தாயன்பு இல்லாத பிள்ளைகள்
இல்லை என்பது போலத்தான் தாய் நாட்டுப் பற்று இல்லாத மக்களும் இருக்க முடியாது. பெற்ற
தாய்க்கு பெருமை சேர்க்க விரும்பும் பிள்ளைகள், அதே போன்று தங்கள் பிறந்த
மண்ணிற்கும் தங்கள் சாதனையால் பெருமை சேர்க்க விழைவது இயல்புதான். ஆனால்,
துரதிர்ஷ்டவசமாக, அவர்களால் தங்கள் தாய் மண்ணில் சாதிக்க முடியாததை அந்நிய மண்ணில்
சாதிக்க முடியும் போது அவர்கள் அந்த சந்தர்பத்தை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள். மாற்றான் தாய் மண் அவர்களை கரம் நீட்டி
அணைத்துக்கொள்ளும் அளவு, பிறந்த தாய் நாடு அரவணைக்கவில்ல என்றே கூறலாம்.
சமீபத்தில், பாட்னாவைச் சேர்ந்த சாய்கட் குஹா என்பவர்க்கு
NASA வின் மிகக் கௌரவமான NASA Tech Brief Award , National
Space Programme and to the mission of the Jet Propulsion Laboratory, US க்கு இவருடைய இன்றியமையாத பங்களிப்பிற்காக
கௌரவிக்கப்பட்டிருக்கிறார். இவர் இந்தியாவில் IIT கான்பூரில் எலக்ட்ரிக்கல் இஞ்சினியரிங் முடித்துவிட்டு,
பின் அமெரிக்காவில், MIT யில் மேற்படிப்பு படிக்கச்
சென்று, டாக்டரேட் பட்டமும் பெற்றார். இப்போது இந்த அவார்டும் கிடைக்கப்
பெற்றிருக்கிறார்.. இது போன்று நிறைய
இளைஞர்களும், இளம் பெண்களும் அந்நிய நாடுகளுக்குச் சென்று அங்கு சாதனை புரிந்திருக்கிறார்கள். இருந்தாலும், இந்தியப் பெண்கள் நம் மண்ணில்
சாதிக்க முடியாததை அந்நிய மண்ணில் சாதித்தால் அது மிகப் பெரிய சாதனைதான்.
1961 ல் ஹரியானாவிலுள்ள, கர்நலில்
ஒரு இடைப்பட்ட குடும்பத்தில் பிறந்த கல்பனா சாவ்லா, எதிர்ப்புகளுக்கிடையே, சண்டிகரில்
உள்ள பஞ்சாப் இஞ்சினியரிங்க் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரிங்க் படித்து
முடித்த பின் ஒரு வருடம் கல்லூரியில் பணி புரிந்து, கிடைத்தப் பணத்துடன் USA ஐ அடைந்த அவரது திறமையையும், ஆர்வத்தையும்
கண்ட அமெரிக்கா அவருக்கு உயர்கல்வி பெற அனுமதித்ததோடு மட்டுமல்லாமல், 1997ல் அவரை
அவரது நிறம் பாராது, பிறந்த நாடு பாராது, அவர் பெண் எனும் பாலும் பாராது,
கொலம்பியா விண்வெளிக்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பி அவரது கனவை நனவாக்கி,
விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய விண்வெளிப்பெண் என்ற புகழையும் கொடுத்தது. அதே
சமயம், கல்பனா சண்டிகர் இஞ்சினியரிங்க் கல்லூரியில் ஏரோநாட்டிகல் இஞ்சினியரிங்க்
படிப்பில் சேர, கல்லூரி முதல்வருடனும், பேராசிரியருடனும் நீண்ட போராட்டம் நடத்த
வேண்டியிருந்தது. ஒரு பெண்ணுக்கு உகந்ததல்ல
ஏரோநாட்டிகல் இஞ்சினியரிங்க் என்பது அவர்கள் வாதம். சேரவிரும்பும் பெண்ணின் attitude, aptitude, interest, and efficiency,
இது
ஒன்றும் அவர்களுக்கு வேண்டாம்.
மனுஸ்ம்ருதியில் பெண்களுக்கு இது
போன்ற கல்வியறிவு கொடுக்கக் கூடாது என்று எழுதப்பட்டிருக்குமோ என்னவோ?. இப்படிப்
பாரதப் பெண்ணின் பெருமையை உலகறியச் செய்த கல்பனாவிற்கே முட்டுக்கட்டை போட்டவர்கள்
நம்மவர்கள். “முயற்சி திருவினையாக்கும்
..........” என்னும் வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க, முயன்ற அவருக்கு
உதவிக்கரம் நீட்டிய நாட்டை, இது போன்ற நன்மைகள் செய்ததற்கு, இப்போதும் செய்வதற்கு
நாம் வாழ்த்தியே தீர வேண்டும்.
இதே போன்று, கேரளா, மலப்புரம் மாவட்டத்தில் பெரும்பான்மையான
முஸ்லிம் பெண்கள் 18 வயதிற்குள் குழந்தையும் கையுமாகக் திரிவதுதான் வழக்கம். (பெண்ணின்
திருமண வயது 18 என்பதைக் குறைக்க வாதாடிக் கொண்டிருக்கும் மத பண்டிதர்கள் உள்ள
பிரதேசம். சில நேரங்களில், இதை விட
வேடிக்கையாக எல்லாம் பேசுவார்கள்.
ஒருமுறை, ஆணுக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருக்க வேண்டிய அவசியம்
பற்றி பேசும் போது, பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை வரும்போது ஆண்களின் தேவைகளைப்
பூர்த்தி செய்ய வேறு ஒன்றோ, அதிலும் கூடுதலாகவோ மனைவிகள் வீட்டிலிருக்க வேண்டியது
அவசியம் என்று ஒரு மத பண்டிதர் கூறினார் என்றால் பாருங்களேன்) இப்படிப்பட்ட
சமூகத்திலிருந்து, கல்பனாவைப் போல் நெஸ்லி நீலன் கோடன் எனும் பெண், இடக்கரை
என்னும் சின்ன கிராமத்திலிருந்து (அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி அறிவு எதற்கு என
நினைக்கும் சமூகத்திலிருந்து) அயர்லாந்து சென்று ஆராய்ச்சிப் படிப்பை மேற்
கொண்டிருக்கும் போதே விண் வெளியிலுள்ள ஒரு புதிய நீல நட்சத்திரத்தைத் தன்
நண்பர்களுடன் சேர்ந்து கண்டுபிடித்திருக்கிறாள்.
அந்தக் கண்டுபிடிப்பிற்கு உதவி செய்த அயர்லாந்து நாட்டை நாம் பாராட்டத்தானே
வேண்டும்!! இப்படியாக திறமை
உள்ளவர்களுக்கு இங்கு நம் நாட்டில் கிடைக்காத வாய்ப்பும், உதவியும், பாதுகாப்பும்
வெளி நாட்டில் கிடைத்தால், அதுவும் சாதி பாராது, மதம் பாராது, இனம் பாராது,
அரசியல் பாராது கிடைத்தால், எல்லாவற்றிற்கும் மேலாக மனித குல நன்மைக்கு உதவிகரமாக
அமையும் ஒன்றிற்குத்தான் நம் திறமை பயன்படப் போகிறது என்றும் தெரிந்த பின், நம்
முனோர்கள் சொன்ன, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் வாக்கை மனதில் கொண்டு மனித இனத்திற்கு வெளிநாடு சென்று தொண்டாற்றுவதில்
வருத்தப்பட என்ன இருக்கிறது?
இப்படிப்பட்ட, சாதிக்கவும், வாழவும் ஒரு நல்ல சூழல் அந்நிய மண்ணில்
கிடைக்கும் போது நம்மூர் இளைஞர்களும், இளைஞிகளும் வெளிநாட்டுக்குச் செல்லத்
துடிப்பதில் தவறில்லையே! இந்தியாவில் Brain drain என்று கூப்பாடு போடவும் தேவை இல்லை!
இந்தியப் பெண்கள் நம் மண்ணில் சாதிக்க முடியாததை அந்நிய மண்ணில் சாதித்தால் அது மிகப் பெரிய சாதனைதான்.//தங்களின் வாதம் சரியே சரியான வாய்ப்புகள் இங்கு நிராகரிக்கப்பட்டு மற்றோரால் அங்கிகரிக்கப்ப்படும்போது மட்டும் அவர்களின் தேசப்பற்று மிகுந்துவிடுகிறது.
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர்கள்! மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் , கருத்திற்கும்!
பதிலளிநீக்குநல்ல பதுவு! இருந்தாலும் தூக்கம் என் கண்களை தழுவுகிறது!
பதிலளிநீக்குவோட்டு +1
நாளை என் கருத்துக்கள்!
நன்றி நன்றி நம்பள்கி!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குசகோதரன்
சாதிக்க பிறந்தவர்கள் நம் தமிழர்கள்... பதிவை மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
பதிலளிநீக்குசகோதரன்
த.ம 4 வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி சகோதரரே! உங்கள் வருகைக்கும், ஆதரவிற்கும், கருத்திற்கும் நன்றி நன்றி!!
நீக்குசாதி பாராது, மதம் பாராது, இனம் பாராது, அரசியல் பாராது கிடைத்தால் நல்லது தான்...
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது சரிதான்!! இது மாதிரியான ஒரு சூழல் நம்ம ஊரிலேயே கிடைத்தால் நம் எதிர்கால சந்ததியினர் இங்கேயே சாதித்து விடுவார்களே!!! கருத்திற்கு மிக்க நன்றி DD !!
நீக்குஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...
பதிலளிநீக்குஇன்னா பண்றது...? "இக்கரைக்கு அக்கரை பச்ச"ன்னு சொல்லி சொல்லியே கவுத்துப் புடுறாக நம்பள...
கண்டுகினதுக்கு நன்றி நைனா!!! "இக்கரைக்கு அக்கரை பச்ச னு இல்ல நைனா அந்தப் பச்சைல சாதி, மதம், அரசியல் எல்லாம் இல்ல அதான் நம்ம பசங்க அங்க போயி வூடு கட்டி அட்கிறானுங்க....நைனா...அந்தப் பச்சை இங்கியே கெட்ச்சுச்சுனா நம்ம பசங்க இங்கியே வூடு கட்டி அட்க்க மாட்டானுங்களா?!!!! அதான்....அப்பால போயி கண்டுகினதுக்கும், இப்பால வந்து எய்தினதுக்கும் டேங்க்ஸ்பா நைனா...அப்பப்ப கண்டுக்க நைனா....
நீக்குஉயர் மட்டத்தில் இருப்போரின் இம்மாதிரி முட்டாள்தனங்கள், நாட்டை ஆளுவோரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு அவர்களும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பதிலளிநீக்குஇப்படி நாம் ஆசைப்படுகிறோம். இது நிறைவேறவா போகிறது?!
நாம் ஆசைப்படுகிறோம்! எவ்வளவோ ஆதங்கம்!! நீங்கள் சொல்லுவது போல் நிறைவேறவா போகிறது?!! கண்டிப்பாக சந்தேகம்தான்!! அரியணையில் இருப்பவர்கள் மனம் வைத்தால்தான்!!! மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும், ஆதரவிற்கும். உங்கள் இடுகைக்கு பின்னூட்டம் அளிப்பதற்கான பெட்டி இல்லையே! சற்று கவனிக்க முடியுமா?? நன்றி!!!
நீக்கு[[இந்தியாவில் Brain drain என்று கூப்பாடு போடவும் தேவை இல்லை!]]
பதிலளிநீக்குஇந்த Brain drain என்பதே சும்மா! இந்தியாவில் உபயோகப்படுத்த முடியாத Brain எங்கு போனால் என்ன?
அதுவும் சரிதான் நம்பள்கி! Patriotism என்று சும்மா சொல்லிக் கொண்டு, கொடிக்கு மரியாதை, ஜனகண மன வுக்கு எழுந்து நிற்பது - கண்டிப்பாக மரியாதை செய்ய வேண்டியதுதான்- ஆனால் சர்வ்தேச அளவில் இந்தியா எழுந்து நின்று ஒரு மரியாதை பெறும் அளவு பதவியில் இருப்பவர்கள் ஒன்றும் செய்யாமல் இருக்கும் போது இதெல்லாம் சும்மா வெத்து வேட்டு என்றுதான் தோன்றுகிறது! (விவரணம் நீலவண்ணனின் புதிய பதிவு நம் அரசியல் வாதிகளின் ஊழல் முகத்தை ஆதாரங்களுடன் காட்டும் பதிவு நல்ல பதிவு) எதிர்கால சந்ததியினர்க்கு இந்தியாவின் மீது மரியாதை வருமா என்பது சந்தேகம்தான். இப்பவே அப்படித்தானே இருக்கு!! நன்றி நம்பள்கி!!
பதிலளிநீக்கு