ஒவ்வொரு வருடமும்
நோபல் பரிசு அறிவிக்கபடும்போது இந்தியாவில் எழுப்பப்படும் ஒரு கேள்வி, இந்திய
அறிவியலாளர்களுக்கு, ஏன் நோபல் பரிசு கிடைப்பதில்லை? “தாய் மண்ணே வணக்கம்” என்று பாடும் தேசப்பற்று மிக்கவர்களே இதைப் படித்தவுடன்
வெகுண்டு எழுந்து சண்டைக்கு வந்து விடாதீர்கள். இந்தியருக்கும் நோபல் பரிசு
கிடைத்துள்ளது என்று! கேள்வி இதுதான், ஒரு இந்தியர், சுதந்திர இந்திய மண்ணில்
இருந்து கொண்டு, வாழ்ந்து கொண்டு, வேலை செய்து கொண்டு, ஆராய்ச்சி
செய்து, நோபல் பரிசு, வாங்கியதாகச் சரித்திரம் இருக்கிறதா? தகுதி இல்லையா?
ஆராய்சிகள் இல்லையா? ஆர்வம் இல்லையா? அரசியலா? அறிவியல் தரம் தாழ்ந்து விட்டதா?
மேலே கொட்டை எழுத்துக்களை மறு முறை படியுங்கள். சொல்லவருவது சுதந்திர(?)
இந்தியாவில்! 1947 க்குப் பிறகு. இப்போதும்,
நீங்கள் உங்கள் வாக்குவாதத்தை விடவில்லை என்று தெரியும்.
மதர் தெரசாவை, தாகூரை நீங்கள் சொல்லுவீர்கள். தெரியும். அவர்களுக்கும்
இந்தத் தலைப்புக்கும் சம்பந்தம் கிடையாது. மதருக்கு நோபல் பரிசு கிடைத்தது அவரது
தன்நலமற்ற சேவைக்கு.தாகூருக்கு, இலக்கியத்திற்கு. மற்ற எல்லா இந்திய நோபல் laureates ஐயும் எடுத்துக் கொண்டால் அவர்கள்
பிறப்பினால் இந்தியர்களாக இருந்தாலும் அவர்களால் சாதிக்க முடிந்தது அந்நிய
மண்ணில்தான்!!
இந்தியர் ஒருவர் நோபல்
பரிசோ, சர்வதேச அளவில் ஒருவரது ஆராய்ச்சி அங்கீகரிக்கப்பட்டாலோ, அவார்ட்
வாங்கினாலோ, பட்டிதொட்டி வரை ஊரில் இருக்கும், நாளிதழ்கள், வார இதழ்கள், மாத
இதழ்கள் எல்லாம் போட்டி போட்டு, “இந்தியரின் சாதனை” என்று அவரது
புகைப்படங்கள், அவர் இங்கு பிறந்த வீடு, பள்ளி, ஆசிரியர்கள், (அவர்கள் மறந்து
கூடப் போயிருக்கலாம்), கில்லி விளையாடிய மண்ணு, கிராமம், அவர் படித்த மண்ணெண்ணை
விளக்கு, தெரு விளக்கு, அவர் சைக்கிளில் செல்லும் மிக எளிமையான மனிதர் என்ற
ஃபோட்டோ, அவரது பெற்றோர், உறவினரிடம் இன்டெர்வ்யூ, அவர் இங்கு இருக்கும் போதோ,
வந்த போதோ உபயோகித்த அறைகள் வரை க்ளிக்கி படம் போட்டு, ஏதோ அவருக்கு இந்த தேசம்
இந்த சாதனைக்கு உதவியது போல, நம் மண்ணில் சாதித்தது போல வெட்கம் இல்லாமல் பக்கம்
பக்கமாகக் கட்டுரை எழுதுவார்கள். கொஞ்சம் நின்றோ, உட்கார்ந்தோ, நிதானமாக
யோசித்தால், அவர்களுக்கு இந்த தேசம் எந்த வகையில் உதவியது? யாராவது யோசித்தார்களா?
என்று கேட்கவும் வழியில்லை, யோசித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்!! ஏன் என்றால்
நம் மூத்தக் குடிமகனும், (அதாங்க நம்ம குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி) பிரதமருமே
இதைப் பற்றி யோசித்து, அங்கலாய்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இருவருமே, “நம்
இந்திய விஞ்ஞானிகளுக்கு அவர்களது ஆராய்சிகளுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம்
கிடைத்தாலும், நோபல் பரிசு கிடைத்திருந்தாலும்,
சர். சி.வி. ராமனுக்குப் பிறகு, இன்னும்
இந்தியர் எவருமே நமது நாட்டிலேயே ஆராய்ச்சி மேற்கொண்டு நோபல் பரிசு வாங்கவில்லை” என்று
அங்கலாய்த்திருக்கின்றனர். இந்த ஆய்வைப் படியுங்கள்.- by Thomson Reuters
2010 ஆம் ஆண்டு
கொடுக்கபட்டுள்ள புள்ளியியல் படி இந்தியாவிலிருந்து 3.5% of
global research output தான் எல்லாத்
துறைகளிலிருந்துமே சராசரிக்கும் குறைவாகவே வெளியீடுகள். உதாரணமாக clinical medicine - 1.9%,
psychiatry
(0.5%), neurosciences (1.4%), immunology (1.8%), molecular biology (2.1%) and
environmental research (3.5%). Mathematics (2%) in 2010, while it was 17%
for China. materials sciences, 6.4% in 2010, while China's stood at 26% — a
rise from 5% in 1996.
இந்தியாவில், பல்கலைக்கழகங்களில் நடக்கும் ஆராய்சிகள்
கழிந்த 20 வருடங்களாக ஒரு தேக்க நிலையில் இருந்துவருகின்றது எனலாம். என்னதான் இப்போது அது சிறிது
முடுக்கிவிடப்பட்டிருந்தாலும், இன்னும் பல காலங்கள் எடுக்கலாம் அது எல்லாம்
திரண்டு அறிவுக் களஞ்சியமாக மாற. அதற்கு காரணங்கள், முரண்பாடுகள் ஏராளமாக உள்ள நம்நாட்டின் உயர்கல்வியும் (எல்லாமே கறிக்கு உதவாத ஏட்டுச்சுரைக்காய்தான்), சர்வதேச தரத்திற்கு உயராத நம்முடைய நாட்டவரின் ஆராய்சிக் கட்டுரைகளும் தான்.
நம் விஞ்ஞானிகளுக்கு, அரசியல், சமூக, கலாச்சார, பண ரீதியான ஆதரவு
கிடைப்பதில்லை என்பதும் ஒரு உண்மை. அடுத்து மிக மிக வேண்டிய ஒன்று நம் ஊரில்
சுத்தமாகக் கிடையாது. Peer
review. இதை நம் நம்பள்கி சொல்லியிருப்பதை நீங்கள்
வாசித்திருப்பீர்கள். இது மிக மிக அவசியம் நோபல் பரிசுக்கு அங்கீகாரம் கிடைப்பதற்கு. (Peer review is the evaluation of work by one or more
people of similar competence to the producers of the work (peers). It
constitutes a form of self-regulation by qualified members of a profession
within the relevant field. Peer review methods are employed to maintain standards
of quality, improve performance, and provide credibility. In academia peer
review is often used to determine an academic paper's suitability for
publication.). ஆனால், அங்கும், நோபல் பரிசுக்குப் போட்டி
போடும் கட்டுரைகளை அங்கீகரித்தலிலும், இந்த Peer review வில் தனிமனித வெறுப்பு விளையாடுவதாக, அதாவது நம்மூர் விஞ்ஞானிகளின் பேப்பர்கள்
ஒரிஜினலாகவே இருந்தாலும் அங்கீகரிக்கப்படாமல் போகவும் வாய்ப்புண்டு. அவ்வாறு நடந்துள்ளதாக சில குரல்கள் எழுந்தது
உண்டு.
இதில் சில நியாயங்கள் இருப்பதாகவும் படுகிறது. ஏனென்றால் இவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர் எல்லோரும் அமெரிக்கவாசிகள்தான்.
ஜகதீஷ் சந்திரபோஸ்: (30 November 1858 – 23 November 1937) இவர் தான் முதலில், wireless signaling in 1895, அதன் பின் radio wave receiver called the 'coherer' from iron and mercury நிரூபித்தவர். 1978 ல் Sir Neville Mott, பௌதீகத்திற்கு நோபல் பரிசு வென்றவர். சொல்லப்போனால், அவர், 'n'
and 'p' type semiconductors, முதன் முதலில் போஸ்தான்
அறிமுகப்படுத்தியவர், அதுவும் 60 வருடங்களுக்கு முன்பே என்று சொன்னார். ஆனால், நோபல் பரிசோ Guglielmo Marconi in 1909 வழங்கப்பட்ட்து. (14 வருடங்கள்
கழித்து அதாவது போஸ் அதற்கு முன்பே நிரூபித்துவிட்டார்).
Satyendranath Bose: Born,
1 January 1894,Calcutta,
British India, Died 4
February
1974 (aged 80)Calcutta, India. இவர் Albert
Einstein. க்கு
statistics of
quanta of lightphotons என்னும் ஆராய்சிக் கட்டுரையை
அனுப்பினார். Einstein அதை
ஊக்குவித்து, ஆதரவு தெரிவித்து Zeitschrift der Physik ல் in 1924, வெளியிடச்
செய்தார். இதன் பின் Bose-Einstein statistics and the term 'Bosons' என்ற
பெயரில் நிறைய வெளிவந்தன. நோபல் பரிசும் கிடைத்த்து ஆனால் அதற்கு மூல
காரணகர்த்தாவான சத்யேந்திர போஸிற்கு அல்ல.
G N Ramachandran: Born: October 8, 1922,
Ernakulam; Died: April 7, 2001, Chennai-bio-molecular structures in general and, more
particularly, the triple helical structure of collagen
ல் செய்த ஆராய்சி ( முன்னோடியான, முதன்மையான)
நோபல் பரிசுக்கு தகுதி வாய்ந்தாக இருந்தாலும் அங்கீகரிக்கப்படவில்லை.
E C George Sudarshan: 16 September 1931 (age 82) Pallam,
Kottayam, India pioneering contributions to Quantum Optics and coherence, ஆனால் இவரது ஆய்வுகள்
நிராகரிக்கப்பட்டு, அதே ஆராய்சிக்கு Roy Glauber என்பவருக்கு பௌதிகத்தில் 2005 ல்
நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.
Narinder Kapany, the Father
of Fibre Optics: October 12, 1926 (age 87) (இவரைப் பற்றி தெரிந்து கொள்ள http://news.rediff.com/report/2009/oct/08/how-india-missed-another-nobel-prize.htm) அவருக்குக் கொடுக்கப்படாத Nobel Prize, 2009. ல் அதே ஆராய்சிக்கு Charles K Kao, என்பவருக்குக் கொடுக்கப்பட்டது.
இதற்கு என்ன காரணங்கள் இருக்க முடியும் என்று நினைக்கின்றீர்கள்? அங்கும் தனிமனித காட்டம்? இல்லை அரசியல்? அல்லது இந்தியர் என்ற ஒரு இளக்காரம்?
இவ்வாறு பல சர்ச்சைகள் இருந்தாலும், நம் இந்தியாவின்
அறிவியல் ஆராச்சிகளின் தரம் குறைந்துள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை. அதாவது, புதியதாகவும், ஒரிஜினலாகவும் இல்லை
என்றும், நிறைய ஆராய்சிகள் காப்பியடிக்கப்படுகின்றன என்றும், நம் ஊரில்
ஆராய்ச்சிக் கட்டுரைகள் கூட திருடு போவது உண்டு, திருடி தான் எழுதியாதாக
வெளியிடும் வழக்கமும் உண்டு என்றும், இணையதளத்தில் இருந்து சுட்டு “cut and
paste” செய்து plagiarism செய்பவர்களும் உண்டு என்ற கருத்துக்களும், நம்மூர்
ஆராய்சிகள் பற்றி நிலவுகின்றன.
அமெரிக்காவில்லும், ஐரோப்பிய நாடுகளிலும், பல்கலைக்கழகங்கள்
ஆராய்ச்சிகளுக்கு உதவுவதோடு, அந்த்த் தொழில் நுட்பத்தை பேட்டன்ட் செய்து விளைபொருளாக
சந்தைக்குக் கொண்டுவரவும் உதவுகின்றன.
சுதந்திரத்திற்கு முன் நம் இந்தியாவிலும், பல்கலைக்கழகங்கள் தேசீய
ஆராய்ச்சிக் கூடங்களுடன் இணைந்து பணி புரிந்து ஆராய்சிகளுக்கு உதவியது போன்ற ஒரு
சூழல் சுதந்திரத்திற்குப் பிறகு இல்லாது போனது ஒரு அவல நிலை. அதிலும் “Red Tape”
இருக்கும் வரை ஒரு
மண்ணுக்கும் பிரயோஜனமில்லை. நம் பிரதமரே இதை,
“துரதிர்ஷ்டவசமாக, ஒரு கசப்பான உண்மை, நம் நாட்டில் சி.வி.
ராமனுக்குப் பிறகு அறிவியலின் தரம் பின்னோக்கிச் சென்றாதற்கு ரெட் டேப்பிஸம்மும், அரசியல் தலையீடும், நல்ல
ஆராய்சிகளுக்கு முறையான அங்கீகாரமும் கிடைக்கப்பெறாத்துதான் காரணங்கள்” என்று சொல்லியிருக்கிறார். சொல்லி என்ன பிரயோஜனம்? செயலில் இல்லையே. இவ்வாறு பேசுவதை செயலில்
காட்டுங்களேன். உங்கள் கையிலும், குடியரசுத்தலைவர்
கையிலும் தானே அதிகாரம் இருக்கிறது?! நீங்கள் எவ்வளவோ செய்யலாமே.
The secretary general of the Nobel Committee Goran K Hannson
had a simple message for Indian youngsters. "In the end, individuals win
Nobel prizes, not governments. Governments definitely play a major role in
making things possible for an individual but it is ultimately upto a person to
work towards a Nobel. It is time Indian youngsters started to dream of
one," (courtesy
Times of India Oct 7, 2013)
நோபல் கமிட்டியின் செக்கரெட்டரி
ஜெனரலும், நமதுபிரதமரும் கூறியதிலிருந்து நமக்குத் தோன்றுவது என்னவென்றால் இந்தியா இன்னும் போட்டி போடும்
அளவு உயரவில்லை என்பது மட்டுமல்ல உயரவைக்கப்படவேண்டிய முயற்சிகள் எதுவும் எடுக்கபடவில்லை என்பதுதான். அறிவியலுக்குத்
தேவையான ஆக்கமும், ஊக்கமும் பள்ளிக் காலத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும். இங்கு எல்லாமே மதிப் பெண் அடிப்படையிலும்,
ராங்க் அடிப்படையிலும், படித்த எல்லாவற்றையுமே அப்படியே வாந்தி எடுக்கின்ற அடிப்படையிலும்
தானே அறிவு நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கு
நம் கல்வித் துறை, ஆசிரியர்கள், பெற்றோர்கள் எல்லோருமேதான் காரணம். வாந்தி
எடுப்பதுதான் கல்வியே என்ற சூழ்நிலையில் வளரும் ஒரு குழந்தை எப்படி, சுயமாக சிந்தித்து, கேள்வி கேட்டு,
ஆராயும் மனப்பான்மைக்கு உட்படும்? அடிப்படையில் மாற்றம் தேவை. குழந்தைகள் சுயமாக்ச் சிந்தித்து, கேள்வி
கேட்டு ஆராயும் மனப்பான்மைக்கு அவர்களைக் கொண்டுவர அரசும், கல்வித்துறையும்,
ஆசிரியர்களும், சமுதாயமும், பெற்றோர்களும் ஆவன செய்ய தாயாராகி முன்வர வேண்டும். அப்போதுதான்
நோபல் பரிசு இந்தியர்களுக்குக் கைஎட்டும் தூரத்தில் அமையும்!
ஆணித்தரமான ஆதாரங்களுடன்
பதிலளிநீக்குஅற்புதமான அவசியம் அனைவரும்
தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்களுடன்
கூடிய பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
ஏற்றம் செய்தவுடனேயே வாசித்து உடனே கருத்திட்டமையை என்னவென்று சொல்லுவது?!!!! சந்தோஷமாக இருக்கிறது! உங்கள் உடன் வருகைக்கும், பாராட்டிற்கும் கருத்திற்கும் மிக்க மிக்க நன்றி!
நீக்குத.ம. 1 ற்கு நன்றி!
பதிலளிநீக்குஆராய்ச்சியை பற்றி அநேகம் பேருக்கு தெரிவதில்லை. தமிழ்மணத்தில் படித்தேன்; ஒரு கல்லூரியில் ஒரு மாணவன் eye mouse கண்டு பிடித்தான் என்று! அதைப் பார்ட்டி பலர் பத்திரிக்கைகளில் எழுதினார்கள்.
பதிலளிநீக்குஇது இங்கு பல காலமாக உபயோகத்தில் இருக்கு. ஒரு கண்டுபிடிப்பை--duplicate செய்து அதை சாதனை என்று போடுவது தவறு!
Hand control system cars for paraplegic drivers -- இப்படி பல் இங்கு பலப்பல வருடங்களாக இருக்கு!
______
தமிழ்மணத்தில் தலைப்பு பாட்டி என்று குண்டக்க மண்டக்க இருந்தாலும், நல்லாவே இருக்கு.
தமிழமணம் +2
வோட்டுக்கு நன்றி எல்லாம் வேண்டாம்; நல்ல பதிவுக்கு போட்டு ஊக்குவிப்பது கடமை!
நன்றி நம்பள்கி! எங்களை உக்குவிப்பதற்கு!. கண்டுபிடிப்பை duplicate செய்து போடுவது அதுவும் சாதனை என்று மாகா கேவலம்!! நீங்கள் சொல்லுவது போல் பலருக்கு சர்வதேச அளவில் ஆராய்சிகள் பற்றி தெரிவதில்லை என்பது உண்மைதான்!!!
நீக்குஇங்கு சுனாமி வந்த போது, ஒரு வாரத்தில் மிகப் பெரிய புகழ் பெற்ற தமிழ்நாட்டையே குத்தகைக்கு எடுத்துள்ள ஒரு தமிழ் சானலில், ஒரு 7 ஆம் வகுப்பு பையன், உலகிலேயே யாருமே எந்த ஒரு விஞ்ஞானியுமே இதுவரை கண்டுபிடிக்காத, சுனாமி எச்சரிக்கை கருவியைக் கண்டுபிடித்திருந்ததாக, கருவி எப்படி இயங்குகிறது என்ற செயல் விளக்கத்தோடு, படத்துடன், பையனின் படத்துடனும் செய்தி வாசித்தார்கள்!!!!!!! இந்தக் கோமாளித்தனத்தை என்னனு சொல்லலாம் நம்பள்கி??!! இதுதான் நமது நாட்டின் லட்சணம்! அவல நிலை!
குண்டக்க மண்டக்க "பாட்டி" அந்த 'ட' மேல் உள்ள புள்ளி கண்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. அதுவும் தமிழ் சாப்ட்வேர் அடிக்க்கும் போது பல சமயம் இந்தப் புள்ளி விவகாரம் குறுக்கிடுகிறது!! என்ன செய்ய? அரைக் கிழவன், அரைக் கிழவி எல்லாம் வலைப்பூ ஆசையில் இடுகை இடும்போது இது போல நடக்கத்தான் செய்கிறது!!! இனி அதிலும் கண்ணாடி மட்டும் போடாமல், கண்ணில் "விளக்கெண்ணையும்" விட்டு கவனமாக இருக்கிறோம்!!! உங்கள் தமாஷை ரசித்தோம்!!
நீக்குசந்திரசேகரை விட்டு விட்டீர்களே!
பதிலளிநீக்குSubrahmanyan Chandrasekhar, FRS (Listeni/ˌtʃʌndrəˈʃeɪkɑr/; October 19, 1910 – August 21, 1995),[1] was an Indian-American astrophysicist who, with William A. Fowler, was awarded the 1983 Nobel Prize for Physics for key discoveries leading to the currently accepted theory on the later evolutionary stages of massive stars.[2][3] The Chandrasekhar limit is named after him.
Chandrasekhar studied at Presidency College, Madras and University of Cambridge. He served on the University of Chicago faculty from 1937 until his death in 1995 at the age of 84.
மிகப் பெரிய ஒரு தவறு தான் நம்பள்கி! நன்றாகத் தெரிந்த ஒரு தகவல் விட்டுப்போனதற்கு மிகவும் வருந்துகிறோம்! குறித்து வைத்திருந்தும்! காலையில் பார்க்கும் போதுதான் ஏதோ ஒரு குறை தோன்ற உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்ட போது உறைத்தது!!! நொம்ப நன்றி நம்பள்கி!!!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குபதிவை மிக அருமையாக பல ஆதாரங்களுடன் எழுதியுள்ளிர்கள் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்...த.ம வாக்கு3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி மிக்க நன்றி நண்பரே! உங்கள் தொடர் ஊக்கத்திற்கும் சேர்த்துதான்!!
நீக்குபல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது ஐயா... மிக்க நன்றி... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி!! DD! வருகைக்கும், கருத்திற்கும், நன்றி!!
நீக்குரெட் டேப்பிஸம்மும், அரசியல் தலையீடும், நல்ல ஆராய்சிகளுக்கு முறையான அங்கீகாரமும் கிடைக்கப்பெறாத்துதான் காரணங்கள்”//வருத்தமாய் இருக்கிறது
பதிலளிநீக்குவாங்க கவியாழி! நன்றி! உங்கள் வருகைக்கும், கருத்திற்கும், மிக்க நன்றி!
பதிலளிநீக்குநோபல் பரிசு குறித்த தகவல்களும் அதனை அடைய வேண்டிய கல்வியறிவும் இன்னும் நம் நாட்டில் இல்லையென்பதையும் அதனை அடிப்படைக் கல்வியில்இருந்தே கொண்டு வரவேண்டும் என்பதையும் சொன்னீர்கள்.
பதிலளிநீக்குதாங்கள் ஆசிரியர் என்ற முறையில் ஒரு சந்தேகம் இன்றாவது அதற்கான முயற்சிகள் பள்ளிகளில் தொடங்கியுள்ளனரா?