திருவனந்தபுரம் அருகே உள்ள பூவார் டூரிஸ்ட் ரிசார்ட்டில்
பெங்களூரைச் சேர்ந்த தகவல் தொழில் நுட்ப பெண்
ஊழியரைக் கற்பழித்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த லக்கிநாத் (20 வயசு) பெர்SOசோநாகம் (22வயசு) நேற்று
போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ரிசார்ட்டில்
க்ளீனிங்க் வேலைகளைச் செய்யும் கோட்டயதிலுள்ள பெஸ்ட் மனஜேமென்ட்(Pest Management) கம்பெனியின் ஊழியர்கள் தான் இந்த இருவரும். கைது செய்யப்பட்ட இவர்கள் விசாரணைக்கிடையில்
ஜாமீன் கிடைத்துப் போனால் மீண்டும் கண்ணில் படப்போவதே இல்லை. கேரளாவில் ஏறத்தாழ 25 லட்சம் வட இந்திய தொழிலாளர்கள்
வேலை செய்கிறார்கள். கட்டிட வேலை, ரோட்
இடல், ஹோடல்கள், இப்படி எல்லா இடத்திலும், நகரங்கள் மட்டுமல்ல கிராமங்களிலும்,
அவர்கள் இன்றியமையாதவர்கள் ஆகி விட்டார்கள். இவர்களில் கணிசமான சத விகிதத்தினர்
குற்ற வாசனை உள்ளவர்கள். லாப நோக்கம் உள்ள பல கம்பெனிகளிலும், குறைந்த கூலிக்கு
சுலபமாக கிடைக்கும் இவர்கள் பணியாற்றுகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு கம்பெனி, ரிசார்ட்டுக்குச் சப்ளை செய்த க்ளீனிங்க் ஊழியர்கள்
தான் இருவரும்.
31 பேர் அடங்கிய கம்ப்யூட்டர் வல்லுனர்களின் ஒரு conference ல் பங்கெடுக்கத்தான் இந்த பெண்மணி வந்திருந்தார். 28.11.2013 அன்று, அவர் தங்கி இருந்த அறைக்கு
பகலில் ரூம் சுத்தம் செய்ய வந்த இவர்கள் பின் கதவின் ஸ்க்ரூவை லூசாக்கி வைத்துச்
சென்ற பின், இரவு 2 1/2 மணிக்கு முகமூடி அணிந்து அறைக்குள் புகுந்து அந்தப் பெண்ணை
பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர். அதனிடையே, அவர்கள் மலையாளத்தில் பேசவும்
செய்திருக்கிறார்கள். அந்தப் பெண்மணி பெங்களூர் சென்று அங்கு புகார் கொடுத்த
போதுதான் விவரம் கேரளா போலீசுக்குத் தெரிய வந்தது. (அவருடைய தைரியத்தையும்,
சம்யோஜித புத்தியையும் நாம் பாராட்டத்தான் வேண்டும்.. However, she avoided
adding insult to her injuries). இப்படிப்பட்ட
குற்றவாளிகள் கேரளத்தில் மட்டுமல்ல, தென்னகமெங்கும் பரவலாகப் பல இடங்களில் பணி
புரிகிறார்கள்.
2 மாதங்களுக்கு முன்பு ஒரு சம்பவம், ஓடிக் கொண்டிருந்த
ரெயிலில், ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட 15 பேர் அடங்கிய வட மாநிலத்
தொழிலாளர்களைக் கண்டித்த ஒரு இளைஞரை ஓடும் ரெயிலிலிருந்து வெளியேத் தள்ளி
இருக்கிறார்கள். கைகால்கள் ஒடிந்த அவர்
இப்போதும் படுத்த படுக்கையில். (இதில் மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால்
பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீசாரிடம் புகார் கொடுக்கக் கூடத் தயாராகவில்லையாம்!!)
அது போல் போன மாதம் பெரிந்தல்மன்ன அருகே தன் பலசரக்குக்
கடையை அடைத்து இரவு வீட்டிற்கு நடந்து சென்ற ஒருவரை, வட இந்திய கட்டிட வேலைத்
தொழிலாளர்கள் கொன்று பணத்தை அபகரித்துச் சென்றனர். 2 மணி நேரத்திற்குள் அவர்கள்
போலீசாரால் கைது செய்யப்பட்டார்கள் என்றாலும் போன உயிர் போனது தானே. அது போல்
திருச்சூர் அருகே உள்ள காரளம் வொக்கேஷனல் ஹையர் செகண்டரி ஸ்கூல் ஆசிரியையும்,
மகனையும் தலையில் வெட்டி படுகாயம் ஏற்படுத்தி அவர்களுடைய நகைகளையும், பணத்தையும்
அபக்ரித்த வட இந்திய தொழிலாளர்கள் 3 மாதத்திற்கு பிறகு கைது
செய்யப்பட்டுள்ளார்கள். அந்த ஆசிரியையின் கணவர், அவர்கள் வீட்டிற்கு வேலைக்கு வந்த
இந்த வட இந்தியத் தொழிலாளர்களுக்குத் தங்க, அவர்கள் வீட்டின் அருகே வாடகைக்கு ஒரு
வீடும் ஏற்பாடு செய்து கொடுத்து உதவியவர் என்பது குறிப்பிடத் தக்கது. ஆசிரியையும், மகனும், இப்போதும் படுத்த
படுக்கையாகத்தான் இருக்கிறார்கள். இத்தகைய
சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருதிறது. அரசும், காவல்துறையும்,
பொது மக்களும் இதை உணர்ந்து ஆவன உடனே செய்ய வேண்டும். இல்லையேல்,
“வரும்முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்
வைத்தூறு போலக்
கெடும்”.
காவல் துறையினர் இது போன்ற குற்றங்கள் நடக்கும் போது, அதில்
ஈடுபடுபவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல்
அவர்கள் பணிபுரியும், தங்கும் இடங்களில் இடையிடையே சென்று அவர்களும்
கண்காணிக்கப்படுகிறார்கள் என்ற எண்ணதையேனும் உண்டாக்க வேண்டும். ஹெல்மெட்
இடாதவர்களையும், சீட் பெல்ட் இடாதவர்களையும் விரட்டி, விரட்டிப் பிடிக்கும் நம் காவல்
துறையினரின் கவனமும் நேரமும், இது போன்ற பிற மாநிலங்களிலிருந்து பிழைப்புத் தேடி
வந்த உண்மையான உழைப்பாளர்களுகிடையே உள்ள
பசுத்தோல் போர்த்திய புலிகளை அடையாளம் கண்டு, அவர்களை இங்கிருந்து விரட்டுவதிலும்,
செலவிடப்படவேண்டும்.
மாநில குடியேற்றங்கள் முக்கியமாய் தாழ் நிலை வேலைகளுக்காய் லட்சகணக்கில் ஒத்த மொழி கலாச்சார பின்னணியில் இல்லாதோரை அனுமதிப்பது சமூக சிக்கல்களையும் கலவரங்களையும் உண்டாக்கும். குறைந்த செலவுக்காய் பணியாற்ற பிகார், உபி, வங்கதேசம், அசாம், போன்ற இடங்களில் இருந்து வருவோரின் கலாச்சாரம், வன்முறைக் குணம் தென்னகத்தில் ஆபத்தையே தரும். பணியமர்த்தப்படுவோரை முறைப்படுத்தி காவல்துறையில் பதிந்தும் பின்புல விசாரணைகளுக்கு உட்படுத்தி கண்காணிப்பது சில சமயம் குற்றங்களை குறைக்க உதவும். மாநில அரசுகள் இத்தகையவற்றை கணக்கில் கொண்டு பணியமர்த்தும் முதலாளிகளுக்கு கட்டளையிடவும் வேண்டும்.
பதிலளிநீக்கு--- விவரணம்.
உங்கள் வருகைக்கும், நல்ல கருத்திட்டதற்கும் மிக்க நன்றி!
நீக்குஉடனடி பணத்திற்காக வேலை செய்வதை விட்டுவிட்டு, கடமையுணர்ச்சியுடன் நீங்கள் சொல்வது போல் பணியை தொடர வேண்டும்... குறள் இணைத்தது அருமை...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் நல்ல கருத்திற்கும் மிக மிக நன்றி நண்பரே! தொடர்வதற்கும் நன்றி!
நீக்குஇப்படிக் கொத்துகிற பாம்பின் தலையை காவல் துறையினர் பூட்ஸ் காலால் நசுக்கவில்லை என்றால் விபரீதங்கள் கூடிக்கொண்டேதான் போகும் !
பதிலளிநீக்குத .ம +1
ரொம்ப சரி! பகவான்ஜீ! வந்தாரை வாழவைக்கும் தமிழகத்திலும்தான் நிறைய குற்றங்கள் இது போன்று நடக்கிறது. பெங்ககளூரில் மக்களே இவர்களை விரட்டும் சம்பவம் சமீபத்தில் நடந்ததே! உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் ரொம்ப நன்றி! ஓட்டிற்கும் சேர்த்துத்தான்!
நீக்குநான் ஒன்றும் தமிழில் பெரிய எழுத்தாளன் அல்ல என்ற முன்னுரையுடன் ஆரம்பிக்கிறேன். அப்படி பெரிய எழுத்தாளன் இல்லை என்றாலும் நிறைய படிக்கும் வாசகன் என்ற முறையில் என்னால் நிறைகள், குற்றம் குறைகள் மற்றவர் எழுத்தில் எளிதாக கண்டு பிடிக்கமுடியும்.
பதிலளிநீக்குகாரணம்? வாசகனாக படிக்கும் பொது, படித்து உள்வங்குவதோடு சரி--இங்கு சிந்திப்பு - சிந்தனைகள் எனக்கு இல்லை---ஆதலால் நிறைகள், குற்றம் குறைகள் பளிச் என்று தெரியும். அதே மாதிரி நான் சிந்தித்து எழுதும் பொது என் குறைகள் எனக்கு தெரியாது. எனக்கு நான் எழுதுவது எல்லாமே நன்றாக இருக்கும்--இதானால் தான்--இங்கு peer-reviewed article என்றால் மதிப்பு அதிகம்!
நிற்க. உங்கள் பதிவு சில நீளமாக இருக்கு (மூன்றிலிருந்து ஐந்து நிமிடம் மேல் blog படிக்க பொறுமை இருக்காது).ஓசியில் படிப்பதால் அப்படி! இதே காசு கொடுத்து படித்தால்..முழுவதும் படிப்பார்கள்! இது மனித இயல்பு!
என் பதிவுகள் சிலவும் பெரிய பதிவுகள் தான். அதே தவறை நானும் செய்கிறேன்[ அதனால் தான் நடு நடுவே கொஞ்சம் கிண்டல் நக்கல் அஜால் குஜால் மேட்டர்கள் எல்லாம் இடையில் சொருகுவது---மேலும், இவைகள் எல்லாம் என்னுடன் கூடப்பிறந்தது---கர்ணனின் கவச குண்டலங்கள் மாதிரி!
அதானால், நான் பல பெண் வாசகர்களை இழக்கிறேன் என்று எனக்கு நன்றாக தெரியும்!
நான் வளர வேண்டும்! வளர்ந்தால் ஒரு வேளை பெண்கள் படிக்கலாம்., எப்படி வளரனும்? ஒரு சுஜாதா! புஷ்பா தங்கதுரை, சாரு, சாண்டில்யன்! இப்படி வளர்ந்து ஆஜால் குஜாலாக எழுதினால் படிப்பார்கள்! பார்ப்போம்!
நான் எப்படி வளர்ந்தாலும் என் மேல் criticism இருக்கும். காரணம்? ரொம்ப சிம்பிள்!
வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் விவேக் இருவரும் பலான காமெடி செய்கிறார்கள்? ஆனால், விவேக்கு தான் திட்டும் குத்தும்; கரிச்ச பேர்! எல்லா சூத்திரனுங்களும் அவர்களுடன் சேர்ந்து விவேக்கை காறித் துப்பிகிரார்கள். ஆனால், அஜால்-குஜால் காமெடியில் விவேக்கின் குருவிற்கு...அதான்பா நம்ம வெண்ணிற ஆடை மூர்த்தி!
அதே சமயம், வெண்ணிற ஆடை மூர்த்தியின் ஆபாசக் காமெடிக்கு எப்பவாவது ஒரு சின்ன தடவல் (அடி கூட இல்லை)--அந்த தடவலும் மயில் இறகால்--ஆங்கிலத்தில் இதற்கு A slap on the wrist -என்று சொல்வார்கள்!
தமிழ்நாடு இப்படி என்று எனக்கு தெரியும்; என் வழி..இப்படித்தான்! ஆனால், நான் எழுத்தில் சேலஞ் -Challenge- செய்ய விரும்பும் ஒரே எழுத்தாளர்---என் மதிப்பிற்குரிய சாகித்ய அகாடெமி அவார்ட் வாங்கிய திரு. கி. ராஜநாராயணன் மட்டுமே!
பின்குறிப்பு:
திரு. கி. ராஜநாராயணன் எழுத்து முன் மற்றவர்கள் எல்லோரும் ஜூஜூபி! ஒருவனைத் தவிர!
நன்றி நம்பள்கி! நீங்கள் சொல்ல வருவது என்ன என்று புரிந்து விட்டது! என்ன செய்ய!? சில சமயம் நாங்கள் சொல்ல வருவது முழுவதையும், மனதில் தோன்றுவது முழுவதையும் எழுதிவிட வேண்டும் என்று நினைத்து, சில சமயம் எத்த்னை முறை எடிட் செய்தாலும் நீண்டு விடுகிறது. இனி அதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்!.இது போன்ற கருத்துக்களை நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம்! அப்போதுதானே எங்கள் எழுத்துக்களைத் திருத்திக் கொள்ள முடியும்? நன்றி நன்றி!
நீக்குஉங்கள் எழுத்துக்களுக்கும், கிழித்தல்களுக்கும், நாங்கள் பரம ரசிகர்கள் (2) – வாசகி/ரசிகையும் அடக்கம்! என் தோழி! கீதா. உங்கள் கிண்டல் நக்கல் அஜால் குஜால் மேட்டர்கள் எல்லாமும் சேர்த்து. அவரும், நானும் உங்கள் கிழித்தல்களை வாசித்து, அவர் தான் உங்களுக்கு "நக்கீரன்" என்று பெயர் சூட்டியவர்!
விவேக்கை மக்கள் காரித் துப்புகிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது! அவர் நகைச்சுவையில் நல்ல கருத்துக்களும் இருக்கிறதே!..
பின் குறிப்பு: போட்டீரே ஒரு போடு!!! இது typical நம்ம நம்பள்கி style!!! அந்த ஒருவன் யாரென்று தெரியாதா என்ன?!!! உங்களை வாசிக்கும் எல்லோருக்குமே தெரியும்! அது வேறு யாருமல்ல, அமெரிக்காவிலிருந்து கொண்டு, தமிழ் நாட்டையும், உங்களை வாசிக்கும் தமிழ் இதயங்களையும் (!?!), தமிழ் கூறும் நல்லுலகையும் ஆட்டிப்படைக்கும், கிழிக்கும் “நந” வேதான்!!!!!! சாகித்ய அகாடெமி அவார்ட் வாங்கிய கி.ர. அருமையான எழுத்தாளர். கரிசல் காட்டு கடுதாசி......
பின் குறிப்பிற்கு பின் குறிப்பு (உங்களிடம் சுட்டது): ‘ஆட்டிப் படைக்கும்’, ‘கிழிக்கும்’ இவற்றின் பின்னால் பொடி எதுவும் இல்லை! நம்புங்கள்! நல்ல அர்த்தம் தான்!!
இப்படிப்பட்ட பாம்புகளின் தலையை காவல்துறை பூட்ஸ் காலால் நசுக்கிவிடுவது நல்லது ,இல்லையெனில் விபரீதங்கள் தொடர்கதை ஆகிவிடும் !
பதிலளிநீக்குத ம +1
தொடர்கதை ஆகிவிடுமோ என்ற பயமும் வரத்தான் செய்கிறது! ஏனென்றால் நம்மூர் போலீஸ், சட்டம் எல்லாம் அப்படித்தானே இருக்கிறது!!! நன்றி பகவான்ஜி!!
நீக்குடேஞ்சரஸ் பெல்லோஸ்... உஷாரா இர்க்கணும்ம்பா...
பதிலளிநீக்குவாங்க நைனா!! உங்க பதிலு ஸூப்பரா கீது நைனா!!! அவுலு குடுக்கற சோமரிங்கள அப்பீட்டு செய்யாங்காட்டியும் படா பேஜாரு நைனா! (courtesy என் தோழி! கீதா. தற்போது சென்னை வாசி.) உங்கள் எழுத்தை நல்ல தமிழையும், சென்னை தமிழையும் நாங்கள் ரொம்பவே ரசிக்கிறோம்!! தலையில்லா முண்டத்திற்கு பின்னூட்டம் வருகிறது!
நீக்குஇந்த வடநாட்டு தொழிலாளிகளின் பிரச்சினை இப்பொழுது எல்லா இடத்திலும் இருக்கிறது. போலீசாருக்கும் நன்றாகவே தெரியும். சில இடத்தில் போலிஸ் அவர்களின் கூட்டாளிகள் கூட என்பதை என் சொந்த அனுபவத்தில் சொல்லுகிறேன்.
பதிலளிநீக்குஉங்கள் பகிர்விற்கு நன்றி.
உங்கள் முதல் வருகைக்குக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி! போலீஸும் கூட்டாளிகள் என்பது சற்று ஆச்சரியமாக இருக்கிறது! ஆனால், நம் நாட்டில் நடப்பதுதான்! வாசித்து கருத்திட்டதற்கு நன்றி!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குபதிவின் மூலம் பலரது முகத்திரை கிழிந்தது...பதிவை அருமையாக எழுதியுள்ளிர்கள்.. மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்..இந்தப்பதிவுக்காக த.மண-5 எனது வாக்கு..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி நண்பரே! மிக்க நன்றி! தாங்கள் தொடர்ந்து வாசித்து பாராட்டிக் கருத்து தெரிவித்து, வாழ்த்துடன் வாக்கும் இட்டதற்கு மிக்க நன்றி!!
நீக்குபசுத்தோல் போர்த்திய புலிகளை அடையாளம் கண்டு, அவர்களை இங்கிருந்து விரட்டுவதிலும், செலவிடப்படவேண்டும்//உண்மைதான்
பதிலளிநீக்குவருக கவியாழி! முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி! நம் சமூகத்தில் பசுத்தோல் போர்த்திய புலிகள் நிறையவே இருக்கிறார்கள்! விரட்டுவது?!!! "உண்மைதான்" ரொம்ப சரிதான்!!! நன்றி!!
பதிலளிநீக்கு[[விவேக்கை மக்கள் காரித் துப்புகிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது! அவர் நகைச்சுவையில் நல்ல கருத்துக்களும் இருக்கிறதே!]]
பதிலளிநீக்குவெகு ஜனப் பத்திரிக்கை விவேக்கை தான் திட்டுகிறது! மூர்த்தியை வீட்டு விடுகிறது;
இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். விவேக் கடவுள் நம்பிக்கை ஜோதிடத்தை கிண்டல் செய்கிறார்.
மூர்த்தி..இந்த இரண்டிலும் அதிக நம்பிக்கை வைத்து உள்ளார். பத்திரிக்கை வியாப்ரதிர்க்கு ஆன்மிகம், =ஜோதிடம் இது எல்லாம் தேவை தானே!
விவேக்?
யோசித்துப் பார்த்தால் அப்படித்தான் இருக்கும் என்று தோன்றுகிறது! விவேக்? அவர் இப்போ கலாமின் வேண்டுகோளின் படி மரம் நட்டு பசுமையாக்கும் சமூகப் பணியில் busy ஆக இருக்கிறார்.
பதிலளிநீக்குதுளசிதரன், கீதா
எந்தப் பணிக்கும்இனி வெளிமாநிலத்தவற்களை அமர்த்துவதை விட நமக்கு அறிமுகமானவர்களை வைத்து செய்யலாம். எங்கும் விழிப்புடன் இருக்கலாம் இப்படி மக்களாகிய நாம் தான் ஒருவரை ஒருவர் காத்துக்கொள்ள வேண்டும். வேறென்ன செய்வது?
பதிலளிநீக்கு