“இன்று போகட்டும். நாளை
வருகிறேன். ஷூட்டிங்க் இருக்கிறது”, என்ற மலையாள நடிகர் திலீப் இன்று வேறு வழியின்றி
கொச்சி Central Excise and Customs Office ல் ஆஜராகி இருக்கிறார். தீலீப் “ஜனப்பிரிய நடிகர்” என்ற பெயரில் கேரளாவில் அழைக்கப்படுபவர். செலக்டிவாக படம்
செய்து தனக்கென்று ஓரிட்த்தை மலையாள திரை உலகில் தக்க வைத்துக் கொண்ட ஒரு திறமை
மிக்க நடிகர்.

(பெரும்பாலும்,
மோஹன்லால், மம்மூட்டிகள் தான் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்-இருவரும் மிகச்
சிறந்த நடிகர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்தானே). திலீப், கதைகளையும் கதா பாத்திரங்களையும்
தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகளையும் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக
இருப்பவர். அது போல பண விஷயத்தில் அதை விட
கவனமும் விழிப்புணர்வும் உள்ளவர். சில மாதங்களுக்கு
முன் மம்மூட்டி,
மோஹன்லால் போன்ற சூப்பர்
ஸ்டார்களுக்குக் கிடைத்ததை விட, கணக்கிட்டுப் பார்க்கும் போது இவருக்கு ஊதியம்
கூடுதல் என்று பரவலாகப் பேசப்பட்ட்து.
இவர் ஊதியத்துடன், ஓரிரு
மாவட்டங்களுக்கான வெளியீட்டு உரிமையையும் தயாரிப்பாளரிடமிருந்து பெறுவதுதான்
காரணம் என்றும் பேசப்படுகிறது.
இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு இவர் மலையாள சூப்பர் ஸ்டார்களை
ஓவர்டேக் செய்தாராம். எப்படியோ வரி
இலாக்காவிற்கு இந்தச் செய்தி காதில் தேனாய் பாய்ந்திருக்க வேண்டும். “மாயா மோஹினி”, “ஸ்ருங்காரவேலன்” (சிங்காரவேலனைத்தான், ஸ்ருங்கார
வேலனாக்கியிருக்கிறார்கள். “ஜொள்ளு”
வேலன். கேரளத்தில் மதம் பார்த்து இறைவனைக் கிண்டல் செய்யலாம். அல்லாஹுவை கேலி செய்து
கல்லூரி மாணவர்களுக்கு வினாத்தாள் தயாராக்கிய கேரளா, மூவற்றுப்புழையைச் சேர்ந்த
ஒரு ப்ரொஃபசரின் கை இனி ஒரு போதும் அந்தக் கை வைத்து எழுத முடியாத அளவிற்கு
வெட்டப்பட்டுவிட்டது. இப்போதும் அவர் பெட் ரெஸ்டிலதான்) போன்ற படங்கள் மூலம் அவருக்குக் கிடைத்த அதிக
பணத்திற்கான வரி கட்டப்படவில்ல என்று வரி இலாக்கா, அவர் மேல் குற்றம் சாட்டி
விசாரணைக்கு அழைத்திருக்கிறது. “நாடோடி மன்னன்” எனும் திரைப்படத்தில் “பத்மநாபதாசனாக”வும் பத்மநாப தாஸர்களின் தானாகவும் நடித்தும், திருஅனந்தபுரியில் அனந்தசயனம்
செய்யும் பத்மநாபன் அவரைக் காப்பாற்ற முன் வரவில்லை.
பின் குறிப்பு: அவருடைய தலைவிதி'வசம்' வேறு ஒரு நல்ல சம்பவம் கூட நடக்க
இருக்கிறது. இனி வருவது அவருடைய “’தலைவி’ திவசங்கள்” (நாட்கள்). அவரை மணந்தது முதல்
இதுவரை நடிக்காமல் இருந்த அவரது மனைவி மஞ்சுவாரியார் எனும் மிகச் சிறந்த
நடிகை மீண்டும் திரையுலகிற்கு வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக