ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

வலைப்பதிவர் விழா: வலைப்பதிவர்கள் எல்லோரும் இங்கே கொஞ்சம் பாருங்க!

வலைப்பதிவர்களுக்கு : விழாவைப் பற்றிய தகவல்கள் http://bloggersmeet2015.blogspot.com/

எனும் தளத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்றது என்று இங்கு தெரிவித்துக் கொள்கின்றோம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும் தாங்கள் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கேள்விகள் இருந்தால் 

இந்த மின்னஞ்சல் வாயிலாக விழாக் குழுவினரைத் தொடர்பு கொள்ளலாம்.

நல்ல கவிதைகளை அனுப்புக...

  வலைப்பதிவர் திருவிழாவில் முதன்முதலாக நடத்தவிருக்கும் கவிதை ஓவியக் கண்காட்சியில், நல்லநல்ல கவிதைகளைத் திரட்டி ஓவியமாக்க வேண்டும் என்னும் விழாக் குழுவினரின் ஆசையைச் செயற்படுத்தும் விதமாக ஏழு ஓவியர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்திருந்தனர். (அவ்வளவு பேரும் இளைஞர்கள் அதில் இருவர் நம் வலைப்பதிவர்கள்!) வந்து,கவிதைகளைத் தாருங்கள் நாங்கள் இப்போதே வேலையைத் தொடங்கி விடுகிறோம் என்றார்கள்...! 

 அவர்களைச் சமாதானப் படுத்தி, –தங்கை மைதிலி கஸ்தூரிரெங்கனும், கவி.வைகறையும் இதுவரை திரட்டி அனுப்பியிருந்த- சுமார் 20 கவிதைகளுடன் இன்னும் கவிதைகளைச் சேர்த்து விரைவில் தருவதாகக் கெஞ்சி அனுப்பினோம்! அந்த வேலை அப்படி நடக்கிறது...! 

 பதிவர்களும் நல்ல கவிதைகளை அனுப்பி உதவலாம். அந்தக்குழுவின் முடிவில் நல்ல கவிதைகள் ஓவியமாகும். ஒரு (கார்ட் போர்டு) அட்டையில் இந்தப்பக்கம் கவிதை அந்தப்பக்கம் ஓவியம் என்பதாக கவிதைகள் சிறியதாக இருத்தல் நலம். (ஒருவேளை கவிதை தேர்வாகாவிட்டால் சண்டைக்கு வரக்கூடாது, அது நம் விழாக்குழுவின் “கவிதை ஓவியக்கண்காட்சிக்குழுவின் முடிவு!)

“வலைப்பதிவர் கையேடு-2015” 

முக்கியத்துவம் தந்து விவரம் அனுப்புக...
சுமார் 300முதல் 400 வலைப்பதிவர் வரை விவரங்களைத் திரட்டி, அதை சுமார் 150முதல் 200 பக்கம் வரையிலான புத்தகமாக அச்சிட்டு, தமிழில் வலைப்பக்கம் எழுதிருவரும் அனைவரைப் பற்றியும் அனைவரும் அறியத் தரவேண்டும், அதிலும் விழாவுக்கு வரும் அனைவர்க்கும் சுமார் 150ரூ. மதிப்புள்ள அந்த நூலை இலவசமாகத் தரவேண்டும் என்று சுறுசுறுப்பாக வேலை நடக்கிறது... வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வலைப்பக்கத்தில் உள்ள “வலைப்பதிவர் வருகைப் பதிவுப் படிவம்“ யார் யாரெல்லாம் நிரப்பி அனுப்புகிறார்களோ, அவர்களுடைய விவரங்களைத் தொகுத்து வருகிறோம்... இதற்குத் தேவையான விவரங்களை பதிவர்கள் விரைவில் –வரும் 20-09-2015க்குள்- அனுப்பி உதவ வேண்டுகிறோம். 

விண்ணப்ப படிவம் நிரப்ப இதோ நம் டிடி வலைப்பக்கம் செல்க.  அதன் சுட்டி இதோ..

http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_3.html

வலைப்பதிவர் கையேடு (விளம்பர விவரம்)
1க்கு8 (டெம்மி) அளவு – 500 பிரதிகள்.
முன், பின் அட்டைகள் மட்டும் பலவண்ணம்.
மற்ற பக்கங்கள் ஒரே வண்ணம் -பலவண்ண விளம்பரம் தவிர. தோராயமாக விளம்பரம் 25பக்கம் உட்பட 150-175பக்கம்.  ஒவ்வொரு பக்கத்திலும் பெரும்பாலும் மூன்று வலைப்பதிவர் பற்றிய விவரம் வீதம் சுமார் 375முதல் 400 வலைப்பதிவர் பற்றிய விவரங்கள் அடங்கிய நூல்.பக்கம் விளம்பரத்தையொட்டி மாறலாம்

விழாவில் கலந்துகொள்வோர்க்கு இலவசமாகவும் மற்றவர்க்கு விற்பனை விலையாக ரூ.150 எனவும் முடிவெடுத்துள்ளோம். எனவே, இந்நூலை இணையத்தில் இப்போது வெளியிட இயலாது.

விளம்பர நிர்ணயம் பற்றி –
கடைசி வெளி அட்டை ரூ.10,000 (பலவண்ணம்) - ஏற்கப்பட்டது.

(இந்தக் கடைசி அட்டையை நம் அமெரிக்கத் தமிழ்வலைப்பதிவர் திரு விசு ஆவேசம் தனது புத்தகத்திற்காகக் கேட்டு முன்பதிவு செய்திருக்கிறார். அவருக்கு நன்றியும் வணக்கமும் மற்ற பக்கங்கள் மற்ற நம் பதிவர்கள் வழியே விரைவில் நிரம்பும் என நம்புகிறோம்)


உள் அட்டை முதல்பக்கம் ரூ.8,000 (பலவண்ணம்)

(இந்தப் பக்கத்தைத் தான் ஏற்றுக்கொள்வதாக “மூன்றாம் சுழி“ திரு அப்பாதுரை 05-09-2015 அன்று மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்)


உள் அட்டை கடைசிப்பக்கம் ரூ.7,000 (பலவண்ணம்)

உள்பக்க விளம்பர விகிதம் –
பலவண்ணம்–ரூ.3,000 
(மூன்றில் ஒருபங்கு எனில் தலா ரூ.1000)

ஒரேவண்ணம்–ரூ.1,500 
(மூன்றில் ஒருபங்கு எனில் தலா ரூ.500)

(நண்பர்கள் யார்வேண்டுமானாலும் விளம்பரம் பெற்றுத்தரலாம். அதற்கான உழைப்பூதியம் 20விழுக்காடு தரப்படும்)

இதில் வலைப்பதிவர் விவரங்கள் வெளியிடக் கட்டணமில்லை. அது தவிர வேறு –நூல்கள் முதலான வெளியீடுபற்றி - விளம்பரம் தரலாம்.

புதுக்கோட்டையின் தொன்மை வரலாறு, சிறப்புகள் பற்றிய செய்திகள் படங்கள் சேர்ப்பது, நூல்பக்கம் மற்றும் விளம்பர அளவைப் பொறுத்து அமையும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
முக்கிய விளக்கம் (1) : விழாவிற்கு வரும் அனைவர்க்கும் தரப்படவுள்ள தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” தயாரிப்பதற்கு அடிப்படைத் தகவல்கள் மேலே படிவத்திலுள்ள "கையேட்டில் வர வேண்டிய பிற குறிப்புகள்" என்பதிலிருந்தே எடுக்க வேண்டி இருப்பதால்,அதில் தங்களது புகைப்படத்தின் இணைப்பு அல்லது தளத்தின் லோகோ இணைப்பு,செல்பேசிஎண்(விரும்பினால்)வெளியிட்ட நூல்கள்பெற்ற விருதுகள்தயாரித்த குறும்படங்கள்சிறப்பான பதிவின் இணைப்பு(கள்) என... சுருக்கமாக : எவை எவை கையேட்டில் வந்தால் நல்லது என்கிற அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப அனைத்துச் சிறப்புகளையும் தொகுத்துத் தரலாம்... (இடம் கருதி, ஏற்றவற்றை வெளியிட விரும்புகிறது விழாக்குழு)
முக்கிய விளக்கம் (2)  : படிவத்தில் குறிப்பிட்டபடி முதல்நாளே வருவோர் தலையணை, போர்வையோடு இரவுத் தங்கவும், மறுநாள் காலை குளிக்கவும் மண்டபத்திலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும், தனியாக அறை தேவைப்படுவோர்க்கு -அவரவர் செலவில்- அருகிலுள்ள விடுதியில் ஏற்பாடு செய்ய, விழாக்குழுவினர் உதவி செய்வர். அதுபற்றிய தகவல்களை -எத்தனைபேர் எங்கிருந்து எந்தநேரம் வருகிறார்கள் எனும் தகவலை- முன்கூட்டியே மின்னஞ்சல் வழியே தகவல் தெரிவித்து விடுமாறு முதல்நாள் வருவோரை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 
முக்கிய விளக்கம் (3)  : இந்தப் படிவத்தை நிரப்பி அனுப்பிய பின்னர் ஒருவேளை கடைசிநேரச் சூழல் காரணமாக விழாவுக்கு வரஇயலாமல் போனாலும், “வலைப்பதிவர் கையேடு” வழியே ஏனைய பதிவர்களின் அறிமுகத்திற்கு இக்குறிப்புகள் உதவும். அதுபோலவே,இப்போது வெளிநாட்டில் இருக்கும் தமிழ்ப்பதிவர்கள் இவ்விழாவுக்கு வந்தால்  பெருமகிழ்ச்சியோடு -வரவேற்கிறோம். எனினும் வரமுடியாத நிலை இருக்கிறது என்று உறுதியாகத் தெரிந்தாலும்விழாவை வாழ்த்தி ஒரு கவிதையோ ஒரு 10-15வரியில் ஒரு வாழ்த்துரையோ அனுப்பினால் அதை நம் விழாவிற்கு வரும் அனைவரும் பார்க்கும்படியாக அறிவிப்பும் செய்து,அழகாக பெரிதாக எழுதி வைக்கவும் விழாக்குழு விரும்புகிறது. ஆனால், அவர்கள் அவசியம்வலைப்பதிவர் கையேடு -2015" க்கான குறிப்புகளை அனுப்பியிருக்க வேண்டும்.

ஏதேனும் சந்தேகங்கள், விவரங்கள், நூல் வெளியீடு, மற்றும் குறும்பட வெளியீடு பற்றிய அனைத்திற்கும் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி :- bloggersmeet2015@gmail.com

அப்புறம்... அப்புறமென்ன? நிதியாகவோ, விளம்பர உதவியாகவோ தருவதை அன்புடன் ஏற்போம்... அதுவும் முக்கியம்தானே? விளம்பரம் பற்றிய விவரங்களுக்கு இந்தப் பதிவைப் பார்க்க வேண்டுகிறோம்-
http://bloggersmeet2015.blogspot.in/2015/09/blog-post.html

நிதி மற்றும் விளம்பரம் அனுப்ப வேண்டிய வங்கி விவரங்களுக்கு 
இந்தப் பதிவைப் பார்க்கலாம் -
http://bloggersmeet2015.blogspot.in/p/blog-page_29.html 

இந்த வலைப்பக்கத்தையும்http://bloggersmeet2015.blogspot.com/
அவ்வப்போது பார்வையிடுங்கள். இந்த வலைப் பக்கம் இன்னும் அவ்வளவாக அறிமுகமாகவில்லை என்பதால் அறிமுகமான வலைப் பக்கங்களின் வழியாக தகவல்கள்.

மிக்க நன்றி.

பின் குறிப்பு :  இந்தத் தகவல்கள் தொகுத்த பெருமை அனைத்தும் புதுக்கோட்டை விழாக்குழுவினர் நண்பர்களுக்கே.  நாங்கள் விழாவிற்கான தளத்திலிருந்து நகல் எடுத்து இங்கு பகிர்ந்துள்ளோம், அவ்வளவே எல்லோரையும் அடையவேண்டும் என்பதால். உழைப்பு, பெருமை எல்லாமே விழாக் குழுவினருக்கே!!!

42 கருத்துகள்:

 1. விழா சிறக்க வாழ்த்துவோம்...
  அப்ப நாமளும் கவிதை எழுதலாமோ...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் குமார்! நீங்க எழுதுங்க! நிச்சயமாக உங்கள் கவிதை அங்கு ஓவியத்துடன் மிளிர வாய்ப்புண்டு!

   நீக்கு
  2. அது சரி....
   ஒரு ஹைக்கூ வேண்டுமானால் விட்டுப் பார்ப்போம்...

   நீக்கு
  3. நீங்கள் ஏற்கனவே எழுதியது உங்களுக்கு நல்ல தேர்வு என்று தோன்றினால் அனுப்பலாமே. ஹைக்கூ வும் அனுப்பலாம்...நாலைந்து அனுப்பிப் பாருங்கள்...தேர்வாக வாய்ப்புண்டு நிச்சயமாக நீங்கள் நன்றாக எழுதுவதால்...சமூகக் கருத்துள்ளதாகக் கூட ...ஏற்கனவே 20 கவிதைகள் திரட்டப்பட்டுள்ளதாக குழுவினர் சொல்லி இருப்பதால் ஒருவேளை உங்களது கவிதையும் இருக்குமோ...அது ரகசியமாகவும் இருக்கலாம்...நான் நாளை மைதிலியிடம் கேட்டுப் பார்க்கின்றேன் குமார்....

   கீதா

   நீக்கு
 2. என்னுடைய கவிதைகள் எடுபடுமா ?
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனுப்பிப் பாருங்களேன் ஜி! முயற்சி திருவினையாக்கும்...

   நீக்கு
  2. அனுப்பிட்டார்,
   தன்னானே னானே போடு தில்லேலே லேலோ! பாட்டுப் போட்டு
   அசத்திட்டார்! “கொலைகாரப் பதிவர்“னா சும்மாவா? நன்றி நன்றி

   நீக்கு
 3. நல்ல தகவல்கள். ஏற்கெனவே எழுதியுள்ள கவிதைகளைக் கூட அனுப்பலாமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனுப்பலாம் ஸ்ரீராம்! தேர்வானால் ஓவியங்களுடன் மிளிருமே!!! அனுப்புங்கள் மேலே சொல்லப்பட்ட மின் அஞ்சல் முகவரிக்கு!

   வாழ்த்துகள்!

   கீதா

   நீக்கு
 4. அருமையான தெளிவான பகிர்வு
  பதிவர் விழா சிறப்புற நிகழ
  வாழ்த்துகள்
  வாழ்த்தும் சிறுவிளம்பரமும் வழங்க
  விரைவில் முயற்சி செய்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக முயற்சி செய்யுங்கள்! மிக்க நன்றி நண்பர் ஜீவலிங்கம் யாழ்பாவாணன் !!

   நீக்கு
 5. அடடா...! அப்பாதுரை ஐயா முன்பதிவு செய்து விட்டாரா...? என் பதிவில் மாற்றம் செய்து விடுகிறேன்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டிடி நான் விழாவுக்காக திறக்கப்பட்டுள்ள வலைத்தலத்தில் இருந்துதான் எடுத்து இங்கு பதிவிட்டேன் டிடி...நன்றி டிடி...

   நீக்கு
 6. ஆகா
  அத்திருநாளை விரைவில் எதிர்பார்க்கிறேன்
  நன்றி நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
 7. அருமையாகத் தொகுத்துவிட்டீர்களே! கவிதை அனுப்ப முயற்சிக்கிறேன் . ஒவியமாகுதோ இல்லையோ விழாவிற்கு அனுப்ப ஆசை.
  நன்றி அண்ணா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோதரி! நாங்கள் எதுவுமே தொகுக்கவில்லை. விழாவிற்கான தளத்திலிருந்து எடுத்து இங்கு பதிவு செய்திருக்கின்றோம். அவ்வளவே.. இந்தத் தகவல்கள் தொகுத்த பெருமை அனைத்தும் விழாக் குழுவினரையே சேரும்.

   நீக்கு
 8. erkanave anaithu thakavalkalum therinthirunthalum
  mindum ingu ningal pakirnthu iruppathal theriyaathavarkal therinthukollum oru vaayppaaka irukkum.

  avvappothu thodarnthu vizavai patriya pathivukal varumpothu vizavai patriya ethirpaarppu naalukku naal athikarikka seykirathu.

  பதிலளிநீக்கு
 9. ஆகா!.. விழா பெரிய திருவிழாவாக இருக்கப்போகிறது!

  அனைத்து துறை ஆர்வலர்களையும் இணைத்துள்ளமை
  மிகச் சிறப்பு! உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

  த ம+1

  பதிலளிநீக்கு
 10. தங்களையும் ஈடுபடுத்திக்கொண்டு நண்பர்களுககு உதவும் வகையில் பகிர்ந்மைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. பயனுள்ள தொகுப்பு.பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா தங்கள் கருத்திற்கு..

   நீக்கு
 12. அருமையான தெளிவான..பதிவை பகிர்ந்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்கள்!!!

  பதிலளிநீக்கு
 13. நல்ல தொகுப்பு ,பாராட்டுக்கள். கையேட்டிற்கான விவரங்களை நான் அனுப்பி விட்டேன் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஜிஎம்பி சார் தங்களின் கருத்திற்கு....நாங்கள் தொகுக்கவில்லை சார் அப்படியே நகல் எடுத்து போட்டோம் சார், தொகுப்பு அடுத்த பதிவு..

   தாங்கள் தங்கள் விவரம் குறித்து அனுப்பியமைக்கு நன்றி

   நீக்கு
 14. பயன்மிக்க பகிர்வு நானும் என் தளத்தில் பகிர்கின்றேன் ! கவிதை அனுப்ப ஆசை ஆனால் பயமாக இருக்கு ஜம்பாவான்கள் கூட தனிமரமும் ஓரத்தில் நிற்க [[!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனுப்புங்கள் தனிமரம்...ஏன் தயக்கம்....ஓரத்தில் எல்லாம் நிற்க வேண்டாம்...நீங்கள் தனிமரம் அல்ல இத்தனை நண்பர்கள் இருப்பதால் தோப்பு! நீங்கள் அதில் தனியாகத் தெரிவீர்கள் உங்கள் படைப்புகளால்..அனுப்புங்கள்! மிக்க நன்றி! நீங்களும் பகிருங்கள்!

   நீக்கு
 15. விழா சிறப்பாக நடக்க வேண்டும் என்பதால் நான் கவிதை எதுவும் அனுப்புவதாக இல்லை :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹஹ்ஹ இது இது தான் பகவான் ஜி!!! அதனால மிக்க நன்றி போடவில்லை..போட்டால் நீங்கள் சொல்லுவீர்கள் அப்போ நான் கவிதை எழுத வேண்டானு சொல்றீங்களா அப்படினு....ஹஹஹஹஹ்

   நீக்கு
 16. விபரங்களை தொகுத்து அளித்தமைக்கு நன்றி ! விழா சிறக்க என் வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி இனியா சகோதரி தங்களின் வாழ்த்திற்கு! வர இயலவில்லை என்றால் ஒரு கவிதை எழுதி வாழ்த்தி அனுப்பிவிடுங்களேன் விழாவிற்கு!

   நீக்கு
 17. இத...இத...இதத்தான் எதிர்பார்த்தோம். நன்றி நன்றி நன்றி நண்பர்களே னு சொல்லக்கூட மனசில்ல... ஏன் னா இது எங்க விழா இல்ல...நம்ம விழா தானே? அருமையாக எடுத்துப் போட்டு, அழகழகான விளக்கங்கள் அருமை! இதையே அட்லாண்டாவி்லிருந்து தங்கை தேன்மதுரத் தமிழ் கிரேசும் செய்திருக்கிறார்- அவர் பாணியில்... நாம் வலைப்பதிவர் குடும்பம் என்பதை முன்மொழிந்து வழிமொழிந்திருக்கும் அன்பு நெகிழ வைக்கிறது துளசி கீதா இருவரும் தொடர்ந்து இப்பணியில் ஈடுபட வேண்டுகிறோம்..விழாக்குழுப் பக்கத்தில் பகிர்கிறோம். இன்னும் இன்னும் அந்தப் பக்கம் நிறையப் பேரைச் சென்றடையட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி முத்துநிலவன் ஐயா! என்ன ஐயா நம்ம விழா. நன்றி எல்லாம் எதற்கு...ஆமாம் க்ரேஸ் அவங்க போட்டதைப் பார்த்தோம் அருமை!
   இன்றும் ஒன்று நாங்கள் போட்டாயிற்று....

   மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 18. வணக்கம், தங்கள் தொகுப்பு அருமை. விழா சிறக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகேஸ்வரி சகோதரி தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி!

   நீக்கு