்ய விழாக்குழுவினர் உதவுவார்கள். அறைக்கான செலவு அவரவர் செலவு. அதற்கான விவரங்களை, அதாவது எத்தனை பேர், வரும் நேரம் குறித்து முன்னதாகவே இந்த மின் அஞ்சலுக்குத் தெரிவித்து விட்டால், குழுவினருக்கு ஏற்பாடு செய்ய உதவியாக இருக்கும்.
மேலும் எந்த சந்தேகங்களுக்கும், விளக்கங்களுக்கும் மேற் சொன்ன மின் அஞ்சல் வழியாகத் தொடர்பு கொண்டால், விழாக் குழுவினர் உங்களுக்கு விரைந்து பதில் அளித்து உதவிட, உதவியாக இருக்கும்.
அவ்வப்போது இந்த விழாவிற்கான வலைத்தளத்தைப் பார்வையிடவும். இதில் விழாவைக் குறித்த அனைத்து தகவல்களும் உடனுக்குடன் பரிமாறப்படுகின்றது
சரி என்ன நண்பர்களே, சகோதரிகளே, தங்கள் வருகையையும், தங்கள் விவரங்களையும் பதிந்து விட்டீர்கள்தானே!! பதிந்துவிடுங்கள்!
இன்னும் சில தகவல்களுக்கு எங்கள் முந்தைய பதிவுகளையும் பாருங்கள். மேற் சொன்ன விழாவிற்கான வலைத்தளத்தையும் பாருங்கள்...என்று அன்புடன் வேண்டுகின்றோம்.
மிக்க நன்றி.
innum 12 nadkalthaan irukkirathu valaipathivarkal kaiyettil thakavakal samarpikka kadaisi naalukku.
பதிலளிநீக்குpala pathivarkal vivaranangal samarpikkanum.
nichaiyam ungalin intha pathivu oru ninaivuttalaaka irukkum. (enakkum-serthu).
nandri madam.
மிக்க நன்றி மகேஷ்! கருத்திற்கு..
நீக்குபுதுக்கோட்டைக்கான உங்களது பதிவு நண்பர்களுக்கு மிக உதவியாக இருப்பதோடு, நினைவூட்டவும் உதவும். நன்றி.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா தங்கள் கருத்திற்கு!
நீக்குகையேட்டுக்கான விவரங்களை அனுப்பி விட்டதாகத்தான் கேஜிஜி சொல்கிறார். பார்ப்போம்.
பதிலளிநீக்குhttp://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_5.html உங்கள் தளம் விவரங்கள் அனுப்பிய பட்டியலில் உள்ளது ஸ்ரீராம். இந்தச் சுட்டியில் இருக்கின்றது....
நீக்குமிக்க நன்றி!
இதைத்தான் வலைப்பதிவர் குடும்பம் னு சொல்றது. புதுக்கோட்டை சார்பாக “வலைப்பதிவர் கையேடு-2015” குறித்து, அருமையானதொரு தனிப் பதிவை இட்டுள்ள நீங்களும் விழாக்குழுவே தான்... அதனால் நன்றியெல்லாம் சொல்லப்போவதில்லை. முதல்நாளே வந்துவிடுங்கள் அன்பின் அழைப்போடு காத்திருக்கிறோம். வேறென்ன சொல்ல? மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாய்..புதுக்கோட்டை நண்பர்கள் சார்பாக..நா.மு.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா! தங்களின் கருத்திற்கு. நன்றி எல்லாம் எதற்கு ஐயா....நமது விழாதானே!
நீக்குஒவ்வொருவரின் ஆர்வமும் அக்கறையும் மகிழ்ச்சி அளிப்பதாய் உள்ளது. நன்றி. நீங்க வருவீங்க தானே?
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பர்ஜோதிஜி! ஆம்! இருவருமே வருகின்றோம். துளசி அவரது குடும்பத்துடன்...
நீக்குநன்றிங்க...
பதிலளிநீக்குநன்றிங்க டிடி!!!
நீக்குமிகத்தெளிவான பகிர்வுங்க. வலைப்பதிவர் கையேடு குறித்த சந்தேகம் இந்தப்பதிவைப்படிக்கும் எவருக்கும் வராது என்றே நினைக்கிறேன். ஆங்காங்கே காணும் நண்பர்களின் பகிர்வே விழாவிற்கு செல்லும் ஆவலை உண்டாக்கும் அனைவரிடமும்.
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோதரி சசிகலா..தங்கள் கருத்திற்கு! க்ரேஸ் அவர்களும் அருமையா கொடுத்துருக்காங்க...
நீக்குவர முடியாத சூழ்நிலையை மாற்றிக் கொண்டு வருகிறேன்! கலந்துகொள்வதற்கான முயற்சிகளை ஆரம்பித்துவிட்டேன்! விரைவில் பதிகிறேன்! நன்றி!
பதிலளிநீக்குஹை ! நீங்களும் வருகின்றீர்களா மிக்க மகிழ்ச்சி சுரேஷ்! சந்திப்போம்...
நீக்கும்ம் ஸூப்பர் பதிவு உங்கள் பங்குக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குதமிழ் மணம் 66
மிக்க நன்றி கில்லர்ஜி! வாழ்த்திற்கு....அது என்ன 66?!!1
நீக்குகையேடுக்கான தகவல்களை அனுப்பி விட்டேன் நன்றி
பதிலளிநீக்குஉங்கள் தளம் பெயர் அந்தப் பட்டியலில் இருக்கின்றது சார்! http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_5.html
நீக்குஅப்படிப் போடுங்க! விழா சம்பந்தப்பட்ட அனைத்துக் தகவலையும் அழகாத் தொகுத்துக் கொடுத்திட்டீங்களே :-)
பதிலளிநீக்குகையேட்டிற்கு என்னைப் பற்றியக் குறிப்புகள் அனுப்பிவிட்டேன்
அட உங்களை விடவா சகோதரி!!? உங்கள் பெயர் அந்தப் பட்டியலில் இருக்கின்றது...சகோதரி க்ரேஸ்! மிக்க நன்றி!
நீக்குகொடுத்தாச்சு கொடுத்தாச்சு...
பதிலளிநீக்குநான் கொடுக்கிறதுக்கு ஒண்ணுமே இல்லையே:)
பதிலளிநீக்குகீதா,
பதிலளிநீக்குஒரே ஒரு சந்தேகம் மட்டுமே. என்னன்னு கண்டு பிடிச்சிருப்பீங்க ! விவரங்களில் உள்ள வயது போட்டேதான் ஆகணுமா :) (ஹும்ம், 'நீங்கள் விரும்பினால்' என்று போட்டிருக்கலாம்)
தெளிவான தகவல், அருமை.
தகவலை மிக அழகாகத் தந்துள்ளீர்கள் சகோதரா ! வாழ்த்துக்கள் எமது விவரத்தையும் நாம் கொடுத்து விடுவோம் .
பதிலளிநீக்குதூர தேசத்தில் இருந்து விழாவுக்கு வாழ்த்தினைச்சொல்ல மட்டும் தான் முடியும்! மனசு எல்லாம் விழாவுக்கு போக முடியவில்லையே என்ற வருத்தத்துடன்!
பதிலளிநீக்குஅன்பான தகவலுக்கு நன்றி. நான் இம்மாத தொடக்கத்திலேயே அனுப்பி விட்டேன்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குபதிவு செய்துவிட்டேன்
விழாவில் சந்திப்போம்
வாழ்த்துக்களுடன்...
அந்நாளுக்காகக் காத்தருக்கின்றேன் நண்பரே
பதிலளிநீக்குதங்களைச் சந்திக்க
தம +1
வணக்கம்...மிக்க நன்றி ....வலைப்பதிவர் விழா குறித்த உங்கள் பதிவு அருமை ..உங்களின் வழிகாட்டலுடன் சிறப்பாக விழா நடக்கும் என நம்புகின்றோம் ....விழாக்குழு சார்பாக உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்....
பதிலளிநீக்கு