ஞாயிறு, 22 டிசம்பர், 2013

அரட்டை அகம் 5 எங்கள் கதை...இது உங்களின் கதை.....தமிழில் எழுதல் எங்கள் வேலை!!.....


நாரதர்: சம்போ ! மாஹா தேவ! சம்போ மஹா தேவ!!

மஹாதேவர்: என்ன நாரதரே! அதிசயமாக என் பெயரைச் சொல்லி இந்தப் பக்கம்?!! வழக்கமாக தாங்கள் வைகுண்டத்தில் தங்கள் நாராயணனிடம் தானே போவீர்கள்! அதுவும் இது மார்கழி மாதம் விஷ்ணு லோகத்தில் திருப்பாவை ஓதிக் கொண்டு இருப்பீர்கள் என்று நினைத்தேன்!!! என்ன விஷயம்? ஏதோ இருக்கிறது!

நா: ஐயோ! அதை ஏன் கேட்கின்றீர்கள்! பூலோகத்தில் துளசிதரன் என்று ஒருவர் உங்கள் தீவிர பக்தன், ரசிகன், உங்கள் பெயரில் ஒரு வலைப்பூவே தொடங்கி அவரும் அவர் தோழியுமாக ஏதோ எழுதி வருகின்றார்கள்!  உங்கள் லோகத்திற்கு நான் விசிட் செய்ய வில்லை என்றால் அவர் தில்லைஅகத்துக்குள் நான் என்டெர் செய்ய அனுமதி கிடையாது! அது சரி மார்கழி மாதத்தில் உங்களையும் தானே திருவெம்பாவை சொல்லிப் பாடுகின்றார்கள். அது மட்டுமா, எப்போதும் சைவர்கள் தேவாரமும், திருவாசகமும் பாடிக்கொண்டுதானே இருக்கின்றார்கள் அப்புறம் என்ன?

மஹா: என்ன செய்ய உங்கள் பூலோகாத்தில் எங்கள் இருவரையும் வடதுருவம், தென் துருவமாக ஆக்கித்தானேப் பார்க்கின்றார்கள்! உங்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி போல, பின்னர், கமல் ரஜனி போல பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்....சரி அதை விடுங்கள்! உங்கள் பூலோகப் பட்டை, நாமப் பிரச்சினை இங்கு வேண்டாம்! அது சரி! என் பெயரில் வலைப்பூவா? வலை தெரியும், பூ தெரியும்.  காதுல பூ என்பது போல ஏதாவது...... அது என்ன வலைப்பூ.... அதுவும் என் பெயரில்?

நா: அதுவா வலைப்பூ என்றால் இணயதளத்தில்.....ம்ம்ம்ம்ம் (இவருக்கு எப்படிச் சொல்லிச் தொலைக்க?! எதையாவது சொல்லி அந்த நக்கீரன் மாதிரி மாட்டிக்கக் கூடாது) வாசிக்கும் ஒரு தம்மாத்துண்டு இதழ் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்!  அதில் அவரவர் என்ன வேண்டுமானாலும் தங்களுக்குத் தோன்றியதை எழுதுவார்கள்! யாருடைய தலையும் உருளும்! உங்கள் அதான்பா “கடவுள் தலையிலிருந்து, உலக அரசியல தலைவர்கள் எல்லார் தலையையும், நடப்புகள் எல்லாத்தையும் உருட்டுவார்கள். கிழிப்பார்கள்! நக்கலடிப்பார்கள்! எல்லாமும்தான்! நீங்க எப்போ பூலோகத்துல இருந்தீங்க...லெமூரியாவா அப்படி இப்படினு எல்லாம் ஆராய்ஞ்சாங்க.......சார்வாங்கன் அப்படினு ஒருத்தர் இருக்காரு இன்னும் நான் அவர் வலைக்குள்ளப் போகல......அவரு வந்து நல்ல argument பாயிண்டு எல்லாம் வைச்சுட்டுப் போவாரு....ஆது சரி உங்கள் கழுத்தில் உள்ள “கருடா சௌக்கியமா னு கேக்குமே அதக் காணூமே?

மஹா: அதைத்தான் நானும் ஒரு 4,5 நாட்களாகத் தேடிக் கொண்டு இருக்கிறேன்! எனக்கென்னமோ அது பூலோகத்திற்கு போயிருக்குமோ என்ற சந்தேகம்!

நா: ஓ!! அதுதான் விஷயமா.....நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உங்கள் பாம்பு “மலரின் நினைவுகள் மலர்வண்ணன் அலுவலகத்தில் இருந்ததுதான் என்று நினைக்கிறேன். அவர் வீடியோ கூட போட்டுருக்காரு.  அதப் பார்த்து உங்க பாம்பானு பாருங்க!! அவரு அதப் பிடிக்க வனத்துறையக் கான்டாக்ட் பண்ணி அப்புறம் பாம்பு பிடிக்கறவரைத் தொடர்பு கொண்டு..... ஆனா அந்தப் பாம்பாட்டி இவர நல்லா ஆட்டி வைச்சுருக்காரு.  பாம்பு இப்ப எலிவளைக்குள்ள.  அப்பப்பத் தலைய நீட்டி பாக்குதாம். தலைய நீட்டும் போது பாம்பாட்டிய கால் பண்ணனுமாம்! அது மட்டும் இல்ல அவர போயி வெத்தல பாக்கு வைச்சு கூட்டிட்டு வேற வரணுமாம்....அவரு கூட்டிட்டு வர வரைக்கும் இந்தப் பாம்பு அப்படியே வெளிய தலைய நீட்டிட்டு பராக்கு பார்த்துட்டு இருக்குமாம்......நல்ல தமாஷ்!

மஹ: பாவம் மலர் வண்ணன், பாம்பு பிடிக்கின்றவரை ஏன் தொடர்பு கொண்டார் அவர்? என்னைக் கூப்பிட்டிருந்தால் போதுமே!  நான் போய் பிடித்துக் கொண்டு வந்திருப்பேனே!
 
நா: சொல்லறேன் அவர்கிட்ட!  இதுக்குத்தான் நான் போனதடவையே சொன்னேன்! ஒரு நல்ல லாப்டாப் வைசுக்கங்கனு! பூலோகத்த தொடர்பு கொள்ளறது ரொம்ப ஈசி! டெக்னிகல் ஹெல்புக்கு, DDனு பேரு! அவரைக் கான்டாக்ட் பண்ணலாம்!

மஹா: DD!? இந்த விஜய் டி.வி ல கூட வருவாங்களே? அழகாக! திவிய தர்ஷினினு...அவர்களா....அப்படியே என்னை ஒரு பேட்டி எடுக்கச் சொல்லுங்கள்!..நம் டைரக்க்டர் அதுதான் நம் பாம்பு ஒரு படம் எடுக்கப் போகிறார்......?

நா: (என்ன இவரு பயங்கரமா இங்க இருந்துகிட்டு டி.வி.லாம் கூட பார்த்து ஜொள்ளு விடுவாரு போல...சொல்லுவமா அதே சானல்ல உங்களப் பத்தி கூட சீரியல் எல்லாம் வருதுனு.....) ஐயோ! மஹாதேவா! நான் சொல்லுவது அவர் அல்ல! இவரு திண்டுக்கல் தனபாலன்! நல்ல மனுஷர் சுருக்கமாக DD  னு அழைக்கிறாங்க!!தங்கமான குணசீலன்! உடனே ஹெல்ப் பண்ணுவாரு!  நீங்களூம் உங்கப் பங்குக்கு மக்களக் கிழிக்கலாம்!

மஹா: அப்படியென்றால் அவரை உடனே தொடர்பு கொண்டால் ஆயிற்று! சரி வேறு யார் யார்?

நா: (இன்னும் கம்ப்யூட்டரே வாங்கல....) மதுரைத் தமிழன்னு ஒருத்தர் இருக்காரு! அவரு அமெரிக்காவுல இருந்து விடுற ரவுசு இருக்கே!...தாங்க முடியல...அவரு என்னிக்கு அவரு வொய்ஃப் கிட்ட கல்தா வாங்கப் போறாருனு தெரில!!

மஹா: என்ன நாரதா இது என்னென்னமோ வார்த்தைகள் பேசுகிறீர்! தேவலோக பாஷை மறந்து விட்டதா?! அது என்ன ரவுசு..... ...கல்தா...
.
நா: அதுவா அவரு மனைவியை வைத்து அடிக்கும் லூட்டி...பூரிக்கட்டையால் அடி வாங்குவாராம். வாங்கினாலும் அவருடைய லூட்டியை விட மாட்டாராம்.... தாங்கல...அதான் அவரு மனைவி அவர என்னைக்குத் தொரத்த போறாங்கனு.......ரொம்ப சூப்பரான நகைச்சுவை! அரசியல் எழுதினாலும் சூப்பர்தான்! கலாய்ச்சு தள்ளுறாரு! அப்புறம் என் தமிழ் சென்னைக்குப் போனதுல அங்க முட்டா நைனானு ஒருத்தர் அவர்கிட்ட பேசினதுல வந்த எஃபெக்ட். தப்பா எடை போட்டுறாதீங்க. அவுரு சென்னைத் தமிழ்ல பிஸ்தா.  செந்தமிழலயும் வூடு கட்டி அடிப்பாரு. தலையில்லா முண்டம்னு ஒண்ணு படா ஷோக்கா எய்துராரு... பேருதான் அப்படி...முட்டா நைனாலாம் இல்ல..படா நைனா
கவியாழி கண்ணதாசன்னு......கவிதைல பின்னுராரு...ரொம்ப ஆழமானக், கருத்துள்ள கவிதைகளா இருக்கும். மேலும்,  அழகா எழுதற அதுவும் கவிதை பாடறவங்க இருக்காங்க பெண்கள்...நல்லா பதிவு எழுதற பெண்கள் இருக்காங்கா......நான் அவர்கள் பக்கம் போகல..ஹி...ஹி....நிஜம்மா தேவா.....மத்தவங்க வலைக்குள்ள போனபோது தெரிஞ்சுகிட்டேன்...அடுத்த வாட்டி அவங்கள கண்டுக்குவோம்....

இராய செல்லப்பானு ஒரு பெரியவர் தமிழ்ல வலைப்பூவுல கொடி கட்டிப் பறக்கறாரு!!. அப்புசி தொபுசினு எல்லாம் கலந்து கட்டி சூப்பரா எழுதுராரு. இப்ப கலைமகள்ல சாந்தி நிலவ வேண்டும் அப்படினு கதை எழுதி பரிசு வாங்கி இருக்காரு.. இதையும் கவியாழிதான் எழுதி இருந்தாரு. பொங்கல் போட்டிக்கு நடுவராகவும் இருக்கப் போகிறார்! திரு செல்லப்பாவை வாழ்த்துங்கள் மஹாதேவா!!

மஹா: இராய செல்லப்பாவிற்கு எப்போதுமே எமது வாழ்த்துக்கள் உண்டு!

நா: அப்புறம், ரூபன் அப்படின்னு ஒரு இளவல். சிறியவர் ஆனாலும் எல்லா பதிவர்களையும் ஊக்குவிப்பவர். புது விஷயமாக பாடலுடன் கதை சொன்னவர். உங்கள் அருமை மகன் முருகன் படம்தான் அவரது ஒரு வலைப்பூவில். பெரிய போட்டிகள் எல்லாம் நடத்துபவர். இப்போதும் பதிவர் பாண்டியனுடன் பொங்கல் போட்டிகள் நடத்துகிறார். திரு பாண்டியன் பல நல்ல கருத்துக்கள் அடங்கிய கட்டுரைகள் தரும் தமிழ் ஆசிரியர். பதிவர் ரமணி அவர்களும் இந்தப் போட்டியில் நடுவர். இவரது வலைப்பூ பெயரே அருமை! தீதும் நன்றும் பிறர் தர வாரா! நல்ல உள்ளம் கொண்ட அற்புதமான கவிஞர்! பதிவர்களுக்கு ஊக்கம் தருபவர்.!!! விவரணம் நீலவண்ணன் சமூக, அரசியல் கட்டுரைகளை அலசி ஆராய்ந்து பிட்டு பிட்டு வைப்பவர்!! உங்கள் இருவர் பெயரால் சமூகத்தில் உள்ள, நடக்கும் மூட நம்பிக்கைகளைச் சாடுபவர். அதிகார வர்கத்தையும் சாடுபவர்! கரந்தை ஜெயக்குமார் கணித ஆசிரியராக இருந்தாலும் தமிழில் அசத்துகிறார். இன்று, தான் ஆசிரியர் என்பதை நிரூபித்து மலாலா என்ற ஆஃப்கானில் கல்விக்குப் போராடும் பெண்ணைப் பற்றி விளக்கமான தகவல் கொடுத்திருக்கிறார். அடுத்து கும்மாச்சி கலக்கல் காக்டெய்ல் அப்படின்னு கலக்கி கடைசில ஒரு ஸூப்பர் ஃபிகர் படம் போட்டு எல்லாரையும் ஜொள்ள வைப்பவர்! அந்தச் ஜொள்ளுக்காக நான் போவதுண்டு!  ஜோக்காளி வித விதமான ஜோக்குகளை அள்ளித் தெளித்து ஜோக்குவிப்பவர்!! படா தமாசு டைம்லி விட் பேர்வழி!! கூலிங்க் க்ளாஸ் போட்டு அசத்தலான ஃபோட்டோ! அந்தக் கூலிங் க்ளாஸ் ரகசியம் என்னனு தெரில!! காமக் கிழத்தன்- பேர் வித்தியாசம்தான்! அருமையான பதிவர்! எழுத்தாளார். பெரியாரின் கருத்துக்கள் சொல்லும் விதத்தில் கட்டுரைகள் எழுதுபவர். கடவுளைக் குறித்துக் அதான் உங்களப் பத்தி நீங்க இருக்கீங்களா இல்லியானு.......கேள்வி எழுப்புபவர்! கம்ப்யூட்டர் வந்த்தும் கொஞ்சம் எட்டிப் பாருங்க அவரை!......பதிவர் பரிதிமுத்துராசன் நல்ல நல்ல அனுபவக் கட்டுரைகளையும், கருத்துள்ளப் பதிவுகளையும் தருபவர்.  பதிவர் வெங்கட்நாகராஜ் நல்ல அற்புதமான பதிவர். போட்டிகளூம் நடத்தி தமிழ் வளர்ப்பவர். இப்படிப் பல நிறைய தமிழ் பதிவர்கள் நல்ல உள்ளம் படைத்தவர்கள் இணையத்தில் உலாவருகிறார்கள். உங்கள் அருமை மைந்தன் தமிழ் கடவுள் முருகன் கிட்டச் சொல்லுங்க...நிறைய தமிழ் ஆர்வலர்கள் இருக்காங்கனு....சந்தோஷப் படுவாரு....

மஹா: அது சரி நீங்கள் சென்ற முறை இங்கு வந்த போது நக்கீரர் என்று சொன்னது போல் நினைவு! எமது நக்கீரரா? அவர் எப்படி இங்கே!!?

நா: அவரைப் ப்ற்றிச் சொல்வதற்கு முன், இப்போது பூலோகத்தில் அமளிப்படும் தேவயானி பற்றிச் சுருக்கமாகச் சொல்கிறேன்.

மஹா: தேவயானி? ஓ!! மார்கழி மாதம் கோலங்களுக்குப் பேர்போன மாதம், தமிழ் நாட்டில். அதனால் “கோலங்கள் ஃபேமஸ் தேவயானி?

நா: (நாசமாப் போச்சு! வெளங்கிச்சு இந்தாளு இங்கருந்து ஒரு தமிழ் சீரியல் கூட விட்டு வைக்கறது இல்ல போல! நியூஸே பாக்க மாட்டாரு போல) மஹாதேவா! அவரல்ல! இது வேறு! ********************* இதுதான் நடந்தது!

மஹா: ஓ!! இப்படி எல்லாம் கூட நடக்கின்றதா!! தேவலோகத்து அரசியல் போலத்தானா அங்கும்!!! சரி! அவருக்கும் நக்கீரருக்கும் என்ன சம்பந்தம்?

நா: அது ஒன்றும் இல்லை. நேற்று பின்னூட்டத்தில் துளசிதரன் “சட்டத்தில் ரோல்மாடல் யாரேனும் இருக்கிறார்களா? இந்தியாவில்? என்று கேட்டிருந்தார்.  அதற்கு நக்கீரர் அதாவது நம்பள்கி நக்கீரர் (நந) “தேவயானி என்று பதில்  கொடுத்தார்!

மஹா: அந்த நக்கீரரைக் கூப்பிடும்!.............நக்கீரா! உமது பதிலில் பெயர் குற்றம், செயல் குற்றம், பொருள் குற்றம் இருக்கிறது!

நந: இல்லவே இல்லை! எனது பதில்தான் சரி! அதுவும் இந்தியாவைப் பொறுத்தவரை! நாரதரே இத அவர்கிட்ட சொல்லும்! நான் கோழி புராணம் நாளைக்கு போடனூம் பிஸியா இருக்கேன்.....Dont’ disturb me!!!  அப்புறம் உங்க தேவலோகம் ஊழல் நாளைக்கு நாறிடும்!!! 

மஹா: அது எப்படி நக்கீரரே! தேவயானியை சட்டத்தின் ரோல்மாடல் என்று சொல்ல முடியும்? அதுவும் இல்லாமல் என்னிடம் போட்டி போடுகிறீர்!!!  நாரதரே! இது என்ன இவர் இப்படிச் சொல்கிறார்!

நா: அவர் அப்படித்தான்! அவர் பதில் நக்கல் பதில் தேவா! அவர் இந்தியாவைக் கிண்டலடிக்கிறார்! தேவயானியையும்! நக்கல்ஸ், கிண்டல்ஸ், உருட்டல்ஸ், கிழித்தல்ஸ் எல்லாம் செய்வார்!  உமக்கு அது புரியாது! இவர் உமது நக்கீரர் அல்லர்! நீங்கள் நெற்றிக் கண்ணத் தொறந்ததும் எறிவதற்கு....உங்கள் பப்பு இவரிடம் வேகாது!!!  நாளை கோழி புராணம் எழுதப் போகும் நக்கீரர்!

மஹா: ஆஹா!! அருமை! என்னைப் பற்றி பெரியபுராணாம் பாடியவர் சேக்கிழார்! இப்போது எமது அருமை மைந்தன் சேவற் கொடியோனைப் பற்றி எழுதப் போகிறாரா!!

நா: (நாசமாப் போச்சு! கிழிஞ்சுது) இவருக்கு இத எப்படிச் சொல்லிப் புரிய வைக்கிறது!! பெண்கள் ....கிளு..கிளுனு சொன்னா வெளங்குமா??!! ம்ம்ம்) தேவா! அது சேவல்! இவர் எழுதுவது கோழி!! அதாவது.......பெண்கள் புராணம் .....கொஞ்சம் அஜால்ஸ், குஜால்ஸ் எல்லாமும் இருக்கும்!!!! உமக்குப் புரியாவிட்டால் கண்டுக்காம போகணும்! கேள்வி எல்லாம் கேக்கப்படாது! அப்புறம் வடிவேலு அழுறா மாதிரி நீங்களும் அழ வேண்டிருக்கும்!!!

மஹா: என்ன!? பெண்கள் மேட்டர் தானே! அப்போதே அந்த நக்கீரர் பெண்கள் கூந்தல் நறுமணம் பற்றி விவாதித்து என்னைத் திருவிளையாடல் செய்ய வைத்தவர்தானே! இது எல்லாம் ஜுஜூபி!! இந்த நந கோழி புராணம் எழுதட்டும். நானும் தெரிந்து கொள்கிறேன்! அப்போதுதான் என்னால் இந்த நக்கீரருடன் விவாதிக்க முடியும்!  வாசிக்கக் காத்திருக்கிறேன் என்று சொல்லும்.
 
அது சரி! நாரதா நீரும் உமது பங்கிற்கு ஒரு வலைப்பூ உமது ஃபேவரிட் பரந்தாமன் பெயரில் ஆரம்பிக்கலாமே! கலகம் செய்து குட்டையைக் குழப்பலாமே! குழப்பும் போது உமது தமிழைத் திருத்திக் கொள்ளும்! முருகனுக்குக் கோபம் அந்து விடும்!

நா: (ஆஹா! இவரு விடமாட்டாரு போல) ...தேவா..!!முதல்ல நீங்க ஒரு ப்ளாக் ஆரம்பிங்க உங்களுக்கும் இந்தத் தமிழ் புரிஞ்சுரும்.....தேவா ஏற்கனவே இந்தியா கலகத்தால குட்டையா.... குழம்பித்தான் கிடக்கு.  இதுல நான் வேற கலகம் செய்து குழப்பணுமா!? வெளங்கினாப்புலதான்! அந்தக் குட்டை நமக்கு வேண்டாம்பா வுடு ஜூட்! எஸ்கேப்!!





15 கருத்துகள்:

  1. ஒரு வலைப்பூவே தொடங்கி அவரும் அவர் தோழியுமாக ஏதோ எழுதி வருகின்றார்கள்! ///ஏதோ அல்ல சிறப்பாகவே எழுதி வருகிறீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கவியாழி!! உங்கல் ஊக்கத்திற்கும், பாராட்டிற்கும், மிக்க மிக்க நன்றி!!!

      நீக்கு
  2. வணக்கம்
    நண்பரே..

    எல்லா வலைப்பூ பதிவர்களையும் ஒரு வித்தியாசமான முறையில் மிக அழகாக தொகுத்து வழங்கிய விதம் அருமை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே!!! நீங்கள் எல்லோரும் தரும் ஊக்கம்தான்! வேறு என்ன வேண்டும் சொல்லுங்கள்!!! நன்றி நண்பரே உங்கள் கருத்திற்கு, பாராட்டிற்கும்!!!

      நீக்கு
  3. வணக்கம்

    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. வெகு சீக்கிரத்தில் வலைச்சர ஆசிரியராகி விடுவீர்கள் ...இப்படித்தான் பதிவர்களை சுவாரசியமாக அறிமுகப் படுத்துவீர்கள் என நினைக்கிறேன் !
    என் கூலிங் கிளாஸ் ரகசியம் ....வேறொன்றுமில்லை ,மெட்ராஸ் ஐ என் மூலமாய் யாருக்கும் போகக் கூடாதுன்னுதான்!
    +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகவான் ஜி நன்றி! ஐய்யய்யோ ஜி! நோ பொறுப்புஸ் Now!!! long way to go!! ஸோ உங்க கூலிங்க் க்ளாஸ் ரகசியம் இவ்வளவு தானா?!!! நான் ஏதோ சுவாரசியமா ஏதாவது இருக்கும்னு நினைச்சேன்!!! ஏமாத்திட்டீஙகளே பாஸ் ஜி!! சரி!! வருஷம் முழுசுமாவா மெட்ராஸ் ஐ!!! ஹா ஹா ஹா.....நன்றி ஜி!!!

      நீக்கு
  5. நார்தர் ரேஞ்சுக்கு சொம்மா வூடுகட்டி அட்சிக்கினியேபா...

    அப்பால... நம்பளப் பத்தி இந்த சனங்களாண்ட எட்த்து சொல்லிக்கின பாத்தியா... ஒன்க்கு ரெம்ப டேங்க்ஸ் வாத்யாரே...

    இன்றோடுசு ஆய்க்கின அல்லாருக்கும் வாய்த்துக்கள்பா...

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நைனா என்னாபா இப்புடி சொல்லிப்புட்ட!! வாத்யாரே நாம அல்லாம் ஒரே கூட்டம்தனேபா....எய்துர கூட்டம்!! நீ ஷோக்கா எய்துரபா அதான் எட்து வுட்டேன்...அம்புட்டுதான்...இதுக்கு போயி டேங்க்ஸ்னுடு.....

      பதில் மொயி டேங்க்ஸ்பா....இன்னாண்ட வந்து கர்த்து சொல்லிக்கின பாரு அத்க்கு!!

      நீக்கு
  6. இன்று கோழி புராணம் இல்லை! இரண்டு காரணம்
    ஒன்று, எல்லோரர் தகப்பனும் ---சுக்ராச்சாரியார்---இல்லை என்பதை சொல்லியாக வேண்டும்.

    இரண்டு: கோழி இப்ப அடைகாத்துக்கொண்டு இருக்கு! விரைவில் கோழியுடன் கோழி 'குட்டி புராணம்!
    _____________
    பின்குறிப்பு:
    கோழி குஞ்சு என்பது கெட்ட வார்த்தை.அதனால் குட்டி.
    என் நண்பன் பெயர் குஞ்சான்--- எல்லாம் உங்க ஊரா-க்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க! நம்பள்கி! கோழி புராணத்திற்காகக் காத்திருந்தோம்! பரவாயில்லை! கோழி குட்டி புராணம் விரைவில் வரட்டும்! அதென்ன நம்பள்கி கோழி குஞ்சு....கெட்ட வார்த்தை......மனசுலாயில்லா!!! ஓ! குஞ்சு! .....மனசுலாயி..மனசுலாயி!!! "குட்டி" னாலும் அப்படியும் இப்படியும் தானே! நல்ல வார்த்தைகள் எல்லாம் கெட்ட வார்த்தைகள் ஆகுது!!!!!!ம்ம்ம்ம்ம்ம்

      நீக்கு
  7. நன்றி DD!! உகள் வாழ்த்திற்கும் உக்கத்திற்கும்!!!

    பதிலளிநீக்கு
  8. வலைப்பூ பதிவர்கள ஒரு வித்தியாசமான முறையில் மிக அழகாக தொகுத்து வழங்கிய விதம் அருமை .
    என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றிகள் ஐயா
    த.ம7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைகும், பாராட்டிற்கும் மிக்க நன்றி! நண்பரே!

      நீக்கு