படம் இணையத்திலிருந்து
சென்ற பதிவிலிருந்து - (வெங்கட் ஜி அழைக்க, அவர் எங்கிருக்கின்றார் என்று அலைபேசிக் கொண்டே
மின் ஏணியில் சென்றால் அங்கே ஆறடியார்! அவர் முகத்தில் என்ன ஒரு மகிழ்ச்சி! எங்களை
மிகவும் ஆவலுடனும், மகிழ்வுடனும் வரவேற்று கம்பீரமாக நின்று கொண்டிருந்தார்! ) சென்ற பதிவின் தொடர்ச்சி....
வெப்கட் ஜி கேட் 2 ல் இருப்பதாகச் சொல்லவும் நாங்கள் மின் ஏணியில் எறிச் சென்றோம். தலைநகர் என்பதால் பெருநகர் ரயில் நிலையத்தில் எங்கு ஏறினாலும் ஒவ்வொரு முறையும், நமது பொருட்கள் ஸ்கானரில் அனுப்பப்பட்டு, ஆண்கள், பெண்கள் என்று தனித்தனியாக ஸ்கான் செய்யப்பட்ட பின்புதான் நாம் நமது பொருட்களை எடுத்துக் கொண்டு ரயில் ஏறவேண்டிய மேடைக்குச் செல்ல முடியும். எந்தத் தடம் எப்படிச் செல்ல வேண்டும் என்பதற்கான குறியீடுகள், பெயர்ப்பலகைகள் என்று எல்லாமே மிகத் தெளிவாக இருப்பதால் எல்லோருக்குமே எளிதாக உள்ளது.
ஆறடியாரை நான் நிமிர்ந்து பார்த்ததுமே, பளிச்சென்றது அவரது உயரம். அவருடைய உடல் மொழியும், பேசிக் கொண்டே நடந்தாலும், சுற்றுப் புறத்தையும், நிகழ்வுகளையும் கண் வழியே உள் வாங்குதலும், அவரது பயணக் கட்டுரைகள் எப்படி இவ்வளவு அழகாக, சுவாரஸ்யமாகத் தெளிவாக வருகின்றன என்பதற்கானக் காரணத்தைத் தெளிவாக்கின! மட்டுமல்ல, அவர் பயணம் செய்வதையும், புகைப்படம் எடுப்பதையும் மிகவும் விரும்பிச் செய்கின்றார் என்பதையும்!
வெங்கட் ஜி 6.1 என்றால் சகோதரி ஆதியும் (வெங்கட்ஜியின் மனைவி) 5.10
ஆம். அப்பாவும், அம்மாவும் இத்தனை அடிகள் உயர்ந்தால், குட்டிப் பெண் ரோஷினி பல
அடிகள் உயராமல் இருப்பாரா?! காரணம் புரிந்தது. இரண்டு அர்த்தங்கள் கொள்ளலாம், அவர்களின்
உயரம் வலை உலகிலும்தான். ரோஷினியின் உயரத்தை வைத்து 7 ஆம் வகுப்போ என்றதற்கு, இல்லை 5 ஆம் வகுப்பு என்றார் வெங்கட் ஜி! ரோஷிணிக் குட்டி நன்றாகப் படம் வரைகிறார் என்றேன், அவருக்கு அதில் மிகவும் ஆர்வம் இருப்பதாகத் தெரிவித்தார்.
வெங்கட் ஜி என்னிடம், மகனுக்கு ஏதோ வாங்க
வேண்டும் என்று சொன்னீர்களே என்ன வாங்க வேண்டும்? என்று கேட்க, மகன் வாங்க வேண்டிய
மருந்து (நான்கு கால்களுக்குப் போட வேண்டிய ஊசி மருந்து...)அதை அவன்
குர்காவ்னிலேயே கிடைத்ததால் வாங்கி விட்டான். எனவே எனக்கு நடைப்பயிற்சிக்கான ஷூ, வாங்க
வேண்டும் என்று சொல்ல, அவர் சென்ட்ரல் செக்ரட்டேரியட் நிறுத்தத்தில்லிருந்து இரண்டாவது
நிறுத்தமாகிய ராஜீவ் சௌக் நிறுத்தத்தில்
இறங்கிச் செல்லலாம் என, நாங்கள் மீண்டும் பெருநகர் ரயில் வண்டியில் ஏற, எங்கள்
பொருட்களை ஸ்கானரில் போட்டுச் சோதித்த பின் ரயிலில் ஏறி இரண்டாவது நிறுத்தமாகிய
ராஜீவ் சௌக் நிறுத்தத்தில் இறங்கினோம்.
மகனும் நண்பர் வெங்கட்ஜி யும் ஹோட்டல் சரவணபவனில்
அங்குதான் தில்லி நகரின் இதயப் பகுதியான
கன்னாட் ப்ளேஸ் இருப்பதால் வெங்கட் ஜி அங்கு இருக்கும் பாலிகா பஜார் செல்ல
வேண்டுமா எனவும், நாங்கள் முன்பே எல்லாம் பார்த்திருப்பதால் வேண்டாம் எனவும்
கன்னாட் ப்ளேசில் இருக்கும் நம்மூர் ஹோட்டல் சரவணபவனில் காஃபி அருந்தலாம் என
அழைத்துச் சென்றார். வேறு ஏதாவது சாப்பிடுகின்றீர்களா என வெங்கட் ஜி எங்களை அன்புடன்
உபசரிக்க, நாங்கள் வேண்டாம் எனவும், காஃபி மட்டும் அருந்தினோம். இந்த சரவண பவனில் மதியம் உணவு சாப்பிட வேண்டும்
என்றால் பந்திக்கு முந்துவது போல் செல்ல வேண்டும் இல்லை என்றால் வெளியில்
காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும் அளவிற்கு கூட்டம் நிரம்பி வழியும்.
காஃபி அருந்தியபின், எங்களை, ஷூ வாங்க, கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருக்கும் போது நண்பர் துளசி வெங்கட்ஜியிடம் பேச
விரும்பியதால், நான் துளசியை அழைக்க வெங்கட்ஜி துளசியிடம் பேசினார். ஷூ வாங்கிய
பிறகு, வெங்கட் ஜி, கன்னாட் ப்ளேசில் இருக்கும் சென்ட்ரல் பூங்காவிற்குச் சென்று
அங்கு அமர்ந்து பேசலாம் எனவும் அங்கு சென்றால், அன்று திங்கட் கிழமை ஆதலால் பூங்கா
விடுமுறை. இந்த சென்ட்ரல் பூங்காவில் இருந்த நம் தேசியக் கொடியை, இந்தியாவிலேயே
மிகவும் உயரமான, பெரிய தேசியக் கொடி என்று வெங்கட் ஜி சுட்டிக் காட்டினார். சென்ற
முதல் பதிவில் இருந்த தேசியக் கொடிதான் அது. இந்தத் தகவல் அங்கு காப்பி பேஸ்ட்
செய்யும் போது ப்ளாகர் மிகவும் தொல்லை பண்ணியதால் விடுபட்டுவிட்டது. நானும்
கவனிக்கத் தவறிவிட்டேன்.
இந்தப் பெரிய தேசியக் கொடி, Monumental National Flag, 15 இடங்களில் இருப்பதாகவும் சொன்னார். ஃபரிதாபாதிலும்
இது போன்று ஒன்று இருக்கின்றது. இந்தக் கொடியின் அகலம் 60 அடி. நீளம் 90 அடி.
பறக்கவிடப்பட்டுள்ள கம்பத்தின் உயரம் 207 அடி.
கொடியின் எடை 37 கிலோகிராம். Flag Foundation of India வின், தலைவரான நவீன் ஜிந்தால் என்பவராலும், புதுதில்லி முனிசிபல் கவுன்சிலாலும்
நிறுவப்பட்டிருக்கிறது. மார்ச் 7, 2014 ஆம் வருடம் இந்தக் கொடி
ஏற்றப்பட்டிருக்கிறது. (நன்றி விக்கி)
நம் சகோதரி பதிவர் கோமதி அரசு அவர்களின் மகள் – அவரும் பதிவர் – தில்லியில்தான் இருக்கிறார் என்றும் சொன்னார். அடுத்த முறை செல்லும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அவரையும் சந்திக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். தில்லியிலும் நிறைய பதிவர்கள் இருந்தார்கள் என்றும் முன்பெல்லாம் சந்திப்புகள் நிகழ்ந்ததுண்டு என்றும் சொன்னார். ஆனால், இப்போது வெங்கட்ஜி மட்டுமே தில்லி பதிவர் என்று நினைக்கின்றேன்.
சென்ட்ரல் பார்க்கிற்கு எதிரே இருந்த
மற்றொரு பார்க்கிற்குள் சென்று அமர்ந்தோம். வெங்கட் ஜி மிகவும் சுவாரஸ்யமான
மனிதர். அவருடன் பேசினால் பல தகவல்களை அறிந்து கொள்ளலாம். பயணங்கள் பல
மேற்கொள்வதால். நேரம் போவதே தெரியாது. தில்லியைப் பற்றியும், அவரது ஒரு சில
பயணங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். சாப்பாடு என்பதற்கு மிகவும்
முக்கியத்துவம் கொடுத்தால் நாம் பயணங்கள் மேற்கொள்வது என்பது மிகவும் கடினம். சைவ
உணவு கிடைக்கவில்லை என்றாலும், டீ, ரொட்டி (ப்ரெட்), பிஸ்கட் என்று ஏதேனும் சாப்பிட்டுக்
கொள்ளலாம் என்றால் மட்டும்தான் பயணங்கள் இனிக்கும் என்று அவர் சொல்லியது எங்கள்
கருத்தாகவும் இருந்தது.
வடகிழக்கு மாகாணம் நாகாலாந்து பயணத்தில்,
அங்கு மக்கள் நாயை அடித்து உண்ணும் பகுதிக்கு அவர்கள் சென்றதைப் பற்றிச் சொன்னார்.
நாகாலாந்து மக்கள் நாய் கறி உண்பார்கள் என்பது எங்களுக்கும் மகனுடன் படித்த
நாகலாந்து நண்பர்களிடமிருந்து அறிந்திருந்ததுதான் என்றாலும், வெங்கட் ஜி சொன்ன
அடுத்த தகவல் புதியதாக இருந்தது. நாயை அடித்துச் சாப்பிடுவதால், அவர்களின் உடலில்
இருந்து வெளியாகும் வியர்வையில் நாய் மணம் வரக்கூடும் என்பதாலோ என்னமோ, அவர்கள் அருகிலோ,
பகுதிக்குள்ளோ நாய்கள் வரவே வராதாம். மகன் சொன்னான், அவர்கள் கல்லூரியில்
விடுதியில் இருந்த நாய்களைக் கூட அந்த மாணவர்கள் அடித்துக் கறி
ஆக்கிவிடுவார்களாம். சென்னையில் கூட புறநகர் பகுதியில் நாய்கறி விற்பதாக எப்போதோ
செய்தித்தாளில் படித்த நினைவு.
நாங்கள் அமர்ந்திருந்த பகுதியைச்
சுற்றித்தான், ஒவ்வொரு வருடமும், புதுவருடக் கொண்டாட்டத்திற்கு பெரும்பான்மையான தில்லி
மக்கள் கையில் “பாட்டில்”களுடன் குழுமி கும்மாளம் அடிப்பார்களாம். அந்தப் பகுதி
வழியே எவரும் செல்ல முடியாத அளவிற்கு. தினமுமே நள்ளிரவில் கூட இளம் பெண்களும்
ஆண்களும் மிகச் சர்வ சாதாரணமாக இருப்பார்களாம். பார்க்குகளில் நாம் சிலவற்றைக்
கண்டும் காணாமலும் போவது நல்லது என்றார். நான் கேட்டேன், பெண்களைப் பற்றி,
பெற்றோர் கவலைப்படமாட்டார்களா என்று. அங்கு இந்த வாழ்க்கை முறை மிகவும் சாதாரணமான
ஒன்று என்றார். இப்படி நிறைய பேசிக் கொண்டிருந்தோம். சற்று தூரத்தில் இளம் பெண்கள்
குழு ஒன்று அமர்ந்திருக்க அவர்கள் அருகில் ஒரு சிறுவன் இரு குரங்குகளுடன் நின்று
கொண்டிருக்க, இதுவும் ஒரு தொழில் என்று வெங்கட்ஜி சொன்னார்.
காது குடைதல் - புகைப்படம் எடுத்து உதவியதற்கு நன்றி வெங்கட் ஜி
நாங்கள் அமர்ந்திருந்த இடத்தில், எனது
பின்புறம் சற்று தூரத்தில், ஒரு காட்சியை வெங்கட் ஜி பார்க்கும் படி சைகை செய்ய,
நான் மெதுவாகத் திரும்பிப் பார்த்தால் அங்கு அமர்ந்திருந்த ஒருவருக்கு, மற்றொருவர்
காது குடைந்துக் கொண்டிருந்தார். காது குடையப்படுபவர் சுகமாக, கண்ணை மூடிக் கொண்டு
தூங்குவதும் உண்டாம். காது குடைவதற்கு ரூ 10. இப்படி நிறைய பேர் காது
குடைவதற்கென்று இருக்கின்றார்களாம். அவர்கள் தலையில் ஒரு சிவப்பு துணியால்
குல்லாய் போல் கட்டி கையில் ஒரு கம்பியுடன் வருவார்களாம். அவரைப் புகைப்படம் எடுக்க நான் விரும்பினாலும்,
நான் திரும்பி எடுப்பதை அந்தக் காது குடைபவர் பார்த்தால், என்று நான் சொல்ல, வெங்கட்ஜியும்
எனது மகனும் அது நன்றாக இருக்காது என்று சொல்லி, வெங்கட் ஜி அவர் அமர்ந்திருந்த
இடத்திலிருந்து அவருக்குத் தெரியாதபடி புகைப்படம் எடுத்துக் கொடுத்தார்.
மட்டுமல்ல அந்தப் பூங்காவின் வெளியில் உள்ள
நடை பாதையில் சென்றால், பல் செட்டு விற்பவர்களையும், மூக்குக்கண்ணாடிகள்
விற்பவர்களையும் மிகவும் சர்வசாதாரணமாகப் பார்க்கலாம் என்றார். வேடிக்கையாக
இருக்கும் என்றார். நிறைய பேர் அங்குதான்
பல்செட் கட்டிக் கொள்வார்களாம். அதைப் போல் நமது கண் பவர் சொன்னால் கண்ணாடியும்
கிடைக்குமாம். மிகக் குறைந்த
விலையில். இப்படி நிறைய போலி பல், கண்
டாக்டர்களின் உலகம் அது. மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அன்று மாலை நேரமாகியதால் அந்தக் காட்சிகளைப் பார்க்க
முடியவில்லை.
ஒரு மணி நேரத்திற்கும் மேல் நேரம் போனதே
தெரியவில்லை. நாங்களும், எங்கள் உறவினர்
பெண்ணின் தோழியை அங்கு சந்திப்பதாகச் சொல்லி அப்பெண் வந்ததும் புறப்பட்டோம். மழை
லேசாகப் பெய்யத் தொடங்கியது. வெங்கட் ஜி எங்களை ராஜிவ்சௌக் ரயில் நிலையம் வரை
வந்து வழி அனுப்பினார். வெகு நாட்களாக நான் சந்திக்க வேண்டும் என்று நினைத்த நண்பர் வெங்கட் ஜியை சந்தித்ததில் எனக்கு அத்தனை மகிழ்ச்சி.
பெரிய வரிசையில், பொருட்களையும், எங்களையும் ஸ்கேன் செய்ய நின்றோம். மாலை 6.30 மணி ஆனதால், அலுவலகம் முடிந்து செல்லும் கூட்டம் அதிகமாக இருந்தது. நாங்களும் மெட்ரோ கார்ட் வாங்கி வைத்திருந்ததால், தனியாக பணம் கட்டி பயணச் சீட்டு பெற வேண்டிய அவசியம் இல்லாததால், அதற்கான வரிசையில் நாங்கள் நிற்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அடுத்தடுத்து ரயில்கள் வந்து கொண்டே இருப்பதால், கூட்டம் அதிகமாக இருந்ததால், 4 ரயில்களை விட்டு பின்னர் வந்த ரயிலில் ஏறி, 55 நிமிடத்தில் குர்காவ்ன் சென்றோம், மிகவும் அருமையான, சுவாரஸ்யமான, அன்பான நண்பர் வெங்கட் ஜியைச் சந்தித்த மகிழ்வான தருணங்களின் நினைவுகளைச் சுமந்து கொண்டு.
பெரிய வரிசையில், பொருட்களையும், எங்களையும் ஸ்கேன் செய்ய நின்றோம். மாலை 6.30 மணி ஆனதால், அலுவலகம் முடிந்து செல்லும் கூட்டம் அதிகமாக இருந்தது. நாங்களும் மெட்ரோ கார்ட் வாங்கி வைத்திருந்ததால், தனியாக பணம் கட்டி பயணச் சீட்டு பெற வேண்டிய அவசியம் இல்லாததால், அதற்கான வரிசையில் நாங்கள் நிற்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அடுத்தடுத்து ரயில்கள் வந்து கொண்டே இருப்பதால், கூட்டம் அதிகமாக இருந்ததால், 4 ரயில்களை விட்டு பின்னர் வந்த ரயிலில் ஏறி, 55 நிமிடத்தில் குர்காவ்ன் சென்றோம், மிகவும் அருமையான, சுவாரஸ்யமான, அன்பான நண்பர் வெங்கட் ஜியைச் சந்தித்த மகிழ்வான தருணங்களின் நினைவுகளைச் சுமந்து கொண்டு.
அடுத்த பதிவுடன் இந்த தில்லிப் பயணத் தொடர்
முடிவடைகின்றது. அடுத்த பதிவில் இரு
தகவல்களுடன்...தொடர்கின்றேன்.
--கீதா
வெங்கட் அண்ணாவுடன் ஒரு அருமையான சந்திப்பு...
பதிலளிநீக்குஅண்ணாவும் அண்ணியும் வலையுலகில் உயர்ந்தவர்கள்தான்...ஏன் ரோஷிணிக் குட்டியுந்தான்...
காது குடைய பத்துரூபாய்... காதை செவிடாக்கிடுவானுங்களே...
நல்ல சந்திப்பு... வாழ்த்துக்கள்.
நண்பர் குமார் மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு.....ஆம் மூவருமே..கலக்குபவர்கள்...
நீக்குவெங்கட்ஜியின் பயண அனுபவங்கள் சுவாரஸ்யமானவை. இனிய சந்திப்புக்கு வாழ்த்துகள். இந்த சாக்கில் உங்கள் மகனையும் பார்க்க முடிந்தது.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்....ஆம் வெங்கட்ஜி செமயா எழுதறாரு....நமக்கும் இப்படி ஒரு பயணம் அமையாதோனு தோன்றும் அளவிற்கு சுவாரஸ்யமாக ...
நீக்குகீதா
நல்ல தொழில்கள்...!
பதிலளிநீக்குபதிவர் குடும்பத்தை சந்தித்து வந்தது மகிழ்ச்சி...
மிக்க நன்றி டிடி தங்களின் கருத்திற்கு. டிடி அங்கு பதிவரின் குடும்பம் கிடையாது....பதிவர் மட்டுமே....
நீக்குஇனிமையான அனுபவப் பகிர்வு எங்களுக்கு மன நிறைவைத் தந்தது. தேசியக்கொடியைப் பற்றிய செய்தி அறிந்து வியந்தேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா....தங்களின் கருத்திற்கு.
நீக்குபதிவர்சந்திப்பு இனிமை தருகிறது
பதிலளிநீக்குதொடரட்டும் இதுபோன்ற சந்திப்புகள்
நன்றிசகோதரியாரே
தம+1
மிக்க நன்றி ..கரந்தையார்..நண்பரே! தங்களின் கருத்திற்கு.
நீக்குகீதா
அனைத்தையும் நினைவில் வைத்து எழுதி இருக்கிறீர்கள்..... பாராட்டுகள்.
பதிலளிநீக்குஸ்வாரசியம் நிறைந்த இடம் தலைநகர். ஏதோ ஒரு நாடகம் நடந்தபடியே இருக்கிறது! ரசிக்க மனதிருந்தால் எல்லாவற்றையும் ரசிக்கலாம்! :)
தொடர்கிறேன்.
மிக்க நன்றி வெங்கட் ஜி! ம்ம் இன்னும் சிலது விடுபட்டுவிட்டதோ என்றும் தோன்றுகின்றது ஆனால் நினைவுஇல்லை. அந்தப் பூங்காவின் பெயர்....இப்படிச் சில...
நீக்குஆம் தலைநகர் மிகவும் சுவாரஸ்யம் நிறைந்ததே....ரசிப்பதற்கு மனம் வேண்டும்...
தங்களைச் சந்தித்ததும் மிக்க மகிழ்ச்சி...
theriyaatha pala thakavalkal therinthu konden madam.
பதிலளிநீக்குadutha pakuthikkaaka kathirukkiren.
arumaiyaanathoru 2 pathivarkal santhippu.
மிக்க நன்றி மஹேஷ்..தங்களின் கருத்திற்கு...
நீக்கு# இப்படி நிறைய போலி பல், கண் டாக்டர்களின் உலகம் அது.#
பதிலளிநீக்குடெல்லியில் பாலிகா பஜார் மட்டுமல்ல ,'போலி'கா பஜாரும் இருக்கே :)
ஹஹஹஹஹ் ஆம்! மிக்க நன்றி ....பகவான் ஜி! தங்களின் கருத்திற்கு.
நீக்குகீதா
என்னங்க படிக்க மிக சுவாராஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள்... ஆனால் சரியாக எழுத வரவில்லை என்று முந்தையை பதிவில் யாரோ அழுத மாதிரி இருந்ததே....?
பதிலளிநீக்குஹஹஹஹஹ் ...மதுரைத் தமிழா சகோ...ஆமாம் சகோ ரொம்ப ஈரமா உப்பு கரிச்சுச்சுல்ல.....அது அப்பப்ப ஃப்யூஸ் ஆகறதுனால சகோ...பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. உண்மையாக மிகவும் ஊக்கப்படுத்திய வார்த்தைகள்.....
நீக்குஃப்யூஸ் ஆகும் போது எல்லோரது வார்த்தைகளும் மிகவும் உற்சாகத்தைக் கொடுக்கின்றது...
கீதா
நண்பர் வெங்கட் அவர்களைத் தாங்கள் சந்தித்த சந்தோஷம் எங்களையும் பற்றிக் கொண்டது..
பதிலளிநீக்குஇனிய பதிவு.. வாழ்க நலம்!..
மிக்க நன்றி ....ஐயா! தங்களின் கருத்திற்கு.
நீக்குகீதா
ஆஹா அடுத்த பதிவும் வந்துடுச்சி, இன்னும் முதல் பதிவிற்கே பதில் எழுதல.
பதிலளிநீக்குஅருமையாக இருக்கிறது.
சந்திப்பு நல்லா இருக்கு, புகைப்படங்கள் அனைத்தும் அருமை.
வாழ்த்துக்கள்.
நன்றி.
மிக்க நன்றி ...மகேஸ்வரி ! தங்களின் கருத்திற்கு. பரவா இல்லைங்க...
நீக்குகீதா
வெங்கட் நாகராஜுக்கு பெங்களூரு பயணம் இருப்பதாகவும் அப்படி வந்தால் என்னைச் சந்திப்பதாகவும் கூறி இருந்தார். நானும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் தலை நகர் சென்று ஆண்டுகள் பல ஆகிவிட்டன. நாங்களும் டெல்லி மெட்ரோவில் பயணித்திருக்கிறோம் . பதிவு அருமை. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கு...
நீக்குஅருமையான சந்திப்பை தொடர்ந்து வாசிக்கின்றேன் கருத்து போட கைபேசியில் தொழில்நுட்ப அறிவில்லை ஆனாலும் டெல்லியில் ஆட்டோவுக்கு காத்து இருக்க வேண்டிய புற நகரம் சூழ்நிலை பற்றி கடந்த பதிவில் மோதி அறிய மாட்டார் போலும்!ஹீ!! இந்த பகிர்வில் வெங்கட் ஜீ கொஞ்சம் வயசு போன நிலையை மீசை காட்டுது என்னைப்போல[[[
பதிலளிநீக்குஅதனால் என்ன தனிமரம். பரவாயில்லை. ஓ அப்படியா வெங்கட்ஜி க்கு வயதா...அந்த மீசையா...இல்லை சகோ அவர் இளைஞர்! ஹஹஹ உண்மையாக.....நேரில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் தெரியும்.
நீக்குகீதா
டெல்லியில் காது குடையும் வரம் கிடைக்குமா என்பதை ஏனோ மனசு ஏங்குது[[[ மகன் விரைவில் சினிமாவுக்கு முயற்ச்சிக்கலாம் ஹீரோ அம்சம் இருக்கு!
பதிலளிநீக்குஹஹஹஹ் காதுகுடைதல்...
நீக்குமகன் ஹீரோவா...சகோ...அவனிடம் சொன்னேன் உங்கள் கருத்தை....ஐயையோ என்றான்....அவன் வழி வேறு...என்றாலும் உங்கள் கருத்திற்கு நன்றி சொல்லச் சொன்னான்...எனது நன்றிகளும்...
கீதா
வெங்கட் ஜி சந்திக்கும் வாய்ப்பு எனக்கு சிறிய தவறினால் மிஸ்ஸாகி விட்டது பார்ப்போம் அடுத்த முறை காது குடைவகற்க்கு மற்றொரு ஆளா ? அடுத்த மாதம் டாக்டரைப் பார்க்க வேண்டி வராதா ?
பதிலளிநீக்குஅடுத்த முறை இருக்கிறதே சந்தியுங்கள்...கில்லர்ஜி...
நீக்குமிக்க நன்றி தங்களின் கருத்திற்கு..
கீதா
சுவாரஸ்யமாக டெல்லி பயணத்தையும் வெங்கட்ஜியை சந்தித்ததையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
பதிலளிநீக்குமிக்க நன்றி சுரேஷ்! தங்களின் கருத்திற்கு!
நீக்கு//கையில் ஒரு கம்பியுடன் வருவார்களாம்// - தில்லிக்காரர்களுக்குக் கொஞ்சம் குண்டுத் துணிச்சல் மிகுதிதான் எனத் தோன்றுகிறது.
பதிலளிநீக்குமிக்க நன்றி இ பு சகோ.. தங்களின் கருத்திற்கு!
நீக்குசுவாரஸ்யமான பயணம்;இனிய சந்திப்பு.மகிழ்ச்சி
பதிலளிநீக்குமிக்க நன்றி சென்னைப்பித்தன் சார்! தங்களின் கருத்திற்கு!
நீக்குசுகமான பயணம்...
பதிலளிநீக்குசுவையான சந்திப்பு...
சுவாரஸ்யமான பதிவு...!
!
மிக்க நன்றி முஹம்மது நிஜாமுத்தீன் சகோ... தங்களின் கருத்திற்கு!
நீக்குகீதா
அதிசயம், ஆச்சரியம், சுவாரஸ்யம் என அடுக்கிக் கொண்டே போகலாம் போல இருக்கிறது உங்கள் பயணக் கட்டுரை!
பதிலளிநீக்குஉங்கள் மூலமாக நிறைய விடயங்களை அறிந்து கொண்டேன்!
மிக மிக அருமை! சகோதரர் வெங்கட் ஜி க்கும் என் வாழ்த்துக்கள்!
மிக்க நன்றியுடன் உங்களுக்கும் வாழ்த்துக்கள் சகோ!
த ம +
மிக்க நன்றி இளமதி! தங்களின் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும்...
நீக்குகீதா
சுவாரஸ்யமாக இருந்தது பயணம் பற்றிய விடயங்கள். சந்திப்பு மிகவும் உற்சாகமாக இருந்திருகிறது இல்லையா மகிழ்ச்சி என்னையும் தோற்றிக் கொண்டது விபரித்த அழகில். நன்றி ! வாழ்த்துக்கள் ...!
பதிலளிநீக்குவெங்கட் நாகராஜ் பதிவர்களை சந்திப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். திருச்சியில் அவரை ஒருமுறை சந்தித்து இருக்கிறேன். பயணக் கட்டுரைகளை எழுதுவதில் அவர் இன்னொரு பிலோ இருதயநாத். அவருடன் நீங்களும் உங்கள் மகனும் சந்தித்தது மிக்க மகிழ்ச்சியான விஷயம்தான்.
பதிலளிநீக்கு