புதன், 25 டிசம்பர், 2013

கொல்லப்பட்ட கோயில் காளையால் மதக் கலவரம் உண்டாகவில்லை!.......அப்பாடா!!




50 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், பெரும்பான்மையான கோயில்களுக்குக் காளைகள் நேர்ந்து விடும் பழக்கம் இருந்தது. (கன்று குட்டிகள் வளர்ந்து கோயில் காளையாகும்.  முழு சுதந்திரமுள்ள கோயில் காளையாகத் திரியும்.)  அன்றெல்லாம் அவிழ்த்து விடப்படும் பசுக்கள், காளைகள், ஆடுகள் போன்றவை நம் சமூகத்திற்கு ஒரு பிரச்சினையே அல்ல.  வழியோரங்களிலும், தரிசு பூமிகளிலும் அவற்றிற்கான புல் பூண்டுகள் முளைப்பது சகஜமே.  ஆனால், இப்போதைய சூழலில் காண்க்ரீட் கட்டிடக் காடுகளுக்கிடையே ஒரு கோயில் காளை நகர வீதிகளில் உலாவருவதை (சினிமா போஸ்டர்களைத் தின்று கொண்டு.)..சற்று சிந்தித்துப் பாருங்கள்!. அது எத்தனை விபத்துகளுக்குக் காரணமாகும்? எத்தனை பேர்களுக்கு தன நஷ்டத்தை ஏற்படுத்தும்?


கேரளாவில், காஞ்சிரப்பள்ளி எனும் இடத்திலுள்ள ஸ்ரீ கணபதியார் கோயிலிலும், இது போல் ஒரு காளை முன்பு எப்போதோ நேர்ந்து விடப்பட்டிருக்கிறது.  கணேஷ் என்று அழைக்கப்பட்ட அந்தக் காளையாலும் சிலப் பிரச்சினகள், சில விபத்துக்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.  பல மதங்களைச் சேர்ந்த, பல தெய்வங்களை வழிபடும் மனிதர்களிடையே, இது போன்ற சம்பவங்கள், ஒரு சில பிரச்சினைகளை உண்டாக்கியிருக்கலாம்.  எப்படியோ, கடந்த ஞாயிறு அன்று (22.12.2013) அக் கோயில் காளை, கை, கால்கள் கட்டப்பட்டு, மூச்சுத் திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் ஸ்ரீ கணபதியார் கோயிலருகே காணப்பட்டது.  இக்கொடிய செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், மறு நாள் திங்கட் கிழமை, முற்பகல் 11 மணி முதல், மாலை 6 மணிவரை அப்பகுதியில் ஹர்த்தால் அனுசரிக்கப்பட்டது.  கோயில் காளையுடன் ஊர்வலம் செல்ல சிலர் முயன்ற போது, சமயோசிதமாக போலீஸாரும், கணபதியார் கோயில் நிர்வாகிகளும் ஈடுபட்டு அதைத் தடுத்தனர்.  ஒருவேளை அதைத் தடுக்காமல் இருந்தால் ஊர்வலத்தினிடையே சில அசம்பாவித சம்வங்கள் நிகழ்ந்து அது அரசியல் லாபத்திற்காக மதக் கலவரமாக மாற்றப்படவும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை.  காலத்திற்கேற்ற சில மாற்றங்களை எல்லா மதத்தில் உள்ளவர்களும் உட் கொள்ள வேண்டும்.  அப்போதுதான் மத சார்பற்ற இந்தியாவில் எல்லோரும் சமாதானத்துடன் வாழ முடியும். இந்துக்கள் மட்டும், அல்லாது, இந்துக்கள் கூடுதலாக வாழும் கிராமங்களில் ஒரு வேளை இப்போதும் இதுபோல் கோயில் காளைகள் உலா வந்து கொண்டிருக்கலாம்.  சமூகத்தில் இது போல் கோயில்களுக்கு நேர்ந்துவிடும் காளைகளையும்,யானைகளை,பசுக்களை பெரும்பான்மையான கோயில்களில் பராமரிப்பது போல், பராமரிக்க கோயில் நிர்வாகிகளும் தயாராக வேண்டும். அப்போதுதான் இவற்றால் சமூகத்திற்கு உண்டாகின்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். சமூகத்தில் அமைதியானச் சூழலை ஏற்படுத்த, முக்கியமாக, இது போன்ற ஏதேனும் ஒரு மதத்தினரை வருத்தும் சம்பவங்கள் நடக்கும் போது, எல்லோரும் ஒரு மனதாய் நடந்த சம்பவம் வருத்தத்திற்கு உரியது என்று தங்கள் சொல்லாலும், செயலாலும், தங்கள் ஆதரவையும், வருத்தத்தையும் வெளிப்படுத்துவது நல்லது. 


தாலிபன்,  பாமியான் குன்றுகளில், 1000 கணக்கான வருடங்களுக்கு முன்பு செதுக்கப்பட்ட புத்தரது சிலைகளை எல்லாம், டைனமைட் வைத்துத் தகர்த்தெறிந்த போது
மௌன ஊர்வலம் வந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்த புத்த மதத்தவரின் சகிப்புத் தன்மையுடன், காஞ்சரபள்ளி மக்களின் சகிப்புத் தன்மையை ஒப்பிடும் போது சிறிதுதான் என்றாலும் பாராட்டத்தக்கதே.


10 கருத்துகள்:

  1. வணக்கம்
    நண்பரே

    நீங்கள் சொல்வது உண்மைதான் இன்று மாடுகள் புல் மேயும் இடங்களில் இன்று பல அடுக்கு மாடிகள் வந்து விட்டது இப்படியாக நகர மயமாக்களின் மூலம் பிரச்சினைகள் எழுவது வழக்கம் . மிகச்சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ! உண்மைதான் சகோதரரே! கருத்திற்கும், பாராட்டிற்கும், வருகைக்கும், ஓட்டிற்கும் மிக்க நன்றி!!

      நீக்கு
  2. வணக்கம்
    த.ம 1வது வாக்கு.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. இது பொன்ற விஷயங்கள் பாராட்டப்பட்டால் தான் மக்களுக்கும் சமூக விழிப்புணர்வு ஆர்வம் வரும்!
      மிக்க நன்றி வருகைக்கும், கருத்திற்கும் ஓட்டிற்கும் நண்பரே!!

      நீக்கு
  4. பதில்கள்
    1. நன்றி! கவியாழி! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும், ஊக்கத்திற்கும்!!

      நீக்கு
  5. நல்ல பதிவு. மேலும், கோவில் காளை எது செய்தாலும் ஒன்றும் செய்யக்கூடாது என்றும், அதணல், அது வாழைப்பழம் எல்லாம் கடையில் இருந்து சாப்பிடும் பொது சிலர் சண்டை போடுவதுண்டு. அதற்கு பொது மக்கள் கடைக்காரரிடம் சண்டை போடுவதுண்டு, பழனியில் இந்த தொல்லை அதிகம். இப்ப்படி நேர்ந்து விடுவதை நிறுத்தனும்.
    தமிழ்மணம்+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லுவது மிக்க சரியே! பழனி விஷயம் பார்த்ததுண்டு! நேர்ந்து விடுவது குறைந்துள்ளது என்றாலும் (காளைகள் population உம் குறைந்து விட்டதே!) நடக்கின்ற ஒரு சில நேர்ச்சைகளும் நிற்த்தப்படவேண்டும்தான்! நம்மூரில் எப்போதுமே எழக்கூடிய ஒரு கேள்வி.."பூனைக்கு யார் மணி கட்டுவது?".

      மிக்க நன்றி நம்பள்கி!

      நீக்கு
  6. ஒரு வாயில்லா ஜீவனை கொன்றது கொடிய செயலே ஆனாலும் அதை வைத்து கலவரம் ஏற்பாடாமல் தடுத்தவர்களை பாராட்டவே வேண்டும். கோயிலுக்கு நேர்ந்து விட்டதாக சொல்லப்படும் கால்நடைகளை கோயிலுக்கு உள்ளேயே வைத்து பராமரிக்க அரசும் ஆவண செய்ய வேண்டும். கோயிலுக்கு செல்பவர்களாலும் கால்நடைகளுக்கு உதவ முடியும். (புண்ணியம் என்றாவது)
    முடிவில் தாங்கள் சொன்ன புத்த மதத்தினரைப் பற்றிய செய்தி ஒரு நிமிடம் நெகிழ வைத்தது எத்தனை பெரிய சாந்த குணத்தை புத்த மதம் சொல்லிக்கொடுத்திருக்கிறது. லேசாக தெரியாமல் கை கால் பட்டாலே அடிதடி என்று இறங்கி விடும் இந்நிலையில் மௌன ஊர்வலம் நினைத்தும் பார்க்க முடியவில்லை. பல தகவல்களை தங்கள் பதிவின் மூலம் நான் தான் கற்கிறேன். ஆதலாலே தேடி வருகிறேன். அதற்கு நான் தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். தங்கள் இருவருக்கும் எனது நன்றிங்க. ஆமா தோழி கீதா புதுக்கோட்டை கீதாவா என்று கேட்டிருந்தேனே சகோ மறந்து விட்டீர்களா?

    பதிலளிநீக்கு