சனி, 28 டிசம்பர், 2013

பரோல் - Parole



குற்றம் என்பது விதிகளையோ அல்லது சட்டத்தையோ மீறி செய்யப்படும் செயலாகும். இவ்வுலகில் குடி, பொய், களவு, காமம், கொலை என்பன அறநூலுக்கு மாறானவையாகக் கருதப்படுகின்றன. இவை ஐம்பெருங்குற்றங்கள் எனப்படும். என்றாலும், குற்றங்கள் நடக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப அதன் அர்தங்களும், தண்டனைகளும், சட்டத்தின் பார்வையும், சமுதாயத்தின் பார்வையும் மாறுபடும். குற்றங்கள் வெவ்வேறு காலகட்டத்தைப் பொறுத்தும், ஒவ்வொறு தனிமனித சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் ஏற்றவாரு, மாறுபடலாம்.  குற்றங்கள் எல்லாமே சட்டங்கள், விதிகள் மீறல்தான் என்றாலும், எல்லா மீறல்களும் குற்றங்கள் ஆகும் என்று சொல்ல முடியாது. என்றாலும்,

இந்தச் சமுதாயம் ஒரு திருடனையும், கொள்ளையனையும், பாலியல் பலாத்காரம் செய்பவனையும், கொலை காரனையும் ஏற்றுக் கொள்ள்ளாமல் இருப்பது நியாயம்தான்.  இங்கு இரு திருக்குறள்கள், திருவள்ளுவர் என்ன சொல்கிறார் பாருங்கள். 

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.
[பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.]

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.
[குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.]

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது?
அற்றது உலகில் அமைதியும் மகிழ்வும்
அமைதி அழிந்தது, புயலும் எழுந்தது என்ற ரத்தக் கண்ணீர் படத்தில் வரும்  அருமையான பாடல் சொல்லும் நிலைதான் ஒவ்வொரு குற்றவாளிக்கும்.


வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
[குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.]

இது பல சமயங்களில் மனிதனுக்குச் சாத்தியமாகாமல் போவதால் பல குற்றங்கள் சமூகத்தில் நடக்கத்தான் செய்கின்றன. ஏனென்றால்,

பெரும்பாலான குற்றங்கள் உணர்ச்சிகளின் அடிப்படையில், அந்த உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல், ஒரு வரம்பிற்கு மேல் போகும்போது நடப்பவையே. ஒரு நொடிப்பொழுதில் உணர்ச்சிகளின் மேலீட்டினால் எடுக்கப்படும் முடிவினால் நடக்கும் குற்றங்கள் ஏற்படுத்தும் பின்விளைவுகள் மிகப் பயங்கரமானதாகக் கூட இருக்கும். கோபம், காதல், காமம், வேதனை, பொறாமை, பொஸ்ஸிவ்னெஸ் (Possessiveness - தனக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணம்), தாய்மை, அன்பு, ஆவேசம்,  நட்பு, நக்கல், எரிச்சல், ஆகிய உணர்ச்சிகள் எல்லாம் மனம் எனும் ஜீபூம்பாவிலிருந்து எழுந்தாலும் இவற்றிற்கெல்லாம் அடிப்படை அறிவியல்தான் அதாவது நமது மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள் தான். Brain Chemistry.!!  இந்த உணர்வுகளின் அடிப்படையில் ஒரு நொடிப் பொழுதில் எடுக்கும் முடிவில் வெளிப்படும் குற்றம் நம் வாழ்கைப் பயணத்தையே திசை திருப்பி விடுகின்றது. இந்த உணர்வுகளை நாம் அணுகும்விதத்தில் அணுகி அதைக் கையாளும் முறை தெரிந்தால் நம் வாழ்வு இனிதாகிவிடும்!

இந்தச் சமுதாயத்தின் பார்வையில் ஒரு மன நோயாளிக்கும், மாற்றுத் திறனாளிக்கும், ஆதரவும், இரக்கப்பார்வையும் கிடைக்கிறது.  ஆனால், அதே சமுதாயம், நல்ல மனிதர் ஒருவர், உணர்ச்சிகளின் மேலீட்டினால் ஒரு நொடிப் பொழுதில் தவறி குற்றம் புரிந்து, அதற்கானத் தண்டனையை அனுபவித்து, குற்ற உணர்வுடன் மனம் வெம்பி, மனம் திருந்தி இச் சமுதாயத்தில் இணைய நினைக்கும் ஒருவரை, ஏற்றுக் கொள்வதில்லை!  அவருக்கு ஜெயிலில் அனுபவித்த தண்டனை தவிர இரண்டாவது கட்டமாக இந்தச் சமுதாயமும் அவருக்குத் தண்டனை கொடுக்கிறது! அப்படியாக அவருக்கு ஆயுள் தண்டனை!!  தன் குற்றத்தை உணர்ந்து அது தவறு என்று நினைத்து வருந்தி, திருந்தி, நன்னடத்தையின் காரணமாக ஜெயிலிலிருந்து விடுமுறையில் வருவது போல் சில நாட்களுக்கு மட்டும் விடுவிக்கப்பட்டு (பரோலில்) வரும் ஒருவரை, அவர் தான் செய்த தவறை  உணர்ந்து மீண்டும் நல்லவனாக வாழ ஆசைப்படுகிறார் என்றால் அவரை இந்த சமுதாயம் ஏற்று அவரது வாழ்விலும் ஒளியேற்றி, குற்ற உணர்விலிருந்து விடுவித்து, அவர் வாழ்வை மீண்டும் ஒளிமயமாக்க உதவலாமே! அது உதவி மட்டும் அல்ல நம் கடமையும் கூட.  குற்றவாளிகளை எப்போதுமே குற்றவாளிகள்தான் என்று கருதுவதும் சரியல்ல  என்ற கருத்தின் அடிப்படையில், எனது நண்பர் துளசிதரனால் எடுக்கப்பட்டதுதான் கீழே கொடுக்கப்பட்டுள்ள “பரோல் குறும்படம்.  பார்க்கப்போனால், உணர்ச்சிகளின் மேலீட்டினால் நடக்கும், ஒன்றுகொன்று தொடர்புடைய இரு குற்றங்கள், இந்தக் குறும்படத்தில், அவரால்  சொல்லப்பட்டிருக்கின்றன.

க்தை இதுதான்.  இரு நெருங்கிய நண்பர்கள்.  அடுத்தடுத்த வீட்டில்.  இருவரது குழந்தைகளும் மிக நன்றாக பழகி வருகிறார்கள்.  ஒருவரது மகன் மற்றவரது சிறிய பெண்ணுடன் நன்றாகப் பழகி வரும் சமயம் அந்தப் பையன் அந்தச் சிறிய பெண்ணிற்குத் தவறான படங்களைக் காட்டி, அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயலும்போது அப் பெண்குழந்தை இறந்து விடுகிறது.  அக்குழந்தையின் தந்தை நண்பரின் பையனை உணர்ச்சிகளின் மேலீட்டினால் கொன்று விடுகிறார். தண்டனை அனுபவிக்கிறார். பரோலில் வரும் அவரை அண்டை அயலாரும், ஊருமே ஒதுக்குகின்றது. அவரது மனைவி சித்தம் கலங்கிய நிலை. அவர் தன் தவறை நினைத்து தற்கொலை செய்ய முயல்கிறார்.  அச்சமயம் அடுத்த வீட்டில் இருக்கும் அவரது நண்பர்,(அவரது மகனைத்தான் இவர் கொன்றார்) தன் மகனைக் கொன்றவர் என்றும் பாராமல் தற்கொலை முயற்சியை தடுத்து அவரது மனதில் உள்ள குற்ற உணர்விலிருந்து அவரை விடுவித்து வாழ வழி செய்வதாகக் கதை.


சிறிய பட்ஜெட் படம் என்பதால் பொதுவாக எதிர்பார்க்கபடும் சில விஷயங்கள் இல்லாமல் போகலாம். அதை மனதில் கொள்ளாமல், அவரது முயற்சியைப் பாராட்டலாமே! அவரது முயற்சி மேலும் வெற்றி அடைய வாழ்த்தலாமே! 
 
இதைப் பார்த்து விட்டு உங்கள் மேலானக் கருத்துக்களையும், காரமான, உண்மையான, நேர்மையான விமர்சனங்களையும் தெரிவிக்கவும். உங்கள் கருத்துக்களும், விமர்சனமும் அவருக்கு இன்னும் செதுக்கி, மேம்படுத்தி, தவறுகளைத் திருத்திக் கொண்டு, நல்ல விதத்தில் அடுத்த படம் எடுப்பதற்கு உதவிகரமாக இருக்கும். இதில் உரையாடல்கள் ஆங்கிலத்தில் இருக்கும்.  அதற்கான சப் டைட்டில் (sub title) மளையாளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.  தமிழில் இல்லை.  தயவு செய்து மன்னிக்கவும்.


பரோல் - Parole

a short film by Thulasidharan V Thillaiakathu 









பின் குறிப்பு:

இப்படம் என் நண்பர் துளசிதரனால், சக ஆசிரியர்களின் உதவியுடன், மாணவர்களுக்காக எடுக்கப்பட்டது. அதாவது, அவர் ஒவ்வொரு வருடமும் தனது ஒரு மாத வருமானத்தை (அதற்கும் மேலே கொஞ்சம் கூடுதலாகலாம்) மாணவர்களுக்காகக் குறும்படம் எடுக்க எந்தவித லாப நோக்கமும் இல்லாமல்ஒதுக்குகின்றார். ஒரு service போலத்தான். சிறிய பட்ஜெட் குறும்படம்தான் என்றாலும் அதில் மாணவர்களையும், சக ஆசிரியர்களையும் உட்படுத்தி, நடிக்கச் செய்து, அவர் டைரெக்ட்  செய்து தாயாரிக்கின்றார். மாணவர்களை  ஆங்கிலத்தில் உரையாடச் செய்து, அவர்களையும் "interactive session" ல் கலந்து கொள்ளச் செய்து ஆங்கிலத்தில் பேசுவதற்கு ஆர்வம் ஏற்படுத்த ஒரு முயற்சி. இது அவரது இரண்டாவது முயற்சி.

அதன் லிங்க் இதோ (student activities)

http://www.youtube.com/watch?v=4E50nBSZamE

இந்தப் படம், சமீபத்தில், 22.12.2013 அன்று, "மலபார் ஃபில்ம் சொசைட்டி" பெருந்தல்மன்னா எனும் இடத்தில் நடத்திய குழந்தைகள் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இரண்டாம் பரிசு வென்றது என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று அவர் பயணத்தில் இருக்கின்றார்.  இந்தக் குறும்படம் பதிவேற்றம் செய்யப்படுவது அவருக்குத் தெரியாது.  சொல்லப் போனால் இதை நான் சென்றத் திங்கள் கிழமை அதாவது 23 ஆம் தேதி பதிவேற்றம் செய்ய நினைத்தேன்.  ஆனால், அவருக்கு இதை வலைப்பூவில் பதிவேற்றம் செய்வதில் விருப்பமில்லை. முதலில் சம்மதிக்கவில்லை. தற்புகழ்சி என்றார்.  இன்று அவர் இல்லாததால் இந்தப் பதிவேற்றம். 


15 கருத்துகள்:

  1. இப்படம் என் நண்பர் துளசிதரனால், சக ஆசிரியர்களின் உதவியுடன், மாணவர்களுக்காக எடுக்கப்பட்டது. அதாவது, அவர் ஒவ்வொரு வருடமும் தனது ஒரு மாத வருமானத்தை (அதற்கும் மேலே கொஞ்சம் கூடுதலாகலாம்) மாணவர்களுக்காகக் குறும்படம் எடுக்க எந்தவித லாப நோக்கமும் இல்லாமல், ஒதுக்குகின்றார். ஒரு service போலத்தான். சிறிய பட்ஜெட் குறும்படம்தான் என்றாலும் அதில் மாணவர்களையும், சக ஆசிரியர்களையும் உட்படுத்தி, நடிக்கச் செய்து, அவர் டைரெக்ட் செய்து தாயாரிக்கின்றார். மாணவர்களை ஆங்கிலத்தில் உரையாடச் செய்து, அவர்களையும் "interactive session" ல் கலந்து கொள்ளச் செய்து ஆங்கிலத்தில் பேசுவதற்கு ஆர்வம் ஏற்படுத்த ஒரு முயற்சி. இது அவரது இரண்டாவது முயற்சி.

    நல் மனதோடு எடுக்கப்படும் இக் குறும்படங்கள் என்றென்றும் வெற்றி வாகை
    சூடி வரவும் பிறக்கப் போகும் புத்தாண்டில் உங்கள் அனைவருக்கும் என் இனிய
    வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் .சிறப்பான
    பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்துக்களுக்கும் !! உங்களைப் போன்றோரின் ஊக்கம் எங்களுக்கு மிக அவசியம்!

      நன்றி!! மீண்டும் வருக எங்கள் அகத்திற்கு!

      நீக்கு
  2. வணக்கம்
    நண்பரே.

    வாழ்த்துக்கள்... மேலும் தொடருங்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே! தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்!!

      நீக்கு
  3. மிகப் பெரிய முயற்சி
    சாதனை என்று கூட சொல்லலாம்
    வாழ்த்துக்கள்
    நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதனை என்று சொல்வதற்கு இல்லை நண்பரே!! இன்னும் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது!! தங்கள் கருத்திற்கும், வாழ்து சொல்லி ஊக்குவிப்பதற்கும் மிக்க நன்றி நண்பரே!!

      நீக்கு
  4. பரோல் குறும்படத்தை மொழி புரியாததால் முழுமையாக ரசிக்க முடியவில்லை ,நண்பரின் சேவை போற்றுதலுக்கு உரியது ,வாழ்த்துக்கள் !
    +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பகவான் ஜி!! தங்கள் வாழ்த்திற்கும் ஊக்கத்திற்கும்!! அடுத்த படத்தில் தங்களது கருத்து எடுத்துக் கொள்ளப்படுகிறது!! அதாவது மொழி.....தமிழிலும் டப் செய்யப்படும்!

      மிக்க நன்றி!!

      நீக்கு
  5. குறள்களோடு சொன்ன விதத்தை ரசித்துப் படித்தேன்... திரு. துளசிதரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி! DD அவர்களே! தங்கள் வாழ்த்திற்கும், கருத்திற்கும், தவறாது வந்து ஊக்கம் கொடுப்பதற்கும் மிக்க நன்றி!!

      நீக்கு
  6. அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    அப்பால வந்து கர்த்து சொல்லிக்கிறேம்பா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நைனா மொய்யிக்கு டேங்கஸ்பா! ஆனா கர்த்து அப்பால வந்து சொல்லிகினுபா. கர்த்து சொன்னா தப்ப கரீக்ட் பண்ணிக்கலாம்பா.

      தங்கள் உண்மையான காரசாரமான எதிர்வினைக் கருத்தக்களாயினும் வரவேற்கிறோம். தங்கம் புடம் போடப்படுவதைப் போல் தாங்கள் விமர்சித்தால்தான் தவறாய்த் திருத்தி மெருகேற்றிக் கொள்ள முடியும்!!

      நன்றி நைனா!!

      நீக்கு
  7. குறும்பட முயற்சி பாராட்டுக்குரியது. பின்குறிப்பு மிகவும் பாராட்டுக்குரிய செயலை செய்து வரும் நண்பருக்கு எனது வணக்கமும் வாழ்த்தும். மாணவர்களிடையே தான் நல்ல கருத்துகளை விதைக்க முடியும். நல்ல செயல் தொடருங்கள்.
    அடுத்து பரோல் பற்றி என் கருத்து பொதுவாக எந்தக்குற்றம் செய்து விட்டு சிறை சென்று வந்தாலும் அவரை ஒரு வித பயம் நிறைந்த கண்ணோட்டத்துடன் பார்க்கும் சமூகம் உடனடியாக ஞானி மனநிலைக்கு திருந்த வாய்ப்புகள் குறைவே அதாவது குற்றத்தொழிலையே தொடர்ந்து செய்பவர்களுக்கு நான் சொல்வது பொருந்தும். தாங்கள் கூறுவது போல சந்தர்ப்பவசத்தால் குற்றவாலியாகும் நபரை ஏற்றுக்கொள்ள மக்களிடையே இது போன்ற விழிப்புணர்வுக்கருத்துகள் பரப்பிட வேண்டும். சினிமா தொலைக்காட்சி நாடகம் இப்படி. இது என் கருத்தே தங்கள் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. முதலில் கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி! பரோல் ஒரு நொடிப் பொழுதில் ஏற்படும் அதுவும் நண்பரின் மகனின் மீதுள்ள நம்பிக்கை ஆனால் அது தன் மகளின் சாவிற்கு காரணமாகி விட்டானே அந்தப் பையன் என்ற உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஏற்படும் எண்ணம் கொலைகாரனாக்கிவிடுவது ஆனால் பின்னர் தன் தவறை நினைத்து வருந்துதல்...இது கொலையாக இல்லை எனினும் நம் பலருக்கும் ஏற்படும் ஒன்றுதானே....பலரும் ஒரு நொடிப் பொழுதில் ஏற்படும் கோபத்தின் உச்சியின் விளிம்பில் பல தவறுகளைச் செய்துவிட்டு மனம் கொந்தளிப்பு அடங்கும் போது, கடல் அலை சீற்றத்திற்குப் பிறகு அமைதியாகி, இந்த க் கடலா பொங்கியது எனபது போல் நமக்கு ஒரு எண்ணத்தைத் தோற்றுவிப்பது போலத்தான் நமது கோபம் அடங்கும் போது...நாமா செய்தோம் என்று ஒரு குற்ற உணர்வு ஏற்படத்தானே செய்கிறது? அப்படி ஏற்படும் தருணங்களில் நாம் அம்மனிதர்களைப் புறம் தள்ளுவது என்பதை நாம் கூடியவரையில் அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் தள்ளி மேலும் தண்டிக்காமல் நம்முள் ஒருவராகக் கருதி அன்பு செலுத்தலாமே என்ற ஒரு எண்ணதில் விளைந்த படம் தான் அது....உங்கள் கருத்து மிகவும் சரிதான்....

    மிக்க நன்றி தொடர்வதற்கு சகோதரி....

    கீதா..

    உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றோம்...நாங்கள் இருவர் எழுதுகின்றோம்...நண்பர்கள் துளசிதரன், கீதா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ. ஆமாம் இருவர் எழுதுவது தெரியும். கீதா புதுக்கோட்டை ஆசிரியர் கீதா அவர்களா என்ற சந்தேகம் உண்டு தெளிவு படுத்தினால் மகிழ்வேன்.

      நீக்கு