‘சொல்ற மாதிரி’ இவன் ‘வேற மாதிரி’ தெரிவது காதல் விஷயத்தில் மட்டும்தான். மற்றபடி சமூகத்தில கொலைகளும், அட்டூழியங்களும்
செய்கிற வில்லன்களை தீர்த்துக் கட்டுவதில் ‘சாதாரண மாதிரிதான்’.
“தம்பி உடையோன் படைக்கு அஞ்சான்’ என்கிற மட்டில் அட்டூழியங்கள் மட்டும் செய்கிற அமைச்சர் அண்ணனை, அதே ரௌடித்
தம்பியை கருவாக்கி நாயகன் தனி மனிதனாக அழிப்பதுதான் கதை. இதற்கிடையில் ‘வேற மாதிரி’ ஜில்லென ஒரு காதல் கதை. இதை இரண்டையும் நல்ல ஒரு திரைக்கதை மூலமா
ப்ளெண்ட் பண்ணி, உட்கார்ந்து பார்க்கறா மாதிரி ஒரு படம் பண்ணி இருக்கிறார்
சரவணன். அரசியல்வாதிகளின் ஆதிக்கம் எந்த
அளவு மோசமாகக் கல்லூரிகளைப் பாதித்து இருக்கிறது என்பது முதல் காட்சியில் நன்றாகச்
சொல்லப்பட்டிருக்கிறது. நடவடிக்கை எடுத்த முதல்வரையேக் குத்திக் கொன்றது
உண்மையிலேயே நடந்த சம்பவம் தானே.
தற்செயலாக நடக்கும் “யூரின் பாஸிங்க் பந்தம்”, நாயகி சைகை செய்வது போல் கத்தரிக்கப்படாமல்,
மீன்கள், குழந்தை, “கஞ்சா காணிக்கை குடம்”, என்று பஸ்ஸில் பயணம் செய்து, வளர்ந்து, வீட்டில் உள்ள
ஏழாவது படிக்கும் பெரியவர்களின்(??!!!) உதவியால் காதலாவது மிகவும் சுவாரசியமாகச்
சொல்லப்பட்டிருக்கிறது. அறிமுக நடிகை சுரபி அருமையாக நடித்து படம் பார்ப்பவர்களின்
நெஞ்சத்தைக் கிள்ளி விட்டார். நாயகன்
விக்ரம் பிரபு நன்றாகவே செய்திருக்கிறார்.
“மறந்தேன்” பாடல் மனதில் நிற்கிறது. ‘லவ்வுல லவ்வுல’ விழுந்துட்டேன் பாடலும் மனதில் விழுந்து இடம் பிடிக்கும்
பாடல்தான்.
வில்லனாக வரும் வம்சிக் கிருஷ்ணா நன்றாகச் செய்திருக்கிறார். குறிப்பாக டாய்லெட்டில் கட்டப்பட்டுக்
கிடக்கும் காட்சியில். நாயகியின் அம்மாவாக
வரும் சார்மிளா மகளுடன் சண்டை போடும் போதும் சரி, (கரண்டியால் மகளின் தலையில்
அடிக்கும் அம்மாவுக்கு ஈடுகொடுத்து நடிக்கும் மகளையும் நாம் பாராட்டியேத்
தீரவேண்டும்), காணாமல் போன மகளுக்காகக் கதறி அழும் போதும், போலீஸ் ஸ்டேஷனில்
புகார் செய்யும் போதும் நம் மனதைத் தொடுகிறார்.
நாயகியைத் தேடி வரும் நாயகனின் புலம்பல்களைக், கேட்கும் தூரத்தில் நிற்கும்
நாயகியை, நாயகன் காணாத போதும், நாயகியின் காதிலிருந்து விழும் கம்மல் கீழே நடந்து
போகும் நாயகனின் தோளில் விழுந்து, விழுந்தது என்ன என்று பார்க்கும் முன் தண்ணீரில்
விழுந்து கவனிக்கப்படாமல் போகும் போதும் உண்டகும் irony, கைக்கெட்டி வாய்க்கு எட்டாமல் போகும் காட்சிகள் அருமையாகக்
காண்பிக்கப்பட்டிருக்கிறது. கையில்
கொத்தும் காக்கையிடம், நாயகி ‘நாளை வா’ என்று சொல்லுமிடம் கண்களில் நீர் நிறைக்கிறது. வில்லன் நாயகியை மறைத்து வைத்த இடத்தைச் சொல்லவே மாட்டேன்
எனும் போது, நாயகியைக் காட்டிக் கொடுக்கும் கண்திருஷ்டி பொம்மையை சுற்றிப்
பறக்கும் காக்கைகளுக்குக் கிடைக்கும் கைத்தட்டல்கள் அந்தக் காட்சியை அவ்வளவு
அருமையாகக் காண்பித்த இயக்குனர் சரவணன் உட்பட அனைவருக்கும் உரியதே
. போலீஸ் ஆபீசராக
வரும் கணேஷ் தன் கதா பாத்திரத்தை நன்றாகவே செய்திருக்கிறார். வில்லனுக்கு ஏவல் செய்யும் போலீஸ் அதிகாரிக்குக்
கொடுக்கும் அடி, மிக்சரைத் தின்று கொண்டு மீசையைச் திருகி இப்படம் பார்க்கும் இது
போன்ற போலீசாருக்கு விழுந்தால் சரி. (atleast கேட்கும் போது
அவர்கள் மனசாட்சியிடம் இருந்தாவது.) பின்
அமைச்சர் அண்ணனின் மரணத்தை டயலாக்கில் புதைக்காமல் ஓரிரு ஷாட்டுகளில் காண்பித்து
இருக்கலாம். பின் கணேஷ் கடைசி சீனில் நாயகனிடம் ‘இந்த மாதிரி ஹீரோயிசம் காண்பிக்கறவங்க
கொஞ்சம் பெருசா மீசையை வைச்சுக்கணும்’ என்று சொல்லும் போது நமக்கும், ‘ஜிம்முக்கு போயி கொஞ்சம்
மசில்சும் சேர்த்துக்கணும்’ (அப்பா மாதிரி டாப் டு பாட்டம் வேண்டாம்.
அவசியமான இடங்களில் மட்டும்) என்று சொல்லத் தோன்றுகிறது. சின்னச்சின்ன விஷயங்களில் கூட ரொம்ப கவனமாக
இருந்த்தால் (டயரி, சென்ட், OP ரெஜிஸ்டர் etc) இடையில் எங்கேயும் ஓட்டையும் விழலை. இந்தப் படத்தைப்
பற்றி ‘வேற மாதிரி’ சொல்ல ஒன்றும் இல்லை. ‘பார்க்கற
மாதிரி’ படம்தான்.
நுணுக்கமான விமர்சனம்... நன்றி...
பதிலளிநீக்குஉங்கள் கருத்திற்கு நன்றி DD அவர்களே!!
நீக்குமத்த மூவி 'மாறி'யே... இந்த மூவிக்கும்... வெமர்சனம் 'மாறி'... ஏதோ எய்திகிறபா... நீ சொன்னா 'மாறி'... படம் பாக்கற 'மாறி'... இர்ந்துக்கினா ஓகே 'மாறி' தான்பா...
பதிலளிநீக்குநைனா ஏதோ என்கு மன்சுல பட்ட மாறி ஒரு வெமர்சனம் எய்திகிறேன்பா....அத்தயும் கண்டிகினதுக்கு நன்னிபா. அப்பப்ப இப்பால வந்து கண்டிகிணு போபா நைனா!!!! நன்றி நைனா!!
பதிலளிநீக்கு